தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10331 topics in this forum
-
சம்சங் நிறுவனம் கலக்ஸி நோட் 3 மற்றும் கலக்ஸி கியர் ஸ்மாட் கடிகாரத்தை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த கலக்ஸி நோட் 3யை தமிழ் மொழியிலும் இயக்கலாம். இதன் முக்கிய சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றாகும். சம்சங் கலக்ஸி நோட் 3யின் விலை 49 990 இந்திய ரூபாய் ஆகும். கலக்ஸி கியர் ஸ்மாட் கடிகாரத்தின் விலை 22 990 இந்திய ரூபாய் ஆகும். 5.7 இன்ஞ் 1080p சூப்பர் அமோலட் பனல் கொண்ட கலக்ஸி நோட் 3, 1.9GHZ எக்ஸ்னோஸ் அக்டா கோர் பிரசஸர் உடன் வந்துள்ளது. 13 மெகாபிக்சல் கமரா, 2 மெகாபிக்சல் Front கமெரா உள்ளன. அன்ரொய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கலக்ஸி நோட் 3யில் 3ஜிபி ரம் உள்ளது. கேலக்ஸி நோட் 3யில் 4K வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32 GB மற்றும் 64GB சேமிப்பு அளவுக…
-
- 0 replies
- 802 views
-
-
”தெனாலி’ திரைப்படத்தின் அடிநாதம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியதாகும். நான் அதைப் பூடகமாகச் சொன்னேன், ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் சொன்னது. நானே அதன் இன்னொரு பக்கத்தை பற்றி ஒரு திரைப்படம் எடுக்க முயன்றாலும் அதற்கு எனக்கு அனுமதி கிடையாது’ என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். ‘இலங்கைப் பிரச்சினையைப் பற்றி ஒரு திரைப்படமும் எடுக்க முயல முடியாது. இங்கே கருத்துரிமை கிடையாது. ஜெயகாந்தன், பெரியார் காலத்தில் அவர்கள் அனுபவித்த கருத்துச் சுதந்திரம் தற்போது ஒரு கலைஞர்களான எமக்கு கிடையாது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். - See more at: http://newsalai.com/cinemas/?p=914#sthash.b0cAfpky.dpuf
-
- 0 replies
- 459 views
-
-
ஈழத் தமிழர் மேம்பாட்டுக்காக நிரந்தர நிதி ஒதுக்கீடு தேவை; திருமாவளவன் வலியுறுத்து ஈழத் தமிழர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக நிரந்தர நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சிதம்பரத்துக்குச் சென்ற அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்:- தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்வது தொடர் கதையாகி விடுகிறது. இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது. இந்திய அரசு தீவிர முயற்சி எடுத்து இதற்கு நிலையான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவ்வாறு இல்லையயனில் தமிழக மீனவர்களின் நலன் குறித்து ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய பொறுப்பும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறு…
-
- 0 replies
- 382 views
-
-
• கலைஞர் தத்தெடுத்த அகதி சிறுவன் எங்கே? • ஸ்டாலின் குடும்பத்தால் அந்த சிறுவன் கொல்லப்பட்டானா? • அகதி சிறுவனுக்கு நீதி, நியாயம் கிடைக்குமா? 1983களில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அதில் ஒரு ஏழை அகதி சிறுவனை தான் தத்தெடுத்து வளர்ப்பதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்தார். அவருடன் அந்த சிறுவன் நிற்கும் படங்களும் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஆனால் தற்போது அந்த சிறுவன் குறித்து எந்த தகவலும் கலைஞர் குடும்பத்திலிருந்து வெளிவருவதில்லை. கலைஞருக்கு பல மனைவிகள். பல பிள்ளைகள். பல பேரப்பிள்ளைகள் என அவரின் குடும்பம் மிகப் பெரியது. இருந்தும் அவர் ஒரு ஏழை அகதி சிறுவனை தத்தெடுத்து தனது கருணை மனதை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஈழத் தமிழர்கள் மீது தான் …
-
- 0 replies
- 802 views
-
-
பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழி மற்றும் கட்டாயப் பாடமாக மாற்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள அரசு பணிகளில் சேருவதற்கு அதற்குத் தகுதியான வகுப்புகளில் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு அல்லது பட்டப் படிப்பில் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்கா விட்டால் மலையாள மிஷன் நடத்தும் மலையாள பட்டயப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றால் தான் அரசு வேலையில் சேர முடியும் என்றும், அதற்கேற்ப விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்றும் கேரள முதல்வர் கூறியுள்ளார். ஆனால், தமிழகத்தின் நிலையோ இதற்கு நேர் எத…
-
- 0 replies
- 337 views
-
-
அலோபதி: சொந்தமாகப் பெயர் கூட இல்லாத மருத்துவமுறை! ம.செந்தமிழன் சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், ஓகமுறை மருத்துவம் (யோகா சிகிChickenpox/Pages/Treatment.aspx) அதாவது, ’அம்மையை குணமாக்க இயலாது. இதை உருவாக்கும் வைரஸ் கிருமி எந்த சிகிச்சையும் இல்லாமலேயே தம்மைத்தாமே அழித்துக் கொள்கிறது’ என்கிறது, அலோபதியின் தலைநகரம் போல் விளங்கும் பிரிட்டனின் அரசு. பிற அலோபதி வல்லுனர்களும் இதைத்தான் கூறுகிறார்கள். நம் மரபு மருத்துவம் இந்த உண்மையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்ததால்தான், அம்மை தாக்கியவருக்கு மருந்து தராமல், சிகிச்சை அளிக்கும் முறையை உருவாக்கியது. கூடுதலாக, வேப்பிலையும் பத்திய உணவும் சேர்ந்து, விரைவில் நலமடைய உதவுகின்றன. சர்க்கரை நோ…
-
- 0 replies
- 494 views
-
-
சென்னை: ஏற்காடு சட்டசபை இடைத் தேர்தலில் அண்ணா திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஏற்காடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் சி.பெருமாள் மரணம் அடைந்ததையொட்டி டிசம்பர் 4ந் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று அஇஅதிமுகவின் தலைமை கேட்டுள்ளது. மத்திய அரசின் நவீன தாராளமய …
-
- 0 replies
- 450 views
-
-
நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேலு, செல்லத்துரை, அன்பழகன் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகள் மற்றும் பட்டினச்சேரியைச் சேர்ந்த பொன்னுசாமிக்கு சொந்தமான 1 விசைப்படகு ஆகியவற்றில் 32 மீனவர்கள் கடந்த 15ம் தேதி மாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் கோடியக்கரை அருகே சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகக் கூறி அவர்கள் 4 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்து 32 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு கொண்…
-
- 1 reply
- 549 views
-
-
தூத்துக்குடி: நான் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறேன். என்னை சோதிக்காதீர்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், வீரபாண்டிய கட்டபொம்மனின் 214வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி மதிமுக சார்பில் நினைவு தின பொதுக்கூட்டம் நடந்தது. கட்சி பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இங்கு போலீசாரின் கெடுபிடியை மீறி, ஏராளமானோர் திரண்டுள்ளீர்கள். இங்கு வந்தவர்களுக்கு, போலீசார் தடைகளை ஏற்படுத்தினர். கட்டபொம்மன் ஜாதி தலைவரா, கட்சி தலைவரா... சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். அவரது நினைவு தினத்தில் கூட்டம் நடத்த, போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். கிராமங்களில் உளவுத்துறையினர் சென்று, கட்டப…
-
- 0 replies
- 449 views
-
-
சென்னை: லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் தமிழகத்தில் அதிமுக 28. திமுக 5, காங்கிரஸ் 1 தொகுதியையும் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி ஏராளமான கருத்துக் கணிப்புகள் கடந்த சில மாதங்களாக வெளியாகி வருகின்றன. கடந்த ஜூலை மாதம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் சி வோட்டரும் இணைந்து இந்தியா முழுவதும் கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தன. அதில் பாரதிய ஜனதா கட்சி 131 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்திருந்தது. தற்போது பாஜக மட்டும் 162 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய மாநிலங்களில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளைக் கைப்பற்றக் கூடும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள…
-
- 0 replies
- 820 views
-
-
சென்னை: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு தமிழக காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவை மோடி சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல திருச்சியில் வந்து சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்தையும், மோடி நாளை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் சற்று கூடுதலாகவே காணப்படுகிறது. கடந்த மாதம் 26ம் தேதி திருச்சியில் நடந்த இளம்தாமரைக் கூட்டத்தில் மோடி பேசினார். பெரும் பிரமாண்டமாகக் கூடியது. இந்த நிலையில் நாளை அவர் சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 2.30 மணிக்கு அகமதாபாத்திலிருந்து சென்னை வரும் மோடிக்கு பாஜக நிர்வாகிகள் பிரமாரண்ட வரவேற்பு கொடுக்கவுள்ளனர். விமான நிலையத்திற்குப் பெரும் திரளா…
-
- 1 reply
- 421 views
-
-
சென்னை: அதிமுகவின் 42வது ஆண்டு விழா தொடக்கத்தையொட்டி கட்சி நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்தார். ஆண்டு விழா சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று அதிமுகவின் 42வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா அலுவலகத்திற்கு வருகை தந்தார். வழக்கம் போல ஜெயலலிதாவுக்கு கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். பின்னர் ஆண்டு விழா சிறப்பு மலரை அவர் வெளியிட்டார். கட்சிக்கொடியையும் ஏற்றி வைத்தார். பின்னர் நலிவடைந்த தொண்டர்கள் குடும்பத்தினருக்கும், மறைந்த அதிமுக தொண்டர்களின் …
-
- 0 replies
- 557 views
-
-
சென்னை: நேற்று சென்னையில் காலமான மாலை முரசு அதிபர் பா ராமச்சந்திர ஆதித்தனின் உடல் அவரது சொந்த ஊரான காயாமொழிக்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை காலை அங்கு அடக்கம் செய்யப்படுகிறது. சிபா ஆதித்தனாரின் மூத்த மகன் பா ராமச்சந்திர ஆதித்தன் நேற்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்பட தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்றும் ஏராளமான அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், அவரது நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று காலை அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி அருகில் உள்ள காயாமொழிக்குக் கொண்டுசெல்லப்படுகிறத…
-
- 0 replies
- 711 views
-
-
சென்னை: பிரதமர் கனவில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் கனவைத் தகர்க்கும் வகையில் படு தீவிரமாக செயல்பட்டு வருகிறார் சோ என்று பரபரப்புப் பேட்டியளித்துள்ளார் ம.நடராஜன். இதுகுறித்து விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் சோ மீது பயங்கரமாக பாய்ந்துள்ளார். நடராஜன் அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகள்... பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், சர்வதேச வாழ்வியல் சமூகத்தின் மாநாடு வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும். இந்த வருடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்தது. 52 நாடுகளைச் சேர்ந்த பல்துறை வல்லுநர்களுடன் இந்தியா சார்பில் நான் கலந்துகொண்டு மனித உரிமைகள் பற்றி பேசினேன். கனடாவில் உள்ள டொரொன்டோ நகரில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற கரும்புலிகள் தினத்தில் பங்கெடுத்த…
-
- 0 replies
- 836 views
-
-
-
ஐந்து முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்திய பெருந்திரளான போராட்டம் 15. 10. 13 செவ்வாய் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தியா இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் பண்ருட்டி வேல்முருகன். இலங்கைக்கு எதிரான போராட்டங்களை பொறுத்தவரை இவ்வளவு பெரிய கூட்டத்தை அண்மையில் யாருமே கூட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்திற்கு பண்ருட்டி வேல்முருகன் தலைமை தாங்கினார். காஞ்சி மக்கள் மன்றம் கலைக் குழு சார்பில் தமிழீழ விடுதலை குறித்த எழுச்சிப் பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டது. பறை இசை முழங்க, இளைஞர் பட்டாளம் வீறு கொண்டு எழுந்ததை அங்க…
-
- 33 replies
- 4.2k views
-
-
சென்னை: தமிழ் மான உணர்வுச் சுடர் அணைந்தது என்று மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை... தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் தலைமகன், மாலை முரசு ஏட்டின் அதிபர் இராமச்சந்திர ஆதித்தனார் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் தாக்கியது. அதிர்ச்சியால் மனம் கலங்குகிறேன். தன் தந்தையாரைப் போலவே தமிழ் இனமான உணர்வு கொண்டவராக தமிழ் ஈழ விடுதலை உணர்வாளராகவே வாழ்ந்தார். தமிழர்கள் உரிமைக்காக, தமிழ் ஈழ விடியலுக்காக தனது மாலைமுரசு ஏட்டையும், தான் நடத்திய கதிரவன் பத்திரிகையையும் அர்ப்பணித்தார்.பல ஆண்டுகளாக அவரது பரிவான நட்பைப் பெற்றிருந்தேன். நான் சந்திக்கும்போதெல்லாம் தமிழர் நலன், ஈழ வ…
-
- 0 replies
- 516 views
-
-
சென்னை: மறைந்த மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் உடலுக்கு அமைச்சர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பா.ராமச்சந்திர ஆதித்தன் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள், பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மைத்துனர் சுதீஷ், அவைத் தலைவர் ப…
-
- 0 replies
- 417 views
-
-
சிறிலங்கா தொடர்பாக இந்திய மத்திய அரசின் 'சாதுவான, கோழைத்தனமான' கண்டனம் - ஜெயலலிதா அதிருப்தி [ புதன்கிழமை, 16 ஒக்ரோபர் 2013, 07:43 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்கா கடற்படையால் தொடர்ந்தும் இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கமானது 'சாதுவான, கோழைத்தனமான' கண்டனத்தை வெளியிடுவதானது தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்வதற்கு சிறிலங்கா கடற்படையினருக்கு ஊக்கத்தை வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா செவ்வாயன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முதலமைச்சர் ஜெயலலிதா தனது அதிருப்தியை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். "எமது மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினரால் மீண்டும் மீண்டும் மே…
-
- 0 replies
- 354 views
-
-
(facebook)
-
- 0 replies
- 1.1k views
-
-
திருச்சி சிறப்பு அகதிகள் முகாம் சிறையில் மோதல்: இலங்கை அகதி கைது 15 அக்டோபர் 2013 திருச்சி சிறப்பு அகதிகள் முகாம் சிறையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில், இலங்கை அகதிகளை தடுத்துவைது கண்காணிக்க சிறப்பு முகாம் சிறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 வயதுடைய நிர்மல் ஆனந்த், மற்றும் 32 வயதுடைய இலங்கநாதன், ஆகியோருக்கு இடையே நேற்று முன்தினம் இரவு, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பில் முடிந்தது. சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவருக்கு மண்டை உடைந்தது. தகவலறிந்த சிறை பொலிஸார் நிர்மல்குமாரை மீட்டு, சிறை வளாகத…
-
- 0 replies
- 353 views
-
-
“தமிழீழம் விடுதலையடைய நூறு காரணங்கள் இருக்கின்றன! தமிழ்நாடு விடுதலையடைய நூற்றிரண்டு காரணங்கள் இருக்கின்றன!” – தோழர் பெ.மணியரசன் உரை! “தமிழீழம் விடுதலையடைய நூறு காரணங்கள் இருக்கின்றன! தமிழ்நாடு விடுதலையடைய நூற்றிரண்டு காரணங்கள் இருக்கின்றன!” நா.ப.இராமசாமி நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன் உரை! தமிழின உணர்வாளர்களுக்கு நாமக்கல் பகுதியில் துணை நின்ற திரு. நா.ப.இராமசாமி அவர்கள் கடந்த 23.09.2013 அன்று நாமக்கலில் காலமானார். அவரது நினைவேந்தல் நிகழ்வு 10.10.2013 அன்று நாமக்கல் – திருச்செங்கோடு சாலை – சுப்புலட்சுமி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சிலம்பொழி சு.செல்லப்பன் அவர்கள் தலைமையேற்றார். திராவிடர் விடுதலைக் க…
-
- 0 replies
- 788 views
-
-
பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா நாட்டின் பிரதமரானாலும் தமக்கு மகிழ்ச்சிதான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் பேட்டியளித்துள்ளார். தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் வியூகம் என்ன? தேசிய அளவில் கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதையொட்டிச் செயல்படுவோம். மாநில அளவில் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறோம். கேள்வி: மோடி அலை உண்மையா? எடுபடுமா? பதில்: மோடி ஒரு ரப்பர் பலூன். ஊடகங்கள்தான் அதைப் பறக்க விடுகின்றன. தேர்தலுக்குப் பின் காற்று இறங்கி, ரப்பர் கிழிசலாக அது கீழே விழுந்து கிடப்பதைப் பார்ப்பீர்கள். கேள்வி: ஜெயலலிதாவின் பிரதமர் கனவு? பதில்: 3வது அணியின் சார்பில்…
-
- 2 replies
- 614 views
-
-
தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும் என்ற தலைப்பில் தமிழர் குடியரசு முன்னணியின் பண்பாட்டு அமைப்பான - தமிழ்த் தேசிய பண்பாட்டு இயக்கம் நடத்திய கருத்தரங்கில் பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்கள் ஆற்றிய உரை:
-
- 0 replies
- 652 views
-
-
காவி இருளுக்கு இரையாகலாமா தமிழருவி? - கொளத்தூர் மணி இந்தியாவில் அடுத்து அமையப்போகும் ஆட்சி – அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள்பிரச்சினைகளை எல்லாம்தீர்த்துவிடப் போகிறது; ஊழலற்ற, நேர்மையான ஆட்சி ஒன்றுமலரப்போகிறது என்கிற மாயைகளில் மூழ்கிட நாம் தயாராகஇல்லை. தேர்தல் வழியாகமட்டுமே சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைத்துவிட முடியும் என்றநம்பிக்கையும் நமக்கு இல்லை. ஆனால், "இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியே வர வேண்டும், அதற்குத் தகுதியானவர்அவர் ஒருவரே" என்ற பிம்பம் திட்டமிட்ட வகையில் கட்டி எழுப்பப்படுகிறது. கார்ப்பரேட்ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இந்தக் கருத்தைப் பரப்புவதில் உற்சாகம் காட்டிநிற்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் இதன் பின்னணி…
-
- 0 replies
- 846 views
-