அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3270 topics in this forum
-
நிதி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளர் கைது! நிதிமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, பிரபல வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கிய நிலையில்.. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடனை , சட்டவிரோதமாக ஏனைய நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் , அனில் அம்பானி இந்திய மதிப்பில் 17 ஆயிரம் கோடி ருபாய் நிதி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொண்ட நிலைய…
-
- 0 replies
- 104 views
-
-
மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்தியா…. ஏலையா க.முருகதாசன் October 9, 2025 0 இந்தியா இலங்கைக்குப் பக்கத்து நாடாக இருப்பதில் சாதகமான சூழ்நிலையைவிட அரசியல் ரீதியான பாதகமான சூழ்நிலையே அதிகரித்து வருகின்றது. இந்தியா, இலங்கைத் தமிழரை வைத்து எவ்வாறு பகடைக்காய் உருட்டியது என்பதும்,அதே சம ஆட்டமாக இலங்கை அரசை தமிழருக்கெதிராக தூண்டியது என்பதை அறிந்து கொள்ள இலங்கைத் தமிழர்கள் எவரும் சதியரசியலில் கலாநிதிப் பட்டம் பெற வேண்டியதில்லை. எல்லாருக்கும் அது புரியும். தமிழர்களில் பெருமளவாக இல்லாவிட்டாலும் தாம் கூறவந்த அரசியல் சூட்சும அறிவினை விளங்கப்படுத்திய விபரப்படுத்திய கணிசமான தமிழர்கள், தமிழ்த் தலைவர்கள் தமீழீழ உணர்ச்சிக் கயிறுகளால் தமிழர்களைக் கட்டி ஒரு திசைநோக்கி …
-
-
- 5 replies
- 319 views
-
-
எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி 1,000 பேர் தவிப்பு: சீன மீட்புப் படையினர் தீவிரம்! 06 OCT, 2025 | 12:29 PM உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே அமைந்துள்ள திபெத் பிராந்தியத்தில் கடும் பனிப்புயல் நிலவி வருவதால், மலையேற்ற வீரர்கள் உட்பட சுமார் 1,000 பேர் மலையில் இருந்து இறங்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். மலைச்சரிவுகளில் தற்காலிக முகாம்கள் அமைத்து மலையேறும் பணியில் ஈடுபட்டிருந்த வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோரே இவ்வாறு சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பனிப்புயலில் சிக்கியுள்ள இந்த ஆயிரம் பேரையும் மீட்கும் பணியில் சீன மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/227015
-
- 2 replies
- 175 views
- 1 follower
-
-
இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவர முக்கிய பங்கு வகித்ததாக ட்ரம்ப் மீண்டும் தெரிவிப்பு! வர்த்தக அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (06) மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மோதல்கள் அதிகரித்திருந்த நிலையில், அணு ஆயுதம் ஏந்திய இரண்டு நாடுகளையும் போர் நிறுத்தத்தை நோக்கித் தள்ளியது அவரது ஆக்ரோஷமான வரி உத்தி என்று கூறிய ட்ரம்ப், தான்தான் உலகளாவிய அமைதியை நிலைநாட்டுபவர் என்று கூறினார். அவரது வரி அச்சுறுத்தலைப் பாராட்டிய அவர், அது வொஷிங்டனுக்கு “நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை” ஈட்டித் தரு…
-
- 0 replies
- 108 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆபரேஷன் சிந்தூர் பற்றி இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி சமீபத்தில் பேசியிருந்த நிலையில் பாகிஸ்தான் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளது, "நமது அண்டை நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு ஆக்கிரமிப்பு மேற்கொள்ள காரணங்களைத் தேடிவருகிறது" என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி மற்றும் விமானப் படை தளபதியின் கருத்துக்களை தனது அறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளது என பிபிசி உருது சேவை தெரிவிக்கிறது. அதில், "பாகிஸ்தானை வரைபடத்திலிருந்து துடைத்தெறியும்" நோக்கம் இருந்தால் இந்தியா ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். …
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு! நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேபாளத்தின் பிற இடங்களிலும் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்குண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வீதிகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணிகளுக்காக நேபாள இராணுவம் வானூர்திகளை அனுப்பியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோரை இராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இருப்பினும், குறித்த மோசமான வானிலை காரணமாக, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபட்ட…
-
- 0 replies
- 63 views
-
-
படக்குறிப்பு, அமீபா பாதிப்பால் உயிரிழந்த ராம்லா மற்றும் ஷாஜி கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ''வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் வந்ததும், வீட்டிலிருந்து நடந்து சென்றுதான் அதில் ஏறினார். அங்கே நடந்த பரிசோதனையில்தான் இந்த தொற்று பாதிப்பு தெரியவந்தது. பல நாட்கள் நினைவு திரும்பாமலே இருந்த அவர் அங்கேயே இறந்து விட்டார். நடந்து சென்றவரை சடலமாகத்தான் திரும்பக் கொண்டுவந்தோம்!'' அதற்கு மேல் பேசமுடியாமல் வெடித்து அழத்தொடங்கினார் பிந்து. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று பாதிப்பால் செப்டம்பர் 10-ஆம் தேதி இறந்துபோன 48 வயது கூலித்தொழிலாளி ஷாஜியின் மனைவி அவர். கடந்த ஆண்டில் அமீபா தொற்று ப…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகிறார்! ஐ.நா வழங்கிய பயண அனுமதி October 5, 2025 10:14 am தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தஹிதா காத்ரி அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனான இந்தியாவின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த பயணம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயண தடை விதிக்கப்பட்ட முத்தஹிதா பயணம் செய்ய ஐ.நா. பாதுகாப்பு போரவை அனுமதி அளித்துள்ளதாக வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். முத்தஹிதா காத்ரி இந்த மாதம் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் அவர் மத்திய வெளியுறவ…
-
- 0 replies
- 144 views
-
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்! திருமண உறவில் குறுக்கிடும் மூன்றாவது நபரிடம் நஷ்டஈடு கோரி, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் வழக்குத் தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் தனது கணவரின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தங்கள் திருமண வாழ்வில் தெரிந்தே தலையிட்டதாகக் கூறி, பெண் ஒருவர் தனது கணவரின் சக ஊழியரிடம் இருந்து 4 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே தம்பதிகளுக்கு இடையே விவாகரத்து வழக்குகள் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இதுபோன்ற நஷ்டஈடு கோரும் தனி உரிமையியல் வழக்கை தனியாகத் தொடரலாம் என்று சட்டத்தில் இடம் இருப்பதால், பாதிக்கப்பட்ட மனைவி உயர் நீதிமன்றத்…
-
-
- 93 replies
- 4.8k views
- 1 follower
-
-
இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் ரூபாவில் பரிவர்த்தனை மேற்கொள்ள இந்தியா முடிவு! இந்திய ரூபாயின் உலகளாவிய பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியாவின் மத்திய வங்கி புதன்கிழமை (01) முன்மொழிந்தது. இதில் உள்ளூர் வங்கிகள் அண்டை நாடுகளில் உள்ள வணிகங்களுக்கு ரூபாயில் கடன் வழங்க அனுமதிப்பது மற்றும் முக்கிய வர்த்தக பங்காளிகளின் நாணயங்களுக்கு அதிகாரப்பூர்வ அடிப்படை மாற்று விகிதங்களை நிர்ணயிப்பது ஆகியவை அடங்கும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, புதன்கிழமை மத்திய வங்கியின் பணவியல் கொள்கை முடிவோடு இந்த நடவடிக்கைகளை அறிவித்தார். இதில் இந்தியாவின் நாணய விகித நிர்ணய குழு எதிர்பார்த்தபடி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்தது. முன்மொழியப்பட்ட மாற்ற…
-
- 0 replies
- 106 views
-
-
பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, பிஸ்மில்லா கோலா கட்டுரை தகவல் ராக்ஸி காக்டேகர் பிபிசி செய்தியாளர் 25 செப்டெம்பர் 2025, 05:11 GMT நூர் ஜஹான் ஒரு மருத்துவ பரிசோதனையிலிருந்து திரும்பி வந்துள்ளார். அவர் மூன்று நாட்களை ஒரு ஆய்வகத்தில் கழித்துள்ளார், அங்கு ஆராய்ச்சியாளர்களும் மருந்து நிறுவனங்களும் அவர் மீது புதிய மருந்துகளை பரிசோதித்துள்ளன. நூர் ஜஹான் தனது சிறிய வீட்டிற்குள் நுழைந்தபோது, அவரது குழந்தைகளும் கணவரும் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். நூர் ஜஹானின் வீட்டில் ஒரு சிறிய சமையலறை, ஒரு படுக்கை மற்றும் சில பெட்டிகள் உள்ளன. நூர் ஜஹான் தனது மகளின் திருமணத்திற்கான பொருட்களை ஏற்பாடு செய்து வருகிறார். தனது குடும்பச் செலவுகள் மற்றும் மகளின் திருமணத்திற்காக சிறிது பணத்தை …
-
- 1 reply
- 162 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், ANI 2 மணி நேரங்களுக்கு முன்னர் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் நடுத்தர தூர அக்னி-பிரைம் பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா புதன்கிழமை முதல் முறையாக ரயிலில் இருந்து ஏவியது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இந்த ஏவூர்தி (launcher) ரயில் தண்டவாளங்களில் இயங்கும், அங்கிருந்து ஏவுகணையை ஏவ முடியும். இது 2,000 கி.மீ. தூரம் வரையிலான இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட அடுத்த தலைமுறை ஏவுகணை ஆகும். இந்த சாதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ), மூலோபாய படைகள் மற்றும் ஆயுதப்படைகளுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் வலிமையை அதிகரிப்பதில் இது முக்கிய பங்காற்றும் என்று டிஆர்டிஓ குறிப்பிட்டுள்ளது. இந்த …
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES/BLOOMSBURY படக்குறிப்பு, 1977 ஆம் ஆண்டு பிரதமரான பிறகு, மொரார்ஜி தேசாய், ராமேஷ்வர் நாத் காவை உளவுத்துறை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தார். கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி இந்தி 23 செப்டெம்பர் 2025, 01:51 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1977-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அவசர நிலைக்குப் பிறகு இந்திரா காந்தி மக்களவைத் தேர்தலை நடத்திய போது, அவரது கட்சி தோற்றது மட்டுமல்லாமல் அவரும் தனது மக்களவை தொகுதியை இழந்தார். அந்தத் தேர்தலில் புலனாய்வுப் பிரிவு (IB), உளவுத்துறை (RAW), சிபிஐ (CBI) ஆகிய இந்திய புலனாய்வு அமைப்புகள் அவசர நிலையில் வகித்த பங்கை எதிர்க்கட்சிகள் பெரிய அரசியல் பிரச்னையாக மாற்றின. பின்னர் பிரதமரான மொரார்ஜி த…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி!- அமித்ஷா புகழாரம். கடந்த 24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி என மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத ஒருவரை நான் பார்த்திருக்கிறேன். அது பிரதமர் நரேந்திர மோடிதான். இத்தகைய அர்ப்பணிப்பு தற்செயலாக வருவதில்லை.பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பால் மட்டுமே இது சாத்தியமானது” என்று தெரிவித்தார். மேலும் ”மோடி, உள்ளூர் மட்டத்தில் ஒரு கட்சி ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பாஜகவின் தேசியத் தலைவராக உயர்ந…
-
- 0 replies
- 137 views
-
-
பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, ஷம்பாலா தேவி 2014-ல் அரசின் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் சரணடைந்தார். கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஆர்யா பதவி,பிபிசி செய்தியாளர், தெலங்கானா 19 செப்டெம்பர் 2025 ஷம்பாலா தேவி தனது பழைய புகைப்படங்களில் ஒன்றைக் காட்டுகிறார். அதில் அவர் அடர் பச்சை நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்துள்ளார். அவரது கையில் AK-47 ரக துப்பாக்கி உள்ளது, மணிக்கட்டில் கடிகாரம் மற்றும் இடுப்பில் வாக்கி-டாக்கி உள்ளது. அவரிடம் இதுபோன்ற இரண்டு புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. இவை 25 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இந்தியாவின் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களின் முதல் பெண் 'ராணுவ' கமாண்டராக மாறியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். 25 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த பிறகு, 2014-ல் அவர் ஆயுதங…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை. ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் அங்கு பெண் உரிமை, பாலினம் உள்ளிட்டவை குறித்து பெண்கள் எழுதிய புத்தகங்கள், பல்கலைக்கழக பாடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன. அங்குள்ள புதிய கல்விச்சட்டத்தின்படி தலிபான்கள் கொள்கைகள் மற்றும் ஷரியா சட்டத்திற்கு எதிராக இருப்பதால் பெண்கள் எழுதிய 140 புத்தகங்கள், ஈரானிய எழுத்தாளர்களின் 310 புத்தகங்கள் என 680 புத்த…
-
- 0 replies
- 242 views
-
-
இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் ! 09 Sep, 2025 | 10:53 PM இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தோல்வியடைந்தார். இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்த்து 781 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். தேர்தலில் 767 வாக்குகள் பதிவாகின. இதில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. செல்லுபடியான வாக்குகள் 752. சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 452. சுதர்சன் ரெட்டி பெற்ற வாக்குகள் 300. 152 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். துணை …
-
- 2 replies
- 215 views
-
-
நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு September 13, 2025 நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி நேற்று பதவி ஏற்றார். இந்த நிலையில், அவருடைய பரிந்துரையின்பேரில் நேபாள பாராளுமன்றத்தை ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் கலைத்தார். ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று இரவு 11.00 மணிக்கு கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21 ஆம் திகதி நேபாள பாராளுமன…
-
- 1 reply
- 110 views
-
-
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த பலரும் நியூ பனேஷ்வரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த சுமார் 150 பேர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள உள்ளூர் செய்தியாளர் பிபிசிக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவமும் தெருக்களில் குவிந்துள்ளதாகவும், கடுமையான மோதல் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். "இந்த சூழலிலும் போராட்டக்காரர்கள் பின் வாங்கவில்லை. உயிர…
-
- 6 replies
- 294 views
- 1 follower
-
-
நேபாளத்தில் 1,500 கைதிகள் தப்பியோட்டம்! நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த இளைஞர் போராட்டங்கள், நாட்டின் அரசியல் அமைப்பில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்ப்பு நடவடிக்கையாக, ‘ஜென் Z’ போராட்டம் எனப்படும் இயக்கத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் வீதிகளில் குதித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரங்கள் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் நாகு சிறையை உடைத்து கைதிகளை வெளியேற்றினர். முதல் கட்டமாக சுமார் 2,000 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் மற்றொரு பகுதியில் இருந்த 1,500 கைதிகளும் சிறையிலிருந்து வெளியேறினர். பொல…
-
- 0 replies
- 58 views
-
-
பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கெல்லி என்ஜி பிபிசி நியூஸ் 9 செப்டெம்பர் 2025, 05:32 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். அவர் ராஜினாமா செய்திருப்பதை அவரது செயலகம் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு அரசியலமைப்பு ரீதியாக தீர்வு காண வழி வகுக்கும் வகையில் ராஜினாமா செய்ததாக பிரதமர் ஒலி கையெழுத்திட்ட அந்த அறிக்கை கூறுகிறது. தலைநகர் காத்மாண்டுவிலும், நேபாளம் முழுவதும் அதிகாலை முதல் போராட்டங்கள் நடந்தன. ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் வீடுகள் உட்பட பல மூத்த அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டன. நேபாளத்தில் …
-
- 1 reply
- 152 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, "கிராமத்தின் நிலைமை அச்சமாக இருப்பதாக" கூறுகிறார் சீதம்மா கட்டுரை தகவல் கரிகிபட்டி உமாகாந்த் பிபிசிக்காக 8 செப்டெம்பர் 2025, 03:14 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆந்திர பிரதேசத்தின் குண்டூருக்கு அருகேயுள்ள துரகபளம் எனும் கிராமத்தில் அடுத்தடுத்து நிகழும் திடீர் மரணங்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக இந்த மரணங்களால் அங்குள்ள தலித் சமூகத்தினர் கலங்கிப் போயுள்ளனர். குண்டூர் மாவட்ட ஆட்சியர் நாகலஷ்மி கூறுகையில், அந்த கிராமத்தில் எஸ்சி காலனியைச் சேர்ந்த 29 பேர், கடந்த ஐந்து மாதங்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். எனினும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கிராமத்தினர் கூறுகின்றனர். படக்குறிப்பு, அரசு மருத்துவ முகாம் அமைத்து…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்தும் முப்படை தலைமை தளபதி பேசியுள்ளார். 5 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவுடனான எல்லைப் பிரச்னைதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது எனவும் அது தொடரும் எனவும் இந்திய பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) ஜெனரல் அனில் சௌகான் தெரிவித்துள்ளார். பல காயங்களை கொடுத்து இந்தியாவை பலவீனமாக்க நினைக்கும் பாகிஸ்தானின் மறைமுகப்போர் 2வது சவால் என்று அவர் கூறியுள்ளார். கடந்த மே மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் அவர் பேசியுள்ளார். இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அழித்ததாகவும், இந்த ஆபரேஷனில் முடிவெடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார…
-
- 1 reply
- 119 views
- 1 follower
-
-
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு! ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு செய்துள்ளாகவும் அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா செல்வதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் 80வது பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி நியுயோர்க்கில் ஆரம்பமாகிற நிலையில் கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் 23ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடக்க உள்ளது. முதல் பாரம்பரிய பேச்சாளரான பிரேசில் தலைவர் பேச்சை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் உறையாற்றவுள்ளார். இதேவேளை, இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியாவும் பங்கேற்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால் அந்நாட்டுக்கு எதி…
-
- 0 replies
- 92 views
-
-
அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ராகுல் காந்தி கண்டனம். மத்திய பிரதேசத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலி கடித்து இரண்டு பிறந்த குழந்தைகள் இறந்தனர். இது தற்செயல் நிகழ்வு அல்ல, இது முழுமையான கொலை. இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் அர்த்தமற்றது. இதைப் பற்றிக் கேள்விப்பட்டாலே முதுகு…
-
- 0 replies
- 68 views
-