தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் இருந்து பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறந்த அந்தஸ்தான சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று மக்களவையிலும் இந்த மசோதைவை அமித்ஷா தாக்கல் செய்தார், தொடர்ந்து இதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த மறுசீரமைப்பு மசோதாவுக்கு அதிம…
-
- 1 reply
- 425 views
-
-
பா.ஜ.கவின் வருகை இலங்கை மக்களுக்கு மறுவாழ்வை தந்துள்ளது – தமிழிசை! பாரதிய ஜனதா கட்சி ஆட்ச்சிக்கு வந்த பின்னர் தமக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என இலங்கை மக்கள் கூறுவதாக, பா.ஜ.க வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பா.ஜ.க தமிழகத்திற்கு தேவையான நல்ல திட்டங்கள் பலவற்றை அளித்துக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க எதைக் கொண்டுவந்தாலும் தி.மு.க அதனை எதிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் பிரதமரின் வருகை எங்களுக்கு மறுவாழ்வை தந்துள்ளது என இலங்கை மக்கள் கூறுகிறார்கள் தற்போது வேலூர் தேர்தல் நடைபெறுவதற்கு காரணமே தி.மு.கதான். ஆனால…
-
- 1 reply
- 505 views
-
-
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பிருப்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 35 ஏ, 370 ஆகிய சட்டப் பிரிவுகள் ரத்துசெய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான நிலை நீடித்துவருவதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலர் கைது…
-
- 0 replies
- 488 views
-
-
செயற்கைகோள் தயாரித்த வெள்ளியணை அரசு பள்ளி மாணவர்கள் கரூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்து அசத்தினர். இந்த செயற்கை கோள் வருகிற 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. கரூர்: விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்‘ என்ற போட்டியை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு அறிவித்திருந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-வகுப்பில் படிக்கும் மாணவர் நவீன்குமார் தலைமையில் மாணவர்கள் சுகந்த், பசுபதி, விஷ்ணு, ஜெகன் ஆகியோர் தங்களின் அறிவியல் ஆசிரியர் தனபால் வழிகாட…
-
- 1 reply
- 561 views
-
-
"தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு மற்றும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்குவதற்கான மசோதா ஆகியவற்றை திமுக உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் எதிர்த்தனர். தேர்ந்தெடுத்த அரசு இல்லை மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா "இதை நான் எதிர்க்கிறேன். இந்த சட்டத் தீர்மானமும், மசோதாவும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேவையற்றது. நீங்கள் இந்த மாற்றங்களை உருவாக்க நினைத்தாலு…
-
- 1 reply
- 698 views
-
-
வேலூர் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. வாக்களிக்க மக்கள் ஆர்வம். வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கான லோக்சபா தேர்தல் இன்று நடந்து வருகிறது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் டி.எம்.கதிர்ஆனந்த், நாம் தமிழர் சார்பில் எஸ்.தீபலட்சுமி, உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிட்டுள்ளனர்.வேலூர் தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 7,01,351, பெண்கள் 7,31,099, மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் உள்ளனர். தேர்தலையொட்டி, வேலூர் மக்களவைத் தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்ப…
-
- 0 replies
- 562 views
-
-
பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்ட காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதியில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. தி.மு.கவின் மூத்த தலைவரான துரைமுருகன், தன் மகன் கதிர் ஆனந்த் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதே அவரது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால் மிகத் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கிறார். முத்தலாக் சட்டத்தின் காரணமாக பா.ஜ.க. மீதும் அ.தி.மு.க. மீதும் இஸ்லாமியர்கள் அதிருப்தி அடைந்திருப்பதால் அவர்களது வாக்குகளும் தங்களுக்கே கிடைக்குமென தி.மு.க. நம்புகிறது. தற்போது மக்களவையில் அ.தி.மு.கவின் சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார். ஏ.சி. சண்முகம் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த எண்ணி…
-
- 1 reply
- 698 views
-
-
திருட வந்த மளிகை கடையில் கொள்ளையன் செய்த வேலையால் கடலூரில் பரபரப்பு In இந்தியா August 3, 2019 8:26 am GMT 0 Comments 1655 by : Yuganthini ‘உயிரை பணயம் வைத்து திருட வந்த என்னை ஏமாற்றலாமா?’ என்று மளிகை கடைக்காரருக்கு கொள்ளையன் ஒருவன் கடிதம் எழுதி வைத்து அதிர்ச்சி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் கடலூர் பிரதான வீதியருகில் மளிகை கடையொன்றை நடத்தி வருகிறார். கடந்த 1ஆம் திகதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் வந்து வழக்கம்போல கடையை திறந்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறி…
-
- 1 reply
- 1.4k views
-
-
கரூர் மாவட்டம் குளித்தலையில் குளம் ஆக்கிரமிப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்த சமூக ஆர்வலரும் அவரது மகனும் படுகொலை செய்யப்பட்டது பற்றி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் தாமாக முன்வந்து ஐகோர்ட் மதுரை கிளை விசாரித்து, தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்பி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கரூர் மாவட்டம், குளித்தலை முதலைப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமர் (எ) வீரமலை (70), இவரது மகன் நல்லதம்பி (எ) பாண்டு (35). அங்குள்ள குளத்தில் சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வந்தது தொடர்பாக இவர்கள் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரம…
-
- 0 replies
- 643 views
-
-
முஸ்லிம் மக்களை அ.தி.மு.க அரசு ஏமாற்றுகிறது – ஸ்டாலின் குற்றச்சாட்டு! In இந்தியா August 2, 2019 5:39 am GMT 0 Comments 1135 by : Krushnamoorthy Dushanthini முத்தலாக் சட்டமூல விவகாரத்தில் அ.தி.மு.க முஸ்லிம் மக்களை ஏமாற்றிவிட்டதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து ஆம்புர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “முத்தலாக் தடை சட்டமூலத்தை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் எப்படி இரட்டை ஆட்சி நடைபெறுகிறதோ அதேபோல் இந்த…
-
- 0 replies
- 496 views
-
-
எங்க முதல்வருக்கு உடனே இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுங்க... மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை வைத்த ஆர்.பி..! முதல்வர் எடப்பாடிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வீடு விடுமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மத்திய அரசின் நல்ல திட்டங்களை எப்போதுமே வரவேற்கும் அதிமுக, தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து வருகிறது. நாட்டை ஆளும் மோடி மீது சில நாடுகள்…
-
- 0 replies
- 476 views
-
-
வேலூரே குலுங்குது.. படையெடுத்து வந்த ஐடி ஊழியர்கள்.. நாம் தமிழர் தீபலட்சுமிக்காக!யாருப்பா சொன்னது.. விவசாயி சின்னம் இருந்தால், விவசாயிகள் மட்டும்தான் ஓட்டு போடுவாங்கன்னு.. தீபலட்சுமிக்கு பாருங்க.. சென்னை, பெங்களூரில் இருந்து ஐடி ஊழியர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வேலூருக்கு வந்துவிட்டார்கள்! அதிமுக, திமுக என்ற ஜாம்பவான் கட்சிகளுக்கு நடுவில் நுழைந்து தில்லாக போட்டியில் குதித்துள்ளது நாம் தமிழர் கட்சி. இங்கு அக்கட்சியின் வேட்பாளராக தீபலட்சுமி போட்டியிடுகிறார். நடந்து முடிந்த எம்பி தேர்தலில் கூட இப்படி இல்லை.. தேர்தல் முடிவின் தாக்கமோ அல்லது அரசியல் கட்சிகளில் 3-வது இடத்தை முன்னேற்றமோ தெரியவில்லை.. ஐடி ஊழியர்கள் எல்லாம் கிளம்பி வேலூருக்கு பிரச்சாரம் செய்ய வந்துவிட்…
-
- 2 replies
- 1.3k views
-
-
"பால் பாக்கெட்" கவரை.. திரும்ப கொடுத்தால் காசு.. ஆவின் அறிவிப்பு.. குப்பையில் வீசுவதை தடுக்க திட்டம். ஆவின் பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் அதற்கு பணம் தருவோம் என ஆவின் அறிவித்துள்ளது. குப்பையில் பால் பாக்கெட் கவர்களை வீசுவதை தடுக்க இத்திட்டத்தை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு விலக்கு அளித்தது.இந்நிலையில் சுற்றுப்புற சூழலை பாதுக…
-
- 0 replies
- 583 views
-
-
நெய் திருடிய ரவுடி.. கடையை தாக்கி அட்டகாசம்.. கைது செய்த போலீஸ்.. பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம். ஒரு ரவுடி.. போயும் போயும் ஒரு நெய் பாட்டிலை திருடி மாட்டிக் கொண்டுள்ளார்.. விஷயம் வெளியே தெரிந்ததும், அரிவாளை கொண்டு பொதுமக்களை வெட்ட முயன்றபோது, போலீசாரிடம் சிக்கி.. விசாரணையின்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையையும் உடைத்து கொண்டுள்ளார்! தமிழகத்தின் முக்கிய இடங்களில் சரவணா ஸ்டோர் கடைகள் உள்ளன. அதில் நெல்லை சரவணா செல்வரத்தினம் கடையும் ஒன்று. ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கடை இது. அதனால் எப்பவுமே கூட்டநெரிசல் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் சில ரவுடிகள் இங்கு திடீரென அரிவாளுடன் புகுந்து கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் செய்துவிட்டனர்.…
-
- 0 replies
- 862 views
-
-
*வேங்கை மகன் வேட்டையாட காடிருக்குமா..?* (உலகப் புலிகள் நாள் சிறப்புக் கட்டுரை) - கப்பிகுளம் ஜெ.பிரபாகர் *புலிகளைக் காக்க ஜூலை 29 'உலக புலிகள் நாள் ' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஏனெனில், உலகிலேயே புலிகள் அதிகம் வாழும் நாடு இந்தியா; இந்தியாவின் தேசிய விலங்கு புலி.* தமிழும் புலியும்! புலிகளுக்கும், தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. தமிழ் இலக்கியங்களிலும் புலிகள் இடம்பெற்றுள்ளன. புலியை முறத்தால் துரத்திய பெண் வீரத்தமிழச்சியாகப் பார்க்கப்பட்டாள். புராணக்கதைகளில் ஐயப்பன் புலிப்பால் குடித்து, புலி வாகனத்தில் செல்வார். புலியோடு சண்…
-
- 0 replies
- 1.5k views
-
-
குளித்தலை அருகே பட்டப்பகலில் பயங்கரம் மகன், தந்தை சரமாரி வெட்டிக்கொலை: குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் மூலம் நடவடிக்கை எடுத்ததால் கும்பல் வெறிச்செயல் குளித்தலை: குளித்தலை அருகே குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட் மூலம் நடவடிக்கை எடுத்த மகனையும், தந்தையையும் அடுத்தடுத்து வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டியை சேர்ந்தவர் ராமர் (எ) வீரமலை (70). சமூக ஆர்வலர். இவரது மனைவி தாமரை (65). இவர்களது மகன் நல்லதம்பி(எ) பாண்டு(35). இவருக்கு திருமணமாகி பொன்னர்(11) என்ற மகன் உள்ளார். ராமர் முதலைப்பட்டியில் உள்ள அய்யனார் கோயில் பூசாரியாகவும், கோயில் காவல்காரராகவும் இருந்து வந்தார். மேலும் தனக்கு சொந்தமான நில…
-
- 0 replies
- 353 views
-
-
இலங்கையின் தென்பகுதிவரை பாய்ந்த வைகை, தாமிரபரணி நதிகள் - ஆய்வு சொல்வது என்ன? முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI Image captionகோப்புப்படம் தமிழகத்தில் ஓடும் வைகை, தாமிரபரணி நதிகள் நீண்ட காலத்திற்கு முன்பு இலங்கையின் காலி நகரம் வரை பா…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு, குடியுரிமை வழங்கவேண்டும் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என, இந்திய நாடாளுமன்றத்தில் கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அகதி முகாம்களில் அவதியுறும் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் இந்திய நாடாளுமன்றில் கவனயீர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை ரவிக்குமார் மேற்கோள்காட்டியிருக்கிறார்…
-
- 1 reply
- 428 views
-
-
ஜெயலலிதா மரணம்- அப்பலோ மருத்துவமனை எதனையோ மறைக்க முயல்வதாக குற்றச்சாட்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் அப்பலோ மருத்துவமனை எதையோ மறைக்க முயல்கின்றது என ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் ஆறுமுகசாமி ஆணையம் இதனை தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தடை செய்யவேண்டும் என அப்பலோ மருத்துவமனை கோருவதில் ஏதோ சந்தேகம் உள்ளது என ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்ட மனுவில் தெரிவித்துள்ளது. நாங்கள் சரியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றோம் ஆனால் அப்பலோ மருத்துவமனை எதனையோ மறைக்க முயல்கின்றது என ஆணையம் தெரிவித்துள்ளத…
-
- 2 replies
- 805 views
-
-
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அற்புதம்மாள் இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பை திருமாவளவன் எம்.பி.ஒழுங்கு செய்திருந்ததுடன்,அவரும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார். மேற்படி சந்திப்பு 7 பேர் விடுதலையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. http://thinakkural.lk/article/32405
-
- 0 replies
- 968 views
-
-
கிணற்றுக்குள் கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள் ; பரபரப்பில் ஊர் மக்கள் தமிழகத்தின் செங்கோட்டை அருகே, கிணற்றுக்குள் கிடந்த 8 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர் இருளப்ப தேவர். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவருக்கு சொந்தமான தோட்டம் பெரியபிள்ளைவலசை செல்லும் சாலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று (27ம் திகதி) மாலை, இருளப்ப தேவர் மகன் அய்யப்பன் என்பவர் தோட்டத்தில் உள்ள தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். மின்மோட்டாரை ‘ஒன்‘ செய்து தண்ணீர் பாய்ச்சியபோது, கிணற்றில் இருந்த தண்ணீர் வற்றியது. அப்போது, கிணற்றுக்குள் சில மோட்டார் ச…
-
- 0 replies
- 401 views
-
-
திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி, உட்பட மூவர் வெட்டிப் படுகொலை... ஹால், பெட்ரூம், கிச்சன் என ஒவ்வொரு ரூமிலும் ஒவ்வொரு கொலை விழுந்து, திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் வீடே ரத்த வெள்ளத்தில் கிடந்தது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டதற்கு பின்னணி காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது சம்பந்தமாக 4 ஆண்கள், 3 பெண்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையையும் நடத்தி வருகின்றனர். 1996-ம் ஆண்டு சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று மேயரானார் உமா மகேஸ்வரி. மேயராக இருந்தபோது உமா மகேஸ்வரியின் செயல்பாடுகளை எத்தனையோ முறை மனதார பாராட்டியவர் மறைந்த கருணாநிதி. கட்சி இவரது செயல்பாடுகளுக்கு காத்து கிடந்தாலும் குடும்ப சூழல் காரணம…
-
- 3 replies
- 854 views
-
-
தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது? திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்.! கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் புளித்துப்போன தோசை மாவு குறித்து கடைக்காரரிடம் கேட்ட எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இதற்காக ஏராளமான விருதுகளை குவித்துள்ளார் ஜெயமோகன். அதுமட்டுமின்றி நான் கடவுள், அங்காடித்தெரு, கடல், ரஜினியின் நடிப்பில் வெளியான 2.0 விஜயின் சர்கார் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார். புளித்துப்போயிருந்த தோசை மாவு இந்நிலையில் நேற்றிரவு ஜெயமோகன் பார்வத…
-
- 35 replies
- 5.4k views
- 2 followers
-
-
அலுவலகம் இல்லை.. நடுத்தெருவில் நிற்கிறேன்.. நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் வேதனை. அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்க வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் வழக்குகளை ஐ ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வருகிறது. ஆனால் அவர் மீது சக அதிகாரிகளே கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. பணியின் போது பல்வேறு இடையூறுகளையும், நெருக்கடிகளையும் அளிப்பதாக புகார் தெரிவித்தனர்.இந் நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது…
-
- 1 reply
- 916 views
-
-
தந்தை இலங்கையில் பிறந்தவர் என்பதால் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட மாணவருக்கு, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சீட் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கருப்புசாமி என்ற மாணவர் தொடர்ந்த வழக்கில் மருத்துவக்கல்வி துறையின் முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ சீட் வழங்கவில்லை என்றும், தன் தந்தை இலங்கையில் பிறந்தவர் என்பதால் தன்னை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றும் மாணவர் கருப்பசாமி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இன்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையின் போது, மாணவரின் பள்ளி, இருப்பிட சான்றிதழ்…
-
- 0 replies
- 522 views
-