தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
கூடங்குளம்: சோதனை ஓட்டத்திற்கே இத்தனை பஞ்சரு’ன்னா..? APR 20 Posted by ஆதன் கூடங்குளம் அணு உலைக்கு தரமற்ற உதிரிபாகங்கள் தரப்பட்டதாக ரஷியாவில் அந்நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்து உள்ள அதே நேரத்தில் தொடர்ந்து பலமுறை கூடங்குளம் அணு உலை சோதனை ஓட்டத்தில் வால்வுகள் பழுதடைந்து மாற்றப்பட்டு வருவதாக செய்திகள்வருகின்றன. ************** அதிகாரப்பூர்வமான மின் உற்பத்திக்காக இயக்கத்தை தொடங்க வேண்டும் என போலீசை குவித்து மும்முரமாக வேலை செய்தும் இதுவரை கூடங்குளம் உலையிலிருந்து மின்சாரம் வர வைக்க முடியவில்லை. எதிர்ப்புகளை முறியடித்து இதனை இயக்கி காண்பிக்காவிடில் இந்தியா முழுவதும் 30க்கும் மேற்பட்ட அணு உலைகளை கட்ட ஏற்கனவே போட்டு உள்ள திட்டத்திற்கு மே…
-
- 5 replies
- 865 views
-
-
விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அவருடன் 750 தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ராமதாஸ் மீது சட்ட விரோதமாக கூடுதல், கூட்டு சதி செய்தல், அரசுக்கு எதிராக சதி செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்ய கேட்டு அவர் தரப்பில் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று காலை மாஜிஸ்திரேட்டு முகிலாம்பிகை முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. அப்போது போலீஸ் தரப்பில் கருத்துக்கள் கேட்கப்படும்.…
-
- 0 replies
- 374 views
-
-
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து நேற்று இரவு தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு தர்மபுரி நோக்கி புறப்பட்டது. பஸ்சை டிரைவர் வேலுசாமி என்பவர் ஓட்டி வந்தார். சுப்பிரமணி என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். நள்ளிரவு 11 மணியளவில் பஸ் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்தை தாண்டி மொட்டூர் என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். இரவு நேரம் என்பதால் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வேகத்தடை இருந்ததால் டிரைவர் பஸ்சை மெதுவாக ஓட்டினார். அப்போது சாலை ஓரத்தில் இருட்டில் மறைந்திருந்த 20 பேர் கொண்ட கும்பல் திடீரென பஸ்சின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் அதிர்ச்சி அடைந்த டிரைவர் திடீரென பஸ்சை நிறுத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
பா.ம.க. கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக் கட்சியினர் வட மாவட்டங்களில் பஸ் உடைப்பு, பஸ்ஸூக்கு தீ வைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர். இதில் புதன்கிழமை மாலை வரை 120 பஸ்கள் உடைக்கப்பட்டிருப்பதாகவும், 4 பஸ்கள் எரிக்கப் பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அனுமதியின்றி போராட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 2,137 பேர் கைது செய்யப்பட்டனர். மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ம.க.சார்பில் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்காததால், போராட்டத்தில் கலந்துகொள்வோர்க…
-
- 0 replies
- 453 views
-
-
சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டித்து அக்கட்சியினர் இன்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் எரிப்பு, கண்ணாடிகள் உடைப்பு, சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு பா.ம.க.வினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் வட மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 25ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை நிலவு பெருவிழா நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து விழாவிற்கு சென்ற ஆயிரக்கணக்கானோரில் சிலர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் பேருந்துகள், கார்கள் எரிக்கப்பட்டன. தலித் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனிடையே, மரக்காணம…
-
- 1 reply
- 931 views
-
-
மதுரை: தனி தமிழ்நாடு அமைக்க உத்தரவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் தொடரப்பட்டுள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ம.தி.மு.க. மாநில செயலாளர் ஏ.பாஸ்கர சேதுபதி சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏப்ரல் 25ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, பிரதமர் நேரு காலத்தில் இருந்து இன்று வரை தமிழகத்தின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நதிநீர் பிரச்னை, நிதி ஒதுக்கீடு, மீனவர் பிரச்னை என்று அனைத்து தரப்பிலும் வஞ்சிக்கப்பட்டுகிறது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் விரக்தியில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். …
-
- 2 replies
- 426 views
-
-
மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கதின் சார்பில் மரண தண்டனையை எதிர்த்தும் இந்தியாவின் சட்ட புத்தகத்தில் மரண தண்டனையை நீக்க கோரியும்நேற்று மாலை 7 மணியளவில் முத்துரங்கன் சாலை தியாகராயநகர் பேரூந்து நிலையத்திற்கு அருகில் மாபெரும் பொதுகூட்டம் நடை பெற்றது . இதன் முதலாவது நிகழ்வாக தமிழீழ விடுதலை போரில் உயிர் தியாகங்களை செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது . பின்னர் பொதுகூட்டம் ஆரம்பமானது இதில் நெடுமாறன் ,வைகோ ஆர்.நல்லகண்ணு , தமிழருவி மணியன் , கொளத்தூர் மணி ,மணியரசன் ,தியாகு , கோவை ராமகிருஷ்ணன் , அற்புதம்மா ,தாவூத் மியாகான் ,அதியமான் ,தமிழ்புலிகள் நகை திருவள்ளுவன் ,கி.வே பொன்னையன் , வெள்ளையன் ,ஊமர் , மல்லை சத்தியா உட்பட பலர் கலந்து கொண்டு மூன்று தமிழர் உயிர் க…
-
- 0 replies
- 602 views
-
-
25 ஏப்ரல் 2013 மாமல்லபுரத்தில் பாமக நடத்தும் சித்திரைத் திருவிழாவிற்குச் சென்ற பாமகவினர் மரக்காணத்தில் பொதுமக்களுடன் சண்டையிட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேருந்துகள் மற்றும் கடைகள் உட்பட 5 வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக சித்திரை முழுநிலவுத் திருவிழா - வன்னிய இளைஞர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாகனங்களில் சென்று கொண்டிருந்த பாமகவினருக்கும், பொதுமக்களுக்குமிடையே திண்டிவனம் அருகே உள்ள மரக்காணத்தில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 5 அரசு பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த கடைகள் உட்பட 5 வீடுகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதனால் அந்தப்பகுதி போர்கள…
-
- 3 replies
- 1.5k views
-
-
மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கதின் சார்பில் மரண தண்டனையை எதிர்த்து எதிர்வரும் இன்று நடக்கும் மாபெரும் பொதுகூட்டம் மாலை 6.30 மணியளவில் முத்துரங்கன் சாலை தியாகராயநகர் பேரூந்து நிலையத்திற்கு அருகில் நடை பெற உள்ளது. மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்வில் தமிழகம் வாழ் அனைவரும் அரசியல் வேறுபாடுகளின்றி கலந்து கொண்டு மூன்று தமிழர்களின் உயிர்கள் தூக்குக் கயிற்குக்குச் செல்வதை தடுத்து நிறுத்த மாபெரும் பொதுகூட்டம் நடை பெறுகிறது. அதன் நேரலையை 6.30 மணியளவில் கீழ் வரும் இணைப்பில் பார்க்கலாம் . நேரலை http://www.dinaithal.com/live
-
- 0 replies
- 337 views
-
-
லங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறாமல் தடுக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு புறக்கணித்து வருவது வருத்தம் அளிக்கிறது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும், இலங்கையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்…
-
- 0 replies
- 333 views
-
-
ஏப்ரல் 29, 2013 தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்றத்தில் ஜனநாயகம் மறுக்கப்படுவதாக கூறினார். கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர்களுக்கு பேச அனுமதி வழங்கப்படுவதில்லை என கூறிய ஸ்டாலின், அதுபற்றி கேட்டால் திமுகவினர் வெளியேற்றப்படுவதாகவும் தெரிவித்தார். நீலகிரியில் போதிய நீர்நிலைகள் இல்லாத பகுதியில் 7ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எவ்வாறு மின் திட்டத்தை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மக்களை ஏமாற்றுவதற்காகவே இவ்வாறு திட்டம் போடுவதாக குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் குற்ற நிகழ்வுகள் அதிகரித்திருப்பதாக ப…
-
- 1 reply
- 475 views
-
-
ஈழத்திற்கான மூன்றாம் கட்டப்போராட்டம்: தமிழக மாணவர்கள் அறிவிப்பு இலங்கை இனப்படுகொலையை நடத்திய மஹிந்த இலங்கை ஜனாதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்குகிறது. தமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டு சேர்த்தவர்கள் மாணவர்கள். அரசியல் கட்சிகளின் எந்த ஒரு ஆதரவும் இன்றி தனித்தே போராடி வருகின்றனர் மாணவர்கள். இவர்களது போராட்டத்தின் அடுத்த கட்டமாக தற்போது தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் 8 கோடி தமிழர்களை சந்திக்கும் வகையில் 5 பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்தி மே 12ஆம் திகதி அன்று காலை புறப்படுகின்றனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரிய…
-
- 0 replies
- 1.8k views
-
-
ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது காலதாமதமாக முடிவு எடுக்கப்படுவதால் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை 2011ம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து இவர்கள் சார்பில் மதிமுக பொதுச் செயலர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். இவர்களின் மனுக்களையும் ஏற்கெனவே புல்லர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்கள…
-
- 10 replies
- 2.2k views
-
-
ஏப்ரல் 25, 2013 நீலகிரி மாவட்டத்தில் 7000 கோடி ருபாய் செலவில் நீரேற்று புனல் மின் திட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். விதி எண் 110 ன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகளுடன் மின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். நீலகிரி மாவட்டத்தில் ஓடும், குந்தா நதியின் துணை நதியான சில்லஹல்லா ஆற்றின் குறுக்கே நிறுவப்படவுள்ள நீர் தேக்கத்தை பயன்படுத்தி 2000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புனல் மின் நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டம் 8 முதல் 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதுதவிர, மின்…
-
- 0 replies
- 468 views
-
-
29 ஏப்ரல் 2013 வேலூரில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட ஒருவர், பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்தது அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 52). தங்க நகைகளின் பேரில் கடன் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்துவந்தார். இவரது மனைவி சுமதி (வயது 44), விக்னேஷ்வரன் (வயது 19), சந்திரகாந்தன் (வயது 17) என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது இரு மகன்களுடன் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு சுமதி சென்று விட்டார். வீட்டில் சிவராமன் மட்டும் தனியாக இருந்துள்ளார். கடந்த 7…
-
- 0 replies
- 639 views
-
-
27 ஏப்ரல் 2013 விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அதே பகுதியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகளான 3 வயது சிறுமி, நேற்று மாலை தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த சிறுமி திடீரென காணாமல் போனாள். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது அவர்களது பக்கத்து வீட்டில இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டுக்குள் அதிரடியாக சென்று பார்த்தனர். அப்போது அங்கு 7 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி மாணவன் சிறுமிய…
-
- 0 replies
- 453 views
-
-
கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமியை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட நவீன கருவியுடன் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் பயன் கிட்டவில்லை. எனவே மறுபடியும் ஆழ்துளை கிணறு அருகே துளையிட்டு மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆள்துளை கிணற்றில் மண் சரிந்து விழுந்த காரணத்தினால் மீட்புப் பணியில் சிரமமும் ஏற்பட்டுள்ளது. பாதிரிப்பட்டி என்ற இடத்தில் தந்தை முத்துப்பாண்டியுடன் முருங்கைக் காய் பறிக்க அந்த சிறுமி சென்றபோது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். 7 வயதாகும் சிறுமி முத்துலட்சுமி, கிட்டதட்ட 12 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டாள்.அந்த ஆழ்துளை கிணறு 600 அடி ஆழம் கொண்டது..…
-
- 10 replies
- 1.4k views
-
-
சிவகாசி அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது. 4 பேர் பலியானார்கள். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது நாரயணாபுரம். இங்கு பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. இதன் உரிமையாளராக சிவகாசியை சேர்ந்த விஜயகுமார் உள்ளார். இந்த பட்டாசு ஆலையை பால்ராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த ஆலையில் சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். ஒரு அறையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் திடீரென்று தீப்பிடித்தது. பட்டாசுகள் டமார்... டமார்.…
-
- 1 reply
- 512 views
-
-
29 ஏப்ரல் 2013 திருச்சியை அடுத்த நங்கவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காவிரியில் நீர் எடுக்க வந்தபோது மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உமாவதி (35), இவரது மகள் தீபா (13), சிறுவன் ஜீவானந்தம்(10) மற்றும் பிரவீணா (18) ஆகியோர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியாகினர். ஞாயிறன்று சவரிமேடு மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா சடங்குகளுக்காக அருகில் உள்ள காவிரியில் நீர் எடுக்க வந்துள்ளனர். கரை அருகே தண்ணீருக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் திடீரென இவர்கள் தண்ணீருக்குள் மூழ்கினர். மணற்கொள்ளையால் கரையை ஒட்டிய பகுதிகளில் நீருக்கடியில் பெரிய பெரிய ஆள் விழுங்கிக் குழிகள் தோன்றியுள்ளன. இதில்தான் இந்தக் …
-
- 0 replies
- 474 views
-
-
29 ஏப்ரல் 2013 செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் விடுதலையை எதிர்நோக்கி உண்ணாவிரதம் இருந்து வந்துள்ள நிலையில் சசிதரன் என்ற 21 வயது தமிழ் அகதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் தெரிவிக்கிறது. தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக சசிதரன் கடிதம் எழுதிவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சசிதரன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையிலிருந்து வரும் தமிழ் அகதிகளில் சிலரை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 ப…
-
- 0 replies
- 443 views
-
-
இந்திய எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 800 பேரை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. அது பற்றி மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அணு உலை அச்சத்தினால் போராடும் மக்கள் மீது வழக்கு போட்டு வருகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். ராதாபுரம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி செயலாளராக இருப்பவர் கணேசன். கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்ற இவர் கைது செய்யப்பட்டு பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று அவரை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சந்தித்து பேசினார். மேலும் சிறையில் உள்ள கட்சி பிரமுகர்கள் சத்தியபிரபாகரன், மோகன்ராம், முத்துராமலிங்கம் ஆகியோரையும் சந்தித்து வழக்கு விவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் வெளிவே வந்த சீமா…
-
- 0 replies
- 339 views
-
-
சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் இலங்கை தமிழர் பிரச்சனை காரணமாக டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினை காரணமாக சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனிடையே சென்னையில் கடந்த வாரம் நடந்த ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந் நிலையில் ‘சென்னையில் நடைபெறுவதாக இருந்த ‘பிளே–ஆஃப்’ சுற்று போட்டிகளை டெல்லியில் நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசனுடன் விரிவாக ஆலோசனை நடத்திய பிறகு இந்த மாறுதல் முடிவு எடுக்கப்பட்டதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா டெல்லியில் …
-
- 0 replies
- 2.2k views
-
-
முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ. செங்கோட்டையன் நேற்று இரவு குள்ளம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் இருந்தார். அப்போது இரவு 9.30 மணி அளவில் போயஸ்கார்டனில் இருந்து திடீர் அழைப்பு மணி அடித்தது. உடனே செங்கோட்டையன் செல்போனை ஆன் செய்து பேசினார். எதிர்முனையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார். அப்போது முதல்- அமைச்சர், கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆணையிட்டதாக கூறப்படுகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்ய சொன்னது செங்கோட்டையனுக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து இன்று அதிகாலை அவர் கார் மூலம் கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றா…
-
- 0 replies
- 786 views
-
-
தேமுதிக தலைவர் விஜயகாந்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவன் திடீரென்று சந்தித்து பேசினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பின் போது மரக்காணம் கலவரம் குறித்து விஜயகாந்துடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். மரக்காணம் கலவரத்திற்கு பாமக தான் காரணம் என்று திருமாவளவன் ஏற்கனவே கூறியுள்ளார். கலவரப் பிரச்சனையில் பாமகவிற்கு எதிராக இதர கட்சிகளை அணி சேர்க்க திருமா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14328:vijayakanth-suddenly-grow-with&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 467 views
-
-
நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பான வழக்கில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது என்ற சட்டத்தை மீறி 2001ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார். தான் தாக்கல் செய்த வேட்புமனு ஒவ்வொன்றிலும் 2 தொகுதிகளுக்கு மேல் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும், இனிமேலும் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யப் போவதில்லை என்றும் உண்மையை மறைத்து உறுதிமொழி அளித்தார். தேர்தல் அதி…
-
- 0 replies
- 490 views
-