கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
"பாட்டி வாரார் பாட்டி வாரார்" [இரண்டு பாட்டிகளின் கதை] "பாட்டி வாரார் பாட்டி வாரார் பார்த்து படியில் கால் வைத்து பாதியில் நின்று கை காட்டி பாட்டி வாரார் பாட்டி வாரார்" "பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் பாலகனுக்கு கலந்து அன்புடன் ஊட்ட பாவம் பாட்டி இந்த வயதிலும் பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்" "பாடி ஆடி விளையாட்டு காட்ட பால் கொடுத்து கதை சொல்ல பாயில் அணைத்து சேர்ந்து படுக்க பாக்கியம் பெற்றேனென மகிழ்ந்து வாரார்" "பாத்திரம் கழுவி வீடு துடைக்க பானை நிரம்ப சோறு காச்ச பாதை காட்ட நல்ல கதைசொல்ல பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்" ****************** "பாட்டி வாரார் பாட்டி வாரார் பாட…
-
- 0 replies
- 174 views
-
-
"பிறந்தநாள் வயதைக் கூட்டுது ஒருபக்கம்" [01/11/2023 எழுதியது] "எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நானே எதையும் அலசி என்போக்கில் வாழ பழகி விட்டேன்!” "குழந்தை பருவம் சுமாராய் போக வாலிப பருவம் முரடாய் போக படிப்பு கொஞ்சம் திமிராய் போக பழக்க வழக்கம் கரடாய் போச்சு!” "உண்மை தேடி அலச தொடங்கினேன் வேஷம் போட்ட பலதை கண்டேன் ஒற்றுமை அற்ற மதங்களை கண்டேன் ஜனநாயகம் அற்ற ஜனநாயகம் கண்டேன்!” "நானாய் வாழ அமைதி தேடினேன் வாழத் தெரியாதவன் என்று திட்டினர் நாலு பக்கமும் ஓடித் திரிந்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
"நெஞ்சு வலிக்குது ஒரு சீதைக்கு ?" "பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா பிள்ளையை அணைத்து போறாள் ஒருநிலா வள்ளி தெய்வானை திருமண விழா துள்ளி குதித்து கொண்டாடினம் தம்பதியர்." "குட்டி எலியில் தொந்தி பிள்ளையார் முட்டி உடையுமோ ஏங்குது குழந்தை? கொட்டி மேளத்துடன் இரு மனவியரை தட்டி வாழ்த்துறாள் ஒரு கண்ணகி ?" "மஞ்சு விரட்டு ஒரு மிருகவதை அஞ்சி நசுங்கும் எலி தெய்வவாகனம்? பஞ்ச பாண்டவருக்கு ஒரு திரெளபதி நெஞ்சு வலிக்குது ஒரு சீதைக்கு ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.3k views
-
-
"அலைபாயும் மனது நான் அல்ல" "அலைபாயும் மனது நான் அல்ல அனைத்தையும் துறந்த ஏகாந்தம் நான்! அன்பாய், கனிவாய், அக்கறையாய் வருபவரை அதிகாரம் அற்று நேசிப்பவன் நான்!" "ஆழ்ந்த அறிவு அகன்ற பார்வை ஆய்வு செய்திகள் விரும்புபவன் நான்! ஆறுதல் தேடி நட்பு நாடுபவரை ஆனந்தமாய் அணைத்து மதிப்பவன் நான்!" "அத்திவாரம் வாழ்க்கைக்கு தேவை என்று அன்றும் இன்றும் உணர்பவன் நான்! அறிவு ஒற்றுமை காணாத கூட்டத்தை அண்டி வாழாமல் புறக்கணிப்பவன் நான்!" "ஆடைகளை கழட்டுவது போடுவது போல ஆட்களை கொள்கைகளை மாற்றுபவனல்ல நான்! ஆசை ஒன்றைப் பெற்று நிறைவேற்ற ஆரத்தி எடுத்து பந்தம்பிடிப்பவனல்ல நான்!" "அனைவரும் ஒன்றே குலம் என்று அகிலம் முழுவதும் நேச…
-
- 1 reply
- 457 views
-
-
"நொட்டி நொடிய விடாதே பெண்ணே?" "ஒட்டி உடையில் பெண்மை காட்டி எட்டி நடையில் வேகம் காட்டி சுட்டி விடையில் புத்தி காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தட்டி கழித்து நாணம் காட்டி முட்டி மோதி போகும் பெண்ணே!" "பட்டி தொட்டி எங்கும் சொல்லி கட்டி தங்கம் வெட்டி எடுத்து செட்டி செய்த மோதிரம் மாற்றி மெட்டி காலில் கண் சிமிட்ட தட்டி கேட்கத் துணை சேர ஒட்டி உரசிப் போகலாம் பெண்ணே!" "மூட்டி அடுப்பில் சமைக்க வேண்டும் கூட்டி பெருக்கித் துடைக்க வேண்டும் ஊட்டி பிள்ளை வளர்க்க வேண்டும் லூட்டி அடித்து குழப்ப வேண்டும் போட்டி போட்டு கொஞ்ச வேண்டு…
-
- 0 replies
- 1.5k views
-
-
"நட்பு" "தேர்ந்தெடுக்கும் நிறம் குணம் காட்டும். தேர்ந்தெடுக்கும் நட்போ உன்னையே காட்டும் தேய்ந்துபோகும் காதலும் நட்பு இன்றேல் தேயாமல் வாழும் நட்பு ஒன்றே !" "இருகண்கள் அழுதால் கைத்துண்டு துடைக்கும் இருதயம் அழுதால் நட்பு துடைக்கும் இன்பமாய் உலகின் அதிபதியாய் இருப்பினும் இருளாகும் நண்பர் ஒருவர் இல்லாவிடில் !" "இளமை காலத்தில் காதல் வரும் இன்பமாக சில வேளை திருமணமாகும் இளையோர் பலருக்கு நட்பு மலரும் இறுக்கமாக பல வேளை நிரந்தரமாகும்!" "உன்முகம் பார்த்து நட்பு பழகுவதல்ல உயர்தகுதி பார்த்து நட்பு பழகுவதல்ல உதடு கொட்டும் பேச்சுக்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள் !" "மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் ? மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ உன்பார்வை ?" "மகரிகை தொங்கும் வீட்டு முன்றலில் மகத்துவம் பொருந்திய அழகு உடல் மகிழ்ச்சி பொங்கி துள்ளி குதிக்குதே மலர் விழியால் ஜாடை காட்டுதே !" "மறைப்பு கொடுத்த தாவணி விலக மகிழ்வு தரும் வனப்பு மயக்க மவுனமாய் திகைத்து நானும் நிற்க மங்கையும் நோக்கினாள் கண்களும் பேசின !" "மருண்டு விழித்து நாணி குனிய மஞ்சள் பொட்டும் வெள்ளி சலங்கையும் மஞ்சர மாலையும் ஒல்லி இடையும…
-
-
- 12 replies
- 720 views
- 1 follower
-
-
"பூவுக்குள் ஏனப்பா பூகம்பம்" "பூவுக்குள் ஏனப்பா பூகம்பம் பூரியரென்று யார் சொன்னது? பூவையர் என்றால் கேவலமா பூத்துக்குலுங்குவது அழகு மட்டுமா?" "மண்ணில் வளத்தைக் காண்பவனே பெண்ணில் வளமோ ஏராளம்! ஆண்களின் இன்பப் பொருளல்ல கண்கள் அவர்களே வாழ்வில்!" "சிவன்-பார்வதி கதை தெரியாதோ சித்தத்துடன் சமஉரிமை வழங்காயோ? சினம்கொண்டு அவள் எழுந்தால் சிதறிப்போவாய் வாழத் தெரியாமல்?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பூரியர் - இழிந்தோர், கீழ்மக்கள்
-
- 0 replies
- 1.8k views
-
-
"கலப்படம்" "தாய்ப் பால் ஒன்றைத் தவிர தாரத்தின் உறவிலும் பிள்ளையின் அன்பிலும் தாரக மந்திரத்திலும் மதத்தின் போதனையிலும் தாராளமாக இன்று பலபல கலப்படம்" "எந்த பொருளிலும் செயலிலும் கலப்படம் எங்கும் எதிலும் சுத்தம் கிடையாது எச்சில் படும் முத்தத்திலும் கலப்படம் எழுதும் காதல் மொழியிலும் கலப்படம்" "பெண் முட்டையுடன் விந்து இணையும் பெரும் கலவையிலும் சிலசில கலப்படம் பெருத்து குழந்தை வயிற்றில் உருவாகி பெற்று எடுத்தால் அரவாணியென்ற கலப்படம்" "குழந்தை சிரிப்பும் குறும்பும் தவிர குமரி தோற்றத்திலும் வனப்பிலும் கலப்படம் குடும்ப அன்பிலும் பண்பாட்டிலும் கலப்படம் குறிஞ்சிநில முருகன் தமி…
-
-
- 3 replies
- 378 views
-
-
"யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??" "உலக வாழ்க்கையின் மகத்தான மேடையில் வரலாறு படைக்கும் இதயங்களின் மத்தியில் மானிடப் பிறவி எடுத்தவன் மனிதனா? மனிதம் கொண்ட ஒருவன் மனிதனா??" "வெறும் சதையும் எலும்பும் மனிதனல்லா வெறும் பலமும் செல்வமும் மனிதனல்லா வெறும் புகழும் பதவியும் மனிதனல்லா யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??" "கண்கள் விழித்து கருணை காட்டும் கொடுமையைக் கண்டு மனது குமுறும் அறிவுடன் அறிந்து உதவும் கரமும் எங்கே இருக்குதோ? அவனே மனிதன்!!" "துயரம் கண்டு அக்கறை காட்டி ஆறுதல் கொடுக்கும் புன்னகை உதிர்ந்து தனக்கென வாழாது உலகத்து…
-
-
- 2 replies
- 185 views
-
-
'என் மனச திருப்பிக் கொடு' "என் மனச திருப்பிக் கொடு இல்லை என்றால் என்னையே எடுத்துவிடு உன் மனசை தந்து விடு இல்லை என்றால் உன்னையே தந்துவிடு" "எண்ணங்களின் தொகுப்பே மனம் என்றால் நல்ல மனிதர்களை நீ நாடு கன்னங்களின் குழியே அழகு என்றால் நல்ல சிரிப்பை நீ தேடு" "நான் என்ற உணர்வு தோன்றின் மனம் அகங்காரம் ஆகி விடும் ஏன் என்ற கேள்வி பிறப்பின் மனம் புத்தி ஆகி விடும்" "மனது ஆன்மா தொடர்பு பற்றி இறையியல் அன்று எமக்குச் சொன்னது மனது வெறும் உளவியலின் தோற்றமென அறிவியல் இன்று எமக்குச் சொல்லுது" [கந்தையா தி…
-
-
- 4 replies
- 479 views
- 2 followers
-
-
"மேல் தாவணி காற்றில் பறக்க புல் தரைகள் வெட்கிக் குனிய கால்கள் சொருகியதை கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்!" "நெற்றி உடன் நெற்றி மோதி நெஞ்சு இரண்டும் கலந்து துடித்து நெருப்பாய் எரிந்ததை கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்!" …
-
- 0 replies
- 155 views
-
-
"உயிரே!" "அள்ளி அரவணைத்து அன்பு பொலிந்து அனு தினமும் அடைக்கலம் அளித்து அக்கறையாய் பேசி அமுதம் ஊட்டி அமைதி தந்து அறிவூட்டிய உயிரே !" "ஆதரவு கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி ஆலோசனை தந்து ஆணவம் அகற்றி ஆரத் தழுவி ஆசை தூண்டி ஆறுதல் படுத்தி ஆணாக்கிய உயிரே !" "இடுப்பு வளைவு இன்பம் சேர்க்க இதயம் மகிழ்ந்து இதழை பதிக்க இளமை பருவம் இழுத்து அணைக்க இரக்கம் கொண்ட இனிய உயிரே!" "ஈரமான நெஞ்சம் ஈர்த்து பிணைக்க ஈவிரக்கத் துடன் ஈருடல் ஓருயிராக …
-
- 0 replies
- 343 views
-
-
"நில்லாமல் நிற்கும் உன்கால் அழகினால்" [அடி எதுகை 'ல்,ள்,ழ்' யிலும் இணை மோனை: (1,2) லும் பாடல் தரப்பட்டுள்ளது] "நில்லாமல் நிற்கும், உன்கால் அழகினால் சொல்லாமல் சொல்லும், உன் பார்வையால் கொல்லாமல் கொல்லும், உன் வனப்பினால் செல்லாமல் செல்லும், என்னைத் தடுக்கிறாய்!" "துள்ளாமல் துள்ளும், என் உள்ளத்தில் கிள்ளாமல் கிள்ளி, ஆசை கூட்டி அள்ளாமல் அள்ளி, அன்பைக் கொட்டி தள்ளாமல் தள்ளி, என்னை அணைக்கிறாய்!" "பள்ளியில் படிக்காத, பாடம் சொல்லி வள்ளல்கள் வழங்காத, காதல் கொடுத்து நுள்ளாமல் நுள்ளி, ஊடல் கொண்டு பள்ளத்தில் பதுங்கி, என்னை ஏங்கவிடுகிற…
-
- 0 replies
- 148 views
-
-
"இடையது கொடியாய் இளமையது பொங்க" "இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சலம் தந்தவளே!" "அழகில் மயிலாய் அன்பில் தாயாய் ஆனந்தத் தேனாய் ஆசைக்கு நாயகியாய் வானின் தேவதையாய் வாழ்க்கைக்கு துணையாய் தன்னையே தந்து தந்திரமாய் பறித்தவளே!" "பணிந்து உன்னை பலவாறு காட்டி பண்பின் திறனை பலவாறு விளக்கி பருவ எழிலை பலவாறு வீசி பந்தத்தை ஏற்படுத்தி பத்தினியாய் வந்தவளே!" "என்னை …
-
- 0 replies
- 195 views
-
-
"சித்திரம் பேசுதடி" "சித்திரம் பேசுதடி சின்ன பெண்ணே சிறிதளவும் உனக்கு இதயம் இல்லையோ? கோத்திரம் கேட்கிறாய் காதலித்த பின்பு கோலம் ஒன்றை நீரில் போட்டேனோ? பாத்திரம் அறியாமல் காதலை ஏற்றேனோ பாவியாய் இன்று அலைய விட்டாயோ?" "சாத்திரம் பார்க்கும் அழகு மாதே சாந்தமாய் கதைத்து கவர்ந்தது ஏனோ? ஆத்திரம் வருகுதடி ஏமாந்து போனேனே ஆசையை வார்த்து மோசம் செய்தாயோ? காத்திரமான உறவு என்று நான் காலத்தை வீணாக்கி உன்னை நம்பினேனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 308 views
-
-
"கம்பன் வழியில் .... " [கம்பன் விழா 2024 ஜூன் நடுப்பகுதியில் இருந்து பல நாடுகளில் / இடங்களில் ஜூலை நடுப்பகுதிவரை நடக்கின்றன. அதையொட்டி கம்பன் வழியில் எனது ஒரு துளி] "பால் ஒழுகும் இரு குடங்களோ பாலகன் பசி தீர்க்கும் சுனையோ? பாசம் பொழியும் பெண் தெய்வமோ பாவி என்னை அணைக்கா தேவதையோ??" "தென்னையில் இரு அழகு குரும்பையோ தெய்வ மங்கையின் எழில் வடிவமோ? தெவிட்டாத அவள் இன்ப மழையோ தென்றல் காற்றும் கொஞ்சும் உடலோ??" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்)
-
- 0 replies
- 155 views
-
-
"தளதள ததும்பும் இளமை பருவமே" "தளதள ததும்பும் இளமை பருவமே தகதக மின்னும் அழகிய மேனியே நறநறவென பல்லைக் கடித்து நின்று திருதிருவென விழித்து அழைப்பது ஏனோ ?" "சல்சல் என சலங்கை ஒலிக்க சிலுசிலு எனக் காற்று வீச கமகம என முல்லை மணக்க தடதடவென கதவைத் தட்டுவது ஏனோ ?" "திக்குத்திக்கு இன நெஞ்சு துடிக்க திடுதிடு இன அறையில் நுழைந்து தரதர என்று என்னை இழுத்து விக்கிவிக்கி மெதுவாய் அழுதது ஏனோ ?" "தொளதொள சட்டையில் வனப்பைக் காட்டி சிவசிவக்க கன்னத்தில் முத்தம் இட்டு துடிதுடிக்கும் இதயத்தை சாந்தப் படுத்தி கிளுகிளுப்பு தந்து மடியில் சா…
-
- 0 replies
- 177 views
-
-
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே செத்த பிணங்களும் எழும்பி பார்க்குது சொத்தை மனமும் பூரிப்பு கொள்ளுது பித்தம் ஏறி என்காலும் தொடருது!" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே ஒளிரும் அவள் பல் அழகில் ஒடிந்து நானும் காதல் கொள்ள ஒப்புதல் கேட்டு மனம் கெஞ்சிநிற்குது!" "வித்தை பல உடலால் காட்டி கத்தை கத்தையாக காதல் எறிந்து முத்தம் பல இதழால் தந்து ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்!" "ஒழிந்து ஓடி ஆடிப் பாடி ஒற்றை காலில் சலங்கை கட்டி ஒய்யாரமாய் வரம்பில் விழாமல் நடந்து ஒத்தையடிப் பா…
-
-
- 4 replies
- 592 views
-
-
"வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே!" "வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே கலையும் பண்பாடும் கொஞ்சம் அறியுங்கள்! இலைமறை காய்போல் அது உங்களை விலையும் பேசும் மோசமும் செய்யுமே!" "மலையாக உடல் அசையா குழந்தைகளே! மாலை உடற் பயிற்சியும் அற்றுப்போக காலை படிப்பிலும் கவனம் சிதற நிலை தடுமாறி வாழ்வு கெடுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 276 views
-
-
"நேசம்வச்ச நெஞ்சில நெருப்பா ஓநெனப்பு... " "நேசம்வச்ச நெஞ்சில நெருப்பா ஓநெனப்பு வாசம்தாரும் மல்லிகையும் வாடிப்போகுது தேசம்சுற்றும் மாமா நெருங்கிநிண்ணு பேசாயோ பாசம்ஒன்றும் உன் இதயத்தில் இல்லையோ மோசம்இல்லா காதலை வீறாப்பின்றி சொல்லாயோ?" 'கஞ்சி குடிக்கையிலே நினைப்பெல்லாம் நீயய்யா கொஞ்சிக் குலாவ மனதெல்லாம் ஏங்குதய்யா வஞ்சகம் வேண்டாம் இறுமாப்பை நிறுத்தய்யா செஞ்சதையும் சென்சிபுட்டு விலகியது ஏனய்யா மஞ்சள் புடவையில் மணிக்கணக்காய் காத்திருக்கேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 253 views
-
-
"மனித மனம் திருப்தி அடையாது" "மனித மனம் திருப்தி அடையாது மகிழ்ச்சி கொள்ள உள்ளம் விடாது மஞ்சம் இல்லையெனில் படுக்கை வராது மற்றவரைத் தாழ்த்தாமல் வாழ முடியாது" "கதிரவன் கடுமையானால் முறை இடுகிறான் கடும் மழை பொழிந்தால் திட்டுகிறான் கங்கை வற்றினால் பஞ்சம் என்கிறான் கங்கை பெருக்கெடுத்தால் அழிவு என்கிறான்" "இறைச்சி இல்லையெனில் உணவு இறங்காது இல்லாமல் இருப்போருக்கு எல்லாம் இறங்கும் இல்லமே இல்லாதவனுக்கு எல்லாம் படுக்கை இச்சை கொண்டவன் இருந்தும் படுக்கான்" "சிலருக்கு அணிய ஆடைகள் இல்லை சிலருக்கு வைக்க இடமே இல்லை சிக்கனம் தெரிந்தவனு…
-
-
- 2 replies
- 329 views
-
-
"நாம் ஆணா பெண்ணா.. ?" [வித்தியாசமாக இருக்கட்டும் என இப்படி வசன கவிதையில் ஒரு முயற்சி.] "மழலையாய் பிறந்தோம் தாய் தந்தை மகிழ்வில் விளக்கம் இல்லை நாம் வேறா வேறா.." "குழந்தையாய் வளர்ந்தோம் ஒன்றாய் கட்டி உருண்டோம் குழப்பம் இல்லை நாம் ஆணா பெண்ணா.." "சிறு…
-
- 0 replies
- 157 views
-
-
"எல்லாமாய் அவளே" "எல்லாமாய் அவளே இறைவியும் அவளே! சொல்ல முடியா அழகில் வந்து வெல்ல முடியா நெஞ்சைக் கவர்ந்து நல்லாய் வாழ தன்னைத் தந்தவளே!" "கள்ளம் இல்லா நெஞ்சம் கொண்டவளே! உள்ளம் தேடும் அன்பு தந்து அள்ள அள்ள இன்பம் சொரிந்து உள்ளது எல்லாம் எமக்கு கொடுத்தவளே!" "ஆழ் கடலில் மலர்ந்த முத்தே! வாழ்வு தர உன்னையே கொடுத்து தாழ்வு மனப்பான்மை எம்மிடம் அகற்றி சூழ்ச்சி சூது அறியா இல்லத்தரிசியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 472 views
-
-
"பெண் எனும் பிரபஞ்சம்" "பெண் எனும் பிரபஞ்சம் மண் வாழ்வின் இறைவி! கண்ணின் இமையும் அவளே உண்மைத் துணையும் இவளே!" "திண்ணையில் அரட்டையும் செய்வாள் வண்ணத்தில் அழகும் காட்டுவாள்! எண்ணம் என்றும் குடும்பமே கண்ணாய் காப்பாள் என்றுமே!" "உண்ண உணவும் தருவாள் வீண் வம்புக்கும் இழுக்காள்! ஊண் உறக்கமும் பார்க்காள் ஆண்களின் சொர்க்கமும் அவளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 1 reply
- 192 views
-