Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு அ-அ+ அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என பேசினார். #KamalHaasan #HarwardUniversity நியூயார்க்: அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என பேசினார். …

  2. மிஸ்டர் கழுகு - எடப்பாடிக்கு தடுப்பணை போடும் மோடி! எதிர்பார்த்த நேரத்துக்கு முன்னதாகவே நம்முன் ஆஜரானார் கழுகார். ‘‘எடப்பாடிக்கு அணை போட ஆரம்பித்துவிட்டது பி.ஜே.பி’’ என்ற படியே, நம் பதிலை எதிர்பார்க்காமல் பேச ஆரம்பித்தார். ‘‘எடப்பாடி ஆட்சியின் காவலன் என்று பட்டம் கொடுக்கும் அளவுக்கு இதுவரை பி.ஜே.பி இருந்தது. 2017 டிசம்பர் 24-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு வந்தது. அன்றே, ‘எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லை’ என்ற முடிவுக்கு பி.ஜே.பி வந்தது. அதிலிருந்தே இறங்குமுகம்தான். குருமூர்த்தி சர்ச்சை, கவர்னர் காட்டும் அதிரடி என எல்லாமே இதை உணர்த்து கின்றன. பிரதமர் மோடியை அழைத்து விழா நடத்த முடியாமல் தவிக்கிறார் எடப்பாடி.’’ ‘‘ஆமாம்! எம்.ஜி.ஆர் நூற்றாண்டு…

  3. ‘‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இணையா ஆகணும்!’’ பூத் கமிட்டிகள் அமைக்கும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்து நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், ‘‘தான் அரசியலுக்கு வருவதற்கான அடிப்படை வேலைகளை நடிகர் விஜய் சத்தமின்றி செய்துவருகிறார்’’ என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். சமீபத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். அதில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “உறுப்பினர்களைச் சேர்க்க, தனது இணையதள முகவரியை ஜனவரி 2-ம் தேதிதான் ரஜினி வெளியிட்டார். ஆனால், உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சேர்ப்பதற…

  4. ’ தீபா வீட்டுக்குள் நுழைந்த போலி ஐடி அதிகாரி!' - 3 மணி நேரத்துக்குப் பிறகு தப்பியோட்டம் தப்பியோடியவர்... Chennai: சென்னை தி.நகரில் உள்ள ஜெ.தீபா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக இன்று காலை ஒரு தகவல் பரவியது. சிறிது நேரத்தில் அங்கு போலீஸார் சென்றனர். பத்திரிகையாளர்களும் சென்றனர். தீபா வீட்டுக்குள் போலீஸார் சென்றதும் வருமான வரித்துறை அதிகாரி என்று வீட்டில் நுழைந்த அந்த நபர் தலைத்தெறிக்க ஓடினார். போலீஸார் அந்த நபரைத் துரத்திக்கொண்டு ஓடினர். பத்திரிகையாளர்களும் அந்த நபரை பின் தொடர்ந்தனர். அந்த நபர் யார்? எதற்காக வந்தார் என்பது பற்றிய தகவல்கள் அவரைப் பிடித்து விசாரித்தால்தான் தெரியவரும். …

  5. Tiruchirappalli: குடிப்பழக்கம் ஒரு குடும்பத்தையே கண்ணீரில் மிதக்க வைத்துள்ளது. போதை கணவர், மீன்குழம்பு வைக்கவில்லை என மனைவியிடம் சண்டையிட்டதால் ஏற்பட்ட தகறாரில், கணவன், மனைவி இருவரும் தீக்கிரையான சம்பவத்தால் திருச்சியே சோகத்தில் உறைந்துபோய் கிடக்கிறது. திருச்சி கே.கே.நகர் உஸ்மான் அலி நகர் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்குச் சொந்தமாக லாரிகள் உள்ளன. சிறப்பாகத் தொழில் செய்துவரும் இவர், திருச்சி குட்ஷெட் லாரி உரிமையாளர் சங்கத் தலைவராகவும், திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார். இவருக்கு சத்யா என்கிற மனைவியும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ராகுல் என்கிற …

  6. நடிகர்களின் அரசியல் பிரவேசமும் எதிர்வினைகளும் ‘நடிகர்கள் நாடாள வரலாமா?’ - புகழ்பெற்ற திரைப்பட நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிக் கிறபோதும், அதற்கொரு முன்னுரையாக அரசியல் கருத்துகளைக் கூறுகிறபோதும், உறுப்பினர் பதிவு, ரசிகர்களுடன் சந்திப்பு போன்ற சில நடவடிக்கைகளில் இறங்குகிறபோதும் இந்தக் கேள்வி எழுப்பப்படு கிறது. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிற பல்வேறு கட்சிகளின் பேச்சாளர்கள், நேரடியாக எந்த நடிகரின் அரசியல் வருகையையும் எதிர்ப்பதில்லை. ஆனால், திரை நட்சத்திரங்களின் வருகையா…

  7. சென்னை: பிரபல ரவுடி பினு சினிமா பாணியில் ஆட்டுக்கறி, மது விருந்துகளுடன் சக ரவுடிகளை அழைத்து பிறந்த நாள் கொண்டாடிய போது போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அதில் 75 ரவுடிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழா கொண்டாடியவன் உட்பட 50 பேர் தப்பிச் சென்றனர். சென்னையில் குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள் குறித்து ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறு சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் முதல் மொத்தம் 14,551 ரவுடிகள் உள்ளனர். அதில், சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 11,303 பேர் ஆகும்…

  8. தாயின் உடலை அடக்கம் செய்வதற்காக பிச்சையெடுத்த திண்டுக்கல் சிறுவர்கள்: இறந்துபோன தாயின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் சிறுவர்கள் பிச்சை எடுத்த சம்பவம் ஒன்று தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப் பகுதியில் வசித்த கணவனை இழந்த விஜயா என்பருக்கு மூன்று மகன்கள். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விஜயாவை அவர்களது மூன்று மகன்கள் மட்டுமே கவனித்து வந்து நிலையில் தமது தாயின் உடலை அட…

  9. ரஜினியுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பது தேவையா?: கமல் ஹாசன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ரஜினியுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பது தேவையா என இருவருமே யோசிக்க வேண்டியிருக்கிறது என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். தாங்கள் எங்கு சென்றாலும் இந்தக் கேள்வி தங்களைத் துரத்துவதாக அவர் தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைARUN SANKAR/GETTY IMAGES வார இதழ் ஒன்றில் அவர் எழ…

  10. முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: ரஜினிகாந்த் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இந்தியா முழுவதும் சிஸ்டம் சரியில்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி இதனைத் தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியில் செய்தியாளர…

  11. தமிழகத்தை அதிரவைக்கும் நித்தியானந்தா – மௌனித்திருக்கும் அதிகார வர்க்கம் – அச்சத்தில் மக்கள்… “கஞ்சா கொடுத்து என் மகளை நித்தியானந்தா மாற்றி விட்டார்” என தந்தை ஒருவர் முறையிட்டுள்ளார். “தை்தியருக்கு படித்த தம் மகனை கஞ்சா கொடுத்து மயக்கி நித்தியானந்தா சாமியார் அணி கடத்தி விட்டதே இதை கேட்பார் யாருமே இல்லையா?” என பெரியகுளம் நீதிமன்ற வளாகத்தில் பெற்றோர் கதறி அழுதனர். வைத்தியருக்கு படித்த மகன் மனோஜ்குமார் மற்றும் சிறுமி நிவேதா ஆகியோரை, சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் இருந்து மீட்க வேண்டும் என பெரியகுளம் வடகரை சுப்பிரமணிய சாவடிதெரு பகுதியைச் சார்ந்த காந்தி என்பவர் காவற்துறையில் முறையிட்டனர். இதன் அடிப்படையி…

  12. நளினி, முருகன், பேரறிவாளனை விடுவிக்க அதிகாரிகள் பரிந்துரை வேலூர் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள நளினி-முருகன், பேரறிவாளன் உட்பட 200 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். தமிழக சிறைச்சாலைகளில் கடந்த சில ஆண்டுகளாக அண்ணா பிறந்த தினம், காந்தி ஜெயந்தி போன்ற தலைவர்கள் பிறந்த நாட்களில் நன்னடத்தை கைதிகள் விடுவிக்கப்படவில்லை. இதனால் தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தின் 9 மத்திய சிறை அதிகாரிகள…

  13. மிஸ்டர் கழுகு: தினகரன் மீண்டும் கைது? - அமுக்கும் அமலாக்கத் துறை... ‘‘இரட்டை இலை வழக்கில் புதிய திருப்பமாக அமலாக்கப்பிரிவு தீவிரம் காட்டுவதால் தினகரனுக்குப் புதிய சிக்கல்’’ என்ற தகவலை வீசியபடியே நம் முன் ஆஜரானார் கழுகார். ‘‘தினகரன் இப்போதுதானே சுறுசுறுப்பாக டூர் கிளம்பியிருக்கிறார். அதற்குள் இப்படி ஒரு சறுக்கலா?’’ என்ற கேள்வியைப் போட்டோம். ‘‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலோடு தினகரனின் அரசியல் முடிந்துவிடும் என்று நினைத்தார்கள். அங்கு வெற்றி பெற்றது மட்டுமல்ல, அபரிமிதமான வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றுத் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இப்போது, ‘மக்கள் சந்திப்பு புரட்சிப் பயண’த்த…

  14. மன்னிப்பு கோரிய நித்தியானந்தா மதுரை ஆதீனமாக அறிவித்ததை திரும்ப பெறுவதாக கூறி உயர்நீதிமன்றின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ள நித்தியானந்தா, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். மதுரை ஆதீனத்தின், 293-வது ஆதீனமாக நித்யானந்தா தன்னைத்தானே அறிவித்துக்கொண்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற ம், மதுரை ஆதீனத்துக்குள் செல்ல நித்யானந்தாவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கிற்கு நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்த நித்தியானந்தா தான் மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி எனவும் ஒருமுறை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டால், அவர் வாழ்நாள் முழுவதும் …

  15. ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி..! ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்குத் தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைப்பதற்கு 40 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டது. அதற்கு, உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் நிதி திரட்டி வந்தனர். தமிழக அரசு சார்பில், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்ட நிலையில், தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொ…

  16. மிஸ்டர் கழுகு: “எல்லாம் தருவோம். ஆனால்...” - எடப்பாடி தூது... நிராகரித்த சசிகலா! கழுகார் சொல்லியிருந்தபடி செய்தித்தாள் ஃபைலை டேபிளில் எடுத்து வைத்து விட்டுக் காத்திருந்தோம். வந்ததும் அதைப் புரட்டிய கழுகார், ‘‘ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ‘சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் பெற்றுத் தரவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெங்களூரு செல்கிறார்’ என்று சொல்லியிருப்பதைக் கவனித்தீரா?’’ என்றார். ‘‘காவிரி நீரைக் கேட்கத்தானே முதல்வர் பெங்களூரு போகிறார்?’’ என்றோம். ‘‘ஆமாம். ஆனால், அதைத்தாண்டி ஏதோ விஷயங்கள் இளங்கோவனுக்குத் தெரிந்திருக்கிறது.’’ ‘‘சுற்றிவளைத்து ஏதோ சொல்ல வருகிறீர். அதை நேரடியாகவே சொல்லும்!’’ என்றோம். ‘‘2017 ஏப்ரலில்தான் தினகரனுக்கும், எடப்பாடி …

  17. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து..! பொருள்கள் எரிந்து நாசம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சன்னதிக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதனால், பெருமளவிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. மதுரையிலுள்ள பிரசித்திப்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சன்னதியில் கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான கடைகள் இருக்கும். அம்மன் சந்நிதிக்கு செல்லும் வழியில் ஆயிரங்கால் மண்டம் உள்ளது. அப்பகுதியில் விளையாட்டு பொருட்கள், கைவினைப்பொருட்கள், வளையல்கள் விற்கும் கடைகள் ஐம்பதுக்கும் மேற்பட்டது உள்ளது. 10 மணி அளவில் கோயில் நிர்வாகம், நடையைச் சாத்திவிட்டு சென்றனர். அதன்பின்னர், கோயிலுக்குள் இருந்து புகை மூட்டமாக வந்துள்ளது. அதன…

  18. விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளம் ஆரம் பம் – அரசியல் பிரவேசத்துக்கான அடித்தளமா? உலகளவில் ரசிகர்களை ஒன்றிணைக்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளத்தை ஆரம்பித்துள்ளார். அண்மைக்காலமாக ரஜினி, கமல், விஷால் என நடிகர்கள் பலரும் அரசியல் பிரவேசம் மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விஜய் தனது படங்களின் அரசியல் பேச்சுக்கள் மூலம் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இவரது படங்களான தலைவர, மெர்சல் ஆகியவை பெரும் சர்ச்சைக்குள்ளனாது. இந்நிலையில் உலகளாவிய ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் விஜய் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே தனது இயக்கத்திற்கு என தனி கொடியை அறிமுகம் செய்து அரசியல் ஆசையை வெளிப்படுத…

  19. ரஜினி, கமல் அரசியல் செய்யட்டும் – நான் கடைசி வரைக்கும் கலைஞனாகவே இருப்பேன் – பாரதிராஜா ரஜினி, கமல் இருவரும் கடைசி காலத்தில் நாட்டுக்கு நல்லது செய்யலாம் என அரசியலுக்கு வரட்டும்;. ஆனால் நான் கடைசி வரைக்கும் கலைஞனாகவே இருப்பேன் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள பாரதிராஜா அதற்காக நேற்று புதுச்சேரிக்கு சென்று சில இடங்களை பார்வையிட்ட பின்னர் முதல்வர் நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ரஜினி, கமல் இருவருக்கும் கடைசி காலத்தில் நாட்டுக்கு ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்திருக்கலாம்.…

  20. மிஸ்டர் கழுகு: முந்தும் ‘தம்பி சார்’... பிந்தும் ‘மாப்பிள்ளை சார்’ ‘முந்தும் தம்பி சார்... பிந்தும் மாப்பிள்ளை சார்’ என்று காகிதத்தில் எழுதி எடுத்துவந்து காண்பித்தார் கழுகார். முதலில் நமக்குப் புரியவில்லை. அதன்பிறகு, ‘தி.மு.க’ என்று எழுதி அதைக் காண்பித்தார். ‘புரிந்துவிட்டது’ என்று தலையசைத்தோம். சிரித்தபடியே செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார். “தி.மு.க-வில், ‘தலைவர்’ என்றால் கலைஞர்; ‘தளபதி’ என்றால் ஸ்டாலின். இது அனைவருக்கும் தெரியும். நெருங்கியவர்களுக்கு மட்டும்தான், ‘தம்பி சார்’ என்றால் உதயநிதி, ‘மாப்பிள்ளை சார்’ என்றால் சபரீசன் என்று தெரியும்.” ‘‘ஓஹோ!” ‘‘அதனால்தான், ‘தம்பி சார் முந்துகிறார்’ என்று சொன்னேன். உதயநிதி ஸ்டாலினின் அரசி…

  21. 2017-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது தமிழிசை சவுந்தரராஜனுக்கு 2017-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவர் விருதை பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இன்று வழங்கியுள்ளது. இன்றைதினம் சென்னையில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்தின் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சிறப்பாக அரசியல் மற்றும் பொதுநலச் சேவைகள் பணியாற்றிதாக தெரிவித்தே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/64307/ தமிழிசை செளந்தரராஜனுக்கு பொதுநல சேவைக்கான விருது 2017…

  22. ஹார்வார்டு பல்கலை.யில் தமிழ் இருக்கை.. ஏழை கவிஞன் என்பதால் ரூ.5 லட்சம்தான் தர முடிந்தது: வைரமுத்து சென்னை: ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். சென்னையில், இன்று மாலை நடைபெற்ற, ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கும் விழாவில் பேசிய வைரமுத்து, மேலும் கூறியதாவது: சீன மொழிக்கு இணையாக இருக்கும் மொழிதான் தமிழ் மொழி. இந்தியாவின் சரிபாதி பண்பாடு தமிழ் பண்பாடு . எல்லாத் தகுதியும் உடைய தமிழ் மொழியை ஹார்வர்டு பல்கலைக்கு தாமதமாக கொண்டு சென்றுள்ளோம் என்பதே என் ஆதங்கம். அறிவுலகம் வகுத்த தகுதிக்கும் மேல் தகுதி கொண்டது தமிழ் மொழி . ஹார்வர்ட் தமிழ் இருக்கை தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் என நம்புக…

  23. ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் புதியக் கட்சி தொடங்குகிறார் தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி தேனி: ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் டி.டி.வி. தினகரன் அணியில் அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் கிளை கழகங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்று, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிபட்டி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். தேனியில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: தேனி மாவட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக…

  24. கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுப்பு தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா பெப்ரவரி மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவில் வருடாந்தம் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்கின்றமை வழமையாகும். கச்சத்தீவு செல்வதற்கு தமிழக பக்தர்கள் பொலிஸ் அனுமதி மற்றும் மத்திய அரசின் ஆதார் அட்டை ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு விதிமுறைகள் க…

  25. நித்யானந்தாவை கைது செய்ய நேரிடும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை நித்யானந்தா, உயர் நீதிமன்றம் - கோப்புப் படம் மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதை எதிர்த்து, ஜெகதலபிரதாபன் என்பவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. நித்யானந்தா மடாதிபதியாக அறிவித்துக் கொண்டது சட்டவிரோதம் என்று தமிழக அரசு பதில் அளித்தது. மடாதிபதி உயிருடன் இருக்கும்போது, மற்றொருவர், ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.