கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
"உறங்காத விழிகள்" 1881 ஆண்டு இலங்கை குடிசன மதிப்பின் படி, தமிழ் மக்கள் யாழ் மாவடடத்தில் [கிளிநொச்சி உட்பட] ஏறத்தாழ 100% மும் [98.3 & தமிழ் பேசும் முஸ்லீம் 1.0 ], மற்றும் வவுனியா [முல்லைத்தீவு உட்பட], திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் முறையே 81% [80.9 & தமிழ் பேசும் முஸ்லீம் 7.3 ], 64% [63.6 & தமிழ் பேசும் முஸ்லீம் 25.9 ], 62% [61.5 & தமிழ் பேசும் முஸ்லீம் 31.1 ], 58% [57.5 & தமிழ் பேசும் முஸ்லீம் 30.7 ], 30% [30.0 & தமிழ் பேசும் முஸ்லீம் 50.4], 10.0% [10.0 & தமிழ் பேசும் முஸ்லீம் 16.0] இருந்தனர் என புள்ளிவிபரம் காட்டுகிறது. ஆனால் இன்று அப்படி இல்லை. எல்லாம் தலைகீழாக மாறுகிறது. உதாரணமா…
-
- 0 replies
- 333 views
-
-
"கந்தையா கனகம்மா" [உண்மைக் கதை] அத்தியடி, யாழ்ப்பாணத்தில் கந்தையா & கனகம்மா குடும்பம் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தாலும், 1971 ஆம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட முறையற்ற நடவடிக்கைகளாலும், அதைத்தொடர்ந்து 1983 தமிழருக்கு எதிரான ஜூலை கலவரத்தாலும் அவர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் பாதுகாப்புக்காகவும், அமைதியான சூழலுக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் மெல்ல மெல்ல இலங்கை நாட்டை விட்டு வெளிக்கிடத் தொடங்கினர். அப்படியான ஒரு கால கட்டத்தில் தான், குடும்பத் தலைவன் கந்தையாவும் திடீரென ஒரு நாள், 18/02/2000 இல் மாரடைப்பால் காலமாகிவிட்டார். இனக்கலவரம் பெரும் போராக வெடித்த காலம் அது…
-
- 2 replies
- 352 views
-
-
மனிதம் இன்னும் ..... அண்மையில் சென்ற வெள்ளிக் கிழமை சாய் சென்டர் இல் ஒரு திருமண விழாவுக்கு சென்று இருந்தேன். நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்த வேளை.,நேரத்துடன் சென்றதால் அங்கும் இங்கும் விடுப்பு பார்த்து கொண்டிருந்தேன். ஒரு வயதான தம்பதிகள் கணவனுக்கு எண்பது வயதுக்கு மேல் இருக்கும் மனைவியை கவனமாக நுழை வாயில் அருகில் இறக்கி விட்டு அவர் கார் தரிப்பிடம் தேடி சென்றுவிடடார். மனைவி கைத்தடியுடன் நிற்கிறார் . அவரருகே ஒரு பெண்மணி இறங்கி உள் நுழைய முற்படட போது வயதான மனைவி என்னை ஒரு இருக்கையில் உட்க்காரவைக்கமுடியுமா எனக் கேடடார். குளிருக்குள் நிற்க சிரமமாயிருக்கிறது என்றார் . பெண்மணியும் வாருங்கள் உள்ளே செல்வோம் என அழைத்து, உயர்த்தி மூலம் (லிப்ட்) அழைத்து சென…
-
-
- 12 replies
- 659 views
- 1 follower
-
-
தொலைபேசி தொல்லை கொடுக்க எடுத்து "கலோ இங்க சுரேஸ் அங்க யார் ?" "இங்க லாதா உங்க திருமதி சுதா சுரேஸ் இருக்கிறாவோ"என்றாள் நக்கலா. சுரேஸும் பதில் நக்கலாக "திருமதி சுதா இருக்கவில்லை படுத்திருக்கின்றா" "சும்மா பகிடியை விட்டிட்டு டெலிபோனை அவளிட்ட கொடுங்கோ "எதோ அவசரமாக பேசபோகினமாக்கும் என்று நினைத்து டெல்போனை சுதாவிடம் கொடுத்தான்.சுதாவும் ,லதாவும் பாடசாலை காலத்திலிருந்தே நண்பிகள்.புலம்பெயர்ந்த பின்பும் அவர்களின் நட்பு ஒகோ என கொடி கட்டி பறக்கின்றது. புலம்பெயர்ந்த காலத்தில் இவர்களின் உரையாடல் ஆறுமாதத்திற்கு ஒருக்கா அல்லது ஒரு வருடத்திற்கு ஒருக்கா என்றுதான் இருந்தது. காரணம் தொலைபேசி கட்டணம் அந்த காலகட்டத்தில் அதிகமாக இருந்தமையாகும். இன்று இவர்களின் தொடர்பு கு…
-
- 17 replies
- 2.8k views
-
-
'என் தங்கை' நான் பிறக்கும் பொழுது என் அம்மா, அப்பா இருவரும் மிகவும் மகிழ்வாக இருந்தார்கள். நான் அவர்களின் முதல் பிள்ளை. அவர்களுக்கு ஆண் பிள்ளை என்றால் கொள்ளை ஆசை. இரண்டு பையன்கள் வீட்டிற்கு வேண்டும் என்பது அவர்களின் கனவு. நான் ஐந்து வயது கடந்தபின், இரண்டாவது பிள்ளைக்கு முயற்சி செய்தார்கள். "யாயே, கண்ணினும் கடுங் காதலளே எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’ யாமே, ...... " [அகநானூறு 12] எம் தாய் தன் கண்ணினும் இவள்பால் மிக்க காதலுடையாள் எம் தந்தையும் (இவள் எங்கேனும் செல்வது காணின்) நிலத்தே இவள் அடி பொருந்தி நடக்கப் பொறாதவனாகி, ஏடி! இள…
-
- 0 replies
- 249 views
-
-
‘டளிடா…’-சிறுகதை-சாத்திரி நடு இணைய சஞ்சிகைக்காக .... வரிசை மெதுவாகவே நகர்ந்துகொண்டிருந்தது. வருச கடைசி வேற. நத்தாருக்கு பரிசு அனுப்புகிறவர்கள் பொதிகளோடு காத்து நின்றார்கள். நான் பணம் அனுபுவதுக்காக வெஸ்ரன் யூனியன் படிவத்தை நிரப்பி கையில் வைத்திருந்தபடி நின்றிருந்தேன். இந்த நாட்டில் எனக்கு போகப் பிடிக்காத இரண்டு இடங்கள்: முதலாவது வைத்திய சாலை,இரண்டாவது தபாலகம். இரண்டிடத்திலும் வரிசையில் காத்திருப்பதென்பது எனக்கு கொலைக்களத்தில் காத்திருப்பது போல. அவளுக்கு வழமைபோலக் கொடுத்த வாக்குறுதிக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர வேறுவழியில்லை. மெதுவாகநகர்ந்த வரிசையில் சுமார் அரை மணித்தியாலம் கழித்து எரிச்சலோடு அதைக் காட்டிக் கொள்ள…
-
- 22 replies
- 4.3k views
-
-
" பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? " [சிறுகதை] ஒர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப் படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் எனப்படுகிறது. காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது காணாமல போனோர் பற்றிய விபரத்தை மறைத்தல். இது (வலுக்கட்டாயமாக) காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும் . அந்த ரீதியில் தான் இலங்கையில் 19/05/200…
-
-
- 3 replies
- 385 views
-
-
"அஞ்சலி" [உண்மையான தொல்லியல் மற்றும் வரலாற்றை நிலைநாட்டிட ...] கதைகளைக் கேட்டு வளரும் மனிதர்களாகிய நாம், வரலாறும் கதைகள் போலவே இருக்கவேண்டும் என்று பெரும்பாலோனோர் அதிலும் ஆளும் அரசும் அரசு சார்ந்த மக்களும், தங்கள் இருப்பை திடம் ஆக்க ஆசைப்படுகிறார்கள். வரலாறு தமக்குப் பிடித்தாற்போல், தமக்கு புகழ் சேர்ப்பது போல இருக்கவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அது மட்டும் அல்ல, தமக்குப் பிடித்த தரப்பே வெல்லவேண்டும். எதிர்த்தரப்பு தோற்கவேண்டும். என்றெல்லாம் தமக்குள்ள இன்று வரலாற்றுக்கு வரையறைகள் தாமே விதிக்கிறார்கள். பிடிக்காத கதையைக் கேட்கும் குழந்தை அந்தக் கதையைக் கேட்பதை நிறுத்தி வேறு கதை கேட்டு அடம்பிடிப்பது போல், பிடிக்காத உண்மையான வரலாற்றை பொய்…
-
- 0 replies
- 328 views
-
-
"அதுவொரு கனாக்காலம்" [அந்தக் கனாக்காலம் 1948, 1956, 1970, 1977, 1983, என சிதறத் தொடங்கியது] ஒரு காலத்தில், இலங்கையின் வெப்பமண்டல சொர்க்கத்தில், தமிழ் சிங்கள வேறுபாடுகள் இன்றி பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் இலங்கையன் என்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இருந்தனர். இலங்கை மக்கள் தங்கள் வாழ்க்கையையும் நிலத்தின் மீதான அன்பையும் பகிர்ந்து கொண்டு இணக்கமாக வாழ்ந்தனர். இலங்கைத்தீவு வளங்கள் நிறைந்ததாக இருந்தது மட்டும் அல்ல, அதன் மக்கள் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒற்றுமையில் மகிழ்ச்சியடைந்தனர். உதாரணமான சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டது மட்டும் அல்ல, 1911 ஆம் ஆண்டு முதல் இலங்கைச் சட்ட சபை உறுப…
-
-
- 2 replies
- 684 views
-
-
"அமைதியின் கதவு திறக்கட்டும்" இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மீனவ கிராமத்தில், வங்காள விரிகுடாவின் அலைமோதும் நீருக்கும் தீவின் பசுமையான காடுகளுக்கும் இடையில், ரவி என்ற இளம் மீனவன் வசித்து வந்தான். ரவி தனது 25 வருட வாழ்க்கையில் மோதல்களையும் கொந்தளிப்பையும் தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை. வடக்கும் கிழக்கும் என்றும் சண்டை, வலி மற்றும் பயம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கும் இந்த மண்ணில் தான் அவன் பிறந்தான். பல தசாப்தங்களாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஒரு மிருகத்தனமான உள்நாட்டுப் போரால் சிதைக்கப்பட்டன. இந்த மோதல் ரவி போன்ற எண்ணற்ற குடும்பங்களுக்கு சொல்லொணாத் துன்பத்தையும், இழப்பையும்…
-
-
- 5 replies
- 504 views
- 1 follower
-
-
"அவளுக்கென ஓர் இலட்சியம்" ஆதிகாலத்தில் வயல்வெளிகளிலும், சேரிப்புறங்களிலும், ஆங்காங்கே வாழ்ந்து வந்த மக்கள் தமது தேவைகள் கருதியும், ஒருவருக்கு ஒருவரான தொடர்புகளை இலகுவாக்கிக் கொள்ளவும், ஒரு இடத்தை மையமாக வைத்து கூடி வாழ்ந்தார்கள், அது காலப்போக்கில் ஊர், அல்லது கிராமம், என பல பெயர்களில் அழைக்கப்படலாயிற்று, பின்னர் காலம் செல்லச் செல்ல மனிதர்கள் தமது தேவைகள் அதிகரிக்க, அதிகரிக்க கிராமங்களிலிருந்து சற்று நகர்ந்து வாழத் தொடங்கினார்கள், அது காலப்போக்கில் நகரமாக மாறிவிட்டது. ஆனால் இன்றும் சில கிராமங்கள் எதுவித முன்னேற்றங்களுமின்றி இலங்கையில் இருப்பதைக் காண்கிறோம். அப்படியான ஒரு கிராமம் தான் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குப் பக்கமாக மட்டு நகரிலிருந்து ச…
-
- 0 replies
- 220 views
-
-
"அவளும் அப்படியா?" ஒரு காலத்தில் தமிழ் சமூகத்துடன் செழித்தோங்கிய நகரமான திருகோணமலையின் வளைந்த தெருக்களில் நீண்ட நிழல்களை வீசியபடி சூரியன் வானத்தில் தாழ்ந்தது. இங்கு அமைந்துள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தளமும் ஆகும். மேலும் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் / முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் என்ற பகுதியில் [40,41], மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார் என்றும் அவை: கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம…
-
- 0 replies
- 335 views
-
-
"அவளோடு என் நினைவுகள்…" "உன் நினைவு மழையாய் பொழிய என் விழியோரம் கண்ணீர் நனைக்க மென்மை இதயம் அன்பால் துடிக்க அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது " "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய மண்ணை விட்டு நானும் விலக மங்கள அரிசியும் கை மாறியதே!" நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை] …
-
- 0 replies
- 495 views
-
-
"அவளோடு என் நினைவுகள்…" "உன் நினைவு மழையாய் பொழிய என் விழியோரம் கண்ணீர் நனைக்க மென்மை இதயம் அன்பால் துடிக்க அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது " "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய மண்ணை விட்டு நானும் விலக மங்கள அரிசியும் கை மாறியதே!" நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவுபடுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை] வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன் நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின், காலி, மாத்தறை, அம்பாந்தோட்…
-
- 0 replies
- 224 views
-
-
"ஆசையில் ஓர் காதல்" மலை அடிவாரத்தில் உஷா என்ற அழகிய இளம் பெண், தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்தாள். அவள் நீண்ட கருங்கூந்தலையும் பிரகாசிக்கும் அழகிய கண்களையும் கொண்டு இருந்தாள். அவள் ஒரு உண்மையான காதல் தனக்கு கிடைக்கவேண்டும் என்று பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து ஏங்கிவந்தாள். ஆனால் இப்ப அவள் பல்கலைக்கழகம் போன பின்பும், இன்னும் அப்படியான ஒரு காதலை அவளால் அடைய முடியவில்லை. ஒரு நாள், பல்கலைக்கழக விடுமுறை நாளில், தன்னந்தனிய சிறு பத்தைகள் நிறைந்த காட்டுப்பகுதியில், இயற்கையின் அழகையும் அங்கு பறந்து திரியும் பறவைகளையும் ரசித்தபடி நடந்துசென்றாள். அப்பொழுது அவளுக்கு எதிராக நல்ல உயரமும் அழகிய வலிமை பொருந்திய உடல் அமைப்பும் கொண்ட அவன் நடந்து சென்றான். "அடிபுனை தொடுகழல், மை…
-
- 0 replies
- 207 views
-
-
"ஆசையில் ஓர் காதல்" மலை அடிவாரத்தில் உஷா என்ற அழகிய இளம் பெண், தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். அவள் நீண்ட கருங் கூந்தலையும் பிரகாசிக்கும் அழகிய கண்களையும் கொண்டு இருந்தாள். அவள் ஒரு உண்மையான காதல் தனக்கு கிடைக்க வேண்டும் என்று பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து ஏங்கி வந்தாள். ஆனால் இப்ப அவள் பல்கலைக்கழகம் போன பின்பும், இன்னும் அப்படியான ஒரு காதலை அவளால் அடைய முடியவில்லை. ஒரு நாள், பல்கலைக்கழக விடுமுறை நாளில், தன்னந்தனிய சிறு பத்தைகள் நிறைந்த காட்டுப்பகுதியில், இயற்கையின் அழகையும் அங்கு பறந்து திரியும் பறவைகளையும் ரசித்தபடி நடந்து சென்றாள். அப்பொழுது அவளுக்கு எதிராக நல்ல உயரமும் அழகிய வலிமை பொருந்திய உடல் அமைப்பும் கொ…
-
- 0 replies
- 156 views
-
-
"ஆடம்பரம்" போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரின் நடுவே, எழுச்சிமிக்க ஒரு தமிழ்க் குடும்பம் கம்பீரமும் ஆடம்பரமும் நிறைந்து காணப்பட்டது. அவர்களைச் சூழ்ந்து இன்னும் சவால்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் இருந்தபோதிலும், அவர்கள் அதன் மத்தியிலும் தமக்கு இயல்பான, பழக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ முடிந்தது. உண்மையில் ஆடம்பரம் என்பது பார்ப்பவரின் பார்வையில் தான் உள்ளது. நேற்று (கடந்த காலம்) ஆடம்பரமாகக் கருதப்படுவது இன்று (தற்போது) ஆடம்பரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இன்று ஆடம்பரமானது ஸ்மார்ட்போன்கள், மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய சொகுசு வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட் வீடுகள் போன்ற உயர் தொழில்நுட்ப கேஜெட்டுகளை உள்ளடக்கியது. விரைவான இணைப்புக…
-
- 1 reply
- 303 views
-
-
"இளமொட்டு மனது" யாழ்ப்பாண அரசு காலத்தில் தென்மராட்சியின் நிலப்பரப்பு மிகப் பெரியதாக இருந்தது. அப்பொழுது 'கச்சாய்த் துறைமுகம்' முக்கிய இடத்தை பெற்றிருந்தது. அப்படியான யாழ்ப்பாணத்தின் பசுமையான வயல்களின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கச்சாய் என்ற பண்டைய கிராமத்தில், கண்ணகை அம்மன் கோவிலுக்கு அருகில் முத்துச்செல்வி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். அவள் அன்பின் உருவகமாக இருந்ததுடன் அவளுடைய ஒளிரும் கண்கள் ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்தை பிரதிபலித்தும், அதை உறுதிப்படுத்துவது போல அவளுடைய புன்னகையும் நடத்தையும் கூட நிறைந்திருந்தது. ஆயினும்கூட, அவளுடைய கண்கொள்ளா வெளிப்புற அழகுக்குக் கீழே ஒரு துளிர்விட்ட பூவைப் போல, இளமைப் பருவத்தின் சிக்கல்களால் கறைபடாத ஒரு மனமும் அவளு…
-
- 0 replies
- 189 views
-
-
"ஈரமான எண்ணங்கள்" [ஒரு தோல்வியுற்ற காதல் கதை] பருத்தித்துறை வடக்கு நகரத்தின் காற்று எப்போதும் கடல் வாசனை சேர்ந்து உப்புடன் கனமாக இருந்தது. அரனும் சூரியாவும் சிறுவயதிலிருந்தே ஒருவரை யொருவர் நன்கு அறிந்தவர்கள், ஒன்றாக கூடிக் குலாவி விளையாடியவர்கள், இன்று வளர்ந்து வாலிப வயதை அடைந்துவிட்டார்கள், ஆனால் இன்றும் கடற்கரையில் வெறுங்காலுடன், அலைகளுக்கு எதிராக குழந்தைகள் போல் ஒன்றாக ஓடுகிறார்கள். அவர்களிடையே எப்போதும் பேசப்படாத எதோ ஒரு இணைப்பு ஒன்று இருந்தது, அவர்கள் இன்று வளர்ந்தாலும் அவர்களின் இதயங்களை ஒன்றாக இணைக்கும் ஒரு கண்ணுக்கு தெரியாத ஒரு அன்பு , கவர்ச்சி, உணர்வு இருந்தது. அரண் அவளை நெருங்கும் போது சூரியாவின் கண்கள் ஒளிரும் விதம், நாட்கள் எவ்வளவு இருட்டாக, சோர்வ…
-
- 0 replies
- 212 views
-
-
"உதவும் கரங்கள்..!" நாம் ஒரு இருட்டில் தொலைந்து போனால், யாராவது ஒருவர் கொஞ்சம் வெளிச்சம் தந்து பாதுகாப்பான வழியை காட்டினால் நல்லது. ஆமாம் ஒரு சிறிய ஒளி, எங்கள் வீட்டிலும் நாம் வாழும் உலகிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், முதலில் நாம் அதற்கு உடந்தையாக இருக்கவேண்டும். அன்பான சொற்களால், இதயத்தை மகிழ்வாக தொடுவதால், காது கொடுத்து கேட்பதால், அல்லது இதயபூர்வமாக உதவும் கரங்களால் இதை செய்யமுடியும். அதையும் பணத்தை விட, விளம்பரம் செய்வதை விட, முழுக்க முழுக்க அன்பினால் செய்யவேண்டும். அங்கு ஆடம்பரமான மேன்மை அல்லது பாசாங்குத்தனம் இருக்கக் கூடாது. மற்றவர்கள் வேண்டும் என்றால், உங்களை பெருமையாக கூறட்டும். எதோ தன் சுய பெருமைக்கு, பெரிதாக செய…
-
- 0 replies
- 380 views
-
-
"உறவு சொல்ல ஒருத்தி" இலங்கை உள்நாட்டுப் போர் 27 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தி 80,000–100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகியது. இரு தசாப்தங்களாக போர் மற்றும் தோல்வியுற்ற நான்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள், மற்றும் 1987 - 1990 காலப்பகுதியில் இலங்கையில் நிலை கொண்ட இந்தியப் படைகளின் தோல்வியில் முடிந்த நிகழ்வு என்பவற்றின் பின் 2005 பிற்பகுதியில் முரண்பாடு ஆரம்பமாகி, யூலை 2006 இல் மீண்டும் வெடித்தது. புளியங்குளத்திலும் முகமாலையிலும் மணலாறிலும் அதன் நாலாபுறமும் அனல்பறக்கும் சண்டைகள் அடிக்கடி நடந்தன. வன்னி முழுவதிலும் இப்படியான நிகழ்வுகள் நாளாந்தம் நடக்கத்…
-
- 0 replies
- 241 views
-
-
"உள்ளம் கவர்ந்த கள்வன்" நான் உயர்தரம் முடித்து, அரசாங்கம் அறிமுகப் படுத்திய தரம் அற்ற, இனரீதியான தரப்படுத்தல் மூலம், பல்கலைக்கழக நுழைவை இழந்து, தனியார் நிலையம் ஒன்றில் தொழில் சார்ந்த கல்வி ஒன்றில் அன்று பயின்று கொண்டு இருந்தேன். பொழுது போக்காக சில பேனா நண்பர்களை உள்வாங்கி, எனது ஓய்வை பயன் படுத்திய காலம் அது. நாளடைவில், அதில் ஒரு பேனா நண்பன் முன்னிலை வகுக்க தொடங்கினார். அரசியல் தொடங்கி சமயம் வரை எமக்குள் கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. இருவருக்கும் சில உடன்பாடுகளும் மாறுபட்ட கருத்துக்களும் இருந்தாலும் நட்பு வலுவாகிக் கொண்டே போனது. நம்பிக்கை வளர, இயல்பாகவே, எந்தவித தயக்கமும் இன்றி கடிதங்கள் பரிமாற தொடங்கினேன். அவனை பற்றிய தனி விபரங்களையும் …
-
- 0 replies
- 142 views
-
-
"எங்கள் பள்ளிக்கூடம்" [இடைக்காடு மகாவித்தியாலயம்] இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஒரு யாழ்ப்பாணக் கிராமமான அச்சுவேலி பிரதேசத்தில் உள்ள இடைக்காட்டில் எங்கள் பள்ளிக்கூடம் முதலில் ஒரு திண்ணைப் பாடசாலையாக 1925 இல் முப்பது பிள்ளைகளுடன் பண்டிதர் திரு சுவாமிநாதர் இராமசாமி அவர்களைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு, தேற்றாவடி திரு சுப்பர் முருகுப்பிள்ளை ஆசிரியரின் இல்லத்தில் உருவானது. பின் ஓலைக்கொட்டிலில் அமரர் பண்டிதர் திரு க இராமசாமி அவர்களைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு இன்று எங்கள் பாடசாலை அமைந்து உள்ள இடத்தில் நூறு பிள்ளைகளுடன் இடைக்காடு புவனேஸ்வரி ஆரம்ப பாடசாலையாக உருவானது. அப்பொழுது அது ஓரளவு பின்தங்கிய நிலையில், ஆனால் அறிவின் கலங்கர…
-
- 0 replies
- 224 views
-
-
"எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்!" யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், பசுமையான வயல்களுக்கும், மின்னும் நெல் வயல்களுக்கும் மத்தியில், தயாளன் என்ற எளிய விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கடுமையாக உழைத்தான். அவனது கையும் காலும் மண்ணின் வாசனையுடன் பழகியது மட்டுமே அல்ல, அவனது ஆன்மா கூட இயற்கையின் தாளங்களுடன் எதிரொலித்தது. தயாளன் என்றும் பழங்கால பழமொழியில் நம்பிக்கையுடையவன். அதிலும் "வினை விதைத்தவன், வினை அறுப்பான்; தினை விதைத்தவன், தினை அறுப்பான்" அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. மற்றது 'கைபடாத குழந்தையும், கால்படாத பூமியும் வளார்ச்சி பெறாது” கைபடாத குழந்தை என்பது, தாயின் அன்பு, உறவுகளின் பாசம். இவை இல்லா…
-
- 0 replies
- 338 views
-
-
"என் இனமே என் சனமே” (செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை) மேல் வானம் தாழ்வாகத் தொங்கியது, அதுவும் துக்கம் அனுசரிப்பது போல. சிவப்பு பூமியின் அடியில், நீண்ட நேரம் அலறல்கள், பிரார்த்தனைகள் மற்றும் கனவுகளுடன் மங்கின. முப்பத்தி மூன்றாவது மண்டை ஓடு மெதுவாகத் தோண்டி எடுக்கப்பட்டதால், இந்த வாரம் அமைதி மீண்டும் உடைந்தது. அதன் அருகில் - ஒரு சிறு குழந்தையின் பள்ளிப் பை, காலத்தால் மங்கிப்போனது, ஆனால் அதன் இருப்பு பல கதைகளைச் சொல்லப்போகுது. மறக்கப்பட்ட ஒரு தாலாட்டை உச்சரிப்பது போல, தமிழ் எழுத்துக்கள் அதன் குறுக்கே நடனமாடின. அந்தக் செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அருகே, கூடியிருந்த பார்வையாளர்க…
-
- 1 reply
- 192 views
-