கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
783 topics in this forum
-
"நேரிய பாதையில்" "நேரிய பாதையில் மனிதா நட நேர்மை கொண்ட தீர்மானம் எடு! நேசம் உள்ள நண்பர்களை அணைத்து நேரார் தரும் தொல்லைகளை அகற்று! ஆர்வம் வேண்டும் ஆராவாரம் வேண்டாம் ஆசை வைத்து செயலில் ஈடுபாடு! இன்பம் துன்பம் யாரும் தருவதில்லை இருப்பதை அறிந்து நடையைக் கட்டு! கொள்கை ஒன்றைத் தரமாக வகுத்து கொடுத்து எடுத்து சமாதானம் காணு! தெரிந்ததும் தெரியாததும் அறிந்து உணர்ந்தால் தெளிவான முடிவு தருமே வெற்றி!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 252 views
-
-
"தேநீர்க் கடையும் நினைவழியாக் காலமும்" "மனதின் மூலையில் ஒரு நினைவு அணையா தீபமாய் இன்றும் எரிகிறது தேநீரின் வாசனை காற்றில் வருகிறது வடையின் மெதுமை வாயில் ஊறுது!" "உரையாடல் மலர்ந்து நட்பு வளர்ந்தது கிசுகிசு கதைகளும் இடையில் வந்தது சிரிப்பும் சச்சரவும் முட்டி மோதின வெற்றிலை பாக்கு வாயில் ஆடின!" "விடைகள் புரியா வாங்கு அரசியல் குடையில் போகும் பூவையர் மகிழ்ச்சி இடையில் பறக்கும் ஈக்கள் ஒருபக்கம் கடையின் நினைவு மறையா காலமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 237 views
-
-
"சிலுசிலு காத்துல சிணுங்குறியே சிங்காரி" "சிலுசிலு காத்துல சிணுங்குறியே சிங்காரி கொழுகொழு கன்னத்தில் குழி விழுகுதே! குளுகுளு தென்றலில் பொன்மேனி சிலிர்க்க நொழுநொழு என்று குழைவதைப் பார்க்க தழுதழுக்குதே வார்த்தைகள் என் வாயிலே!! "தளதளவென்று ததும்பும் இளமைப் பருவமே சலசலக்கும் நீரோடையில் உன்னைக் கண்டனே! கலகலக்கும் புன்னகையில் என்னை அழைத்தாய் வளவள பிதற்றலில் நெஞ்சை இழுத்தாய் மலங்கமலங்க விழித்தேன் செய்வது அறியாது!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 240 views
-
-
"நட்பு என்பது நடிப்பு அல்ல" "நட்பு என்பது நடிப்பு அல்ல நடனம் ஆடும் மேடை அல்ல நயமாக பேசும் பொய்யும் அல்ல நலம் வாழ என்னும் பாசமே!" "வடிவு என்பது உடல் அல்ல வட்டம் இடும் கண்ணும் அல்ல வளைந்து பொங்கும் மார்பும் அல்ல வளையாமல் நிமிர்ந்து நிற்கும் உள்ளமே!" "காதல் என்பது பொழுதுபோக்கு அல்ல காது குளிர பேசுவது அல்ல காமம் கொடுத்து மயக்குவது அல்ல காலம் முழுவதும் உண்மையாக இருப்பதே!" "அன்பு என்பது கடமை அல்ல அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பது அல்ல அற்பம் சொற்பம் தருவது அல்ல அறிவுடன் உணர்ந்து பாசமாக நேசிப்பதே!" "மு…
-
-
- 4 replies
- 380 views
-
-
ஜூன் 1, 2024 இன்று உலக பெற்றோர் தினம் போரில் வாழ்ந்த குழந்தைகள் போல் போருள் வாழ்ந்த பெற்றோரும் பரிதாபத்துக்குரியவர்களே குண்டுகள் மழை போலப் பொழியத் தொடங்கின இடியோசை மரண பயத்தைத் தந்தது குழந்தைகளின் பெறுமதியான நாட்கள் பதுங்குகுழிகளில் கழிந்தன இரைதேடும் பருந்திடம் இருந்து குஞ்சுகளைக் காப்பாற்ற பறவைகள் போராடின ஒருநாள் பெற்ற…
-
- 0 replies
- 290 views
-
-
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?" "உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே" "சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று சொக்கி போகும் பேரழகு பெற்று சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?" "ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?" "அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு அலங்காரம் செய்து கண…
-
- 0 replies
- 402 views
-
-
"என் உயிரோட்டமும் நீதானே" "மின்னல் இடை கண்ணைக் குத்த அன்ன நடை நெஞ்சை வருத்த கன்னி இவள் அருகில் வந்தாள் சின்ன சிரிப்பு செவ்விதழில் தவழ கன்னக் குழியில் இடறி விழுந்தேனே!" "அன்பே ஆருயிரே அழகு தேவதையே இன்பம் கொட்டும் வண்ணக் கிளியே துன்பம் எனோ எனக்குத் தருகிறாயே என் எந்திரவாழ்வை மாற்ற வந்தவளே என் உயிரோட்டமும் நீதானே இன்று!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 1 reply
- 465 views
-
-
"யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??" "உலக வாழ்க்கையின் மகத்தான மேடையில் வரலாறு படைக்கும் இதயங்களின் மத்தியில் மானிடப் பிறவி எடுத்தவன் மனிதனா? மனிதம் கொண்ட ஒருவன் மனிதனா??" "வெறும் சதையும் எலும்பும் மனிதனல்லா வெறும் பலமும் செல்வமும் மனிதனல்லா வெறும் புகழும் பதவியும் மனிதனல்லா யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??" "கண்கள் விழித்து கருணை காட்டும் கொடுமையைக் கண்டு மனது குமுறும் அறிவுடன் அறிந்து உதவும் கரமும் எங்கே இருக்குதோ? அவனே மனிதன்!!" "துயரம் கண்டு அக்கறை காட்டி ஆறுதல் கொடுக்கும் புன்னகை உதிர்ந்து தனக்கென வாழாது உலகத்துக்கும் வாழும் அவனே மனிதன்! அவளே மனிதன்[மனித…
-
- 0 replies
- 209 views
-
-
வாழ்க்கை ஒருவழிச்சாலை பயணத்தின் இடையே நாம் பலரைக் கடந்து போகிறோம் சிலர் தொடர்ந்து வருபவர்கள் பலர் கடந்து செல்பவர்கள் மேலும் சிலர் எம்மை உளவு பார்ப்பவர்கள் மனித மனங்கள் விசித்திரமானவை நட்சத்திரங்கள் போல் வித்தியாசமானவை துரதிர்ஷ்டவசமாக யாரும் பார்க்க முடியாதவை எல்லோரும் எல்லோரையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்ற தத்துவம் நாமறிவோம் …
-
-
- 3 replies
- 834 views
-
-
"மனக்கதவை திறவுங்கள் மாற்றம் உனதாகும்" "மனக்கதவை திறவுங்கள் மாற்றம் உனதாகும் உங்கள் எண்ணத்துக்குள் அவை வெளிப்படட்டும் கட்டுகளை விடுவித்து சங்கிலிகளை உடைத்து உங்கள் மனம் திறந்தவெளியில் உலாவட்டும்!" "திறந்த இதயத்துடனும் திறந்த மனதுடனும் மாற்றம் மென்மையாக அன்பாக அமையட்டும் எதிரியை விட நண்பனை அறிந்தால் புதிய மாற்றம் புரிந்து வளரும்!" "மனதைத் திறந்து தன்பாட்டில் பறக்கவிட்டால் எதிர்காலத்தை தழுவி புதியதை வரவேற்றால் உங்கள் கனவுகள் விரைவில் நனவாகும் தேடிய எதிர்பார்ப்பு தானாக திறக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியட…
-
- 0 replies
- 224 views
-
-
எப்போதாவது உங்களை புனைப்பெயர் சொல்லி இன்னொருவர் அழைத்ததுண்டா எப்போதாவது உங்கள் பெயரை உச்சரித்த நாட்களை விட புனைபெயரை அதிகம் உச்சரித்ததுண்டா அவரவர் வாழ்வில் பட்டப் பெயராகவோ செல்லப் பெயராகவோ ஒரு புனை பெயர் இருந்திருக்கக் கூடும் பிடித்த தலைவர், பிடித்த நபர் பிடித்த நதி,பிடித்த மலை அன்றேல் பிடிக்காமல…
-
-
- 2 replies
- 473 views
-
-
"என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி" "என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி சின்ன இடையாளே! செருக்குப் பிடித்தவளே துன்பம் வேண்டாமே! மௌனம் கலைத்தாலென்ன? இன்பமொன்றே எண்ணி உன்னிடம் வந்தேனே!" "மின்னல் வேகத்தில் கோபம் கொள்ளாதே கன்னம் சிவக்க உற்றுப் பார்க்காதே! அன்ன நடையில் மனதைப் பறிகொடுத்து கன்னி உன்னை மனதாரக் காதலித்தேனே!" வண்ணக்கிளியே அழகே! தனிமை என்னைவாட்டுதே மண்ணில் வாழும்வாழ்வும் எனக்கு வெறுக்குதே! கண்கள்கூட நீயில்லாமல் இரவில் மூடமறுக்குதே எண்ணமெல்லாம் நீயொருத்தியே! அருகில் வாராயோ?" "விண்ணில் மலரும் நிலாவும் சுடுகுதே …
-
- 1 reply
- 388 views
-
-
இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளை கொன்றிருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளை அனாதைகள் ஆக்கியிருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளின் தூக்கத்தைக் கெடுத்திருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளின் காதுகளைச் செவிடாக்கியிருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டின் இடிச் சத்தம் ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளை ஓட வைத்தது பள்ளிகளைப் போர் சூழ்ந்த முன்னொரு நாளில் வகுப்பறை நாற்காலிகளை கண்ணீர் பூக்கள் நிறைத்தன …
-
-
- 3 replies
- 400 views
-
-
அந்திப்பொழுதில் ஓர் அவசர தொலைபேசி அவசர சிகிச்சைப்பிரிவில் நீங்களும் அனுமதியாம் தொலைபேசியும் அனுமதியில்லை தொடர்புகொள்ளவும் முடியவில்லை மீள்வீர்கள் என நினைத்திருந்தேன் மீளாத்துயில் கொண்டதேனோ! சின்னஞ்சிறு வயதில் சேர்ந்து விளையாடியதும் இரவினில் பயத்திலே நான் கட்டிப்பிடித்து உறங்கியதும் பசுமை நினைவுகளாய் இன்றும் என் மனதினிலே! இடப்பெயர்வால் எந்தன் ஈராண்டுக் கல்வியது இல்லாமல் சென்றதனால் திகைத்து நிற்கையிலே! ஆறு மாதத்திற்குள் அனைத்தையும் கற்பித்து சாதாரண தரமதிலே சிறப்பு சித்தி பெற வைத்தீர் கணக்கு முதற்கொண்டு சங்கீதம் வரையிலே தெரியாத பாடம் என்று உமக்கில்லைக் கண்டீரோ தெரிந்ததால் தானோ இறைவன் விடவில்லை உமையிங்கு இருபத்தொரு அகவையில…
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
"கசக்கும் உண்மைகள்" "பொய்களை பூசி பெருமை பேசுகிறான் மற்றவனை தாழ்த்த புராணம் படைக்கிறான்! மகாவம்சம் ராமாயணம் இனிக்கும் பொய்கள் உண்மையான வரலாறு கசக்கும் உண்மைகள்!" "கல்வெட்டு தொல்பொருள் சான்றுகள் வர கன்னத்தில் கைவைத்து தடைகள் செய்கிறான்! மாயைத்திரைகள் கிழிந்து உண்மை கட்டிட அரச படையுடன் அட்டகாசம் புரிகிறான்!" "தைரியம் கொண்டு கசப்பை ஒப்புக்கொள் ஆழங்களில் உள்ள ஞானம் வெளிவரும்! வளர்ச்சிக்கான வாய்ப்பு, கட்டாயம் உயரும் உண்மைகள் விழித்து விடுதலை ஓங்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 214 views
-
-
தேசிய தலைவர் பற்றி சிங்கள சகோதரனின் கவிதை. දශක තුනක් පුරා දිවයිනේ සියලු ආක්රමණ කල්දැමුවේ ඔබයි. ඔබ නිහඬව දශකයක්වත් ඔබට මුහුණ දීමට නොහැකි වී ඇත. එබැවින් ඔබ දිවයින මුදාගත් ආරක්ෂක නිලධාරියා ය. දිවයිනේ අනෙක් පැත්ත ආරක්ෂා කරන මුහුදු කොල්ලකරු ඔබම වේ. සියලු සීමා මායිම් රකින මායිම් இத்தீவுக்கு நிகழவிருந்த அத்தனை ஆக்கிரமிப்புக்களையும் மூன்று தசாப்தகாலம் தள்ளிப்போட்டவர் நீங்கள். நீங்கள் மெளனித்து ஒரு தசாப்தத்தைக்கூட சுயமாக எதிர்கொள்ளமுடியவில்லை இத்தீவாரால். எனவேநீங்களே இத்தீவிற்கு சுதந்திரமளித்த காவலன். நீங்களே தீவின் எக்கரையும் காத்துநின்ற கடற்தேவன். நீங்களே எல்லா எல்லைகளும் காத்துநின்ற எல்லைத்தெய்வம். உங்கள் இருப்பு தமிழ் தேசியத்தை மட்டுமல்ல சிங்கள…
-
- 4 replies
- 918 views
- 1 follower
-
-
"மாற்றம் ஒன்றே மாறாதது" "காதல் ஏற்றிய விழியும் குருடாகும் காமம் வீசிய எழிலும் முதுமையாகும் காவலர்கள் கூட அநீதி இழைப்பர் காரணம் எதுவாகினும் மாற்றம் மாறாதது!" "உற்சாகம் தரும் அமுதமும் விடமாகும் அற்புதம் நிகழ்த்திய உடலும் கருகும் குற்றம் புரிந்தவனும் நீதிபதி ஆவான் மாற்றம் ஒன்றே மாறாதது என்றும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [விடம் - நஞ்சு]
-
- 0 replies
- 567 views
-
-
"காசேதான் கடவுளடா" "காசேதான் கடவுளடா ஆலயமும் வணிகமடா காதல் வேண்டுமா பரிசு கொடடா காதலர் தினம் வணிக சூழ்ச்சியடா! காலம் தாழ்த்தாமல் கையூட்டு கொடுத்தால் காரியம் நிறைவேறும் வெற்றியும் வருமடா!" "ஆண்டவனை வணங்க அர்ச்சனை வேறு ஆரம்ப கல்விக்கும் நன்கொடை வேண்டுமடா! ஆராத்தி தட்டிலும் ஏதாவது போடணும் ஆலவட்டம் ஏந்தினால் நன்மை கிடைக்குமடா ஆராய்ந்து பார்த்தல் அழுவதா சிரிப்பதா!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 1 reply
- 399 views
-
-
"அப்பாவை கடத்தி இல்லாமல் செய்தான் அநியாயம் கேட்க புத்தனும் இல்லை அம்மாவின் கண்ணீரை இன்று துடைக்கிறேன் அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !"
-
- 0 replies
- 371 views
-
-
"சிலுவையை மீண்டும் சுமப்போம்!" "உன்னை காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்! அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!" "உன்னை நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்! அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!" "உன்னை கண்டதால் தியாகம் அறிந்தோம் ச…
-
- 0 replies
- 386 views
-
-
"சமாதானம்" [அந்தாதிக் கவிதை] "சமாதானம் வேண்டாமென இலங்கையில் போர் போர் தொடுத்து அப்பாவிகளை கொன்றார்கள்! கொன்று குவித்ததை புத்தபிக்கும் மகிழ்ந்தனர் மகிழவு இதுவாவென புத்தர் தலைகுனிந்தான்!" "தலைகுனிந்து உலகமும் கண் மூடியது மூடிய வீட்டுக்குள்ளும் கற்பை சூறையாடினான்! சூறையாடி உண்மையை புதைத்து தலைவனானான் தலைவன் இன்று போதிக்கிறான் சமாதானம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 349 views
-
-
"இன்றே இணைவோம் ஒற்றுமையாய்" "இன்றே இணைவோம் ஒற்றுமையாய் நாம் இழந்த உரிமைக்கு குரல் கொடுப்போம்! இளிச்ச வாய்கள் இனி வேண்டாம் இடித்து கூறுவோம் துணிந்து நிற்போம்!" "காட்டிக் கொடுத்து கோட்டை கட்டியது காலம் கடத்தி நீதி ஏமாற்றியது காவலனாக இருந்தே வேலி மேய்ந்தது காணும் இனி விலகி நில்!" "முரசு முழங்கு தானை மூவருங்கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் தமிழர் ஒன்றாய் கூடித் திரண்டால் சிறைகள் எங்கே வெற்றி எமதே! " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] [முரசு முழங்கு தானை மூவருங்கூடி - வெற்றி முரசு முழங்…
-
-
- 2 replies
- 519 views
-
-
"கார்த்திகை தீபம்" [கவிதை] "கார்த்திகை திருநாள் தீபம் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லுது! கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் காரிருளை அகற்றி வெளிச்சம் தருகுது!" "காக்கை வன்னியன் இன்றும் இருக்கிறான் காசுக்கு தன் இனத்தையே விற்கிறான்! காட்டிக் கொடுத்து அடிமை ஆக்கிறான் காரணம் கேட்டால் எதோ மழுப்புறான்!" "காணும் காட்சிகள் இருளை கொடுக்குது காது கேட்பதும் பொய்யாய் தெரியுது! காதல் புரிந்தே கொலையும் செய்கிறான் கார்த்திகை தீபம் உண்மை பரப்பட்டும்!" "ஈன்றவன் இல்லை இணைந்தவன் இல்லை இருந்ததும் இல்லை நிலமும் இல்லை! சிதைந்த…
-
-
- 2 replies
- 514 views
-
-
"முதல் - முடிவு கவிதை" / முதல்- தர்மம் & முடிவு- தலை காக்கும் "தர்மம் வகுத்த வழியில் நின்று கர்வம் மறந்து ஆசை துறந்து ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி அர்த்தம் உள்ள உதவி செய்யின் ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!" "தாய் தந்தை இருவரையும் மதித்து வாய்மை என்னும் பண்பு கொண்டு ஆய்ந்து அறிந்து நிதானம் தவறாமல் மெய்யாக மனிதம் போற்றி வாழ்ந்தால் செய்த நன்மை தலை காக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 546 views
-
-
"படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" / "The corpse that oppose the 'Genocide' is asking" "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில்…
-
- 0 replies
- 525 views
-