Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. "அவளும் அப்படியா?" ஒரு காலத்தில் தமிழ் சமூகத்துடன் செழித்தோங்கிய நகரமான திருகோணமலையின் வளைந்த தெருக்களில் நீண்ட நிழல்களை வீசியபடி சூரியன் வானத்தில் தாழ்ந்தது. இங்கு அமைந்துள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தளமும் ஆகும். மேலும் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் / முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் என்ற பகுதியில் [40,41], மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார் என்றும் அவை: கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம…

  2. "உறங்காத விழிகள்" 1881 ஆண்டு இலங்கை குடிசன மதிப்பின் படி, தமிழ் மக்கள் யாழ் மாவடடத்தில் [கிளிநொச்சி உட்பட] ஏறத்தாழ 100% மும் [98.3 & தமிழ் பேசும் முஸ்லீம் 1.0 ], மற்றும் வவுனியா [முல்லைத்தீவு உட்பட], திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் முறையே 81% [80.9 & தமிழ் பேசும் முஸ்லீம் 7.3 ], 64% [63.6 & தமிழ் பேசும் முஸ்லீம் 25.9 ], 62% [61.5 & தமிழ் பேசும் முஸ்லீம் 31.1 ], 58% [57.5 & தமிழ் பேசும் முஸ்லீம் 30.7 ], 30% [30.0 & தமிழ் பேசும் முஸ்லீம் 50.4], 10.0% [10.0 & தமிழ் பேசும் முஸ்லீம் 16.0] இருந்தனர் என புள்ளிவிபரம் காட்டுகிறது. ஆனால் இன்று அப்படி இல்லை. எல்லாம் தலைகீழாக மாறுகிறது. உதாரணமா…

  3. "காலம் கடந்தும் காதல் வாழும்" [மனைவியின் 17 ஆவது நினைவு தினம்: 08/06/2024] / உண்மையும் கற்பனையும் சேர்ந்த கதை "காலம் மாறினால் அன்பு மாறுமா? கோலம் கலைந்தால் அன்பு போகுமா? ஓலம் எழுப்பினால் பிணம் எழும்புமா? நிலம் வறண்டால் பயிர் துளிர்க்குமா?" நீங்கள் ஒருவருடன் உண்மையான அன்பு அல்லது காதல் வசப்படும் போது, அந்த அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையுடன், வாழ்க்கையின் அனைத்து ஏற்ற தாழ்வுகளிலும் ஒன்றாக பயணிப்பதுடன், அதில் பெரும் மகிழ்வையும் கண்டு, ஒருவருக்கு ஒருவர் கொண்ட அன்பு முழுமையாக வாழ்வதை உணர்வீர்கள்! சொந்த நாட்டை விட்டு வெளிநாடு போனாலும், மாற்று கலாச்சாரத்தின் சில தாக்கங்கள் உங்களை வசப்படுத்தினா…

  4. "அஞ்சலி" [உண்மையான தொல்லியல் மற்றும் வரலாற்றை நிலைநாட்டிட ...] கதைகளைக் கேட்டு வளரும் மனிதர்களாகிய நாம், வரலாறும் கதைகள் போலவே இருக்கவேண்டும் என்று பெரும்பாலோனோர் அதிலும் ஆளும் அரசும் அரசு சார்ந்த மக்களும், தங்கள் இருப்பை திடம் ஆக்க ஆசைப்படுகிறார்கள். வரலாறு தமக்குப் பிடித்தாற்போல், தமக்கு புகழ் சேர்ப்பது போல இருக்கவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அது மட்டும் அல்ல, தமக்குப் பிடித்த தரப்பே வெல்லவேண்டும். எதிர்த்தரப்பு தோற்கவேண்டும். என்றெல்லாம் தமக்குள்ள இன்று வரலாற்றுக்கு வரையறைகள் தாமே விதிக்கிறார்கள். பிடிக்காத கதையைக் கேட்கும் குழந்தை அந்தக் கதையைக் கேட்பதை நிறுத்தி வேறு கதை கேட்டு அடம்பிடிப்பது போல், பிடிக்காத உண்மையான வரலாற்றை பொய்…

  5. கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01 விடுமுறை நாட்களில் தாத்தாவும், பேரனும் ஒன்றாக பொழுதைக் கழிப்பது உண்மையில் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அதற்காக நான் மூத்த மகளிடம் விடுதலைக்கு வருவது வழக்கம். ஒன்றாக விளையாடுவது, கதை சொல்வது மற்றும் பல சின்ன சின்ன செயல்களில் பேரப்பிள்ளைகளுடன் ஈடுபடுவேன். என் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகப் படிப்பு இலங்கை என்பதால், இங்கு பாடமுறை வித்தியாசம் என்பதால், அதை பெற்றோர்களே பார்த்துக்கொள்வார்கள் அப்படி ஒரு விடுமுறையில், கனடா, ஒட்டாவாவில் ஒரு சூடான ஆகஸ்ட் முன் இரவுப் பொழுது, மகளுக்கும் பேரனுக்கும் பெரிய வாக்குவாதம் வந்து விட்டது. மகள் தொலைபேசியில் முக்கிய வேலை விடயமாக கதைக்கும் பொழ…

  6. "சுமைதாங்கி" பண்டைய தமிழர்கள் தம் அன்றாட தேவைக்காகவும் மற்றும் சில பண்பாட்டு தேவைக்காகவும், குறிப்பாக சில வெவ்வேறு கற்களை பாவித்தது தொல்லியலாளர்கள் மூலம் நாம் இன்று அறிகிறோம். அவை அரைவைக் கல் [அம்மி, ஆட்டுக்கல், திரிகை], கல் உரல் [மா இடிக்கும் உரல், எண்ணெய் பிழியும் செக்கு கல்], ஆவுரஞ்சிக் கல் மற்றும் சுமை தாங்கிக் கல், நடுக்கல் ஆகும். நான் பல்கலைக்கழக படிப்பை முடித்துவிட்டு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் இளம் பொறியியலாளராக இன்று கடமையாற்றிக்கொண்டு இருந்தாலும், எனக்கு வியப்பு தந்தவை, அந்த கற்களில் - ஆவுரஞ்சிக் கல் மற்றும் சுமை தாங்கிக் கல் ஆகும். ஒரு முறை நான் விடுதலையில் எனது வீட்டிற்கு அத்தியடி, யாழ்ப்பாணம் சென்றபொழுது, அத்தியடி பி…

  7. "துரோகம்...!" துரோகம் என்றால் என்ன ? கூடவே இருந்து குழி பறித்தல் அல்லது நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுதல். அதே நேரம் வாழ்க்கை, காதல் இரண்டும் ரோசாக்களின் படுக்கை அல்ல! இது அவளுக்கு எனோ புரியவில்லை. அவள் தன் காதலனை அந்த ஆற்றங்கரை ஓரத்தில் இன்னும் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக காணுவாள் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். அவள் ஒன்றாக கூடி வாழ்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. என்றுமே அவள் ஐயப்படும் மாதிரி அவன் நடந்ததும் இல்லை! என்றாலும் அவன், அவளுடன் கணவன் மனைவி உறவுடனே, காதல், காமம் இரண்டிலும் நெருக்கமாக அனுபவித்தே வாழ்ந்தான். அவளும் அவன் மேல் உள்ள நம்பிக்கையில், அவனின் விருப்பங்களுக்கு விட்டுக் கொடுத்தே தினம் தினம் வாழ்ந்தாள். ஒர…

  8. "என்ன தவம் செய்தேனோ...!" நான் சாதாரண வகுப்பு மாணவன். நான் எங்கள் சுண்ணாம்பு கல் வீட்டின் திறந்த விறாந்தையில் உள்ள குந்தில் இன்னும் படுத்து இருக்கிறேன். நேரம் காலை ஆறு மணி. கதிரவன் எட்டிப்பார்க்க தொடங்குகிறான். இன்னும் அம்மா தேநீர் போட அடுப்படிக்கு போகவில்லை. இன்று வெள்ளிக்கிழமை அது தான் அம்மா குளித்து, இப்ப எம் முற்றத்தில் உள்ள துளசியை வளம் வந்து பூசை செய்து கொண்டு இருக்கிறார். நான் படுத்தபடியே, தலைமாட்டில் நான் வைத்திருந்த பாக்கெட் ரேடியோவை இலங்கை, இந்தியா காலை செய்திகள் அறிய திருப்பினேன். "பாலியல் வன்கொடுமை வேகமாக அதிகரித்து வரும் இடங்களில் ஒன்று இன்று இந்தியா. சமீபத்திய ஆய்வின் படி இந்தியாவில் ஒருநாளைக்கு 106 பாலியல் வல்லுறவுகள் நடைபெறுகிறது.…

  9. "ஆடம்பரம்" போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரின் நடுவே, எழுச்சிமிக்க ஒரு தமிழ்க் குடும்பம் கம்பீரமும் ஆடம்பரமும் நிறைந்து காணப்பட்டது. அவர்களைச் சூழ்ந்து இன்னும் சவால்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் இருந்தபோதிலும், அவர்கள் அதன் மத்தியிலும் தமக்கு இயல்பான, பழக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ முடிந்தது. உண்மையில் ஆடம்பரம் என்பது பார்ப்பவரின் பார்வையில் தான் உள்ளது. நேற்று (கடந்த காலம்) ஆடம்பரமாகக் கருதப்படுவது இன்று (தற்போது) ஆடம்பரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இன்று ஆடம்பரமானது ஸ்மார்ட்போன்கள், மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய சொகுசு வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட் வீடுகள் போன்ற உயர் தொழில்நுட்ப கேஜெட்டுகளை உள்ளடக்கியது. விரைவான இணைப்புக…

  10. "மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை] துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தார். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தார். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவர் மட்டுமல…

  11. "காதல் தந்த தண்ணீர் குடம்" நான் வேலை முடிந்து, வீடு திரும்புகையில், நான் வேலை செய்யும் ஊர் சந்தியில் இருந்த பெட்டி கடை ஒன்றில் சூடாக வடை அருந்திக் கொண்டு இருந்தேன். இது தான் என் இரவு சாப்பாடும் கூட. நான் இந்த ஊருக்கு அண்மையில் வேலை மாற்றம் பெற்று வந்தவன். எனக்கான அரச விடுதி பெற ஒன்று இரண்டு மாதம் பொறுத்து இருக்கவேண்டும். ஆகவே தற்காலிகமாக ஒருவரின் வீட்டில் ஒரு அறையில் தங்கி உள்ளேன். ஆகவே சமையலுக்கு அங்கு பெரிதாக வசதி இல்லை. எனவே காலை, மதிய உணவை வேலை தளத்திலும், இரவு உணவை இலேசாக இந்த பெட்டி கடையிலும் இப்போதைக்கு சமாளிக்கிறேன் ஆனால், இன்னும் ஒன்றையும் நான் சொல்லத்தான் வேண்டும், இந்த பெட்டிக் கடையுடன் சேர்ந்த வீட்டில் தான் கடைக்கார…

  12. "தவறான தீர்ப்பு" அக்டோபர் / நவம்பர் 2022 இல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எட்டாவது ரி 20 உலகக்கோப்பை தொடரில், 06/11/2022 அன்று பாகிஸ்தான் பங்களாதேஷ் துடுப்பாட்டம் நடை பெற்றுக்கொண்டு இருந்தது. யார் வெல்லுகிறார்களோ அவர்கள் அரை இறுதி ஆட்டத்துக்குப் போக தகுதி அடைவார்கள். இந்த சூழ்நிலையில் தான் பங்களாதேஷ் அணித் தலைவரும் சிறந்த துடுப்படி வீரருமான சகிப் அல் ஹசன் மைதானத்துக்குள் சென்றார். அப்பொழுது, பங்களாதேஷ் நல்ல நிலையிலும் இருந்தது. அவர் முதல் பந்தை தடுத்த பொழுது, பந்து மட்டையில் பட்டு காலில் பட்டது. அதை சரியாக கவனிக்காமல், மூன்றாவது நடுவர் கூட தவறான தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்புத்தான் பாகிஸ்தானை அரை இறுதிக்கு இட்டுச்சென்றது. இதை பார்த்துக்கொண்…

  13. "காத்திருப்பேன் உனக்காக" படை படையாக ஒன்றின் பின் ஒன்றாக பொங்கி எழுந்து வரும் கடல் அலைகளின் அசைவிலே, அவ்வற்றின் அசைவிற்கு தாளம் போடுவது போல, அங்கு கடற்கரையில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த பனை மரங்கள், தம் பனை ஓலைகளை அசைத்தன. அது மாலை நேரம், பகல் முழுவதும் உழைத்து சோர்வு அடைந்த தொழிலாளியின் பெரு மூச்சு போல, கதிரவனும் ஓடிக் களைத்து பிரியா விடை பெற்றுக் கொண்டு இருந்தான். வீசி வந்த கடற்கரை காற்று, அள்ளி வந்த வெண் மணலையும் சருகுகளையும், கவிதாவின் மேல் கொட்டி. அது எதோ ரகசியங்களை கவிதாவிடம் கிசுகிசுத்தது போல் இருந்தது. காலத்தின் ஆழத்தில் தொலைந்து போன காதலின் எதிரொலிகளை அலைகளும் அவளுக்கு நினைப்பூட்டிக்கொண்டு இருந்தன. …

  14. "வாழாவெட்டி" இலங்கையின் யாழ்பாணத்தில் ஒரு அமைதியான கிராமத்தில் நன்முகை என்ற ஒரு இளம் பெண் கனவுகள் நிறைந்த இதயத்துடன் உயர் வகுப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு, ஆசிரியர் ஆகும் எண்ணத்துடன் யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்று வந்தார். நவம்பர் 28, 2022 அன்று யாழ்பாணத்தை ஆண்ட இறுதி மன்னனான சங்கிலிய மன்னனின் குடும்பப்படம் தேசிய கல்வியியற் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டது. சங்கிலிய மன்னனின் குடும்பப்படத்தை சித்திரத்துறை மாணவ ஆசிரியர்களின் மூலம் கல்லூரியின் சித்திரத்துறை விரிவுரையாளர் நெறிப்படுத்தியிருந்தார். அதேவேளை கல்லூரியின் நுழைவாயிலில் தனிக்கருங்கல்லால் ஆன 13.5 அடி சங்கிலியன் உருவச்சிலை இருப்பதும் குறிப்பிடத் தக்கது. அன்று…

  15. "பொண்டாட்டி ராஜ்ஜியம்" இலங்கையின் வடமாகாணத்தில் ஒரு அமைதியான புறநகர் பகுதியில், அகிலா மற்றும் துகிலன் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக மகிழ்ச்சியாக, அவர்களின் காதலின் அடையாளமாக ஒரு அழகிய பெண் குழந்தையும் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். என்றாலும் நாளடைவில் மூடிய கதவுகளுக்குப் பின்னால், ஒரு இருண்ட மற்றும் ஒரு 'பொண்டாட்டி ராஜ்ஜியம்' மெல்ல மெல்ல தலை தூக்க தொடங்கியது. அகிலம் எல்லாம் தன் கையில் என்ற ஒரு திமிர் அகிலாவிடம் வளர்ந்துவிட்டது. துகிலன் அவளின் காதலிலும் அழகிலும் தன்னை இழந்து, அதை கவனிக்காமல் தூங்கி விட்டான் போலும்! இதைத்தான் தலையணை மந்திரம் என்கிறீர்களா? அகிலா ஒரு வலுவான விருப்பமும்…

  16. "தீர்ப்பு" இந்தியப் பெருங்கடலின் நீலமான அலைகள் மற்றும் இலங்கையின் செழிப்பான பசுமைக்கு மத்தியில் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை நகரமான காலியில், பிரகாசமான கண்களை தன்னகத்தே கொண்ட லோசனி என்ற இளம் பெண்ணும் மற்றும் இரக்கமும் அழகுமுடைய அன்பழகன் என்ற வாலிபனும் ஆழமாக ஒருவரை ஒருவர் காதலித்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆயினும், அவர்களின் காதல் குளிரான கடற்கரை காற்றில், நிலாவின் மங்கலான ஒளியில், பண்டைய காலி கோட்டையின் எதிரொலிக்கும் சுவர்களுக்குள் மலர்ந்தது. லோசனி ஒரு சிங்கள பெண், அவளது சிரிப்பு பாறைக் கரையில் மோதும் அலைகளைப் போல இனிமையாக இருக்கும். அதில் சிலைத்து சிதைந்து விழுந்தவன் தான் தமிழ் வால…

  17. "காதலே கலையாதே" உலகப் புகழ் பெற்ற காதலர்கள் என இன்று நாம் போற்றும் ரோமியோ - ஜூலியட், சகுந்தலை - துஷ்யந்தன், லைலா - மஜ்னூன், மும்தாஜ் - ஷாஜஹான், கிளியோபட்ரா - மார்க்ஆண்டனி, அம்பிகாபதி - அமராவதி, தேவதாஸ் - பார்வதி, உதயணன் - வாசவதத்தை, சங்க இலக்கிய ஆதிமந்தி - ஆட்டநத்தி இப்படி யாரை எடுத்தாலும் அங்கு காதல் வாழ்ந்ததாக முற்றும் முழுதாக சொல்லமுடியாது. பல சோகத்தில் முடிந்தன, பல மரணத்தில் முடிந்தன என்பதே உண்மை. என்றாலும் "காதலே கலையாதே" என்ற வார்த்தைக்கு அர்த்தமும் மதிப்பும் இருப்பதை காண்கிறோம். என் வாழ்வும் இப்படி ஒன்றோ என எண்ணத் தோன்றுகிறது. மும்தாஜ் - ஷாஜஹான் மற்றும் உதயணன் - வாசவதத்தை காப்பியத்தி…

  18. Started by kandiah Thillaivinayagalingam,

    "தேவதை" யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளம் பொறியாளர் ரவி, கொழும்பில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில், பல வருட கடின உழைப்புக்குப் பிறகு ஒரு மைல்கல்லாக உணர்ந்த ஒரு பயணத்தைத் தொடங்கினான். அவன் தனது இருக்கையில் அமர்ந்ததும், பயணிகளுக்கு உதவி செய்யும் விமானப் பணிப்பெண்ணை அவனால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. விமான அறையின் வரம்புகளை மீறியதாகத் தோன்றும் ஒரு அழகிய அழகை அவள் பெற்றிருந்தாள். அவளது அழகும் வசீகரமும் ரவியை வசீகரித்தது, உண்மையிலேயே அசாதாரணமான ஒருவளை தான் சந்தித்த உணர்வை அவனால் அசைக்க முடியவில்லை. அவளைச் சுற்றி எதோ ஒரு அமைதியும் இனம் தெரியாத அரவணைப்பும் இருந்தது, அது அவனை உள்ளே இழுத்து, அவனை மயக்கியது. ஆனால் எனோ இது கண்டவுடன் ஏற்பட்டது அல…

  19. "மர்ம காடு" 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' பற்றி அலசி ஆராய, அதன் மூலப்பிரதியான மகாநாம தேரரால் பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலின், ஆங்கில பிரதியை [1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படட] வாசிக்கத் தொடங்கினேன். ஆறாம், ஏழாம் அத்தியாயத்தில், இலங்கைக்கு விஜயனின் வருகை மற்றும் அவனின் ஆட்சி மிக சுவாரசியமாக பல பொய்களையும் நம்ப முடியாத நிகழ்வுகளையும் கொண்டு இருந்தன. விஜயனும் தோழர்களும் இலங்கைத் தீவில் கரை ஒதுங்கி இலங்கைக்கு வந்தேறு குடிகளாக நின்ற போது 'அங்கு பெண் நாய் உருவில் குவேனியின் பரிவாரத்தைச் சேர்ந்த ஒரு யக்ஷினி (Yakshini) தோன்றினாள் என்றும், குவேனி 'பதினாறு வயதுப் பருவ மங்கை…

  20. "தன்னம்பிக்கை" யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் அல்லது வைத்தீஸ்வராக் கல்லூரி எனப்படும் என் பழைய பாடசாலை 1913 ஆம் ஆண்டில் நாகமுத்து இடைக்காடர் என்னும் சமூகப் பற்றாளர் ஒருவரால் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான கட்டிடமொன்றில் ஆரம்பிக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது. உண்மையில் அங்கு முதலில் இரண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டன. தமிழ் மொழி பாடசாலையாக விவேகானந்தா வித்தியாலயமும், ஆங்கில மொழி பாடசாலையாக வைத்தீஸ்வர வித்தியாலயமும் ஆகும். பின் 1918 இரண்டும் இணைக்கப்பட்டு வைத்தீஸ்வர வித்தியாலயமாக இராமகிருஷ்ணா மிஷனிடம் அன்று கையளிக்கப் பட்டது. இங்கு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரும் கடமையாற்றனார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் இது முதலாம்…

  21. அழைப்பு மணியின் சத்தம் கேட்டு அவசரமாகக் கதவைத் திறந்தாள், றீட்டா காபென்பிறாண்ட்ல். கதவைத் திறந்தவள் முன்னால் எட்டுப் பேர்கள் நின்றிருந்தனர். நிறத்தால் வேறுபட்ட அந்நிய நாட்டவர்கள். அந்த எண்மரில் ஒருவர் பெண்ணாக இருந்தார். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒட்டியிருந்த சோகம், குளமாயிருந்த அவளது கண்கள், றீட்டாவின் மனதை கலங்க வைத்தது. "நாங்கள்….."அவர்களில் ஒரு ஆண் அங்கு நிலவிய நிசப்தத்தை நீக்க முயற்சித்தான். றீட்டா அந்த சத்தம் வந்த திசையை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினாள். வந்திருந்த பெண் மட்டுமல்ல, ஆண்களும் சோகத்தில்தான் இருந்தார்கள். “இலங்கைத் தமிழர்கள். பாரிசிலிருந்து வருகின்றோம். பூரணநாயகியின் விசயம் கேள்விப்பட்டு….” பேச்சை அவர்கள் முடிக்கவில்லை. இல்லை, அவர்களால் மேற்கொண்டு பே…

  22. "விவசாயி" இலங்கையில் உடவலவ நீர்த்தேக்கத்தை அண்டிய பிரதேசமாக இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. இங்கு விவசாய நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான நீர் ஆதாரமாக இந்த நீர்த்தேக்கம் உள்ளது. கொழும்புக்கு கிழக்கே, கொழும்பையும் கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கு ஏ-4 பெருந்தெருவில் 101 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தான் இரத்தினபுரி ஆகும். இரத்தினக்கல் அகழ்வை விட இந்நகரம் தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களுக்கும், கித்துள் வெல்லத்துக்கும் பிரசித்திபெற்றது. முன்பு நெற்பயிர் செய்கை நன்கு மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் இரத்தினகல் அகழ்விற்கு அதிக நிலப்பரப்பு ஒதுக்கப்படுவதால் நெற்பயிர் செய்கை இன்ற…

  23. "குழந்தையும் தெய்வமும்" குழந்தையானாலும் சரி , தெய்வமானாலும் சரி அதை வைத்துச் சீராடி, விளையாடிக் கொண்டாடும் இடத்திலேதான் அவையும் தம் மனம் மறந்து நம்மையும் மகிழ்வித்துத் தானும் மகிழும் ! என்ற பொருள்பட 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்ற ஒரு பழமொழி, அங்கே விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தைகளை பார்க்கும் பொழுது எனக்கு ஞாபகம் வந்தது. நான் பாலர் பாடசாலை ஆசிரியராக இன்று தான் கடமையை ஏற்றுக்கொண்டேன். "குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது – அந்தப் பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது வயது வந்த போது நெஞ்சில…

  24. "ராசாத்தி மனசுல" காதல் !! ஏழை பணக்காரன் , சாதி மதம் , நிறம் குணம் இவை எதையும் பார்த்து வருவது அல்ல, சொல்லமுடியாத இன்பத்தையும் தாங்க முடியாத துன்பத்தையும் கொடுப்பது தான் காதல் !! என் மனதில் அவள் மேல் காதல் இன்னும் இருக்கிறது. ஆனால் அவள், ராசாத்தி மனசுல ? கீதையில் கிருஷ்ணன் चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ் ... (அத்யாயம் 4 - ஸ்லோகம் 13) குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது என்கிறார். கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்ற எண்ணம் ஆத்திக வாதிகளிடம் நிலை…

  25. "யுத்த வடுகளுக்கு மத்தியில் ஒரு காதல்" 25 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் வைத்தியசாலை கட்டமைப்புகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதோடு அவை இன்றைய தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படவில்லை. அது மட்டும் அல்ல, 2009 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களால் வன்னி பிரதேசத்தின் முழு உட்கட்டமைப்பும் தரைமட்டமாக்கப்பட்டு இரண்டரை இலட்சத்துக்கும் மேலானவர்கள் இராணுவம் நடத்திய முகாம்களில் அடைக்கப்பட்டதுடன் 40,000க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சூழலில் தான், போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரில், குழப்பம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.