Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எட்டு வழிச்சாலை திட்டத்தை திமுக எப்போதும் எதிர்க்கவில்லையா? விமர்சனங்கள் வலுப்பது ஏன்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சர்ச்சைக்குரிய சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எட்டு வழிச்சாலை திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு ஏப்ரல் மாத சட்டமன்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால்…

  2. ஜெயலலிதா மரணம்: இப்போதும் சூழ்ந்திருக்கும் ஆறு சர்ச்சை கேள்விகள் 27 ஆகஸ்ட் 2022, 03:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தபோது அது இயற்கை மரணம் அல்ல என்றும் அவர் கொல்லப்பட்டார் என்றும் அப்போது ஆளும் அதிமுகவில் இருந்த பலரும் சந்தேகம் எழுப்பினார்கள். இதையடுத்து அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையத்தின் பதவிக்காலம் பல முறை நீட்டிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தனது இறுதி அறிக்கையை தமிழ்நாடு ம…

  3. ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் 608 பக்க அறிக்கை சமர்ப்பித்தது 27 ஆகஸ்ட் 2022, 06:36 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை முடித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 500 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. சென்னை தலைமை செயலகத்துக்கு நேரில் வந்த நீதியரசர் ஆறுமுகசாமி முதல்வரை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சாட்சிகளை விசாரிப்பதில் தாம் காலதாமதம் செய்யவில்லை என்று தெரிவித்தார். சாட்சிகளிடம் விரிவாக விசாரணை…

  4. பரந்தூரில் விளைநிலங்களை அழித்து விமான நிலையம் தேவையா? சீமான் கேள்வி சென்னையின் 2-வது சர்வதேச விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான நிலம் விவசாய நிலங்களாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் இருப்பதால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்பட கிராமங்களில் பல்வேறு போராட்டங்களையும் பொதுமக்கள் முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் பரந்தூர் அருகேயுள்ள ஏகனாபுரம் கிராமத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்றார். போராட்ட களத்தில் இருந்த பொதுமக்களை சந்தித்து பேசினார். ந…

  5. தங்கைக்காக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : அலறிய பயணிகள்! monishaAug 27, 2022 11:26AM சென்னையிலிருந்து இன்று (ஆகஸ்ட் 27) காலை துபாய் செல்ல தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இன்று காலை 7.20 மணிக்குச் சென்னையிலிருந்து துபாய் செல்வதற்கு இண்டிகோ விமானம் தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போது, மர்மநபர் ஒருவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம், துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டுடன் ஒருவர் பயணிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த 160 பயணிகளை வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வ…

  6. தமிழ்நாடு: திருக்குறள், திருவள்ளுவரை கட்சிகள், ஆளுநர் பயன்படுத்துவது அரசியல் ஆதாயத்துக்காகவா? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருவள்ளுவர் குறித்தும் திருக்குறள் குறித்தும் எழும் சர்ச்சைகள் புதிதல்ல. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சிகள் திருவள்ளுவரை தங்களின் அடையாளமாக கூறிக்கொள்வதும் அரசியல் தலைவர்கள் தங்களின் மேடைப் பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாக திருக்குறள் ஒன்றை கூறி தொடங்குவதும் தமிழ்நாட்டு அரசியலில் பெரும்பாலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. தமிழ் மொழியின் தமிழ்நாட்டு மக்களின் அடையாளமாக திகழ்ந்த திருக்குறள், இன்று தேசம் முழுவதும் தேசத்தைக்…

  7. இலவசங்கள், ஃப்ரீபிக்கள் என்பது பொருத்தமல்ல; அவை ஏற்றத்தாழ்வை போக்கும் சீர்திருத்த கருவிகள்: ஜெ. ஜெயரஞ்சன் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மாநில அரசுகள் மக்களுக்கு விலையில்லாப் பொருட்கள், இலவசத் திட்டங்களை அறிவிப்பது குறித்த விவாதம் தற்போது நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்தத் திட்டங்களை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்தும் இதனால் மாநில அரசுகளுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமை குறித்தும் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சனிடம் உரையாடினார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன்.…

  8. ஆளுநர் ரவி ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றி விமர்சனம் - மீண்டும் சர்ச்சை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, டெல்லி டிடிஇஏ லோதி சாலை பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. உடனிருப்பவர் வி.ஜி. சந்தோஷம் மற்றும் டிடிஇஏ பள்ளி நிர்வாகிகள். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிறிஸ்துவ மத போதகர் ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறள் பற்றிய தனது பார்வையாக வெளியிட்டுள்ள விமர்சனம் பொதுவெளியில் சர்ச்சையாகியிருக்கிறது. டெல்லியில் ஏழு பள்ளிகளை நிர்வகித்து வரும் டெல்லி தமிழ் கல்விக் கழகம் 1923ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு நூற்றாண்டை நோக்கி சென்று கொண்டி…

  9. தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமொன்றை எழுதியுள்ளார். மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 22ஆம் திக…

    • 0 replies
    • 178 views
  10. மாற்றுத்திறனாளியை நடுவழியில் இறக்கி விட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம் - என்ன நடந்தது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை பேருந்து நடத்துநரும் ஓட்டுநரும் நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற விவகாரத்தில் அந்த இரு பேருந்து ஊழியர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேகட்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் ,வாணி ஸ்ரீ தம்பதி. ஆட்டோ ஓட்டுநரான கோபாலகிருஷ்ணனுக்கு மூளை வளர்ச்சி குறைபாடுடைய ஹரி பிரசாத் என்ற மகன் நடக்க முடியாத நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் மூவரும் கிருஷ்ணகிரி …

  11. திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலய நிலம் தனியாருக்கு அளிக்கப்பட்டது ஏன்? மோகன் பிபிசி தமிழுக்காக 23 ஆகஸ்ட் 2022 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பஞ்சாயத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது நஞ்சராயன் குளம். அந்தக் குளத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள நிலம் தனியாருக்கு முறையற்று கொடுக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நஞ்சராயன் குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் மற்றும் வலசை வரும் பல அரிய வகை பறவைகள் அதிகம் வந்து செல்கின்றன. இங்கு ஆண்டுதோறும் 181 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இதில் …

  12. 'இலவசங்கள்' வழக்கில் திமுகவை விமர்சித்தாரா 'இலவசங்கள்' வழக்கில் திமுகவை விமர்சித்தாரா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா? என்ன நடந்தது? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்படும் 'இலவசங்கள்' தொடர்பான வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, தமிழ்நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை தெரிவித்த கருத்துக்கள், பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதே சமயம், அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் இலவசங்கள் விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவை பற்றிய விவாதம்…

  13. தூத்துக்குடி படுகொலையும் எடப்பாடி பழனிசாமியும் MinnambalamAug 22, 2022 07:35AM ராஜன் குறை எடப்பாடி பழனிசாமியின் பிரச்சினை அவரை தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்ட படுகொலைக்கு யாரும் பொறுப்பாக்குகிறார்கள் என்பதல்ல. உண்மையில் அவருக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை யாருமே நம்பவில்லை என்பதுதான். அவரைத் தவிர எந்த ஒரு ஆளுமையுள்ள அரசியல் தலைவர் முதல்வராக இருந்திருந்தாலும் அவர் மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டாக, அவப்பெயராக அந்த சம்பவம் மாறியிருக்கும். எடப்பாடி பழனிசாமி சிறுபிள்ளை போல சிரித்தபடியே “தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன்” என்று கூறியபோது யாரும் அவர் பொய் சொல்கிறார் என்று கொந்தளிக்கவில்லை. உண்மையிலேயே அவருக்கு என்ன நடக்கிறது என்று…

  14. ஆகமங்கள் என்றால் என்ன, கோவில்களில் அவற்றின் முக்கியத்துவம் என்ன? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும்போது ஆகமங்களின்படி நியமிக்க வேண்டுமென நீதிமன்றங்கள் அவ்வப்போது கூறிவருகின்றன. ஆகமங்கள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விவகாரத்தில் தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள், அர்ச்சகர் நியமனங்கள் ஆகம விதிகளின்படி நடக்க வேண்டுமென தீர்ப்பளிக்கின்றன. உண்மையில் ஆகமங்கள் என்றால் என்ன, அவற்ற…

  15. புதுச்சேரிக்கு ரூ.10,606 கோடி பட்ஜெட்: நீங்கள் அறிய வேண்டிய 12 தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் என். ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.10,696 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அத்துடன் அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ளார். புதுச…

  16. இது நைஜீரியன் டச் உலகளாவிய ரீதியில் மோசடி வேலைகளுக்கு பெயர் போனவர்கள் நைஜீரியர்கள். தினுசு, தினுசா யோசித்து, புதிய தொழில் நுட்பங்களை பாவித்து மோசடி செய்து சுத்துவார்கள். 1990 களில், லண்டன் டைம்ஸ் பேப்பரில், நைஜிரியாவில் பாலம் கட்ட அரசு எந்த டெண்டரும் கோரவில்லை, பணத்தினை கொடுத்து ஏமாறாதீர்கள். டெண்டர்களின் உண்மைத்தன்மையை அறிய எம்முடன் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று நைஜீரிய தூதரகம் முழுப்பக்க விளம்பரம் செய்தது. வேறு ஒன்றும் இல்லை.நைஜீரிய மத்திய வங்கியின் காலியாக இருந்த மாடி ஒன்றினை வாடகைக்கு எடுத்து, மத்திய வங்கியின் முகவரியினை பாவித்து, அரசு, ஒரு நீர் மின்னுட்பத்தி அணை கட்ட $10,000 கட்டி டெண்டர் படிவங்களை பெறுமாறு கோரியது. பலர் விண்ணப்பித்தார்கள். …

  17. சென்னை தினம்: மெட்ராஸ் நகரத்தின் உண்மையான வயது என்ன? - கல்வெட்டுகள் விவரிக்கும் வரலாறு பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 13 ஆகஸ்ட் 2017 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FOX PHOTOS/GETTY IMAGES படக்குறிப்பு, சுமார் 1950 ஆம் ஆண்டில் மெட்ராஸிலுள்ள சட்டமன்றப்பேரவை கட்டடம் (2017ஆம் ஆண்டு வெளியான கட்டுரையை மீண்டும் மீள்பகிர்வு செய்கிறோம்) ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சென்னையில் பழைய மெட்ராஸ் நகரத்தின் உதய தினத்தை கொண்டாடுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு நடைப் பயணம், சென்னை நகரத்தின் தொன்மை க…

  18. அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகும் விவகாரம்: அரசின் விதி செல்லுமெனத் தீர்ப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் கோவில்களில் அர்ச்சகராகும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழுவை நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் அனைத்து சாதியைச் சேர்ந்த 28 பேரை பல்வேறு கோவில்களில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அர்ச்சகர்களாக தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது. இவர…

  19. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படும்? எம். ஆர். ஷோபனா பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தில், 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே 18ம் தேதியன்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். …

  20. இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதன் நிதி ஆதாரம் குறித்தும் விளக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி உறுப்பினர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,THE INDIA TODAY GROUP / GETTY IMAGES (இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (22/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான நிதி ஆதாரம் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கமிட்டி உறுப்பினர் அசிமா கோயல் கூறியுள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மக்களுக்கு இலவசங்களை வழங்கும் நடவடிக்கை குறித்து நாடு முழுவதும் பெரும் வி…

  21. தமிழ்நாட்டில் 'காப்பி பேஸ்ட்' செய்யப்படும் உடற்கூராய்வு அறிக்கைகள்? என்ன நடக்கிறது? பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இந்த பிரேத பரிசோதனைகளில் குளறுபடி நடப்பதாகவும், வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் தற்போது புகார் எழுந்துள்ளது. குறிப்பாக 'காப்பி பேஸ்ட்' முறையில் பிரேத பரிசோதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று…

  22. காவிரி உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து தருமபுரி மாவட்டத்துக்கு திருப்பிவிடுங்கள்: டிரென்ட் ஆகும் விவசாயிகள் கோரிக்கை க. சுபகுணம் பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2022 புதுப்பிக்கப்பட்டது 20 ஆகஸ்ட் 2022 காவிரி உபரி நீரை நீரேற்று மூலம் கொண்டு வந்து மாவட்ட பாசனத்திற்கு வழங்கி தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என்று தருமபுரி மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஒகேனக்கல் உபரி நீரை மாவட்ட பாசனத்திற்கு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் இன்று முதல் 3 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் பிரசார நடைப…

  23. வாழை நாரில் நாப்கின் தயாரிக்கும் தம்பதி - சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் வாழை நாரில் நாப்கின் தயாரித்து வருகின்றனர் சென்னையை சேர்ந்த சக்திவர்ஷினி மற்றும் ஷனத்குமார் தம்பதி. பிபிசி தமிழுக்காக அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம். "நாங்கள் இருவரும் முதுகலை படிப்பை லண்டனில் ஒன்றாக படித்தோம். அப்போது நிக்கி ஜோடன்ஸ் என்ற பேராசிரியர் தலைமையில் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில் நாங்கள் இருவரும் ஈடுபட்டிருந்தோம். அந்த ஆராய்ச்சியின் முடிவில் சாதாரண பிளாஸ்டிக் …

  24. World Photography Day புகைப்படம்: 5 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம், சென்னையின் நீராதாரம் கொற்றலை ஆறு லட்சுமி காந்த் பாரதி பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2022, 01:50 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LAKSHMI KANTH BHARATHI/BBC படக்குறிப்பு, புள்ளும் சிலம்பின காண்.... கொசஸ்தலை எனப்படும் கொற்றலை ஆறு சென்னையின் முக்கிய நீராதாரம். ஆனால் சென்னையில் இருக்கும் பலருக்கு இது தெரியாது. இந்த ஆற்றை சூழ்ந்த வாழ்வியலை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார் பிபிசி தமிழின் லட்சுமி காந்த் பாரதி. ஆகஸ்ட் - 19 உலகப் புகைப்பட நாளை ஒட்டி அந்தப் ப…

  25. தென்னக ரயில்வே ரயில் எஞ்சின்களில் ஒன்றில் கூட கழிப்பறை இல்லை: பெண் ஓட்டுநர்கள் அவதி பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 19 ஆகஸ்ட் 2022, 07:55 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் நாடு முழுவதும் ஓடும் ரயில் எஞ்சின்களில் 120 மின்சார ரயில் எஞ்சின்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது என ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. தென்னக ரயில்வேயில் ஒரு ரயிலில் கூட எஞ்சினில் கழிப்பறை வசதிகள் செய்யப்படாததால் ரயில் ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சமீப காலமாக ஆண்களுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.