அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3272 topics in this forum
-
மனித உரிமைகள் பேரவையின், உறுப்பினராக... இந்தியா மீண்டும் தெரிவு ! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பொறுப்புக்கான தெரிவு 76 ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் நடைபெற்றது. 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கவிருக்கும் அந்தப் பொறுப்புக்கு 18 புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில், இந்தியாவுக்கு ஆதரவாக 184 வாக்குகள் கிடைத்த நிலையில் பெருவாரியான வாக்குகள் பெற்று இந்தியா மீண்டும் தெரிவாகியுள்ளது. இதேவேளை மூன்று ஆண்டுகளின் ப…
-
- 0 replies
- 164 views
-
-
டெல்லியில்... பயங்கர தீ விபத்து : 27 பேர் பலி, 40 பேர் வைத்தியசாலையில் ! இந்தியாவின் மேற்கு டெல்லியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில், நேற்று மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததோடு 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அத்துடன், 60 முதல் 70 பேர் வரை குறித்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் புகையிரத நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தை அடுத்து ஏற்பட்ட இந்தத் தீப்பரவலைக் கட்டுப்படுத்த சுமார் 24 தீயணைப்பு குழுவினர் நடவடிக்கை எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டட…
-
- 0 replies
- 164 views
-
-
குரங்கு அம்மை பாதிப்பு கேரள இளைஞருக்கு உறுதியனது - மாநிலங்களை எச்சரிக்கும் இந்திய அரசு 32 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குரங்கு அம்மை வைரஸ் வேகமாக மாறும் தன்மை கொண்டது. ஆனால் அறிகுறிகள் தோன்றத் தொடங்கியவுடன் சிகிச்சையளிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நான்கு நாட்களுக்கு முன்பு திரும்பிய கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு நடத்தப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் முதலாவதாக மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது. ஆரம்பத்தி…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
நாடு கடத்தினால்... நிரவ்மோடி, தற்கொலை செய்துகொள்வார் – வழக்கறிஞர் தெரிவிப்பு! தொழிலதிபர் நிரவ் மோடியை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர் நாடுகடத்தப்பட்டால் தற்கொலை செய்துகொள்வார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ‘நிரவ் மோடியின் சிறுவயதில், அவரது தாய், தற்கொலை செய்துள்ளார். அதிலிருந்து நிரவ்மோடி மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். மனநல ஆலோசனைகளையும் அவர் முறையாக பெறவில்லை. இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்வார்’ எனத் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரான நிரவ்மோடி மற்றும் மெஹுல் சோக்சி, ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் இர…
-
- 0 replies
- 164 views
-
-
ஆந்திராவில் மழை வெள்ளத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு! ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட மழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 பேரை காணாமல் போயுள்ளனர். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக திருப்பதி, சித்தூர் , கடப்பா, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வீதியில் வெள்ளம் தேங்கியதில் பேருந்துகள், சரக்கு வான்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் …
-
- 0 replies
- 164 views
-
-
ஹிஜாப் விவகாரம் : இந்தியாவின் உள் விவகாரங்களில் நுழையும் அல்கொய்தா! கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தில் கோஷமிட்ட மாணவி ஒருவரை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி பாராட்டும் காணொலி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த காணொலியில், “ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிர்வினையாற்ற வேண்டும். இந்தப் பெண் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான காணொலிகளை பார்த்தேன். அவரது துணிவு குறித்து அறிந்து கவிதை எழுதி பாராட்ட முடிவு செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தியாவின் உள் விவகாரங்களில் அல்-கொய்தா அமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளமைக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த மாணவியின் தந்தை அல்கொய்தாவோடு தங்களு…
-
- 0 replies
- 164 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், இலங்கை புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் மாலத்தீவு அதிபர் முய்சு கட்டுரை தகவல் எழுதியவர், இஷாத்ரிதா லஹரி பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், நியூயார்க்கில் ஐநா பேரவை கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். ஜோ பைடன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, இரு தலைவர்களுக்கும் இடையே காணப்படும் நட்புறவை சுட்டிக்காட்டியுள்ளது. வங்கதேசத்தின் மறுசீரமைப்புக்கு யூனுஸ் 'அதிக முயற்சிகளை' மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. …
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
கான்பூரில்... இரு மதத்தினர் இடையே... வன்முறை: 24 போ் கைது; 800 போ் மீது வழக்குப் பதிவு உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இரு மதத்தினர் இடையே நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. பெண் ஊடகப்பேச்சாளர் நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை வெளியிட்டதை அடுத்து வன்முறை பதிவாகியது. இந்த வன்முறை தொடர்பாக 800 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என கான்பூர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 163 views
-
-
ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி 6ஆவது முறையாக இந்தியா சாதனை! இந்தியாவில் 6ஆவது முறையாக மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள. இந்தியா முதன்முதலில் கடந்த ஓகஸ்ட் மாதம் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்திய சாதனையை எட்டியது. அதன்பின்னர், செப்டம்பர் 27ஆம் திகதி வரை இதேபோல் 5 முறை இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் திகதி ஒரே நாளில் இரண்டரைக் கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா உலக சாதனை படைத்தது. இந்த நிலையில், 6ஆவது முறையாக மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி டோஸ் சாதனை படைக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இ…
-
- 0 replies
- 163 views
-
-
டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டுக்கு அக்டோபர் 1 முதல் புதிய விதிகள்: அவை உங்களை பாதிக்குமா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள 'டோக்கனைசேஷன்' எனும் புதிய விதி அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான ஆன்லைன் பண பரிவர்த்தனையில் மாற்றங்கள் அமலாகவுள்ளன. ரிசர்வ் வங்கியின் புதிய டோக்கனைசேஷனுக்கான விதிகளை உருவாக்குவதற்கான காலக்கெடு ஜூலை 1ஆம் தேதி என வகுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல பெரிய வணிக நிறுவனங்கள் 'கார்டு-ஆன்-ஃபைல்' எனும் டோக…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, பிஸ்மில்லா கோலா கட்டுரை தகவல் ராக்ஸி காக்டேகர் பிபிசி செய்தியாளர் 25 செப்டெம்பர் 2025, 05:11 GMT நூர் ஜஹான் ஒரு மருத்துவ பரிசோதனையிலிருந்து திரும்பி வந்துள்ளார். அவர் மூன்று நாட்களை ஒரு ஆய்வகத்தில் கழித்துள்ளார், அங்கு ஆராய்ச்சியாளர்களும் மருந்து நிறுவனங்களும் அவர் மீது புதிய மருந்துகளை பரிசோதித்துள்ளன. நூர் ஜஹான் தனது சிறிய வீட்டிற்குள் நுழைந்தபோது, அவரது குழந்தைகளும் கணவரும் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். நூர் ஜஹானின் வீட்டில் ஒரு சிறிய சமையலறை, ஒரு படுக்கை மற்றும் சில பெட்டிகள் உள்ளன. நூர் ஜஹான் தனது மகளின் திருமணத்திற்கான பொருட்களை ஏற்பாடு செய்து வருகிறார். தனது குடும்பச் செலவுகள் மற்றும் மகளின் திருமணத்திற்காக சிறிது பணத்தை …
-
- 1 reply
- 163 views
- 1 follower
-
-
அதி உயர் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா! இந்தியா தனது இராணுவ சக்தியை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தான் முழுவதையும் மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்ட ஒரு புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகின்றது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கு ET-LDHCM என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 11,000 கிலோமீற்றர் வேகத்தில் பறந்து, சுமார் 1,500 கிமீ வரம்புக்குள் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையானது” ஸ்க்ராம்ஜெட் இயந்திரம் மற்றும் ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிரி ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை தவிர்க்கும் திறன் கொண்டது எனவும் தெரி…
-
- 0 replies
- 163 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், குர்மிந்தர் கிரேவால் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பஞ்சாப் மாநிலம், லூதியானாவுக்கு அருகில் உள்ள ராம்கர் சர்தாரன் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்ஷோ தேவி. பக்ஷோ தேவியின் சகோதரர் அஜய்குமார் அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ஜனவரி 2024இல், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிவெடி வெடித்ததில் இறந்து போனார் அஜய்குமார். இந்திய ராணுவத்தின் இணையதளத்தின்படி, அக்னிவீர் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுகிறார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேருக்…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
சீனாவுக்கு... கடும் எச்சரிக்கை விடுக்கும், இந்தியா! இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என சீனாவுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சாலைகள், பாலங்கள், மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இது இந்தியாவின் இறையாண்மையைக் காப்பதற்கும் ஒற்றுமையைக் காப்பதற்குமான நடவடிக்கை என மத்திய அரச விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்த பகுதியில் 100 பேர் கொண்ட கிராமத்தை அமைத்திருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. https://a…
-
- 1 reply
- 163 views
-
-
உலகின் மிகப்பெரிய.. 12 கிலோ, தங்க நாணயத்தை... தேடும் பணியில் மத்திய அரசு 12 கிலோ தங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நாணயத்தை தேடும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முகலாய மன்னர் ஜஹாங்கீரால் உருவாக்கப்பட்ட அந்த தங்க நாணயம், இறுதியாக ஐதராபாத் நிஜாம்கள் வசம் இருந்த நிலையில், அதனை சிலர் சுவிஸ் வங்கியில் ஏலம் விட முயன்றதாக கூறப்படுகிறது. 1987ஆம் ஆண்டில் அந்த தங்க நாணயத்தை ஜெனிவாவில் ஏலம் விடுவது குறித்து இந்திய அதிகாரிகள், அரசிடம் தெரிவித்ததாகவும், அதற்கு பின் அந்த நாணயம் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை எனவும் வரலாற்று ஆய்வாளர் சல்மா கூறியுள்ளார். https://athavannews.com/2022/1288806
-
- 0 replies
- 163 views
-
-
அஸாமில் தொடரும் மழை – இதுவரையில் 110 பேர் உயிரிழப்பு அஸாமில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம் இந்த அனர்த்தம் காரணமாக 25 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அஸாமில் அண்மையில் பெய்த மழையால் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. இதன் காரணமாக ஒரு இலட்சத்து 12 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திப்…
-
- 0 replies
- 163 views
-
-
ஹொங்கொங்கிற்கான.. ஏயார் இந்தியா, விமான சேவை இரத்து! ஹொங்கொங்கிற்கான ஏயார் இந்தியா விமான சேவையை அந்நிறுவனம் இரத்து செய்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹொங்கொங் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விமான சேவையின் குறைந்த அளவிலான தேவை ஆகியவற்றை முன்னிட்டு அந்நாட்டிற்கான ஏர் இந்தியா விமான சேவை இரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று வருகிற 19 ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதி ஹொங்கொங்கில் இருந்து நாடு திரும்பும் ஏயார் இந்தியா விமான சேவையும் இரத்து செய்யப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவித்து உள்ளது. https://athavannews.com/2022/1277068
-
- 0 replies
- 163 views
-
-
இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்! ஆர்ஜன்டினா அணியின் தலைவரான பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பின்னர் 3 நாட்கள் பயணமாக இன்று காலை இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்…
-
- 1 reply
- 163 views
-
-
பாகிஸ்தான் சிறுமிக்கு இந்தியாவில் புதுவாழ்வு: இலவச சிகிச்சையால் திரும்பிய இயல்பு வாழ்க்கை ரியாஸ் சுஹைல் பிபிசி செய்தியாளர், கராச்சி 14 ஜூலை 2022 பட மூலாதாரம்,@AFSHEEN GUL "அவள் பிறந்தபோது நன்றாகத்தான் இருந்தாள். ஆனால் அவளுக்கு எட்டு அல்லது பத்து மாதங்கள் இருக்கும் போது அவள் கழுத்து சாயத்தொடங்கியது. இதற்கு முன்பு தனது சகோதரியின் கைகளில் இருந்து அவள் தவறி விழுந்துவிட்டாள். அதுதான் காரணமாக இருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். உள்ளூர் மருத்துவரிடம் கொண்டு சென்றோம். மருத்துவர் மருந்துடன் கழுத்துக்கு பெல்ட்டையும் கொடுத்தார். நாங்கள் ஏழைகள் என்பதால் மேற்கொண்டு சிகிச்சை பெற முடியவில…
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
இந்தியா-மியன்மார் எல்லை பகுதியில் வலுவான நிலநடுக்கம் மியன்மார் -இந்திய எல்லைப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிச்டெர் அளவில் ஆழமற்ற மற்றும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிசோரத்தில் தென்கிழக்கில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பங்களாதேஷில் உள்ள சிட்டகாங்கிலும், கிழக்கு இந்தியாவின் கொல்கத்தா வரையிலும் உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் (EMSC) இணையதளத்திலும் கூறியுள்ளது. நிலநடுக்கம் தொடர்பிலான உயிர் அல்லது உடைமை சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வரவில்லை. https://www.virakesari.lk/article/117892
-
- 0 replies
- 162 views
-
-
பயங்கரவாதத்தால்... உலக அமைதி, சீர்கெடுகிறது – ராஜ்நாத் சிங் பயங்கரவாதத்தால் உலக அமைதி சீர்கெடுகிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆசியான் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் எல்லைகளை மதித்து நடக்க வேண்டும். தங்களுடைய பிரச்சினைகளை சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். உலகின் அமைதி பயங்கரவாதத்தால் சீர்கெடுகிறது. அதைவிட பெரிய சவாலாக, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைப்புகளும், நாடுகளும் உள்ளன. பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள், நிதியுதவி செய்பவர்கள், பாதுகாப்பு அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வே…
-
- 0 replies
- 162 views
-
-
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை.. இந்தியாவுக்கும் வரலாம்.. ப.சிதம்பரம் கடும் எச்சரிக்கை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் என்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் எம்பியுமான ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எம்பி ப. சிதம்பரம் கலந்து கொண்டார். மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல் குறித்து ஆராயும் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ப.சிதம்பரம் இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார …
-
- 0 replies
- 162 views
-
-
Published By: RAJEEBAN 21 MAY, 2023 | 02:05 PM அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால் மிக்-21 ரக போர் விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. ராஜஸ்தானின் சூரத்கார் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து, கடந்த 8-ஆம் தேதி பயிற்சி மேற்கொண்ட மிக்-21 ரக விமானம், ஒரு வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. எனினும் விமானி பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேறியதால் அவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். அதேநேரத்தில் விமானம் விழுந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது பயன்பாட்டில் உள்ள சுமார் 50…
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டில் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால், அந்தத் தருணத்தில் என்ன நடந்தது என்பதை இப்போது வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம் விவரிக்கிறது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் உர்ஜித் படேல். ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது துணை ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், அவர் ராஜினாமா செய்த…
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
பொதுத்துறை வங்கிகளின்... பங்குகளை விற்க அரசு திட்டம்! மூன்று பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வரவு செலவு திட்டத்தில் பொதுத்துறை வங்களை தனியார் மயப்படுத்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி சென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க்ஆப் இந்தியா (BANK OF INDIA) ஆகிய நிறுவனங்கள் விற்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் மதிப்பு சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1220917
-
- 0 replies
- 161 views
-