Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பெரியார் சொன்னபோது மறுத்த சமூக நீதி பாதையை காங்கிரஸ் இப்போது கையில் எடுக்க என்ன காரணம்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 7 மார்ச் 2023, 05:05 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்தில் சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் 85வது சிந்தனை அமர்வில் பல முற்போக்கான சமூக நீதித் திட்டங்களை காங்கிரஸ் கட்சி முன்வைத்திருக்கிறது. கட்சியின் முந்தைய தடுமாற்றங்களில் இருந்து விலகி, புதிய பாதையைத் தேர்வு செய்கிறது காங்கிரஸ். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்…

  2. நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு September 13, 2025 நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி நேற்று பதவி ஏற்றார். இந்த நிலையில், அவருடைய பரிந்துரையின்பேரில் நேபாள பாராளுமன்றத்தை ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் கலைத்தார். ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று இரவு 11.00 மணிக்கு கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21 ஆம் திகதி நேபாள பாராளுமன…

  3. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2024 | 04:27 PM ரெமல் புயல் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கரையைக் கடந்ததை அடுத்து, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசியதுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்பட்டுள்ளது. புயல் தாக்கத்திற்கு முன் ஆயத்தமாக பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் 10 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ரெமல் புயல் மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் புயல் சீறியதாக இந்தியாவின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோல்கத்தா நகரில் புயலின் வேகம் உச்சத்தில் இருந்தபோது பெரிய கொ…

  4. உத்தரப்பிரதேசில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு! உத்தரப்பிரதேசின் பிரயாக்ராஜில் புதன்கிழமை (29) காலை நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்றைய தை (மௌனி) அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் திரண்டதில் நிறுவப்பட்ட தடைகள் உடைந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க ஏராளமான அம்பியூலன்ஸகள் விரைந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுதமிக்கப்பட்டனர். குறைந்தபட்சம் 15 உடல்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக ஆர…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் முழு பிராந்தியத்திற்கும் மிக முக்கியமான நிகழ்வாகும் (குறியீட்டு படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே பதவி, பிபிசி நிருபர் 40 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை இரவு, ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ராணுவ நிலையங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், அவை முறியடிக்கப்பட்டதகவும் இந்தியா கூறியது. இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மறுத்துள்ளார். "நம்பகமான தகவலின்படி, லாகூரில் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது" என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது . 25 இந்திய ஆளில…

  6. 26 JUN, 2024 | 01:31 PM மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. கேஜ்ரிவாலை கைது செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியது. அப்போது, அவரை கைது செய்வதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, அரவிந்த் கேஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். இதையடுத்து, கேஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் அஜர்படுத்தினர். மேலும், கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்திடம் சிபிஐ அதிகாரிகள் அனுமதி கோரினர். இதனிடையே, அமலாக்கத் துறை தொடர்ந்த வழ…

  7. கொரோனா தொற்றின் காரணமாக... 40 இலட்சம், இந்தியர்கள்... உயிரிழப்பு! கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை 40 இலட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதனை மத்திய அரசு மறைப்பதாகவும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்களில், ஒக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு யாரும் உயிரிழக்கவில்லை எனவும், இன்னமும் பொய்யான தகவல்களை தெரிவிக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா காலத்தில் அரசின் அலட்சியத்தால் உயிரிழந்தது 5 இலட்சம் பேர் கிடையாது எனத் தெரிவித்த அவர், 40 இலட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார். …

  8. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு முறையீடு Published By: RAJEEBAN 21 FEB, 2023 | 11:07 AM குஜராத்தில் கடந்த 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் சென்ற ரயில் பெட்டிக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 59 பேர் கருகி உயிரிழந்தனர். குஜராத்தில் மதக் கலவரம் ஏற்பட இந்த சம்பவம் வழிகோலியது. ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனை யும் விதிக்கப்பட்டது. மேல்முறை யீட்டு வழக்கில் 31 பேர் தண்டிக் கப்பட்டதை குஜராத் உயர் நீதி மன்றம் உறுதி செய்தது. எனினும் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. …

  9. எதிரிகளின் பதுங்குக் குழிகளை தகர்க்கும்... வல்லமை கொண்ட, அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்த இந்தியா திட்டம்! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜஸ் விமானத்தில் அமெரிக்க ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக குறித்த விமானத்தில் பிரான்ஸின் ஹம்மமர் வகை ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன. தற்போது அமெரிக்காவின் JDAM எனப்படும் நேரடி தாக்குதல் நடத்தும் குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகைக் குண்டுகள் 80 கிலோமீற்றர் மற்றும் அதற்கு அப்பல் உள்ள எதிரிகளின் பதுங்குக் குழிகள், விமான ஓடு பாதைகளை தகர்க்கவும் உதவும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மோசமான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களிலும் இந்த வகைக் குண்டுகளை…

  10. இந்தியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு. இந்தியா உடனான எல்லைப் பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை சீனா தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், போர்களை எதிர்த்துப் போராடி வெற்றிபெறும் திறனை சீனா வலுப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளளது. 2049 ஆம் ஆண்டுக்குள் உலகத் தரம் வாய்ந்த இராணுவத்தை உருவாக்குவதே சீனாவின் இலக்கு என்றும் பென்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்திய, சீன எல்லையில் உள்ள டோக்லாம் அருகே நிலத்தடி சேமிப்பு வசதிகள், புதிய சாலைகள், பூட்டானின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் புதிய கிராமங்களையும் சீனா உருவாக்கி வருவதாகவும் தெரிவிக…

  11. யஷ்வந்த் சின்ஹா: குடியரசுத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிப்பு 21 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யஷ்வந்த் சின்ஹா முன்னாள் பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இந்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மமதா பானர்ஜி 22 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சித் தல…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் பேசிய வீடியோ ஒன்று ரெட்டிட் வலைதளத்தில் வைரலாக பரவியது. வாரத்திற்கு 90 மணி நேரம் பணியாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்றும், ஞாயிறு அன்றும் வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார். அமெரிக்காவைப் போன்று பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் சீனர்கள் பணியாற்றுவது போன்று வாரத்திற்கு 90 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் எல் & டி நிறுவன ஊழியர்களிடம் பேசியுள்ளார். அது விமர்சனங்களுக்கு வழி வகை செய்தது. …

  13. சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் மர்ம காய்ச்சலால் மருத்துவமனைகள் நிரம்பிவரும் நிலையில், அது ஒரே ஒரு நோய்க்கிருமி அல்ல, பல வகை என மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிபுணர்கள் தரப்பு பீதி சீனாவின் பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில் நிமோனியாவின் உறுதி செய்யப்படாத பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நிபுணர்கள் தரப்பு பீதியடைந்துள்ளனர். மட்டுமின்றி, நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிரடியாக உயர்ந்து வருவதை அடுத்து, ProMED அமைப்பால் ஏற்கனவே தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. @getty இந்த மர்ம காய்ச்சலுக்கு பல எண்ணிக்கையிலானோர் பதிக்கப்பட்டு மருத்துவமனைகளை நாடியுள்ளனர். இருமல் உள்ளிட்ட எந்த குறிப்பிடத்தக்க அறிகுறியும் இல்லை என்றும், ஆனால் தீவிரமான காய்ச்சல் மட…

  14. சக்தி வாய்ந்த மற்றும் திறமையான இந்தியாவின் குரலை வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிரொலிக்கிறார்கள் - இந்தியப் பிரதமர் மோடி புகழாரம் 10 Jan, 2023 | 06:31 AM இந்திய பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 17 ஆவது பிரவாசி பாரதிய திவஸ் மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். இதன் போது , 'சுரக்ஷித் ஜாயேன் பிராஷிக்ஷித் ஜாயேன் என்ற நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். மேலும் 'ஆசாதி கா அம்ரித் மகோத்ஸவ்'- இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு’ என்ற கருப்பொருளில் முதலாவது டிஜிட்டல் கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்தார். வட…

  15. கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவுஸ்ரேலியா அங்கீகாரம்! கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவுஸ்ரேலியா அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அவுஸ்ரேலியாவிற்கு பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பான டிஜிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி, சீனாவின் சைனோஃபார்ம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கான பயணக் கட்டுப்பாடுகளை அவுஸ்ரேலியா அரசாங்கம் தளர்த்தியுள்ள நிலையில், டிஜிஏ-வின் இந்த தீர்மானம் முக்…

  16. ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கு முயற்சி! ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, ஹிந்தி மொழியை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக கூறியிருந்த நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) 12ஆவது உலக ஹிந்தி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டுப் பணிகள் குறித்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்ற பிறகு ஊடகங்களுக்கு கூறுகையில், ”யுனெஸ்கோ அமைப்பில் ஹிந்தி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அமைப்பு சார்பில் வெளிய…

  17. அதானிக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் சீனாவின் சாங் சுங்-லிங் யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் அதானி குழுமத்தின் நடவடிக்கைகளில் சீன நாட்டவர் ஒருவருக்கு பங்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது' என்றும் ஏதேனும் முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இவரை குழு சேர்த்திருக்கிறதா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தை நடத்திய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது. "சாங் சுங்-லிங்குடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் வடகொரியாவிற்கு பெட்ரோலியம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது, இது ஐக்கிய நாடுகள் சபை விதித்த தடைகளுக்கு எதிரானது. 2005 ஆம் ஆண்டில் சாங் சுங்-லிங் தன…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ராஜஸ்தானில் முழு மதிப்பெண் பெற்ற 11 பேரில் எட்டு பேர் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் என்று புகார்கள் எழுப்பப்படுகின்றன கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 7 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர் 2024-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் நாடு முழுவதும் 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது வரை பொதுவாக இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே முழு மதிப்பெண்கள் எடுத்து வந்தனர். 'இந்த முறை எப்படி 67 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்தனர்?' என்று இது பலரிடமும் ஆச்சரியத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து ஒரு மாணவரும் ஆந…

  19. நிதி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளர் கைது! நிதிமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, பிரபல வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கிய நிலையில்.. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடனை , சட்டவிரோதமாக ஏனைய நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் , அனில் அம்பானி இந்திய மதிப்பில் 17 ஆயிரம் கோடி ருபாய் நிதி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொண்ட நிலைய…

  20. இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பு சூழல் : கடற்படையின் பலத்தை அதிகரிக்க இந்தியா திட்டம்! இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய கடற்படையில் ஏவுகணை அழிப்பு போர்க் கப்பலும், நீர்மூழ்கிக் கப்பலும் விரைவில் இணைக்கப்படவுள்ளன. இது குறித்து கடற்படை துணைத் தளபதி சதீஷ் நாம்தேவ் கோர்மடே தெரிவிக்கையில், “ஏவுகணை அழிப்பு போர்க்கப்பலான விசாகப்பட்டினம் எதிர்வரும் 21 ஆம் திகதியும், நீர்மூழ்கிக் கப்பலான வேலா எதிர்வரும் 25 ஆம் திகதியும் கடற்படையில் இணைக்கப்படும். இதன்படி 39 கடற்படைக் கப்பல்கள், நீர்மூழக்கிக் கப்பல்கள் நாட்டின் பல்வேறு கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்பட்டு வருகின்றன. இவை இந்தியாவின் கடல்சார் வலிமையை அதிகரிக்கும். …

  21. 14 Oct, 2025 | 02:06 PM அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவில் ஒரு பெரிய தரவு மையத்தை (Data Center) நிறுவவிருப்பதாகவும், அதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளது. 15 பில்லியன் டொலர் முதலீட்டில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் இந்த தரவு மையத்தை நிறுவவுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே கூகுள் அமைக்கவிருக்கும் மிகப் பெரிய, ஒரு ஜிகாவோட் (Gigawatt) திறன்கொண்ட முதல் தரவு மையம் இதுவாகும். இந்தியாவில் பெருகிவரும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், செயற்கை அறிவு (AI) உள்கட்டமைப்பு அதாவது ஏஐ பயன்பாடுகளை ஆதரிப்பதற்கான அதிநவீன கட…

  22. பட மூலாதாரம்,MANSI THAPLIYAL படக்குறிப்பு, 55 வயதான பாரத் பரேக், நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் 13.6 லட்சம் முகவர்களில் ஒருவர். கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல தசாப்தங்களாக, பாரத் பரேக் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் அச்சிடப்படும் மரண அறிவிப்புகளை கவனமாகப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நாக்பூர் நகரின் சுடுகாட்டில் கூட தினசரி நடக்கும் துக்க நிகழ்வுகளை கவனித்து வந்துள்ளார். ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளை (Life Insurance Policy) விற்ப…

  23. Published By: DIGITAL DESK 7 03 APR, 2024 | 12:45 PM (நா.தனுஜா) உலகளாவிய ரீதியில் மிகத்துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் பிராந்தியமாக தெற்காசியா விளங்குவதாகவும், இந்தியாவின் வேகமான வளர்ச்சியே அதற்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் உலக வங்கி, இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளின் வளர்ச்சி மந்தகரமான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளது. உலக வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான தெற்காசியப்பிராந்திய அபிவிருத்தி நிலைவரம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நிலைவரம் தொடர்பான மதிப்பீடு நேற்று செவ்வாய்கிழமை 'வன் கோல்பேஸ் டவரில்' அமைந்துள்ள உலக வங்கியின் இலங்கைக்கிளை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அதனை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் …

  24. மகா கும்பமேளா நிகழ்வில் 300 கிமீ நீள போக்குவரத்து நெரிசல்! கோடிக்கணக்கான பக்தர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு யாத்திரை மேற்கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளதால், மகா கும்பமேளா செல்லும் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரயாக்ராஜுக்கு செல்லும் பாதையில் 200-300 கிமீ போக்குவரத்து நெரிசல் உள்ளதால், மத்தியப் பிரதேசத்தின் மைஹார் எல்லையில் உள்ள பொலிஸார், பிரயாக்ராஜ் நோக்கி நகர முடியாது என்று தெரிவித்தனர். நெரிசலில் சிக்கித் தவிக்கும் பக்தர்கள் தங்கள் துயரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். பிரயாக்ராஜின் போக்குவரத்து நெரிசல் குறித்த வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர். கடுமையான போக்குவரத்து நெ…

  25. அமித்ஷாவின்... வருகைக்கு எதிராக, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலின்போது புதுச்சேரி மாநிலத்திற்கு அறிவித்த மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, கூடுதல் நிதி உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரச நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்தே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. https://athavannews.com/2022/1278247

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.