Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 19 மாவட்ட எஸ்.பி-க்களுக்கு டி.ஜி.பி திடீர் உத்தரவு! அசாதாரண சூழ்நிலையால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் 19 மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் திடீரென உத்தரவுப் பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசியல் பரபரப்பு அடங்குவதற்குள் 19 மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்று முக்கிய உத்தரவுப் பிறப்பித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேன…

  2. 'நான் வேறு ரஜினி வேறு...' - கமல் பரபரப்புப் பேட்டி! பிக் பாஸ் நிகழ்ச்சி, ட்விட்டர் கருத்துகள் என்று கமல் பரபரப்பாக இயங்கிவருகிறார். தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துவரும் அவர், 'மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்' என்று கூறினார். இதனிடையே, கடந்த வாரம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கமலைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஊழலுக்கு எதிராக இணைந்து செயல்படப்போவதாக அவர் தெரிவித்தார். மேலும், 'தனிக்கட்சி தொடங்குவேன், முதல்வர் ஆக விரும்புகிறேன்' என்றும் கருத்து தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார். இந்நிலையில், நியூஸ் 18 ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கமல், "மாநில சுயாட்சிகுறித்து அண்ணா கோரிக்கையை முன்வைத்து, பின…

  3. ரஜினி Vs கமல் -ஜெயிக்கப்போவது யார் ? | Socio Talk | சில நாட்களாக கமல் அரசியலுக்கு வரப்போகிறார், ரஜினி கமலுக்கு வரப்போகிறார் என பேச்சுக்கள் நாம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம் ஆனால் இருவரும் அரசியலில் குதித்தால் வெற்றி யாருக்கு? பி.ஜே.பியுடன் சேர மறுக்கும் கமல், அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கும் ரஜினி. இருவரில் யார் வந்தால் நன்றாக இருக்கும்? மக்கள் யாரை விரும்புகிறார்கள்? மேலும் பல கேள்விகளும். விடைகளும்.

  4. ’ஓ.பன்னீர்செல்வம் போன்ற அரசியல்வாதிகள் தேவையில்லை!’ - பொளேர் மக்கள் கருத்து #VikatanSurveyResult சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில், கடந்த 20-ம் தேதி பள்ளிக்கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,"எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை, ஆசிரியர்களாகிய நீங்கள்தான் உருவாக்க வேண்டும்" என்று பேசியிருந்தார். இதையடுத்து, "ஓ.பன்னீர்செல்வம் போன்ற நல்ல அரசியல்வாதிகள் தமிழகத்துக்கு அவசியமா" என்ற தலைப்பில் 'விகடன்' இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. சர்வேயில் கலந்துகொண்டவர்கள் தற்போதைய அரசியல் தலைவர்கள் பற்றிய…

  5. 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யுங்க! உயர்நீதிமன்றத்தில் தி.மு.க., வழக்கு சென்னை: நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஓட்டளித்த, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட, ௧௧ எம்.எல்.ஏ.,க்களை தகுதியிழப்பு செய்யக் கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில், தி.மு.க., மனு தாக்கல் செய்துள்ளது.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், கொறடாவுமான, ஆர்.சக்கரபாணி தாக்கல் செய்த மனு: முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பிரதான எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில், ஓட்டெடுப்பு நடந்து, பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்…

  6. ஆளுநர் பார்க்க வரும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை: தீபக் பரபரப்பு பேட்டி Share Tweet அ-அ+ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை ஆளுநர் பார்க்க வரும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை என அவரது அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். சென்னை: முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 72 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. …

  7. ஜெ. வீடியோ ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிடாதது ஏன்?- தினகரன் விளக்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடாதது ஏன் என்பது குறித்து அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் வார்டுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், ஜெயலலிதா சாதாரணமாக டிவி பார்க்கும் காட்சிகளை சசிகலா வீடியோவாக எடுத்த காட்சிகள் தங்களிடம் உள்ளதாகவும் நீதிமன்ற விசாரணையில் வெளியிடுவோம் என்றும் தினகரன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம் 7…

  8. ஜெயலலிதாவையே எச்சரித்த விருதுநகர் புள்ளி... சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பாரா!? #VikatanExclusive ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, தினகரனைச் சிக்கவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தரப்பினர் மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளனர். அது, சசிகலா குடும்பத்தினருக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்று சொல்கின்றன உள்விவர வட்டாரங்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையே நடந்துவரும் மோதல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் வியூகத்தால் நிலைகுலைந்துள்ளனர் தினகரன் ஆதரவாளர்கள். குறிப்பாகத் தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை நீக்கியதும், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் தினகரன் ஆத…

  9. Started by நவீனன்,

    பதவி பறிபோன தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர், 'எங்களை உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்; பெரிய பதவிகள் வேண்டாம்; கட்சியில் அங்கீகாரம் தந்தால் போதும்' என, முதல்வர் பழனிசாமிக்கு, துாது அனுப்பி உள்ளனர். சசிகலா மற்றும் தினகரனால், தங்களின் அரசியல் எதிர்காலம் நாசமாகி விட்டதாகவும் புலம்பி உள்ளனர். முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் அணியைச் சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது, கட்சி தாவல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க, சபாநாயகர் தனபாலுக்கு, அரசு கொறடா பரிந்துரை செய்தார். 'நோட்டீஸ்' விளக்கம் கோரி, 19 எம்.எல்.ஏ.,க்களுக்கு…

  10. சட்டசபையில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் யார்? ஆர்.டி.ஐ. தகவல்களுக்கு பதிலளிக்க மறுத்த அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் நம்பிக்கைகோரும் வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக வாக்களித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின் விவரம், எம்.எல்.ஏக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆர்.டி.ஐ. தகவல்களுக்கு, சட்டமன்ற செயலாளர் அலுவலகம் பதிலளிக்கவில்லை. நெல்லை, வி.எம்.சத்திரம், வ.உ.சி. நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, சட்டமன்ற செயலாளர் அலுவலக பொது தகவல் அலுவலர் மோகன்ராஜாவிடம் ஆர்.டி.ஜ. மூலம் கடந்த 19.8.2017ல் தகவல்களை கேட்டிருந்தார். பிரம்மா கேட்ட ஆர்.டி.ஐ. தகவல்கள் பின்வருமாறு: * சட்டசபை செயலாளராக 201…

  11. பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு? பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று, அவரது தாயார் அற்புதம்மாள் உள்ளிட்டோர் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். பேரறிவாளனின் தந்தை ஞானசேகரனுக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவருக்கு பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்று கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று 26 ஆண்டுகளுக்குப் பின்னர் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு அளிக்க தமிழக அரசு கடந்த 24-ம் தேதி உத்த…

  12. சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதி மறுக்கவில்லை: டிடிவி.தினகரன் தரப்பு வழக்கறிஞர் பேட்டி சபாநாயகர் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு, அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தரப்புக்கு பின்னடைவு என்பதெல்லாம் தவறாக பரப்பப்பட்ட பிரச்சாரம். உண்மை அதுவல்ல என்கிறார் தகுதி நீக்க வழக்கில் எம்.எல்.ஏக்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர். வழக்கு விசாரணையின் போது சபாநாயகர் தரப்பில் தங்களது உத்தரவை தாங்களே நிறுத்தி வைப்பதாக வாக்குறுதி அளித்து தடை விதிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள் என்று கூறுகிறார், தினகரன் தரப்பு வழக்கறிஞர் ந.இராஜா செந்தூர் பாண்டியன். தி இந்து தமிழ் சார்பில் அவரிட…

  13. நிம்மதியை தந்த நீதிமன்ற உத்தரவுகள்! சசி குடும்பம் மட்டும் கதிகலக்கம் சென்னை உயர் நீதிமன்றமும், டில்லி சி.பி.ஐ., நீதிமன்றமும் வழங்கிய உத்தரவுகள், தமிழக அரசியல் கட்சிகளிடமும், பொது மக்களிடமும், நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.அக்., 4 வரை, ஆளும் கட்சியும், அடுத்த மாதம், 25ம் தேதி வரை, தி.மு.க.,வும் அமைதி காக்கும் என தெரிகிறது. அதேநேரத்தில், சசிகலா குடும்பத்தினருக்கு மட்டும், இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, தமிழக அரசியல்களத்தை, நாடே உற்று நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியை கவிழ்க்க முயன்றதினகரன் ஆதரவாளர்கள்,18 பேரின் எம்.எல்.ஏ., பதவியை, கட்சி தாவல் தடை…

  14. சேகரிப்பு..! சசிகலாவால் மிரட்டி வாங்கப்பட்ட சொத்து விவரம்... ஆட்சியை கலைக்க முயல்வதால் பழனிசாமி முடிவு பழனிசாமி ஆட்சியைக் கலைக்க முயலும், சசி கும்பலின் ஆட்டத்தை அடக்கும் வகையில், ஜெ., உயிருடன் இருந்தபோது சசிகலா, மற்றவர்களை மிரட்டி வாங்கிய சொத்துக் களின் விவரங்கள் திரட்டப்படுகின்றன. ஆதாரங்கள் முழுமையாக கிடைத்தவுடன், அவற்றை வைத்து, சசிகலா மீது வழக்கு போடலாம் என, முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார். முதல்வராக இருந்த, ஜெ., இறந்த பின், அப் பதவியில் அமர முயன்றார் சசிகலா; ஆனால், அ.தி.மு.க.,வின் மற்ற உறுப்பினர்கள், பன்னீர்செல்வத்தை முதல்வராக அமர்த்த விரும்பினர். வேறு வழியில்லாமல்…

  15. தமிழிசை பின்னால் பிணம் கூடப்போகாது நரகல் நடையில் தரங்கெட்ட தமிழில் பேசிய ந(ா)ஞ்சில் சம்பத் அனல் தெறிக்கும் பேச்சால் எதி­ரா­ளியைத் துவம்சம் செய்­ப­வர்தான் அ.தி.மு.க. துணைக் கொள்கை பரப்புச் செய­லாளர் நாஞ்சில் சம்பத். தன் வழக்­க­மான பாணியில் தமி­ழக பா.ஜ.க. தலைவர் தமி­ழி­சையை அர்ச்­சனை செய்ய, பா.ஜ.க. தொண்­டர்கள் வெகுண்­டெ­ழுந்து நாஞ்­சி­லாரைச் சில மணி நேரத்­திற்கு வியர்க்க வைத்­து­விட்­டார்கள். இந்த கல­வ­ரங்­க­ளுக்கு மத்­தியில், பல­ரது புரு­வத்­தையும் உயரச் செய்­தது நாஞ்­சிலார் பய­ணித்த ‘ஆடி’ கார்தான்! டி.டி.வி. தின­கரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், தனது ஒவ்­வொரு பேட்­டி­யிலும் பா.ஜ.க. மீதும் எடப்­பாடி பழ­னிச்­சாமி, ஓ. பன்­னீர்­செல்வம் …

  16. ’ஜெயலலிதாவை பார்த்து பேசியதாக பொய்தான் சொன்னோம்’ - திண்டுக்கல் சீனிவாசன் பல்டி ’ஜெயலலிதாவை பார்த்து பேசியதாக பொய் சொன்னோம்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓபனாக பேசியுள்ளது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் இன்று இரவு நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அண்ணா, எம்.ஜி.ஆர் பற்றி சிறிதுநேரம் பேசிவிட்டு, விஷயத்துக்குள் வந்தார். '' டிடிவி தினகரன் ஆர்.கே நகரில் வாக்கு சேகரிக்கும்போது சசிகலா படத்தை போடாதது ஏன்?. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. எங்களை பார்க்க சசிகலா குடும்பம் …

  17. “தினகரன் அணியில் முதல்வரின் ஸ்லீப்பர் செல்ஸ்!” - பரபர பின்னணி #VikatanExclusive தினகரன் அணியிலிருக்கும் பெரும்பாலான எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், முதல்வரின் 'ஸ்லீப்பர் செல்ஸ்' எனத் தெரியவந்துள்ளதால், தினகரன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி ஒன்றிணைய 30 நாள்கள் காலஅவகாசம் கொடுத்திருந்தார் தினகரன். 'ஆகஸ்ட் புரட்சி' என்று காத்திருந்த தினகரனுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தின…

  18. ஜெயலலிதா நினைவிடத்தில் சீன தூதர் அஞ்சலி தமிழகம் வந்த சீன தூதர் தனது குடும்பத்தாருடன் திடீரென மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இந்தியாவுக்கான சீனதூதராக இருப்பவர் லோ சாஓஹுய். 1985-ல் ஆசியா வெளியுறவுத்துறை செயலராக பொறுப்பேற்ற இவர் 1989 ஆம் ஆண்டு வரை இந்த பதவியில் இருந்தார். 1989 முதல் 1993 வரை சீனத்தூதரகத்தின் இரண்டாவது செயலராக பதவி வகித்தார். பின்னர் 1993 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை வட அமெரிக்காவில் சீன வெளியுறவு அதிகாரியாக பணியாற்றினார். 96 ஆம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டுவரை அமெரிக்காவிற்கான சீனத்தூதரக அலுவலக இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றினார். 2006 முதல் 2016 வரை பல்வேறு நாடுக…

  19. உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவு தமிழக அரசுக்கு உப்பா, சர்க்கரையா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு யாருக்கு சாதகம், யாருக்குப் பாதகம் என்பது அரசியல் வட்டாரத்தில் விடைகாண்பதற்கு கடினமான விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. தகுத…

  20. கோபத்தில் ஆளுநர்: ஆட்சியை கலைக்க குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்? கோபத்தில் ஆளுநர்: ஆட்சியை கலைக்க குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்? தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் கட்சிகளால் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதனால் அவரது பெயர் கெட்டுவிட்டதாக அவர் நினைக்கிறார். இதற்கு காரணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அவர் மீது ஆளுநர் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதிமுக வட்டாரத்தில் ஆளுநரின் கோபம் தொடர்பாகவும், ஆட்சியை கலைக்க அவர் ஆலோசித்திருப…

  21. தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓராண்டாகத் தமிழகம்! கடந்த ஆண்டு இதே நாளில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைபாடு என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. பல ஊகங்களும் எழுந்தன. மக்கள் குழப்பத்தில் மூழ்கினார்கள். 2016 செப்டம்பர் 21-ல் சென்னை மெட்ரோ ரயில் சேவையைக் காணொலி மூலம் தொடங்கி வைத்ததே ஜெயலலிதா மக்கள் மேடையில் உயிரோடு தோன்றிய கடைசி காட்சி. அவர் மருத்துவமனையில் சேர்ந்தது தொடங்கி இன்று வரை, கடந்த ஓராண்டாகத் தமிழகமே தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறது! இத்துடன், கடந்த ஓராண்டாகவே மாறிவரும் நம்ப முடியாத அரசியல் காட்சிகளைக் கண்டு மக்கள் அருவ…

  22. 'கெஜ்ரிவாலைச் சந்தித்தது ஏன்?' - கமல்ஹாசன் விளக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சி, அ.தி.மு.க அமைச்சர்களுடன் மோதல், ட்விட்டர் கருத்துகள் என்று கமல் தற்போது செம ஆக்டிவாக இருக்கிறார். சமூக பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ட்விட்டர் மூலமாகக் கருத்து தெரிவித்து வருகிறார். இதனிடையே, கடந்த மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல் சந்தித்தார். தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ள அனிதாவின் மரணம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் - கமல்ஹாசன் சந்தித்துப் பேசினர். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் ஆலோசனையில்…

  23. செப்.21, 2016: ஜெயலலிதா பொதுவாழ்வின் கடைசி நாள் இன்று செப்டம்பர் 21, 2016 அன்று தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 200 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜெயலலிதா மறைந்து 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இன்றைய நாள் அவருக்கு மிக முக்கியமான நாளாகும். ஜெயலலிதா முதல்வராக தான் மறைவதற்கு முன் கடைசியாக கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி நடந்தது கடந்த ஆண்டு இதே நாளில்தான். செப் 21, 2016-ம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதற்கு பல மாதங்கள் முன்பே தனது உடல் நிலை காரணமாக செயல்…

  24. செந்தில்பாலாஜி உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் நடக்கும் வருமான வரித்துறை ரெய்டின் பின்னணி! கரூரில் உள்ள செந்தில்பாலாஜி உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், தொழிற்சாலைகள், மில்கள் என்று 13 இடங்களில் இதுவரை ரெய்டு நடந்து வருகிறது. டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, கர்நாடகாவின் குடகு ரிசார்ட்ஸில் தங்கியிருக்கிறார். அவர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமன ஆணை தருவதாகச் சொல்லி ஆறு கோடி வரை பணம் வசூலித்ததாக அவர்மீது புகார் படிக்கப்பட்டது. அந்தப் புகார் இப்போது விஸ்வரூபம் எடுக்க குடகு ரிஸார்ட்ஸில் இருக்கும் செந்தில் பாலாஜி எந்நேரம் வேண்டுமானாலும் கைது செய்…

  25. “நம்பி மோசம் போய்விட்டேன்!” - கொந்தளிக்கும் சசிகலா #VikatanExclusive முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து நடத்திய பொதுக்குழுவில், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியை ரத்துசெய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு, சசிகலா எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். தற்போது, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆகியோர்மீது சசிகலா கோபத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுக்குழுவில் அ.தி.மு.க வின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலாவைத் தேர்ந்தெடுத்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்தான், அவரை அந்தப் பதவியிலிருந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.