Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மதுரை: மதுரையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் திமுகவில் இருந்து வந்து தற்போது ஆளுங்கட்சியில் இருக்கும் பரிதி இளம்வழுதியை மேடையில் வைத்துக் கொண்டே அக்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் அசிங்கப்படுத்தினார். பதிலுக்கு பரிதி திமுகவினரை அசிங்கப்படுத்தி பேசினார். மதுரையில் அதிமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய பரிதி இளம்வழுதி மற்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பேசிய அதிமுகவினர் சிலருக்கு பரிதியின் பெயரை சரியாக உச்சரிக்க தெரியவில்லை. இந்நிலையில் கூட்டத்தில் பேசிய மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் கூறுகையில்…

  2. இந்தியாவின் குழந்தை தொழிலாளர்கள் 40514089da49c9eacbc393905cc43715

  3. கொலை முயற்சி வழக்கு; விஜயகாந்த் திடீர் மாயம் தனது சொந்த தொகுதியான ரிஷிவந்தியத்தில், பல்வேறு திட்டப் பணிகளை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென அங்கிருந்து மாயமானார். ரிஷிவந்தியம் தொகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைப்பதற்காக வியாழக்கிழமை காலை விஜயகாந்த் வந்திருந்தார். பிறகு திட்டமிட்படி தோப்புச்சேரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கண்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து அகண்டை கூட்ரோட்டில் ரிஷிவந்திய ஊராட்சி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் மாற்றுத் திறனாளிகள் 8 பேருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கினார். 51 அங்கன்வாடி மையங்களுக்கு கேஸ் அடுப்பு மற்றும் க…

  4. தனி ஈழத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய தமிழக மாணவர் போராட்டம் பற்றிய 'அறப்போர்' ஆவணப்படம், பிரிட்டன், ஜெர்மன், ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச் சப் டைட்டிலுடன் வெளிவர இருக்கிறது . அது பற்றி இயக்குனர் வே.வெற்றிவேல் அவர்கள் :- தமிழர்களின் அரசியலும், பொதுவாழ்வும் சீர்குலைந்து கிடக்கின்ற நேரத்தில் இன்றைய இளைய தலைமுறை அது பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கிறதே என்கிற ஆதங்கம் சமூக ஆர்வலர்களுக்கு இருந்தது. வீட்டில் இருந்து பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்டு, மாலை மீண்டும் அதே கல்லூரி பேருந்தில் வீடுகளுக்கு கொண்டுவிடப்பட்ட மாணவ மாணவியர் தங்களுடைய எதிர்காலம் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள்; தங்களுடைய வருமானம், வளமான வாழ்வு பற்ற…

  5. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையிலுள்ள பேரறிவாளனின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதற்கானகாரணங்களை மத்திய அரசு வெளியிடத் தேவையில்லை என மத்தியத் தகவல் ஆணையம் கூறியிருக்கிறது. கருணை மனுக்கள் குறித்த மத்திய அமைச்சரவையின் பரிந்துரைகளுக்கு தகவலறியும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, எனவே பேரறிவாளன் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்த விபரங்கள் அளிக்கப்பட்டேயாக வேண்டும் என வற்புறுத்த முடியாது என தகவல் ஆணையர் சுஷ்மா சிங் தீர்ப்பளித்திருத்திருக்கிறார். ஆனால் ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரித்த நீதிபதி ஜெயின் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி உருவாக்கப்பட்ட பல்முனை கண்காணிப்ப…

  6. சென்னை: இளவரசனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திவ்யா விரும்பினால் உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இளவரசனின் உறவினர்கள் அதிகம் பேர் இருப்பதால் இறுதிச் சடங்கில் திவ்யா கலந்து கொள்ள இயலாமல் உள்ளது என்று வழக்கறிஞர் வைகை சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இளவரசன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பினால், அது குறித்த கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் திவ்யா தரப்பினர் அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், அங்குள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னையை கணக்கில் எடுத்துக் கொண்டு மனு குறித்து பரி…

  7. சென்னை: கருணாநிதியின் தத்துப்பிள்ளை, கனிமொழியின் தம்பி மு.க. மணி எங்கே என்று அதிமுக செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் வளர்மதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய அதிமுக செயற்குழு உறுப்பினருமான பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது, திமுகவில் இருப்பதோ கும்பல். ஆனால் அதிமுகவில் இருப்பதோ கூட்டம். கும்பல் கூடி கலைந்துவிடும். கூட்டமோ நிலையாக நிற்கும். நானும் உங்களுடன் நிலையாக நிற்பேன். தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படும் தேர்தலில் தான் திமுக எளிதில் வெற்றி பெறும். ஆரோக்கியமாக தேர்தல் நடந்தால் திமுக வெ…

    • 0 replies
    • 578 views
  8. தண்டவாளத்தில் கிடந்த தர்மபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் உடல்- தற்கொலையா? தர்மபுரி: தர்மபுரி கலவரம் வெடிக்கக் காரணமான காதல் ஜோடியில் இளவரசனின் உடல் இன்று ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி என்பவரின் மகள் திவ்யா. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு ஓடினார். இதையடுத்து தலித் மக்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. 3 தலித் கிராமங்கள் ஒட்டுமொத்தமாக சூறையாடப்பட்டன. இந்த விரக்தியில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இந் நிலையில் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் தாக்கல் செய்தார். இதையடுத்து, நீதிமன்ற உத…

  9. சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, விஜயகாந்த்தோ, அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, விஜயகாந்த் ஜாமீனில் வெளியே வரமுடியாத படி பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இதையடுத்து, பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விஜயகாந்த் கடந்த 3ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்…

  10. திருச்சி: மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து, அனைத்து பெட்டிகளும் பலத்த சோதனைக்கு பின்னர் சுமார் 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றது. மதுரையில் இருந்து இன்று காலை சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு வைத்திருப்பதாக திருச்சி ரயில் நிலைய மேலாளருக்கு நாகராஜ் என்பவர் செல்போன் மூலம் தகவல் சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து, வைகை எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியில் நிறுத்தப்பட்டது. திருச்சியில் இருந்து வெடிகுண்டு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை முழுவதுமாக சோதனை செய்தனர். அந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படாததால் அது வெறும் …

  11. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக குமரன் பத்மநாபனிடம் விசாரித்தால் பல தகவல்கள் வெளியாகும் என சென்னையை சேர்ந்த ஜெபமனி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மேலும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் எதுவும் வரவில்லை என்று ஜெபமனி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. http://dinaithal.com/tamilnadu/16706-kp-padmanabha-inquire-at-the-rajiv-gandhi-assassination-case-the-petition.html

  12. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து தமக்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தாக்கல் செய்த மனு விசாரணையை முடக்கும் நோக்கம் கொண்டது என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் கலைஞர் தொலைக்காட்சி ஆதாயம் அடைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தயாளு அம்மாளை சிபிஐ அரசு தரப்பு சாட்சியாக சேர்த்துள்ளது. இதனால் அவர் விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தயாளு அம்மாளுக்கு உடல்நிலைக் குறைவு என்றும் அவரால் எதையும் உணரக் கூட முடியாது என்றெல்லாம் கூறி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை சிப…

  13. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின்(என்எல்சி) 5 சதவீத பங்குகளை தமிழக அரசு வாங்குவதாக கூறியிருப்பதை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களில் குறைந்தது 10 சதவீத பங்குகள் மக்களுக்கு விற்கப்பட வேண்டும் என்றும், இதை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் பங்கு பரிவர்த்தனை வாரியம்(செபி) உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையை பின்பற்ற என்எல்சி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளில் 5 சதவீத பங்குகளை விற்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. என்எல்சியின் 5 சதவீத பங்குகள் விற்பதன் மூலம் மத்திய அரசுக்கு ணீ466 கோடி கிடைக்கும். இதற்கிடையே, என்எல்சி பங்…

    • 0 replies
    • 470 views
  14. காதல் திருமணத்தை தாயார் ஏற்றுக்கொண்டால், கணவருடன் வாழ்வது பற்றி முடிவு செய்வேன் என்று ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் தர்மபுரி பெண் வாக்குமூலம் அளித்தார். சென்னை ஐகோர்ட்டில் தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி (வயது 44) தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகள் திவ்யாவும் (வயது 20), மகன் மணிசேகரும் கல்லூரி படித்து வருகின்றனர். இந்த நிலையில் திவ்யா கடத்தப்பட்டு, இளவரசன் (வயது 19) என்பவருடன் சட்டவிரோதமாக திருமணம் செய்ததைத் தொடர்ந்து எனது கணவர் நாகராஜ் கடந்த நவம்பர் 7-ந் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் திவ்யா தொடர்பு கொண்டு, இளவரசன் தன்னை மிரட்டுவதாகவும், வாழ்வுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித…

    • 0 replies
    • 550 views
  15. விடுதலை புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. விசாரணையின் போது, வைகோவின் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டது.http://www.dinaithal.com/tamilnadu/16628-reply-to-the-petition-against-the-ban-on-the-ltte-discount.html

    • 5 replies
    • 593 views
  16. திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆதரவு கேட்டுப் பெறப்பட்டதால், இலங்கைப் பிரச்சினையை தி.மு.க. மறந்து விட்டதாக சிலர் சொல்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும், தே.மு.தி.க., மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளிடமும், பின்னர் காங்கிரஸ் கட்சியிடமும் ஆதரவு கேட்டது உண்மைதான். இதில் எந்தக் கட்சியிடமும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் மாநிலங்களவைத் தேர்தலையொட்டி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், ஒரு சிலர் காங்கிரஸ் கட்சியோடு திமுக உறவு கொண்டுவிட்டது. இலங்கைப் பிரச்னையைக் கைகழுவிட்டது என்றெல்லாம் வெறுப்பு அரசியல் செய்கின்றனர் என்று கூறுகின்றனர். இலங்க…

    • 1 reply
    • 435 views
  17. ராஜ்யசபா தேர்தலில் திமுகவை ஆதரித்திருந்தாலும் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: கருணாநிதி. சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளித்திருந்தாலும் அதனுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆதரவு கேட்டுப் பெறப்பட்டதால், இலங்கைப் பிரச்சினையை திமுக மறந்துவிட்டதாக சிலர் சொல்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும், தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளிடமும், பின்னர் காங்கிரஸ் கட்சியிடமும் ஆதரவு கேட்டது உண்மை தான். இதில் எந்தக் கட்சியிடமும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல…

  18. தமிழக சட்டசபையில் தே.மு.தி.க.வின் பலம் 29 ஆக இருந்தது. இதில் மாபா பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன், சுந்தரராஜன், அருண் பாண்டியன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய 7 பேரும் பிரிந்து சென்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் அனைவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள். அப்போது தொகுதி மேம்பாடு குறித்து பேசியதாக விளக்கம் அளித்தார்கள். நடந்து முடிந்த டெல்லி மேல்சபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இதையடுத்து 7 பேரையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி விஜயகாந்த் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் ‘தங்களை ஏன் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க கூடாது என்பத…

    • 0 replies
    • 414 views
  19. மார்க்சிய- பெரியாரிய சிந்னையாளர், தமிழீழ விடுதலை ஆதரவாளர், தமிழ்த் தேசியப் பற்றாளர், என பல தளங்களில் இயங்கிய, இயக்குநர் மணிவண்ணன் அவர்களுக்கு தமிழ்க்கலை இலக்கியப் பேரவை சார்பில் இன்று மாலை மாலை 6.00 மணியளவில் சென்னை, வடபழனி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்தில் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது . இவ்விழாவிற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை ஏற்க , உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார் . இயக்குநர் வெ. சேகர், ஓவியர் புகழேந்தி, இயக்குநர் வ. கெளதமன், இயக்குநர் ம. செந்தமிழன், எழுத்தாளர் ப.ஜெயபிரகாசம் ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர் . Photos http://www.dinaithal.com/cinema/16600-toda…

    • 0 replies
    • 516 views
  20. இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடி திரைப்படத்தில் வரும் சாதி தொடர்பான காட்சிகளைக் கண்டித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து , தேனியில் உள்ள பாரதிராஜா வீட்டின் முன் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.http://dinaithal.com/tamilnadu/16590-director-bharathi-raja-in-front-of-the-house-arpattam.html

    • 0 replies
    • 567 views
  21. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நீதிபதி அல்டமாஸ் கபீர் இருந்து வருகிறார். வருகிற ஜூலை மாதம் 18-ந் தேதியுடன் அவர் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதில் புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி பிராணப் முகர்ஜி நியமனம் செய்துள்ளார். தற்போது இவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணிபுரிகிறார். நீதிபதி பி.சதாசிவம் சுப்ரீம் கோர்ட்டின் 40-வது தலைமை நீதிபதியாவார். வருகிற 19-ந் தேதி அவர் பதவி ஏற்கிறார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். நீதிபதி பி.சதாசிவம் 1949-ம் ஆண்டு …

    • 0 replies
    • 407 views
  22. காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளால் தனித்து விடப்பட்ட தே.மு.தி.க வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அந்த கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது பற்றி பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது பற்றி தே.மு.தி.க. முடிவு எடுத்தால் நாட்டின் நலன் கருதி அதை கருத்தில் கொள்வோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் யார் காங்கிரசோடு கூட்டணி அமைத்தாலும் அது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். தி.மு.க. 2004 முதல் 2013 தொடக்கம் வரை மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்து, ஆட்சியில் பங்கு பெற்று இருந்தது. அந்த காலகட்டத்தில் இலங்கை தமிழர்களின் பேரழிவுக்கு காரணமாக இருந்ததை யாராலும் மறைக்க …

    • 0 replies
    • 328 views
  23. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு, கடந்த 21–ந்தேதி மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்து இருந்தது. 5 சதவீத பங்கு விற்பனை மூலம் மத்திய அரசுக்கு ரூ.466 கோடி வருவாய் திரட்ட முடியும். இந்த முடிவுக்கு நெய்வேலி நிறுவன தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த முடிவை வாபஸ் பெறாவிட்டால், வருகிற 3–ந்தேதி (புதன்கிழமை) நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று, தொழிலாளர்கள் அறிவித்து உள்ளனர். தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நெய்வேலி நிலக்கரி ந…

    • 0 replies
    • 439 views
  24. சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து கனிமொழி காப்பாற்றப்படவேண்டும், ஊழலுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் காட்டிக்கொடுக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற சுயநலம் காரணமாகவே ஆதரவு அளிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற இருக்கும் ராஜ்ய சபைத் தேர்தலில் கனிமொழியை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆக்கியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு பெற்றிருக்கும் தி.மு.க.வின் புதிய நாடகம், அரசியல் உலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் கேலிக்கும், நகைப்பிற்கும் உள்ளாகி இருக்கிறது. ராஜ்ய சபை உறுப்பினராவதன் மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து கனிமொழி…

    • 8 replies
    • 905 views
  25. கோவை: மேக மூட்டம் காரணமாக கொடநாடு சென்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் தவித்து, பின்னர் கோவை சென்றது. கொடநாட்டில் ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு புறப்பட்டு சென்றார். சென்னை போயஸ் கார்டனில் இருந்து இன்று காலை 10 மணிக்கு காரில் மீனம்பாக்கம் விமான நிலையம் புறப்பட்ட அவர், பின்னர் அங்கிருந்து கொடநாட்டுக்கு ஹெலிகாப்டர் மூலமாக வந்தார். ஆனால், கொடநாடு பகுதியில் மேகமூட்டம் அதிகம் இருந்ததாலும், வானிலை சரியில்லாததாலும், ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் தவித்தது. பின்னர் கோவைக்குச் சென்றது ஹெலிகாப்டர். அங்கிருந்து முதல்வர் கார் மூலம் கொடநாடு வருவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கொடநாட்டில் சில வாரங்கள் அங்கு ஓய்வு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.