அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3313 topics in this forum
-
கேரளாவை தொடர்ந்து... மகாராஷ்டிராவிலும், ஜிகா வைரஸ் தொற்று! கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புரந்தர் என்ற பகுதியை சேர்ந்த ஐம்பது வயது பெண் ஒருவருக்கே ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த பெண் பூரணமாக குணமடைந்துள்ளமையால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதேவேளை ஏடிஸ் வகை நுளம்புகளால் பரவும் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் பலருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/1231924
-
- 0 replies
- 309 views
-
-
பாகிஸ்தானில்... இந்திய நீர்மூழ்கி கப்பல், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு! பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரங்கள் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கடற்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த 2016 மற்றும் 2019இல் இந்திய இராணுவத்தின் இது போன்ற ஊடுருவல் முயற்சியை பாகிஸ்தான் கடற்படை முறியடித்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1245786
-
- 0 replies
- 327 views
-
-
மக்கள் தொகை கட்டுப்பாடு... சட்டம், விரைவில் : பிரகலாத் சிங் படேல் இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் அமுலுக்கு வரும் என மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்தார். சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர இருப்பதாகவும் இதற்காக பெரியளவில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் பிரகலாத் பட்டேல் கூறினார். இந்த சட்டமே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் அடுத்த பெரிய திட்டம் என்றும் பிரகலாத் சிங் பட்டேல் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1284865
-
- 0 replies
- 249 views
-
-
இலங்கைக்கு உதவ... இந்தியா, உறுதி பூண்டுள்ளது – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்திய குடியரசுத் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவராக பதவியேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்து ரணில் விக்ரமசிங்க அனுப்பிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்து அவர் குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார். பொருளாதார சிக்கலால் ஏற்படும் சவால்களை சமாளிக்க இலங்கை மக்களுக்கு உதவ இந்தியா துணை நிற்கும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார். https://atha…
-
- 0 replies
- 142 views
-
-
மகாராஷ்டிர குகையில் கிடைத்த தனித்துவமான கற்கால சிற்பங்கள், கருவிகள்: சிறப்பு என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PARTH CHAUHAN/BBC படக்குறிப்பு, அகழ்வாராய்ச்சியின் போது பல சிறிய பெரிய கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன மகாராஷ்டிராவில் இதுவரை அறியப்படாத நாகரீகத்தை சேர்ந்த பாறைச் சிற்பங்கள் சில ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு குகை இந்த வரலாற்றுக்கு முந்தைய கலைப்படைப்புகளை உருவாக்கியவர்கள் குறித்தும், அவர்களின் வாழ்க்கை குறித்தும் சில புரிதலைகளை நமக்கு அளிக்கிறது. இதுகுறித்து பிபிசி மராத்தியின் மயூரேஷ் கொன்னூர் செய்தி அளிக்கிறார். மேற்கு மகாராஷ்டிராவ…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
ரஃபேல் விவகாரம் - ’ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்தியா பரிந்துரைத்தது’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி: ரஃபேல் விவகாரம் - இந்தியாவின் பரிந்துரை ரிலையன்ஸ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரஃபேல் ஜெட் ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டாளியாக இருக்…
-
- 0 replies
- 360 views
-
-
டெல்லியில் நடைபெறுகிறது காவிரி ஒழுக்காற்று குழு கூட்டம்! காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் ஒழுங்காற்றுக்குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டங்கள் அனைத்தும் பெங்களூரில் நடைபெற வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. ஒழுங்காற்றுக்குழு கூட்டம் பெங்களூரில் நடைபெற்றால் தான் அணையின் …
-
- 0 replies
- 299 views
-
-
மசோதாக்களை நிறைவேற்றியதில் கடந்த 15 வருடங்களில் இல்லாத வேகம் என்றே சொல்லலாம். அதற்குக் காரணமும் இருக்கின்றது இரண்டாவது முறை ஆட்சி... 303 உறுப்பினர்கள்.... எனப் பெரும்பான்மை பலத்தில் இருக்கும் பா.ஜ.க 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரை பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. எந்தமுறையும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. கடந்தமுறை பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருந்தாலும் மாநிலங்களவையில் போதுமான உறுப்பினர்கள் இல்லாததால் மசோதாக்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டியது. ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை. மாநிலங்களவையிலும் தற்போது பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்டுள்ளதால் கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாத மசோதாக்களை எல்ல…
-
- 0 replies
- 320 views
-
-
காந்தியின் உருவப்படத்தில் துரோகி என எழுதிய நபர்கள் அஸ்தியை திருடிச்சென்றனர்- மத்தியபிரதேசத்தில் சம்பவம் காந்தியின் 150 வது பிறந்தநாளை உலகம்கொண்டாடிக்கொண்டிருந்தவேளை அவரது அஸ்தியை இனந்தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். மத்திய பிரதேசத்தின் ரேவாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த பகுதியில் உள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்தில் 1948 முதல் வைக்கப்பட்டிருந்த அஸ்தியை இனந்தெரியாதவர்கள் திருடிச்சென்றுள்ளனர். மகாத்மாகாந்தியின் உருவப்படத்தில் பச்சை நிறமையினால் துரோகியெனவும் அவர்கள் எழுதிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் தேசத்தின் ஐக்கியத்திற்கு ஆபத்தானது அமைதியை குலைக்ககூடியது என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாப…
-
- 0 replies
- 567 views
-
-
மியன்மாரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்பு. மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலை பெற்று தருவதாகக்கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்போரால் மின்சாரம் பாய்ச்சியும், பணய கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபட சிக்க வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வேலை என கூறி மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்க…
-
- 0 replies
- 106 views
-
-
HEALTH இந்தியா:தெருக்களில் வாழும் மருத்துவர்கள் இந்தியாவில், கொறோனாவைரஸ் தொற்றலாம் என்ற அச்சத்தில் மருத்துவர்கள், தாதிகள் போன்ற சுகாதார சேவை முன்னணிப் பணியாளர்கள் தங்கியிருக்கும் வாடகை வீடுகளிலிருந்து சொந்தக்காரர்களால் வெளியேற்றப்பட்டுத் தெருக்களில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல மருத்துவர்கள் தாம் பணி புரியும் வைத்தியசலைகளில், தரைகளிலும், கழிப்பறைகளிலும் படுத்துறங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வீட்டுச் சொந்தக்காரர்கள் மட்டுமல்லாது, அயலவர்கள், டக்சி ஓட்டுனர்கள் ஆகியோரினாலும், சுகாதாரப் பணியாளர்கள் புறந்தள்ளப்படுகிறார்கள். சிலர் அவரவர்களின் சொந்த வீடுகளிலுமிருந்து தனிமைப்படுத்தப்படுவதும், வீடுகளிலிருந…
-
- 0 replies
- 349 views
-
-
பாகிஸ்தானின் அணுசக்தி தந்தை அப்துல் காதர் கான் காலமானார் பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தின் தந்தை என்று கருதப்படும் அப்துல் காதர் கான், தனது 85 ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். உலகின் முதல் இஸ்லாமிய அணு ஆயுத சக்தியாக பாகிஸ்தானை மாற்றியமைத்ததற்காகவும், போட்டி மற்றும் சக அணு ஆயுத நாடான இந்தியாவுக்கு எதிரான தனது செல்வாக்கை வலுப்படுத்தியதற்காகவும் அப்துல் காதர் கான் ஒரு தேசிய ஹீரோ என்று பாராட்டப்பட்டார். ஆனால் பின்னர் ஈரான், வட கொரியா மற்றும் லிபியாவுக்கு தொழில்நுட்பத்தை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். தனது வாழ்வின் கடைசி ஆண்டுகளை பலத்த பாதுகாப்புடன் கழித்த அணு விஞ்ஞானி, கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நி…
-
- 0 replies
- 286 views
-
-
முப்பதிற்கும் மேற்பட்ட... இந்திய மீனவர்களை, கைது செய்தது பாகிஸ்தான்! பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 31 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, பாகிஸ்தான் சிறப்புப் பொருளாதார மண்டல கடற்பகுதிக்குள் கடந்த 18 ஆம் திகதி ரோந்து சென்ற போது ஊடுருவிய 5 இந்திய மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இருந்த 31 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளுக்காக அந்தப் படகுகள் கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1268200
-
- 0 replies
- 193 views
-
-
அயோத்தியில்... "ராமர் கோயில்" கருவறைக்கு, முதல்வர்... அடிக்கல் நாட்டினார்! உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியாவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பின்னர், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 2023ஆம் ஆண்டுக்குள் கீழ் தளத்தில் ராமர் கோயில் கருவறை கட்டி முடிக்கப்படும் என ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் ரிபேந்திர மிர்ஸா தெரிவித்தார். அத்தோடு அதே ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க…
-
- 0 replies
- 425 views
-
-
ஏர் இந்தியா - ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடமிருந்து 470 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தால் மீண்டெழுமா? நிகில் இனாம்தார் பிபிசி வணிக செய்தியாளர், மும்பை 15 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES சாதனை நிகழ்வாக, ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடமிருந்து 470 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஏர் இந்தியா நிறுவனம் இறுதி செய்துள்ளது. "உலகத்தரத்திலான கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கி வருகிறோம்" என இது குறித்து டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்த ஒப…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
இலங்கையில் சீதை அம்மன் ஆலயம் – காங்கிரஸிற்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் கருத்து மோதல்! இலங்கையில் புதிதாக சீதை அம்மன் ஆலயமொன்றை அமைப்பது குறித்து இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் புதிய சீதை அம்மன் ஆலயமொன்றை அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தீர்மானித்திருந்தது. இந்நிலையில், சீதை இலங்கைக்கு உண்மையிலேயே கடத்திச் செல்லப்பட்டாரா என்பது குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தற்போதைய அரசாங்கம் மீது குற்றம் சுமத்தி மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உலகறிந்த நம்பிக்கைகளை சிதைக்கும் வக…
-
- 0 replies
- 282 views
-
-
பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, செங்கோட்டை அருகே நடந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்டது. கட்டுரை தகவல் சையத் மொஸீஸ் இமாம் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் நவம்பர் 10 ஆம் தேதி மாலை, டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு கார் வெடித்து, குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கார் வெடிப்புக்கு முன்னர், ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஹரியாணா மற்றும் உத்தரபிரதேசத்தில் பலரை கைது செய்தது. மேலும் பலர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் மருத்துவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபரிதாபாத் காவல் ஆணையர் சதேந்திர குமார் குப்தா இதுகுறித்து கூறுகையில், "இது, கடந்த 15 நா…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
ஒழுக்கத்தின் நிழலில் அவதூறு: இந்திய பெற்றோர்களை சாடும் யுனிசெஃப்! மின்னம்பலம் குழந்தைகளை ஒழுங்குபடுத்தும் முயற்சி என்ற பெயரில் குழந்தைகள் மீது இந்திய பெற்றோர்கள் 30 வகையான உடல் மற்றும் வாய்மொழி அவதூறுகளை பயன்படுத்துவதாக யுனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 'பெற்றோருக்குரிய விஷயங்கள்: பெற்றோரின் அணுகுமுறைகள் மற்றும் நடைமுறைகளை ஆய்வு செய்தல்' என்ற ஆய்வு யுனிசெஃப் மூலம் நடத்தப்பட்டது. இதில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் தலா இரண்டு மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் மூன்று மாவட்டங்களிலும், மகாராஷ்டிராவின் நான்கு மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கோள்ளப்பட்டது. இதன் மூலம், தண்டனை என்பது குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற…
-
- 0 replies
- 342 views
-
-
இமாச்சல பிரதேசத்தில்... பெய்த கனமழை காரணமாக, 13 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு! இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக 13 பேர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் சுற்றுலாப் பணிகள் மலைப்பகுதிகளுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் கரையோரங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இமாச்சல பிரதேசத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1228336
-
- 0 replies
- 209 views
-
-
ரஃபேல் குறித்த விசாரணைக்கு பிரதமர் மோதி ஏன் தயாராக இல்லை? - ராகுல் காந்தி கேள்வி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER / CONGRESS "இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை காணவில்லை, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை காணவில்லை, ஜிஎஸ்டியால் பல வணிகங்களை காணவில்லை, தற்போது ரஃபேல் ஆவணங்களையும் காணவில்லை"…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பு! இந்தியாவின் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்கவுள்ளார். அதன்படி பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்னிலையில் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தனது 73 ஆவது வயதில், நரேந்திர மோடி இன்றிரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பதவியேற்கவுள்ளதாக இந்தியாலின் ஜனாதிபதி மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்போது, மத்திய அமைச்சர் குழுவின் ஏனைய உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தியாவின் பிரதமராக …
-
- 0 replies
- 127 views
-
-
ஸ்ரீநகர்: காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் காணாமல் போன ராணுவத்தைச் சேர்ந்த வீரரின் உடல், குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். ஷா பகுதியில் இருந்து காணாமல் செவ்வாய்க்கிழமை போயிருந்ததாக கூறப்பட்ட பிராந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஹிலால் அஹ்மத் பட்-டின் உடல் அனந்தநாக் மாவட்டத்தின் உட்ரசோ பகுதியில் உள்ள சங்லான் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவ வீரரின் உடல் மருத்துவ நடைமுறைகளுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, இது குறித்து விவரமறிந்த வட்டாரங்கள் கூறும்போது, “ராணுவ வீரர்கள் இருவர் அனந்தநாக் ஒட்டிய வனப்பகுதியில் கட…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
காணாமல் போன ஏ.என்-12 பி.எல்-534 விமானத்தின் பாகங்கள் 51 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிப்பு. இமாசலபிரதேச மாநிலத்தில் காணாமல்போன இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-12 பி.எல்-534 விமானத்தின் பாகங்கள் 51 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-12 பி.எல்-534 விமானம் இமாசலபிரதேச மாநிலத்தில் இமயமலையின் ரோஹ்டங் பாஸ் என்ற சிகர பகுதியில் 1968ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி காணாமல் போனது. குறித்த விமானத்தில் பயணம் செய்த வீரர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்றுவந்தது. கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி இதற்காகவே தாகா பனிச்சிகரத்தில் டோக்ரா சாரணர் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த சாரணர் குழுவும், இந்திய விமானப்படையும் இணைந்து கடந்த 6ஆ…
-
- 0 replies
- 371 views
-
-
அபுதாபியில் இந்தியப் பெண்ணிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்! ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 வயது குழந்தையொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பாண்டா நகரைச் சேர்ந்த ஷாஷாதி கான் என்ற பெண்ணுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த 2022-ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றி வந்துள்ளார் எனவும், இதன்போது தனது பராமரிப்பில் இருந்த 4 வயதுக் குழந்தைக்கு அவர் தடுப்பூசி செலுத்தியுள்ளார் எனவும், அப்போது துரதிஷ்டவசமாக அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தினையடுத்து அப்பெண் அபுதாபி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு ச…
-
- 0 replies
- 187 views
-
-
எலோன் மஸ்க்கின் எக்ஸ்... இந்திய அரசாங்கம் மீது வழக்கு தொடர்வு! எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் டுவிட்டர் என்று அழைக்கப்பட்டது), இந்திய அரசாங்கத்திற்கு எதிராக சட்டப்பூர்வ சவாலைத் தொடங்கியுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதன் தணிக்கை திறன்களை சட்டவிரோதமாக விரிவுபடுத்துவதாகக் குற்றம் எக்ஸ் சாட்டியுள்ளது. மார்ச் 5, 2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட சட்டப் பாதுகாப்புகளைத் தவிர்த்து, உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான ஒரு இணையான அமைப்பை புது டெல்லி உருவாக்கியுள்ளது என்று குற்றம் சாட்டுகிறது. பில்லியனர் தனது ஏனைய உயர்மட்ட முயற்சிகளான ஸ்டார்லிங்க் மற்றும் டெஸ்லாவை இந்தியாவில் தொடங்கத் தயாராகி வருவதாகக் கூறப்ப…
-
- 0 replies
- 131 views
-