தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
மிஸ்டர் கழுகு: சசி சாம்ராஜ்யம் சரிந்தது! - அ.தி.மு.க நெக்ஸ்ட்? ‘‘ஆமாம்! ஆமாம்! அப்படித்தான் சொல்கிறார்கள்...’’ என்று யாரிடமோ போனில் பேசியபடி பரபரப்பாக எதிரில் வந்து தரிசனம் தந்தார் கழுகார். ‘சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு’ குறித்த நமது நிருபர்களின் கட்டுரையைப் படித்தவர், ‘‘ஒன்பதே நாட்களில் தங்கள் கனவு சிதையும், சாம்ராஜ்யம் சரியும் என சசிகலா எதிர்பார்த்திருக்க மாட்டார்’’ என்றார். ‘‘கடந்த 5-ம் தேதி சட்டமன்ற அ.தி.மு.க தலைவராகத் தேர்வான நிமிடத்திலிருந்தே அவரிடம் உற்சாகம் கரை புரண்டு ஓடியதே’’ என்றோம். ‘‘ஆமாம்! ஆனால் அவர் முழுமனதாக இந்த முடிவில் இல்லை என்கிறார்கள். மன்னார்குடி குடும்பத்தினர் அவசரம் காட்டியதன் விளைவு இது. ‘நாம் அமைதியாக இருந்திருந்தால்…
-
- 0 replies
- 1.6k views
-
-
பிப்.14-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் வி.கே.சசிகலா | கோப்புப் படம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை ஆதரவு தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள்…
-
- 16 replies
- 1.1k views
-
-
போயஸ் இல்லத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்குக் கிளம்புகிறாரா சசி? கூவத்தூரில் இருந்து கிளம்பி, போயஸ்கார்டன் வந்த சசிகலா சற்றுமுன் 11.15 மணிக்கு போயஸ் இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பின், அங்கு குழுமியிருந்த தன் கட்சித் தொண்டர்களுக்கு தைரியமாக இருக்கச்சொல்லி பேட்டி கொடுத்தார்,சசி. அவரைச்சுற்றி இருந்த பெண்தொண்டர்கள் சசியைப்பார்த்து அழுதவண்ணம் இருந்தனர். பேட்டி கொடுத்த பின், உடனடியாக வீட்டுக்குள் சென்ற சசி, இன்று அதிகாலை 4 மணி அளவில் ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்ல இருக்கிறார். அங்கு செல்லும் சசிகலா ஜெயலலிதாவின் சமாதியில் சிறிதுநேரம் பிரார்த்தனைச் செய்துவிட்டு, காரிலேயே பெங்களூரு நீதிமன்றத்துக்குச் செல்ல இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள்…
-
- 1 reply
- 369 views
-
-
அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு! அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூவத்தூரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வரவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/80746-edappadi-palanisamy-selected-as-admk--le…
-
- 7 replies
- 1.8k views
-
-
முதல்வரை துரோகியாக்கிய துணை சபாநாயகர் ''பன்னீர்செல்வம் ஒரு துரோகி; கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரைப் பற்றி, இனி பேசி பயனில்லை,'' என, கூறியிருப்பதன் மூலம், அனைத்து, எம்.பி.,க்களும் முகாம் மாறினாலும், தம்பிதுரை மட்டும் மாறமாட்டார் என, தெரிய வந்துள்ளது. சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என, தீவிரமாகவும், வெளிப்படையாகவும் கூறி வந்தவர், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை. முதல்வர் பன்னீர்செல்வத்துடன் பிரச்னை ஏற்பட்ட பின், தனக்கு முக்கிய பதவி கிடைக்குமென, தம்பிதுரை நம்பினார். ஆனால், கட்சி நிர்வாகிகளை சசிகலா மாற்றியமைத்த போதும், தம்பிதுரையை கண்டு கொள்ளவில்லை. பொருளாளர், அவைத் தலைவர் என, முக்கிய பதவிகளில…
-
- 0 replies
- 649 views
-
-
ரிசார்ட்டில் இருந்து மாயமான எம்.எல்.ஏ.க்கள்! வெலவெலத்த சசிகலா #VikatanExclusive #OPSvsSasikala ரிசார்ட்டில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சசிகலா மற்றும் அவரது தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை ரிசார்ட் முழுவதும் சசிகலாவின் ஆதரவாளர்கள் தேடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசலால் பொதுச் செயலாளர் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருஅதிகார மையங்கள் உருவாகின. இதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதன்பிறகு கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள், கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களிடம் சசிகலா, ஆலோசனையில் ஈடுபட்ட…
-
- 0 replies
- 534 views
-
-
‘பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்!’ - பா.ஜ.கவுக்கு தூது அனுப்பிய தி.மு.க. தமிழகம் அரசியல் களம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் கலவர முகத்தோடு அமர்ந்துள்ளனர் ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள். 'அடுத்து என்ன செய்வது?' என்ற ஆலோசனையில் இருக்கிறார் சசிகலா. 'பா.ஜ.க மேலிட நிர்வாகிகளிடம் தி.மு.க தரப்பில் இருந்து சிலர் தூது சென்றுள்ளனர். தி.மு.க தரப்பில் இருந்து சில வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியை ஏற்ற பிறகு, முதலமைச்சர் பதவியை நோக்கி காய்களை நகர்த்தினார் சசிகலா. 'அதிகாரத்திற்குள் நீங்கள் வர வேண்டும் என்று விரும்பினால், உங்கள் அதிகார…
-
- 0 replies
- 492 views
-
-
உச்சமன்ற தீர்ப்பு பற்றி திருமாவளவன்
-
- 0 replies
- 291 views
-
-
கூவத்தூர் ரிசார்ட்டில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு! சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் கூவத்தூர் ரிசார்ட்டில் உள்ள பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதோடு, கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வரும் நிலையில், கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டனர். இதில், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் நான்கு பேர் இருந்துள்ளனர். …
-
- 0 replies
- 443 views
-
-
சசிகலா குற்றவாளி..! இனி தமிழக ஆளுநர் என்ன செய்யப் போகிறார்...? #OPSVsSasikala #DACase ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்திருந்தார். இந்த சூழலில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது தமிழகத்தின் அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது. இப்போதைக்கு கவர்னர் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்னொருபுறம் முதல்வர் பன்னீர்செல்வம் தமது ராஜினாமா கடித த்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாகச் சொல்லி இருக்கிறார். எனவே, முதலில் பன்னீர்செல்வத்தை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் சொல்லலாம். ஓ.பி.எஸ் பெரும…
-
- 0 replies
- 343 views
-
-
முதல்வர் ஆகிறாரா செங்கோட்டையன்? அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ' நேற்று முழுவதும் மிகுந்த குழப்பத்துடன் இருந்தார் சசிகலா. எம்.எல்.ஏக்கள் மத்தியில் பேசும்போதும், அவர் முகத்தில் பெரிதாக எந்த உற்சாகமும் இல்லை' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா அளித்த தீர்ப்பை இன்று உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். தீர்ப்பு நாளில் எதேனும் அசம்பாவிதம் நடக்கலாம் என்பதால், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். இன்று காலை தீர்ப்பு வெளியான நேரத்தில், கூவத்தூரில் கட்சி நிர்வ…
-
- 0 replies
- 303 views
-
-
சசிகலா முகாமிலிருந்து பன்னீர்செல்வத்துக்கு உளவு சொல்லும் எம்.எல்.ஏ.க்கள்! - அதிர்ச்சியில் மன்னார்குடி தரப்பு #OpsVsSasikala #VikatanExclusive சசிகலா முகாமில் இருந்து கொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவலை சொல்லும் உளவாளி எம்.எல்.ஏ.க்கள் குறித்த தகவல், மன்னார்குடி குடும்பத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் காரணமாக சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் தங்கி உள்ளனர். கடந்த மூன்று தினங்களாக அங்குள்ள எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா ஆலோசனை நடத்தினார். கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு த…
-
- 0 replies
- 332 views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு : முன்னெச்சரிக்கையாக கூவத்தூரில் போலீஸ் குவிப்பு #OPSvsSasikala #LiveUpdates காலை: 9.00: வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன், மத்திய மண்டல ஐ.ஜி. தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை: 9.00: அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸார் குவிப்பு காலை: 8.45: கடற்கரை சாலை பலத்த பாதுகாப்பு! பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை- புதுச்சேரி அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. பிற வாகனங்கள் சோதனைக்குப் பிறகு திருப்பி அனுப்பப்படுகின்றன. காலை: 8.00; முன்னெச்சரிக்கையாக கூவத்தூரில் போலீஸ் குவிப்பு …
-
- 1 reply
- 414 views
-
-
முதல்வர் பட்டியலில் மூன்று பெயர்! கூவத்தூரில் அடுத்த அத்தியாயம்..!.! #OpsVsSasikala #DACase #JudgementDay சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் நாளை வழங்கப்படுகிறது. தமிழக முதல்வராகும் எண்ணத்தில் இருக்கும் சசிகலாவுக்கும், அவரை நம்பிக் கொண்டிருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் இந்தத் தீர்ப்பின் முடிவைப் பொறுத்தே எதிர்காலம் அமைய இருக்கிறது...! தமிழக அரசியல் பரபரப்பைக் கூட்டும் விதமாக எதிர்க்கட்சியான தி.மு.க-வும் அவசர, அவசரமாக கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது. கடந்த 5-ம் தேதி, அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா பெயரை, முன்மொழிந்தார் ஓ.பன்னீர்செல்வம். கூடவே, சசிகலா ம…
-
- 0 replies
- 299 views
-
-
சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு காலை 10.35 மணிக்கு முடிவு தெரியும் | யாரும் நேரில் ஆஜராக தேவையில்லை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.66 கோடி சொத்துக் குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதா…
-
- 1 reply
- 332 views
-
-
பன்னீர் செல்வத்தின் ‛ஆபரேஷன் கூவத்தூர்' சென்னை: சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை அதிகரிக்க பன்னீர் தரப்பில் அதிரடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பொங்கிய பன்னீர்: கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற, சசிகலா செய்த சதியை, கடந்த 7ம் தேதி ஜெயலலிதா சமாதி முன், முதல்வர் பன்னீர்செல்வம் போட்டுடைத்தார். அவரிடம் இருந்து, முதல்வர் பதவியை பறிக்க, கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதையும், அவர் அம்பலப்படுத்தினார். அவருக்கு ஆதரவாக அ.தி.முக., தொண்டர்களும், தமிழக மக்களும் அணி வகுத்துள்ளனர். இதுவரை ஓ.பி.எஸ்., அணியில…
-
- 0 replies
- 271 views
-
-
எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள 'உல்லாச சிறை'யில் நடப்பதென்ன? சென்னை அருகே கூவத்துாரில் உள்ள சொகுசு விடுதியில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். விடுதியின் உள்ளே நடந்த நிகழ்வுகள் குறித்து, கொங்கு மண்டல எம்.எல்.ஏ., ஒருவர், மனக்குமுறலுடன் நேற்று கூறியதாவது: இப்படியொரு இழிநிலை வரும் என, நினைக்கவில்லை. அடிமைகள் போன்று ஆள்பிடித்து வாகனத்தில் அழைத்துச் சென்று, ஆடம்பர விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். மனைவி, மக்களிடம் பேசக்கூட அனுமதி கிடையாது; இதை என்னவென்று சொல்வது? 'எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என்ற உத்தரவு, போயஸ் கார்டனில் …
-
- 2 replies
- 561 views
-
-
ஓ.பன்னீர் செல்வத்துக்கு மதுரை தெற்கு எம்.எல்.ஏ. சரவணன் திடீர் ஆதரவு தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் இன்று ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. சென்னை: தமிழ்நாட்டின் ஆளும்கட்சியான அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா மற்றும் முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சசிகலா தனக்கு 120-க்கு…
-
- 2 replies
- 524 views
-
-
கடல் வழியே படகில் தப்ப முடியுமா? அடைபட்ட எம்.எல்.ஏ.,க்கள் முயற்சி தீவுக்குள் அமைந்துள்ள, சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்கள், படகு மூலம் தப்ப முடியுமா என, ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. கல்பாக்கத்தை அடுத்துள்ள கூவத்துார், 'கோல்டன் பே' விடுதி, கடலை ஒட்டிய உப்பங்கழி, முகத்துவாரத்தை ஒட்டி உள்ளது. இதில், 34 அறைகள் மட்டுமே உள்ளன. இங்கு, அ.தி.மு.க.,வின், 100 எம்.எல்.ஏ.,க்கள், ஒரு அறைக்கு, மூன்று பேர் வீதம், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முதல் இரு நாட்களில், எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வத்துடன் நடனம்ஆடிய காட்சிகள், கேமராக்களில் ரகசியமாக படமாக்கப்பட்டுள்ளதாக, கூறப்படு…
-
- 2 replies
- 457 views
-
-
பிப்.13-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுக உட்கட்சி குழப்பம் உக்கிரமடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், இன்றும் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்துவருகின்றன. அவற்றின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க) 6.55 pm: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர…
-
- 5 replies
- 1.2k views
-
-
பன்னீர்செல்வம் வீட்டுக்கு நடிகர் மனோபாலாவுடன் சென்ற அனுபவம்: ஒரு சுவாரசிய பதிவு! தமிழகத்தில் புதிய அரசை அமைப்பதில் அதிமுகவின் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும், பொறுப்பு முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சில தினங்களுக்கு முன்பு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகளுடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் வி.கே.சசிகலா. ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரைச் சந்தித்து, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் பெரும்பன்பான்மையை நிரூபிக்க அனும…
-
- 1 reply
- 470 views
-
-
சொகுசு சிறையில் இருந்து விடுதலை எப்போ? : அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தவிப்பு சொகுசு விடுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தங்களை விடுவிக்க, யாராவது நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என்ற தவிப்பில் உள்ளனர். சசி தரப்பினர், தங்களது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை, காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, கூவத்துார் மற்றும் பூந்தண்டலத்தில், தனியார் சொகுசு விடுதிகளில் தங்க வைத்துள்ளனர். அவர்கள், அங்கிருந்து வெளியேறாமல் இருக்க, பாதுகாப்பு பணியில், குண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குண்டர்களின் கெடுபிடி ஒவ்வொரு, எம்.எல்.ஏ.,வுக்கும், …
-
- 0 replies
- 334 views
-
-
எத்தனை எம்.எல்.ஏ.,க்கள்? : சசி பேச்சால் குழப்பம் சசிகலா பேசும் போது, 129 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக தெரிவித்தது, அனைத்து தரப்பினரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் தற்போது, அ.தி.மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில் ஆறு பேர், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பன்னீர் உட்பட ஏழு பேர், சசிகலாவுக்கு எதிராக உள்ளனர். நட்ராஜ் நடுநிலை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., நட்ராஜ், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி ஆகியோர் நடுநிலை வகிக்கின்றனர்; மீதம், 126 எம்.எ…
-
- 0 replies
- 320 views
-
-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் ஆசையில் உள்ள, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட், இன்று காலை, 10:30 மணிக்கு தீர்ப்பு அளிக்க உள்ளது. 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கின் தீர்ப்பு, சசிகலாவுக்கு சிறையா; முதல்வர் பதவியா என்பதை தீர்மானிக்க உள்ளதால், மன்னார்குடி கூட்டமும், அவருக்கு ஜால்ரா அடிக்கும் அமைச்சர்களும் பீதியில் உறைந்துள்ளனர். இதற்கிடையில், கூவத்துாரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் ஓடிவிடக் கூடாது என்பதற்காக, சசிகலா நேற்று அங்கேயே தங்கினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா, அவரது அண்ணி இளவரசி, ஜெ.,யின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர், வரு…
-
- 1 reply
- 551 views
-
-
சசிகலாவை வீழ்த்த நினைத்த அ.தி.மு.க.வின் ராஜகுரு வீழ்ந்த கதை! சசிகலாவை வீழ்த்த நினைத்து அதில் அ.தி.மு.க.வின் ராஜகுருவாக இருந்த தம்பிதுரை வீழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலில் தமிழகம் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா தலைமையிலும் கட்சியினர் அணிவகுத்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருவதால் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்று சசிகலா, எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேசினார். அடுத்து போயஸ் கார்டனில் இன்று தன்னுடைய 33 ஆண்டுகால வாழ்க்கை வரலாறை தொண்டர்களிடம் விளக்கமாக தெரிவித்தார் சசிகலா. அப்போது 'தனக்கு முதல்வர…
-
- 1 reply
- 1.1k views
-