Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிவகாசி பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 5 பெண்கள் உள்பட 7 பேர் பலி விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கிடங்கில் இருந்து லாரியில் பட்டாசு ஏற்றும்போது இந்த விபத்து நடந்துள்ளது. கிடங்கில் இருந்து பட்டாசு ஏற்றிய மினி வேன் வாகனமும் தீப்பிடித்து எரிகிறது. தீபாவளி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி வருகின்றன. பட்டாசு கிடங்கில் 20 பேர் சிக்கியுள்ளனர். பட்டாசு கிடங்கின் அருகில் உள்ள ஸ்கேன் சென்டரில் நோயாளிகள் சிக்கியுள்ளதாகவும் இதுவரை நான்கு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வ…

  2. இடிக்கப்படும் மற்றுமொரு பழமையான மதுரை திரையரங்கு மதுரை நகரில் உள்ள கீழவெளி வீதியில் அமைந்துள்ள பழமையான திரையரங்கமான சிந்தாமணி திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டுவருகிறது. மறையும் மற்றுமொரு மதுரை சினிமா திரையரங்கு- சிந்தாமணி 1930களின் இறுதியில் கட்டப்பட்ட இந்தத் திரையரங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்டது. அதற்குப் பிறகு ஜவுளி நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்ட இந்த திரையரங்கம், சரக்குகளை வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இந்தத் திரையரங்கத்தை இடிக்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. மதுரை நகரின் பல பழமையான திரையரங்குகள் இடிக்கப்பட்டோ அல்லது மூடப்பட்டுவிட்ட நிலையில்,…

  3. ஜெயலலிதாவிற்கு பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 29வது நாளாக சிகிச்சைப் பெற்று வரும் ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தவிர, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாய…

  4. தமிழக ஆட்சி கலைக்கப்படும் : நீதிபதி தமிழக முதல்வர் உடல் நிலை குறித்து வதந்திகள் பரப்புவோரை கைது செய்தால், தமிழக ஆட்சியை கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர போராடுவேன் என்று உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வரின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் பொலிஸாரின்; இந்த நடவடிக்கையை மார்கண்டேய கட்ஜூ கண்டித்துள்ளார். அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. மற்றும் அனைத…

  5. முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவிப்பது வாடிக்கையான ஒன்று. சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்ததாக சர்ச்சை கருத்தை தெரிவித்து, பின்னர் அது நகைச்சுவையாக தெரிவிக்கப்பட்ட கருத்து என கூறி பல்டியடித்தார். இந்நிலையில் தமிழக இளைஞர்களை நான் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு எனவும் கோழைகள் எனவும் கூறவேண்டி வரும் என கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலைகுறித்து வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த காவல்துறை, பலர் மீது வழக்கும் 7 பேரை கைதும் செய்தது. …

  6. பத்து நாட்களாக அப்போலோ அறிக்கை ஏன் இல்லை? #ApolloUpdates அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கை வெளிவந்து 10 நாட்கள் ஆகிவிட்டது. அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டதும், சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு என்று மருத்துவமனை சார்பில் முதல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதோடு ஓரிரு நாளில் முதல்வர் வீடு திரும்புவார் என்றும் அதில் சொல்லப்பட்டு இருந்தது. அவர்கள் சொல்லி இருந்த இரண்டு நாட்கள் கடந்த நிலையில், முதல்வர் வீட்டிற்கு சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நிலையில் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இன்னும் இரண்டு நாட்கள் முதல்வருக்கு ஓய்வு தேவை என்று கு…

  7. மருத்துவமனையில் அத்தை.. வாசலில் மருமகள்.. தடுக்கும் மன்னார்குடி! கவர் ஸ்டோரி சின்னச் சின்ன ஞாபகங்கள் சின்னவள் என் சிந்தையிலே! அத்தை என்று உன்னை அழைக்க அமுதூறுது என் நாவிலே! அன்புக்கரம் நீ பிடித்து கொஞ்சிக் கொஞ்சிப் பேசையிலே! வண்ண வண்ணப் பூங்காவில் அத்தை மடி மெத்தையிலே சின்னவள் நான் குறும்புசெய்ய புன்னகைத்தாயே மலர் போலே! - ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமார் மகள் தீபா எழுதிய கவிதை இது! ‘இளவேனில் பூக்கள்’ என்கிற தீபாவின் கவிதைத் தொகுப்பில் எழுதப்பட்ட முதல் கவிதையே அத்தை மடி மெத்தையடிதான். அத்தை ஜெயலலிதாவை நினைத்து தீபா எழுதிய இந்தக் கவிதைகள் ஜெயலலிதாவின் காதுகளில் எட்டியதா? பவர் ஸ்டார்கூட அப்போலோ மருத்துவமனைக்குள் போய்த் தி…

  8. வெளிநாடு சிகிச்சை.? ஜெயாவுக்கு காத்திருக்கும் சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம்.! தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 வாரம் கடந்தும் அவர் இன்னமும் வீடு திரும்பவில்லை. அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வந்த அப்பல்லோ நிர்வாகம் கடந்த 7 நாட்களாக எந்த அறிக்கையும் வெளியிடாமல் மௌனமாக இருக்கிறது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, ஆங்கிலத்தில் பேசினார், மருத்துவர்களுக்கு நன்றி கூறினார், தண்ணீர் குடித்தார், வேக வைத்த ஆப்பிள் சாப்பிட்டார் என தினம் ஒரு தகவல் வந்தவாறு உள்ளது. அதே நேரம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தற்போது முன்னேறி வருவதாகவும், அவரை தற்போது உள்ள சூழ…

  9. 5001 பேர் கலந்து கொண்ட, அதிமுக பால் குட ஊர்வலம்... ஸ்தம்பித்தது வேலூர்.சென்னை: இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது ஷங்கர் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சி போலவே இருக்கிறது இல்லையா. ஆனால் இது வேலூரில் அதிமுகவினர் நடத்திய பால் குட ஊர்வலம். இந்த ஊர்வலத்தால் வேலூரே ஸ்தம்பித்துப் போனது. உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டிய அதிமுகவினர் தொடர்ந்து விதம் விதமான பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில், ஜெயலலிதா பூரண குணம்பெற வேண்டி வணிக வரித்துறை அமைச்சர் கேசி வீரமணி தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் முன்னிலையில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வர்ர் ஆலயத்தில் 5001பெண்கள் பால்குடம் ஏ…

  10. ’45-வது ஆண்டில் அ.தி.மு.க.!’ வரலாற்றின் பரபர பக்கங்கள்...! 1960 களின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரிகையில் “ விரைவில் திமுக பிளவுறும். எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுவெளியேறுவார்” என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். எழுதும்போது அவருக்கே சிரிப்பு வந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அதைப்படித்த யாரும் நிச்சயம் சிரித்திருப்பார்கள். ஏன் அண்ணா, எம்.ஜி.ஆர் கருணாநிதியே கூட அதைப்படித்து சிரித்திருக்கலாம். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் அதுதான் நடந்தது. 44 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி உதயமானது. தமிழ்த் திரைத்துறையில் நல்ல நண்பர்களாக திகழ்ந்த கருணாநிதி எம்.ஜி.ஆர் என்ற இரண்டு ஆளுமைகளிடையே எழு…

  11. அப்போலோ செல்லவிடாமல் விஜயகாந்தை தடுப்பது எது? அரசியல் என்றாலே எதிரும் புதிரும்தான் என்பது எழுதப்படாத புரிதலுக்கு உரிய அர்த்தம். ஆனால், உடல்நலக்குறைவால் ஒருவர் துன்படும்போது அவருக்கு ஆதரவாகக் கரங்கள் நீள்வது அரசியலுக்கு அப்பாற்பட்ட கலாசாரமாகப் பார்க்கப்படுகிறது. விருப்ப அறிக்கை முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் கருணாநிதியிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை வெளியானது. "ஜெயலலிதா என்னுடன் கொள்கை அளவில் வேறுபட்ட போதிலும், அவர் உடல் நலம் பெற்று, வழக்கமான பணிகளுக்குத் திரும்ப வேண்டும்" என்று விருப்ப அறிக்கை வெளியிட்டார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் தன் சார்பில் மகன் மு.க.ஸ்டாலின், துணைவியார் …

  12. சசிகலா வலையில் சிக்குகிறாரா சசிகலா புஷ்பா? மிரட்டும் வழக்குகள் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் போய்விட்டார் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க தலைமைக்கு எதிராக சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க கூறியதையடுத்து அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன. வழக்கறிஞர் சுகந்தி வீடு சூறையாடப்பட்ட வழக்கிலும் அவர் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலா புஷ்பா எம்.பி வீட்டில் பணியாற்றிய பானுமதி, ஜான்சிராணி ஆகியோருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஷ்வர திலகர், இவர்களது மகன் பிரதீப் மற்றும் சசிகலா புஷ்பாவின் அம்மா கௌரி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். பானு…

  13. டெல்லி: காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை உயர்மட்ட தொழில்நுட்பக்குழு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஜி.எஸ்.ஜா. தலைமையிலான குழு அண்மையில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் ஆய்வு நடத்தியது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணக்கு வர உள்ளது. இந்நிலையில் உயர்மட்டக் குழுவின் அறிக்கை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் பேததிய மழையின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் தண்ணீர் இன்றி பயிர்கள் காய்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நிலத்தடி நீர் ஆ…

  14. பன்னீரை ஓகே செய்தாரா ஜெ? - ‘கப்சா’ கவர்னர் “பன்னீர்செல்வம் பழைய பன்னீர்செல்வமாக வந்துவிட்டார். இப்போதைக்கு ஜெயலலிதா இலாகா இல்லாத முதலமைச்சர். ஓ.பி.எஸ். முதலமைச்சரின் இலாக்காக்களை வைத்திருக்கும் மூத்த அமைச்சர்!” என்று பராக் பாணியில் சொல்லியபடியே ஆஜரானார் கழுகார். ‘‘தமிழகத்தின் அதிர்ஷ்டசாலி அரசியல்வாதி என்று ஒரு பட்டத்தை ஓ.பி.எஸ்-க்குக் கொடுக்கலாம். இரண்டுமுறை தமிழகத்துக்கு முதலமைச்சரான அவர், இந்த முறை முதலமைச்சரின் இலாக்காக்களைப் பெற்றுள்ளார்” என்று தொடங்கினார் கழுகார். ‘‘எப்படி நடந்தது இது?” ‘‘தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் மற்றும் தமிழக அமைச்சர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் எழுந்து வரும் அரசியல் …

  15. அப்போலோவில் ரஜினிகாந்த் முதல்வரின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனை சென்றார். முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். ரஜினியுடன் அவரின் மகள் ஐஸ்வர்யாவும் உடன் வந்தார். உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து பல் வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து செல்கின்றனர். http://www.vikatan.com/news/tamilnadu/69772-rajinikanth-visits-apollo-to-check-regarding-jayalalithaas-health.art

  16. அட... இவ்வளவு எதிர்ப்புகளைக் கடந்தா ஓ.பி.எஸ். மீண்டும் வந்தார்....!? மூன்றாவது முறையாக மிக முக்கிய 'ஆளுமை'ப் பொறுப்பை ஏற்றிருக்கிறார் தமிழக நிதியமைச்சர் ஓ.பி.எஸ்! ஜெயலலிதா டான்சி வழக்கில் சிக்கி முதல்வர் பதவியை இழந்ததும், 2001 செப்டம்பர் 21-ம் தேதி, முதன்முறையாக ஓ. பன்னீர்செல்வம், முதல்வராகப் பொறுப்பேற்றார். அடுத்து, 2014 செப்டம்பர் 27-ம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு பெங்களுரு தனி நீதிமன்றம் தண்டனை விதித்ததையடுத்து மறுபடியும் ஜெயலலிதா முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். எனவே மீண்டும் 2015, செப்டம்பர் 29-ம் தேதியன்று இரண்டாவது முறையாக பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்கும் சூழல் ஏற்பட்டது. பின்னர் சொத்து…

  17. தி.மு.க-வுக்கு 'தண்ணி' காட்டும் திருநாவுக்கரசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்றதுமே பல்வேறு மாற்றங்களைக் காங்கிரஸ் கட்சியில் மேற்கொண்டு வருகிறார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும், ஓரங்கட்டப்பட்டவர்களையும் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்த்து அதிரடி நடவடிகை எடுத்தார். தி.மு.க தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்துக்குச் சென்று, மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார் திருநாவுக்கரசர். திராவிட பாரம்பரியத்தில் இருந்து, தனிக்கட்சி தொடங்கி, பின்னர் பல கட்சிகளுக்குச் சென்று, கடைசியாக காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானதாலோ என்னவோ, திராவிடக் கட்சிகளைப் போ…

  18. ஜெயலலிதாவுக்கு ஸ்விட்சர்லாந்திலிருந்து உணவுப் பொருள் தருவிக்கப்படுகிறதா? முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் (பொறுப்பு), மத்திய அமைச்சர்கள், தேசியத் தலைவர்கள், தமிழக எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அகில இந்திய பிரபலங்கள் தொடர்ந்து அப்போலோ மருத்துவனைக்கு வருகை புரிந்து மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்துச் செல்கின்றனர். அப்போலோ அறிக்கை மட்டுமே முதல்வரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல் சொல்கிறது. மருத்துவர்களோ, கட்சித் தரப்பினரோ, மருத்துவமனைக்கு வந்து செல்லும் பிரமுகர்களோ ஜெயலலிதா உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளிப்படையாகச் சொ…

  19. இலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கியதில் உடன்பாடில்லை - தொல்.திருமாவளவன் பேட்டி இலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். தொல்.திருமாவளவன் இன்று பிபிசி தமிழோசைக்கு வந்து பேஸ்புக் நேரலை வாயிலாக பேட்டி அளித்த திருமாவளவன், இலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார். ''விடுதலை புலிகள் இயக்கத் தல…

  20. மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு, சிபிஐ நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது: மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பிரபலமடைந்த ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1999 – 2000 ம் ஆண்டுகளில் பெட்ரோலில் கலப்படம் செய்து ‘ராமர் பெட்ரோல்’ என விற்பனை செய்ததாக ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேர் மீது எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ததது. மேலும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு …

  21. சசிகலாவிடம் இருந்து ஜெயலலிதாவை மீட்க மோடியின் ஸ்கெட்ச்! இத்தனை காலமாக, முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் யாரும் நெருங்கமுடியாமல் இரும்புத்திரையை போட்டிருந்தார் அவரது தோழி சசிகலா. இதனால், அரசியல்ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் டெல்லியில் இருந்து பி.ஜே.பி. தலைவர்கள் யாரும் ஜெயலலிதாவை தொடர்பு கொள்ளமுடியவில்லை. ராஜதந்திரமாக கையாளவேண்டிய பல விவகாரங்களை முதல்வர் என்கிற முறையில் ஜெயலலிதாவிடம் மட்டுமே பேசவேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், ஜெயலலிதாவுடன் நிழலாக சசிகலா இருந்து வந்தது மத்திய அரசுக்கு எரிச்சலைக் கொடுத்தது. மத்திய உளவுத்துறையின் தமிழக தலைவராக வர்மா ஐ.பி.எஸ். சில மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றார். டெல்லியில் பிரபல அரச…

  22. ரயிலில் போராடிய உயிர்...காப்பாற்றிய பெண்... நெகிழ்ச்சித் தருணம்!! காமெடியில் இருந்து கார்ட்டூன் வரை அதிமான விஷயங்களிலும் கிண்டலுக்கு உள்ளாகுபவர்கள் மருத்துவர்கள்தான். இப்போதுகூட முதல்வர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனையைக் தாறுமாறாக கிண்டல் செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளை பார்க்க முடிகிறது. ஆனால் உடலுக்கு ஒன்று வந்து விட்டால் டாக்டர் கொஞ்சம் பாருங்க டாக்டர்னு விழுந்தடித்துக் கொண்டு ஓடுவோம். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ராஜரத்தினம் பொன்மணி . அண்மையில் தூத்தூக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரசில் பயணித்த நேர்ந்த அனுபவத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். ''கடந்த ஞாயிறு( 09-10-2016) இரவு 8 மணி தூத்துக்கு…

    • 1 reply
    • 807 views
  23. ஜெயலலிதாவின் உதவியும் பணியாளர்களின் நெகிழ்ச்சியும்! எம்.ஜி. ஆர் வாழ்ந்த காலத்தில் அவரிடம் வேலை பார்த்தவர்களில் தொடங்கி அவரை நேரில் பார்த்தவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் அவர் செய்த உதவிகள் ஏராளம். .அதனாலே வள்ளல் எம்.ஜி .ஆர் என இன்று வரை மக்கள் அவரை அழைக்கின்றனர். அவர் வழி வந்த ஜெயலலிதாவிற்கு இரும்பு பெண், சிறந்த நிர்வாகி போன்ற பெயர்கள் கிடைத்தாலும் உதவி செய்வதில் எம்.ஜி.ஆர் போன்றவர் என்ற பிம்பம் கொடுக்கப்படவில்லை. ஆனால், அவரும் முதல்வராக இல்லாமல், தனிப்பட்ட முறையிலும் நிறைய பேருக்கு உதவிகள் செய்து வருபவர்தான். எளிய மனிதர்கள் சிலருக்கு ஜெயலலிதா செய்த உதவிகளின் பட்டியல் பெரிது. அதில் சில மட்டும் இங்கே... காட்சி 1 2011ம் ஆண்டில் ஆட்சியை பிடித்த ஜெயலல…

  24. ’நான் அரசியல் தவிர்த்து பெர்சனல் பற்றிப் பேசினால்... அவ்வளவுதான்...!’ கொந்தளிக்கும் சசிகலா புஷ்பா கடந்த புதன்கிழமையன்று ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் சசிகலா புஷ்பா எம்.பி-யை திட்டி, ‘சாக்கடை புஷ்பாவின் பூக்கடை சமாச்சாரங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தனர். இதனைப் படித்த சசிகலா புஷ்பா ஆதரவாளர்கள், இதுதான் அ.தி.மு.க-வின் அரசியல் நாகரிகமா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இதுகுறித்து சசிகலா புஷ்பா விகடனுக்கு அளித்த பேட்டி... ‘‘மிக மோசமான வார்த்தைகளால் உங்களைத் திட்டி கட்டுரை எழுதியிருக்கிறார்களே?’’ ‘‘ஒரு பெண்ணை இதற்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது. அவர்களும் பெண்கள்தான். அப்படி நான் ஒன்றும் அவர்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. என…

  25. முதல்வர் கோப்புகளில் கையெழுத்திடப்போகும் ஓ.பி.எஸ்? தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், முதல்வரின் துறைகள் அனைத்தும் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் தலைமை செயலகத்தில் வழக்கமான அரசுப் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில், இனி முதலமைச்சரின் அலுவலக கோப்புகளில் நிதித்துறை அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட உள்ளதாக தலைமை செயலாளர் ராம்மோகன ராவ் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். http://www.vikatan.com/news/politics/69564-o-panneerselvam-to-sign-on-files-for-chief-minister.art

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.