தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
இலங்கைத்தமிழ் அகதிகளையும் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளையும் ஒன்றாக கருத முடியாது : இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரோஹிங்கியா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது என இந்திய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து ஆயிரக்கணக்கில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவுக்கும் குடிபெயர்ந்திருந்தனர். இந்நிலையில், இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய மத்திய அரசு வழங்கும் நிவாரண உதவிகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என ரோஹிங்கியா முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். குறித்த வழக்கு தொடர்பில் இந்திய மத்திய அரசு நே…
-
- 0 replies
- 359 views
-
-
காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் 5 பேர் ராஜினாமா? முதல்வருடன் அவசர சந்திப்பு #vikatanexculsive #weWantCMB காவிரிப் பிரச்னையில் ஆரம்பம் முதலே மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறவர்கள் நாடாளுமன்ற அ.தி.மு.க எம்.பி-கள் மூவர். திருச்சி தொகுதியின் குமார், கடலூர் தொகுதியின் அருண்மொழித்தேவன், அரக்கோணம் தொகுதியின் ஹரி. இவர்களுடன் ராமநாதபுரம் தொகுதியின் அன்வர் ராஜாவும் இப்போது சேர்ந்திருக்கிறார். டி.டி.வி.தினகரன் கோஷ்டி சார்பில் இருக்கும் ஒரே எம்.பி கோவை தொகுதியின் நாகராஜன். இவர்கள், ஐவரும் இன்று மாலைக்குள் காவிரிப் பிரச்னையில் மத்திய அரசு தமிழகத்துக்குப் பாதகமான முடிவை எடுத்தால், தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்கள். …
-
- 0 replies
- 574 views
-
-
திருச்சி/புதுடெல்லி: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும், டெல்லி வந்துள்ள நிலையில், அவர்களை பிரதமர் மோடியோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சரோ சந்திக்கும் திட்டம் எதுவுமில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 அப்பாவி மீனவர்களுக்கு நேற்று இலங்கை அதிபர் ராஜக்சே பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதையடுத்து, இன்று காலை 8.30 மணிக்கு அவர்கள் அனைவரும் திருச்சிக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அதனால், அவர்களை வரவேற்க ராமேஸ்வரத்திலிருந்து எமர்சன், அகஸ்டஸ், வில்சன், லாங்லெட், பிரசாந்த் உள்ளிட்டோரின் உறவினர்கள், …
-
- 0 replies
- 238 views
-
-
தமிழகத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் விபத்தில் பலி! kugenMay 23, 2023 தமிழகத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 19, 20 மற்றும் 21 வயதுடைய தயாளன், ஜோன் மற்றும் சார்லஸ் ஆகிய மூன்று இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கியுள்ளனர். எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த மூன்று இளைஞர்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்த…
-
- 0 replies
- 525 views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் பாஜகவுடன் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியாக இருப்பதால், …
-
- 0 replies
- 857 views
-
-
2026 தான் இலக்கு” – தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி! by Web EditorJune 9, 20240 தவெகவிற்கு 2026 தான் இலக்கு எனவும், ஜூன் 18-ம் தேதி சென்னையில் தவெகவின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக வெளியான செய்தி உண்மையல்ல எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “விஜய்யின் கட்டளையை நிறைவேற்ற தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். முதலில் தொழில் நடத்தி சம்பாதிக்க வேண்டும். அதன் பின்னர் குடும்பத்தை கவனிக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக சம்பாதித்த காசில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் …
-
- 0 replies
- 202 views
-
-
பட மூலாதாரம்,@TTHENARASU படக்குறிப்பு,தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 7 ஆகஸ்ட் 2024 தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வந்தது. …
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய சிப்காட் நிறுவனம் மூலம் ₹634 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார். பேரவையில் நேற்று பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படித்த அறிக்கை: உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி முதலீடுகளை ஈர்க்க `யாதும் ஊரே’’ என்ற தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் ரூ.60 லட்சம் செலவில் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கிட ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, சீனா, தைவான், பிரான்சு, இஸ்ரேல் மற்றும…
-
- 0 replies
- 600 views
-
-
ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பான அமுலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் .மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமுலாக்கத்துறை கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி கைது செய்தது. இந்நிலையில், ப.சிதம்பரம் தொடர்ந்த பிணை மனுவை டில்லி நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று ப.சிதம்பரத்திற்கு நிபந்தனையுடனான பிணை வழங்கியுள்ளது. முன்னதாக, சி.பி.ஐ. தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஒக்டோபர் 22ஆம் திகதி உச்ச நீதிமன்றம் சிதம்பரத்திற்கு பிணை வழங…
-
- 0 replies
- 467 views
-
-
சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரிப்பு! தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 01ஆம் திகதி காலை 8.30 மணிஅளவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்தின்போது, அருகே இருந்த 8 அறைகள் இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து வந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மேலும் ஒருவர மதுரை.யில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்…
-
- 0 replies
- 90 views
-
-
24 JUL, 2025 | 12:03 PM எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழ தேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன. இப்போது அந்தப் பிணங்கள் காலத்தின் கறையான் அரித்து எலும்புக்கூடுகளாய் மாறி, அவை ஈழத்தில் நிகழ்ந்தது இனப்படுகொலைதான் என்பதை அடையாளம் காட்டுகின்றன. செம்மணி மனிதப் புதைகுழியானது தமிழினப் படுகொலையின் சாட்சியாகும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செம்மணி புதைகுழிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தென்னிந்திய பிரபல நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான சேது கருணாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இனப்படுகொலைக்கு செம்மணிதான் சாட்சி. இதற்கு முன்னால் எத்தனையோ இனப்படுகொலை சாட்சி…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
முதலமைச்சருக்கு இருக்கும் கடமையும், பொறுப்பும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் உண்டு என்பது பாலபாடம்! எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று ஒரு முதலமைச்சர் பேசுவது ஜனநாயகப் பண்பல்ல! முதலமைச்சர் தன் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று முதலமைச்சர் கூறுவது ஜனநாயகப் பண்பல்ல - அதை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு: உலக நாடுகளையே வதைத்துக் கொண் டும், வரலாறு காணாத உயிர்ப் பலிகளை ‘காவு'…
-
- 0 replies
- 536 views
-
-
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:–ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள சாந்தன் தன்னை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி இலங்கை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியமானதென தெரியவில்லை. எனினும் அவரது உணர்வை மதிக்க வேண்டும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஜல்லிக் கட்டு நடத்த தனி மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி , வழிபாட்டு தலங்களின் அருகே அரசு மதுபானக் கடைகள் இயங்கவில்லை என்று கூறி வந்த அ.தி.மு.க. அரசு , தற்போது பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 1000 கடைகளை மூடப்போவதாக…
-
- 0 replies
- 293 views
-
-
இலங்கை அகதிகள் சிலர் இந்தியாவில் கைது தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சிலர் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் முட்டம் பகுதியிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிக்க முயன்றபோது, குற்றப்பிரிவு பொலிஸார் 14 இலங்கை அகதிகளை கைது செய்துள்ளனர். இதன்போது பிடிக்கப்பட்ட குறித்த படகு, சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அந்தப் படகில் பல ஆயிரம் லீட்டர் டீசல் இருப்பது தெரியவந்ததால், பாதுகாப்பு கருதி, கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் அந்தப் படகு நிறுத…
-
- 0 replies
- 510 views
-
-
தமிழகத்தில், ஆட்சியை பிடிக்க நினைத்த, தே.மு.தி.க.,வின், 12வது ஆண்டு விழா பிசுபிசுத் தது. கொடியேற்றும் விழாவுக்கு, 50 பேர் கூட வராததால், கட்சித் தலைவர் விஜயகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனால், நாளை நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆட்களை திரட்டி வரும்படி, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த, 2005 செப்., 14ல், மதுரையில், தே.மு.தி.க.,வை விஜயகாந்த் துவங்கியபோது, மிகுந்த எதிர்பார்ப்புடன், அவரது ரசிகர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும், அவர் பின் அணிவகுத்தனர். தொடர்ந்து, 2006ல் சட்டசபை, உள்ளாட்சி, சில தொகுதிகளின் இடைத்தேர்தல்கள், 2009 லோக்சபா தேர்தல்களை தனித்தே சந்தித்த …
-
- 0 replies
- 545 views
-
-
அட... இவ்வளவு எதிர்ப்புகளைக் கடந்தா ஓ.பி.எஸ். மீண்டும் வந்தார்....!? மூன்றாவது முறையாக மிக முக்கிய 'ஆளுமை'ப் பொறுப்பை ஏற்றிருக்கிறார் தமிழக நிதியமைச்சர் ஓ.பி.எஸ்! ஜெயலலிதா டான்சி வழக்கில் சிக்கி முதல்வர் பதவியை இழந்ததும், 2001 செப்டம்பர் 21-ம் தேதி, முதன்முறையாக ஓ. பன்னீர்செல்வம், முதல்வராகப் பொறுப்பேற்றார். அடுத்து, 2014 செப்டம்பர் 27-ம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு பெங்களுரு தனி நீதிமன்றம் தண்டனை விதித்ததையடுத்து மறுபடியும் ஜெயலலிதா முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். எனவே மீண்டும் 2015, செப்டம்பர் 29-ம் தேதியன்று இரண்டாவது முறையாக பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்கும் சூழல் ஏற்பட்டது. பின்னர் சொத்து…
-
- 0 replies
- 1.5k views
-
-
“ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லையா? அப்போ அப்போலோ CCTV காட்சிகளை வெளியிடுங்கள்!” - சசிகலா புஷ்பா அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச் செயலாளராக விளம்பரப்படுத்திக்கொள்ளும் சசிகலாவை எதிர்த்தும், ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வரவும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் சசிகலா புஷ்பாதான் இப்போதைய தமிழகத்தின் ஹாட் டாப்பிக். எந்த அரசியல்வாதியும் செய்யத் துணியாத காரியத்தைத் தைரியத்துடன் செய்திருக்கும் சசிகலா புஷ்பா விகடனுக்கு அளித்த சிறப்பு பேட்டி. ‘‘ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறீர்களே?’’ ‘‘அம்மாவின் மரணத்தில் ஏதோ ஒன்று மக்களுக்குத் தெரியக…
-
- 0 replies
- 534 views
-
-
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து நேற்று இரவு தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு தர்மபுரி நோக்கி புறப்பட்டது. பஸ்சை டிரைவர் வேலுசாமி என்பவர் ஓட்டி வந்தார். சுப்பிரமணி என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். நள்ளிரவு 11 மணியளவில் பஸ் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்தை தாண்டி மொட்டூர் என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். இரவு நேரம் என்பதால் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வேகத்தடை இருந்ததால் டிரைவர் பஸ்சை மெதுவாக ஓட்டினார். அப்போது சாலை ஓரத்தில் இருட்டில் மறைந்திருந்த 20 பேர் கொண்ட கும்பல் திடீரென பஸ்சின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் அதிர்ச்சி அடைந்த டிரைவர் திடீரென பஸ்சை நிறுத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
முதல்வருக்கு முட்டுக்கட்டை போடும் சசி குடும்பம்! அரசு விழா ரத்து; அதிகாரிகள் அதிர்ச்சி சசிகலா குடும்பத்தினர் உத்தரவு காரணமாக, முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கவிருந்த, அரசு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இது, அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., மறைவுக்கு பிறகு, தமிழக முதல்வராக, பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஏற்கனவே, இரு முறை முதல்வராக பணியாற்றியவர் என்பதால், அவர் முதல்வரானதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். இதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் …
-
- 0 replies
- 566 views
-
-
கும்ப கோணம் அருகே உள்ள ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட 1000 வருடங்கள் பழமைவாய்ந்த கோவில் இடிக்கப்படுவதை நிறுத்துமாறு கேட்டு கையொப்பமிடுங்கள். http://www.change.org/petitions/stop-demolishing-the-1000-year-old-temple? (முகநூல்)
-
- 0 replies
- 601 views
-
-
அன்று மகிழ்ச்சி... இன்று அதிர்ச்சி...! தீபாவின் இந்த நிலைக்கு இதுதான் காரணம்? ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டில் சில நாட்களாக ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அவரது தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளரான சசிகலாவின் தலைமையை ஏற்காதவர்கள் தீபாவின் பின்னால் அணிவகுத்தனர். தீபாவின் வீடு அமைந்துள்ள தி.நகருக்கு தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க.வினர் குவிந்தனர். தொடர்ந்து தீபா பேரவையும் தொடங்கப்பட்டு பேனர்களும் வைக்கப்பட்டன. தொண்டர்களைச் சந்தித்த தீபா, ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதி அரசியல் பயணம் குறித்து அறிவிப்பதாக தெரிவித்தார். இதற்கிடையில் சசிகலா, முத…
-
- 0 replies
- 1.2k views
-
-
மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்! கவர்னரிடம் பன்னீர் வலியுறுத்தல் 'சட்டசபையில், நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்ய வேண்டும்; மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், தி.முக., செயல் தலைவர் ஸ்டாலினின் பிரதிநிதி களும், அடுத்தடுத்து சந்தித்து வலியுறுத்தினர். முதல்வராக பதவியேற்ற, இடைப்பாடி பழனி சாமி, நேற்று முன்தினம், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரினார். ரகசிய ஓட்டெடுப்பு என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை; சபையில் ரகள…
-
- 0 replies
- 352 views
-
-
எங்கிருந்து வந்தது இந்த தைரியம்?' - ஐபிஎஸ் அதிகாரிகளிடம் சீறிய முதல்வர் பழனிசாமி! கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த சசிகலா அணி எம்எல்ஏ-க்களிடம் வாக்குமூலம் பெற்றதற்குப் பரிசாக, வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் பதவிகள் வழங்கப்படாமல், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க-வில் ஏற்பட்ட உள்கட்சிp பூசல் காரணமாக பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. சசிகலா அணியில் இருந்த எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட் டிருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்த எம்எல்ஏ-க்களும், எம்பி-க்…
-
- 0 replies
- 466 views
-
-
அலோபதி: சொந்தமாகப் பெயர் கூட இல்லாத மருத்துவமுறை! ம.செந்தமிழன் சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், ஓகமுறை மருத்துவம் (யோகா சிகிChickenpox/Pages/Treatment.aspx) அதாவது, ’அம்மையை குணமாக்க இயலாது. இதை உருவாக்கும் வைரஸ் கிருமி எந்த சிகிச்சையும் இல்லாமலேயே தம்மைத்தாமே அழித்துக் கொள்கிறது’ என்கிறது, அலோபதியின் தலைநகரம் போல் விளங்கும் பிரிட்டனின் அரசு. பிற அலோபதி வல்லுனர்களும் இதைத்தான் கூறுகிறார்கள். நம் மரபு மருத்துவம் இந்த உண்மையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்ததால்தான், அம்மை தாக்கியவருக்கு மருந்து தராமல், சிகிச்சை அளிக்கும் முறையை உருவாக்கியது. கூடுதலாக, வேப்பிலையும் பத்திய உணவும் சேர்ந்து, விரைவில் நலமடைய உதவுகின்றன. சர்க்கரை நோ…
-
- 0 replies
- 482 views
-
-
தினகரன் Vs எடப்பாடி! யார் 420 ‘ச்சீ 420(போஃர் ட்வென்ட்டி)’ எனத் தமிழ் திரைப்படங்களில் காதலி, காதலனை செல்லமாகத் திட்டும் காட்சிகள் பிரபலம்; ‘420 பீடா’ ரகம் பரவலாக அறியப்பட்ட லகிரி வஸ்து; ராஜ்கபூர் ‘ஸ்ரீ420’ என்ற பெயரில் ஹிந்திப் படம் ஒன்றை தயாரித்தார். என்றளவிலும், அடிக்கடி 420 பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிச்சாமியின் பேட்டிகளின் மூலம் 420 என்ற வார்த்தை அகில இந்தியப் பிரபலமாகிவிட்டது. தமிழகத்தில் இரண்டு நாட்களாக 420 என்பது வைரலாக வலம் வந்தது. 420-ல் அப்படி என்னதான் இருக்கிறது? நீயும் 420... நானும் 420... அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் நியமனம் செல்லாது என தம…
-
- 0 replies
- 541 views
-