Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை: அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்தித்ததாக சீமான் கைது பகிர்க படத்தின் காப்புரிமைNAAM THAMIZHAR Image captionசீமான் சேலம் மாவட்டத்தில் சேலம் - சென்னை எட்டுவழி சாலை அமைக்க திட்டமிட்டு அளக்கப்பட்ட பகுதிகளான பாரபட்டி ,சீலநாயக்கன் பட்டி, ஆழகு நகர் பகுதிகளில் கருத்து கேட்டு அப்பகுதி மக்களை சந்திக்க வந்த தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் துரை மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ தனசேகரன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் நாம் தமிழார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யுனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட ஒன்பது பேரை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் - சென்னை…

  2. மிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்! ‘‘வருமானவரித் துறையின் மொத்த கவனமும் தமிழ்நாட்டின்மீதுதான் இருக்கிறது’’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார் கழுகார். ரெய்டு செய்திகளை அவரே கொட்டட்டும் என்று காத்திருந்தோம். ‘‘2016 சட்டமன்றத் தேர்தலின்போது கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு சூறாவளி, இன்னும் தமிழகத்தைவிட்டு நகரவில்லை. அதன்பிறகு, சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு, ஈ.டி.ஏ குழும அலுவலகங்களில் ரெய்டு, தமிழகத்தின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு, சசிகலா உறவினர்கள் வீடுகளில் ரெய்டு என்று சுழன்றடித்த வருமானவரித் துறையின் பார்வை, தற்ப…

  3. அதிரவைக்கும் வருமான வரி சோதனை: அதிமுகவை நோக்கி குற்றச்சாட்டு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை நடத்திவரும் சோதனைகளில் சுமார் 163 கோடி ரூபாய் பணமும் 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனைகள் இன்றும் நடந்துவருகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழ்நாட்டில்…

  4. போலி கடவுச்சீட்டுகள் தயாரித்த இலங்கைப் பெண் உட்பட மூவர் சென்னையில் கைது இலங்கையர்களை இந்தியர் போன்று போலி கடவுச்சீட்டுகள் தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைகத்த சந்தேக நபர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . 38 வயதான பெண் ஒருவர் உட்பட இலங்கையர் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த போலிக்கடவுச்சீட்டு தயாரிப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை பெண் சுற்றுலா வீசா மூலம் இந்தியா சென்று விசா முடிந்த பின்னரும் அங்கிருந்தநிலையில்; போலி கடவுச்சீட்டை பெறுவதற்காக முகவர் ஒருவரின் உதவியை பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்…

  5. ஸ்டெர்லைட்: ''தூத்துக்குடி எரிந்த தினம்'' அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சிக்கு அறிவிக்கப்படாத தடையா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தூத்துக்குடியில் மே மாதம் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததாக கூறி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து, பல்துறை ஆய்வாளர்கள் ஒரு அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னைக்கு வரவிருந்தவர்கள் ச…

  6. மிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை! - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை ‘‘அ.தி.மு.க-வின் அதிகார மையமாக ரஜினி... இது எப்படி இருக்கு?’’ என்றபடியே என்ட்ரி ஆனார் கழுகார். ‘‘நம்புகிற மாதிரி இல்லையே?’’ என்றோம். ‘‘எதுவும் நடக்கலாம் என்பதுதான் அரசியல் தியரி’’ எனச் சொல்லிவிட்டு, குறிப்பு நோட்டைப் புரட்ட ஆரம்பித்த கழுகார், ‘‘சென்னையில் பி.ஜே.பி நிர்வாகிகள் மத்தியில் அமித் ஷா ஆற்றிய உரைக்கு அர்த்தம் தேடும் பி.ஜே.பி சீனியர் தலைவர்கள் சிலர், இதைத்தான் சொல்கிறார்கள். ‘தமிழகத்தில் பி.ஜே.பி எங்கே இருக்கிறது என்று கேட்பவர்கள், 2019 மார்ச் மாதத்தில் பி.ஜே.பி-யைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, கூட்டணி …

  7. சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் போன்ற பெரிய திட்டங்கள் வர வேண்டும். அவ்வாறு வந்தால்தான் நாடு முன்னேறும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது: ''காமராஜர் பிறந்த நாளான இன்று அவரை நினைவுபடுத்திக்கொண்டு, அவரைப் போன்ற தலைசிறந்த அரசியல்வாதி மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆசை. என்னுடைய ஆசையும் கூட. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி சிறப்பாக உள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவரது வேலையை நன்றாகச் செய்து கொண்டிருக்கிறார். காந்தி, காமராஜர் கொள்கைகளுக்காகவே வ…

    • 0 replies
    • 342 views
  8. நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்திற்கு என்ன நன்மை? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழகத்தின் தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ நோக்கு கூடத்தால் கதிர்வீச்சு ஏற்படாது என்றும், அந்த கூடத்தில் பூமியைத் துளைத்து ஆய்வு நடைபெறாது என்றும் நியூட்ரினோ திட்டத்தின் இயக்குநரான வி.எம். தத்தார் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைBBC/GETTY IMAGES பொட்டிபுரம் கிராமத்தில…

  9. பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்தமை குறித்து கண்டனங்கள் : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டபோது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தமை குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்இ மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தது துரதிஷ்டவசமானது என்றும்இ வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும்இ பயிற்சியின்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பங்கேற்கவில்லை எனவும்இ கல்லூரியில் பயிற்சி அளித்த ஆசிரியருக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்…

  10. இலங்கைக்கு தப்ப முயன்ற மூன்று இலங்கை அகதிகள் கைது தமிழகத்தில் வசித்து வந்த இலங்கை அகதிகள் மூவர் இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற போது மண்டபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக தமிழகத்திற்க்கு அகதிகளாக சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட மூன்று அகதிகள் மண்டபம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்றனர். இதன்போது அவர்களை மண்டபம் பொலிஸார் கைது செய்து மண்டபம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/36552

  11. தொழில் வளர்ச்சி: பின்தங்கிய மாநிலங்கள் தமிழகத்தை முந்துகின்றனவா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலக வங்கி மற்றும் மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (Department of Industrial Policy and Promotion) ஆகியவை இணைந்து, 2018ஆம் ஆண்டுக்கான தொழில் செய்ய உகந்த இந்திய மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகம் 15ஆம் இடம் பிடித்துள்ளது. படத்தின் காப்புரிமை…

  12. துப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி கலெக்டர் எங்கு சென்றார் ? - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் இன்று சரமாரி கேள்விக் கணைகளை தொடுத்தனர். மதுரை : தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவத்தில் தலைமை செயலாளர் மற்றும் உள்துரை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வழக்குளை ஒன்றாக சேர்த்து சென்னை உயர்நீதிமன…

  13. மிஸ்டர் கழுகு: களையெடுக்க காலா ரெடி! கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் செய்தி... ‘நேரில் வரமுடியாத அளவுக்கு பிஸி!’ இதைத்தொடர்ந்து பத்தி பத்தியாக வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்பித் தள்ளிவிட்டார். ரஜினி அலுவலகத்தில் நடந்த சர்ச்சைகளைக் கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தேன். அது இன்னும் பெரிதாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங் முடித்து, டார்ஜிலிங்கிலிருந்து சென்னை திரும்பிவிட்ட ‘காலா’ ரஜினி, இனி களையெடுப்பில் இறங்கப் போகிறாராம். சமீபத்தில், மன்றத்தின் முக்கியமான பொறுப்பில் அமர்த்தப்பட்ட ராஜு மகாலிங்கம்கூட டம்மி ஆக்கப்படலாம் என்கிறார்கள். ‘‘ராஜு மகாலிங்கம், தி.மு.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர…

  14. தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலம்: அமித்ஷா புகார் ஊழல் மிகுந்த மாநிலம் தமிழகம்; இந்த ஊழலை அகற்ற பாஜக நிர்வாகிகள் உறுதியேற்க வேண்டும்' என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறினார். பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா வரும் 2019-இல் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். இதற்காக தமிழகப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சென்னைக்கு திங்கள்கிழமை அவர் வந்தார். பொறுப்பாளர்களுடன் தனித் தனியே ஆலோசனை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்க கடற்கரை அரங்கில் பாஜகவின் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 41 நாடாளுமன்ற தொகுதிப் பொறுப்பாளர்களுடன் தனித் தனியாக ஆலோசனை நடத்தினார். …

  15. பேரறிவாளனை விடுவிக்க எந்த ஆட்சேபமுமில்லை - ராகுல் இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக ஏழு பேர் கைதுசெய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கியது. இருப்பினும் குறித்த இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசாங்கம் இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியில் தடுத்து வைத்துள்ளது. இந் நிலையில் பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை என காங்கி…

  16. அப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்! ஜெ-வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதைந்திருக்கும் மர்மங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம். ‘சசிகலா குடும்பத்தினரைக் குற்றவாளியாக்கும்விதமாக ஆணையம் செயல்படுகிறது’ என புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், ஆணையத்தின் விசாரணை அப்போலோ மருத்துவமனையை சிக்கவைக்கப் பார்க்கிறது. ‘தோண்டத் தோண்டப் புதையல்’ போல இந்த விசாரணையில் புதுப்புது பூதங்களாகப் புறப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் லேட்டஸ்ட் பூதம்... ஜூலை 4-ம் தேதி ஆணையத்தில் ஆஜரான அப்போலோ மருத்துவமனை டாக்டர் சினேகாஸ்ரீ தந்த வாக்குமூலம். 2016 செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமன…

  17. மூடப்பட்டுள்ள தூத்துக்குடி தொழிற்சாலை ஊழியர்களின் நிலைமை என்ன? தூத்­துக்­கு­டியில் இயங்கி வந்த வேதாந்தா குழு­மத்தின் ஸ்டெர்லைட் தொழிற்­சாலை போராட்­டங்­களால் மூடப்­பட்­டுள்ள நிலையில், அதை மீண்டும் திறந்து இயங்கச் செய்­ய­வேண்­டு­மென்று, போராட்­டங்கள் நடத்­தி­ய­வர்­க­ளா­லேயே கோரிக்கை விடுக்கும் நிலை தோன்­றி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. ஸ்டெர்லைட் தொழிற்­சாலை மூடப்­பட்­டதால், தொழிலை இழந்த தொழி­லா­ளர்கள் வரு­மானம் எது­வு­மில்­லாமல், உண­வுக்கு வழி­யின்றி தடு­மாறும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. எனவே மூடப்­பட்­டுள்ள தொழிற்­சா­லையைத் திறந்து மீண்டும் இயங்கச் செய்­வதால், தமது வாழ்­வா­தா­ரத்­துக்­கான வரு­மா­னத்தைப் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கு…

  18. தென்மாநிலங்களில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை: பொருளாதாரத்துக்கு மேன்மையா, வீழ்ச்சியா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவதற்கான காரணங்கள், தொழிலாளர்கள் உள்நாட்டுக்குள்ளேயே குடிபெயர்வதற்கான தேவை, அதனால் உண்டாகும் தாக்கம் உள்ளிட்டவை குறித்த கட்டுரைத் தொடரின் முதல் பாகம்.) படத்தின் காப்புரிம…

  19. ”இறந்தாலும் உயிர்தெழுந்து கேள்வி எழுப்புவோம்!”- ஸ்டெர்லைட் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பிரகாஷ்ராஜ் ``பாசிச சக்திகள் நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை. மக்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் இவர்களுடைய இறுதிநாள்கள் எப்படி இருக்கும் என்பதை மனித இனம் நிச்சயம் பார்க்கும்.” நாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கின்ற வீம்புக்காகவோ அல்ல. மற்றதற்காக வென்றால் நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்ற கொள்கை கொண்டிருக்கிறதோ அதற்கு அப்பதவி பயன்படுமா என்று கருதிப் பார்த்துப்பயன்படாது என்று அன்று கண்டதாலேயே ஆகும். – பெரியார் (விடுதலை:23-8-1940) …

  20. மிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்! திடீர் மழைக்குப் பிறகு வெயில் கொளுத்திய காலை நேரத்தில் கழுகார் சரேலென உள்ளே நுழைந்தார். ‘‘வருமானவரித் துறை ரெய்டின் அனல் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா என மூன்று மாநிலங்களில் பரவியிருக்கிறது’’ என்றார். ‘‘விளக்கமாகச் சொல்லுங்கள்’’ என்றபடி ஜூஸ் டம்ளரை அவர் பக்கமாகத் தள்ளிவைத்தோம். ‘‘தமிழகத்தில் கொங்கு மண்டலம், கர்நாடக மாநிலத்தில் முக்கியமான இடங்கள் என மொத்தம் 75 இடங்களில் ஜூலை 5-ம் தேதி காலையிலிருந்து ஐ.டி ரெய்டு நடந்தது. தமிழக அரசுக்கு சத்துணவு முட்டை, சத்துமாவு, பருப்பு, பாமாயில் என அனைத்தையும் விநியோகிக்கும் கிறிஸ்டி நிறுவனம், அதைச் சார்ந்த துணை நிறுவனங்களான நேச்சுரல் ஃபுட…

  21. தமிழ்நாட்டில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடக சுதந்திரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் குறித்த அரசின் போக்கு ஒரு மிகப் பெரிய வீழ்ச்சியை தொட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இது புதிது அல்ல. …

  22. சிவகங்கை : நிலத்தடி நீர் பாதாளத்திற்கு செல்வதால் தமிழகம் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மணல் கொள்ளையால் நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் 7 ஆண்டுகளில் 6 மீட்டர் குறைந்துள்ளது. மழை நீர் சேமிப்பு தீவிரப்படுத்தப்பட்டால் மட்டுமே 'டே ஜீரோ' அபாயத்தில் இருந்து தமிழகம் தப்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.நிலத்தடி நீர்மட்டம் வற்றி தண்ணீருக்கு பெரும் பஞ்சம் நிலவுவதை 'டேஜீரோ' என்கின்றனர். தமிழகத்தில் சில ஆண்டுகளாக தொடர்ந்து மழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆறு, கண்மாய், ஓடைகளில் வரைமுறை இன்றி மணல் அள்ளப்பட்டதால் பொழியும் மழைநீர் கூட தேங்குவதில்லை. மழைநீர் சேமிப்பு கானல்நீராகி விட்டது. நிலத்தடிநீர் மட்டம் அதலபாதாளத்திற்கு செல்கிறது. தி…

    • 0 replies
    • 636 views
  23. தமிழை வளர்க்க வருடம் ஐந்து கோடி: முதல்வர் அறிவிப்பு! தமிழை வளர்க்கும் முயற்சியில் ஆண்டுதோறும் ஐந்துகோடி ரூபா செலவு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை போற்றும் வகையிலும், சமூகத்தின் மீதான அவரின் ஆழ்ந்த அக்கறையை சமூகத்தவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், உலக தமிழாராட்சி நிறுவனத்தில், அவரது பெயரில் கலை மற்றும் சமூகவியல் மேம்பாடு ஆய்வு இருக்கை ஒரு கோடிரூபா வைப்புத் தொகையில் தொடங்கப்படும் எனக் கூறினார். அத்துடன் லண்டனில் இருக்க கூடிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட, தமிழகர்கள் அதிகமாக வாழும் …

    • 1 reply
    • 625 views
  24. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனம் பகிர்க தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூட உத்தரவிட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS இந்த மேல் முறையீடு நிலுவையில் இருக்கும் காலகட்டத்தில், ஆலையை பராமரிக்கவும் பிற இடைக்கால நிவாரணங்களை வழங்கவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதியை ஸ்டெர்லைட் நிர்வாகம் கோரியுள்ளது என்று ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா லிமிடெட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறி…

  25. மிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா? - அமாவாசையில் அதிரடி! கழுகார் உள்ளே வரும்போதே, ‘‘தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளின் உள்கட்சி விவகாரங்கள்தான் இந்த வார ஹாட் டாபிக்’’ என்றார். முரசொலி அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் நடத்திய தி.மு.க தென்மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பற்றிய கட்டுரையைப் படித்தவர், ‘‘உமது நிருபர் லேட். இந்தக் கட்டுரை பிரசுரமாகி வெளியில் வருவதற்குள் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன’’ என்றார். ‘‘ஆமாம்’’ என்றோம் சமாளிப்பாக. ‘‘மதுரையில்தான் இது சர்ச்சையாகியுள்ளது. மதுரை மாநகர் மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டாக இருந்ததை ஒன்றாக்கி, மாநகர் மாவட்டப் பொறுப்பாளராக கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு எழுந்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.