அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
கனமழை: வட கர்நாடகாவிலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட கர்நாடகாவிலுள்ள பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வட கர்நாடகாவிலுள்ள யாதகிரி, ஹாவேரி, பாகல்கோட்டை, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதேவேளை கிருஷ்ணா, வேதகங்கா, துத்கங்கா உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறித்த ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவற்றின் கரையோரத்திலுள்ள கர்ஜகி, யாதஹள்ளி, கும்பாரஹள்ளி உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை கத்ரா பகுதியில் 50 வீடுகள் தொடர் மழையால் இடிந்து விழுந்துள்ளள. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கு…
-
- 0 replies
- 122 views
-
-
தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் பிரவேசிக்க தடை! தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் செல்ல அனுமதி வழங்கப்படாது என ஆமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை தொலைப்பேசியிலோ அல்லது பேப்பர் வடிவிலோ வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த முடிவை பொதுமக்கள் பலரும் அங்கீகரித்துள்ளனர். https://athavannews.com/2021/1240201
-
- 0 replies
- 191 views
-
-
மத்திய அரசு என்று கூறுவதைவிட ஒன்றிய அரசு என்பதே சரி: பாஜக எம்.பி. தலைமையிலான நடாளுமன்ற குழு ஆ.விஜயானந்த் பிபிசி தமிழ் 27 மார்ச் 2022, 15:34 GMT புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP இந்திய அரசை மத்திய அரசு என்று கூறுவதற்குப் பதிலாக ஒன்றிய அரசு என்று அழைக்க வேண்டும் என பாஜக எம்.பி. சுஷில்குமார் மோதி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த அறிக்கை, விவாதப் பொருளாக மாறியுள்ளது. `இந்தியா என்பது மாநிலங்களால் அமைக்கப்பட்ட நாடு அல்ல. இந்தியாவால் அமைக்கப்பட்டதுதான் மாநிலங்கள். இதன் அர்த்தம் புரியாமல் சிலர் பேசி வருகின்றனர்' என பா.ஜ.க வி…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
ஆடம் ஹாரி: விமானியாகும் கனவை நினைவாக்க போராடும் திருநம்பியின் கதை இம்ரான் குரேஷி பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP முதல் முதலாக விமானத்தில் காலடி வைத்தபோது ஆடம் ஹேரிக்கு வயது 11தான். அந்த விமானப்பயண அனுபவத்தின் விளைவாக, அவருக்குள் விமானியாக வேண்டும் என்ற கனவு முளைத்தது. கேரளாவைச் சேர்ந்த அந்த 11 வயது சிறுவனின் கனவு நனவாக, அவரது குடும்பமும் அப்போது பக்கபலமாக நின்றது. தென்னாப்ரிக்காவில் உள்ள விமானப்பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்ட அவருக்கு, மாதந்தோறும் பணம் அனுப்பி வந்த குடும்பம், ஒரு புள்ளியில் பணம் அனுப்புவதை நிறுத்திக் கொண்டது. காரணம், படி…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
மகாத்மா காந்தியின் நினைவு நாளானன்று, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, அவரது கொலையை மீட்டுருவாக்கம் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 30 அன்று உத்திரப்பிரதேச மாநிலம் அலிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகில இந்திய இந்து மகாசபை எனும் குறுங்குழு ஒன்றைச் சேர்ந்தவர்கள் காந்தியை சுட்டுக்கொன்றதற்காக தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சேவின் உருவப்படத்துக்கு மரியாதை செய்தனர். காந்தியின் உருவ பொம்மையை அந்த அமைப்பின் தலைவர் பூஜா பாண்டே துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்டதும் காந்தியின் உருவ பொம்மையில் இருந்து ரத்தம் வழியும் வகையில் ஏற்பாடு செய்திர…
-
- 0 replies
- 287 views
-
-
கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலை: நிதின்கட்கரி தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலையென மத்திய மந்திரி நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். தேர்தலிலுக்கு முன்னர் மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக அமராவதிக்கு சென்றிருந்த நிதின்கட்கரி, கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பது குறித்து திட்டமிட்டுள்ளோமென குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பா.ஜ.க.வே மீண்டும் இந்தியாவில் ஆட்சியமைத்துள்ள நிலையில், நிதின்கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ”தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவர கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதுதான் எனது முதல் வேலை” என டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். குறித்த …
-
- 0 replies
- 617 views
-
-
பஞ்சாபில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்க, அவருடன் தொடர்பில் இருந்ததாக 20 கிராமங்களை சேர்ந்த 40,000 பேரை அம்மாநில அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சமீபத்தில் உயிரிழக்க, அவர் உயிரிழந்த பின்னர்தான், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜெர்மனி மற்றும் இத்தாலி சென்று திரும்பிய பல்தேவ் சிங், ஒரு மத போதகர். அவரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டும் அந்த முதியவர் அதனை கேட்கவில்லை என பிபிசி பஞ்சாபி சேவை செய்தியாளர் அர்விந்த சப்ராவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை இந்தியாவில் 700க்கும் மேற்பட்டோர் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதில் பஞ்சாபில் இதுவரை 33 பேருக்கு கொரோனா தொற்று இரு…
-
- 0 replies
- 246 views
-
-
வீட்டிலும், முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறு மக்களுக்கு மத்திய அரசு அறிவிப்பு கொரோனா அச்சுறுத்தல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசத்தை அணியுமாறு பொதுமக்களுக்கும் மத்திய அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் மற்றும் எய்ம்ஸ் வைத்தியசாலை நிறைவேற்றுப்பணிப்பாளர் டாக்டர் ரந்தீப் குலேரியா ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். குறித்த ஊடக சந்திப்பில் அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “ இந்தியாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிந்துகொள்வது மிகவும் நல்லது. அதாவது வீட்டில் மற்…
-
- 0 replies
- 218 views
-
-
ஏர் இந்தியாவை வாங்கிய டாடாவுக்கு முன்னுள்ள சவால்கள் என்ன? சல்மான் ராவி பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உப்பு தயாரிப்பிலிருந்து உயரே பறப்பது வரை அனைத்தும் சாத்தியம் என்று மீண்டும் ஒரு முறை மார்தட்டிக்கொள்ளலாம் டாடா குழுமம். ஏர் இந்தியாவின் சின்னமான மஹாராஜா மீண்டும் அதிகாரப்பூர்வமாக டாடா நிறுவனத்திடம் வந்துள்ளது இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவை அதிகத் தொகைக்கு வாங்கிய டாடா சன்ஸ் நிறுவனம் இப்போது மீண்டும் அதன் அதிகாரப்பூர்வ உரிமையாளராகிறது. ஜே ஆர் டி டாடா-வால் உருவாக்கப்பட்ட ஏர் இந்தியாவை மீண்டும் உரிமை கொள்வதில் …
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
இந்திய மக்கள் மீதே குண்டு மழை பொழிந்த இந்திய விமானப் படை – இந்திரா காந்தி ஆட்சியில் என்ன நடந்தது? ரெஹான் ஃபஸல் பிபிசி நிருபர் 44 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NIRMAL NIBEDAN இது ஜனவரி 21, 1966 அன்று நடந்த நிகழ்வு. இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்க இன்னும் மூன்று நாட்களே இருந்தன. மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) தலைவர் லால்டெங்கா, இந்தோனேசிய அதிபர் சுகர்னோவுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். இந்தக் கடிதத்தில் மிசோ வரலாற்றைக் குறிப்பிட்டு அவர் எழுதியிருப்பதாவது, "ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் நாம் சுதந்திரம் இல்லாத நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தோம். …
-
- 0 replies
- 479 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் 30 பேர் உயிரிழந்தனர். நேற்று (வௌ்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிரிக்கலாம் என்றும் அச்சப்படுகிறது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் நேற்று தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கைபர் பக்துன்கவா மாகாணத்தின், ஓரக்சாய் மாவட்டத்தில் உள்ள கலயா என்ற இடத்தில் ஷியா முஸ்லிம்களின் ‘இமாம்பர்கா’ என்ற வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. அதன் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) வாராந்த சந்தை கூடிய நிலையில், அதனை இலக்கு வைத்தே இந்த குண்டுத் தாக…
-
- 0 replies
- 285 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தானின் ஏவுகணை, தெற்காசியாவை தாண்டி அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என அமெரிக்கா தெரிவித்துள்ளது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடான பாகிஸ்தான் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது என்றும், அது தெற்காசியாவைத் தாண்டி அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஒரு ஏவுகணை என்றும் அமெரிக்க அதிபர் அலுவலகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த அமெரிக்கா தற்போது பாகிஸ்தானின் ஏவுகணை திட்டம் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. இந்த பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் நோக்கம் என்ன, பாகிஸ்…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
லடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா? புதுடெல்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அருணாசலபிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடுவதை சீனா வழக்கமாக கொண்டு உள்ளது. ஆனால் அருணாசலபிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக பலமுறை தெரிவித்து விட்டது. இதனால் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு சீனா அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட முயற்சிக்கிறது. லடாக் எல்லையையொட்டி அமைந்துள்ள பங்கோங் டிசோ, கல்வான் பள்ளத்தாக்கில் தங்கள் பகுதிகளி…
-
- 0 replies
- 391 views
-
-
ஓடும் பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்க இளம்பெண் பாலியல் பலாத்காரம் ; 2 பேருக்கு வலைவீச்சு உத்தரப்பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். பதிவு: ஜூன் 19, 2020 13:42 PM லக்னோ உத்திரப்பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் இருந்து நொய்டாவுக்கு 25 வயது பெண் தனது இரு குழந்தைகளுடன் கணவரை பார்க்க புறப்பட்டு உள்ளார். நொய்டாவுக்கு ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் அவருக்கு கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டது. ஏசி பேருந்தில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்டவர்கள் அவருடன் பயணம் செய்துள்ளனர். இரவு 2 மணி அளவில் லக்னோவிற்கும் மதுராவிற்கும் இடையே பேருந்தில் உள்ள இரு …
-
- 0 replies
- 458 views
-
-
கேரள தங்க கடத்தல் வழக்கு: இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சொன்ன கருத்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று (12.07.2022) தமிழ்நாடு, இலங்கையின் நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான செய்திகளில் கவனிக்கத் தக்கவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். கேரள தங்க கடத்தல் வழக்கில் உண்மை நிச்சயம் வெளிவரும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, "இலங்கையில் அதிபரை பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடி வருக…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
பிரசண்டா - இந்தியாவிலேயே தயாரான இலகுரக போர் ஹெலிகாப்டரின் 15 சிறப்பம்சங்கள் ராகவேந்திர ராவ் பிபிசி செய்தியாளர் 4 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,@RAJNATHSINGH உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டரான பிரசண்டாவின் முதல் தொகுப்பு, திங்கள்கிழமையன்று இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் 'light combat helicopter' (எல்.சி.ஹெச்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு என்ஜின்கள் கொண்ட ஹெலிகாப்டர் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் உள்ள, 'தனுஷ்' என்று அழைக்கப்படும் '143 ஹெலிகாப்டர் யூனிட்'-இல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
இஸ்லாமுக்கு ஆபத்து என்பதால் நாளந்தா பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டதா? பட மூலாதாரம்,IMAGEBROKER/ALIYAH கட்டுரை தகவல் எழுதியவர்,சுகத் முகர்ஜி பதவி,பி பி சி ட்ராவல்ஸுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு குளிர்காலக் காலையில் அடர்ந்த பனிமூட்டம் படர்ந்திருந்தது. குதிரை வண்டிகளை முந்திக்கொண்டு எங்கள் கார் மெதுவாக முன்னேறியது. பிஹாரில் இன்னும் குதிரை வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. வண்டியை இழுக்கும் குதிரையும் அதன் பின்னால் தலைப்பாகை அணிந்த வண்டிக்காரரும் மூடுபனியில் நிழல்கள் போல் தெரிகிறது. இருப்பினும், புத்தர் ஞானம் பெற்ற போத்கயாவில் ஒரு இரவைக் கழித்துவிட்டு, அதிக…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
அல்வார் பாலியல் வழக்கு: ராஜஸ்தான் முதல்வர் ராஜிநாமா செய்யக்கோரி பா.ஜ.க. அழுத்தம் ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு தோல்வியடைந்துவிட்டதால், முதல்வர் அசோக் கெலாட் ராஜிநாமா செய்யவேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ராஜஸ்தானில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் மற்ற வன்முறைகளையும் நாங்கள் கண்டிக்கிறோம். மே 6-ஆம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறுவதால் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்றது ஏப்ரல் 26-ஆம் திகதி, பொலிஸாரிடம் தெரிவிக்…
-
- 0 replies
- 494 views
-
-
இந்தியாவின் சனத்தொகை 32 வீதத்தால் குறையும்! இந்தியாவின் மக்கள் தொகை 2048இல் 160 கோடியாக உயரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த சனத்தொகை அளவு 2100 ஆவது ஆண்டாகும்போது குறைவடையக்கூடும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்காவின் ஆய்வாளர்கள் வொசிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சி தகவல்கள் மற்றும் இந்தியா அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 183 நாடுகளுக்கான எதிர்கால உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய மக்கள்தொகை, அவற்றின் இறப்பு, கருவுறுதல் மற்றும் இடம்பெயர்வு விகிதங்களின் மாதிரிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த …
-
- 0 replies
- 291 views
-
-
இந்தியர்கள் மீது தாக்குதல் நேபாளத்தின் துப்பாக்கிகள் இப்போதே உடைக்கப்பட வேண்டும் சிவசேனா ஆவேசம் மும்பை, இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் கடந்த சில மாதங்களாக தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளது. எல்லை விவகாரம் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த மாதம் பீகார் மாநிலம் சீதாமரி அருகே எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது, நேபாள ஆயுத போலீஸ் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் காயம் அடைந்தனர். இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை நேபாள போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிலும் இந்தியர் ஒருவர் படுகாயம் அடைந்தார். நேபாளத்தின் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிவசேனாவின் அதிகார…
-
- 0 replies
- 359 views
-
-
பி.எம். கிசான் திட்டத்தில் தகுதியில்லாத 20 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,364 கோடி செலுத்திய மத்திய அரசு: ஆர்டிஐ தகவல் கோப்புப் படம். புதுடெல்லி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தகுதியில்லாத 20.48 லட்சம் பயனாளிகளுக்கு மத்திய அரசு ரூ.1,364 கோடி வழங்கியுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. சிறு, குறு விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது பி.எம். கிசான் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், கூட்டாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை 3 பிரிவுகளாக ரூ.2 …
-
- 0 replies
- 272 views
-
-
வேறு ஏதேனும் புதிய நோய்கள் வந்தாலும், அதனை வெற்றிகரமாக சமாளிக்கும் கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது – ஹர்ஷ்வர்தன் எதிர்காலத்தில் ஏதேனும் புதிய நோய்கள் வந்தால் கூட அதனை வெற்றிகரமாக சமாளிக்கும் கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதாக மத்திய சுகாதாராத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ கொரோனா வைரஸுக்கு எதிராக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 80 முதல் 85 சதவீதம் வரையிலான சுகாதாரப் பணியாளர்களுக்கு இவை செலுத்தப்பட்டுள்ளன. இந்த தடுப்பு மருந்துகளால் தற்போது வரை எந்த உயிரிழப்போ அல்லது கட…
-
- 0 replies
- 309 views
-
-
இந்தியாவில், கொரோனா பரவ... மதம், அரசியல் சாரந்த கூட்டங்களே காரணம் – WHO இந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 0.1 சதவீத மாதிரிகள் மட்டுமே மரபணு உருமாற்ற பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் இறுதியில் பி.1.617.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது கண்டுப்பிடிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதமானோர் இந்த…
-
- 0 replies
- 312 views
-
-
இந்தியாவில் புதிய ஐபோனை தயாரிக்கும் அப்பிள் நிறுவனம் அப்பிள் நிறுவனம் தனது ஐபோன்-14 ஐ இந்தியாவில் தயாரிக்கத் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவனம் சீனாவிலிருந்தான அதன் விநியோகச் சங்கிலியை மாற்றவுள்ளது. அப்பிள் நிறுவனமானது, தனது பெரும்பாலான தொலைபேசிகளை சீனாவில் தயாரிக்கிறது. ஆனால் வொஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருவதால் சில உற்பத்திகளை சீனாவுக்கு வெளியே மாற்றுவதற்கு அப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவில் பரவலான முடக்கத்தினை ஏற்படுத்திய பூச்சிய கொரோனா கொள்கைகள், அந்நாட்டின் வணிகங்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அப்பிள் நிறுவமானது, தனது புதிய ‘ஐபோன…
-
- 0 replies
- 201 views
-
-
புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினம் துக்க தினமாக பிரகடனம் புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 19 கட்சிகள் தீர்மானித்துள்ளன. புது டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் 28ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்றதை அதிகாரப்பூர்வ தலைவர் மற்றும் குடியரசு தலைவர் திறந்து வைக்கப்பட வேண்டும் ஆனால் ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வதை வன்மையாக கண்டிப்பதாக அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன. எனவே எதிர்வரும் 28 ஆம் திகதி கறுப்பு கொடிகள் பறக்கவிட்டு அந்த தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத…
-
- 0 replies
- 260 views
-