Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாபர் மசூதி தீர்ப்பு: வரலாற்றை கேவலப்படுத்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 நவம்பர் 21 வரலாற்றை விளங்குவதன் அவசியம், தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. வரலாற்றைப் பதிவதும், வரலாற்றை ஆவணமாக்குவதும் எவ்வளவு முக்கியமானதோ, அந்தளவுக்கு முக்கியமானது, வரலாற்றை விளங்கிக் கொள்வது. வரலாற்றைத் தவறாக விளங்குவதும் விளக்குவதும் நிகழக் கூடாத விடயங்கள். இதன் பயங்கரத்தை, அண்மைய நிகழ்வொன்று காட்டி நிற்கின்றது. அண்மையில், பாபர் மசூதி இருந்த இடத்தின் மீதான, உரிமை கோரும் வழக்கின் தீர்ப்பை, இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது. இத்தீர்ப்பு, பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது. இராமர் பிறந்த இடத்தில், மசூதி அமைக்கப்பட்டுள்ளது என்ற பிரசாரமும…

  2. இந்தியாவின் முதல் வாக்காளர், ஷியாம் சரண் நேகி கவலைக்கிடம்.. ஹிமாச்சலில் சோகம் இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருக்கு ஹிமாச்சலில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஹிமாச்சல் பிரதேசத்தில் கின்னார் மாவட்டம் கல்பாவைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி (103). 1951-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் முதல்முதலாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் 1949-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் இந்தியாவில் முதல் ஆளாக வந்து வாக்களித்தவர் ஷியாம் சரண் நேகி. அதுமுதல் இவர் முதல் வாக்காளராக கொண்டாடப்படுகிறார். இதனால் இவர் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிராண்ட் அம்பாசிடரான…

  3. படக்குறிப்பு, அமீபா பாதிப்பால் உயிரிழந்த ராம்லா மற்றும் ஷாஜி கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ''வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் வந்ததும், வீட்டிலிருந்து நடந்து சென்றுதான் அதில் ஏறினார். அங்கே நடந்த பரிசோதனையில்தான் இந்த தொற்று பாதிப்பு தெரியவந்தது. பல நாட்கள் நினைவு திரும்பாமலே இருந்த அவர் அங்கேயே இறந்து விட்டார். நடந்து சென்றவரை சடலமாகத்தான் திரும்பக் கொண்டுவந்தோம்!'' அதற்கு மேல் பேசமுடியாமல் வெடித்து அழத்தொடங்கினார் பிந்து. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று பாதிப்பால் செப்டம்பர் 10-ஆம் தேதி இறந்துபோன 48 வயது கூலித்தொழிலாளி ஷாஜியின் மனைவி அவர். கடந்த ஆண்டில் அமீபா தொற்று ப…

  4. நாகாலாந்து மீண்டும் பதற்றப் பகுதியாக பிரகடனம்- ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு - படையினருக்கு சிறப்பு அதிகாரம் டெல்லி: நாகாலாந்து மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றப் பகுதியாகவும் ஆபத்து நிறைந்த பகுதியாகவும் மத்திய அரசால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தனி நாடு கோரிக்கை நாகாலாந்து இந்தியாவுடன் இணைக்கப்பட்டது முதலே கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தனிநாடு கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றன. நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக் மூய்வா) பிரிவினர் இந்த தனிநாடு போரா…

  5. இந்த ஆண்டின் இறுதிக்குகள் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய அரசு! கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பமாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும், மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதி உள்நாட்டின் தடுப்பூசி திட்டத்திற்கான தேவைகளை பாதிக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை இந்தியாவில் இதுவரை 102 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளமை…

  6. பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு எதிராக தொடரும் போராட்டம் பலுசிஸ்தான் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் கடத்திச் சென்றமையைக் கண்டித்து போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வகுப்புகள் மற்றும் பரீட்சைகளைப் புறக்கணிக்குமாறு மாணவர் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக எக்ஸ்பிரஸ் டெய்லி தெரிவித்துள்ளது. கடத்தப்பட்டவர்கள் பலுசிஸ்தானின் நோஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் லால் மொஹமட்டின் புதல்வர்களான ஃபசிஹ் பலூச் சோஹைல் அஹமட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களை கடந்த திங்கட்கிழமையன்று பல்கலைக்கழக விடுதியில் இருந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதையடுத்து வலுக்கட்டாயமாக காணா…

  7. இந்தியாவின் ஏற்றுமதி... 417.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு! இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மார்ச் மாதத்துடன், 417.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இது குறித்து பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய பொருளாதாரம் பல சாதனைகளை முறியடிக்கும் வகையில் வளரும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். அதேநேரம் இந்தியாவின் ஏற்றுமதி வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமானது எனவும், அவர் கூறியுள்ளார். இதேவேளை தற்போது எட்டப்பட்டுள்ள இந்தச் சாதனை முந்தைய ஆண்டை விட 14.53 விழுக்காடு அதிகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274697

  8. வான் தாக்குதலை... வானத்திலேயே முறியடிக்கும், ஏவுகணையை... உருவாக்கும் இந்தியா வான்வழி தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையில் ஏவுகணையை உருவாக்கி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் குறித்த ஏவுகணையை தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இவ்வாறு தயாரித்துள்ள இந்த உள்நாட்டு ஏவுகணை 300 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து எதிரியின் வான் தாக்குதலை முறியடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மற்றொரு ஏவுகணை 160 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் வகையில் கட்டமைக்கப்படுகிறது என்றும் இந்தியா அறிவித்துள்ளது. ஒஸ்ட்ரா எம்.கே. 2 மற்றும் எம்.கே.3 ஆகிய இந்த இரண்டு ஏவுகணைகளும் அடுத்த இரண்டு ஆண்ட…

  9. சுவையாக இருந்தாலும் புற்றுநோயை உண்டாக்கும் நிறமிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகக் கூறி கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனுக்கு அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. விதிகளை மீறினால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கோபி மஞ்சூரியனில் என்ன பிரச்னை? தமிழ்நாட்டிலும் இதற்கு தடை விதிக்கப்பட்டுமா? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்...

  10. இந்தியாவிற்கு அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு பகிரங்க மிரட்டல்.! காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசிற்கும், ராணுவத்திற்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. “Mujahideen in Kashmir” என்று தலைப்பிலான இந்த வீடியோவில் அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல்-ஸவாகிரி தோன்றி பேசியுள்ளார். காஷ்மீர் அரசு மற்றும் இந்திய ராணுவத்தினர் மீது இடைவிடாத தாக்குதல்களை அரங்கேற்றுமாறு தீவிரவாதிகளுக்கு அதில் அவர் கட்டளையிட்டுள்ளார். வீடியோவில் அல்-ஸவாகிரி பேசுகையில், “காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் முதலில் ஒரே எண்ணத்துடன் இந்திய ராணுவம் மீதும் அரசின் மீதும் தொடர் தாக்குதல்களை அரங்கேற்ற வேண்டும், அப்போது தான் இந்திய பொருளாத…

  11. காஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது இந்திய அரசாங்கம் காஸ்மீரில் பெருமளவு சிறுவர்களை கைதுசெய்து தடுத்துவைத்துள்ளது என தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. காஸ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதன் காரணமாகவும் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதன் காரணமாகவும் காஸ்மீரின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக பிபிசி தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்காக சிறுவர்களையும் இளைஞர்களையும் அதிகாரிகள் கைதுசெய்கின்றனர் என காஸ்மீரில் பல பகுதிகளில் பொதுமக்கள் தெரிவித்தனர் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார…

  12. அதி உயர் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா! இந்தியா தனது இராணுவ சக்தியை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தான் முழுவதையும் மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்ட ஒரு புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகின்றது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கு ET-LDHCM என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 11,000 கிலோமீற்றர் வேகத்தில் பறந்து, சுமார் 1,500 கிமீ வரம்புக்குள் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையானது” ஸ்க்ராம்ஜெட் இயந்திரம் மற்றும் ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிரி ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை தவிர்க்கும் திறன் கொண்டது எனவும் தெரி…

  13. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 118 வயது மூதாட்டி போபால், மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் 118 வயதுள்ள மூதாட்டி முதல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி தீபக் சிங் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சாகர் மாவட்டத்தில் சதர்பூர் கிராமத்தில் வசிக்கும் 118 வயது பெண் துல்சபாய் இன்று தனது முதல் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார். இதையடுத்து நாட்டில் மிகவும் வயதுள்ள மூதாட்டி முதல்முறையாக தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், நான் கொ…

  14. வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்கள் விரைவில் நாடு திரும்ப வேண்டும் – மோடி வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்கள் விரைவில் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் கடன் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், வங்கி மோசடி நடத்தி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்றவர்களை நாட்டிற்கு திருப்பி கொண்டுவர மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். பல்வேறு நடவடிக்கைகள் மூலம், வங்கி மோசடியாளர்களிடம் இருந்து இதுவரை 5 இலட்சம் கோடி அளவுக்கு கடன் த…

  15. இலங்கை – இந்தியா விமான சேவையை... குறைக்க, எயார் இந்தியா நடவடிக்கை! இலங்கை – இந்தியா விமான சேவையை குறைப்பதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக இருப்பதன் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு தற்போது வாரத்திற்கு 16 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், அந்த எண்ணிக்கையை 13 ஆவதாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவின் கடன் வசதி, எரிபொருள் உணவுகள் ஆகியவை இலங்கை மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274707

  16. இலவசத் திட்டங்களால் வரிசெலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறது – பிரதமர் மோடி மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தங்கள் பணம் நலத்திட்டங்களுக்குச் செல்லும் என எண்ணியே கடுமையான உழைப்பின் மூலம் மக்கள் வரி செலுத்துகின்றார்கள் என்றும் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் மாநில அரசுகளால், வரிப்பணம்வீணடிக்கப் படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக வரி செலுத்துவோர் உள்ளங்களில் வலி ஏற்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். https://athavannews.com/2022/1306586

  17. திருப்பதியில் ஒரே நாளில் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான உண்டியல் வருமானம்! வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதையடுத்து ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தினமும் 80 ஆயிரம் பக்…

  18. கேரளாவில் எலி காய்ச்சல்- 12 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினமலர்: கேரளாவில் எலி காய்ச்சல்- 12 பேர் பலி படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் …

  19. இருமுனைப் போருக்கு தயாராகும் சீன – பாகிஸ்தான் கூட்டணி – கேர்னல் ஆர் ஹரிஹரன் கேர்னல் ஆர் ஹரிஹரன் சீன-பாகிஸ்தான் உறவை, இரு நாட்டு தலைவர்களும் வழக்கமாக “இமயத்தை விட உயரமானது, கடலை விட ஆழமானது“ என்று வர்ணிப்பார்கள். தற்போது, சீன-பாகிஸ்தான் உறவுகள் வளரும் வேகத்தைப் பார்த்தால், அவை, மேலும் புதிய இமய உச்சியையும், கடல் ஆழத்தையும் எட்டிவிடும் சூழ்நிலையை நெருங்குவது தெரிகிறது. சீன அதிபர் ஷீ ஜின்பிங் 2013ல், சீனாவை ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் “21ம் நூற்றாண்டின் சில்க் ரோடு” என்று கூறப்படும் பல்முனை கட்டமைப்பு திட்டத்தை துவக்கிய பின்பு, அதன் வெற்றிக்கு பாகிஸ்தான் இன்றியமையாத அங்கமாக மாறியுள்ளது. ஆகவே, இரு தரப…

  20. பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கானின் அரசு பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை முக்கிய கூட்டணி கட்சியான எம். கி.எம் கட்சி திரும்பப்பெற்றுள்ளது. இதனால் இம்ரான் கான் அரசு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. இம்ரான் கான் அரசிற்கு ஆதரவை வாபஸ் பெற்றதோடு அல்லாமல் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் எம். கி.எம் கட்சி உடன்படிக்கையையும் செய்து கொண்டுள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது. 343 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 172 உறுப்பினர…

  21. உத்தரப்பிரதேசத்தில் ஆறு ஆண்டுகளில் 10 ஆயிரம் என்கவுண்ட்டர்கள்! உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த ஆறு ஆண்டுகளில், 10 ஆயிரம் முறை பொலிஸார், எதிர்பாரா தாக்குதல் அல்லது என்கவுண்ட்டர் நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. கொடிய ரவுடிகள் உள்பட 178 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக, அரசு வெளியிட்ட குற்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கிட்டதட்ட 6 ஆயிரம் குற்றவாளிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் குற்றவாளிகள், மாபியா கும்பல்களை சகித்துக் கொள்வதிலும் அரசு கருணை காட்டாது என்று யோகி ஆதித்யநாத திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். https://atha…

  22. சமூகத்தில் யாராக இருந்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை : October 11, 2018 1 Min Read சமூகத்தில் யாராக இருந்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார். கடந்த வருடம் ஹொலிவூட் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை ‘மீ ரூ’ என்ற பெயரில் ஹாஷ் ரக் செய்து ருவிட்டரில் பதிவிட்டதனையடுத்து இந்தியாவிலும் ‘மீ ரூ’ இயக்கம் தொடங்கப்பட்டு, பல பிரபலங்கள் பாலியல் கொடுமைகள் குறித்து டருவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்தநிலையில் டெல்லியில் நேற்று தனியார் தொலைக்காட்ச் ஒன்று வழங்கிய செவ்வியிலேயே மேனகா காந்தி மேற்கண்டவாறு …

  23. கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்ரீனிவாஸ் லக்கோஜு பதவி, பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) மாலை 7 மணியளவில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகாபள்ளி-அலமாண்டா கிராமங்களுக்கு இடையே பலாசா பயணிகள் ரயிலின் மீது ராயகடா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற பிபிசி தெலுங்கு சேவையில் செய்தியாளர் ஸ்ரீனிவாஸ் லக்கோஜு தாம் களத்தில் நேரில் கண்டதைத் தொகுத்தளிக்கிறார்: இந்த விபத்தில் 8 பேர் இறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் நானே அங்கு 11 சடலங்களை பார்த்தேன். நசுங்கிய பெட்டிகளில் ஒருவர் காணப்படுவதாகவும், அந்த நபரும் …

  24. மும்பையில் தொடரும் கனமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு…. July 3, 2019 மும்பையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. 5-ஆவது நாளாக நேற்றும் மழை நீடித்ததனால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் கடலோர படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை கிழக்கு மலாட்டி…

  25. படத்தின் காப்புரிமை SOLANKI FAMILY அஹமதாபாத் கிராமத்துக்கு அருகே உள்ள மண்டல் கிராமத்தில் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த தலித் ஒருவர், காவல்துறை அதிகாரிகளுக்கு முன்பாகவே கொலை செய்யப்பட்டுள்ளார். 25 வயதான ஹரேஷ் சோலங்கி, இரண்டு மாத கர்ப்பமான தனது மனைவி ஊர்மிளா ஜாலாவை, அவரது தாய் வீட்டில் இருந்து அழைத்து வர சென்றார். அவர் செல்லும்போது மாநில பெண்கள் உதவி ஆலோசகர் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது காரில் ஆயுதங்கள் ஏந்திய எட்டு நபர்கள் வந்து தாக்கியதில் ஹரேஷ் உயிரிழந்தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.