தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
நான்கு கட்சிகள் சேர்ந்து உருவான மக்கள் நலக் கூட்டணி உடைந்தது. ஓராண்டே ஒன்றாக இருந்த நிலையில், பல விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் டமாரானது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது என, அடம் பிடித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி, தனித்து வேட்பாளரை அறிவித்ததால், இந்த நிலை உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது, மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் - ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின; ஒருங்கிணைப் பாளராக, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ செயல் பட்டார்.இக்கூட்டணியில், தே.மு.தி.க., - த.மா.கா., ஆகிய கட்சிகள், பின்னர் இணைந்தன. ஆனால், தேர்தலில் இக்கூட்டணி படுதோல…
-
- 0 replies
- 250 views
-
-
சென்னை - விபத்தில் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் பலி! சென்னையைச் சேர்ந்த மிகப் பிரபலமான கார் ரேஸர் அஸ்வின் சுந்தர்(31). அஸ்வினும் அவர் மனைவியும் இன்று அதிகாலை சென்னை எம்.ஆர்.சி நகர் அருகே பி.எம்.டபிள்யூ Z4 காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதால் தீப்பிடித்துக்கொண்டது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இளம் வயதில் இருந்தே மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம்காட்டியவர் அஸ்வின். 2003ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை ரேஸ்களில் அஸ்வின் காட்டிய திறமை அபாரமானது. தொடர்ந்து சாம்பியன் பட்டங்கள் வென்று அசத்தியவர். அவருடைய மறைவு, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படம்:…
-
- 2 replies
- 950 views
-
-
பன்னீர் அணியினர் சுறுசுறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில், சசிகலா அக்காள் மகன் தினகரனை தோற்கடிக்கும் முனைப்பு டன், பன்னீர்செல்வம் அணியினர், ஓட்டுச் சாவடிக்கு, 14 பேர் என, 'பூத் கமிட்டி' அமைத்து, தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக துவக்கி உள்ளனர். ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வானது, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என, இரண்டாக பிளவுபட்டுள்ளது. இரு அணியினரும், தங்கள் செல்வாக்கை நிரூபிக்க, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், களம் இறங்குகின்றனர். சசிகலா அணி சார்பில், தினகரன்; பன்னீர்செல்வம் அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகின்றனர். இருவரும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என, தே…
-
- 0 replies
- 353 views
-
-
தினகரனுக்கு கோர்ட் 'கிடுக்கிப்பிடி': அன்னிய செலாவணி மோசடி வழக்கு சென்னை:அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜரான தினகரனின் கோரிக்கையை, மாஜிஸ்திரேட் ஏற்க மறுத்ததால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியரான, சுசீலா என்பவர் அளித்த உத்தரவாதம் அடிப்படையில், சென்னையில், பெயரளவில் செயல்பட்டு வந்த, பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனம், இந்தியன் வங்கியில் இருந்து, மூன்று கோடி ரூபாய் கடன் பெற்றது. இதில், 2.20 கோடி ரூபாயை எடுத்து, கோடநாடு எஸ்டேட் வாங்க, சசிகலா மற்றும் அவரது அக்கா மகன் தினகரன் பயன்படுத்தினர். அத்துடன், 'ஜெஜெ டிவி'க்கு, 'அப்லிங்க்' வசதி களை ஏற்படுத்து…
-
- 0 replies
- 292 views
-
-
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், பணம் பட்டுவாடாவை,தினகரன் கோஷ்டி இப்போதே துவங்கி விட்டது. முதற்கட்டமாக, 3,000 ரூபாய்; அடுத்த கட்டத்துக்கு, 2,000 ரூபாய்க்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. பட்டுவாடா செய்தவர்களை, பன்னீர் அணியினர் விரட்டிப் பிடிக்க முயன்ற போது, அவர்கள் தப்பியோடினர். மனு தாக்கல் துவங்கிய மறுநாளே, பட்டுவாடா துவங்கியது, தொகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், சசிகலா அணி சார்பில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் களம் இறங்கி உள்ளார். அவருக்கு எதிராக, பன்னீர் அணி சார்பில், அ.தி.மு.க., அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் போட்டியிடுகிறார். தி.மு.க., சார்பில், பகுதிச்…
-
- 0 replies
- 202 views
-
-
அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம்: மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் ஓ. பன்னீர்செலவ்வம்(இடது), வி.கே.சசிகலா( வலது). | கோப்புப் படம். அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரத்தில் மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மனு அளித்தனர். இந்தப் புகாருக்கு பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதில் அனுப்பினார். …
-
- 2 replies
- 346 views
-
-
தேனியில் ஓ.பி.எஸ். கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் தேனி அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தேனி: தேனி அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அருகே உள்ள கரும்பு காட்டுக்குள் புகுந்து தப்பி ஓடினர். மேலும் இந்த தாக்குதலில் ஓ.பி.எஸ் உட்பட கட்சி நிர்வாகிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வே…
-
- 0 replies
- 342 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளராக கங்கை அமரன் அறிவிப்பு சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. புதுடெல்லி: தேசிய கட்சியான பா.ஜனதா தமிழகத்தின் ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்த தவறுவது இல்லை. அவ்வகையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம்? என்று கடந்த சில தினங்களாக தீவிர பரிசீலனை நடந்தது. ஆர்.கே. நகர் தொகுதிக்கு தமிழக பா.ஜனதா தலைவ…
-
- 1 reply
- 385 views
-
-
“தினகரனா... யார் சார் அது...?” - ஆர்.கே.நகர் வல ஆச்சரியம்! #VikatanExclusive ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட ஆட்சி அதிகாரப் போட்டியின் காரணமாக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பதவிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக அரசியலுக்குள் நடைபெற்ற காய்நகர்த்தல்கள் இந்தியாவையே உற்றுப் பார்க்கவைத்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா சிறைசென்றுவிட, அவர் முன் மொழிந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்துள்ளார். கட்சிப் பொறுப்பிலோ, டி.டி.வி தினகரனை அ.தி.மு.க-வின் துணைப்பொதுச் செயலாளராக நியமித்துவிட்டுச் சென்றுள்ளார் சசிகலா. ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே.நகர் தொகுத…
-
- 1 reply
- 526 views
-
-
சசிகலா அனுமதியைப் பெறவில்லையா தினகரன்?! - மெளனம் கலைப்பாரா விவேக்?! #VikatanExclusive அ.தி.மு.கவின் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். 'பெங்களூரு சிறையில் ஒரு மாதமாக அடைபட்டிருக்கிறார் சசிகலா. அவருடைய ஒப்புதலுடன் இந்த அறிவிப்பை தினகரன் வெளியிடவில்லை. இந்த உண்மைகளை முழுதாக அறிந்தவர் விவேக் ஜெயராமன் மட்டும்தான். கடந்த இரண்டு நாட்களாக குடும்ப உறுப்பினர்களுக்குள் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை உறுதியானதைத் தொடர்ந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. சிறைக்குச் செல்…
-
- 0 replies
- 288 views
-
-
'நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்' : ஜெயலலிதாவின் மகன் என உரிமை கோரிய நபருக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை கோப்புப் படம்.| பி.ஜோதிராமலிங்கம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த மகன் என்று உரிமை கோரிய கிருஷ்ணமூர்த்தி என்பவரை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து அனுப்பியது. ஜெயலலிதாவுக்கும் தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவுக்கும் பிறந்தவர் என்று உரிமை கோரலுடன் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் கிருஷ்ணமூர்த்தி என்பவர். இவருடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி மகாதேவன் மிகவும் கோபமாக, “நான் இவரை நேரடியாக சிறைக்கு அனுப்பி …
-
- 0 replies
- 258 views
-
-
ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் ஒரு பார்வை! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை வெற்றிபெறச் செய்து, அரியாசனத்தில் அமரவைத்த தொகுதி, ஆர்.கே. நகர். அவரது மறைவால் அந்தத் தொகுதி காலியானதால், தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கக் காத்திருக்கிறது. இதனால், அங்கு பலமுனைப் போட்டி நிலவுகிறது. பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா போன்ற கட்சிகள் இதில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டன. ஆனாலும், பிற கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரசாரம் செய்துவருகின்றன. இந்த நிலையில், அந்தத் தொகுதியில் தற்போது களம் காண இருக்கும் வேட்பாளர்கள் பற்றிய ஒரு சிறுதொகுப்பு இதோ... டி.டி.வி.தினகரன் (அ.தி.மு.க.): இவர், அந்தக் கட்சியில் தற்போது துணைப் பொதுச்செயலாளராக உள்ளார்.…
-
- 0 replies
- 579 views
-
-
இலங்கைத் தமிழருக்காக 116 கோடி ரூபா http://tamil.adaderana.lk/news.php?nid=89253 தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்ப்பட்டுள்ளதோடு, அகதிகளின் நலனுக்காக 116 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 2017-18ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிச்சாமி அரசின் சார்பில் தாக்கல்செய்யப்படும் முதலாவது வரவு செலவு திட்டம் இதுவாகும். இந்த வரவு செலவு திட்ட உரையாற்றிய ஜெயகுமார், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனுக்காக 116 கோடி ரூபாய் ஒதுக்கீடு…
-
- 1 reply
- 405 views
-
-
கட்சிச் சின்னம் சர்ச்சைகளில் தேர்தல் ஆணையம் முடிவெடுப்பது எப்படி?- சில விவரங்கள் பொதுவாக ஒரே கட்சியாக இருந்து பிறகு உடைந்து இரு அணிகள் பிரிந்து அந்தக் கட்சியின் அசல் தேர்தல் சின்னத்துக்கு இருதரப்பினரும் உரிமை கோரும்போது தேர்தல் ஆணையம்தான் எந்த அணிக்கு கட்சியின் அசல் சின்னம் என்பதை முடிவெடுக்கும். அது அந்த முடிவை எப்படி எடுக்கிறது என்பது குறித்த சில விவரங்கள் இதோ: எந்த அதிகாரத்தின் கீழ் தேர்தல் ஆணையம் கட்சிச் சின்ன சர்ச்சைகளில் முடிவெடுக்கிறது? 1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் வழங்கல் உத்தரவு என்பதன்படி தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை அங்கீகரித்து சின்னங்களை ஒதுக்க வேண்டும். உத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
பட்ஜெட்டைப் புறக்கணித்த மூன்று அமைச்சர்கள்... அதிர்ச்சியில் சசிகலா அணி எம்எல்ஏ-க்கள்! #VikatanExclusive நிதிஅமைச்சர் ஜெயக்குமாரின் பட்ஜெட்டை சசிகலா அணியிலிருக்கும் மூன்று அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர். இது, அந்தத் தரப்பு எம்எல்ஏ-க்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையின் முதல் பட்ஜெட், இன்று சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு பட்ஜெட் 2017 ஐ தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, சசிகலாவை ஜெயக்குமார் புகழ்ந்து பேசியதற்கு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து, சுமார் 3 மணி நேரம் பட்ஜெட்டை தாக்கல்செய்தார் …
-
- 0 replies
- 784 views
-
-
மிஸ்டர் கழுகு: தினகரன் எதிரில் திகுதிகு மோதல்! அவசரமாக ஆபீஸுக்குள் நுழைந்த கழுகார், ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையைத் தேடி எடுத்தார். பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் அ.தி.முக ஆட்சிமன்றக் குழு மாற்றி அமைக்கப்பட்ட செய்தியைப் பார்த்தபடி நம்மிடம் பேச ஆரம்பித்தார். ‘‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பன்னீர் தனியாகப் பிரிந்து போனதால் கட்சியின் நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டனர். தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களைத் தேர்வு செய்வது அ.தி.மு.க-வின் ஆட்சிமன்றக் குழுதான். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில், ஆட்சிமன்றக் குழு மாற்றியமைக்கப்பட்டதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் மிஸ்ஸிங். இதனால் கட்சிக்குள் உள்குத்து தொடங்கியிருக்கிறது. ‘கவுண்டர…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டி சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் சசிகலா அணி தரப்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளரை தேர்வு செ…
-
- 0 replies
- 336 views
-
-
ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளராகக் களம் இறங்கும் டி.டி.வி.தினகரன் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் சென்னை ஆர்.கே நகர் வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் பெயரை குழு உறுப்பினர் செங்கோட்டையன் ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், ‘கட்சியினர் வற்புறுத்தலினால் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன். வரும் 23 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவேன். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றால் முதல்வராகும் எண்ணமில்லை. மு…
-
- 9 replies
- 2.2k views
-
-
தினகரனை நெருக்கும் 'பெரா' வழக்குகள்! - அமலாக்கத்துறையின் அடுத்த மூவ் #VikatanExclusive ஆர்.கே.நகர் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். கூடவே, அவர் மீதான அமலாக்கத்துறை வழக்குகளும் நெருக்கிக் கொண்டே வருகின்றன. 'பெரா வழக்குகள் நிலுவையில் இருப்பதால், டி.டி.வி தினகரனின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முன்வைத்திருக்கிறோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் என நம்புகிறோம்' என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக ஆட்சி மன்றக் குழுவை அமைத்தார் துணைப் பொதுச் ச…
-
- 0 replies
- 519 views
-
-
தி.மு.க.,வில் சாமானிய வேட்பாளர் : ஜெ., பாணியில் ஸ்டாலின் முடிவு ஆர்.கே.நகர் தொகுதியில், புதுமுக வேட்பாளரை நிறுத்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட, சிம்லா முத்துச்சோழன், காமராஜர் பேத்தி மயூரி, மருத கணேஷ் உட்பட, 17 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். சென்னை அறிவாலயத்தில், நேற்று முன்தினம் நேர்காணல் நடந்தது. அன்றே வேட்பாளர் அறிவிக்கப் படுவார் என, கட்சியினர் எதிர்பார்த் தனர். ஆனால், 'தி.மு.க., தலைவர் கருணாநிதி யிடம் ஆலோசித்து, வேட்பாளர் பெயர் அறிவிக் கப்படும்' என, ஸ்டாலின் கூறியிருந்தார்; நேற்றும் …
-
- 5 replies
- 1.1k views
-
-
ஜெயலலிதாவின் 100 கோடி ரூபாய் அபராதம் கட்டப் போவது யார்? “என் அத்தைக்குச் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் விதித்த 100 கோடி ரூபாய் அபராதத்தை நான் கட்டுவேன்” என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சொல்லிக் கொண்டிருக்கிறார். “ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் தண்டனையில் இருந்து விலக்குப் பெறுகிறார் என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது! அதனால், அந்த அபராதத் தொகையை அவர் செலுத்தத் தேவையில்லை” என்கின்றனர் சிலர். இதில் எது உண்மை? 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமா, அதை யார் செலுத்த வேண்டும், யாரிடம் செலுத்த வேண்டும், எவ்வளவு நாள்களுக்குள் செலுத்த வேண்டும், அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டனவா? சொத்துகளை எப்போது பறிமுதல் செய்வார்கள்? இவை தொடர்பாக, சட்ட நிபுணர்…
-
- 1 reply
- 1.3k views
-
-
65 வயதிற்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் வந்துள்ளது: முதல்வர் நடிகர் கமல்ஹாசன் ஒரு தனியார் டி.வி.க்கு பேட்டியளித்தபோது தமிழக அரசு, தனது விஷ்வரூபம் படம் விவகாரம் குறித்து பேசினார். தமிழ்நாட்டில் தற்போதுள்ள அரசு நான்காண்டுகளுக்கு தொடரக்கூடாது, பொதுத் தேர்தல் வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களையும் கூறினார்.இதற்கு அ.தி.மு.க. சார்பில் கண்டன குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கமல் கருத்துக்கு பதில் அளித்தார். இன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ‘‘65 வயதிற்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் வந்துள்ளது. விஸ்வரூபம் படம் வெளியாவதற்கு உதவி புரி…
-
- 0 replies
- 419 views
-
-
டில்லியில் இன்று நசீமை சந்திக்கிறார் பன்னீர்: பொது செயலர் விவகாரத்தில் இறுதி விசாரணை ஆர்.கே.நகர் தொகுதியில், நாளை மனு தாக்கல் துவங்க உள்ளதால், அ.தி.மு.க., பொதுச் செயல ராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்பதை, விரைவாக அறிவிக்கும்படி, தலைமை தேர்தல் கமிஷனரை நேரில் சந்தித்து வலியுறுத்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், இன்று டில்லி செல்கிறார். அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, தேர்தல் நடத்தி, கட்சி உறுப்பினர்களால், பொது செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், சசிகலா அவ்வாறு தேர்வு செய்யப்படவில்லை. ஐந்து ஆண்டுகள்மேலும், பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுபவர், கட்சியில் ஐந்து ஆண்டுகள் உறுப…
-
- 0 replies
- 256 views
-
-
ஜெ., மரண சர்ச்சையில் சி.பி.ஐ., விசாரணை : லோக்சபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல் புதுடில்லி: 'தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சர்ச்சை கள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தர விட வேண்டும்' என, லோக்சபாவில், அ.தி. மு.க., - எம்.பி., வலியுறுத்தினார். பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று லோக்சபாவில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான, அ.தி. மு.க., - எம்.பி., சுந்தரம் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனை யில், 75 நாட்கள் சிகிச்சை பெற்றார்.முதலில், நீர்ச் சத்து குறைவு, காய்ச்சல் என்றனர். ஆனால், திடீ ரென, அவருக்கு பல்வ…
-
- 0 replies
- 307 views
-
-
பொதுச்செயலர் பதவியை தக்க வைக்க சசி கும்பல் தந்திரம் அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு தேர்தல் வந்தால், வெற்றி பெற வசதியாக, புதிதாக, 20 லட்சம், அ.தி.மு.க., உறுப்பினர் அட்டைகள் அச்சிட, சசிகலா குடும்பத்தினர் உத்தரவிட்டுள்ளனர். சசிகலா, பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்க கோரி, பன்னீர் அணியினர், தேர்தல் கமிஷனில் மனு கொடுத்துள்ளனர். அதை ஏற்று, சசிகலா நியமனம் செல்லாது என, தேர்தல் கமிஷன் அறிவித்தால், பொதுச்செயலர் பதவிக்கு, தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். பொதுச்செயலர் பதவிக்கு,பன்னீர் அணியினர் போட்டியிடுவர். அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, கட்சியில் உள்ள…
-
- 0 replies
- 260 views
-