தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
மிஸ்டர் கழுகு: சசிகலாவிடம் பேசிய 8 அமைச்சர்கள்? - பயத்தில் எடப்பாடி! ‘‘சி.சி.டி.வி கேமரா வந்த பிறகு யாரும் தப்ப முடியாது போலிருக்கிறது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டோம். ‘‘சென்னை, தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில்தான் சசிகலா தங்கியுள்ளார். பரோலில் வந்துள்ள சசிகலாவை யார் யாரெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க மத்திய, மாநில உளவுத்துறை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இது போதாது என்று ஏழு இடங்களில் ரகசிய கேமராக்களையும் பொருத்தியுள்ளதாம் மாநில உளவுத்துறை.’’ ‘‘சசிகலாவை யார் யாரெல்லாம் சந்தித்தார்கள்?’’ ‘‘மன்னார்குடி உறவுகள், நெருங்கிய சொந்தங்கள், தூரத்துச் சொந்தங்கள் எனப் பலரும் ச…
-
- 0 replies
- 4.7k views
-
-
சசிகலாவின் பரோல் ஓவர்! இன்று என்ன திட்டம்? சசிகலா பரோலில் வந்து நான்கு நாள்கள் ஆகின்றன! அவரின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் சசிகலா தற்காலிகமாகத் தங்கியிருக்கிறார். "இந்த நான்கு நாள்களில், உறவினர்களின் செல்போனில் எடப்பாடி கோஷ்டி அமைச்சர்கள் ஆறு பேருடன் தொடர்புகொண்டு சசிகலா பேசினார். அதே பாணியில் 25 எம்.எல்.ஏ-க்களுடனும் தகவல் பரிமாற்றம் நடந்தது" என்றெல்லாம் டி.டி.வி. தினகரன் கோஷ்டியினர், மீடியாக்களிடம் தகவல்களைச் சொல்லி வருகிறார்கள். இன்று ஒருநாள்தான் பாக்கி... சசிகலா பரோல் முடிந்து பெங்களூரு சிறைச்சாலைக்குப் போகப்போகிறார்...! அவர் கிளம்பும்போது, அவரைச் சந்திக்க, சில அமைச்சர்கள் ரெடியாகிறார்கள் என்று உளவுத்துறையினர்…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐந்து நாள், 'பரோல்' முடிந்து, இன்று மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்ல வேண்டி இருப்பதால், சசிகலா மிகுந்த சோகத்திற்கு ஆளாகியுள்ளார்; அத்துடன், கலக்கமும் அடைந்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வராத தாலும், எதிர்பார்த்த அரசியல் மாற்றங்கள் நிகழாததாலும், விரக்தியில் உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்ரவரி மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை …
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ்நாட்டை ஆள தகுதியானவர் யார் ? | Socio Talk அக்காலத்தில் இருந்தே தமிழ்மொழிக்கு ஒரு சிறப்புண்டு. தற்போது தமிழ்மொழி பேசினால் அதற்கு ஏற்ற மரியாதையே இல்லை. வடமொழியான ஹிந்தி திணிப்பு சரியா ? உண்மையில் யாருக்கு தான் தமிழ்நாட்டை ஆள தகுதி இருக்கு ? மேலும் பல கேள்விகளும், அதற்கான விடைகளும்.
-
- 2 replies
- 911 views
-
-
லாக்கானது ஏடிஎம் கார்டு... பிச்சையெடுத்த ரஷ்ய வாலிபர்... உதவிக்கரம் நீட்டியது போலீஸ்! காஞ்சிபுரம் கோயில் ஒன்றில் ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் பிச்சை எடுத்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு, உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்தவர் பெர்ன்கோவ். இவர் கோயில்களை காண்பதற்காக செப்டம்பர் 8-ம் தேதி ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை சுற்றிப்பார்ப்பதற்காக ரயில் மூலம் நேற்று இரவு 8.15 மணிக்கு காஞ்சிபுரம் வந்தார். கையில் வைத்திருந்த பணம் செலவாகிவிட்டதால், தனது கையில் வைத்திருந்த டெபிட் கார்ட் மூலம் ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயன்றார். ஏடிஎம் பாஸ்வேர்ட…
-
- 11 replies
- 1.2k views
-
-
கீழடியில் மூன்றாம் ஆண்டு அகழாய்வு பணி முடிவடைந்ததால் தனியார் நிலத்தில் தோண்டப்பட்ட அகழாய்வு குழிகள் மூடப்பட்டன. இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் தமிழர்களின் தொன்மை, சங்க கால மக்களின் நகர நாகரிகம், வைகை நதி நாகரிகம் குறித்து கடந்த 2015-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி கண்காணிப்பாளர் நந்தா கிஷோர் ஸ்வைன், உதவி தொல்லியலாளர் ராஜேஷ், வீரராகவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 2015, 2016 ஆகிய 2 ஆண்டுகளில் 102 அகழாய்வுக் குழிகளில் இருந்து 5,300 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 2 பொருட்களை மட்டும் …
-
- 2 replies
- 1k views
-
-
சசிகலாவின் சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்திய கைதிகள் சிறையில் தாக்கப்பட்டது உண்மை: மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, விதிகளை மீறி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்திருக்கிறார் என முன்னாள் டிஐஜி ரூபா கடந்த ஜூலை மாதம் புகார் தெரிவித்தார். அப்போது சிறையில் சசிகலா, தெல்கி உள்ளிட்ட விஐபி கைதிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு வசதிகள் தொடர்பாக கைதிகள் ரூபாவிடம் புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார், அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் கைதிகளை சரமாரியாக த…
-
- 0 replies
- 402 views
-
-
“நான் பார்க்காத சோதனையா?” உறவுகளிடம் உருகிய சசிகலா ஐந்து நாள் அவசரப் பரோலில், சிறைவாசத்திலிருந்து விடுபட்டு வந்துள்ளார் சசிகலா. இது தற்காலிக விடுபடுதல் என்றாலும் 'இச்சுதந்திரக் காற்றை மகிழ்ச்சியோடே அனுபவிக்கிறார் சசிகலா' என்கின்றனர் அவரைச் சுற்றியுள்ள உறவினர்கள். “பெங்களூரிலிருந்து காரில் சென்னைப் பயணத்தை மேற்கண்ட அந்தக் கணத்திலேயே அவர் முகத்தில் ஏகப்பட்ட உற்சாகம். நடு சீட்டில் அமர்ந்திருந்தவர் ஜன்னலோர கண்ணாடியில் முகம் புதைத்து இயற்கை காட்சிகளை ரசித்தபடியே வந்துள்ளார். வழியெங்கும் ஆதரவாளர்கள் தேங்காய், பூசணி உடைத்தும், பூக்கள் தூவியும் வரவேற்பு கொடுத்தனர். வழியில் டீ கடையில் நிறுத்தியபோதும், 'ஹே சசிகலா' எனப் பொதுமக்கள் ஆர்வத்தோடு…
-
- 1 reply
- 940 views
-
-
* வௌ்ளிக்கிழமை இரவு, சென்னை வருகை * சென்னை, தி.நகர், அபிபுல்லா சாலையில் உள்ள வீட்டில், 'ஹால்ட்' * இரவு, 'செம மப்பு!' வீட்டில் சிலரை அழைத்து, குசலம் விசாரிப்பு; அவர்களிடம், 'முக்கியஸ்தர், துணை முக்கியஸ்தர்' பற்றி, சகட்டு மேனிக்கு சாடல் * சனிக்கிழமை காலை, வீட்டிலிருந்து புறப்பட்டு, பெரும்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்கை * சனிக்கிழமை பிற்பகல் வீடு திரும்பல். உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் சந்தித்து உரையாடல். வெளியில் பலர் சந்திக்க முனைந்தது நடக்கவில்லை * ஞாயிறு காலை, தி.நகரிலிருந்து புறப்பட்டு, மருத்துவனைக்கு மதியம், 12:40 மணிக்கு செல்கை. நெருங்கிய உறவினரைப் பார்த்து விட்டு, 1:30 மணிக்கு கிளம்பி, வீடு திரும்பல் * கடந்த டிசம்பரில் மறைந்தவரி…
-
- 0 replies
- 1k views
-
-
நடராசன் உடல்நிலை..! மருத்துவமனை விளக்கம் நடராசன் தற்போது கல்லீரலுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் இருந்துவருகிறார் என்று மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. சசிகலாவின் கணவர் நடராசன், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், அவருக்குக் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரைப் பார்ப்பதற்காக சசிகலா சிறையிலிருந்து ஐந்து நாள் பரோலில் வெளிவந்துள்ளார். இந்தநிலையில், நடராசனின் உடல்நிலை குறித்த அறிவிப்பை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், 'நடராசன் தற்போது கல்லீரலுக்கான தீவ…
-
- 0 replies
- 940 views
-
-
நளினிக்கு வீடு இன்மையால் பரோல் மறுப்பு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற, நளினிக்கு சொந்தமாக வீடு இல்லை என்பதனால், அவருக்கு பரோல் வழங்குவதற்கு நன்னடத்தை அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்று இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. தல்வர் பழனிசாமியை சந்தித்து முறையிட உள்ளதாக, நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள இவரது கணவர் முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ளார். இவர்களது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடு நடந்துவர…
-
- 0 replies
- 575 views
-
-
’’அது மீம்ஸா... பீன்ஸா... பிக்பாஸ்னா என்ன?’’ - எ பேட்டி வித் விஜயகாந்த் ‘எதிர்பார்க்கிறது எதிர்பார்க்கிற நேரத்துல கிடைக்காது; எதிர்பார்க்காதது எதிர்பார்க்காத நேரத்துல நடக்கும்’னு சொல்ற மாதிரி... அந்த மெசேஜ் வந்து விழுந்தது! ‘‘கேப்டன் பேட்டி ஓ.கே. மார்னிங் நைன்!’’ என்று விஜயகாந்த் உதவியாளரிடமிருந்து மெசேஜ். 'ஆனந்த விகடன் 4500வது இதழுக்கு விஜயகாந்த் பேட்டி கன்ஃபர்ம். காலைல ஷார்ப் 9’ என ’ஒளி ஓவியர்’ ராஜசேகரன் சார் அண்ட் கோவுக்கு மெசேஜினேன். (ஆனால், எனக்கு முன்னாடி அவர்கள் ஆஜர். நான்தான் லேட்!) விஜயகாந்தின் கோயம்பேடு அலுவலகம். வாசலில் ஏகப்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பூங்கொத்துகளுடன் காத்திருந்தனர். அவர்கள…
-
- 0 replies
- 604 views
-
-
அ.தி.மு.க ஆட்சி சிறப்பாக அமைய பாடுபட்டவர் சசிகலா: அமைச்சர் செல்லூர் ராஜூ அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா என அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டியளித்துள்ளார். மதுரை: மதுரையில் டெங்கு காய்சலை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து பணியாற்றி வருவதாக கூறினார். மேலும், டெங்குவ…
-
- 2 replies
- 617 views
-
-
சிவாஜி சிலை அரசியல் உச்சகட்ட அரசியல் பரபரப்புகளுக்கு இடையே சிலை அரசியல் மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் இவ்வாரம் அரங்கேறியிருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை மெரினா கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டதோடு அச்சிலையை நிறுவிய தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெயரும் அச்சிலை யில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இது ஒருபுறம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு சிவாஜி மணிமண்டப திற ப்பு விழாவும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியில் உள்ள கட்சி தொடங்கும் நல்ல திட்டங்கள் கூட அடுத்து வரும் ஆட்சியினால் அப்படியே கிடப்பில் போடப்பட்டு புதுதிட்டங்கள் தொடங்கப்படுவத…
-
- 0 replies
- 1k views
-
-
ஜெயலலிதாவுக்காகச் சிறையில் இருப்பவர் சசிகலா! கொந்தளித்த தினகரன் பழனிசாமியை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு ஜெயலலிதாவுக்காகச் சிறைச்சாலையில் இருக்கின்றவரை ஒரு தேச துரோகியைப் போல சித்தரிக்கிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் ஆவேசமாகக் கூறினார். பரோலில் வந்துள்ள சசிகலா தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டின் முன்பு செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு: சசிகலாவுக்குக் கடுமையான நிபந்தனை விதிக்கக் காரணம் என்ன? கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா எதற்காக சென்னை வந்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். சச…
-
- 0 replies
- 471 views
-
-
மிஸ்டர் கழுகு: நவம்பரில் கமல் கட்சி... டிசம்பரில் ரஜினி கட்சி! ‘‘கோட்டையைச் சுற்றிவந்த அரசியல் புயல், கோடம்பாக்கத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது” என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘கமலையும் ரஜினியையும் சொல்கிறீர்களா?’’ என்று தகவல்களைக் கேட்கத் தயாரானோம். ‘‘ரஜினி குறித்து ‘முரசொலி’ பவளவிழாவில் கமல் பேசியது ரஜினி மனதில் காயத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை. அதன்பிறகு ரஜினியைச் சந்தித்திருக்கிறார் கமல். ‘நான் உங்களைப்பத்தி பேசுனது வேறு. எல்லோரும் தப்பா புரிஞ்சுக்கிட்டு கைதட்டிட்டாங்க’ என்று கமல் சொன்னாலும், ரஜினி மனம் சமாதானமாகவில்லை என்பது சிவாஜி மணிமண்டபத் திறப்பு விழாவில் அப்பட்டமாக வெளிப்பட்டது. கமலின் ‘முரசொலி’ விழா பேச்சுக்குப் பதில் சொல்வதுபோல இரு…
-
- 0 replies
- 1.4k views
-
-
நதி நீர் இணைப்பு சாத்தியமா? நதிகள் இணைப்பு சரியா ? தப்பா?
-
- 0 replies
- 1.3k views
-
-
கேளிக்கை வரிக்கு எதிராக போராட்டம்: 6 புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியீடு தடைபட்டது பகிர்க தமிழகத்தில் கேளிக்கை வரி அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்து இன்று புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இதனால், கடந்த வாரம் வெளியான திரைப்படங்களே இந்த வாரமும் திரையிடப்பட்டுள்ளன. Image captionஇன்று (வெள்ளிக்கிழமை) காலையில் வெறிச்சோடிய சத்தியம் திரையரங்கு சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, திரைப்படங்களுக்கு 18 முதல் 28 சதவீதம் வரை வரிவிதிக்கப்பட்டது. இதனால், அதிகபட்ச திரையரங்கக் கட்டணம் 120 ரூபாயிலிருந்து 153 ரூபாயாக உயர்ந்தது. இந்த நிலையில், சமீபத்தில் 10 சதவீதம் அளவுக்கு கேளிக்கை வரியும் விதி…
-
- 0 replies
- 495 views
-
-
இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? - இறுதி விசாரணைத் தொடங்கியது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற விசாரணை சற்றுமுன் தொடங்கியது. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் குழு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காத்திருக்கிறார்கள். இந்த வழக்கறிஞர்கள் குழுவோடு எம்.பி மைத்ரேயன் மற்றும் கே.பி முனுசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருக்கிறார்கள். இச்சூழலில் விசாரணையை எதிர்த்தும், நான்கு மாதங்கள் கழித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும் தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைக் காலையில் மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், விசாரணை நடத்த தடையில்லை எனவும் உத்த…
-
- 1 reply
- 541 views
-
-
தி.மு.க உறுப்பினராகக் கையெழுத்திட்டுப் புதுப்பித்த கருணாநிதி..! வைரலாகும் புகைப்படங்கள் தி.மு.க-வின் உறுப்பினராக, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி தன்னைப் புதுப்பித்துக்கொண்டார். அதற்காக, அவர் கையெழுத்திட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய பெயர்களைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதி, அவருடைய பெயரைப் புதுப்பித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில், '15-வது அமைப்புத் தேர்தலையொட்டி கருணாநிதி, உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு, கட்டணம் செலுத்தி உறுப்பி…
-
- 3 replies
- 473 views
-
-
ஸ்டாலினை அணைத்த அமைச்சர்... கைகுலுக்கிய ஓ.பன்னீர்செல்வம்! கலகலத்த ஆளுநர் பதவியேற்பு விழா ஆளுநர் பதவியேற்பு விழாவில் தமிழக அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அரவணைத்துக் கைகுலுக்கிய சம்பவத்தை அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியுடன் பார்த்தனர். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி…
-
- 0 replies
- 417 views
-
-
’இரட்டை இலை!’- உச்ச நீதிமன்றத்தை நாடினார் தினகரன் இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணைக்குத் தடை கேட்டு, டி.டி.வி.தினகரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். கூடுதல் ஆவணம் தாக்கல்செய்ய கால அவகாசம் வேண்டும் என்பதால், இன்று நடக்கவிருக்கும் தேர்தல் ஆணைய இறுதி விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று தினகரன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. கட்சிப் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள், டி.டி.வி.தினகரன், தீபா ஆகியோர் தாக்க…
-
- 0 replies
- 364 views
-
-
ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் வருகையை மறைமுகமாக சாடியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ரஜினி மற்றும் கமல் இருவரின் அரசியல் வருகை, தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் முடிவு மற்றும் சிவாஜி கணேசன் மணிமண்டப விழா ஆகியவற்றை முன்வைத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார். இதில் ரஜினி மற்றும் கமல் இருவரின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்திருக்கிறார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இரு துருவங்கள் இந்த சினிமாவில் எப்போதும் உண்டு. இந்த துருவங்களுக்கு அரசியல் ஆசையும் உண்டு. முந்தைய துருவங்கள் அரசியலில் ஈடுபடும் முன் மக்கள் பணியும் செ…
-
- 0 replies
- 564 views
-
-
கர்நாடக உள்துறையின் அனுமதியை தொடர்ந்து சசிகலா இன்று பரோலில் வருகிறார்? சசிகலா | கோப்புப் படம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பரோல் வழங்க கர்நாடக உள்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து, அவர் இன்று வெளியே வர வாய்ப்பு உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சசிகலா தனது கணவரை சந்திக்க செல்வதற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு பரப்பன அக்ரஹாரா மத்…
-
- 15 replies
- 1.5k views
-
-
நடிகர் கமல் தொடர்ச்சியாக, அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளியிட்டுவருகிறார். மேலும், அதிமுக அரசினையும் அதன் அமைச்சர்களையும் மிக கடுமையாக சாடிவருகிறார். தான் அரசியலுக்கு வரவேண்டிய சூழல் வந்துவிட்டதாகவும், அதற்கான பாதையினை உருவாக்கியிருப்பவர்கள் ஆட்சியாளர்கள் தான் எனவும் வார இதழ் ஒன்றில் தொடர் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், "நான் யார் எனில் தமிழன், பிறப்பால் நீ பார்ப்பான் என்றால் அதனை நான் தெரிந்தெடுக்கவில்லை. மாறாக, பகுத்தறிவு நான் தேர்ந்தெடுத்த அறிவுநிலை எனவும், என்னுள் எஞ்சிய காவி மனதில் இல்லை. எப்போதாவது வெற்றிலையைக் குதப்பினால் வாயில் இருக்கக் கூடும். அது சாதியம் மெச்சும் புராதனக் கூட்டத்தின் கொள்கை விளக்கப் பிரகடனங்கள் மீது துப்ப ஏதுவாக இருக்கும்.’’ என தெரிவித்துள்…
-
- 0 replies
- 559 views
-