Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சசிகலா கட்சிப் பதவி ஏற்ற பிறகு தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக வளர்மதி அறிவிப்பு 2017-01-0800:04:59 சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட பிறகு, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக கட்சியின் இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, வளர்மதி தனது குடும்பத்தினருடன் நேற்று போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். மறைந்த ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக இருந்தபோது …

  2. சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார். சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 5 நாள்கள் பரோலில் வந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக நடராசனுக்கு உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக…

  3. சசிகலா கணவர் நடராஜனுக்காக மூளை சாவு வாலிபரின் உடல் அபகரிப்பு சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக, மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல், திருச்சியிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் வரவழைக்கபட்டு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி,பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகாலாவின் கணவர் நடராஜன், 74, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்ததால், சென்னை, குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.'நுரையீரல் பாதிப்பும் உள்ளதால், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்…

  4. சசிகலா கணவர் நடராஜனுடன் திருநாவுக்கரசர் ‘திடீர்’ சந்திப்பு: காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு சசிகலா கணவர் நடராஜனுடன் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர்: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேதாரண்யம் வந்தார். அங்கு உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு உப்பு அள்ளும் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் தஞ்சை வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசை மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிக…

  5. சசிகலா கணவர் நடராஜனுக்கு... ஹை பிபி.. அப்பல்லோவில் அனுமதி. சென்னை: நேற்று தான் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினமே அவரது கணவர் நடராஜனுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன். அவருக்கு திடீரென நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவதாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 4வது மாடியில் உள்ள எல் வார்டில் நடராஜன் அனுமதி…

  6. சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ் எம்.ஜி.ஆருக்குப் பிறகான அ.தி.மு.க வரலாற்றை, சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எழுத முடியாது. தமிழகத்தின் தலைமைச் செயலாளர் முதல் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வரை முடிவு செய்யும் அதிகார மையமாக அந்தக் குடும்பம் இருந்தது. அவர்களின் அதிகார ஆக்டோபஸ் கரங்கள், சகல திசைகளிலும் பரவி வேரூன்றின. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு ‘சின்னம்மா’ என சசிகலாவை அழைத்தவர்களே இப்போது, ‘சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக’ அறிவித்துள்ளனர். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், இப்போது சசிகலாவின் உறவுகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை…

  7. சசிகலா குடும்பத்தினரின், தமிழக சொத்து களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வரும்,வருமான வரித்துறை,அவர்கள் நடத்திய போலி நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு கள் குறித்தும், விசாரணையை துவக்கியுள்ளது. இது தொடர்பாக, அமலாக்கத் துறையும், விரைவில் களத்தில் இறங்குகிறது. அதனால், சசி உறவுகளுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் நிழலாக, 25 ஆண்டுகளாக வாழ்ந்த சசிகலா மற்றும் அவர்களது உறவினர்கள், தமிழகத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து களை வாங்கி குவித்துள்ளனர். இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள், சசிகலா, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, சென்னையில், 117 இடங்…

  8. சசிகலா குடும்பத்தினர் சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை! சசிகலா குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் அடுத்த கட்ட நகர்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. வருமான வரி புலனாய்வு துறையின் வேலை ரெய்டு நடத்துவது மட்டும் அல்ல. ரெய்டுக்கு உள்ளானவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிப்பதும் அவர்களின் முக்கியமான பணி. நம்பிக்கை என்றால் பூங்குன்றன் 'ஆபரேஷன் க்ளீன் மணி' என்ற பெயரில் தமிழகத்தில் வருமானவரித்துறை நடத்திய மெகா ரெய்டு அடுத்த கட்டத் திருப்பத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. சசிகலாவால் நியமிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வீட்டில் ரெய்டு நடத்தியதையும், அவரிடம் விசாரணை நடத்தியதையும்தான் வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவ…

  9. மிஸ்டர் கழுகு: சசிகலா குடும்பத்தில் எத்தனை கட்சிகள்? கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் தனது கட்சியின் தலைமை அலுவலகத்தைத் திறந்துவிட்டாரே தினகரன்?” என்றோம். ‘‘ஆமாம்... அவரது சபதம் ஆச்சே! ‘எதிரிகள் தடுத்தாலும், சொந்தக் குடும்பத்தினர் தடுத்தாலும், கட்சியைத் தொடங்கி என் போக்கில் பயமில்லாமல் செல்வேன்’ என்று சபதம் போட்டுள்ளார் தினகரன். அதன் முதற்கட்டமாகவே, தலைமை அலுவலகத்தை அவர் திறந்துவிட்டார்.” ‘‘இந்தத் திடீர் உற்சாகத்துக்கு என்ன காரணம்?” ‘‘திவாகரனின் திடீர் எதிர்ப்புதான் காரணம். ஜூன் 3-ம் தேதி திறப்பு விழா என்று தினகரன் அறிவித்ததும், ‘கருணாநிதியின் பிறந்தநாள் அன்று, கலைஞர் கருணாநிதி நகரில் தினகரனின் அலுவலகம…

  10. சசிகலா குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் 'பளிச்'சென அம்பலமாகி வருகின்றன. தினகரன் - திவாகரன் இடையே வெடித்த குடும்பத்தில் கடும் கசமுசா ஏற்பட்டுள்ளது.இதை, திவாகரன் மகன், ஜெயானந்த், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோரின் 'பேஸ்புக்'பதிவுகள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளன. ஜெ., மறைவுக்கு பின், சசிகலா குடும்பத்திற்குள் அதிகார மோதல் ஏற்பட்டது. சசிகலா சிறைக்கு சென்றதும், மோதல் அதிகரித்தது. சசிகலா அறிவுரைப்படி, அவரது அக்கா மகன் தினகரன், புதிய கட்சியை துவக்கி உள்ளார். சசிகலாவின் தம்பி திவாகரன் கட்சியில் தன் மகனுக்கு முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், குடும்பத்தினரை ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டி தினகரன் தனித்து செயல்பட்டு வருகிறார். இது, த…

  11. சசிகலா குடும்பத்தில் மோதல் உச்சகட்டம் சசிகலா குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மோதல் தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதன்பிறகு கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால் அதிமுக எம்எல்ஏக்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் சசிகலாவால் முதல்வர் பதவியேற்க முடியாமல் போனது. அதனால் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வரானார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண…

  12. சசிகலா குடும்பத்துக்குள் குத்துச்சண்டை! - தீபக் திடீர் புரட்சியின் பின்னணி “பன்னீர்செல்வம் திரும்பி வரவேண்டும்; அவர் வந்தால் ஏற்றுக் கொள்வோம்; அவர், தலைமைப் பொறுப்பைக் கேட்டால் விட்டுக்கொடுப்போம்; கட்சி உடையக்கூடாது என்பதற்காக எதையும் செய்வோம்; அதே நேரத்தில், அ.தி.மு.க-வின் துணைப்பொதுச்செயலாளராக இருப்பதற்கு டி.டி.வி.தினகரனுக்குத் தகுதி இல்லை” என்று ஸ்டேட்மென்ட்களை அடுக்கி அ.தி.மு.க-வை அதிர வைத்துள்ளார், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக். இன்றைய தேதிக்கு சசிகலா குடும்பத்துக்கு பரம எதிரிகளாகப் பார்க்கப்படும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தீபா அணிகளே சற்று அடங்கி இருக்கும் நிலையில், இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த தீபக் திடீரென வாய் திறந்திருப்பது டி.டி.…

  13. கட்சி, ஆட்சியை விட்டு... சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறோம்.. அதிமுக (அம்மா) திடீர் அறிவிப்பு! அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு அளித்து சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனான ஆலோசனைக்குப் பிறகு இதனை அவர் அறிவித்தார். ஒரு குடும்பம் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தொண்டர்களின் விருப்பத்தையும், தமிழக மக்களின் ஒட்டு மொத்த விருப்பத்தையும் நிறைவேற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென்றால் டி.டி.வி. தினகரன் குடும்பத்தைச் ஒதுக்கி வை…

  14. சசிகலா குடும்பம் கொள்ளையடித்தது எப்படி? ஜெயலலிதா விதைத்த வினை - நக்கீரன் கோபால்

  15. சசிகலா குடும்பம்குறித்து ஜெயலலிதா பேசியது என்ன? குறுந்தகடுகளை வெளியிட்டு அதிரவைத்த அமைச்சர் 2011-ம் ஆண்டு, அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா குடும்பம்பற்றி ஜெயலலிதா பேசியது என்ன என்பதுகுறித்த குறுந்தகடுகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியும் முதல்வர் பழனிசாமி அணியும் இணைந்த பிறகு, கட்சியையும் சின்னத்தையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அதே நேரத்தில், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளதோடு, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துக் கடிதம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய…

  16. சசிகலா கும்பலில் இந்த ஆண்டு தண்டனை பெற்றவர்கள் 1 - 2 - 3 - 4 - 5 - 6... Colors: சென்னை:சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டு தண்டனை பெற்ற சசிகலா, சிறையில் உள்ள நிலையில், லண்டனில் இருந்து சொகுசு கார் இறக்கும…

  17. சசிகலா கும்பலை 'கழற்றிவிட' அமைச்சர்கள்...ஆலோசனை!: கட்சியை காப்பாற்ற முடிவெடுக்க வேண்டிய நெருக்கடி பிளவுபட்ட, அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க, பழனிசாமி - பன்னீர் என, இரு தரப்பிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள், ரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளனர். கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சசிகலாவையும், அவர் உறவினர்களையும் ஒட்டுமொத்தமாய் புறக்கணிக்க ஆலோசித்து வருகின்றனர். ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள்ளது. கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். சசிகலா அணியில், 122 எம்.எல்.ஏ.,க்கள், 33 எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்ட…

  18. சசிகலா குற்றவாளி..! இனி தமிழக ஆளுநர் என்ன செய்யப் போகிறார்...? #OPSVsSasikala #DACase ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்திருந்தார். இந்த சூழலில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது தமிழகத்தின் அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது. இப்போதைக்கு கவர்னர் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்னொருபுறம் முதல்வர் பன்னீர்செல்வம் தமது ராஜினாமா கடித த்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாகச் சொல்லி இருக்கிறார். எனவே, முதலில் பன்னீர்செல்வத்தை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் சொல்லலாம். ஓ.பி.எஸ் பெரும…

  19. சென்னை : சொத்துகுவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற சசிகலா, சரணடைய கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது. வாய்மொழியாக...: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், உடல்நிலையை காரணம் கேட்டு, சரணடைய இரண்டு வார கால அவகாசம் கோரி சசிகலா தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வாய்மொழியாக கோரிக்கை விடுத்தனர். நிராகரிப்பு: ஆனால், இதனை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், சசிகலா கோரிக்கையை ஏற்க முடியாது. தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.…

  20. சசிகலா கொடுத்த சீக்ரெட் பிளான்! - தினகரனின் அதிரடி பின்னணி #VikatanExclusive சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு சென்னை வந்த தினகரன், அதிரடியாக அ.தி.மு.க நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அடுத்து, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற, தினகரன் காய் நகர்த்திவருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறையிலிருக்கும் சசிகலாவை சில நாள்களுக்கு முன் தினகரன் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு சென்னை வந்த அவர், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 'ஆகஸ்ட் புரட்சி' என்ற பெயரில், கட்சியில் அதிரடிகளைத் தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக, தன்னுடைய ஆதரவாளர்களுக்குக் கட்சியில் பொறுப்புகளைக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இது…

  21. சசிகலா சந்திப்பில் விதிமீறல் சிறை துறை குட்டு அம்பலம் பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை, பார்வையாளர்கள் விதிகளை மீறி சந்திக்க, சிறைத் துறை அனுமதித்துள்ள தகவல், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலமாகி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பிப்., 15ல், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 'அன்று முதல், சசிகலாவை, யார் யார், எப்போது, எந்த நேரத்தில் சந்தித்து பேசினர்' என, பெங்களூரைச் சேர்ந்த, சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், சிறைத் துறை…

  22. சசிகலா சமாதானத்துக்காக காத்திருக்கும் தினகரன்! - இளவரசி குடும்பத்தை வளைத்தாரா எடப்பாடி பழனிசாமி? Chennai: சசிகலாவை சந்திப்பதற்காக இன்று அவசரப் பயணமாக பெங்களூரு சென்றிருக்கிறார் டி.டி.வி.தினகரன். ' விவேக்கை சமாதானப்படுத்த முடியாதது ஒரு காரணமாக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு இளவரசி குடும்பத்தை வளைத்துவிடக் கூடாது என்பதும் மிக முக்கியமான காரணம். விவேக்கை சமாதானப்படுத்தும்விதமாக சசிகலாவிடம் சில விஷயங்களைப் பேச இருக்கிறார் தினகரன்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆளும்கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்த அதே அளவுக்கு இளவரசி குடும்பத்தின் செயல்பாடுகள் தினகரனுக்குப் பேரதிர்ச்சியைக் க…

  23. சசிகலா சிறை முறைகேடு – லஞ்ச முறைப்பாடு குறித்து விசாரிக்காதது ஏன்? ரூபா கேள்வி:- பெங்களூர் சிறையில் சசிகலா சிறப்பு சலுகை பெற்ற விவகாரத்தில், லஞ்ச முறைப்பாடு குறித்து விசாரணைக் குழு ஏன் விசாரிக்கவில்லை என கர்நாடக சிறைத் துறை முன்னாள் டிஐஜி ரூபா கேள்வி எழுப்பியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை டிஐஜி ரூபா, “சசிகலா, அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்ட கைதிகள் சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதற்காக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள…

  24. சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி! சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி உறுதிசெய்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில் ஜெயலலிதா மரணமடைந்துவிடவே, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனையை எதிர்த்து சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு கடந்த மே மாதம்…

  25. சசிகலா சீராய்வு மனு மீது இன்று விசாரணை: உச்ச நீதிமன்றம் தகவல் தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரும் சீராய்வு மனுவை மூவரும் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தனர். அதில், “அரசு ஊழியரான ஜெயலலிதா வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.