Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பட மூலாதாரம்,IRCDS படக்குறிப்பு,ஷிபா மாலிக் மற்றும் அவரின் குடும்பத்தினர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை உள்பட 7 பேரை, ஜூன் 17 அன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 35 ஆயிரம் ரூபாய் முன்பணத்துக்காக ஆறு மாதங்களாக செங்கல் சூளை உரிமையாளரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானதாக ஒடிசாவை சேர்ந்த ஷிபா மாலிக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அரசின் அனுமதியின்றி சூளை செயல்பட்டதால், அதன் உரிமையாளர் எஸ். துளசி மீது கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுக…

  2. கருணாநிதியின் பிறந்தநாள்... அரசு விழாவாக, கொண்டாடப்படும் – ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) 110ஆவது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்போதே அவர் மேற்படி அறிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் எனவும் கூறினார். அவருடைய பிறந்த தினமான ஜுன் மாதம் 3 ஆம் திகதி இனி அரசு விழாவாக கொண்டாப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1278696

  3. என்னை மிரட்ட முடியாது.. தன்மானமே முக்கியம்! கைகூலிகளுக்கு முடிவு கட்டப்படும்.. இறங்கி அடித்த எடப்பாடி Mani Singh SUpdated: Monday, September 15, 2025, 21:24 [IST] சென்னை: என்னை யாரும் மிரட்ட முடியாது, ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி பயணம் மேற்கொள்வதாக தகவல் வெளியான நிலையில் அதற்கும் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். தர்மபுரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில் மழை பெய்யும் jiஎன வானிலை மையம் அறிவுறுத்தியதால் அந்த பயணத்தை மாற்றி அமைத்தோம். அதற்கு அமித்ஷாவை சந்திப்பதற்காக சுற்றுப்பயணம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி விட்டது என எடப்பாடி கூறுகிறார். 10 நாட்கள் கெடு விதித்த…

    • 0 replies
    • 177 views
  4. படக்குறிப்பு, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அருகே தரைதட்டி தத்தளித்துக் கொண்டிருக்கும் மிதவைப் படகு. கட்டுரை தகவல் எழுதியவர், சு.மகேஷ் பதவி, பிபிசிக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடலில் தத்தளித்து வரும் மிதவை படகை மீட்கும் நடவடிக்கை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவடையும் என கூடங்குளம் அனுமின் நிலைய வளாக இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1 மற்றும் 2வது அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 3, 4, 5 மற்றும் 6வது அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. …

  5. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 1 அக்டோபர் 2025, 01:52 GMT கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட 2 தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மற்றும் இதர அமைப்புகள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு தெளிவான விதிகள்…

  6. மின்கட்டண உயர்வு: உங்கள் செலவுகள் எப்படி மறைமுகமாக உயரும்? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். இதையடுத்து, செப். 10 முதல் தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதில், வீட்டுப் பயன்பாடு தவிர தொழில்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், அரசு கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்க…

  7. தமிழக மழை-வெள்ளச் சேதப் பாதிப்புகளை "தேசியப் பேரிடர்' ஆக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் [Thursday 2015-12-03 08:00] தமிழக மழை-வெள்ளச் சேதப் பாதிப்புகளை "தேசியப் பேரிடர்' ஆக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மக்களவை, மாநிலங்களவையில் கட்சி வேறுபாடின்றி தமிழக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்."நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மழை சேத நிலவரம்' தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை பிற்பகலில் விதி எண் 193-இன் கீழ் விவாதிக்க மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார். இதில் பங்கேற்று அதிமுக உறுப்பினர்கள் பேசினர். அதன் விவரம் வருமாறு: டி.ஜி.எஸ். வெங்கடேஷ் பாபு (வடசென்னை): மழை - வெள்ளப் பாதிப்புகளை சரிசெய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிய ந…

  8. பெங்களூருவில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற திட்டம்: சிறையில் சசிகலாவுடன் வழக்கறிஞர்கள் ஆலோசனை - ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர் வி.கே.சசிகலா | கோப்புப் படம். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழ‌க்கில் அதிமுக பொதுச் செயலாள‌ர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக் கறிஞர்கள் செந்தில், அசோகன், மூர்த்தி ராவ் ஆகியோர் நேற்று காலை பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள‌ சசிகலாவை சந்தித்தனர். அப்போது சொத்துக்குவிப்பு மேல்ம…

  9. தமிழக மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி! ”தமிழக மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சூரை மீன் பிடி துறைமுக திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 1,383 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களை மீட்குமாறு வலியுறுத்தி மத்திய அரசுக்கு இதுவரை 76 கடிதங்களை தான் எழுதியுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1433623

  10. சென்னை எண்ணூரில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 61 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள். இந்த நிறுவனத்தில் உள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு லட்டு கொடுத்து தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்கள். அசோக் லேலண்டன் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழீழ உணர்வு தொழிலாளர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறு பணிபுரியும் ஊழியர்களுக்கு லட்டு வழங்கி தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்தவக…

  11. சென்னை: தமிழகத்தில் 84 லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் உள்ளனர் என்று வேதனையுடன் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் சமீபத்தில் சொல்லப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி மொத்தம் 84 லட்சம் இளைஞர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சாதி வாரியாக தாழ்த்தப்பட்டவர்கள் 18,24,342, அருந்ததியினர்கள் 1,96,784, மலைவாழ் இனத்தினர்கள் 63,898, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் 22,00,498, இஸ்லாமியர்கள் 3,24653, பிற்படுத்தப்பட்டோர் 34,53,868, மற்றவர்கள் 2,67,821, ஆக மொத்தம் 84 லட்சம் பேர் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலு…

  12. இலங்கையின் பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய மூவர் தமிழகத்தில் கைது! இலங்கையில் பல்வேறு குற்றப் பின்னணி உள்ள மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்றபோது தனுஷ்கோடிக்கு அருகில் வைத்து இந்திய கடலோர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று (28) நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர பொலிஸார் சோதனையில் ஈடுப்பட்ட வேளையிலே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மூவரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் 46,000 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டதுடன் அவர்கள் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தனரெனவும் விசாரணைய…

  13. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சென்னையில் ஒரு காட்சி. 30 நவம்பர் 2025, 09:41 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய திட்வா புயல் தற்போது தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டியே வடக்கு நோக்கி நகர்கிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது வரை தமிழ்நாட்டில் இந்தப் புயல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? தஞ்சாவூர் கடந்த இரண்டு நாட்களாக தஞ்சாவூரில் பெய்துவரும் கனமழை காரணமாக, சுந்தரம் மீனா நகர் பகுதியில் முழங்கால் அளவிற்கு மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகி…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்காக கூறி தமிழ்நாடு அரசு வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. நிலுவையில் வைத்துள்ள மசோதாக்களை உடனடியாக ஆளுநர் பரிசீலிக்கவேண்டும் என உத்தரவிடக்கோரி அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன? ‘ஆளுநர் பதிலளிக்க காலவரம்பு வேண்டும்’ சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்குக் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் பதில் சொல்லவேண்டும் என்ற எந்த க…

  15. பெண்கள் உடல்நலம்: சிசேரியன் பிரசவங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு 2ஆம் இடம் - தேசிய குடும்பநல கணக்கெடுப்பு மோகன் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் கிட்டத்தட்ட இரண்டில் ஒன்று சிசேரியன் முறையில் தான் நடைபெறுகிறது தமிழ்நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் கிட்டத்தட்ட இரண்டில் ஒன்று சிசேரியன் முறையில்தான் நடைபெறுகிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 11% வரை அதிகரித்துள்ளது மத்திய அரசின் தேசிய குடும்பநல கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பத…

  16. சென்னை விமான நிலையத்தில் திமுக முன்னாள் எம்.பி.யிடமிருந்து கைதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பியாக இருந்தவர் ஜெயதுரை. இவர் இன்று காலை மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவரை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் எட்டு தோட்டாக்களுடன் ஒரு பிஸ்டல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விதிகளின்படி துப்பாக்கியை எடுத்துச் செல்ல முடியாது என்று அதிகாரிகள் கூறினர். பின்னர் அவரிடமிருந்து தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதனால் கோபமடைந்த ஜெயதுரை உரிமம் பெற்றே துப்பாக் வைத்துள்ளதாகவும், எனவே துப்பாக்கியை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் கூறினார். ஆனால் அதனை ஏற்க அதிகாரிகள் மறுத்தனர். பின்னர் தனது உறவினர் ஒர…

  17. 02 OCT, 2023 | 11:41 AM புதுச்சேரியைச் சோ்ந்த சித்தாா்த்தன், மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்காக 2017-ஆம் ஆண்டு நீட் தோ்வு எழுதி அதில் தோ்ச்சி பெற்றாா். பின்னா், புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும், உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்றும், கட்டாயப் பணி உத்தரவாதம் புரிவதாக உறுதி அளிக்கவில்லை போன்ற காரணங்களைக் கூறியும் சித்தாா்த்தனுக்கு மாணவா் சோ்க்கை மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதை எதிா்த்து அவா் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுப்ரமணியன் – ஆா்.கலைமதி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த நிலையில், அதிக கட்டணம் செலுத்த வே…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சுகாதாரத்துறையும் காவல்துறையும் சேர்ந்து கடந்த சில நாட்களாக 25 வயது பழங்குடியின கர்ப்பிணி பெண் ஒருவரை தேடிக் கொண்டிருக்கின்றனர். இடம் : ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா, சோளகர் தொட்டி கிராமம் தேதி : ஜூலை 05-ஆம் தேதி, மாலை 5மணி. அழகான மலைப்பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள சோளகர் தொட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறையினர், கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அந்த கிராமத்தில் இருந்த சேவந்தி என்ற 25 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு ஜூலை 7-ஆம் தேதி பிரசவ தேதி குறிக்கப்பட்டிருந்தது. அவருக்கு இது இரண்டாவது பிரசவம். ஒரு வார…

  19. 05 MAR, 2024 | 11:50 AM புதுடெல்லி: தமிழகம், கர்நாடகா உள்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான (என்ஐஏ ) சோதனை நடத்தி வருகிறது. தீவிரவாத செயல்களுக்கு ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மண்ணடியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரத்தில் சோதனை நடைபெறுகிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடித்தது. இதில் உணவக ஊழியர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை என்ஐஏ வசம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா, தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வர…

  20. தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலை திறப்பு! தூத்துக்குடியில் 1119.67 கோடி இந்திய ரூபாய் செலவில் 114 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் 16 ஆயிரம் கோடி இந்திய ரூபாயின் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் ந…

  21. தினகரன் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என கோரி வழக்கு சென்னை:அன்னிய செலாவணி சட்டம், சுங்க சட்டத்தின் கீழ், அபராதம் விதிக்கப்பட்டவர் களின் வேட்புமனுக்களை ஏற்க, தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது. சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, ஜோசப் தாக்கல் செய்த மனு: தகுதியிழப்பு எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான தகுதியிழப்பு குறித்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சுங்க சட்டம், அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால், …

  22. என்ன தான் நடக்கிறது பாமகவில்…? -சாவித்திரி கண்ணன் மகன் அன்புமணியிடம், அப்பா ராமதாஸின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன? எதைப் பெறுவதற்கு இந்த முட்டல், மோதல்கள்..? நிஜமாகவே இவர்கள் இருவரும் கடுமையாக முரண்படுகிறார்களா..? இவர்கள் ஒன்றிணையும் வாய்ப்புகள் உண்டா? இல்லையா…? இதோ ஒரு அப்பட்டமான ‘ஸ்கேன் ரிப்போர்ட்’ ; சுயநலம் மேலோங்கிய ஒவ்வொரு தலைவரும் தன் இறுதி நாளில் இத்தகைய அவமானங்களில் இருந்து தப்ப முடியாது. ஏனென்றால், அவர்கள் எதை விதைத்தார்களோ.., அதைத் தான் அறுவடை செய்து வருகின்றனர். இந்த அருவருக்கதக்க – முற்றிலும் சுயநலமுள்ள இந்த இருவரின் – சண்டை இந்த நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த விதத்திலும் பயனற்றது. ராமதாஸ்- அன்புமணி பிரச்சினை பொது வெளியில் தொடர்ந்து விவாதிக்க வேண்டிய அளவுக்க…

  23. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 2 செப்டெம்பர் 2025 'ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' என செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 'அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லையென்றால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம்' எனவும் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 'நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள்' என, ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன. "ஆசிரியர்களை அரசு கைவிடாது" என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளா…

  24. தமிழகத்திற்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை : அதிக வெப்பநிலையால் 9 பேர் பலி. இந்தியாவில் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் கிழக்கு இந்தியாவில் அதிகளவான வெப்பம் பதிவாகியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென்பகுதி, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமான ஏழு கட்ட நாடாளுமன்றத் தேர்தலில், ஜூன் மாதம் 4 ஆம் திகதி முடிவுகள் வெளியாகும் நிலையில் வாக்குப்பதிவு குறைந்தமைக்கு கடும் வெப்பமும் ஒரு காரணம் என அரசியல் ஆய…

  25. சென்னை: இந்தியாவிலேயே மிக மோசமான மாசடைந்த நகரமாக சென்னை உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகளவிலும் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வடசென்னையில் தொழிற்சாலைகளால் மாசு ஏற்படும் அதே நேரம், தற்போது கட்டுமான பணி மற்றும் போக்குவரத்து நெரிசலால் தென் சென்னை உற்பட மொத்த நகரமும் மாசடைந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் சென்னையில் 700 புதிய வாகனங்கள் சாலையில் ஓடுவதாக ஆய்வில் தெரிவிகப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டெல்லியை விட மிகவும் மாசடைந்த நகரமாக சென்னை உருவாகி இருப்பதாக தெரிகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் வெளியிடப்படும் புகையில் கலந்து உள்ள கார்பன் மோனக்சைட் மற்றும் சல்…

    • 0 replies
    • 172 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.