தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் ஜெயலலிதா. ஜெயலலிதா தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எழுதப்படாதவிதி. ஜெயலலிதா என்ற பெரு விருட்சத்தின் கீழேதான் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் உயிர் வாழ்கிறது. ஜெயலலிதா விரும்புவதை மட்டும் செய்பவர்கள் தான் அங்கே நிலைத்து நிற்கமுடியும். எதிர்பாராத நேரத்தில் திடீரென உயர் பதவிகள் தேடிவரும் அதே போன்று திடீரென பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள். ஜெயலலிதாவின் மனதிலே என்ன இருக்கிறதென்பது யாருக்கும் புரியாது. தமக்கான நல்ல காலம் வரும் வரை அனைவரும் அமைதியாக இருப்பார்கள். ஜெயலலிதாவின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குவது, அவருடைய காருக்கு கூழைக்கும்பிடு போடுவது, அவர் பறக்கும் ஹெலியைப் பார்த்து முதுகு கூனி …
-
- 0 replies
- 415 views
-
-
இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால், 1983 ஆம் ஆண்டு அடைக்கலம் கேட்டு முதன்முதலாக ஈழத்தமிழர்கள் தமிழகம் வந்தார்கள். தொடர்ந்து ஈழத்தமிழர்கள் வருவது அதிகரித்து இலங்கையில் போர் முடிவுற்ற 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகள் வந்துகொண்டே இருந்தனர். இப்படி அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் 112 முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். இந்த முகாம்களில் 63,938 பேர் வசிக்கின்றார்கள். இந்த முகாம்களில் 20 ஆயிரம் நபர்கள் 17வயதிற்குட்பட்டவர்கள். முகாமிற்கு வெளியே 34,482 நபர்கள் வசித்துவருகிறார்கள். அகதிகளாக வந்து இருபது ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் வசித்துவரும் இந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளும், அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப…
-
- 0 replies
- 266 views
-
-
-
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா..! இவர் கும்பிடுறதில உண்மை இல்லை சீனிவாசா..!!
-
- 4 replies
- 1.4k views
-
-
சென்னை: தமிழகத்தில் 84 லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் உள்ளனர் என்று வேதனையுடன் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் சமீபத்தில் சொல்லப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி மொத்தம் 84 லட்சம் இளைஞர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சாதி வாரியாக தாழ்த்தப்பட்டவர்கள் 18,24,342, அருந்ததியினர்கள் 1,96,784, மலைவாழ் இனத்தினர்கள் 63,898, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் 22,00,498, இஸ்லாமியர்கள் 3,24653, பிற்படுத்தப்பட்டோர் 34,53,868, மற்றவர்கள் 2,67,821, ஆக மொத்தம் 84 லட்சம் பேர் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலு…
-
- 0 replies
- 183 views
-
-
தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களின் குழந்தைகளான 55 மாணவ-மாணவிகளின் பள்ளி தஸ்தாவேஜுகளில் குடியுரிமைக்கான ஆதாரங்கள் இல்லாமல் இருந்த காரணத்தினால் அச்சிறுப்பாக்கம் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது - சென்னை பிரைட் தொண்டு நிறுவனம் இலங்கையை சேர்ந்த ஞானதீபன், ஞானநேந்திரன், ஞானராஜா இவரது சகோதரர்கள் இணைந்து நடாத்தி வருகின்றனர். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இலங்கை அகதிகளின் குழந்தைகளை தங்க வைத்துள்ளனர். அந்த வீட்டில் தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களின் குழந்தைகள், பெங்களூரில் உள்ள அகதிகளின் குழந்தைகள் இலங…
-
- 0 replies
- 285 views
-
-
சென்னை: தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 'பிப்பீள் பார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்பின் செயலாளர் அருண் பிரசன்னா, கடந்த 2015-ல் பொது நல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் முன் விசாரணைக்கு இன்று (ஆகஸ்ட் 18) வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குத் தாக்கல் செய்த அருண் பிரசன்னா கூறுகையில், "ராஜஸ்தானில் இருந்து ஒட்டகங்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டு வெட்டப்படுகின்றன. அதைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடு…
-
- 2 replies
- 308 views
-
-
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை - ’’கண்ணீராலும் செங்குருதியாலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் சோக வரலாற்றில், 60 ஆண்டுக்காலம் சிங்கள இனவாத அரசுகள், ஈழத்தமிழ் இனத்தையே அழிக்கப் பல்வேறு கொடுமைகளைச் செய்தது. தங்கள் இனத்தைக் காத்து, தாயகத்தை விடுவிக்க, ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரையிலேயே அங்கீகரிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைத் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் முன்னெடுத்தனர். சமர்க்களத்தில் அவர்களை எதிர்கொள்ள முடியாத சிங்கள அரசுக்கு, 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முப்படைத் தளவாடங்களையும் கொடுத்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தானே இயக்கியது. உலகம் தடை செய்த குண்டுகளை ச…
-
- 1 reply
- 326 views
-
-
உயர் கல்வி நிறுவனங்கள் குறித்து நமக்கொரு பிம்பம் இருக்கும். அங்கு படிப்பவர்கள் எல்லாம் முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள்... அனைத்தையும் பரந்த மனப்பான்மையுடன் அணுகுபவர்கள் என்று. ஆனால், அண்மையில் நடந்த ஒரு சம்பவம், அந்த எண்ணங்களை எல்லாம் பொய்யாக்கி உள்ளது. தனது முகநூல் பக்கத்தில் ’கபாலி’ திரைப்படத்தின் இயக்குநர் ரஞ்சித்தோடு இருக்கும் புகைப்படத்தை வைத்ததற்கு, ஐ.ஐ.டி-யில் படிக்கும் ஒரு மாணவருக்கு என்னென்ன கமென்ட்கள், மெசேஜ்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள். ‘சூப்பர் மச்சி’, ‘கூல் டூட்’, ‘செம’ என்கிற கமென்ட்களை நீங்கள் எதிர்பார்த்தீர்களானால் ஏமாந்துபோவீர்கள். "உன்னையெல்லாம் வெட்டி பன்றிக்குத்தான் போட வேண்டும்." "கீழ்த்தரமான உன்னைப் பார்க்கும்போது உன் தாயு…
-
- 0 replies
- 272 views
-
-
சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும்,பத்தாண்டு நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளையும் தமிழக அரசு விடுதலை செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழகத்திலுள்ள 9 மத்திய சிறைகளில் 800-க்கும் அதிகமான ஆயுள் தண்டனை கைதிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இராஜிவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் 25 ஆண்டு தண்டனை அனுபவித்தும் இன்னும் சிறைக்கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள்…
-
- 0 replies
- 209 views
-
-
சட்டமன்றத்தில் இருந்து தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததற்கு அரசியல் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ' எதிர்க்கட்சிகளே இல்லாமல் காலி இருக்கையைப் பார்த்து அ.தி.மு.க.வினர் பேசிக் கொள்கிறார்கள்' எனக் கலாய்க்கிறார் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கொறடா விஜயதரணி எம்.எல்.ஏ. தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய 'நமக்கு நாமே' பயணத்தை, அ.தி.மு.க உறுப்பினர் குணசேகரன் விமர்சனம் செய்ததையடுத்து, சபாநாயகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தி.மு.க உறுப்பினர்கள். இதையடுத்து, ' ஒருவார காலம் தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதாக' அறிவித்தார் சபாநாயகர் தனபால். இன்று சட்டசபைக்குள் நுழைந்த ஸ்டாலின், 'எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குள் செல்லவிடாமல் தடுப்பதாக'க் கூறி தர்ண…
-
- 0 replies
- 270 views
-
-
சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரை நான் கொலை செய்யவில்லை என்றும், போலீசார் தன் மீது பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றும் ராம்குமார் நீதிமன்றத்தில் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த ஜீன் மாதம் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது முயற்சியின் போது அவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதால், அப்போது வாக்குமூலம் பெறமுடியவில்லை. அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் உடல் நிலை தேறிய பின் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத…
-
- 0 replies
- 290 views
-
-
தமிழகத்தின் தலைநகர்,தென் இந்தியாவின் நுழைவு வாயில் என்று பல்வேறு, நிலைத்த பெருமையை உடைய சென்னை பெருமாநகராட்சி, கோடி மக்கள் வாழும் பெரு நகரமாக வளர்ந்துள்ளது. உலகின் எந்த முக்கிய நகரத்தோடும் ஒப்பிடும் அளவிற்கு கலை, கலாசாரம்,வரலாறு என்று நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ள நகரமாக உள்ளது சென்னை. இதன் வயது 377 என்றும், அதற்கான 'சென்னை டே' கொண்டாட்டம் வரும் 22ம் தேதி கொண்டாடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், " சென்னைக்கு வயது 377 இல்லை, உண்மையான வயது 2,000 ஆண்டுகளுக்கும் மேலானது" என்று கூறி, அதற்கு ஆதரவு கேட்டு ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பு நடத்துகிறார் Chennai 2000 Plus Trust -ன் தலைவர் ஆர்.ரங்கராஜ். இது குறித்து அவரிடம் விசாரித்தோம். ரங்கராஜ் நம்மிடம் கூறு…
-
- 2 replies
- 402 views
-
-
சர்வதேச போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட இலங்கை பிரஜை ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 12.8 கோடி பெறுமதியான ஹரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற போதை பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். இவர் படகு மூலம் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் போதை பொருள் கடத்தலில் ஈடுப்பட்டு வந்துள்ளார். சரவண குமார் என்று அழைக்கப்படும் 38 வயதுடைய இவர் இராமநாதபுரம் முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதி எனவும் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. பின்னர் இவர் இலங்கைக்கு தப்பி வந்து பொய்யான கடவுச் சீட்டு ஒன்றை தயார் செ…
-
- 0 replies
- 284 views
-
-
சட்டமன்றத்தில் இருந்து ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள் தி.மு.க உறுப்பினர்கள் . ' அ.தி.மு.க உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் சபையை நடத்திக் கொள்ளட்டும்' எனக் கொந்தளிக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி. சட்டசபை தேர்தலுக்கு முன்னர், தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட 'நமக்கு நாமே' பயணம் குறித்து, அ.தி.மு.க உறுப்பினர் குணசேகரன் விமர்சித்ததால் சட்டப்பேரவையில் கொதித்தனர் தி.மு.க உறுப்பினர்கள். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியே கொண்டு வந்தனர் அவைக் காவலர்கள். 'ஒருவாரம் தி.மு.க உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக' அறிவித்தார் சபாநாயகர் தனபால். அதேநேரத்தில், சபையில் இருந்து காங்கிரஸ் …
-
- 0 replies
- 260 views
-
-
பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணம் திரையுலகை உலுக்கிப் போட்டுள்ளது. யாராலும் அவரது மரணத்தை நம்ப முடியவில்லை. முத்துக்குமார் இறந்து விட்டாரா என்றுதான் அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் உள்ளனர். நா. முத்துக்குமாரின் மரணச் செய்தி பரவிய வேகத்தில் அவரது மரணத்திற்கு இரங்கல்கள் குவிந்து வருகின்றன. திரையுலகினர் பலரும் டிவிட்டர், பேஸ்புக்கில் தங்களது சோகத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அவருடன் பணிபுரிந்த பலரும் அவரது மரணத்தால் பெரும் சோகமாகியுள்ளனர். அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் உள்ளனர். Can't believe this #namuthukumar is no more ...He's written more than 200 songs in my films A huge loss May god give strength to his family இசையமைப்பாள…
-
- 1 reply
- 747 views
-
-
-
தமிழகத்தில் முதன் முறையாக பசியால் வாடுபவர்களுக்கு உதவும் வகையில் சாலையோரத்தில் உணவுப் பொருட்கள் அடங்கிய ஃபிரிட்ஜ் வைக்கும் திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவையை மையமாக கொண்டு இயங்கி வரும் 'நோ ஃபுட் வேஸ்ட்' தொண்டு நிறுவனமும் கோலிவுட் கபே உணவகமும் சேர்ந்து இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முறையாக ஏற்படுத்தியுள்ளன. அதன்படி, ஆர்.எஸ் புரத்தில் பசியில் வாடுபவர்களுக்கு உதவும் வகையில் உணவுப் பொருட்கள் அடங்கிய 'சைடு வாக் ஃபிரிட்ஜ்' அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் மிஞ்சும் உணவுப் பொருட்களை இந்த ஃபிரிட்ஜில் வைத்து விடும்படி அந்த பகுதி மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவுத் தேவைப்படுபவர்கள் இந்த ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து பசியாறிக் கொள்ளலாம். இந்த திட்டம்…
-
- 4 replies
- 718 views
-
-
கடந்த சில மாதங்களாக ராமேசுவரம் கடல் பகுதிகளில் ஜெல்லி மீன்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ராமேசுவரம் கடற்கரையை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ராமேசுவரம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கடல் அலைகளின் சுழல்கள் மிகவும் ஆபத்தானவை. மணல் படுகைகள், சகதி, பாறைகள் மற்றும் ஆழமான பள்ளங்கள் அமைந்துள்ளதால் இங்கு கடலில் குளிப்பவர்கள் நீரில் மூழ்கும் அபாயங்கள் அதிகமாக உள்ளன. ராமேசுவரம் கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் அதிகமாக காணப்படுவதால் அங்கு கடலில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ராமேசுவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளுக்கு ஜெல்லி மீன்கள் இனப் பெருக்க…
-
- 5 replies
- 909 views
-
-
சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு இன்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பினார். 2006ல் ஆட்சியில் இருந்த திமுக, 2011ல் தோல்வியைத் தழுவியது. அந்தத் தேர்தலிலும் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது, பேரவைத் தலைவராக இருந்த ஜெயக்குமாரின் அறையில் தனியாக சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு சட்டப்பேரவை லாபிக்கு மட்டும் கருணாநிதி அவ்வப்போது வந்து கையெழுத்திட்டுச் சென்றார். சட்டப்பேரவைக்குள் வந்தது இல்லை. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த மே 26ஆம் தேதி நடந்த எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணம் நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி பங்க…
-
- 0 replies
- 520 views
-
-
சேலத்திலிருந்து 342 கோடி ரூபாய் கிழிந்த ரூபாய் நோட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்னை வந்த ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க 3 ஆய்வாளர் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் இருந்து பெறப்பட்ட 342 கோடி ரூபாய் கிழிந்த ரூபாய் நோட்டுகள் சேலம் பேர்லேண்ட்ஸ் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. இந்த பணத்துடன் சேலத்திலிருந்து விரைவு ரயில் புறப்பட்டது. ரயில் கண்டெய்னரில் 226 மரப்பெட்டிகளில் அந்தப் பணம் கொண்டுவரப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த ரயில், சேத்துபட்டு பகுதியில் உள்ள ரய…
-
- 7 replies
- 2.4k views
-
-
வியட்நாம் வீடு சுந்தரம், பஞ்சு அருணாச்சலம், ஜோதிலட்சுமி ஆகிய திரையுலக பிரமுகர்கள் மறைவு அடுத்தடுத்து நடந்ததால் அந்த அதிர்ச்சியில் இன்னும் மீளாத கோலிவூட் திரையுலகினர்களுக்கு இன்று காலை மேலும் ஒரு அதிர்ச்சியாக இளம் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம் அடைந்ததாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமாருக்கு இன்று கடுமையான காய்ச்சல் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் மரணம் அடைந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 41 வயதே ஆன கவிஞர் நா.முத்துகுமார் தங்க மீன்கள் திரைப்படத்துக்காக எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடலுக்கும், 'சைவம்' திரைப்படத்துக்காக எழுதிய 'அழகே அழகே எதுவும் அழகே' என்ற பாடலுக்கும் தேசிய விருது கிடைத்துள்…
-
- 2 replies
- 3.1k views
-
-
தொலைபேசி தொடர்பை ஊக்கு விக்கும் வகையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் லேண்ட்லைன் வாயிலாக செய்யப்படும் உள்நாட்டு அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: லேன்ட்லைன் வாயிலாக மற்ற தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்கி வருகிறது. தற்போது மேலும் வாடிக்கை யாளர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் சுதந்திர தினமான வரும் 15-ம் தேதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் லேன்ட்லைன் இணைப்பு வாயிலாக செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப…
-
- 0 replies
- 469 views
-
-
'ஈஷா யோகா மையத்தில் இருக்கும் மகள்களை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்; இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என பட்டிமன்றம் வைக்க முடியாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகள்களை மீட்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. கோவை மாவட்டம், வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ்- சத்திய ஜோதி தம்பதியின் மகள்கள் கீதா (34), லதா (31). இவர்களது தந்தை காமராஜ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மகள்கள் இரண்டு பேரும் ஈஷா யோகா மையத்தில் உள்ளனர். இந்த நிலையில், ஈஷா யோகா மையம் சட்டவிரோதமாக தனது மகள்கள் இரண்டு பேரையும் சிறை வைத்துள்ளதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரி, சென…
-
- 0 replies
- 482 views
-
-
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் தினமும் பரபரப்பு தகவல்கள் வந்தவாறு உள்ளன. ஃபேஸ்புக்கில் சுவாதியின் கொலை தொடர்பாக தொடர்ந்து பல தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி என்பவர், தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். உண்மை குற்றவாளி ராம்குமார் இல்லை எனவும், கொலையாளி முத்துக்குமார் சுவாதியின் சித்தப்பாவின் பாதுகாப்பில் வசதியாக உள்ளான் எனவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே சுவாதியின் தந்தை அவரின் உண்மையான தந்தை இல்லை என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து தமிழச்சி பதிவிட்டுள்ள …
-
- 0 replies
- 839 views
-