Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியதால் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை, கலியுக மணிமேகலை என திமுக தலைவர் கருணாநிதி சொன்னாலும் சொன்னார், ஃபேஸ்புக், டுவிட்டரில் கமெண்ட் போட்டு தாக்குகின்றனர். சிலப்பதிகார காப்பியத்தில் கோவலன்- மாதவிக்கு பிறந்தவர் மணி மேகலை. துறவரம் பூண்டு மக்களின் பசியை போக்க ஆண்டனை வேண்டிய காரணத்தால் மக்களின் பசியை போக்கும் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் அமுதசுரபி மணிமேகலைக்கு கிடைத்தது. அதன் மூலம் அனைவருக்கும் உணவு அளித்ததாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கோடிட்டு காட்டியுள்ளார். இத்தாலியில் பிறந்த சோனியா காந்தியை மணிமேகலையோடு ஒப்பிட்டு பாராட்டுவதா என்று கொதித்த இணைய போராளிகள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் தோராணங்களால் கட்டி தொங்க விடுகின்றனர் சாம…

    • 2 replies
    • 3k views
  2. சென்னை: காவிரி ஆற்றில் நீர்த்தேக்கம் அமைக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி பிரதமரை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடகாவில் அணைகள் நிரம்பி உபரி நீராக காவிரியில் வெளியேற்றப்படும் தண்ணீரினால் மேட்டூர் அணை நிரம்புகிறது. இவ்வாறு உபரிநீராக தமிழகத்திற்கு திருப்பி விடப்படும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அருகே நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களைக் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் உபரிநீரை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்வதில் காவிரி நடுவர் மன்றத்தில் எந்தவிதத் தடங்கலும் இல்லை. எனவே, மேக்கேதாட்டு அரு…

  3. ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமான கச்சத்தீவு பகுதியில் கடலில் சங்கு குளிக்கவும், கச்சத்தீவில் அபூர்வ செடி, கொடிகளை எடுத்துக் கொள்ளவும் கடந்த 133 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் குத்தகைக்கு விட்டுள்ளனர். அந்த குத்தகை ஆவணங்களை, ராமநாதபுரம் மன்னரின் வாரிசு தமிழக அரசுக்கு அனுப்பினார். ராமேசுவரத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது, சின்னஞ்சிறிய கச்சத்தீவு. இந்தியாவிடம் இருந்து பெற்ற இந்த தீவுப்பகுதியில் இந்திய மீனவர்களையே மீன்பிடிக்க விடாமல் இலங்கை அடாவடி செய்து வருவதால், கச்சத்தீவு பிரச்சினை இப்பொழுது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த தீவு நீண்ட நெடுங்காலமாக ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கு பூர்வீக பாத…

  4. ஈரோடு: பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தை பிரித்தால் நான்தான் அதிபராக இருப்பேன் என்று பிரபாகரன் அடம்பிடித்ததால் பிரிக்க முடியாமல் போய்விட்டது என்று புதுத் தகவலை வெளியிட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈரோ்டில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இப்படிப் பேசினார் ஈவிகேஎஸ். அவர் கூறுகையில், இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது. நேரு பிரதமராக இருந்ததில் இருந்து இன்று வரை இலங்கை தமிழர்களை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் பாடுபடுகிறது. தற்போது கூட இலங்கையில் தமிழர்கள்…

  5. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது. மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவ, மாணவிகளிடம் ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகிறது. கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து வருகின்றனர். டி ஷர்ட், டிராக் ஷூட் ஜிப்பா போன்றவற்றை வகுப்பறைக்கு அணிந்து வருகின்றனர். இதனால் கல்லூரிகளின் கண்ணியத்துக்கு குறைவு ஏற்படுகிறது என்று டி ஷர்ட் மற்றும் ஜீன்சுக்கு தடை விதித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது. முழுக்கை சட்டை, பேண்ட் அணிந்து வரவேண்டும். மாணவிகள் ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் ஷர்ட் அணியக் கூடாது. சல்வார் கமீஸ் அல்லது சேலை அணிந்துதான் கல்லூரிக்கு வரவேண்டும் என்று உத்தரவில…

  6. தமிழக முதல்வரின், போயஸ் கார்டன் வீடு அருகில் சுற்றித் திரிந்த, இலங்கைப் பெண்ணை, பாதுகாப்புப் பிரிவு போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். சென்னை, தேனாம்பேட்டை, போயஸ் கார்டன் பகுதியில், நேற்று முன்தினம், 53 வயது பெண் ஒருவர், சுற்றிக் கொண்டிருந்தார். மாலையில் அவர், முதல்வர் வீடு அருகில் வந்தார். அப்போது திடீரென பாதுகாப்பு போலீசாரை மீறி, முதல்வர் வீடு இருக்கும் பகுதியில் நுழைய முயன்றார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அப்பெண்ணைப் பிடித்து, தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர், இலங்கை, கொழும்பு, முகமதியாபுரம், மண்டல் பட்டு ரோட்டைச் சேர்ந்த, பரிமளா காந்தி, 53, என்பது தெரியவந்தது. இலங்கையில் இருந்து, கடந்த ஜூ…

  7. தமிழக மாணவர்கள் போராட்டங்கள் : நாம் என்ன செய்யலாம்? இந்த கேள்வி எம்மில் எல்லோருக்கும் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை ஒரு அரசியல் வெற்றியாக, குறிப்பாக டெல்லியின் இலங்கை அணுகுமுறையில் நிலையான மாற்றத்தை கொண்டுவர உதவவேண்டும் என்பது, மாற்றவேண்டும். உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். நன்றிகள்!

    • 49 replies
    • 6.8k views
  8. டெல்லி: வாசன் கோஷ்டிக்கு 15 சீட், ப.சிதம்பரம் கோஷ்டிக்கு 8, தங்கபாலுவுக்கு 5, இளங்கோவனுக்கு 3, நாராயணசாமி சொல்லும் நபருக்கு 1, குலாம் நபி ஆசாத் கோட்டாவுக்கு 2... இப்படித்தான் தேர்தல்களில் தமிழக காங்கிரஸ் கட்சியில் சீட் ஒதுக்குவார்கள். ஆனால், இந்த கோட்டை சிஸ்டத்துக்கு முடிவு கட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளாராம். ஒழுங்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் ராகுல் காந்தி, சட்டமன்ற- நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட விண்ணப்பிக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு 5 பக்க கொஸ்டீன் பேப்பரைத் தரச் சொல்லியிருக்கிறாராம். அதில், போட்டியிட விரும்புவோரின் சுய அறிவு, தொகுதி குறித்த அறிவு, பொது அறிவு ஆகியவற்றை சோதிக்கும் கேள்விகளு…

  9. சென்னை: பிரபல நாட்டுப்புறப் பாடகர், சமையல் கலை வல்லுநர், ஆய்வாளர் என்று பன்முகம் கொண்ட அனிதா குப்புசாமி, அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவர் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். தற்போது ஜெயா டிவியில் சமையல் தொடர்பான நிகழ்ச்சியி்ல அனிதா குப்புசாமி பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. அனிதா குப்புசாமி அடிப்படையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். பீகார் மாநிலம்தான் இவரது பூர்வீகம். பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமி மீது காதல் கொண்டு இருவரும் காதல் மணம் புரிந்தனர்.நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் புலமை பெற்றவர் அனிதா குப்புசாமி. அதில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார். நாட்ட…

  10. சென்னை: கச்சத்தீவு குறித்த மத்திய அரசின் பிரமாணப்பத்திரம் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கச்சத்தீவு பற்றிய வழக்கில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது; அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் சர்வ தேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது கச்சத் தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது. அதன் பிறகு 1974ஆம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே கச்சத் தீவு ஒ…

  11. கோவை: கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தன. 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. கூடவே சூறாவளியும் கைகோர்த்துக்கொண்டது. கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை பெய்த கனமழை காரணமாக கொடுங்கு பள்ளத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் 5 மீட்டர் தூரத்துக்கு மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 2 கிராம மக்களும் தங்கள் கிராமங்களுக்குள் முடங்கும் நிலை ஏற்ப…

  12. டெல்லி: கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தமானது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளதாக ராஜ்யசபாவில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்தார். கச்சத்தீவு பிரச்னை குறித்து ராஜ்யசபாவில் இன்று மைத்ரேயன் பேசினார். அப்போது அவர், 1974 ஆம் ஆண்டு ஜூன் 26ல் கச்சத்தீவு இலங்கையிடம் அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி- இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது என்றும் மைத்ரேயன் கூறினார். இந்திரா காந்தி- ஸ்ரீமாவோ ஒப்பந்தத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை என்று கூறிய மைத்ரேயன், கச்சத்தீவை இலங்கையிடம் அளித்தது தொடர்பாக அரசியல் சட்ட திருத்தமும் செய்யப்படவில்லை என்றார். எனவே கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க ம…

  13. சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றாமல் கைவிட்டால், நாம் அவர்களைக் கைவிடும் நிலை ஏற்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் பொன்விழா நிறைவு விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு கருணாநிதி ஆற்றிய உரை...: சேது சமுத்திரத் திட்டம் ரூ.2,457 கோடியில் தொடங்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். இந்தத் திட்டம் நிறைவேறும் சூழலில், முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார். இது தமிழர் நலன் மீது அக்கறை உள்ள செயல் இல்லை. ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. இதற்கு மத்திய அரசு இன்னும் இ…

  14. சென்னை: ஈரோட்டிலும், தஞ்சாவூரிலும் புதிய ரயில்வே போக்குவரத்து மேம்பாலங்களைக் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய மேம்பாலங்கள் அங்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெருமளவில் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது... தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் பல இடங்களில், ரயில்வே இருப்புப்பாதைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. சாலை மேம்பாலங்கள் மற்றும் கீழ் பாலங்கள் இல்லாத இடங்களில், வாகனங்கள் ரயில்வே கடவுகளில் அதிக நேரம் காத்திருந்து பயணங்களை தொடர வேண்டியுள்ளதால், பயண நேரம் அதிகமாதல், காலவிரயம் ஏற்படுதல், எரிபொருள் விரயம் மற்றும் விபத்துகள் ஏற்படுக…

  15. புதுடெல்லி: டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவனுக்கு, குற்றம் நடந்தபோது 17 வயது என்ற காரணத்தால், அவனுக்கு சிறார் நீதிமன்றம் 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதித்துள்ளது போதுமானது அல்ல என்று அம்மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த மாணவியின் சகோதரர், குற்றவாளி மீது நீதிமன்றம் மிகவும் கனிவாக நடந்துகொண்டுள்ளதாகவும், இந்த தண்டனை தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறினார். "எனது சகோதரி இறந்ததை நான் பார்த்தேன். சிறுவன் என குறைந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த குற்றவாளிதான் எனது சகோதரியிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டான். அவள் தினமும் ஆயிரம் முறை செத்…

  16. சென்னை: சென்னை சேலையூரில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னையில் வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டதாக தொடர்ப்பட்ட வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் இருவரை தேடிவந்ததாகவும் அவர்கள் இருவரும் சேலையூரில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டதாகவும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்றும் சென்னை போலீசார் கூறியுள்ளனர். அவர்கள் இருவரிடமும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். http://tamil.oneindia.in/news/2013/08/31/tamilnadu-2-…

    • 2 replies
    • 443 views
  17. சென்னை: தமிழகத்தில் நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, பா.ம.க தலைவர் ஜி.கே.மணி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், அதனை எதிர்த்து தமிழகத்திலே ஜனநாயகத்திலே அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இத்தகவலை தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. http://tamil.oneindia.in/news/2013/08/29/tamilnadu-pmk-writes-dmk-on…

  18. உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க தமிழகத்தில் மாணவர்களின் சைக்கிள் பரப்புரை பயணம். மார்ச் மாத போராட்டத்தின் போது திருச்சியில் காங்கிரஸ் குண்டர்கள் மாணவர்களைத் தாக்கிய இடத்திலிருந்து சென்னை நோக்கி 50 மாணவர்கள் 10 நாள் பரப்புரை பயணம். பயணத்தின் முடிவில் 50 சைக்கிள்களும் புழல் மற்றும் கும்மிடிப்பூண்டி முகாம் மாணவர்களிடம் ஒப்படைக்கப்படும். பயண மற்றும் சைக்கிள் செலவுகளுக்கு நிதி திரட்ட, உணர்வாளர்கள் அனைவரின் பங்கு இருக்க வேண்டி வரும் ஞாயிறு செப்.1ம் தேதி இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் இயக்கிய 'உச்சிதனை முகர்ந்தால்' சிறப்புக்காட்சி திரையிடப்படும். இடம் : சென்னை ஆல்பர்ட் திரையரங்கம். நேரம் : காலை 8:45. டிக்கெட் விவரங்களுக்கு : 91 500 400 91 மேலதிக விவரங்களுக்கு தொடர்புகொ…

  19. சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளும் வெற்றி பெறுவோம்.. அதற்காக தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் இன்று அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ போஸ் ஆகியோரது இல்ல திருமணங்களை நடத்தி வைத்தார் ஜெயலலிதா. இந்த திருமண நிகழ்ச்சியில்ஜெயலலிதா பேசியதாவது: எந்த அரசியல் இயக்கமும் கடைபிடிக்காத அளவுக்கு குடும்பப் பாசத்துடன் கட்சியை கட்டிக் காப்பாற்றியவர் பேரறிஞர் அண்ணா. இதனை பேரறிஞர் அண்ணா மறைவிற்குப் பின் இன்று வரை கட்டிக் காக்கின்ற ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். இங்கு நடைபெறுவது கழகக் குடும்பங்களின் விழா. பல்வேறு…

  20. சென்னை: ஐ.நா. வின் மனித உரிமை ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், ஈழத்தமிழர் படுகொலை குறித்த உண்மைகளைக் கண்டு அறிய, தமிழர் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, கொடுந்துயருக்கு ஆளானவர்களைச் சந்தித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சிங்கள அமைச்சர் மெர்வின் சில்வா என்பவன், ‘நவநீதம் பிள்ளையை வேண்டுமானால் நான் திருமணம் செய்து கொள்கிறேன்; இலங்கையைச் சுற்றிக் காட்டுகிறேன்' என்று கொச்சைப்படுத்தி இருக்கிறான். நீதிக்காகவே வாழ்கின்ற, போற்றத்தக்க மாதரசியான நவநீதம் பிள்ளை அவர்களை, இப்படி இழிவுபடுத்தி சிங்கள அமைச்சர் ஒருவன் பேசுகிறான் என்றால், ஏராளமான தமிழ்ப் பெண்களை, சிங்களவர்கள் கற்பழித்துக் கொன்ற கொடூரத்தின் பிரபதிபலிப்புத்தானே மெர்வின் சில்வாவின் இந்தத் திமிர்ப் பேச்சு? சிங்களவர்க…

  21. சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் சென்னையில் இன்று சந்தித்துப் பேசினார். லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிட்டு கைப்பற்றும் என்றுதான் ஜெயலலிதா தொடர்ந்து பேசிவருகிறார். சென்னையில் இன்று கூட நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெயலலிதா, 40 தொகுதிகளிலும் வெல்வோம் என்று பேசியிருந்தார். இருப்பினும் அதிமுகவுடன் இடதுசாரிகள் கூட்டணி அமைக்கக் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் காரத், ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த…

  22. ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்ததில், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகள் இருவர் காயம் அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் ரயில்வேபீடர் ரோடு பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. வெளிநோயாளிகள், பரிசோதனை மற்றும் டாக்டர்கள் அறை புதிய கட்டிடங்களில் இயங்கி வருகிறது. ஆனால் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டுகள், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதில் ஆண் நோயாளிகள், பெண் நோயாளிகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்ட நோயாளிகளுக்கான வார்டுகள் என மூன்று பிரிவுகள் இயங்கி வருகிறது. இதில் ஆண் நோயாளிகள் வார்டில் 22 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடுமுழுவதிலும் இருந்து பக்தர…

  23. சென்னை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரியும் லட்சகணக்கான முஸ்லீம்களை ஒன்று திரட்டி ஜனவரி 28ம் தேதி தமிழகத்தில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை... தமிழ்நாடு தவ்ஹீ்த் ஜமாத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஆர். ரஹ்மதுல்லாஹ் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார். தமிழகத்தில் முஸ்லீம்க…

  24. திருச்சி அரச சட்டக்கல்லூரி மாணவர்கள் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த கொலைகாரன் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் சிறீலங்காவில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு நடை பெறக்கூடாது என்றும் அதற்கு தேவையான நடவடிக்கையில் இந்திய அரசு உடனடியாக ஈடுபடவும், இனப்படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கடந்த மூன்று நாட்களாக சட்டக் கல்லூரி முன்பாக பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று 11:00 மணியளவில் மாணவர்கள் சிலர் திருச்சி டி வி எஸ் டோல்கேட் பகுதியில் சாலை மறியல் செய்தனர். இதனால் மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதனை தொடர்ந்து தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்…

  25. சென்னை: செனனை அருகே பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சேலையூர் அருகே உள்ளது சந்தோஷபுரம். இங்கு அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இங்கு விக்னராஜபுரத்தை சேர்ந்த ஜான்சன் என்பவரின் மனைவி ரீட்டாமேரி (39) என்பவர் விஷேச நாட்களில் உணவு தயார் செய்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்கி வந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 13 ம் தேதி அன்று தேதி ஆலயத்தில் சாம்பல் புதன் கொண்டாடப்பட்டது. அப்போது, பக்தர்களுக்கு உணவு கொடுக்கும் பணியில் ரீட்டாமேரி ஈடுபட்டார். இரவு வெகு நேரமாகி விட்டதால் சர்ச் பாதிரியார் அவரை மறுநாள் வரச் சொன்னதாக கூறப்படுகிறது. மறுநாள் பக்தர்களுக்கு உணவு கொடுத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.