தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10264 topics in this forum
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுவரை 6 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு வழக்கில் மட்டுமே அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால் சிறையிலிருந்து அவர் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் அவர் மீது பல்வேறு வழக்குகளின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு விழாக்களில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக டாக்டர் ராமதாஸ் மீது மாமல்லபுரம் போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்கில் டாக்டர் ராமதாஸை திருக்கழுக்கு…
-
- 0 replies
- 602 views
-
-
“பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தி, அந்தப் பழியை பா.ம.க. மீது போட சதி நடந்து வருகிறது. இதில் பா.ம.க.வினர் சிக்கி விடக் கூடாது. அமைதி வழியில் தங்களது போராட்டங்களை அவர்கள் நடத்த வேண்டும்” என்று பா.ம.க. தலைமை நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியதற்காக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு, அன்புமணி ராமதாசு உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் உடைக்கப்படுவதாகவும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு பா.ம.க.வினர் தான் காரணம் என்றும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ப…
-
- 0 replies
- 309 views
-
-
இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றையும் முதல்வர் கொண்டு வந்துள்ளார். தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். மேலும், கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றையும் முதல்வர் கொண்டு வந்தார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14414:chief-minister-jayalalithaa-on-katchativu-varkkappatta-recover-from-jet-assembly-resolution&catid=36:tamilnadu&Itemid=102
-
- 4 replies
- 562 views
-
-
நாமக்கல் அருகே உள்ள சேந்தமங்கலம் பேருந்து நிலையம் முன் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி எம்எல்ஏ காடுவெட்டி குரு ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் அந்த சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் எம்.ஜி.ஆர். சிலையின் கால் பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து அதிமுகவின் நகர அவைத்தலைவர் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்ஜிஆர் சிலைக்கு தீ வைத்தவர் குறித்து தேடி வந்தனர். இந்நிலையில், போலீசார் விசாரனையில் அதே ஊரிலுள்ள மேட்டுத்தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரபு வயது-29…
-
- 0 replies
- 462 views
-
-
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜு பவுஞ்சூர் வெட்கடாபுரம் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் கூச்சட்டதை அறிந்து எம்எல்ஏ மற்றும் அவரது உதவியாளர்கள், ஆதரவாளர்கள் வந்து தீப்பற்றிய காரை அணைத்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசியது குறித்து அவர் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எம்எல்ஏ ராஜு கூறுகையில், நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென சத்தம் கேட்டு வெளியே வந்தோம். அப்போது கார் எரிந்து கொண்டிருந்தது. பின்னர் …
-
- 0 replies
- 328 views
-
-
தமிழகத்தின் ஆண்ட பரம்பரை, வீரப் பரம்பரை என்று அப்பாவி மக்களை உசுப்பேத்தி ஆதாயம் அடையப் பார்க்கும் ஆதிக்க சாதி தலைவர்கள் ஒரு புறம். மறு புறம் இவர்களது ‘வீரம்’ என்பது பொதுக்கூட்ட மேடைகளில் அதிகபட்ச டெசிபல்களில் கத்தும் ஊளைச் சத்தம் மட்டும்தான் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. வில் ஏந்திய அன்புமணி ராமதாஸ் மருத்துவர் ராமதாஸ் நிலைமை வண்டு முருகன் என்றால் அன்புமணியின் நிலைமை கைப்புள்ளையின் கண்றாவி கண்டிசனையும் விஞ்சி விட்டது. சென்னை தி.நகர் வீட்டில் அவர் கைது செய்யப்படும் போது அழவில்லையே தவிர அவ்வளவு சோகம். அரற்றியவாறு ஜெயலலிதாவுக்கு சாபம் விடுகிறார். அதுவும் அடுத்த தேர்தலில் அவர் வெற்றிபெற மாட்டார் என்று. தனது கைதை கருணாநிதியின் “ஐயோ” கைதுடன் வேறு ஒப்பிடுகிறார்.…
-
- 1 reply
- 4.5k views
-
-
மகஇக தோழர் சீனிவாசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் 5.5.2013 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை, தி நகர் செ.தெ.நாயகம் பள்ளியில் நடைபெறும். அனைவரும் வருக ! நிகழ்ச்சி நிரல் : தலைமை : தோழர் வே.வெங்கடேசன், மாவட்டச் செயலர், ம.க.இ.க, சென்னை. உரையாற்றுவோர் : தோழர் காளியப்பன், இணைச் செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம் தோழர் சு.ப.தங்கராசு, பொதுச் செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர் அஜிதா, பெண்கள் விடுதலை முன்னணி தோழர் வ.கார்த்திகேயன், புரட்சிகர – மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மில்ட்டன், மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தோழர் மருதையன், மாநில செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம் நாள் : 05.05.2013, ஞாயிறு நேரம் மாலை, 6 மணி. இடம் : செ.தெ.நாயகம…
-
- 0 replies
- 538 views
-
-
ராமதாஸ் கைது குறித்து தினமணியில் வந்த செய்தியைப் பார்த்து விடுவோம் : “ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும்” என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாமக தலைவர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும், அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான்; மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும். பாமகவினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்தநடவடிக்கை எடுக்க வேண்டும்…. ” என்றார். ஓட்டுப் பொறுக்கி அரசியலில் கூட்டணிகளின் மூலம்தான் காலம் தள்ள முடியும் என்பது கடந்த பதினைந்து ஆண்டுகளாக உருவாகியிருக்கும் நிலை. இதனால் தமிழகத்தில் கூட்டணி என்பது வ…
-
- 0 replies
- 403 views
-
-
சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி, பா.ம.க.வினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ம.க தலைவர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான் என்றும் கூறினார். பா.ம.க.வினருக்கு நாடவடக்கம் வேண்டும் மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய கருணாநிதி, பா.ம.க.வினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். ஓராண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அன்புமணியை கைது செய்தது சரியென்று தோன்றவில்லை என்று கருணாநிதி கூறினார். …
-
- 0 replies
- 318 views
-
-
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதல்களை தடுப்பதற்காக கச்சத்தீவை மீட்பது தான் ஒரே வழி என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர்கள் முகம் கொடுக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணவேண்டுமாயின் கச்சத்தீவை மீட்பது மட்டுமே வழி என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும், சிறைபிடிக்கப்பட்டும் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங…
-
- 0 replies
- 263 views
-
-
தமிழ்நாட்டை பீடித்திருக்கிறது ஒரு பாசிச அரசியல் கும்பல். சில ஆயிரம் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை வைத்து கட்சி நடத்தி வரும் ராமதாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, தனது மகனை முதலமைச்சர் ஆக்குவதற்காக மக்களிடையே கலவரத்தைத் தூண்டி விடும் உத்தியை வந்தடைந்திருக்கிறார். இந்திய அளவில் இந்துத்துவா சக்திகள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களை நாட்டின் எதிரிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து செயற்கையான எதிரியை உருவாக்குவது போல, தாழ்த்தப்பட்ட இளைஞர்களை ஆதிக்க சாதி குடும்பங்களின் எதிரிகளாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் ராமதாசின் தலைமையிலான வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும். “தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்டும் கூலிங் கிளாசும் போட்டுக் கொண்டு வந்து வேறு ச…
-
- 4 replies
- 3.2k views
-
-
தமிழன் தொலைக்காட்சி முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது இன்று காலை சென்னை தி நகரில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கைது செய்யப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்பட 750 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு விழாவில் பேசியது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் பிடிவாரண்ட் அளித்துள்ளனர். இதனிடையே ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் இருந்து செல்லும் பெரும்பாலான பேருந்துகள் மூன்றா…
-
- 0 replies
- 454 views
-
-
பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த வாரகி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த மனுவில், பாமக தொடர்ந்து சாதி வன்முறையை தூண்டும் வகையிலும், கலப்பு திருமணத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு ஆகியோர் தொடர்ந்து சாதி மோதலை தூண்டும் வகையில் பேசி வருகிறார்கள். இதனால், இருபிரிவினர் இடையே அண்மையில் சாதி மோதல் ஏற்பட்டது. அண்மையில் மாமல்லபுரத்தில் நடந்த விழாவிலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் மனுதாரர் வாரகி தெரிவித்துள்ளார். மரக்காணம் அரு…
-
- 0 replies
- 336 views
-
-
சென்னை: தவறான நோக்கத்திற்காக ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றை கண்காணிக்க சென்னை மாநகர காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது. தற்போது, ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் ஃபேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம், கம்ப்யூட்டரில்தான் இணையதளங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. என்றைக்கு செல்போன்களி்ல் இணையதளங்கள் பார்க்கும் வசதிகள் அமைந்ததோ, அன்று முதல் இணையதங்களை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களை சிலர் நல்லதுக்காவும், சிலர் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துக…
-
- 1 reply
- 482 views
-
-
கூடங்குளம்: சோதனை ஓட்டத்திற்கே இத்தனை பஞ்சரு’ன்னா..? APR 20 Posted by ஆதன் கூடங்குளம் அணு உலைக்கு தரமற்ற உதிரிபாகங்கள் தரப்பட்டதாக ரஷியாவில் அந்நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்து உள்ள அதே நேரத்தில் தொடர்ந்து பலமுறை கூடங்குளம் அணு உலை சோதனை ஓட்டத்தில் வால்வுகள் பழுதடைந்து மாற்றப்பட்டு வருவதாக செய்திகள்வருகின்றன. ************** அதிகாரப்பூர்வமான மின் உற்பத்திக்காக இயக்கத்தை தொடங்க வேண்டும் என போலீசை குவித்து மும்முரமாக வேலை செய்தும் இதுவரை கூடங்குளம் உலையிலிருந்து மின்சாரம் வர வைக்க முடியவில்லை. எதிர்ப்புகளை முறியடித்து இதனை இயக்கி காண்பிக்காவிடில் இந்தியா முழுவதும் 30க்கும் மேற்பட்ட அணு உலைகளை கட்ட ஏற்கனவே போட்டு உள்ள திட்டத்திற்கு மே…
-
- 5 replies
- 869 views
-
-
விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அவருடன் 750 தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ராமதாஸ் மீது சட்ட விரோதமாக கூடுதல், கூட்டு சதி செய்தல், அரசுக்கு எதிராக சதி செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்ய கேட்டு அவர் தரப்பில் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று காலை மாஜிஸ்திரேட்டு முகிலாம்பிகை முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. அப்போது போலீஸ் தரப்பில் கருத்துக்கள் கேட்கப்படும்.…
-
- 0 replies
- 375 views
-
-
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து நேற்று இரவு தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு தர்மபுரி நோக்கி புறப்பட்டது. பஸ்சை டிரைவர் வேலுசாமி என்பவர் ஓட்டி வந்தார். சுப்பிரமணி என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். நள்ளிரவு 11 மணியளவில் பஸ் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்தை தாண்டி மொட்டூர் என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். இரவு நேரம் என்பதால் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வேகத்தடை இருந்ததால் டிரைவர் பஸ்சை மெதுவாக ஓட்டினார். அப்போது சாலை ஓரத்தில் இருட்டில் மறைந்திருந்த 20 பேர் கொண்ட கும்பல் திடீரென பஸ்சின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் அதிர்ச்சி அடைந்த டிரைவர் திடீரென பஸ்சை நிறுத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
பா.ம.க. கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக் கட்சியினர் வட மாவட்டங்களில் பஸ் உடைப்பு, பஸ்ஸூக்கு தீ வைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர். இதில் புதன்கிழமை மாலை வரை 120 பஸ்கள் உடைக்கப்பட்டிருப்பதாகவும், 4 பஸ்கள் எரிக்கப் பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அனுமதியின்றி போராட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 2,137 பேர் கைது செய்யப்பட்டனர். மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ம.க.சார்பில் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்காததால், போராட்டத்தில் கலந்துகொள்வோர்க…
-
- 0 replies
- 454 views
-
-
சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டித்து அக்கட்சியினர் இன்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் எரிப்பு, கண்ணாடிகள் உடைப்பு, சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு பா.ம.க.வினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் வட மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 25ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை நிலவு பெருவிழா நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து விழாவிற்கு சென்ற ஆயிரக்கணக்கானோரில் சிலர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் பேருந்துகள், கார்கள் எரிக்கப்பட்டன. தலித் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனிடையே, மரக்காணம…
-
- 1 reply
- 932 views
-
-
மதுரை: தனி தமிழ்நாடு அமைக்க உத்தரவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் தொடரப்பட்டுள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ம.தி.மு.க. மாநில செயலாளர் ஏ.பாஸ்கர சேதுபதி சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏப்ரல் 25ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, பிரதமர் நேரு காலத்தில் இருந்து இன்று வரை தமிழகத்தின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நதிநீர் பிரச்னை, நிதி ஒதுக்கீடு, மீனவர் பிரச்னை என்று அனைத்து தரப்பிலும் வஞ்சிக்கப்பட்டுகிறது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் விரக்தியில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். …
-
- 2 replies
- 428 views
-
-
மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கதின் சார்பில் மரண தண்டனையை எதிர்த்தும் இந்தியாவின் சட்ட புத்தகத்தில் மரண தண்டனையை நீக்க கோரியும்நேற்று மாலை 7 மணியளவில் முத்துரங்கன் சாலை தியாகராயநகர் பேரூந்து நிலையத்திற்கு அருகில் மாபெரும் பொதுகூட்டம் நடை பெற்றது . இதன் முதலாவது நிகழ்வாக தமிழீழ விடுதலை போரில் உயிர் தியாகங்களை செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது . பின்னர் பொதுகூட்டம் ஆரம்பமானது இதில் நெடுமாறன் ,வைகோ ஆர்.நல்லகண்ணு , தமிழருவி மணியன் , கொளத்தூர் மணி ,மணியரசன் ,தியாகு , கோவை ராமகிருஷ்ணன் , அற்புதம்மா ,தாவூத் மியாகான் ,அதியமான் ,தமிழ்புலிகள் நகை திருவள்ளுவன் ,கி.வே பொன்னையன் , வெள்ளையன் ,ஊமர் , மல்லை சத்தியா உட்பட பலர் கலந்து கொண்டு மூன்று தமிழர் உயிர் க…
-
- 0 replies
- 604 views
-
-
25 ஏப்ரல் 2013 மாமல்லபுரத்தில் பாமக நடத்தும் சித்திரைத் திருவிழாவிற்குச் சென்ற பாமகவினர் மரக்காணத்தில் பொதுமக்களுடன் சண்டையிட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேருந்துகள் மற்றும் கடைகள் உட்பட 5 வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக சித்திரை முழுநிலவுத் திருவிழா - வன்னிய இளைஞர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாகனங்களில் சென்று கொண்டிருந்த பாமகவினருக்கும், பொதுமக்களுக்குமிடையே திண்டிவனம் அருகே உள்ள மரக்காணத்தில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 5 அரசு பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த கடைகள் உட்பட 5 வீடுகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதனால் அந்தப்பகுதி போர்கள…
-
- 3 replies
- 1.5k views
-
-
மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கதின் சார்பில் மரண தண்டனையை எதிர்த்து எதிர்வரும் இன்று நடக்கும் மாபெரும் பொதுகூட்டம் மாலை 6.30 மணியளவில் முத்துரங்கன் சாலை தியாகராயநகர் பேரூந்து நிலையத்திற்கு அருகில் நடை பெற உள்ளது. மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்வில் தமிழகம் வாழ் அனைவரும் அரசியல் வேறுபாடுகளின்றி கலந்து கொண்டு மூன்று தமிழர்களின் உயிர்கள் தூக்குக் கயிற்குக்குச் செல்வதை தடுத்து நிறுத்த மாபெரும் பொதுகூட்டம் நடை பெறுகிறது. அதன் நேரலையை 6.30 மணியளவில் கீழ் வரும் இணைப்பில் பார்க்கலாம் . நேரலை http://www.dinaithal.com/live
-
- 0 replies
- 340 views
-
-
லங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறாமல் தடுக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு புறக்கணித்து வருவது வருத்தம் அளிக்கிறது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும், இலங்கையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்…
-
- 0 replies
- 335 views
-
-
ஏப்ரல் 29, 2013 தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்றத்தில் ஜனநாயகம் மறுக்கப்படுவதாக கூறினார். கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர்களுக்கு பேச அனுமதி வழங்கப்படுவதில்லை என கூறிய ஸ்டாலின், அதுபற்றி கேட்டால் திமுகவினர் வெளியேற்றப்படுவதாகவும் தெரிவித்தார். நீலகிரியில் போதிய நீர்நிலைகள் இல்லாத பகுதியில் 7ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எவ்வாறு மின் திட்டத்தை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மக்களை ஏமாற்றுவதற்காகவே இவ்வாறு திட்டம் போடுவதாக குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் குற்ற நிகழ்வுகள் அதிகரித்திருப்பதாக ப…
-
- 1 reply
- 476 views
-