கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
-
- 0 replies
- 393 views
-
-
-
- 0 replies
- 392 views
-
-
"மாற்ற மொன்றே மாறாதது" "மலைகள் உயரும் சிகரம் கவிழும் விதைகள் முளைக்கும் பூக்கள் வாடும் இன்று இருந்தவன் நாளை இல்லை காலம் காட்டும் உண்மை இதுவே!" "மழை பெய்யுது மண்ணை அரிக்குது பனி பொழியுது உயிர்களை முடக்குது வெயில் அடிக்குது நிலத்தை உலர்த்துது பருவம் செதுக்கும் செயல் இவையே!" "ஆறுகள் பாயும் ஓட்டம் வேறுவேறே சிற்றலை மோதும் வடிவம் பலபலவே காற்று வானம் எல்லாம் மாறுமே மாற்ற மொன்றே மாறாதது என்றுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 392 views
-
-
"என் அப்பாவுக்காக" ['கணபதிப்பிள்ளை கந்தையா' /11/06/1907 - 18/02/2000] "பாராட்டுகள் எதிர்பாராத, பெருமை பேசாத பாசாங்கு செய்யாத, அமைதியான அண்ணல் ! பாசம் கொண்டு, எம்மை உயிராய்நேசித்து பார்த்து வளர்த்த, பெருந்தகை இவன் !" "அன்னாரின் கனவுகளை, இன்று நிறைவேற்ற அன்னாரின் விருப்பங்களை, இன்று முழுமையாக்க அன்னாரின் கவலைகளை, இன்று நீக்கிட அயராது நாம்என்றும், உறுதியாக இருக்கிறோம் !" "எம் வாழ்வின், அனைத்து புயல்களிலும் எம்மை கைபிடித்த, துணிவுமிக்க வீரன் ! எம் மனஅழுத்தம், சச்சரவு காலங்களில் எம்மை வழிநடத்தும், உண்மையான நண்பர் !" "நல்ல கெட்ட நேரங்கள் எல்லாம் நட்புடன் ஆசீர்வதித்து தேற்றிய ஆசான் ! நடுகல்லாய் நாம் இன்று மலர்தூவி…
-
- 0 replies
- 387 views
-
-
"திருக்குறள்" [அந்தாதிக் கவிதை] & "ஊடல்" [அந்தாதிக் கவிதை] "திருக்குறள் சொல்லாதது ஒன்றும் இல்லை இல்லை என்போருக்குப் 'பொருள்' கூறி கூறிய தொடர்ச்சியாக 'அறம்' உரைத்து உரைக்கும் தொனியில் 'இன்பம்' சேர்த்து சேர்த்து கோர்த்து 'ஈரடி'யாய் சிறப்பித்து சிறப்பித்து தமிழுக்குத் தந்தான் திருக்குறள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................................... "ஊடல்" [அந்தாதிக் கவிதை] "ஊடல் இருந்தால் வரும் கூடல் கூடல் வந்தால் சுரக்கும் இன்பம் இன்பம் எல்லை மீறினால் துன்பம் துன்பம் உனக்கு புகட்டுவது அறிவு!" "அறிவு கொண்டு சிறப்பித்தல்…
-
- 0 replies
- 384 views
-
-
"சிந்தை சிதறுதடி" [1] "சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி! நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே விந்தை உலகமடா கொடியவன் பூமியடா கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!" "தீந்தை விழியால் என்னை மயக்கியவள் சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே! வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள் சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள் சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 383 views
-
-
"சொர்க்கம் போக ஆசை பட்டேன்!" "சொர்க்கம் போக ஆசைப் பட்டேன் சொர்ண சுந்தரியை சற்று மறந்தேன் பார்ப்பனன் இடம் மண்டி இட்டேன் வேர்த்து ஒழுக பிரதட்டை செய்தேன் !" "ஊர் பெரியாரைக் கும்பிட்டு கேட்டேன் தர்மமும் தானமும் செய் என்றான் ஏர் பிடித்தவனைக் கேலியாய்க் கேட்டேன் தர்மமும் தானமும் மிஞ்சியது என்றான் !" "தூர்ந்த கேணியை திருத்திக் கட்டினேன் தேர்த் திருப்பணிக்கு அள்ளிக் கொடுத்தேன் தர்ம சாலை கட்டித் திறந்தேன் ஊர்ப் பலகையில் பெயரும் போட்டேன் !" "மார் தட்டி சத்தம் போட்டேன் கார் அனுப்பி கூட்டம் சேர்த்தேன் மோர் ஊற்றி விழா நடத்தினேன் சீர் திருத்த அறிக்கை விட்டேன் !" "கார் காலம் கோடை ஆக தேர்தல் ஒன்று நாட்டை சூழ சேர்த்த …
-
- 0 replies
- 381 views
-
-
"விழிகள் மீனோ மொழிகள் தேனோ" "விழிகள் மீனோ மொழிகள் தேனோ பற்கள் முத்தோ இமைகள் சிப்பியோ கழுத்து சங்கோ மார்பு குடமோ முகம் நிலவோ நெற்றி பிறையோ யான் அறியேன் அழகு மங்கையே உன்னைக் காண இதயம் துடிக்குதே உலகம் கூட எனக்கு வெறுக்குதே கண்ணே கரும்பே அருகில் வருவாயோ?" "புருவம் வில்லோ நடை அன்னமோ கூந்தல் அறலோ இடை உடுக்கையோ சாயல் மயிலோ மூக்கு குமிழாம்பூவோ தோள் மூங்கிலோ விரல் காந்தள்மலரோ வாலிப்பதை தூண்டி வலையில் வீழ்த்திட்டாயே ஆழ்ந்த ஆசையில் விண்ணில் பறக்கிறேனே இனிய இசையும் இடியாய் கேட்குதே மானே மடமகளே நெருங்கி அணைக்காயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 380 views
-
-
"கலப்படம்" "தாய்ப் பால் ஒன்றைத் தவிர தாரத்தின் உறவிலும் பிள்ளையின் அன்பிலும் தாரக மந்திரத்திலும் மதத்தின் போதனையிலும் தாராளமாக இன்று பலபல கலப்படம்" "எந்த பொருளிலும் செயலிலும் கலப்படம் எங்கும் எதிலும் சுத்தம் கிடையாது எச்சில் படும் முத்தத்திலும் கலப்படம் எழுதும் காதல் மொழியிலும் கலப்படம்" "பெண் முட்டையுடன் விந்து இணையும் பெரும் கலவையிலும் சிலசில கலப்படம் பெருத்து குழந்தை வயிற்றில் உருவாகி பெற்று எடுத்தால் அரவாணியென்ற கலப்படம்" "குழந்தை சிரிப்பும் குறும்பும் தவிர குமரி தோற்றத்திலும் வனப்பிலும் கலப்படம் குடும்ப அன்பிலும் பண்பாட்டிலும் கலப்படம் குறிஞ்சிநில முருகன் தமி…
-
-
- 3 replies
- 380 views
-
-
இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளை கொன்றிருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளை அனாதைகள் ஆக்கியிருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளின் தூக்கத்தைக் கெடுத்திருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளின் காதுகளைச் செவிடாக்கியிருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டின் இடிச் சத்தம் ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளை ஓட வைத்தது பள்ளிகளைப் போர் சூழ்ந்த முன்னொரு நாளில் வகுப்பறை நாற்காலிகளை கண்ணீர் பூக்கள் நிறைத்தன …
-
-
- 3 replies
- 378 views
-
-
"தோழனாய் நீயிருக்கத் துன்பமேது...!" "தோழனாய் நீயிருக்கத் துன்பமேது அன்பே ஆழமான உன்இதயத்தில் நானே இருப்பேனே! அழகான என்னுடலும் உனக்கே தருவேனே அழலாக பாசம் நெஞ்சில் சுடர்விடுகிறதே ஈழம் தந்த வீரனே வாழ்கவாழ்கவே!" "காதலர் தினம் ஆண்டுக்கு ஒன்றல்ல காலம் முழுவதும் அன்பின் நாளே! காமம் ஒருபக்கம் நட்பு மறுபக்கம் காத்திருப்பேன் என்றென்றும் எந்தன் பாதிக்கு கார்த்திகை தீபத்தின் நாயகன் நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 378 views
-
-
"வாராயோ வெண்ணிலாவே" "வாராயோ வெண்ணிலாவே சொல்லாயோ காதல் பாராயோ என்னைத் அன்பாய் தழுவாயோ போராட்டம் வேண்டாம் பொறுமையாய் கேட்கிறேன் தாராயோ உன்னை முழுதாக எனக்கு வைராக்கியம் விட்டு அருகில் வருவாயோ?" "சோராத என்மனம் ஏங்கித் துடிக்குது சேராத இதயமே வந்திடு என்னிடம் சீராக சிறப்பாக வாழ்வு தந்து தீராத ஆசைகளை நிறைவு ஏற்றி பாராட்டி உன்னைத் பல்லக்கில் தூக்கவா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 1 reply
- 378 views
-
-
"இதயமே பேசு" "இதயமே பேசு ஆறுதல் கொடு இனிய காதலை மீண்டும் தந்திடு! இன்பம் காட்டி ஏமாற்றியது போதும் இரட்டை வேடம் இனிமேலும் வேண்டாம் இணக்கம் கொண்டு திரும்பி வந்திடு!" "அன்பு பொழிந்து ஆசை தெளித்து அழகு மொழியில் கொஞ்சிக் குலாவினியே! அகன்ற கண்ணும் சிறுத்த இடையும் அளவான மார்பும் கனவில் தோன்றி அக்கினியாய் இன்று என்னை எரிக்கிறியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 378 views
-
-
"காசேதான் கடவுளடா" "காசேதான் கடவுளடா ஆலயமும் வணிகமடா காதல் வேண்டுமா பரிசு கொடடா காதலர் தினம் வணிக சூழ்ச்சியடா! காலம் தாழ்த்தாமல் கையூட்டு கொடுத்தால் காரியம் நிறைவேறும் வெற்றியும் வருமடா!" "ஆண்டவனை வணங்க அர்ச்சனை வேறு ஆரம்ப கல்விக்கும் நன்கொடை வேண்டுமடா! ஆராத்தி தட்டிலும் ஏதாவது போடணும் ஆலவட்டம் ஏந்தினால் நன்மை கிடைக்குமடா ஆராய்ந்து பார்த்தல் அழுவதா சிரிப்பதா!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 1 reply
- 377 views
-
-
"வண்ணங் கொண்ட வெண்ணிலவே" "வண்ணங் கொண்ட வெண்ணிலவே வாராயோ கண்கள் இரண்டும் காணத் துடிக்குதே! மண்ணின் வாசனை உடையில் தெரியுதே பண்பின் இருப்பிடமே வாழ்த்தி வணங்குகிறேன்!" "அன்ன நடையில் மனத்தைக் கவர்ந்தவளே சின்ன இடையில் கலக்கம் தந்தவளே! என்னை மறந்து உலகம் துறந்து உன்னை அடைய விரும்பியது எனோ?" "ஏராளம் பூவையரை நான் முகர்ந்தாலும் ஏமாற்றம் இல்லா நடத்தை கொண்டவளே! ஏற்றவள் எனக்கு நீயென நான் ஏதேதோ எண்ணி ஏங்குவது ஏன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 377 views
-
-
இன்றைய வாழ்க்கை கொடுக்கும் அழுத்தத்தை அளக்க ஒரு சுட்டி, அளவீடு இங்கில்லை. மருத்துவமும் அறியாதது அது. அளவில்லா விருப்பங்களே அழுத்தங்களாக பின்னர் இழப்புகளாக மாறுகின்றன என்று சொன்னாலும், அதைக் கேட்போர் என்று எவரும் இல்லை. *************************** பழைய நீதிக்கதை ------------------------------ ஒரு ஊரில் ஒருவர் இருந்தார் அவர் பெயர் அப்துல் கலாம் 'கனவு காணுங்கள்' என்று அவர் சொன்னார் கலாம் ஐயா பொதுவானவர் எளிமையானவர் நல்லவையே சொன்னார் ஆகவே கனவிற்கு மேல் கனவென்று எல்லோரும் காண்கின்றனர் உத்தியோகம் உயர ஊதியம் இரண்டு மடங்காக வீடு மாளிகையாக வாகனம் வசதியாக பிள்ளைகள் தனியே…
-
- 0 replies
- 376 views
-
-
"சிலுவையை மீண்டும் சுமப்போம்!" "உன்னை காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்! அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!" "உன்னை நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்! அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!" "உன்னை கண்டதால் தியாகம் அறிந்தோம் ச…
-
- 0 replies
- 370 views
-
-
"வானம்" "மேகங்கள் நகரும் வீதி கொண்டு மோகங்கள் தரும் வண்ணம் நீயே! தாகங்கள் தீர்க்கும் மழையைப் பொழிந்து சோகங்கள் துடைக்கும் கருணை வள்ளலே! போகங்கள் போக்கும் நிலவைத் தாங்கி தேகங்கள் வெப்பம் குறைக்கும் வானே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 370 views
-
-
"நண்பர்கள்" [தன்முனைக் கவிதை] & "முத்துக் குளிப்போம்" "நண்பர்கள்" [தன்முனைக் கவிதை] "புரிந்துணர்வு மலர நண்பர்கள் தழைத்து ஓங்கும்! பொறாமை சூழ எதிரிகள் வளர்ந்து பெருகும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................. "முத்துக் குளிப்போம்" "ஆழத்தில் மலரும் முத்து சிற்பிகள் அழகு கோலத்தில் வண்ணக் கற்கள்! ஈழ நாட்டின் சிலாபத் துறையில் அலைகளுக்கு அடியில் பலபல இரகசியம்!" "ஓடுகளின் அரவணைப்பில் ஆழமாக கிடக்குது வண்ணவண்ண நிறத்தில் கண்களைக் கவருது! தூங்கும் புதையலை வெளியே எடுக்க வாருங்கள் நாம் முத்துக் குளிப்போம்!" [கந்தையா தில்லைவிநா…
-
- 0 replies
- 369 views
-
-
with Public ஏப்ரல் 2, உலக சிறுவர் புத்தக தினம் புத்தகங்கள் சிறார்களின் தனி உலகம் புத்தகங்கள் முடிவில்லா வசீகரம் எல்லையற்ற பேரானந்தம் புத்தகங்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷம் புத்தகங்கள் ஆர்வமுள்ள சிறாருக்கு அளவற்ற மகிழ்ச்சி தரும் புத்தகங்கள் …
-
- 0 replies
- 369 views
-
-
"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்" "தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் !" "வில் புருவமும் கயல் கண்களும் விரிந்த இதழும் சங்குக் கழுத்தும் விந்தை காட்டும் உடல் எழிலும் வியந்து நான் வரிகளில் எழுதுகிறேன் !" "மினுங்காத வைரத்தை மினுங்க வைக்க மிருதுவான கையை கோர்த்து பிடிக்க மிதலை பொழியும் அழகில் மயங்கிட மிகுந்த ஆசையுடன் உன்னை நாடுகிறேன் !" "உன்னழகை ரசிக்க வரம் கேட்டு உன்னுடலை அணைக்க தவம் இருந்து உன்சுகம் நாடி நான் வந்து உன் முணு…
-
- 0 replies
- 369 views
-
-
"எங்கு சென்றாய்?" [கசல் கவிதை] "காதல் தந்தாய் காத்திருந்தேன் நாள் முழுவதும்! வேதனை படுத்தி சோதனை செய்யவா எங்கு சென்றாய்?" "அழகிய உடல் ஆனந்தம் தந்தது! அருகில் இல்லாமல் தூர விலகினாயே எங்கு சென்றாய்?" "கொஞ்சும் பேச்சில் நெஞ்சைப் பறித்தவளே! வஞ்சக மனத்துடன் கஞ்சத்தனம் வேண்டாம் எங்கு சென்றாய்?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 2 replies
- 362 views
-
-
"நட்பு என்பது நடிப்பு அல்ல" "நட்பு என்பது நடிப்பு அல்ல நடனம் ஆடும் மேடை அல்ல நயமாக பேசும் பொய்யும் அல்ல நலம் வாழ என்னும் பாசமே!" "வடிவு என்பது உடல் அல்ல வட்டம் இடும் கண்ணும் அல்ல வளைந்து பொங்கும் மார்பும் அல்ல வளையாமல் நிமிர்ந்து நிற்கும் உள்ளமே!" "காதல் என்பது பொழுதுபோக்கு அல்ல காது குளிர பேசுவது அல்ல காமம் கொடுத்து மயக்குவது அல்ல காலம் முழுவதும் உண்மையாக இருப்பதே!" "அன்பு என்பது கடமை அல்ல அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பது அல்ல அற்பம் சொற்பம் தருவது அல்ல அறிவுடன் உணர்ந்து பாசமாக நேசிப்பதே!" "மு…
-
-
- 4 replies
- 359 views
-
-
"தாய்" [12 மே 2024] "அன்பின் இலக்கணம் அன்னை ஆகி அகிலத்தில் அவளே உயர்வு ஆவாள்! அல்லல் பொறுக்கும் தியாகி ஆகி அனைவரையும் அணைக்கும் ஆண்டவன் ஆவாள்!" "பாதிக்கும் இடர்களை தானே தாங்கி பாரம் என்று பிள்ளைகளை எண்ணாள்! குமையாள்; கொதியாள்; குலுங்காமலே நடப்பாள் குழவி கொஞ்சுகையில் துன்பம் மறப்பாள்!" "நடைதவறி வீழ்கையில் துணை நின்று நமதவறுகள் மன்னித்து ஒன்று சேர்ப்பாள்! கடையன் என்று பிறர் சொலினும் கைதடுத்துக் காத்து துணிவு ஏற்றுவாள்!" "வானும் கடல்மலையும் கானகமும் விந்தையில்லை வான்நிலாவும் மலரும் மழைவெயிலும் அதிசயமில்லை வானவன் படைத்தத…
-
- 0 replies
- 358 views
-
-
"என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி" "என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி சின்ன இடையாளே! செருக்குப் பிடித்தவளே துன்பம் வேண்டாமே! மௌனம் கலைத்தாலென்ன? இன்பமொன்றே எண்ணி உன்னிடம் வந்தேனே!" "மின்னல் வேகத்தில் கோபம் கொள்ளாதே கன்னம் சிவக்க உற்றுப் பார்க்காதே! அன்ன நடையில் மனதைப் பறிகொடுத்து கன்னி உன்னை மனதாரக் காதலித்தேனே!" வண்ணக்கிளியே அழகே! தனிமை என்னைவாட்டுதே மண்ணில் வாழும்வாழ்வும் எனக்கு வெறுக்குதே! கண்கள்கூட நீயில்லாமல் இரவில் மூடமறுக்குதே எண்ணமெல்லாம் நீயொருத்தியே! அருகில் வாராயோ?" "விண்ணில் மலரும் நிலாவும் சுடுகுதே …
-
- 1 reply
- 356 views
-