Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எங்கே போகும் பன்னீர் பாதை? பழைய பன்னீர்செல்வமாக அல்ல... புது பன்னீர்செல்வமாக வந்திருக்கிறார் ஓ.பி.எஸ். ‘மாண்புமிகு சின்னம்மா’ எனச் சொல்வதற்கு இத்தனை நாட்கள் தயங்காதவர்... அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்த தீர்மானத்தோடு சென்று, அவருடைய காலில் விழுந்து பணிந்தவர்... அவருக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவர்... எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் அந்தப் பதவிக்கு சசிகலா பெயரை முன்மொழிந்தவர்... இத்தனை நாட்கள் கழித்து ஏன் கலகம் செய்கிறார்? அவரைப் பின்னால் இருந்து இயக்குவது யார்? அவரோடு இருப்பவர்கள் எல்லோரும் அப்பழுக்கு அற்றவர்களா? கேள்விகள் பல எழுந்தாலும், அ.தி.மு.க-வின் எதிர்காலம் பன்னீரோடு பிணைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ‘அ.தி.மு.க…

  2. 9 நாட்கள் ரிசார்ட் வாசம் முடிந்து திரும்பும் எம்.எல்.ஏக்களுக்கு தமிழகக் குடிமகனின் 11 கேள்விகள்! #VikatanExclusive ‘ஓட்டுப் போட்டாச்சுல்ல? அதோட உங்க வேலை முடிஞ்சது’ என்கிற தோரணையில்தான் இருக்கிறார்கள் எம்.எல்.ஏக்கள். 9-வது நாளாக கூவத்தூரில் குடிகொண்டிருந்தார்கள். அங்கே என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், அவர்கள் எங்கே இருந்துகொண்டு என்ன செய்துகொண்டிருக்க வேண்டியவர்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் சிந்தித்துக் கொண்டுதான் இருப்பான். இதோ.. இன்னும் கொஞ்ச நேரத்தில் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து வெளியேறப் போகிறார்கள். ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்திருப்பதால், வேறு வழியில்லை. வந்துதான் ஆகவேண்டும். …

  3. பிப்.17-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் கோப்புப் படம்.| க.ஸ்ரீபரத். தமிழக முதல்வராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடத்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து பிற 30 அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஆளுநர் அவர்களுக்கு ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளனர். இந்த நிலையில் பல்வேறு திருப்பங்கள் இன்றும் (வெள்ளிக்க…

  4. திட்டித் தீர்த்த சென்னை மக்கள் - தப்பித்து ஓடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் (வீடியோ) நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள, கூவத்தூரிலிருந்து புறப்பட்ட எம்.எல்.ஏக்களை பொதுமக்கள் ஏகத்துக்கும் திட்டித் தீர்த்து அவர்களை ஓட விட்டனர். சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கியதால், அவர் பக்கம் எம்.எல்.ஏக்கள் சென்று விடக்கூடாது என, கூவத்தூர் விடுதியில் அவர்களை சசிகலா தரப்பு அடைத்து வைத்தனர். அங்கிருந்து அவர்கள் வெளியேறவும், சுதந்திரமாக முடிவெடுக்கவும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம் என ஊடகங்களுக்கு அவர்கள் பேட்டியும் கொடுத்தனர். சசிகலாவை எதிர்த்து நிற்கும் ஓ.பி.எஸ்-ற்கு இவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என தமிழக மக்கள் கருத்து தெரிவி…

  5. இன்று மாலை எடப்பாடி பதவியேற்பு சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1712038 15 நாளில் பெரும்பான்மையை நிருபிக்க எடப்பாடிக்கு உத்தரவு சென்னை: அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் 15 நாளில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவும் கவர்னர் உத்தரவிட்டுள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1712036 முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி! தமிழகத்தில் ஆட்சியமைக்கு…

  6. சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. சட்டத்துக்குப் புறம்பாக, சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி. மைத்ரேயன் தலைமையில் சென்ற எம்.பி.க்கள் இந்தப் புகாரை அளித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் புகார் தொடர்பாக சசிகலாவுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, வருகின்ற 28-ம் தேதிக்குள், சசிகலா பதிலளிக்க தேர்தல் …

  7. கேசட் கடை முதல் கைதி எண் 9234 வரை... சசிகலா வாழ்க்கை சொல்லும் பாடம்! தன் வாழ்நாளுக்குள் உலகத்தையே வெல்ல ஆசைப்பட்ட அலெக்ஸாண்டர், இறந்த பிறகு அவர் எப்படி அடக்கம் செய்யப்பட்டார் என்பது உலகத்துக்கே தெரியும். இப்போது, மாவீரன் என்ற பெயர்தான் நிலைத்து நிற்கிறது. 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ இல்லையென்றால் துயரம்தான் நம்மைத் தேடி வந்து ஆட்கொள்ளும். அதற்குச் சமீபத்திய உதாரணம் சசிகலா. சசிகலாவின் தந்தை ஒரு சாதாரண கம்பவுண்டர். திருத்துறைப்பூண்டியில் வெறும் 7 ஏக்கர் நிலம் மட்டுமே சொந்தமாக இருந்தது. இன்று தமிழகத்தில் தொட்ட இடமெல்லாம் சசியினுடையதாக இருக்கிறது. அவற்றில் பல மிரட்டி வாங்கப்பட்டவை. சாதாரண மனிதரில் இருந்து கங்கை அமரன் போன்ற பிரபலங்களும…

  8. கூவத்தூர் ரிசார்ட்டில் இப்போது என்ன நடக்கிறது? - லைவ் ரிப்போர்ட் #VikatanExclusive கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டுக்குள் தங்கியிருக்கும் சசிகலா அணி எம்.எல்.ஏ.க்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள், அவர்களின் மனநிலை எப்படி உள்ளது என்று விசாரிக்க அங்கு பயணித்தோம். அப்போது கிடைத்த தகவல்கள் ருசிகரமானது. 'அல்வா'வுக்கு பெயர் பெற்ற ஊரிலிருந்து சென்னை வந்திருக்கும் எம்.எல்.ஏ. அவர். ஏதோ பிக்னிக் ஸ்பார்ட்டுக்கு வந்ததைப் போல ரிசார்ட்டுக்குள் செல்ஃபி எடுத்துக் கொண்டு இருந்தார். அரசியல் பரபரப்பும், தொகுதி மக்கள் குறித்த எந்தவித அக்கறையும் அந்த எம்.எல்.ஏ.க்கு இல்லை. 'மகிழ்ச்சி' என்று ரஜினியின் கபாலி டயலாக்கை சக ஆதரவாளர்களுடன் சொல்லிக் கொண்டு இருந்தார். அடுத்து…

  9. முதல்வர் பழனிசாமி அணியில் இன்னொரு விக்கெட் வீழ்ந்தது! சட்டசபையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் கூறியுள்ளது கட்சித் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே அதிகாரப்போட்டி நடந்து வரும் நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து முதல்வர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். மேலும், பதின…

  10. தமிழகத்தைப் பீடித்திருக்கும் 24x7 பரபரப்பு நோய் எப்போது நீங்கும்? பொதுவாக, ஊடகவியல் வகுப்பு எடுக்கும் பேராசிரியர்கள் மாணவர்களுக்குச் சொல்லும் முதல் பாடமாக இது அமையும். “எது செய்தி? மனிதனை நாய் கடித்தால் அது செய்தி அல்ல; மாறாக நாயை மனிதன் கடித்தால் அதுவே செய்தி!” ஆனால், ஒரு நல்ல ஊடகர், வணிக ஊடகவியல் புத்தி கட்டமைத்த ‘மனிதனை நாய் கடித்தால் அது செய்தி அல்ல’ எனும் மலிவான பரபரப்புச் செய்தி இலக்கணத்தை உடைத்தெறிவார். ஏனென்றால், ஆண்டுக்கு 20,000 பேர் வெறிவிலங்குக்கடியால் உயிரிழக்கும் ஒரு நாட்டில், அதுவும் ஒரு முக்கியமான செய்தி. ஆகையால், “கார்களில் பயணிப்பவர்களுக்குத் தெரு நாய்களின் ஆபத்து புரியாது; ஆனால் ஐயா, இதுவும் ஒரு மு…

  11. அ.தி.மு.க.விலிருந்து சசிகலா, டி.டி.வி.தினகரனை நீக்குகிறேன்! மதுசூதனன் அதிரடி சசிகலா, டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்ற பிறகு, டி.டி.வி.தினகரன், டாக்டர். வெங்கேடஷ் ஆகியோர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்பட்டனர். குறிப்பாக, டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சசிகலா, டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கேடஷ் ஆகியோரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். அவைத் தலைவர் என்ற அடிப்படையில், அவர்களை அ.தி.மு.க. சட்ட விதிகளுக்குட்பட்டு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்த…

  12. ‘ஜெயில் கதவை திற... எங்க அம்மாவைப் பாக்கணும்..!’ பரப்பன அக்ரஹாரவை பரபரப்பாக்கிய பெண் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சிறை வளாகம் பரபரப்பு மிகுந்து காட்சியளிக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி சுதாகரன் ஆகிய 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது சிறை வளாகம் முழுக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வந்தது…

  13. சசிகலாவின் மூன்று நிபந்தனைகள்; முதல்வர் பழனிச்சாமி கலக்கம் சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கு, உள்துறை, போலீஸ், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நிதி நிர்வாகம், பொதுப் பணி, நெடுஞ்சாலை என, முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆலோசனை: எடப்பாடி பழனிச்சாமியை கவர்னர் பதவியேற்க அழைப்பு விடுத்ததும், அவர், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரனுடன், அமைச்சரவையில் இடம் பெற வேண்டியவர்கள் குறித்து, ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் பொதுச் செயலர் கொடுத்திரு…

  14. கூவத்தூரில் 9 நாட்கள்! - ஒரு எம்.எல்.ஏ-வின் வாக்குமூலம் #Tnpolitics #VikatanExclusive சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் இருவருக்குமிடையே ஏற்பட்ட பதவி மோதலில், எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள ’கோல்டன் பே’ நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களில், மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ சரவணன் மட்டும் தாங்கள் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மாறுவேடத்தில் வந்ததாகவும் கூறி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்கள் கூட்டணியில் சேர்ந்துகொண்டார். இதற்கு அடுத்து, கூவத்தூரைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாகவும், சசிகலா தரப்பு தங்களை ஆட்சி அமைக்க உரிமை கோரியும் ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை விட…

  15. பெங்களூரு செல்லவில்லை; கூவத்தூர் செல்கிறேன்! முதல்வர் பழனிச்சாமி பேட்டி அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவைச் சந்திக்க பெங்களூரு சிறைக்குச் செல்லவில்லை, கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களைச் சந்திக்கச் செல்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே அதிகாரப்போட்டி நடந்துவரும் நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அ.தி.மு.க சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆட்சியமைக்க அழைத்ததோடு, பதினைந்து நாள்களில் பெரும…

  16. பெங்களூருவில் சசிகலா தரப்பு வாகனத்தை தாக்கியவர்கள் யார்? - பத்திரிகையாளர்களா? பன்னீர்செல்வம் ஆதரவாளர்களா? அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா. கோப்புப்படம்: பிடிஐ சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைய வந்தனர். சிறை வளாகத்தை நெருங்கும் போது சசிகலாவுடன் வந்த வாகனங்களை மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். இதில் அதிமுக நிர்வாகிகள், சசிகலாவின் உற வினர்கள் வந்த 7 வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. ஓட்டுநர் உட்பட 3 பேர் காயமடைந் தனர். இதையடுத்து போலீஸார் நடத்திய தடியடியில் பத்திரிகை யாளர…

  17. கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்க வைப்பு? - சமாதான முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள் கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டனர் | கோப்பு படம்: ம.பிரபு. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் செங்கோட்டை யன் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா வில் கலந்து கொள்ளாமல் கூவத்தூர் விடுதியிலேயே தங்கியதாக அதிமுக வட்டாரங் களில் கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக் கம் அடுத்த கூவத்தூரில் கடற் கரையோரம் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா தரப்பின ரால் கடந்த 8 நாட்களாக த…

  18. எம்.எல்.ஏ.,க்களுக்கு வெளி மாநில குண்டர்கள் பாதுகாப்பு? கூவத்தூர்: கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர் அணிக்கு தப்பி செல்வதை தடுக்க சசி தரப்பில் இருந்து வெளி மாநில குண்டர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக ஏற்பட்ட அரசியல் பரபரப்பு சூழ்நிலையில் முக்கிய திருப்பமாக நேற்று மாலை சசிகலா தரப்பு அ.தி.மு.க., சார்பில் இடைப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். கவர்னர் வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச…

  19. பெங்களூரு:கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்ய அப்பீல் மனு மீதான விசாரணை, நேற்று முதல் விறுவிறுப்பாக துவங்கியது. 'மேல்முறையீட்டு மனுவில் வாதிட, டில்லி சென்று மூத்த வழக்கறிஞரை அழைத்து வர வேண்டும் என்பதால், விசாரணையை, இரண்டு நாள் தள்ளி வைக்க வேண்டும்' என, ஜெயலலிதா வழக்கறிஞர் குமார் கோரிக்கையை, கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசுவாமி நிராகரித்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தன. நீதிபதி குமாரசுவாமி, காலை, 11:00 மணியளவில், தன் இருக்கையில் அமர்ந்தார்.அப்போது, நீதிமன்ற ஹாலுக…

  20. ஓ.பி.எஸ் மற்றும் ஹெச்.ராஜா அவசர சந்திப்பு! தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். அத்துடன் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைவரும் பதவியேற்றுள்ளனர். ஆளுநர் வித்யாசாகர்ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கிடையே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதில் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்கிடையே பன்னீர் செல்வத்தை பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். வரும் சனிக்கிழமை சட்டசபை கூடும் நிலையில் இந்த சந்திப்பானது முக்கியமானதாக கருத்தப்படுகிறது. http://www.vikatan.com/news/politics/81073-emergency-m…

  21. தினகரன், வெங்கடேஷ் மீதான வழக்குகள் விரைந்து முடிக்க மத்திய அரசு உத்தரவு ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் அதிகார மையங்களாக உருவெடுத்துள்ள, சசிகலா உறவினர்கள் தினகரன், வெங்கடேஷ் மீதான வழக்கு விசாரணை வேகம் பெறுகிறது. கிடப்பில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு, அமலாக்கத் துறைக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி காலங்களில், சசிகலாவுடன் சேர்ந்து, அவரது உறவினர்கள், அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டனர். கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்குடன் வலம் வந்தனர். அவர்களின் ஆட்டம் எல்லை மீறியதும், 2011ல், அவர்களை, ஜெயலலிதா ஓரங்கட்டினார். சசிகலாவை தவிர, அவரின் மற்ற உறவின…

  22. தமிழகத்தில் மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சி நேற்று துவங்கியது. அதன் 'ரப்பர் ஸ்டாம்ப்' முதல்வராக இடைப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். சசி சொந்தங்கள் போடும் உத்தரவுகளை ஏற்று, தலையாட்டி பொம்மை களாக செயல்பட 30 மந்திரிகளும் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். ஜெயலலிதாவின் திடீர் மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வம் புதிய முதல்வராக பொறுப்பேற் றார். அவரது ஆட்சியில் அரசு நிர்வாகம் வேகமாக செயல்பட துவங்கியது. மத்திய - மாநில உறவும் மேம்பட ஆரம்பித்தது. இதற்கிடையில், 'வர்தா' புயல் நிவாரண பணிகள், ஜல்லிக்கட்டு போராட்டம், அதை முறியடிக்க அவசர சட்டம், கிருஷ்ணா நதி நீருக்காக, ஆந்திர அரசுடன் நடத்திய பேச்சு என, பன்னீர் ஆட்சியின் பலன்கள், மக்களை சென்றடைந்…

  23. பிப்.16-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் ஆளுநர் மாளிகை | படம்: ம.பிரபு. 'இரும்புக் கோட்டை, ராணுவக் கட்டுப்பாடு, குடும்ப அரசியலுக்கு வாய்ப்பில்லை'- இப்படியெல்லாம் அறியப்பட்டதுதான் அதிமுக. ஆனால், இன்று அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் சசிகலாவின் குடும்பத்தினர் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். ஓபிஎஸ் தலைமையில் ஓரணியினர் பிரிந்திருக்கின்றனர். சசிகலா தலைமையை ஏற்றுப் பெரும்பாலான எம்எல்ஏக்கள் கூவத்தூரிலேயே காத்திருக்கின்றனர். ஆளுநரோ, எத்தனை பேர் எத்தனை முறை சென்று பார்த்தாலும் எந்த முடிவும் அறிவிக்காமல் இருக்கிறார். இதுவரை அவரது மவுனத்துக்கு சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு காரணமாகக் கூறப்பட்டது.…

  24. ஓ.பன்னீர்செல்வம் வீடு அருகே பதற்றம்! சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றதால் சிறிது நேரம் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் புதிய முதல்வராக இன்று பதவி ஏற்றத்தைத் தொடர்ந்து, சென்னை கீனின்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் கூடியிருந்த, அவரது ஆதரவாளர்களை, அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மிரட்டியதாகவும், கற்களை வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவரும், போலீசார் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அங்கு பாதுகாப்பிற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.