தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
'இன்று கர்நாடகம்... நாளை தமிழகம்...' பா.ஜ.கவின் கோஷம் வெற்றிபெறுமா? நல்லதம்பி நெடுஞ்செழியன் “இன்று கர்நாடகா…. நாளை தமிழகம்” என்ற கோஷத்துடன், தமிழக பா.ஜ.க.(பாரதிய ஜனதா கட்சி)வினர் கர்நாடக மாநிலத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடுகின்றனர். கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தலில் 104 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.விடம் ஆட்சியை ஒப்படைத்துள்ளதுடன், அதன் மாநிலத் தலைவர் எடியூரப்பாவை முதலமைச்சராகவும் நியமித்து, சத்தியப் பிரமாணம் செய்து வைத்திருக்கின்றார் மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா. கர்நாடகா மாநில ஆளுநரின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிக தொகுதிகளில் வெற்றிபெற்ற க…
-
- 1 reply
- 749 views
-
-
மெரினா அருகே நினைவேந்தலுக்காக குவிந்த மக்கள்; வைகோ, திருமுருகன் காந்தி பங்கேற்பு; கடற்கரை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு அருகே உள்ள பாரதி சாலையில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினா கடற்கரையை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்ப்ட்ட்ன்ர். இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச…
-
- 1 reply
- 373 views
-
-
மதிமுக -நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதல்: திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் செல்வதற்காக மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) சென்னையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தனர். வரவேற்க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு சேரன் ஆகியோர் தலைமையில் மதிமுகவினரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் நாம் தமிழர் கட்சியினரும் விமான நிலைய வாசலில் தங்களது கட்சி கொ…
-
- 1 reply
- 537 views
-
-
தமிழினப் படுகொலைக்கு இராமேஸ்வரத்தில் நூதன முறையில் அஞ்சலி!!! இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்காக தமிழர் நலம் பேரியக்கம் சார்பில் நேற்று நூதன முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலின் 9ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு மே 18ஆம் திகதியான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றினைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். அந்த வகையில் தமிழர் நலம் பேரியக்கம் மற்றும் தமிழர் ஒன்று கூடல் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படத்தை படகு வடிவில் அமைத்து அதனை இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் சுடரேற்றி முள்ளிவாய்க்கால் நோக்கி ம…
-
- 0 replies
- 431 views
-
-
மிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு! ‘‘திடீரென குஷ்பு டாபிக்கல் ஆகிறாரே?” என்று கழுகாரைப் பார்த்ததும் கேட்டோம்! ‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக திருநாவுக்கரசர் வந்ததிலிருந்தே குஷ்புவுக்கும் அவருக்கும் ஆகவில்லை. இருவரும் மறைமுகமாக மோதிவந்தனர். இப்போது வெளிப்படையாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் திருநாவுக்கரசரின் செயல்பாடு பற்றி குஷ்பு விமர்சித்துள்ளார். இந்நிலையில் மறைமலை நகரில் நடந்த காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், ‘என்னைப் பதவியிலிருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். என்னை நீக்க அவர் யார்? குஷ்பு ஒரு நடிகை. படத்தில் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம்.…
-
- 0 replies
- 1.2k views
-
-
மிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி! ‘‘கர்நாடகா தேர்தலுக்காக தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் பல விஷயங்கள் தள்ளிப் போடப்பட்டன. அவை எல்லாமே இனி வேகவேகமாக நடக்கும்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘பட்டியலைக் கொடும்’’ என்றோம். உடனே ஆரம்பித்தார். ‘‘ரஜினி அடுத்தடுத்து தனது மக்கள் மன்றத்தினருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் பலரும் ‘பி.ஜே.பி-யுடன் கூட்டணி வேண்டாம்’ என்று சொன்னார்கள். ‘நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும்தான் கூட்டணி அமைக்கும். சட்டமன்றத் தேர்தல் இப்போதைக்கு வராது என நினைக்கிறேன்’ என்று ரஜினி பதில் சொன்னார். அந்த பதிலிலிருந்துதான் புது அரசியல் ஒன்று ஆரம்பித்திருக்கிறது.’’ …
-
- 0 replies
- 1.5k views
-
-
`சசிகலா உத்தரவுக்கு தலை வணங்கிய திவாகரன்..!' உறவுக்கு வேட்டு வைத்த அந்த வார்த்தை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் அறிவிக்கப்பட்டபோது சசிகலா குடும்பம் மொத்தமும் அதை ஏற்றுக்கொண்டது. ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை சசிகலா சுவீகரித்ததை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். சசிகலாவால் முதல்வர் என்று அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி திடீர் விரோதியாகி ஓ.பன்னீர்செல்வம் முகாமுக்கு மாறிய பிறகுதான் சசிகலா குடும்பத்தில் மோதல்கள் உருவானது. ''ஆட்சி அதிகாரத்தில் இனி கோலோச்ச முடியாது; டி.டி.வி.தினகரன், ரத்த சொந்தங்களுக்கு அரசியல் முக்கியத்துவம் தருவது இல்லை'' என்று அரசல் புரசலாக சசிகலா …
-
- 0 replies
- 586 views
-
-
காலம் கனிய காத்திருக்கிறாரா? காலாவை ஓட்டகாய் நகர்த்துகிறாரா?: ரஜினியைச் சுழற்றும் சர்ச்சைகள்! ரஜினி | கோப்புப் படம்: ஆர்.ரகு. தன்னுடைய ‘தனிக்காட்டு’ ராஜா படத்தில் ரஜினிக்கு அப்பாவாக வரும் மேஜர் சுந்தர்ராஜன், “நீ தேர்ந்தெடுத்திருக்கிறது காந்தி வழியா... சுபாஷ் சந்திரபோஸ் வழியா?” என்று மகன் ரஜினியைப் பார்த்துக் கேட்பார். அதற்கு, “நான் யார் வழியிலும் போக விரும்பல... நான் போறதே ஒரு வழியா இருக்கணும்னு நினைக்கிறேன்...” என்பார் ரஜினி. அநேகமாக, முதன்முதலில் ரஜினி பேசிய அரசியல் கலப்பு வசனம் இதுவாகத்தான் இருக்கும…
-
- 2 replies
- 861 views
-
-
மிஸ்டர் கழுகு: கமல் கட்சிக்கு யார் நிர்வாகிகள்? கழுகார் உள்ளே நுழைந்ததும் சில துண்டுச்சீட்டுகளை டேபிளில் போட்டார். ‘‘ஒவ்வொரு சீட்டிலும் ஒரு விஷயம் எழுதியிருக்கும். எடுத்துப் பிரித்து, உள்ளே இருப்பதைப் படித்தால் நான் தகவல் சொல்கிறேன்’’ என்று தயாரானார். முதல் சீட்டை எடுத்து, ‘‘ஆடிட்டர் குருமூர்த்தி?’’ என்றோம். ‘‘சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் குருமூர்த்தி பேசினார். அங்கு நிருபர்களைச் சந்தித்த அவர், ‘ரஜினிக்கு நான் ஆலோசகர் இல்லை. ஊடகங்கள் அப்படிச் சொல்கின்றன. அது உண்மையாக இருந்தால், எனக்கு மகிழ்ச்சிதான்’ என்றார். அங்கு அவர் பேசியதற்கும், ரஜினி தன் மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசியதற்கும…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஈழத்த தமிழர்களுக்கு மாநில சுயாட்சியே தீர்வு - தா.பாண்டியன் விசேட செவ்வி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ரூபவ் மாநில பொதுச்செயலாளர் பதவிகளை வகித்தவரும் தேசிய குழு உறுப்பனருமா தா.பாண்டியன் வீரகேசரி இணையத்தளத்திற்கு அளித்த விசேட செவ்வி வருமாறு, கேள்வி:- தமிழகத்தில் திரைப்படத்துறையின் பிரபல்யங்கள் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அரசியலில் பிரவேசிப்பதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்:- திரைப்பட நடிகர்கள் வருகை தருவதையும் பேசுவதையும் பார்வை…
-
- 0 replies
- 658 views
-
-
மிஸ்டர் கழுகு - டாக்டருக்கு நெருக்கம்... அரசருக்குப் பதக்கம்... அணி மாறுகின்றனவா கட்சிகள்? கழுகார் நுழைந்ததும், ‘‘அரசியல் கூட்டணிகள் மாறுகின்றனவா?” என்ற கேள்வியை மையமாகக்் கேட்டு வைத்தோம். நாம் எதைக் கேட்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டவராக, ‘‘ஓ! அதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார். எதை வைத்து என்று கேட்பதற்குள், கழுகாரே தொடங்கிவிட்டார். ‘‘சென்னையில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் ஸ்டாலினும் ராமதாஸும் ஒரே மேடையில் உட்கார்ந்து இருந்ததை வைத்துத்தான் அரசியல் கூட்டணிகள் மாறுகின்றனவா என்று கேட்கிறீரா? கூட்டணிகள் மாறுகின்றனவா, கூட்டணிகள் சேர்கின்றனவா என்பது போகப் போகத்தான் தெரியும். ‘இந்திய வணிகர் சங்க உரிமை மீட்பு மாநாடு’ என்ற பெயரில், சென்னை வ…
-
- 0 replies
- 979 views
-
-
நான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம்: நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜ.கவை எதிர்த்து தொடர்ந்து பேசி வருவதால் தான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார் . பிரபல பத்திரிக்கையாளரும், தனது தோழியுமான கௌரி லங்கேஷ் கொலைக்கு பின்னர் தொடர்ச்சியாக மத்திய அரசை எதிர்த்து கருத்துகளை முன்வைத்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். இந்நிலையில் மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகாஷ் ராஜ் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புக்கு எதிராக பேசி வருவதால் என்னை கொல்ல சதி நடக்கிறது. இதற்காக சில இந்து அமைப்புகள் திட்டம் தீட்டுகின்றன, நான் அஞ்சப் போவதில்லை, என்னுடைய உயிரை வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம். என்னுடைய அறிவு…
-
- 0 replies
- 561 views
-
-
ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம்! - அம்மா சமாதி ‘டெண்டர்’ குஷி! காவிரிப் பிரச்னை, நீட் தேர்வு சிக்கல், வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாடு, அரசு ஊழியர்கள் போராட்டம் என உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், ‘ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம்’ என முதல்வர் எடப்பாடி பழனி சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து, பிரமாண்ட யாகசாலை பூஜைகளுடன் ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். உலகத் தரத்தில் இதை ஓராண்டுக்குள் கட்டிமுடிப்பதாகத் திட்டம். 36,806 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த நினைவிடத்தில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது. செலவு, 50 கோடியே 80 லட்சம் ரூபாய். எம்.ஜி.ஆர் நினைவிட…
-
- 0 replies
- 1.8k views
-
-
உயிர்க்கொல்லி நீட்: எர்ணாகுளத்தில் துயரம்.. தமிழக மாணவரின் தந்தை மாரடைப்பால் திடீர் மரணம். நீட் தேர்வை எழுத எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்ற தந்தை கிருஷ்ணசாமிக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி விளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (47). அரசு ஊழியராவார். இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம். இவர் பிளஸ் 2 முடித்துள்ளார். நீட் தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்தும் அந்த மாணவருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கஸ்தூரி மகாலிங்கம், தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் நேற்று எர்ணாகுளம் சென்றடைந்தார்.அங்கு ஹோட்டல்களில் தங்கும் அறை கிடைக்காமல்…
-
- 2 replies
- 573 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் (நேர்காணல்:- ஆர்.ராம்) மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபரும், ஈழத்தமிழர் விடயத்தில்; நீண்ட அனுபம் கொண்டவரும், தமிழர் தேசிய முன்னணியின் தலைவரும் எழுத்தாளருமான பழ.நெடுமாறனுடன் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு, சமகால அரசியல் நிலைமைகள், ராஜீவ் காந்தி மரணத்தின் பின்னணி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது? உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த அவருடைய அலுலகத்தில் நடைபெற்ற பிரத்தியேக சந்திப்பின்போது கலந்துரையாட முடிந்தது. இதன்போது அவர் விளக்கமளித்து முன்வைத்த கருத்துக்கள் வருமாறு, அமிர்தலிங்கத்தை …
-
- 1 reply
- 689 views
-
-
ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில்.. ஜெயலலிதா நினைவு மண்டப மாதிரி தோற்றம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்கும் நிகழ்ச்சிக்கான யாக பூஜை இன்று காலை 6.30 மணிக்கு துவங்கி நடைபெற்றது. யாகசாலை பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினாவில் எம்ஜிஆர் சமாதி அருகேயுள்ளது. ஜெ. நினைவிடத்தை நினைவு மண்டபமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.50.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஃபினிக்ஸ் பறவை போல அரசியலில் அதிரடியாக எழுந்து வந்தவர் ஜெயலலிதா என்று பறைசாற்ற வேண்டும் என்பது அதிமுக தலைமை விருப்பம். அதற்கேற்ப நினைவு மண்டபமும் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அ…
-
- 0 replies
- 631 views
-
-
டாஸ்மாக் கடைகளை மூட ஆவியாக வருவேன்: தற்கொலை செய்த மாணவன் கடிதம் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயிலைச் சேர்ந்த தினேஷ் (17) என்ற பள்ளி மாணவன் தனது மரணத்திற்கு பிறகாவது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை பிரதமர் மோதி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மூடவேண்டும் என்று கோரி கடிதம் எழுதிவைத்துவிட்டு, புதன் அன்று (மே2) தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ரெயில் மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்ட மாணவனின் பையில் இருந்து எடுக்கப்பட்ட கடிதத்தில் தனது தந்தை குடிப்பழக்கத்தில் இர…
-
- 1 reply
- 661 views
-
-
அவர் எப்படி உலகத் தமிழர்களிடம் நிதி வசூல் செய்தாரோ அப்படித்தான் நானும் அவர்களிடம் வசூலித்து வருகிறேன் காவிரி, ஸ்டெர்லைட் நியூட்ரினோ என போராட்டங்களால் தமிழகமே கொந்தளித்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டங்களில் பங்ெகடுத்து கொண்டே தனிக்களத்தில் மோதி கொண்டிருக்கிறார்கள் சீமானும் வைகோவும். பிரபாகரனோடு சீமான் இருக்கும் புகைப்படம் கிராபிக்ஸ். அதை பயன்படுத்தி சீமான் உலக நாடுகள் முழுவதிலும் புலிகளின் பிரதிநிதி என்று கூறி பணம் வசூலிக்கிறார். புலிகளோடு வேட்டைக்கு போனதாகவும், ஆமைக்கறி தின்றதாகவும் பொய் சொல்லி வருகிறார் என சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் …
-
- 0 replies
- 940 views
-
-
மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் புது வியூகம்... மூன்றாவது அணியா? ‘‘செம வெயிட்டு’’ எனக் ‘காலா’ பாடலை உற்சாகமாகப் பாடிக்கொண்டு உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘வெயிட்டான தகவல்களுடன் வந்திருக்கிறீர் போல... அந்தத் தகவல்களைக் கொட்டும்’’ என்றோம். ‘‘முதலில் டெல்லியிலிருந்து ஆரம்பிக்கிறேன். மே 1-ம் தேதி டெல்லி சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத் திடீரென சந்தித்தார். கொஞ்ச நாள்களாக தேசியச் செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ள மூன்றாவது அணி குறித்த குழப்பங்களை இந்தச் சந்திப்பு மேலும் அதிகமாக்கிவிட்டது.’’ ‘‘என்ன புதுக்குழப்பம்?’’ ‘‘திருமாவளவன் - ராகுல் காந்தி சந்திப்புக்கு இரண்டு நாள்கள் முன்னதாகத…
-
- 0 replies
- 1.6k views
-
-
மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-க்கு எதிராக..! - காங்கிரஸும் இருக்குமா? ‘‘வெயிலும் கொளுத்துகிறது... டெல்லி அனல் இங்கே பரவுவதால், அரசியலும் தகிக்கிறது’’ என்றபடி வந்தார் கழுகார். ‘‘விளக்கமாகச் சொல்லும்’’ என்றோம். ‘‘தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணியை அமைப்பதில் வேகமாக இருந்தார். இதில் அவரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும் முக்கியமானவர்கள். இப்போது, அவர்களின் மனத்தை மாற்றி காங்கிரஸ் தலைமையிலான இரண்டாவது அணியிலேயே இணைந்து செயல் படுவோம் என்ற எண்ணத்துக்கு அவர்களைக் கொண்டுவந்துள்ளார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். கருணாநிதியைச் சந்திக்க சந்திரசேகர ராவ் கோபாலபுரம் வந்ததில் ஆரம்பித்தது இந்த மாற்றம்.’’ …
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு உதய முயன்றதாக நால்வருக்கு சிறைத்தண்டனை விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆயுதங்களையும், பொருட்களையும் சிறிலங்காவுக்கு கடத்த முயன்றார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கிருஷ்ணகுமார், சுபாஸ்கரன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகளும், இராஜேந்திரன், சசிகுமார் ஆகிய இருவருக்கும் தலா மூன்றரை ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும், 2014ஆம் ஆண்டு இராமேஸ்வரன் அருகே கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஒரு தொகை சயனைட், மற்றும் புவிநிலைகாட்டி கருவிகள் கைப்பற்றப்பட்டன. விடுதலைப் புலிகள் இயக…
-
- 0 replies
- 462 views
-
-
மிஸ்டர் கழுகு: பதவி பறிக்கும் குட்கா? ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறேன். மதியத்துக்குள் வந்துவிடுவேன்’ என மெசேஜ் அனுப்பியிருந்தார் கழுகார். மதிய வெயிலில் வியர்வையோடு வந்த அவரிடம், ‘‘காவிரிப் பிரச்னை, கவர்னர் விவகாரத்தால் பின்னுக்குப் போனது. கவர்னர் விவகாரம், தினகரன்-திவாகரன் மோதலில் அடிபட்டுப் போனது. இப்போது குட்கா விவகாரம் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டதே’’ என்றோம். ‘‘தினகரனுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. மோடியின் ஆலோசகராக உள்ள அதிகாரி ஒருவர் தினகரனை சென்னையில் வந்து சந்தித்துவிட்டுப் போனார் என பல வாரங்களுக்கு முன்பே நமது நிருபர் எழுதியிருந்தார். அதற்கும், நீர் மேலே சொல்லி இருக்கிற எல்லா வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேரின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுமா? - உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, அக்கட்சியின் பொருளாளராக இருந்த நிதிமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பொறுப்பேற்றார். சில நாள்களில், சசிகலா குடும்பத்தோடு ஏற்பட்ட மோதலால் முதல்வர் பதவியில் இருந்து திடீரென்று ராஜினாமாசெய்தார். அவருக்கு ஆதரவாக 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இந்நிலையில், சசிகலா ஆதரவாளராக இருந்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஆனார். அப்போது, 'ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் அவரிடம் இல்லை' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து, எடப்பாடி ப…
-
- 1 reply
- 744 views
-
-
நளினியை விடுதலை செய்ய உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் சென்னை: முன்கூட்டியே விடுவிக்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், நளினியை விடுதலை செய்ய உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-இன் படி முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனைக் கைதியான நளினி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று மனுவை தள்ளுபடி செய்துள்ளத…
-
- 0 replies
- 451 views
-
-
ஜெயலலிதாவின் ரத்த, திசு மாதிரிகள் இல்லை: அப்போலோ பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளோ, திசு மாதிரிகளோ தங்களிடம் இல்லை என அவருக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என அறிவிக்கக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''ஜெயலலிதாவின் உடலுக்கு எங்களது வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்பதால், அவரது உடலைத் தோண்டியெடுத்து எங்கள் சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். மேலு…
-
- 0 replies
- 487 views
-