Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்த ஆண்டின் இறுதிக்குள் 35 ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்ப்பு! இந்த ஆண்டின் இறுதிக்குள் 35 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு விடும் என தகவல் வெளியாகியுள்ளது. நவீன தொழிநுட்பத்துடன் கூடிய ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்படி 26 விமானங்களை பிரான்ஸ் வழங்கியுள்ளது. அவற்றில் 24 விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 9 விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுரப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் இந்த ரஃபேல் விமானங்களில் போர்த்திறன் அதிகம் உள்ளதால் எதிர்காலத்தில் மேலும் 36 விமானங்களை கொள்வனவு செய்ய இந்திய விமானப்படை விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகிய…

  2. பெகாஸஸ் உளவு விவகாரம் : வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது! பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரம் சுதந்திரமான முறையில் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போது 2019 ஆம் ஆண்டு வெளியான உளவு விவகாரம் குறித்து கருத்து வெளியிடப்பட்டதுடன், இது குறித்து டெலிகிராப் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார். அதேநேரம் பெகாஸஸ் மென்பொருளால் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அது தீவிரமானதாக இருக்கும் எனவும் நீதிபதி கூறினார். இதனையடுத்து குறித்த வழக்…

  3. புதிதாக... 10 இலட்சம் பேருக்கு, மத்திய அரசுப் பணியில்... வேலை வாய்ப்பு – மோடி நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் புதிதாக 10 இலட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணியில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மத்திய அரசுப் பணிகளில் 10 இலட்சம் பேரை நியமனம் செய்ய வேண்டும் என்று பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய அரசுத் துறைகள், அமைச்சகங்கள் ஆகியவற்றை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசுத் துறைகளிலும், அமைச்சகங்களிலும் காலியாக உள்ள இலட்சக்கணக்கான பணியிடங்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, நாட்டில், மத்திய அரசுப் பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண…

  4. பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலை அனுமதிக்க முடியாது: இந்தியா பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் மற்றும் ஊடுருவல்களால் ஏற்படும் பாதிப்புகளை அனுமதிக்க முடியாது என இந்தியா தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்தியா வெளியுறவுத்துறையின் ஆண்டறிக்கையில், சீன எல்லையான கிழக்கு லடாக்கில் இருநாடுகள் இடையிலான பிரச்னைகள் முடிவுக்கு வரவில்லை என்றாலும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணுவதையே இந்தியா விரும்புவதாகவும், எல்லையில் ஊடுருவல், மற்றும் போர்நிறுத்த மீறல்களை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. htt…

  5. நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதல் – அமைச்சர் உட்பட நால்வர் உயிரிழப்பு! சதீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஷியாமாகிரி மலைப்பகுதியில் இருந்து குவக்குண்டா நோக்கி சென்றுகொண்டிருந்த அமைச்சர் பீமா மாண்டவியின் வாகனம் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமைச்சர் பீமா மாண்டவி மற்றும் 4 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் பாதுகாப்பு வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தாண்டேவாடாவில் இம்மாதம் 11ஆம் திகதி முதற்கட்ட வாக்குபதிவுகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் இச்சம்பவம் குறித்த பகு…

  6. டொலரை பலவீனப்படுத்தும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை – எஸ் ஜெய்சங்கர். பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க டொலரை பலவீனப்படுத்தும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என்று கூறினார். கட்டார் தலைநகர் தோஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் உரையாற்றிய அவர், பிரிக்ஸ் நாணயத்தை வைத்திருக்கும் திட்டம் எங்களிடம் இல்லை என்றும், அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்த பங்காளியாகும். இந்த விவகாரத்தில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அமெரிக்க …

  7. பட மூலாதாரம்,ANI 23 ஏப்ரல் 2025, 16:14 GMT புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலந்துகொண்டனர். பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின் பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறினார். "தீவிரவாதத் தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளத…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 3 மே 2025 பாகிஸ்தானின் நீர்வழிப் பாதையை நிறுத்தவோ அல்லது திருப்பிவிடவோ இந்தியா ஏதேனும் கட்டமைப்பை உருவாக்கினால், அது அழிக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இந்தியாவை எச்சரித்துள்ளார். பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சியான ஜியோ நியூஸின் 'நயா பாகிஸ்தான்' நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், "இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறி, தண்ணீரை நிறுத்தவோ அல்லது திருப்பிவிடவோ ஏதேனும் கட்டமைப்பை உருவாக்கினால், அது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலாகக் கருதப்படும். அந்தக் கட்டமைப்பை நாங்கள் அழிப்போம்" என்றார். "சிந்து நதி நீர் ஒப்பந்தத்…

  9. கொரோனா அச்சுறுத்தல்: டெல்லியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் 31ஆம் திகதி வரை மூடப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தேர்வுகள் நடைபெறும் வகுப்புகள் தவிர ஏனைய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது எனத் தெரிவித்துள்ள அவர், திரையரங்குகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பரில் கொரோனா வைரஸ் தாக்கியது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 117 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. இதுவரை 4,635 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர…

  10. 24 மணித்தியாலத்தில் இந்தியாவில் கொரோனாவுக்கு 40 பேர் பலி இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7447 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 1035 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, கொரோனா வைரஸ தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 239 ஆக உயர்ந்துள்ளதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 642 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 1574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழகத்தில் 911 பேருக்கும், டெல்லியில் 903 பேருக்கும், ராஜஸ்தானில் 553 பேருக்கும், மத்திய ப…

  11. கண்ணுக்கு தெரியாத எதிரி கொரோனாவை எமது மருத்துவர்கள் வீழ்த்துவர் – மோடி நம்பிக்கை கொரோனா வைரஸ் ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம், ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் அதனை வீழ்த்துவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்ளூரில் உள்ள ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவை பிரதமர் நரேந்திர மோடி இ…

  12. சர்வதேச விமான சேவைகளை இன்று முதல் ஆரம்பிக்கிறது இந்தியா! கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகளை இந்தியா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கிறது. இதன்படி அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் ஆரம்பிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங்பூரி கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த மாதம் 17 திகதி முதல் 31 ஆம் திகதிவரை அமெரிக்காவிற்கு யுனைடெட் ஏயார்லைன்ஸ் நிறுவனம் 18 விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் டெல்லி – நெவார்க் இடையே தினசரி சேவையும் டெல்லி – சான்பிரான்சிஸ்கோ இடையே வாரம…

  13. பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் உயிருடன் எரித்துக் கொலை 67 Views இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் ஆதிக்கச் சாதியினரால் அடித்து உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாநிலத்தின் அமெத்தி தொகுதியின் பதோயா கிராமத் தலைவர் சோட்கா தேவியின் கணவர் அர்ஜுன் கோரி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் நிலவிய போட்டியின் காரணமாக அவர் எரித்துக்கொல்லப்பட்டதாகக் குடும்பத்தினர் கூறுகிறார்கள். இது தொடர்பாக ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த வியாழன் அன…

  14. தமிழகம் டாப், கேரளா பூஜ்யம்... கோவிட் தடுப்பூசிகள் வீணாவதை கேரளா எப்படி தடுக்கிறது? Guest Contributor கொரோனா தடுப்பூசி நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தடுப்பூசி வீண் செய்யப்படும் சதவிகிதம் என்பது பூஜ்யமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடோ, இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கும் மாநிலங்களில் முதன்மையாக இருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தடுப்பூசி வீண் செய்யப்படும் சதவிகிதம் என்பது பூஜ்யமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடோ, இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கும் மாநிலங்களில் முதன்மையாக இருக்கிறது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசியின் பயன்களை தெரியப்படுத்துவதன் மூலமும், தடுப்பூசி மேலாண்மை குறித்த…

  15. ஏழு மாநிலங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவிப்பு! சிக்கிம், கோவா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் நாடு முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவுவரை 74.32 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று மட்டும் 50 இலட்சத்து 25 ஆயிரத்து 159 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1239096

  16. இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் இந்தியாவில் முதன்முறையாக விலங்குகளுக்கான அனோகோவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனிதர்களை தவிர சிங்கம், புலி உள்ளிட்ட சில விலங்குகளுக்கும் கடந்த காலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டன. இந்நிலையில், இந்தியாவில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய ஆராய்ச்சி மையம் ஒன்று விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இதன்படி, இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டில் தயாரான விலங்குகளுக்கான அனோகோவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசியானது டெல்டா மற்றும் ஒமிக்ரோன் வகை கொரோனாவை அழிக்கும் திறன் படைத்த நோயெதிர்ப்பு ஆ…

  17. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை WWW.JAGATGURURAMPALJI.ORG தன்னைத்தானே கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் ராம்பாலுக்கு 2014ஆம் ஆண்டு நான்கு பெண்களையும் 18 மாத குழந்தையும் கொன்ற குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஹரியானா நீதிமன்றம் ஒன்று ராம்பால் குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது. அவர் மீது மற்றொரு கொலை குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது அதில் வரும் புதன்கிழமை அன்று தீர்ப்பு வரவுள்ளது. ராம்பாலின் ஆதரவாளர்கள் மற்றும் போலிஸாருக்கு இடையே ஏற்பட்ட …

  18. பாகிஸ்தான் தனது பொருளாதார தடுமாற்றங்களைச் சீர்த்திருத்த பலவகைகளிலும் போராடி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டுக்குப் புதிய பின்னடைவாக கச்சா எண்ணெய், எரிவாயு எடுக்கும் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. கராச்சி நகரின் அரபிக்கடல் பகுதியில் எரிவாயு, கச்சா எண்ணெய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிணறு தோண்டும் நடவடிக்கையில் அந்நாடு ஈடுபட்டிருந்தது. ஆனால் அவர்கள் இத்தனை காலம் முயன்று பார்த்ததில் எதிர்பார்த்ததைப் போல் தோண்டிய இடத்தில் எரிவாயுவும் இல்லை, கச்சா எண்ணெய்க்கான வாய்ப்பும் இல்லை என்று தெரியவந்ததாக பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சக தெரிவித்துள்ளது. தங்கள் தேவைக்கான எண்ணெய் அங்கு உள்ளது அதனை எடுக்கலாம் என்று தொடங்கிய திட்டம் தோல்வியடைந்தது பாகிஸ்தானுக்கு பெர…

  19. தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்.ஐ.ஏ-க்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் நடைபெற்ற காரசார விவாதத்திற்கு பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. மக்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக பெரும்பான்மை இருப்பதால் இந்த சட்டத்திருத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த சட்ட திருத்தத்திற்கு மக்களவையில் 278 பேர் ஆதரவு அளித்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டத்திருத்தம் அதிகார முறைகேட்டிற்கு வழிவகுக்கும் என்ற குற்றசாட்டை முன் வைத்தனர். தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரவாதம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. தற்போது, இந்த சட்ட திருத்தத்தின் மூலமாக ஆயுதங்களை க…

    • 0 replies
    • 300 views
  20. டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; எல்லை பகுதிகளில் பதற்றம்! வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பேராட்டத்தை ஆரம்பித்துள்ள இந்திய விவசாயிகள் குழு, இன்று டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனை முன்னிட்டு பஞ்சாப்-ஹரியானா எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ‘டெல்லிக்கு செல்வோம்’ (டெல்லி சலோ) என்ற போராட்டத்தை பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் இருந்து விவசாயிகள் நவம்பர் 6 தொடங்கினர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்…

  21. அயோத்தியில் இராமர் கோயில் கட்ட, ஏப்ரலில் அடிக்கல் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கு வரும் ஏப்ரலில் அடிக்கல் நாட்ட ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், விசுவ இந்து பரி‌ஷத்தும் தீவிரம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராம நவமி தினம் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அடிக்கல் நாட்ட இந்த இரு அமைப்புகளும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இராமஜென்ம பூமி நிவாஸ் என்ற அறக்கட்டளை சார்பில் இராமர் கோயில் கட்டுவதற்காக ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்ற நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றி பணிமனையின் பொறுப்பாளர் அன்னு பாய்சோம்புரா கூறுகையில், “இராமர் கோயிலுக்கான தூண்கள் செதுக்கு…

  22. பொதுமன்னிப்பு வழங்க கூடிய கைதிகளுக்கு விஷேட ஆணைக்குழு அமைத்து விசாரியுங்கள் : பொதுபலசேனா பொதுமன்னிப்பு வழங்க கூடிய கைதிகளுக்கு விஷேட ஆணைக்குழு அமைத்து விசாரியுங்கள் : பொதுபலசேனா Published by R. Kalaichelvan on 2019-12-06 15:57:31 (நா.தனுஜா) சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படக்கூடிய கைதிகள் தொடர்பில் விசேட ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு, பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், சிறைச்சாலைக் கட்டமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் அடங்கிய …

    • 0 replies
    • 198 views
  23. நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிபதி ஆர்.பானுமதி மற்றும் அஷோக் பூஷன், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனு மீது இன்று (புதன்கிழமை) விசாரித்து தீர்ப்பை வழங்கியது. இதனிடையே, உச்ச நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளின் மறு ஆய்வு மனுக்களையும் நிராகரித்துள்ளதால் தாங்கள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ய விரும்புகிறீர்களா எனத் தெரிவிக்க வேண்டி ஒரு வார கால நோட்டீஸ் அளிக்குமாறு நிர்பயா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறை அதிகாரிகளுக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது . இதைக் கேட்டு நிர்பயாவின்…

  24. பரணி தரன் பிபிசி தமிழ் Delhi Results ஆம் ஆத்மி -62 பாஜக-07 Cong: 0 யார் இந்த கேஜ்ரிவால்? ஹரியாணாவில் ஒரு நடுத்தர பொறியாளரின் குடும்பத்தில் 1968-ஆம் ஆண்டு பிறந்தவர் கேஜ்ரிவால். ஐஐடி காரக்பூரில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் படித்தவர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் 1989-ஆம் ஆண்டு சேர்ந்தார். ஜாம்ஷெட்பூரில் அவருக்கு பணி வழங்கப்பட்டது. 1992-ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு ஆயத்தமாவதற்காக விடுப்பு எடுத்திருந்த பின்னணியில், தமது தனியார் பணியில் இருந்து அவர் விலக நேர்ந்தது. பிறகு கொல்கத்தாவில் சில ஆண்டுகள் வாழ்ந்தபோது அன்னை தெரசா நடத்தி வந்த மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ், வடகி…

  25. முக்கிய ஆயுதக் கொள்வனவு: பெரும் பலம்பெறும் இந்தியக் கடற்படை! போர் கப்பல்களில் பயன்படுத்துவதற்காக 450 கிலோமீற்றர் வரை சென்று இலக்கைத் தாக்கும் மேம்படுத்தப்பட்ட 38 பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. இந்திய மதிப்பில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் பெறுமதியான இந்த ஆயுதக் கொள்வனவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய ஆயுதமாகக் கருதப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பல, ஏற்கனவே இந்தியக் கடற்படை போர்க் கப்பல்களில் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், கடற்படைக்காக விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுவரும் போர்க் கப்பல்களில் இந்த ஏவுகணைகள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990 கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.