Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிவகாசி: சிவகாசி அருகே எம்.துரைசாமிபுரத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அறைகள் வெடித்து சிதறின. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள எம்.துரைசாமிபுரத்தில், சிதம்பரம் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 40 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அறைகள் வெடித்து சிதறியதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த வெடி விபத்தால் உயிரிழப்பு பற்றி எதுவும் இதுவரை ஆதரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு சிவகாசி அருகே முதலி…

  2. சென்னை: தனது தொகுதியான ஸ்ரீரங்கத்தில் ரூ. 100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சட்டப் பள்ளியை முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையிலிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். மேலும் அதில் சேர்ந்துள்ள 7 மாணவ, மாணவியருக்கு அட்மிஷன் உத்தரவுகளையும் அவர் வழங்கினார். இதுதொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு... முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் பொறுப்பு வகிக்கும் ராஜேஷ் குமார் அக்ரவால் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்ட சட்ட உயர்கல்வி வழங்கப்படும் வக…

  3. சென்னை: ஈழத் தமிழரான ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இலங்கை அகதிகளான செந்தூரன், ஈழ நேரு, சவுந்தரராசன் ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ஈழ நேருவின் மனைவி, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அம் மனுவில், ஈழநேருவை இலங்கைக்கு அனுப்பினால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, ஈழ நேருவை இலங்கைக்கு அனுப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுத…

  4. சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கொலை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி மதுரை கேகே நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வந்தபோது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார். கோபி, திமுக நிர்வாகிகள் முபாரக் மந்திரி, கராத்தே சிவா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். மு.க. அழகிரி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத…

  5. இலங்கைத் தமிழர்களை வாழ வைக்க வேண்டும் என்ற சிந்தனை தான் இந்த அமைப்பு உருவாகவே காரணம். அந்தச் சிந்தனைக்கு இடம் தராமல் தடுக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அந்தத் தடையை உடைத்தெறிந்து தமிழர் படை முன்னேறும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் டெசோ ஆர்ப்பாட்டம் தமிழர்களின் குரலை எதிரொலிக்கும் ஆர்ப்பாட்டம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற டெசோ ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய கருணாநிதி மேலும் தெரிவிக்கையில், இது ஏதோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் விளம்பரத்திற்காக அல்ல இது ஒரு கட்சியினுடைய குறிப்பிட்ட கொள்கை அல்ல. இது தமிழர்களுடைய குரலை எதிரொலிக்கின்ற நிகழ்ச்சி. 'டெசோ" இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்…

  6. சென்னை: மெட்ராஸ் கபே படத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னையில் பல்வேறு மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர். மெட்ராஸ் கபே படத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் என சகல தரப்பினரும் களத்தில் குதித்துள்ளனர். விடுதலைப் புலிகளை இழிவுபடுத்து்ம் இந்தப் படத்தை திரையிடக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் தற்போது மாணவர்கள் தீவிரமாக இறங்கி வருகின்றனர். பல்வேறு ஊர்களிலும் சட்ட மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே, பாலசந்தர் மாணவர் இயக்கம் மற்றும் தமிழீழ விடுதலைக்கான மா…

  7. தமிழகத்துக்குள் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதால், தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 2-ஆம் திகதி இலங்கை உளவுத்துறை 3 பாகிஸ்தானியர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் போலி கடவூச்சீட்டு மூலம் இந்தியாவுக்கு செல்ல இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானில் பயிற்சி வழங்கப்பட்ட தீவிரவாதிகள் இலங்கைக்கு வந்து, அங்கிருந்து கடல் வழியாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவி சதி வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. முதல் கட்டமாக 8-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை ஊடுருவ வைக்கும் முயற்சி நடைபெற்று வருவதும் விசாரணையில் தெரியவந்துள்…

  8. இதில் தொடர்பு கொண்டு censor board க்கு petition இதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு (email) அனுப்புங்க மெட்ராஸ் கபே படத்திற்கு எப்படி அனுமதி கொடுத்தீங்கனு....சிங்களம் செய்த இனபடுகொலையை ஏன் எடுக்கவில்லை....தமிழ் போராளிகளை எதற்கு தீவிரவாதிகளாக சித்தரித்து உள்ளார்கள் என்று......இந்த படம் மூலம் தமிழர்கள் அழிக்க பட வேண்டியவர்கள் நு சொல்ல வரீங்களா ....அந்த படத்திற்கு அனுமதி கொடுத்து.....அப்படின்னு உங்க கருத்தை email பண்ணுங்க.... அதில் உள்ள தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு உங்க கருத்தை பதிவு செய்யுங்க.... இதை அனைவர்க்கும் பகிருங்கள்.இன்று ஒரே நாள் தான் உள்ளது படம் நாளை (23-08-2013) ஆகஸ்ட் 23 வெள்ளிகிழமை வெளியிட உள்ளார்கள்..அதனால்..உடனே புகார் தெரிவியுங்கள் க…

  9. ஈழத் தமிழர்கள் மூன்று பேரை தமிழகத்திலிருந்து வெளியேற்றி இலங்கைக்கு அனுப்பும்படி இந்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. செந்தூரன், ஈழ நேரு மற்றும் சவுந்தரராசன் ஆகிய மூவரையும் உடனடியாக நாடு கடத்தப் போவதாக தமிழக காவல்துறையைச் சார்ந்த கியூ பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இம்மூவரும் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்து அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். இவர்கள் மீது இந்திய இறையாண்மைக்கு எதிரான குற்றச்சாட்டுகளோ வழக்குகளோ ஏதுமில்லை. ஈழத் தமிழர்களின் சனநாயக உரிமைகளுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து அறவழியில் அமைதி வழியில் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்துவதால் காவல்துறை இவர்களை பொய்வழக்குகளில் கைது செய்வதுண்டு. மற்றபடி கிரிமினல் வழக்குகள் ஏதும் அவர்…

  10. செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்படுள்ளனர். இதில் பலர் மீது வழக்குகள் கூட இல்லை. இருந்தும் இங்குள்ள தமிழர்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றாமல் வெளிநாட்டு வாழ் அகதிகள் சட்டத்திற்கு புறம்பாக இவர்கள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுமார் 5 நபர்களை விடுதலை செய்யவதாக காட்டி மேலும் 10 நபர்களை இங்கு கொண்டு சிறை வைக்கிறது கியூ பிரிவு காவல்துறை. இதனால் இங்கு இருக்கும் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. தற்போது உள்ள 52 அகதிகளில் பலர் ஏற்கனவே பல முறை உண்ணா நிலை போராட்டம் செய்துள்ளனர். சிலருக்கு விடுதலை உத்தரவும் வந்துள்ளது. இருந்தும் காவல்துறை இவர்களை விடுவிக்காமல் அலைக்கழித…

  11. தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடிகர் விஜய்யின் உறவினருக்கு சொந்தமான தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தூத்துக்குடி சேவியர் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமான இன்டேவ் லாஜிஸ்டிக்ஸ் என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் தூத்துக்குடி கெரக்கோ தெருவில் உள்ளது. இந்த நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்நிறுவனத்திற்கு சொந்தமான கன்டெய்னட்டல் கன்டெய்னர் பிரிக்ட் ஸ்டேஷன் மற்றும் சரக்குபெட்டக தளங்களிலும் ஒரேநேரத்தில் 25க்கும் மேற்ப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான சேவியர்பிரிட்டோ நடிகர் விஜய்க்கு நெருங…

  12. சென்னை: பாகிஸ்தானை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இரு முறை நீக்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, இலங்கைக்கு எதிராக அதே நடவடிக்கையை எடுப்பதற்கு மட்டும் தயங்குவது ஏன்? பாகிஸ்தானுக்கு ஒரு நீதி.... இலங்கைக்கு ஒரு நீதியா? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் 23ம் தேதி நான் தான் முதன்முதலில் வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தின் மற்ற கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் …

  13. ஞானதேசிகன் ஞானோபதேசம் செய்கிறார் : கலைஞர் கடும் கண்டனம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகனுக்கு, திமுக தலைவர் கண்டனம் தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’இலங்கையை எதிரி நாடாகக் கருதினால், தமிழர்களின் பிரச்னை குறித்து யாரிடம் பேசுவது என்பதை தமிழக அரசியல் கட்சிகள் கூற வேண்டும் என ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ் காந்தியை தாக்கிய இலங்கை ராணுவ வீரன், அதற்காக வருத்தப்படவில்லை என சமீபத்தில் பேட்டி ளித் துள்ளான். லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கையை போர்க்குற்றவாளி என உலக நாடுகள் சுட்டிக் காட்டுகின்றன. உள்நாட்டுப் போரின்போதும், அதற்குப் பிறகும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறி…

  14. சென்னை: ராஜபக்சே ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். சுதந்திரப் போரட்ட தியாகி தீரர் சத்தியமூர்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஞானதேசிகன், இலங்கையை நட்பு நாடாக பார்க்காவிட்டால் 13வது சட்ட திருத்தம் தொடர்பாக இந்தியா யாரிடம் பேசுவது? என்று கேள்வி எழுப்பினார். தமிழக அரசியல் கட்சிகள் கூறுவது போல இலங்கையை நட்பு நாடாக கருத வேண்டாம் என்றால், யாரிடம் பேச வேண்டும்…

  15. இருவரிடையேயும் இருக்கும் ஈழ உணர்வுதான் என்னையும் கயல்விழியையும் இணைத்துள்ளது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை நாம் தமிழர் கட்சி தலைவரும் இயக்குநருமான சீமான் திருமணம் செய்ய இருக்கிறார். செப்டம்பர் 8-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் திருமணம் நடக்கிறது. உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார். மணப்பெண் கயல்விழி பற்றியும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த விதம் பற்றியும் சீமான் கூறியுள்ளதாவது ஈழ உணர்வாளர் காளிமுத்து கயல்விழியின் தந்தை மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்து …

    • 135 replies
    • 11.5k views
  16. குழந்தை தானாக தீப்பிடித்து எரியவில்லை... யாரோ எரித்துள்ளனர்... டாக்டர்கள் தகவலால் பரபரப்பு சென்னை: குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை. யாராவது நெருப்பை வைத்து குழந்தையை சித்ரவதை செய்திருக்க வாய்ப்புள்ளது என்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரங்குனி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கர்ணனின் குழந்தை ராகுல். குழந்தையின் உடல் தானாக தீப்பற்றி எரிவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இரண்டரை மாத குழந்தையின் உடலில் 4 முறை தானாக தீப்பற்றி எரிந்துள்ளதாக அதன் பெற்றோர்கள் தெரிவித்தனர். உடல் முழுவதும் தீக்காயத்துடன் குழந்தை காணப்பட்டது. இதனையடுத்து குழந…

    • 0 replies
    • 525 views
  17. மெட்ராஸ் கஃபே : சீன் பை சீன் முழு திரைக்கதையை இங்கு படியுங்கள், பிறகு நீங்களே சொல்லுங்கள் தடை செய்ய வேண்டாமா என்று? மெட்ராஸ் காபே ராஜிவை கொல்ல சதியில் ஈடுபடுபடுபவர்கள் சந்திக்கும் இடம் அது ஓர் உணவு விடுதி காட்சி 1 மூன்று நான்கு வாகனத்தில் ஆயுதங்களுடன் வரும் விடுதலைப் புலிகள் யாழ்பாண வீதியில் சென்று கொண்டிருக்கும் மக்கள் மீது கண்மூடிட்தனமாக தாக்குதல் நடத்துகிறார்கள் பேருந்து கொளுத்தப்பட்டு பலர் சாகடிக்கப்படுகிறார்கள் இக்காட்சி முடிந்த பிறகுதான் படமே துவங்குகிறது இலங்கை பெரும்பான்மையாக சிங்களர் வாழும் ஒர் நாடு அதில் சிறுபான்மையாக உள்ள தமிழர்கள் தங்களுக்கு தனி நாடு கேட்டு போராடுவதிலிருந்துதான் சிக்கல் பெரிதாகிற்று என்ற பின்னணி கதைக் குறல் நமக்கு கதை சொல்கிறது .எ…

  18. தமிழினப் படுகொலை புரிந்தும், மனித உரிமைகள் மீறலுக்கு ஆளாகியும், சர்வதேச அரங்கில் போர்க் குற்றவாளியாக குற்றக் கூண்டில் நிற்கும் இலங்கை அரசு கொழும்புவில் காமன்வெல்த் மாநாடு நடத்துவதே கேலிக்கும், கண்டனத்திற்கு உரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கச்சத் தீவை இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப்படி அப்போதைய இந்திய பிரதமரும், இலங்கை பிரதமரும் கையெழுத்திட்டுள்ளனர். ஆகவே கச்சத் தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும…

  19. பெரியார்தாசன் காலமானார். சென்னையில் பெரியார்தாசன் காலமானார். பெரியார்தாசன் உடல்நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார்தாசன் கேம்பிரிட்ஸ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பச்சையப்பன் கலூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடம் பெற்றார். தீவிர திராவிட கழகத்தைச்சேர்ந்த இவர் ஆத்திகவாதியாக மாறினார். இஸ்லாம் மதத்தில் இணைந்து மெக்கா சென்றார். -நக்கீரன்-

  20. மதராஸ் கபே திரைப்படம் முழுக்க முழுக்க தமிழர்களின் உணர்வை மேலும் கொச்சைப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது சுமார் நான்கு லட்சம் உயிர்களை இழந்து நிற்கும் எங்கள் தமிழனத்தின் வேதனை தீயில் மீண்டும் இவர்கள் இந்த திரைப்படம் மூலம் எண்ணையை ஊற்றிகிறார்கள் இதை தமிழகத்தில் வெளியிட்டால் தமிழகம் கொந்தளிக்கும் என்ற நோக்கிலும் மற்றும் சட்டம் , ஒழுக்கு , பிரச்சனை, உருவாக்கும் . முழுக்க முழுக்க இது காங்கிரசின் எண்ணமும் மற்றும் சதிவேலையும் இது வருகின்ற பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு போடப்பட்ட திட்டம்தான் , இந்த மெட்ராஸ் கபே திரைப்படம் , நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் எங்கள் இனத்தின் விடுதலை வேரோடு திசைதிருப்ப காங்கிரசின் ஏற்படுத்த…

  21. சென்னை: மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகையிடப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈழத்தின் விடுதலைக்காக ஈடு சொல்ல முடியாத வீரச்சமர் புரிந்து, உன்னதமான உயிர்த்தியாகம் செய்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தி, அபாண்டமான பழி சுமத்தி, நீதியை நிரந்தரமாகக் குழி தோண்டிப் புதைக்க, சிங்கள அரசு பல முனைகளிலும் தனது அக்கி…

  22. தமிழீழ கோரிக்கையை குழி தோண்டி புதைக்கும் நோக்கோடு இந்திய-இலங்கை மற்றும் சர்வதேசம் ஒன்றிணைந்து 13வது சட்டத்திருத்தத்தின் மூலமாக ஒன்றுபட்ட இலங்கையை திணிப்பதை தமிழகமாணவர்கள் வன்மையாக கண்டித்து எதிர்வரும் 25ஆம் நாள் சென்னையில் போராட்டம் நடத்தவுள்ளதாக பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் அறிவித்துள்ளது. தமிழீழ கோரிக்கையை குழி தோண்டி புதைக்கும் நோக்கோடு இந்திய-இலங்கை மற்றும் சர்வதேசம் ஒன்றிணைந்து 13வது சட்டத்திருத்தத்தின் மூலமாக ஒன்றுபட்ட இலங்கையை திணிப்பதை தமிழகமாணவர்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கையின் அரசியலைமைப்பு சட்டம் தமிழர்விரோத சட்டமாகும். அதனை ஏற்காத ஈழத்தமிழர்களிடம் தனிதமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை முன்னெடுக்காமல் துப்பாக்கி முனையில் மாகாணதேர்தல் என்ற ஒன்றை நடத்தி த…

  23. 14 வயது சிறுமியை சீரழித்த சாமியார்... சிறுமியின் தாயாரே உடந்தையான கொடுமை! சென்னை: சென்னையில் 14 வயது சிறுமியை ஒரு சாமியார் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துள்ளார். இந்த கொடும் செயலுக்கு அந்த சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை பரப்பியுள்ளது. சாமியார் மற்றும் தாயார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த சிறுமி மேலும் சீரழிந்து போக காரணமாக இருந்த 4 பேர் தலைமறைவாகி விட்டனர். பெரம்பூரைச் சேர்ந்தவர் அந்த சிறுமி. 14 வயதாகிறது. அவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். தாயார் சசிகலாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெரம்பூரில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு மகளை அழைத்துச் சென்றார் சசிகலா. அங்கு அறவழி சித்தர் என்ற குறி சொல்லும் சாமியா…

    • 5 replies
    • 1.1k views
  24. சென்னை: ஒவ்வொரு மாவட்டத்திலும் கோஷ்டிப் பூசல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த முட்டுக்கட்டைகளைத் தகர்த்து லோக்சபா தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வியூகம் வகுக்க சென்னையில் இன்று மாவட்டச் செயலர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். திமுகவில் தலைமைக் கழக நிர்வாகிகள் முதல் கிளைக் கழக நிர்வாகிகள் வரை ஒவ்வொருவரும் ஒரு அணி! இதைத்தான் மே 19-ந் தேதி நடைபெற்ற திமுகவின் பேச்சாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, கோஷ்டிப் பூசல்களால் திமுக செல்லரித்து வரும் நிலையில் இருக்கிறது. இதை வெட்கப்படாமல், வெளிப்படையாகச் சொல்கிறேன். இந்த உண்மையை மறைத்துவிட்டு, ஒரு தலைவன் - நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம் என்று சொன்னால், அது உசுப்பி விடுவதற்காக சொல்லப்படும்…

    • 2 replies
    • 390 views
  25. தமிழகத்தில் உள்ள ஈழ அகதி முகாம்களில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆபத்தான பணிகளில் ஈழ அகதிகள் இறங்கியிருக்கின்றனர். கடந்த ஏப்ரல் முதல் வாரம் தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 120 ஈழ அகதிகள் நடுக்கடலில் தத்தளித்தநிலையில் மீட்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 78 பேர் ஆண்கள், 20 பெண்கள், 22 குழந்தைகள். தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதி முகாம்களைச் சேர்ந்த இவர்கள் நாகப்பட்டிணத்தில் இருந்து ஒன்றாகத் தங்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தனர். கடந்த ஆண்டும் இதே போல் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்டபொழுது தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். உயிர் பிழைப்பதற்காக ஈழத்தில் இருந்து தமிழகம் வந்த ஈழ அகதிகள் ஏன் தமது உயிரைப் பணய…

    • 1 reply
    • 625 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.