தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
மணல் யாருக்கு? - மன்னார்குடி குடும்பத்துக்குள் ஜல்லிக்கட்டு! மண்ணைப் பொன்னாக்கும் வாய்ப்பை யாருக்கு வழங்கலாம் என்பதற்கான பரீட்சையை நடத்திக்கொண்டிருக்கிறது மன்னார்குடி. சசிகலாவின் உறவுகள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோதான ஆட்களை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை மணல் குவாரிகள் மூலம் கொட்டிய கரன்சி கட்டுகளில் ஒரு பகுதி மட்டுமே மன்னார்குடி பக்கம் சென்று கொண்டிருந்தது. ஜெயலலிதா மறைவு, மணல் பிசினஸைத் தன் கையில் வைத்திருந்த சேகர் ரெட்டி கைது என அடுத்தடுத்த நிகழ்வுகளால் தமிழகத்தின் மணல் குவாரிகள் தற்காலிகமாக செயல் இழந்துள்ளன. ‘ஆறுமுகசாமி, படிக்காசு, சேகர் ரெட்டி வரிசையில் அடுத்தது யார்’ என்பதுதான் இப்போதைக்கு மில்லியன் டாலர் கேள்வி. இதற்காகப் ப…
-
- 0 replies
- 2.7k views
-
-
நாளை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: அ.தி.மு.க.,வில் மீண்டும் பரபரப்பு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நாளை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அ.தி.மு.க., வட்டாரத்தில், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தை முன்னிட்டு, ஜன., 27ல், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா நடத்தினார். அதில், 'அனை வரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்; மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்' என, அறிவுரை கூறினார். இக்கூட்டத்தில், முதல்வர் பதவியேற்கும்படி, தன்னை, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்துவர் என, சசிகலா எதிர்பார்த்தார். ஆனால், யாரும் கோரிக்கை வைக்கவில்…
-
- 1 reply
- 460 views
-
-
ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்களை வெளியிடத் தயார் – பிரதாப் ரெட்டி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனைக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார். முக்கியமாக, ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும், ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சையில் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை என்றும் அவர் கூறினார். http://www.vikatan.com/news/tamilnadu/79644-ready-to-release-treatment-details-of-jayalalithaa-says-prathap-reddy.art
-
- 1 reply
- 313 views
-
-
அ.தி.மு.க.,வில், நியமன பொதுச் செயலரான சசிகலாவுக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்க அதிகாரமில்லை என்ற, திடீர் சர்ச்சை வெடித்துள்ளது. கோஷ்டிகளை சமாளிக்க, ஒரே நாளில், 23 பேருக்கு பதவிகளை வாரி வழங்கியதற்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சசிகலா வருகைக்கு பின், கட்சியில், காங்., கலாசாரம் தலைதுாக்குவதாகவும், தொண்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக காங்கிரசில், கோஷ்டிகளை சமாளிக்க வும், சரிக்கட்டவும், ஏராளமான பதவிகள் வழங்கப்படுவது உண்டு. அதே போல், ஆளும், அ.தி.மு.க.,வில், 23 பேருக்கு, திடீரென கட்சி பதவிகளை வாரி வழங்கியுள்ளார், அக்கட்சி பொதுச் செயலர் சசிகலா.தன் தலைமையை பிடிக்காமல், ஒதுங்கியிருந்த வர்களை தேடிப் பிடித்து, கட்சி பதவிகளில் அமர்த்தி, தன் ஆ…
-
- 0 replies
- 327 views
-
-
போலீஸ் மூலம் சசி குடும்பம் அச்சுறுத்துகிறது ஜெ., அண்ணன் மகள் தீபா குற்றச்சாட்டு ''சசிகலா குடும்பத்தினர், காவல் துறை மூலம், என்னை அச்சுறுத்த பார்க்கின்றனர்,'' என, ஜெ., அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டினார். சென்னையில், நேற்று அண்ணாதுரை நினை விடத்தில், அஞ்சலி செலுத்த, தீபா சென்றார். அவரது காரை, வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழி யில் அனுமதிக்க, போலீசார் மறுத்தனர். தீபா ஆதரவாளர்கள், அவர்களுடன், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின், அவரை அனுமதித் தனர்.இதேபோல், சென்னை, ஆர்.கே.நகரில், தீபா கலந்து கொண்ட நிகழ்ச்சிகளுக்கும், இடையூறு ஏற்படுத்தினர். இது குறித்து, தீபா …
-
- 0 replies
- 382 views
-
-
ஜெ. இல்லாத சட்டசபை! - ஜாலி ஆளும்கட்சி... லாலி எதிர்க்கட்சி ‘பயம்... பவ்யம்... பரபரப்பு...’ சட்டசபைக்குள் ஜெயலலிதா இருந்தால், அ.தி.மு.க-வினரிடம் இந்த மூன்றும் இருக்கும். இப்போது இந்த மூன்றில் ஒன்றுகூட இல்லை. முதல்வர் ஓ.பி.எஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எழுந்து செல்வதும், சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதுமாகக் காட்சி தருகிறது சட்டசபை. ஜெயலலிதா இருக்கும்போது, அவர் சட்டசபைக்குள் வந்தால், அ.தி.மு.க-வினர் மட்டும் எழுந்து நிற்பார்கள். ஆனால், இப்போது ஓ.பி.எஸ் உள்ளே வந்தால், தி.மு.க-வினரும் சேர்ந்து எழுந்து நிற்கிறார்கள். சபையில் ஜெயலலிதா அமரும்போது, சபாநாயகருக்கு மட்டும் வணக்கம் வைப்பார். ஆனால், ஓ.பி.எஸ்-ஸோ எதிர்க்கட்சியினருக்கும் ஒரு வணக…
-
- 0 replies
- 677 views
-
-
‘உடம்பை பார்த்துக்குங்க..!’ ஸ்டாலினிடம் உருகிய ஜெயலலிதா! #VikatanExclusive அந்தக்காலம் முதலே திரைக்கலைஞர்கள் உணர்ச்சிவயப்பட்டவர்கள். தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி... பொது வாழ்க்கையானாலும் சரி எப்போது அப்படியே முடிவுகளை எடுப்பர். திராவிட பாரம்பர்யத்தில் ஊறி வளர்ந்த ராதாரவி இப்போது அப்படி ஒரு உணர்ச்சிவயப்பட்டிருக்கிறார். நடிகவேள் எம் ஆர். ராதாவின் புதல்வரான அவர், தந்தையைப் போலவே தடாலடி மனிதர்தான். பழனியில் நடந்த நடிகர் சந்திரசேகரின் மகள் திருமணத்தில், “ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்றும் தமிழகத்தை வழிநடத்த தகுதியான ஒரே தலைவர் அவர்தான்” என்றும் பேசி அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். சர்ச்சைக்கு காரணம் அவர் அ.தி.மு.க வின் முன்னாள் எம…
-
- 0 replies
- 419 views
-
-
ஒரே கையெழுத்து ஓஹோன்னு வாழ்க்கை! சசிகலாவின் மாஸ்டர் பிளான் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவியை ஜெயலலிதா இறந்து இருபத்தி ஐந்து நாட்களில் கைப்பற்றிய சசிகலாவினால், அதே ஜெயலலிதா அமர்ந்திருந்த முதல்வர் ஆசனத்தை பிடிக்க முடியாமல் இன்று வரை திணறிவருவதுதான் வேடிக்கை. “ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கம் அதிமுக” என்று மேடைதோறும் அந்த கட்சியின் முன்னணியினர் முழங்கி வந்தார்கள். ஆனால் அந்த கட்சியின் பொதுச்செயலாளரை வெறும் இரண்டாயிரத்து ஐநுாறு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரே நாளில் தேர்ந்தெடுத்து முடிசூட்டு விழாவையும் நடத்திவிட்டார்கள். இதுதான் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா எப்படி வரலாம் என்ற எரிச்சல் இன…
-
- 0 replies
- 471 views
-
-
முதல்வராக நீடிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி வந்தால் உதவுவது குறித்து திமுக முடிவெடுக்கும்: துரைமுருகன் தகவல் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் முதல்வர் பதவியில் நீடிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி வரும் சூழ்நிலை வந்தால், அப்போது அவருக்கு உதவுவது குறித்து திமுக முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் முதன் மைச் செயலாளர் துரைமுருகன் கூறினார். தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவும் பதவியேற்றனர். இந்த நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை க…
-
- 0 replies
- 274 views
-
-
சசிக்கு எதிராக கிளம்பிய கே.பி.முனுசாமிக்கு ஆதரவு ஊர் ஊராக போஸ்டர் ஒட்டி உற்சாக வரவேற்பு அ.தி.மு.க.,வில், சசிகலாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக குரல் கொடுத்த, முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமிக்கு ஆதரவு தெரிவித்து, அ.தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். அவரை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது போஸ்டர்களை, கட்சியினர் கிழித்து வருகின்றனர். எதிர்ப்பாளர்களுக்கு பதிலளிக்கும் வகையில், தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழாவில், திவாகரன் பேசும் போது, 'அ.தி.மு.க.,வை துவக்கிய…
-
- 0 replies
- 350 views
-
-
முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு, பொது மக்களிடமும், கட்சியின் அடிமட்ட தொண்டர் களிடமும் செல்வாக்கு அதிகரித்து வருவதால், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர். சசிகலாவா, பன்னீரா, எந்தப் பக்கம் சாய்ந்தால் ஆதாயம் என, ஆளாளுக்கு மனக்கணக்கு போடத் துவங்கி உள்ளனர். அதனால், இதுவரை பன்னீர்செல்வத்தை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் எல்லாம், அவரின் புகழ் பாடும் நிலை உருவாகி உள்ளது.ஜெ., மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக பொறுப்பேற்றார். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டார். அதற்கு, பன்னீர்செல்வம் முழு ஆதரவு கொடுத்தார். ஆனால், பொதுச் செயலரா னதுடன் விடாமல், முதல்வர் பதவிக்கு வரவும், சசிகலா முயன்றார். அதற்கு,…
-
- 0 replies
- 494 views
-
-
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு! தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்கான வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே சன் குழும தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலா க்கத்துறை தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட…
-
- 1 reply
- 446 views
-
-
'கருணாநிதி, ஜெயலலிதாவோடு போகட்டும்!' -'ஓ.பி.எஸ் ஆதரவு' பற்றி மனம் திறந்த ஸ்டாலின் #VikatanExclusive தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் அ.தி.மு.கவும் எதிர்க்கட்சியான தி.மு.கவும் நடந்து கொள்ளும் விதத்தை அரசியல் விமர்சகர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். ' இதுநாள் வரையில் தி.மு.கவும் அண்ணா தி.மு.கவும் நடத்தி வந்த அரசியல் என்பது அப்பாவுடனும் ஜெயலலிதாவுடனும் போகட்டும். நாம் அந்த அரசியலைக் கையில் எடுக்க வேண்டியதில்லை' என மனம் திறந்து பேசியிருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த 23-ம் தேதியில் இருந்து தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அ.தி.மு.கவும் தி.மு.கவும் கடுமையாக மோதிக் கொள்வதைத்தான் …
-
- 0 replies
- 464 views
-
-
அ.தி.மு.க-வின் கொ.ப.செ ஆகிறாரா தீபா!? மன்னார்குடி வியூகம் ‘ஜெயலலிதா போலவே இருக்கிறார், பேசுகிறார், சிரிக்கிறார், பால்கனியில் நின்று இரட்டைவிரல் காட்டுகிறார்...’ என்றெல்லாம் பேசிப்பேசியே ஓய்ந்துள்ளனர், தீபா ஆதரவாளர்கள். தற்போது தீபா என்னதான் செய்துகொண்டிருக்கிறார்? அவரது அரசியல் பயணம் எந்த நிலையில் இருக்கிறது? ஜனவரி 17-ம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பின்போது, ‘‘மக்கள் கருத்தைக் கேட்டபின்னரே அரசியல் முடிவை அறிவிப்பேன். அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை என்பதால் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தேன்’’என்று சொல்லியிருந்தார். இதுகுறித்துப் பேசும் தீபா ஆதரவாளர்கள், ‘‘தலைவர் (எம்.ஜி.ஆர்) பிறந்தநாளில் தீபாம்மா ஏதாவது அறிவித்துவிடுவ…
-
- 0 replies
- 573 views
-
-
'முதலில் உங்கள் செல்வாக்கை நிரூபியுங்கள்!' - சசிகலா தூதுவரிடம் கடுகடுத்த பா.ஜ.க. #VikatanExclusive கார்டன் வட்டாரத்தை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது அந்நிய செலாவணி மோசடி வழக்கு. மன்னார்குடி உறவுகள் மீதான வழக்குகளை துரிதப்படுத்தத் தொடங்கிவிட்டது மத்திய அரசு. ' மத்திய அரசிடம் நெருங்குவதற்கு கார்டன் தரப்பினர் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது அக்கா வனிதாமணியின் மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது, 1996ம் ஆண்டில் அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவி…
-
- 0 replies
- 378 views
-
-
நடுவுல கொஞ்சம் வைகோவை காணோம் - எங்க போனீங்க ராசா? வைகோ, இந்த நூற்றாண்டில் அதிகமா கலாய்க்கப்பட்ட அரசியல்வாதி இவராத்தான் இருப்பார். எல்லாரும் அரசியல் பண்ணா, அரசியல் இவரை மட்டும் தயவு தாட்சண்யம் இல்லாம வச்சு செய்யும். தமிழ்நாட்டுல, அமெரிக்காவிலே... ஐரோப்பாவிலே... புளூட்டோவிலேன்னு எங்க என்ன பிரச்சனை நடந்தாலும் முதல் ஆளா ஆஜர் ஆகி கருத்து சொல்லுவார் நம்ம வைகோ. சில சமயம் எதும் பிரச்சனையே நடக்கலைன்னா, 'என்னதான் ஆகிவிட்டது நம்ம ஊருக்கு' அப்படின்னு இவராவே எதாவது கருத்து சொல்லி பிரச்சனையை ஆரம்பிப்பார். போன வாரம் ஃபுல்லா தமிழ்நாடே ஜல்லிக்கட்டு பிரச்னைல தீவீரமா இருந்தப்ப இவர் மட்டும் 'செலிப்ரிட்டி வாழ்க்கை நொந்தது... எனக்கு என்ன வந்ததுன்னு' அமைதியா இருந்தார். இவர் ம்யூட்ல …
-
- 0 replies
- 484 views
-
-
“சரி சரி அவரே இருக்கட்டும்...” ஓ.பி.எஸ் க்கு ‘விட்டுக்கொடுத்த’ சசிகலா! 2017 ஆம் ஆண்டு இப்படி துவங்கும் என மொத்த தமிழகமும் எதிர்பார்த்திருக்கமுடியாது. ஜெயலலிதா இல்லாமல் ஒரு புத்தாண்டு பிறந்திருக்கிறது. ஜெயலலிதா இல்லாமல் மாணவர்கள் நடத்திய எழுச்சிப் போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது. கட்சியின் செயற்குழுவில் மட்டுமே ஜெயலலிதாவால் அனுமதிக்கப்பட்ட சசிகலா, அந்த கட்சிக்கே பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவிற்கு முன் 2 சந்தர்ப்பங்களில் முதல்வர் பொறுப்பேற்ற ஓ.பி.எஸ் எப்போதும் இல்லாமல் நெஞ்சு நிமிர்த்தியபடி சட்டமன்றத்தில் அம்மாவின் இருக்கையை அலங்கரிக்கிறார். முதல்வராக இருந்த முந்தைய காலங்களில் கள்ள மௌனத்துடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்க்க…
-
- 0 replies
- 989 views
-
-
மிஸ்டர் கழுகு: நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே... ‘‘இரண்டு மாதங்களுக்கு முன்பு கனவிலும் நினைக்காத காட்சிகள் எல்லாம் இப்போது சட்டமன்றத்தில் நடக்கின்றன’’ என்ற பீடிகையோடு உள்ளே நுழைந்தார் கழுகார். அவர் ஏற்கெனவே வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்த ‘நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே...’ என்ற தலைப்பை வைத்து உருவாக்கப்பட்ட ஜூ.வி அட்டையை எடுத்து நீட்டி, ‘‘இதைத்தான் சொல்கிறீர்களா?” என்றோம். ‘‘ஆம்! ‘ஜெயலலிதா இல்லாத நிலையில் சட்டமன்றத்தில் தி.மு.க அதகளம் செய்துவிடும்; கேள்விகளால் முதல்வரைத் துளைத்தெடுப்பார்கள்’ என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மெரினாவில் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட போலீஸ் தாக்குதல் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தை ச…
-
- 0 replies
- 767 views
-
-
சிக்கன்கடை சலாவூதீன்... உளவுத்துறை சொல்லிய ஒசாமா பின்லேடன் அனுதாபி இவர்தான்! #VikatanExclusive ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடனின் அனுதாபிகள் பங்கேற்றதாக மாநில உளவுப்பிரிவு போலீஸார், அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்தனர். பின்லேடன் படத்தை ஓட்டிய வாகனத்தில் சென்ற சிக்கன்கடை சலாவூதீன் அந்த ரிப்போர்ட் தவறு என்று தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஒற்றுமையுடனும், அறவழியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தால் அவசரச் சட்டம் இயற்றப்பட்டு சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. சென்னையில் ஜல்லி…
-
- 1 reply
- 616 views
-
-
அப்போ போலிஸ்... இப்போ சசிகலா...விக்கிபீடியாவாசிகளின் அடாவடி! சில நாட்களுக்கு முன்பு, தமிழக போலீசாரின் விக்கிபீடியா பக்கம், மோசமான வார்த்தைகளால் எடிட் செய்யப்பட்டது. விஷமிகள் செய்த இந்த வேலையால் அந்த ஸ்க்ரீன்ஷாட்கள் இணையத்தில் வைரலாக சென்றது. பிறகு உடனே அந்த பக்கம் மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. இந்த முறை அ.தி.மு.க பொதுச்செயலாளரான வி.கே.சசிகலாவின் பக்கம் அதேபோல தரக்குறைவான வார்த்தைகளால் எடிட் செய்யப்பட்டுள்ளது. எந்த விஷயத்தை பற்றியும் தெரிந்து கொள்வதற்கு ஒரு பொதுவான என்சைக்ளோபீடியாவாக விளங்கும் தளம் விக்கிபீடியா. இதில் எந்த ஒரு நபரும் புதிதாக ஒரு பக்கத்தை துவங்கவும், எழுதவும் முடியும்.…
-
- 0 replies
- 378 views
-
-
ஜல்லிக்கட்டு போட்டிக்கு சசிகலா தலைமையாம்.. மாணவர்கள் யுக புரட்சிக்கு இழுக்கு.. மக்கள் கொந்தளிப்பு சென்னை: மாணவர்கள் போராடி பெற்ற ஜல்லிக்கட்டு உரிமைக்கு, உரிமை கொண்டாடுகிறார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை சசிகலா தொடங்கி வைக்க துரித கதியில் வேலைகள் நடக்கின்றன. இது இளைஞர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொது செயலாளர் சசிகலாவை மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவர் ஜெ.சுந்தர்ராஜன், செயலாளர் வி.சுந்தர் ராகவன் தலைமையிலான நிர்வாகிகளும், வாடிப்பட்டி தாலுகா, பாலமேடு கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரும், அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரும் தனித் தனியே நேரில் சந்தித்து, ஜல்லிக…
-
- 3 replies
- 849 views
-
-
சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு செக் வைத்த உயர் நீதிமன்றம் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது கீழ் நீதிமன்றம் விடுவித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. வெளிநாட்டில் இருந்து சுசீலா என்பவரிடம் உரிய அனுமதியின்றி பணம் பெற்றதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை விடுவித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை இன்று …
-
- 0 replies
- 413 views
-
-
‘தற்காலிகம்தான்...நிரந்தரம் அல்ல!’ - சசிகலாவுக்கு செக் வைக்கிறதா ஆணையம்? அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி குறித்த சர்ச்சை நீடித்துக்கொண்டே இருக்கிறது. 'வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில், கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராகத்தான் சசிகலா நியமிக்கப்பட்டார். முறைப்படி தேர்தல் நடத்த வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தம்பிதுரை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் அ.தி.மு.கவினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. 'கட்சி விதிகளின்படி ஐந்தாண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இல்லாதவர்கள், பொதுச் செயலாளர் ஆக முடியாது. 2011-…
-
- 0 replies
- 462 views
-
-
-
- 0 replies
- 621 views
-
-
தீ வைத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை! பேரவையில் முதல்வர் அதிரடி அறிவிப்பு ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும், தீ வைத்ததாக கூறப்பட்ட புகாரில் சிக்கிய காவலர்கள் மீடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை ஒன்றை படித்தார். அப்போது, ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் விடுவிக்கப்படுவர் எனறும், வன்முறை மற…
-
- 0 replies
- 487 views
-