தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
அரசியல் கட்சி தொடங்குவது உறுதி: ரசிகர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேச்சு கமல்ஹாசன் | கோப்புப் படம். அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதல் பணியே செல்போன் செயலி. ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை கேளம்பாக்கத்தில் கமல் பிறந்த நாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டுவிழா இன்று நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் மத்தியில் கமல் பேசியதாவது: ''இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாது. பேரழிவு வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டுமா? வரும் முன் காக்கும…
-
- 3 replies
- 678 views
-
-
வேளை வருமெனத் தவமிருக்காது காலையிலேயே புதுயுகம் படைப்போம்..! கமல்ஹாசன் ட்விட் வேளை வருமெனத் தவமிருக்காது காலையிலையே புதுயுகம் செய்வோம் என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசன் கடந்த மூன்று மாத காலமாக ட்விட்டரில் அரசியல் குறித்த கருத்துகளை தெரிவித்துவருகிறார். மேலும், அவர் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதனால், அவர் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செயலி மட்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ரசிகர்களுடனான ச…
-
- 0 replies
- 582 views
-
-
''ஜெயலலிதாவின் 75 அப்போலோ நாள்கள்!’’ ஆவணங்களைக் கேட்கிறார் ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணத்தில் புதைந்து கிடக்கும் மர்மங்களை வெளிக்கொண்டுவர நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், 'ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆவணங்களை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம்' என்று அறிவித்துள்ளது. 75 நாள்கள் என்னென்ன நடந்தது என்பது தொடர்பாக தகவல் வைத்திருப்போர் விசாரணை ஆணையத்துக்கு அந்தத் தகவலைச் சத்திய பிரமாண உறுதிமொழிப் பத்திரவடிவில் கொடுக்கலாம். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த டிசம்பர் 5-ம் தேதி சிகி…
-
- 1 reply
- 789 views
-
-
2 ஜி தீர்ப்பு தேதி நாளை வெளியாகும் நிலையில், கருணாநிதியுடன் மோடி சந்திப்பால் பரபரப்பு! 2ஜி வழக்கு விசாரணையில் தீர்ப்பு தேதி நாளை வெளியாக உள்ள நிலையில் சென்னையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கப்போவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினருக்கு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு எப்படி கழுத்திற்கு மேல் கத்தியாக தொங்கியதோ அதே போன்று திமுகவினரின் கழுத்திற்கு மேல் தொங்கும் கத்தி 2ஜி வழக்கின் தீர்ப்பு. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் …
-
- 0 replies
- 614 views
-
-
கர்மவீரர் செய்ததை நம் தர்மவீரர் செய்வார்: - பிரேமலதா விஜயகாந்த் [Sunday 2017-11-05 18:00] திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் 35 ஆண்டுகால கோரிக்கையான ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டங்களை உடனே அமல்படுத்த வலியுறுத்தி தே.மு.தி.க சார்பில் இன்று உடுமலைப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உட்பட பலர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர். முதலில் பேசிய பிரேமலதா, "விவசாயமும், நெசவும்தான் தே.மு.தி.கவுக்கு முக்கியம். முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் கொண்டு வந்த பி.ஏ.பி திட்டத்தின் மூலம், மேல்நீராறு, கீழ்நீராறு, …
-
- 0 replies
- 711 views
-
-
தி.மு.க., தலைவர், கருணாநிதியின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதால், அவரது முன்னிலையில், முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்க்க, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்து, ஸ்டாலின், சென்னை திரும்பிய பின், இணைப்பு பேச்சு நடக்கும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறிய தாவது:சர்ச்சைக்குரிய போஸ்டர்களை, மதுரையில், அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய விவகாரத்தால், தி.மு.க., தலைமைக்கும், அப்போதைய, தென் மண்டல அமைப்புச் செயலராக பணியாற்றிய அழகிரிக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, அழகிரி உட்பட அவரது ஆதரவாளர்கள், கட்சியிலிருந்து நீக்கப்…
-
- 2 replies
- 694 views
-
-
மிஸ்டர் கழுகு: ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்! - அரசியல் அம்பு! தொப்பலாக நனைந்துவந்தார் கழுகார். ‘‘மக்களுக்கு மழை பற்றிய பயத்தைவிட மின்சாரம் குறித்த பயம்தான் அதிகம்” என வருத்தமான குரலில் பேசத் தொடங்கினார். ‘‘சென்னை கொடுங்கையூரில் இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. ‘சென்னை தெருக்களில் உள்ள பழுதடைந்த மின் பெட்டிகளைச் சரிசெய்ய வேண்டும்’ என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்கிறார்கள் மின் ஊழியர்கள். சென்னையில் பெரும்பாலும் மின்சார இரும்புப் பெட்டிகள்தான். பல இடங்களில் உடைந்துகிடக்கும் இரும்புப் பெட்டிகளை, மாற்ற வேண்டும் அல்லது வெல்டிங் செய்ய வேண்டும். இதற்கு, மழை சீஸன் ஒத்துவராது. கதவுகள் இல…
-
- 0 replies
- 986 views
-
-
கமல்ஹாசனை சுட்டுக்கொல்ல வேண்டும்: இந்து மகா சபை தலைவர் சர்ச்சை பேச்சு இந்து தீவிரவாதம் இனி இல்லை என கூற முடியாது என கருத்து கூறியிருந்த நடிகர் கமல்ஹாசனை சுட்டுக்கொல்ல வேண்டும் என இந்து மகா சவை துணை தலைவர் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக கூறியுள்ளார். புதுடெல்லி: தமிழ் வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் நடிகர் கமல்ஹாசன், முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்ட…
-
- 0 replies
- 537 views
-
-
தமிழ்நாடு: மாகாணமா, மாநிலமா அல்லது அரசா? இன்றைய தமிழ்நாடு ஒரு நவீன மாநிலமாக உருவானது 1956 நவம்பர் 1-ம் தேதிதான். சென்னை மாநிலத்தின் தெலுங்கு, கன்னட, மலையாளப் பகுதிகள் பிரிக்கப்பட்ட பின், தமிழ்ப் பகுதிகள் மட்டும் ஒரு மாநிலமாக ஆக்கப்பட்ட இந்த நாளை தமிழர் தாயகத் திருநாளாக கொண்டாடும் விருப்பம் இப்போது தமிழர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆந்திரப் பிரதேசம். கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் அவை நீண்டகாலமாக அரசு விழாக்களாகவே கொண்டாடப்பட்டுவருகின்றன. மாநிலப் பிரிவினையின்போது எல்லைப் பகுதிகளை இழந்த காரணத்தால் தமிழ்நாட்டில் இது எப்போதும் ஒரு கொண்டாட்டமாக உணரப்படவில்லை. ஆனால், என்னதான் இருந்தாலும், நவீன …
-
- 3 replies
- 1.4k views
-
-
2015 வெள்ளத்தை, ஒரே நாளில்... கண்முன் காட்டிய மழை! நேற்று பிற்பகலிலிருந்தே மக்கள் கடைகளில் பரபரப்பாக குவிந்துவிட்டார்கள். அடுத்து நான்கு நாட்களுக்குத் தேவையான பொருட்கள், குறிப்பாக கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, தீப எண்ணெய், அகல் விளக்குகளுக்கு ஏக டிமான்ட். பல கடைகளில் இந்தப் பொருட்கள் மட்டும் விற்றுத் தீர்ந்திருந்தன. மாலை நெருங்க நெருங்க மழை வெளுக்க ஆரம்பித்தது. குறிப்பாக தென் சென்னைப் பகுதிகளில். மக்கள் எதிர்ப்பார்த்ததுபோலவே இரவு சாலைகளில், தெருக்களில் முழங்காலுக்கு மேல் வெள்ளம். வேளச்சேரி - மடிப்பாக்கம் பிரதான சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்து வெள்ளம். ரியார் நகர், எல்ஐசி நகர், குபேரன் நகர், லட்சுமி நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புக ஆரம்பித்துவிட…
-
- 22 replies
- 5.1k views
-
-
எம்ஜிஆர் இறந்த இரவு மறக்கவே முடியாதது!- கருணாநிதியின் செயலர் சண்முகநாதன் பேட்டி கருணாநிதியின் நிழலாகத் தொடரும் அவருடைய செயலர் சண்முகநாதன் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலில் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியை நான்கு அத்தியாயங்களாக நம்முடைய நடுப் பக்கத்தில் வெளியிடுகிறோம். எம்ஜிஆர் - கருணாநிதி எனும் இரு பெரும் ஆளுமைகள் இடையே இருந்த ஆழமான நட்பையும் திமுகவில் நடந்த பிளவின் பின்னரசியலையும் இன்று பேசுகிறார் சண்முகநாதன். எம்ஜிஆருக்கு உங்கள் மேல் என்ன கோபம்? திமுகல அவரு இருந்தப்போ என்னை எம்ஜிஆருக்கு ரொம்பப் பிடிக்கும். கல்யாணம் ஆனவுடனே என்னையும் மனைவியையும் அழைச்சு விரு…
-
- 2 replies
- 3k views
-
-
ரகசிய இடத்தில் நடராசன்... 2 மாதங்களுக்கு 'நோ' அரசியல் #VikatanExclusive உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகக் குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ‘புதிய பார்வை’ இதழின் ஆசிரியர் ம.நடராசன், நேற்று இரவு வீடு திரும்பினார். கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி மாலை, நடராசனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்குக் கல்லீரல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில், அவர் உடல்நிலை மோசமாக இருந்தது. அதையடுத்து, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நடராசனுக்கு டிரைக்கியோடாமி பொருத்தப்பட்டது. அதன்பிறகு நடந்த சோதனைகளில், அவர…
-
- 0 replies
- 645 views
-
-
`இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு!' - கமல் புது ட்வீட்! நடிகர் கமல்ஹாசன் கடந்த பல மாதங்களாக பல்வேறு விஷயங்கள் பற்றி ட்விட்டர் மூலம் கருத்து கூறி வருகிறார். இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கமல்ஹாசன், `இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல்பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கலவலை அளிக்கின்றன' என்று ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் கமல் மேலும், `சென்னையின் தென்மேற்கு வடமேற்குப் பகுதிகள் நீரில் மூழ்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. சேலையூர் ஏரி, கூடுவாஞ்சேரி ஏரி, நந்திவரம் பெல்ட் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, நாராயணபுரம் முடிச்…
-
- 0 replies
- 601 views
-
-
இரு அணிகள் உரிமை கோரியதால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் யாருக்கு?- தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிரிந்தன. அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு இரு தரப்பும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. சின்னம் முடக்கப்பட்டபோது சசிகல…
-
- 2 replies
- 1.1k views
-
-
முகிலன் கைதும் இலங்கையின் வெள்ளை வேன் கதையும்! #SaveEnvironmentalists தமிழகத்தில் ஒரு சூழலியல் போராளியாக இருப்பது எத்தனைக் கொடூரம் என்பதை உணர ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த மிகச் சில சம்பவங்களைப் படியுங்கள். 08-05-2016. தேனி மாவட்டம் போடி பகுதி. இந்த நிமிடம் தமிழகத்தின் துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் செல்வாக்குக் கொண்ட பகுதி. தமிழகத்தின் மிக முக்கிய சூழலியல் போராளிகளில் ஒருவரான முகிலன் அன்று அங்கு போகிறார். தமிழகத்தின் இயற்கை வளத்துக்கு எதிரான, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயிர்ச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் "நியூட்ரினோ" திட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்கிறார். அந்தத் திட்டத்துக்கு அப்போது தன் முழு மனதான ஆதரவை த…
-
- 0 replies
- 825 views
-
-
எடப்பாடியைக் கைகழுவுகிறாரா மோடி? மழையில் நனைந்து, தண்ணீர் சொட்டச் சொட்ட வந்த கழுகாரிடம், “பி.ஜே.பி-யின் நிறம் லேசாக மாறுவதுபோல் தெரிகிறதே?” என கேள்வியைப் போட்டோம். ரெயின்கோட்டைக் கழற்றியபடி பதில்சொல்ல ஆரம்பித்தார், கழுகார். “டெல்லி பி.ஜே.பி தலைமை, தமிழக அரசுக்குக் காட்டிவந்த தன் நிறத்தை இப்போது மாற்றிவிட்டது என்றும், எடப்பாடியைக் கைகழுவ மோடி தயாராகி விட்டார் என்றும் டெல்லி தகவல்கள் சொல்கின்றன. அதற்கேற்ப தமிழக பி.ஜே.பி தலைவர்களின் குரலும் மாறி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க அரசைத் தமிழக பி.ஜே.பி தலைவர்கள் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், பி.ஜே.பி-யின் தமிழகத் தலைவர் தமிழிசையும் அதில் முன்னணியில் இருக்கின…
-
- 0 replies
- 3.1k views
-
-
மைக்ரோ கேமரா, ப்ளூடூத் ஹெட்செட் - ‘வசூல்ராஜா’ பாணியில் தேர்வெழுத வந்த தில்லாலங்கடி ஐ.பி.எஸ்! Chennai: திருடன்- போலீஸ் ஆட்டம் விளையாடியிருப்போம். ஆனால், ஒரு போலீஸே திருடனாய் மாட்டிக் கொண்ட கதை தெரியுமா..? நாங்குனேரி துணைச்சரக உதவிக் காவல்துறை கண்காணிப்பாளரான சபீர் கரிம்தான் மாட்டிக் கொண்ட போலீஸ். ஆம் 30-ம் தேதி சென்னையில் நடந்த சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வில் 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் ஸ்டைலில் `ப்ளூடூத்' உதவியோடு தேர்வெழுதி மாட்டிக் கொண்டார். இதற்கு அவர் மனைவி ஜாய்ஸியும் உடந்தை என்பதுதான் ஹைலைட்! ‘குற்றங்கள்... அதிலும் தொழில்நுட்பத்தின் உதவியோடு செய்யப்படும் குற்றங்களைத் தடுக்கக் காவல்துறை நவீனமயமாக்கப் படவேண்டும்.'…
-
- 0 replies
- 627 views
-
-
கொரட்டூர், சிட்லபாக்கத்தில் மழை நீரில் மிதக்கும் வீடுகள்! Chennai: சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், தாழ்வான பகுதியான கொரட்டூர், சிட்லபாக்கத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. அதனால், சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. கால்வாய்கள், கழிவு நீர்க் குழாய்கள் சரியாகத் தூர் வாரப்படாததால், மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல ஓடுகிறது. சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதியை நோக்கி மழை நீர் செல்வதால் அந்த பகுதியில் இருக்கும் வீடுகள் நீரினால் சூழப்பட்டிருக்கின்றன. …
-
- 4 replies
- 1.9k views
-
-
மெர்சல் சர்ச்சையில் சிக்கியதன் உண்மை பின்னணி ! | Socio Talk மெர்சல் படத்தில் நடிகர் விஜய் பேசிய வசனங்கள் பூகம்பம் போல் வெடித்தது. இதற்கான காரணங்களும், இதற்கு முன்பு எப்போதெல்லாம் இது போன்ற பிரச்சனைகள் வந்தது என்பதை பற்றி இந்த வீடியோ பதிவில் காணலாம்.
-
- 0 replies
- 478 views
-
-
கொள்ளுப் பேரன் திருமண விழாவில் கருணாநிதி சென்னை : மு.க. முத்துவின் பேரன் மனுரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா திருமணத்தில் ஓராண்டிற்குப் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்றது குடும்பத்தினரை உற்சாகமடைய வைத்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் மருத்துவர்களின் ஆலோசனைப் படி சிகிச்சை பெற்று வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. ட்ரக்யோஸ்டமி சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன. அவர் உடல்நலன் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அண்மையில் பேரன் அருள்நிதியின் மகனை கருணாநிதி கொஞ்சும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனைத…
-
- 1 reply
- 805 views
-
-
கமல்ஹாசன் மீது வழக்குப்பதியலாம்! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Chennai: நிலவேம்புக் கஷாயம் விவகாரத்தில், மனுதாரர் புகாரில் முகாந்திரம் இருந்தால், நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதற்குக் காரணமான கொசுவை அழிக்கும் நடவடிக்கையில் தமிழக சுகாதாரத்துறை ஈடுபட்டுவருவதோடு, நாேய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நிலவேம்புக் கஷாயத்தை வழங்கிவருகிறது. இதன…
-
- 1 reply
- 410 views
-
-
பயணிகள்- விமானிகள் வராததால் சென்னையில் இருந்து 25 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணிகள், விமானிகள், விமான பணிப்பெண்கள் குறித்த நேரத்துக்கு வராததால் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. ஆலந்தூர்: சென்னையில் இன்று அதிகாலையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், விமானிகள், விமான பணிப்பெண்கள் ஆகியோரால் குறித்த நேரத்துக்கு வந்து சேர முடியவில்லை. இதனால் ச…
-
- 0 replies
- 487 views
-
-
இந்த வாரம் தமிழக அமைச்சரவை... மாற்றம்! அ.தி.மு.க., என்ற பெயரும், இரட்டை இலை சின்னமும், முதல்வர் பழனிசாமி அணிக்கு கிடைத்ததும், இந்த வாரம், தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுகிறது. ஆட்சியில் உள்ள, 'ஸ்லீப்பர் செல்' அமைச்சர்கள், நான்கு பேருக்கு, 'கல்தா' கொடுக்கப்படுவதோடு, சசிகலா ஆதரவாளர்களாக கருதப்படும், 27 மாவட்ட செயலர்களை, பதவியில் இருந்து நீக்கவும் அதிரடி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.…
-
- 0 replies
- 598 views
-
-
சென்னை விமான நிலைய லிப்டில் சிக்கிய முதலமைச்சர்! சென்னை விமான நிலைய லிப்டில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிதுநேரம் சிக்கிக் கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்று வரும் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விமானம் மூலம் மதுரை செல்ல இருந்தார். அதற்காக சென்னை விமான நிலையம் சென்ற அவர், கீழ்தளத்தில் இருந்து உள்நாட்டு முனையம் பகுதிக்குச் செல்லும் முதல்தளத்துக்கு லிப்ட் மூலம் சென்றார். அவர் ஏறியபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே லிப்ட் நடுவழியில் நின்றதாகக் கூறப்படுகிறது. இதனால் லிப்டில் சிறிதுநேரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிக்க…
-
- 0 replies
- 778 views
-
-
சிறையில் இருந்து சசிகலா வெளியில் சென்று திரும்பியது உண்மைதான்: டி.ஐ.ஜி. ரூபா சிறையில் இருந்து சசிகலா வெளியில் சென்று திரும்பியது உண்மைதான் என்று டி.ஐ.ஜி. ரூபா கூறியுள்ளார். சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் வெளியில் ஷாப்பிங் சென்று விட்டு, கையில் பையுடன் சிறைக்கு திரும்பும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டுபிடித்த சிறைத்துறை போலீஸ் டி.ஐ.ஜி. ரூபா உயர் அதிகாரி…
-
- 0 replies
- 1.1k views
-