தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
‘அமைச்சரவையில் எனக்கு இடமே வேண்டாம்?!’ - எடப்பாடி பழனிசாமியை நெருக்கும் பி.ஜே.பி #VikatanExclusive அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதில் ஏராளமான குழப்பங்கள் நிலவி வருகின்றன. ‘இன்னமும் தினகரனை துணைப் பொதுச் செயலாளராக முன்னிறுத்துகின்றனர் பழனிசாமி அணியினர். இணைவது போலக் காட்டிவிட்டு, தனி ஆவர்த்தனம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் அமைச்சர்கள்' என்கின்றனர் பன்னீர்செல்வம் அணியினர். எடப்பாடி பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிகாரப்பூர்வமாக மூன்று அணிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. தொலைக்காட்சி விவாதங்களில் இந்த மூன்று அணிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். "சசிகலாவை முழுமையாக நீக்கிவிட்டு வந்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம்…
-
- 0 replies
- 350 views
-
-
‘அமைச்சர் பதவியில்தான் இருக்கிறாரா ஓ.பி.எஸ்?!’ -கடுகடு கார்டன்; கதிகலக்கும் கோட்டை அப்போலோ மருத்துவமனையில் 62 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. ‘முதல்வருக்கான அதிகாரங்களைக் கையில் வைத்திருந்தாலும், அமைச்சரவையில் இருந்து புறக்கணிக்கப்பட்ட ஒருவராகத்தான் ஓ.பி.எஸ் நடத்தப்படுகிறார்’ என அதிர வைக்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பலனாக, நல்லமுறையில் குணமடைந்து வருகிறார். அவர் எப்போது கார்டன் திரும்ப வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்வார் என அப்போலோ நிர்வாகம் அறிவித்துவிட்டது. அதற்கேற்ப, மருத்துவமனையில் தங்கியிருந்து பிஸியோதெரபி சிகிச்சை பெற்று வர…
-
- 0 replies
- 511 views
-
-
‘அம்மா அப்பா கையால சாப்பிடணும்!’ - அரித்ராவின் ஆசை [ வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2014, 09:35 GMT ] [ அ.எழிலரசன் ] நன்றி : ஆனந்த விகடன் 05 Mar, 2014 டி.அருள் எழிலன், ஓவியம்: ஸ்யாம் உயரமான மதில் சுவர்கள் சூழ்ந்த சிறைச்சாலைக்குள் நிழல் சூழ்ந்த ஒரு மரம். அதன் கீழே ஒரு கரும்பலகை. கைதிகளுக்குப் பாடம் நடத்துகிறார் பேரறிவாளன். சிறையில் பிறந்த ஏதோ ஒரு குழந்தைக்கு அழகாக உடை தைத்துக்கொடுக்கிறார் முருகன். தான் சிறையில் கட்டிக்கொண்டிருக்கும் சாய்பாபா கோயிலை மேலும் எப்படி அழகாக்கலாம் எனக் கழிகிறது சாந்தனின் வாழ்வு. 23 ஆண்டுகால சிறை வாழ்க்கை... காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கம்பிகளுக்கு வெளியே சுவர்களுக்குள் சுழலும் வாழ்வு, இருள் கவியும் நேரத்தில் தனிமைச் சிறைக்குள் சென்ற…
-
- 0 replies
- 744 views
-
-
‘அம்மா இடத்தில் நீங்கதாண்ணே...!’ - தினகரனை மிரள வைக்கும் அமைச்சர்கள் 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் யார்?' என்பதை நாளை அறிவிக்க இருக்கிறது அ.தி.மு.கவின் ஆட்சி மன்றக் குழு.' தென் மண்டலத்தில் போட்டியிடுவதைக் காட்டிலும், ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வென்றால், அம்மா இடத்தில் நீங்கள் அமரலாம்' என டி.டி.வி.தினகரனுக்கு ஆலோசனை அளித்து வருகின்றனர் அ.தி.மு.க அமைச்சர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தி.மு.க வேட்பாளரை இன்று மாலை அறிவிக்க இருக்கிறது தி.மு.க. ' ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு 59 ஆயிரம் வாக்குகளை வாங்கிய சிம்…
-
- 0 replies
- 555 views
-
-
‘அம்மா’ வுக்குப் போட்ட அதே 45 டிகிரி கும்பிடு! - சசிகலாவை கிடுகிடுக்கச் செய்த அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன மரியாதை கொடுப்பட்டதோ அதை அச்சுப் பிசாகாமல் தமிழக அமைச்சர்கள் சசிகலாவுக்கும் கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவர், உயிரோடு இருக்கும் வகையில் அ.தி.மு.கவில் ஜெயலலிதாவுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவாகவில்லை. இதனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்தக்கட்சியை யார் வழிநடத்துவது என்பதில் கடும் சிக்கல்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவின் நிழலாக அவரது தோழி சசிகலா போயஸ் கார்டனில் இருந்தார். தற்போது, ஜெயலலிதாவின் இடத்தில், அதாவது அ.தி.மு.கவின் பொது செயலாளராக சசிகலாவை ஒர…
-
- 0 replies
- 602 views
-
-
‘அம்மா’வுக்கும் பெப்பே... அ.தி.மு.க-வுக்கும் பெப்பே! கடந்த ஆண்டு, புகைப்படத்தோடு எளிமையாக முடிந்தது ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம். இந்த ஆண்டு அவருடைய உருவச்சிலை திறப்பு, அவர் பெயரில் புதிய நாளிதழ்... என எல்லாமே சர்ச்சையில் முடிந்துள்ளன. ‘‘ஜெயலலிதாவின் சிலையை யார் மாதிரியோ வைத்து ‘அம்மா’வுக்கு பெப்பே காட்டிவிட்டனர். கட்சிக்காக என்று சொல்லி வெளியிட்ட நாளிதழுக்கும் கட்சிக்கும் சம்பந்தமே இல்லை என்பதால், அ.தி.மு.க-வுக்கும் பெப்பே காட்டிவிட்டனர்’’ என வருந்துகிறார்கள் ஜெ. விசுவாசிகள். சிக்கலை உண்டாக்கிய சிலை! ஜெயலலிதாவின் சிலையை நிறுவிய சாதனையைத் தங்களுக்குச் சொந்தமாக்க நினைத்த எடப்பாடி - பன்னீர் கூட்டணி, அந்தச் சிலையால் இவ்வளவு விம…
-
- 0 replies
- 1.7k views
-
-
‘அம்மாவைச் சந்திக்க வேண்டும்’:முருகன் இன்று மனுத்தாக்கல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் முருகன், தனது தாயாரைச் சந்திக்க அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று (15) மனுத் தாக்கல் செய்யவுள்ளார். முருகனின் சார்பில், அம்மனுவைத் தானே தாக்கல் செய்யவுள்ளதாக, அவருடைய வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். வேலூர் மத்திய சிறையில், முருகன் சிறை வைக்கப்பட்டுள்ள அறையை, பொலிஸார் அண்மையில் சோதனை செய்திருந்தனர். இதன்போது, விலையுயர்ந்த இரண்டு அலைபேசிகள், சார்ஜர் மற்றும் சிம் அட்டைகள் போன்றவை மீட்கப்பட்டன. இதையடுத்து, அவருடைய மனைவியான நளினி உள்ளிட்ட யாரையும், மூன்று மாதங…
-
- 0 replies
- 344 views
-
-
‘அவசரம் காட்டியதால்தான் ஆபத்து!’ - தினகரனிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர்கள் ஆளும்கட்சி வட்டாரத்தை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை. 'எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகும், கார்டனில் உள்ளவர்கள் அவசரப்படுவதால்தான் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது' என வெளிப்படையாகப் பேசியுள்ளனர் அமைச்சர்கள் சிலர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க இரண்டு துண்டுகளாகிவிட்டது. சசிகலா தலைமைக்கு எதிராக பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். 'அ.தி.மு.கவின் ஒன்றரைக் கோடித் தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். அவகாசம் இருந்திருந்தால், அத்தனை பேரின் கையெழுத…
-
- 0 replies
- 582 views
-
-
‘ஆட்சியைக் கலைக்கவும் தயங்க மாட்டேன்!’ - எம்.எல்.ஏக்களிடம் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலை மனதில் வைத்து ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். 'எங்கள் ஆதரவை பா.ஜ.க நேரில் வந்து கேட்கட்டும்' என வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர் அவர் ஆதரவு எம்.எல்.ஏக்கள். இந்த ஆட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ரசிக்கவில்லை. 'என்னுடைய தயவில்தான் ஆட்சி நீடிக்கிறது. இதை நினைவில் வைத்துக் கொண்டு பேசுங்கள்' என எம்.எல்.ஏக்களை அவர் எச்சரித்திருக்கிறார். அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரனை இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். நா…
-
- 0 replies
- 382 views
-
-
‘ஆன்டி ஹ்யூமனாக’ இருப்பது சரியா ஹெச்.ராஜா அவர்களே..! - ஒரு சாமானியனின் கடிதம் Chennai: மரியாதைக்குரிய, மரியாதை தெரியாத ஹெச்.ராஜா அவர்களுக்கு, வணக்கம். ‘என்னடா இது, எடுத்தவுடனே இப்படிச் சொல்லிவிட்டார்களே' என்று நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், அடுத்தவர் மனம் புண்படுமோ என்று அளந்து அளந்து பேசுபவர்கள்தான் தன் மனம் புண்படுவது பற்றிக் கவலைப்படுவார்கள். ஆனால், வெந்த புண்ணில் வெந்நீரையும் விஷத்தையும் ஊற்றுவதுதான் உங்கள் இயல்பு என்பதைச் சமீபகாலமாகப் பார்த்துவருகிறோம். ‘வெந்த புண்' என்று சொல்லும்போதுதான் சமீபத்தில் நீங்கள் தெரிவித்த கருத்து நினைவுக்குவருகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நீங்கள் உதிர்க்கும…
-
- 1 reply
- 548 views
-
-
‘ஆம்.. கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம்!’- ஸ்டாலின் 'கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம். இனிமேல் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது எங்களுடைய பொறுப்பு என்று அனைத்து இடங்களிலும் நானே சொல்லி வந்திருக்கிறேன்' என்று என்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திமுக பொருளார் மு.க.ஸ்டாலின் கூறினார். என்டிடிவி தொலைகாட்சிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், திமுகவின் திட்டங்கள், பலம் குறித்து பேசினார். நீங்கள் தவறு செய்துவிட்டதாக ஊழல் விவகாரத்தில் தொழிற்துறையினரிடம் சொன்னீர்கள். ஊழல் என்பது ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. அதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டா…
-
- 0 replies
- 499 views
-
-
‘ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெ,.அண்ணன் மகள்?’ - சசிகலா எதிர்ப்பின் அடுத்த திட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, அவர் தேர்வு செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. 'முதல்வர் இடத்தில் தீபாவை அமர வைப்பதற்காக, அவருடைய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில், அவரைச் சந்திப்பதற்காக இரண்டு முறை முயற்சி செய்தார் அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் கொந்தளித்தவர், மருத்துவமனை வாசலிலேயே ஆவேசமாகப் பேசினார். கடந்த 6-ம் தேத…
-
- 0 replies
- 588 views
-
-
‘ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களே உங்கள் ‘சின்னம்மா’ சபதத்தை நிறைவேற்றவா வாக்களித்தோம்?!’ தமிழச்சிகளின் கடிதம் #VikatanExclusive 'ஷேம்ஃபுல்' - நேற்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ஒளிபரப்பியபோது, தேசிய சேனல்கள் பல தமிழ்நாட்டைக் குறிப்பிட்டுப் பேசிய வார்த்தை இது. இந்த வார்த்தையை எதற்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும், தமிழ்மக்களும் வாங்கிக்கொள்ள வேண்டும்? அதை நாங்கள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குக் கொண்டுசேர்க்க விரும்புகிறோம். 'சட்டமன்றத்தில் நடந்த சம்பவங்களுக்கு 'சின்னம்மா' குடும்பத்தின் முதல்வர் நாற்காலித் திட்டம் முதல் தி.மு.க-வின் அவை நடவடிக்கைகள் வரை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, 122 பேரை விரல் சுட்டுவது ஏன்..?' என்று கேட்கலாம். ஏனெனில்,…
-
- 0 replies
- 268 views
-
-
‘ஆளே அடையாளம் தெரியலையே!’ - சிறையில் கதறியழுத சசிகலா..! #VikatanExclusive பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்த கட்சியினரிடம், அவர் கதறி அழுததாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷிடம் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தி, சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ், புகழேந்தி ஆகியோர் சந்தித்துப் பேசினர். அவர்களுக்கு முன்னதாக, ராமலிங்கம் எம்எல்ஏ, தமிழ்மகன் உசேன், நடிகர்கள் ஜெ.கே.ரித்தீஷ், ஜெ.எம்.பஷீர் என்ற விஜய்கார்த்திக் ஆகியோர் சந்தித்தனர். சுடி…
-
- 0 replies
- 479 views
-
-
‘இங்கிலீஷ்ல இருந்ததால கையெழுத்து போட்டுட்டாங்க!’ - ‘இரட்டை இலை’ விவாதத்தில் நடந்த காமெடி #VikatanExclusive Chennai: இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையின்போது, போலி அஃபிடவிட்களை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல்செய்துள்ளதாக தினகரன் தரப்பு வாதிட்டது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், இங்கிலீஷ்ல அஃபிடவிட்கள் இருந்ததால கையெழுத்துப் போட்டுவிட்டதாகச் சொல்லியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, அ.தி.மு.க., இரட்டை இலைச் சின்னம் ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலையை மீட்டெடுக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசி…
-
- 1 reply
- 594 views
-
-
‘இணையும்... ஆனா இணையாது!’ பேச்சுவார்த்தை பின்னணியில் தினகரனின் 3 திட்டங்கள் #VikatanExclusive ஊர் கூடித் தேர் இழுக்கத் தயாராகி வருகிறது அதிமுகவின் பிளவுபட்ட இரண்டு அணிகளும். ஆனால் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 'உள்ளே வெளியே' ஆட்டத்தினால் இந்த இணைப்பு சாத்தியமல்ல என்ற கருத்து இரு அணிகளின் மூத்த நிர்வாகிகளிடையேயும் எழுந்துள்ளது இப்போது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் அதிமுகவில் ஏற்பட்ட பல மாற்றங்களால் அதிருப்திக்குள்ளான ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அவருடன் கணிசமான எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள் அணிவகுத்தனர். அதிமுக பிளவுபட்டதால் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் புகழ்பெற்ற தனது இரட்டை இலைச் சின்னத்தை இழந்தது அ…
-
- 0 replies
- 331 views
-
-
‘இது ஒரு நல்ல கேள்வி?’ - முதல்வர் பதவிகுறித்த கேள்விக்கு பன்னீர்செல்வம் சொன்ன தத்துவம் 'தமிழகம், பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது' என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதற்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதலடிகொடுக்கும் விதமான பதில் அளித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகம் முன்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘ இந்தியாவிலும் சரி தமிழகத்திலும் சரி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் பிறந்தநாளை மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடுகிற நேரத்தில், ஜெயலலிதா எங்களுக்கு சொன்னது என்னவென்றால், 'என் பிறந்தநாள் அன்று என் இல்லம் தேடி வராதீர்கள். ஏழை எளிய மக்களின் இ…
-
- 0 replies
- 426 views
-
-
‘இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்?!’ - கொந்தளிக்கும் சசிகலா குடும்ப உறவுகள் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவில் ஏற்பட்ட புயல், 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மையம் கொண்டுள்ளது. 'அ.தி.மு.கவில் பிளவு நீடிப்பதையே மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு விரும்புகிறது. வி.என்.ஜானகியோடு ஜெயலலிதா முரண்பட்டபோது, இரட்டை இலை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் ராஜீவ்காந்தி. தற்போது அப்படியான எந்த அவசியமும் பிரதமர் மோடிக்கு இல்லை' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார் சசிகலா. ஆட்சி அதிகாரத்தை நோக்கியும் அவர் வேகம் காட்டியபோது, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.…
-
- 0 replies
- 398 views
-
-
‘இந்த மிரட்டல் வேலைகள் என்னிடம் நடக்காது!’ - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சீறிய விவேக் #VikatanExclusive முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களும் சசிகலா குடும்பத்தைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளன. ‘ஜெயா டிவியைக் கைப்பற்றும் முயற்சி ஒருக்காலும் நடக்காது. என்னை மிரட்டிப் பணிய வைக்க ரெய்டு பயத்தைக் காட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்' எனக் குடும்ப உறவுகளிடம் கொதித்திருக்கிறார் ஜெயா டி.வி நிர்வாகி விவேக் ஜெயராமன். அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம…
-
- 0 replies
- 322 views
-
-
‘இப்படி இருந்தால் என்னதான் செய்வது?!’ - சிறையில் நொந்து புலம்பிய சசிகலா #VikatanExclusive அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும், இணைப்பு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. 'ஜெயலலிதா இருந்த நேரத்தில் அமைச்சரவை எப்படி இருந்ததோ, அதைப்போல நிதியமைச்சராக பன்னீர்செல்வம் தொடர வேண்டும் என்பதுதான் அமைச்சர்களின் விருப்பம். இப்படியொரு இணைப்பு நடந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் உள்ளடி வேலைகளும் தொடங்கிவிட்டன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். ‘சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருக்கக் கூடாது’ என்ற நிபந்தனையை முன்வைத்து, பன்னீர்செல்வம் அணியினர் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களது குழுவில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சி.பெ…
-
- 0 replies
- 460 views
-
-
‘இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான்’ - ஓ.பி.எஸ். அணியினர் உறுதி! தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை மாதத்திற்குள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு நாட்களாக அ.தி.மு.க. அணியில் இருந்தவர்கள் 'கருத்து' சொல்வதாக சண்டையை உருவாக்கிக் கொண்டிருந்தனர். தற்போது வரை அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இப்போதோ, இரு அணிகளின் தலைவர்களே 'இனி நாங்கள் சேரமாட்டோம்' என்பதை தங்களின் பேச்சால் உறுதிப்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் 30-ம்தேதி சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி, 'எங்களிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், கட்சியும்- ஆட்சியும் எங்களிடமே இருக்கிறது. யார் வந்தாலும், போனாலும் கவ…
-
- 0 replies
- 381 views
-
-
‘இரட்டை இலைக்கு உரிமை கோரினாரா பன்னீர்செல்வம்?!’ - ஆணைய விவாதத்தில் என்ன நடந்தது? ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட 127 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 'தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கப்பட்ட கவலையில் இருந்து நிர்வாகிகள் முழுமையாக மீளவில்லை. தொப்பி சின்னத்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா?' என்ற கவலையும் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. கோடை வெயிலின் வெப்பத்தையும் தாண்டி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் போட்டியிடும் மதுசூதனன், இரட்டை மின் கம்பம் சின்னத்தை தேர்வு செய்திருக்கிறார். எ…
-
- 0 replies
- 253 views
-
-
‘இரண்டே வாரங்களில் ரஜினியின் புதுக்கட்சி வரும்’ இன்னும் இரண்டே வாரங்களில், நடிகர் ரஜினிகாந்த், தனது புதிய அரசியல் கட்சி, கொடி, கொள்கைகளை அறிவிப்பார் என்று, காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில செய்திச் அலைவரிசையில், “ரஜினிநேதா (தலைவர் ரஜினி) அரசியல் வருகை” என்ற தலைப்பில், ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள், தமிழருவி மணியன் போன்ற தலைவர்களிடம் பேசி, ரஜினியின் அரசியல் வருகையை உறுதி செய்தது. இவர்களில், இன்னும் இரண்டு வாரங்களில் இந்தக் கட்சி அறிவிக்கப்பட்டுவிடும் என்றும் ரஜினி கட்சியின் கொள்கைகள் என்னவென்பது குறித்தும் விரிவாக தமிழருவி மணியன் கூறியுள்ளார். “இன்னும் 2 வாரங்களில், ரஜினி தனத…
-
- 7 replies
- 913 views
-
-
‘இலக்கு எம்.எல்.ஏக்கள்தான்; தினகரன் அல்ல!’ - எடப்பாடி பழனிசாமியின் மெளன யுத்தம் #VikatanExclusive முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியனின் மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டு, கட்சிப் பணியில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்திருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். "இன்று காலை வரையில் 29 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்துள்ளனர். அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களுக்கும் இருந்த மோதல்தான் வேறு வழிகளில் வெளிப்படுகிறது. இதைப் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவலைப்படவில்லை' என்கின்றனர் கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள். 'அ.தி.மு.கவில் எத்தனை அணிகள் உள்ளன?' என்ற கேள்விக்கு விடை தெரியாத அளவுக்கு பல துண்டுகளாக சிதறியுள்ளனர் நிர்வாகிகளும் …
-
- 1 reply
- 429 views
-
-
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேயிலைத் தோட்டயில் பணியாற்றும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் | உள்படம்: எம்.எஸ்.செல்வராஜ் இலங்கை சென்ற பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காகவும் பரிந்து பேசியுள்ளார். அவர்களின் நலன், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இந்திய அரசு உதவும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார். அதேபோல, நீலகிரி மலையில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் பரிவுகாட்ட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இருந்து 1815-ல் பிரிட்டிஷாரால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், அங்கு காபி, தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். தமிழக கிராமங்களில் வறட்சி, வறுமை, பஞ்சத்தால் பாதிக்கப…
-
- 0 replies
- 326 views
-