தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
தர்மபுரி: ஓடும் பேருந்தில் தாயின் மடியில் உறங்கிய குழந்தை படியில் உருண்டு கீழே விழுந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பிய அதிசய சம்பவம் தர்மபுரியில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த சிலர் குழுவாக கோடை சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்காக பேருந்து ஒன்றில் கிளம்பிய அவர்கள் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை சுற்றிப் பார்த்திருக்கிறார்கள். அதன்பின் அன்று மாலையே மேட்டூரில் இருந்து கர்நாடகா மாநிலம் கே.ஆர்.பி அணையை பார்க்கும் திட்டத்தோடு கிளம்பியிருக்கிறார்கள். அந்த சுற்றுலா குழுவில் உஷா என்ற பெண்ணும் அவரது 10 மாத கைக் குழந்தையான ஸ்ரீவாணியும் இருந்திருக்கிறார்கள். உஷா தன் குழந்தையுடன் பேருந்தின் படியோரத்தில் உள்ள சீட்டில் அ…
-
- 0 replies
- 336 views
-
-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திமுகவும், ‘டெசோ’ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர்களும், ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கூட காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையிலே நடத்தக் கூடாது என்றும், அதற்கு இந்திய அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர். பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆ…
-
- 1 reply
- 286 views
-
-
3 வழக்குகளிலும் ஜாமீன்: புழல் சிறையில் இருந்து அன்புமணி ராமதாஸ் விடுதலை பா.ம.க. இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக, திண்டிவனம் இன்ஸ்பெக்டர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் கடந்த 5 ஆம் தேதி புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அன்புமணி, திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி திண்டிவனம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலனை செய்த திண்டிவனம் கோர்ட், அன்புமணிக்கு இன்று ஜாமீன் வழங்கியது. சென்னை தி.நகரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதேபோல…
-
- 0 replies
- 447 views
-
-
நெல்லை: பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி. நெல்லை மேலகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பேருந்து நடத்துனர். இவரது மனைவி பிரேம பாக்கியம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சிந்துஜா. 17 வயதான இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ படித்திருந்தார். இந்த பள்ளிதான் நெல்லை மாவட்டத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. நன்கு படிக்கக்கூடியவர் சிந்துஜா. தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற …
-
- 3 replies
- 778 views
-
-
டெல்லி: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தியின் கடின உழைப்புதான் காரனம் என்று பாராட்டியிருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மன்மோகன்சிங், கர்நாடகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு கடினமாக உழைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தான் முன்னிலை வசித்தார். இந்த வெற்றிக்காக கர்நாடகாவில் சிறப்பாக பணியாற்றிய காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடகத்தில் ஏற்பட்ட தோல்வி என்பது பாஜகவின் சித்தாந்தத்துக்கான தோல்வியாகும். இந்த நாட்டு மக்கள் அனைவருக்குமே பாஜக நிராகரிப்பட்டதற்கான காரணம் தெரியும். நாட்டில் ஊழல்தான் மிகப் பெரிய பிரச்சனை. இந்த ஊழலை அனைவரும் ஒ…
-
- 8 replies
- 702 views
-
-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் பட்டியல்கள் 27ம் தேதி வழங்கப்படும். மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்கண்ட இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். http://tnresults.nic.in http://dge1.tn.nic.in http://dge2.tn.nic.in http://dge3.tn.nic.in இதில் http://dge3.tn.nic.in என்ற இணைய தளம் GPRS/WAP வசதியுடன் கூடிய செல்போனிலும் தேர்வு முடிவுகள் தெரியும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள விரும்புவோர் 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD<space><registration>,<DOB in DD/MM/YYYY> என்ற வடிவில் எஸ்எம்…
-
- 0 replies
- 415 views
-
-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளில் நாளை காலை 10 மணிக்கு வெளியிட பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள். விடைத்தாள் மதிப்பீட்டு பணி மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி முடிந்தது. விடைத்தாள் திருத்துவது முடிவடைந்ததும் மதிப்பெண் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி சென்னை கிண்டியில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மையத்தில் (டேட்டா சென்டர்) மேற்கொள்ளப்பட்டது. மதிப்பெண் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடி…
-
- 3 replies
- 644 views
-
-
சேலம்: சேலத்தில் காவல் நிலையம் முன்பு 7 பேர் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பட்டப்பகலில் பைனான்சியர் சண்முகம் என்பவர் டீக்கடையில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாபு என்பவரை அன்னதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கன்டிஷன் ஜாமீனில் பாபு சிறையில் இருந்து வெளியே வந்தார். அதை தொடர்ந்து தினமும் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பத்து நாட்களாக காலையில் கையெழுத்து போட்டு வந்தார். இவருக்கு பாதுகாப்பாக அவரது உறவினர்களும் அவருடன் வருவார்களாம். அதேபோல இன்று காலை 10 மணிக்கு ஸ்டேஷனுக்கு கையெழுத்து போடுவதற்காக, பாபு தன்னுடைய…
-
- 0 replies
- 372 views
-
-
சென்னை: புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், "புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்று நோய்களை தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் உணவு கலப்படத் தடைச் சட்டம் Prevention of Food Adulteration Act 1954-ன் கீழ், மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை 19.11.2001 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எனது அரசு தடை செய்து, அறிவிக்க…
-
- 0 replies
- 513 views
-
-
றைமலைநகர் அடிகளார் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அலுவலகம் உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல் கீற்று கொட்டகையிலான கட்சி அலுவல கத்திற்கு தீ வைத்து தப்பி ஓடி விட்டனர். காற்றின் வேகத்தில் தீ மளமளவென கொட்டகை முழுவதும் பரவி பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி, பேனர்கள் எரிந்து நாசமானது. கட்சி அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது பற்றி அறிந்ததும் ஏராளமான விடுதலை சிறுத்தை பிரமுகர்கள் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி. குமார், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்…
-
- 0 replies
- 337 views
-
-
ம.தி.மு.க.வின் இருபதாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:- இந்த இயக்கம் கடந்த 19 ஆண்டுகளாக கடந்து வந்துள்ள பாதையை நினைத்து பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. நமக்கு உரிய இடத்தை தமிழக மக்கள் தந்துள்ளனர். தமிழக மக்கள் நம்மை அக்னி பரீட்சை கொண்டு பார்த்துள்ளனர். இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு பல துயர சம்பவங்கள், இழப்புகள் மற்றும் அடிகளை சந்தித்து வந்துள்ளது. தமிழகம் கொடிய வறட்சியின் பிடியில் இருக்கிறது. இது அழிவை தரக்கூடியது என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் காவிரி நீரை இ…
-
- 0 replies
- 345 views
-
-
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்திய கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர் ராமதாசும், அக்கட்சியின் முன்னணித் தலைவர்களும் ஆற்றிய உரைகளும், அக்கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கும், வழியே இருந்த தாழ்த்தப்பட்டோர் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நடந்த மோதலும், அது தொடர்பாக விசாரணை கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது மருத்துவர் ராமதாஸ், பா.ம.க.தலைவர் கோ.க. மணி உள்ளிட்ட 400 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்துவரும் வன்முறை நிகழ்வுகளும் மிகுந்த கவலையளிக்கிறது. மாமல்லபுரம் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையிலான வன்மு…
-
- 8 replies
- 676 views
-
-
-
கூடங்குளம் வழக்கு, மதுரை ரஜினி ரசிகர்களை தாக்கிய வழக்கு உட்பட பழைய வழக்குகளெல்லாம் தூசி தட்டப்பட்டு ராமதாஸ் மீது போடப்படுவது, விழுப்புரம் நீதிமன்றம் வழங்கிய பிணையை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றம் சென்றது குறித்தெல்லம் பலருக்கும் பல கேள்விகள் இருக்கின்றன. பாமக கும்பல் கூடிய சீக்கிரத்தில் வெளியே வரக்கூடாது என்று ஜெயலலிதா இவ்வளவு தீவிரமாக இருப்பதற்கு காரணம் என்ன? மாமல்லபுரம் வன்னியர் சங்க கூட்டத்தில் நடந்த நாடகமொன்றில் ஜெயா, சசிகலா வேடமிட்டவர்கள் பேசிய பேச்சுதான் ஜெயாவின் கோபத்திற்கு முக்கிய காரணம் என்று சில ஊடகங்கள் எழுதுகின்றன. அப்படி கோபப்படும்படி அந்த நாடகத்தில் ஏதுமில்லை என்பதே உண்மை. அரசியலிலும், அறிக்கையிலும் கூட ஜெயலலிதாவை நேரடியாக கண்டிக்க முடியாதவர்கள் நாடக…
-
- 0 replies
- 723 views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காருக்கு முன்பு சட்டையைக் கழற்றி தனது கோரிக்கையை வலியுறுத்தி போராட முயன்ற நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்து அப்புறப்படுத்தினர். நேற்று முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபை கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார். தலைமைச் செயலக வளாகத்தில் அப்போது முதல்வரிடம் மனு கொடுக்க பலர் காத்திருந்தனர். அவர்களை கயிறு கட்டி பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர். முதல்வர் காரில் ஏறி புறப்பட்டபோது திரண்டிருந்த அ.தி.மு.க.,வினர் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். அப்போது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிச்சையாண்டி என்பவர் திடீரென தன் சட்டையை கழற்றத் தொடங்கினார். அதிர்ச்சியடைந்த பொலிசார் அவரை சுற்றி வளைத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணை நடத்தியபோது, தீயினால் பாதிக்க…
-
- 0 replies
- 563 views
-
-
சென்னை: மரக்காணம் கலவரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தர விட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வராகி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி சித்திரை திருவிழா என்ற பெயரில் பா.ம.க. சார்பில் கூட்டம் நடத்தினார்கள். அப்போது, கலவரம் வெடித்தது. இதனால் பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்தன. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட கலவரம் காரணமாக ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பா.ம.க.வினரால் சேதப்படுத்தப்பட்டன. சில பேருந்…
-
- 0 replies
- 313 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடி வரும், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பாஸ்போர்ட் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் பதிவானதை தொடர்ந்து, அவரது பாஸ்போர்ட், சில மாதங்களுக்கு முன், முடக்கி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர், ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். `சரியான காரணங்கள் இன்றி பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கக்கூடாது' என ஐகோர்ட் உத்தரவிட்டதால், பாஸ்போர்ட்டை அவரிடம் திரும்ப ஒப்படைத்தனர். அவர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக, கைது வாரண்ட் உள்ளதாக, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு, நெல்லை எஸ்.பி., தெரிவித்துள்ளார். இதையடுத்து `உங்கள் பா…
-
- 0 replies
- 326 views
-
-
மத்தியில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன். பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கம்யூனிஸ்ட் தியாகிகள் இரணியன், ஆறுமுகம், சிவராமன் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த சிபிஐ விசாரணையில் மத்திய அமைச்சர்கள் தலையீடு இருப்பது தெரிய வந்துள்ளது. ரயில்வே அமைச்சரின் உறவினர் ரூ.90 லட்சம் லஞ்சம் பெற்றதாக அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவற்றுக்கெல்லாம் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஒட்டு மொத்தமாக மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும். தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக…
-
- 0 replies
- 400 views
-
-
புதுக்கோட்டையில் ம.தி. மு.க. 20-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டைக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் முழு விபரம் இதுவரை தெரியவில்லை. ஆனால் கூடங்குளம் அணுஉலையை அகற்ற வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாட்டில் எந்த பகுதியிலும் இந்த அளவிற்கு தொடர் போராட்டங்கள் நடந்தது கிடையாது. ரஷ்ய நாட்டுடன் அணு உலை அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போதே அணுஉலை அம…
-
- 0 replies
- 316 views
-
-
லோக்சபா தேர்தலில், மக்களிடம் அங்கீகாரம் பெற்ற அ.தி.மு.க.,வுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என, அக்கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார். ஈரோட்டில், இந்திய கம்யூ. மாநில செயலர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: நிலக்கரி இறக்குமதி ஊழலை விசாரித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழங்கிய ரகசிய வாக்குமூலத்தை, மத்திய அமைச்சர்கள் திருத்தியதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே, மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். வரும் லோக்சபா தேர்தலில், காங்., தோற்கும் இடத்தில், பா.ஜ., வெற்றி பெறாது. மாநில கட்சிகள், ஜனநாயக கட்சிகளுடன், இடதுசாரிகள் அமைக்கும் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது. பா.ம.க.மாநாட்டில் ராமதாஸ் பேசிய பேச்சால், தமிழகத்தில் சமூக…
-
- 0 replies
- 375 views
-
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை ஜாமீனில் விடுதலை செய்ய விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் மேலும் 6 வழக்கில் ராமதாஸ் கைது செய்யப்பட்டு உள்ளார். இதற்கிடையே ராமதாசுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி சத்தியநாராயணா முன்பு அரசு தலைமை குற்றவியல் வக்கீல் சண்முக வேலாயுதம் ஆஜராகி மனுதாக்கல் செய்ய முன்வந்தார். பிற்பகல் 2 மணிக்கு மனுவை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரத்தில் பா.ம.க. சார்பில் வக்கீல்கள் கோபாலு, ரூபர்ட் பர்னபாஸ் ஆகியோர் நீதிபதியிடம் ராமதாசுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 303 views
-
-
மத்தியில் காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத 3-வது அணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. கூறினார். திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- அகில இந்திய அளவில் காங்கிரஸ் அரசுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. சுதந்திரம் அடைந்த பின்னர் பெரியஅளவில் ஊழல் காங்கிரஸ் அரசில் தான் நடந்துள்ளன. பிரதமர், மந்திரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ரெயில்வே மந்திரியின் உறவினர் லஞ்சம் பெற்றுள்ளதால், மந்திரி பதவிவிலக வேண்டும். மக்கள் விரோத கொள்கைகளை மத்திய அரசு கொண்டுள்ளது. இதனால் நாடுமுழுவதும் கொந்தளிப்பு நிலை உருவாகி உள்ளது. இதில் பா.ஜ.க. அரசியல் ஆதாயம் த…
-
- 0 replies
- 395 views
-
-
தமிழக மக்களுக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்க உதவிட வேண்டும் என்று மத்திய அரசை தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- குறைந்த விலையில் காய்கறி விற்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் துவக்கிவைக்கப் போவதாகவும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு நுகர்வோர், விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என்றும் செய்தி வந்திருக்கிறதே?. பதில்:- குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறி விற்கப்பட வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்தான் உழவர் சந்தைகள் திட்டம். இந்தத் திட்டத்திலே பஸ்களிலே காய்கறிகளை ஏற்றிவருவதற்கான லக்கேஜ் கட்டணம் கிடையாது. விவசாயிக…
-
- 0 replies
- 287 views
-
-
தனுஷ்கோடியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் 2 நாட்டுப் படகுகளில் கச்சதீவு அருகே இன்று மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். இவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் 125 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாக கடந்த வாரம் ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது. http://www.dailythanthi.com/node/270794
-
- 0 replies
- 362 views
-
-
மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மகன்கள் அமீத், மனீஷ் ஆகியோர் மீது சி.பி.ஐ.க்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளதால் எந்த நேரமும் சி.பி.ஐ அவர்களிடம் விசாரணை நடத்தலாம் என கூறப்படுகிறது. பவன்குமார் பன்சாலின் குடும்பம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.152 கோடி சொத்து சேர்த்து உள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரின் உறவினர் விஜய்சிங்லே என்பவர் பணி இடமாற்றத்துக்காக ரூ. 90 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 பேரை கைது செய்து உள்ளனர். இதில் ரெயில்வே மந்திரி பன்சாலுக்கும் தொடர்பு உள்ளது என்றும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் பாரதீய ஜனதா, சமாஜ்வாதி, மற்றும் இடது சாரி கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் காங்கிரசுக்கு நெருக்…
-
- 0 replies
- 392 views
-