தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
மொபைல் ஹாட்ஸ்பாட் -ஏன்...எதற்கு...எப்படி? #GadgetTips ஜென் z தலைமுறை மட்டுமில்லாமல், எல்லாரும் விரும்பும் முக்கியமான ஸ்பாட் ஹாட்ஸ்பாட். மொபைல் டேட்டாவை மற்ற கேட்ஜெட்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் டெக்னாலஜியே ஹாட்ஸ்பாட். ஜியோ வந்தபின் மொபைல் மூலமாக இணையத்தை கணினியுடன் இணைப்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஹாட்ஸ்பாட் என்பது ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதியாகும். 3G, 4G சப்போர்ட் செய்யும் மொபைல் இதற்கு ஏதுவானதாக இருக்கும். இதற்கு டெத்தரிங் என்று பெயர். இதற்கு நம்முடைய மொபைலிலும், கணினியிலும் வைபை வசதி இருந்தால் மட்டும் போதுமானது. இதற்கென தனியாக எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை. இந்த வசதிகளை ஆப்பிள், விண்டோஸ், ஆண்ட்ராய்ட்…
-
- 0 replies
- 638 views
-
-
இணையத்தில் இருந்து தொலைந்து போவது எப்படி? #InternetSuicide உங்களுக்கும், இணையத்திற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி என்றேனும் யோசித்தது உண்டா? இந்த பூமியில் வாழும் பலகோடி பேரில் நீங்கள் எப்படி ஒரு பகுதியோ, அதைப் போலவே இணையம் என்ற உலகில் உங்களுக்கும் ஒரு சின்ன இடம் உண்டு. காலை எழுவது, அலுவலகம் செல்வது, நண்பர்களுடன் பேசுவது என எப்படி உங்களுடைய ஒருநாள் என்பது, உங்கள் நிஜ வாழக்கையில் பதிவாகிறதோ அதைப் போலவே, உங்கள் புகைப்படங்கள், சோஷியல் மீடியாக்களில் நீங்கள் பதிவிட்ட செய்திகள், தகவல்கள், லைக்ஸ், உரையாடல்கள் என விர்ச்சுவல் உலகிலும் பதிவாகின்றன. நிஜத்தில் நீங்கள் இயங்குவது போலவே, உங்கள் டேட்டாக்கள் இணையத்தில் இயங்கி வருகின்றன. நீங்கள் கொஞ்சம் இணையத்தில்…
-
- 0 replies
- 640 views
-
-
வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி..! வாட்ஸ் ஆப் நிறுவனம், தொடர்ச்சியாக பல புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பிய டெக்ஸ்ட் மெசேஜ்களை திருத்த அல்லது நிரந்திரமாக அழிக்கும் புதிய வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் ஐ-போன்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் தான் வாட்ஸ் ஆப் வீடியோ காலிங் மற்றும் வீடியோக்களை முழுவதும் தரவிறக்கம் செய்வதற்கு முன்பே பார்க்கும் வசதி என அப்டேட்களை அளித்தது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/world/75339-new-feature-in-whatsapp.art
-
- 0 replies
- 468 views
-
-
முதல் நாளிலேயே போக்கிமான் கோ சாதனையை முறியடித்த சூப்பர் மேரியோ ரன் உலகெங்கும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன், வெளியான முதல் நாளிலேயே போக்கிமான் கோ சாதனையை முறியடித்தது. டோக்கியோ: ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளத்தில் நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. உலகெங்கும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் மேரியோ ரன் வெளியான சில மணி நேரங்களில் மொபைல் கேம்களுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டது. …
-
- 0 replies
- 325 views
-
-
ஆண்ட்ராய்டில் அறிமுகம் செய்யப்பட்டது கூகுளின் ஜிபோர்டு ஆப் கூகுள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கீபோர்டு செயலியான ஜிபோர்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் கீபோர்டு செயலியான ஜிபோர்டு அனைத்து ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் கூகுள் தேடலை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த செயலியில் பல்வேறு புதிய வசதிகளையும் கூகுள் வழங்கி இருக்கிறது. கூகுள் தேடுபொறி மென்பொருள், எமோஜி …
-
- 0 replies
- 280 views
-
-
கட்டுக்கதைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு கொண்டு வருகிறது ஃபேஸ்புக்! #FaceBookUpdate ஃபேக் ஐடிகள் மட்டுமல்ல ஃபேக் செய்திகளும், கதைகளும் ஃபேஸ்புக்கில் மிகப்பிரபலம். ஏதாவதொரு கடவுள் போட்டோவை போட்டு, இதைப் பார்த்த மாத்திரத்தில் ஷேர் செய்யுங்கள், உடனே ஷேர் செய்தால் நல்லது நடக்கும். இல்லையெனில் சாமி கண்ணைக் குத்தும் ரக போஸ்ட்களை ஃபேஸ்புக்கில் இருக்கும் அனைவருமே கடந்து தான் வந்திருக்கிறோம். சமீபத்தில் கூட அம்புஜா சிமி என ஒரு பேக் ஐடிக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருந்ததும், அது முடக்கப்பட்ட செய்தி வந்தவுடன் சிமி மீம்ஸ் வைரல் ஆனது நினைவிருக்கலாம். ஃபேக் ஐடி, ஃபேக் நியூஸ், கட்டுக்கதைகள் போன்றவற்றை பலரும் நம்பிவிடுகிறார்கள், இதனால் பொய்யான தகவல்கள் எளி…
-
- 0 replies
- 316 views
-
-
Pokemon Go இலங்கையிலும் அறிமுகம் (ரெ.கிறிஷ்ணகாந்) உலகின் பல நாடுகளில், மிகவும் பிரபல்யமடைந்துள்ள போகிமான் கோ (Pokemon Go) விளையாட்டு தற்போது இலங்கையிலும் அறிமுகமாகியுள்ளது. சுற்றாடலில் ஒளிந்திருக்கும் போகிமான் (Pokemon Go) எனும் கார்ட்டூன் இராட்சதர்களை ஸ்மார்ட் போன் அப்ஸ் மூலம் தேடிக் கண்டு பிடிப்பதை அடிப்படையாகக் கொண்ட போகிமான் கோ விளையாட்டை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட பிரபல இலத்திரனியல் விளையாட்டு உருவாக்க நிறுவனமான நியாண்டிக் லேப் நிறுவனம் வடிவமைத்துள்ளது. கடந்த ஜூலை 6 ஆம் திகதி உலகில் முதல் தடவையா…
-
- 0 replies
- 607 views
-
-
ட்விட்டரில் லைவ் வீடியோ அறிமுகம் ட்விட்டர் வலைத்தளம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் வாயிலாக லைவ் வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் போன்றே, ட்விட்டர் பயனர்களும் ஒற்றை ட்வீட் மூலம் வீடியோக்களை நேரலையில் மேற்கொள்ள உதவும். ட்விட்டரில் இந்த ஆப்ஷனை செயல்படுத்த பெரிஸ்கோப் ஆப் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் அப்டேட்களின் மூலம் ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ ஆப்ஷன் இந்திய பயனர்களுக்கு கிடைக்கிறது. ட்விட்டரில் லைவ் வீடியோ பயன்படுத்த பெரிஸ்கோப் செயலி உங்களின் ஸ்மார்ட்போனில் க…
-
- 0 replies
- 310 views
-
-
மீண்டும் களமிறங்கிய நோக்கியா: புதிய நோக்கியா 150 வெளியீடு நோக்கியா பிராண்டட் போன்களை விற்பனை செய்யும் உரிமத்தை பெற்றிருக்கும் எச்எம்டி குளோபல் நிறுவனம், புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச மொபைல் சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது குறித்து சில தினங்களுக்கு முன் அறிவித்த எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று புதிய நோக்கியா பிராண்டட் போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. நோக்கியா பிராண்டட் போன்களை விற்பனை செய்ய எச்எம்டி குளோபல் நிறுவனம் பத்து ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. …
-
- 0 replies
- 531 views
-
-
பீட்சா, பர்கர் வேணுமா ட்விட் பண்ணுங்க: கூகுள் அதிரடி திடீரென நீங்கள் இருக்கும் இடத்தில் பீட்சா, பர்கர் அல்லது வேறு ஏதேனும் உணவு வேண்டும் என்றால் கிடைக்குமா? கிடைக்கும் என்று அடித்து சொல்லுமளவுக்கு கூகுள் அதிரடியாக ஒரு விஷயத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம், ஏதோ ஒரு ஊருக்கு செல்கிறோம் அங்குள்ள உணவகம் , ஹோட்டல், தியேட்டர் போன்றவை எங்குள்ளது என நமக்கு தெரியாது. அதனை கண்டுபிடிக்க ஏதுவாக இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது கூகுள். இதற்கு நமக்கு தேவைப்படுவதெல்லாம் ஒன்று தான். உங்களிடம் ட்விட்டர் கணக்கு இருந்தால் போதும். உங்கள் ட்விட்டர் கணக்கு மூலம் உங்கள் மொபைலில் இருந்து நீங்கள் விரும்பும் இமோஜியை பதிவிட்டு @google என கூகுள் ட்விட்டர் பக்கத்தை டேக் ச…
-
- 0 replies
- 456 views
-
-
2016-ல் ஆப்பிளில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட App எது தெரியுமா? இந்த வருடம் ஆப்பிள் ஏப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட டாப் 10 ஆப்ஸ்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். அத்துடன் இந்த ஆண்டின் சிறந்த ஆப், சிறந்த கேம் இரண்டையும் அறிவித்துள்ளது. டாப் 10 இலவச ஆப்கள் பற்றிய குட்டி இன்ட்ரோ இங்கே... 1) Snapchat - இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷனாக மட்டும் இல்லாமல் இது ஒரு இமேஜ் மெசேஜிங் ஆப்.....வாட்ஸ்அப் போல மிக வேகமாக வளர்ந்துவருகிறது இந்த ஸ்னாப்சாட். இந்த ஆண்டு அதிகம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோடு செய்யப்பட்டது ஸ்னாப்சாட்தான். 2) Messenger - நாம் அனைவருக்கும் தெரிந்த ஆப் இது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு மெசேஜிங் ஆப் …
-
- 0 replies
- 537 views
-
-
போலி மின்னஞ்சலை கண்டுபிடிப்பது எப்படி ? நம்மை எளிதாக ஏமாற்ற இணையத் திருடர்கள் பயன்படுத்துவது மின் அஞ்சல்களே. "நைஜீரியாவில் கணவர் விட்டுச் சென்ற பல கோடி டாலர்களை மீட்க உதவி செய்தால், உங்களுக்கு பத்து சதவீத டாலர் பணம், மரணத்தின் இறுதியில் உள்ளதால், என்னிடம் உள்ள பணத்தை ஏழைகளுக்கு வழங்க உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன், முகவரி, வங்கிக் கணக்கு தந்தால், பணத்தை அனுப்புவேன்' என்றெல்லாம் நம்மை ஏமாற்றும் அஞ்சல்களை நாம் அடிக்கடி பெறலாம். இப்போதெல்லாம், இது போன்ற ஸ்கேம் மெயில்களை வடிகட்டி, ஸ்கேம் மெயில் போல்டருக்கு அனுப்பும் தொழில் நுட்பத்தை கூகுள் போன்ற மின் அஞ்சல் தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும், சில அஞ்சல்கள், இவற்றின் பிடியில் சிக்காமல், நம்மை வீழ்த்தப் பார்…
-
- 0 replies
- 540 views
-
-
ட்விட்டரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அன்ட்ரொய்ட் டிவி அப் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர், அதன் பயனாளர்களுக்கு அன்ட்ரொய்ட் டிவி அப் என்ற புதிய அப்பை வழங்கியுள்ளது. ட்விட்டர் பக்கத்தில் டுவிட் செய்யப்படும் செய்திகளை பார்ப்பதோடு, தற்போது நேரடி ஒளிபரப்புகளையும் காணக்கூடிய அன்ட்ரொய்ட் டிவி அப் பயன்பாட்டை டுவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. பல ஆய்வு சோதனைகளுக்கு பிறகு உருவாக்கப்பட்ட இந்த அப் மூலம் தேசிய கால்பந்து லீக் (NFL) மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு வீடியோக்களை நாம் காணலாம். இந்த நேரடி ஒளிபரப்புகளை காண பயனாளர்களுக்கு ட்விட்டர் கணக்கு வேண்டும் என்பது அவசியம் இல்லை. மேலும் ட்விட்டரின் இந்த அன்ட்ரொய்…
-
- 0 replies
- 440 views
-
-
போலிகளுக்கு எதிரான கூகுள் - ஃபேஸ்புக்கின் போர் வியூகம் என்ன? #WarAgainstFakeNews ஃபேஸ்புக்கில் ''அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு போப் ஆண்டவர் ஆதரவு'' ''ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்ற ஹிலரி கிளின்டனின் பல மோசடிகளை வெளியிட்டது விக்கிலீக்ஸ்!'' ''கிளின்டன் அறக்கட்டளை சட்டத்துக்குப் புறம்பாக $137 மில்லியன் மதிப்புள்ள வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை வாங்கியுள்ளது'' இந்த மூன்று செய்திகளை கடக்காமல் நீங்கள் வந்திருக்க மாட்டீர்கள். இவையெல்லாம் உண்மை என்று ஒரு பகுதி மக்கள் இன்னும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் பொய்யான போலி செய்திகள் தான். இந்த வதந்திகள் ஃபேஸ்புக்கில் கிளம்பிய போ…
-
- 0 replies
- 400 views
-
-
அறிவிப்பு முதல் விற்பனை வரை..சர்ப்ரைஸ் தந்த ஸ்னாப்சாட் ஸ்பெக்டக்ல்ஸ்! #spectacles டெக் உலகின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் கேட்ஜெட் ஸ்னாப்சாட்டின் நிறுவனத்தின் ஸ்பெக்டக்ல்ஸ் (Spectacles). ஒரு அழகான கண்ணாடியைக் மாட்டிக்கொண்டு நம் கண்கள் பார்க்கும் விஷயங்களை அதன் ஒரு 10 நொடி வீடியோவாக எடுத்தால் எப்படி இருக்கும்? இந்த ஐடியாதான் இந்த கண்ணாடி. போட்டோ / வீடியோவுடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான ஸ்னாப்சாட் நிறுவனம் தனது முதல் வன்பொருள் (ஹார்டுவேர்) தயாரிப்பாக, இந்தக் கண்ணாடியை வெளியிட்டுள்ளது. புதுமையான இன்ட்ரோ..! ஸ்னாப்சாட் சேவையோடு சேர்த்து, திடீரென ஹார்டுவேர் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது அந்நிறுவனம். அதன் தாய் நிறுவனமான ஸ்னாப் இன்க்…
-
- 0 replies
- 374 views
-
-
உங்களுக்கு எது தேவை? முடிவு செய்யும் ஃபேஸ்புக்! #FacebookTimeline மோடி 500,1000 ரூபாய தடை பண்ணா,விராட் கோலி செஞ்சுரி அடிச்சா, புதுசா விஜய் பட ட்ரெய்லர் ரிலீஸ் ஆனா உடனே நம்ம ஃபேஸ்புக் டைம்லைன்ல தெரியுதே எப்படினு என்னிக்காவது யோசிச்சிருக்கீங்களா? ஃபேஸ்புக் உங்க டைம்லைன வைச்சு மிகப்பெரிய வேலைய பாத்துக்கிட்டு இருக்கு. இதுல வியாபாரம், மக்களை இணைப்பதுனு பல விஷயங்களை தெறிக்க விடுவது தான் மார்க் உத்தி.... ஃபேஸ்புக் டைம்லைன்ல முன்னாடியெல்லாம் நம்ம ஃப்ரெண்ட்ஸ் போடுற ஸ்டேட்டஸ், சம்பந்தமே இல்லாம ஒரு நியூஸ் இது தான் டைம்லைன்ல இருக்கும். இதையெல்லாம் மாத்த ஃபேஸ்புக் புதிய உத்தியை கையில் எடுத்தது. அதுனால தான் இன்னிக்கு எந்த செய்தியையும் நம்ம டைம்லைன்ல மிஸ்…
-
- 0 replies
- 542 views
-
-
இறந்த பின் உங்களது பேஸ்புக் கணக்கு என்ன ஆகும்? நவீன உலகத்தில் இணையம் என்பது மிகவும் முக்கியமானதாக எல்லோரின் மத்தியில் மாறிவிட்டது. இதில் அனைவரும் அதிக நேரத்தை செலவிடுவது சமூகவலைதளங்களில் என்பது பலரும் அறிந்த விடயமாகும்.சமூகவலைத்தளம் என்றாலே பேஸ்புக்கில் தான் பலரும் தங்களின் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நீங்கள் இறந்த பிறகும் உங்களது பேஸ்புக் கணக்கு மாறாமல் அப்படியே தான் இருக்க செய்கின்றது. ஆனால் உங்களது இறப்பிற்கு பிறகு நீங்கள் உங்களுடைய பேஸ்புக்கை உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் வகையில் சில வழிமுறைகளை பேஸ்புக் வழங்கி இருக்கிறது. இதற்கு குறிப்பிட்ட நபர் இறந்துவிட்டதற்கான ஆதார…
-
- 0 replies
- 334 views
-
-
வாட்ஸ் அப்பில் Animated GIFs அனுப்பும் வசதி இணைப்பு சமூக வலைத்தளங்களில் முன்னிலை வகிக்கும் வாட்ஸ் அப்பில் (WhatsApp) தற்போது Animated GIFs அனுப்பும் வசதி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது iOS மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் உரையாடல்களின் போது இந்த Animated GIFs ஐ இணைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், ஏதேனுமொரு வீடியோவைக் கொண்டு 7 நொடிகளில் Animated GIFs ஆக மாற்றி மற்றவர்களுக்கு அனுப்பவும் முடியும். வாட்ஸ் அப் தமது புதிய beta version இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததன் பின்னர் இந்த Animated GIFs வசதியையும் இணைத்துள்ளது. http://newsfirst.lk/tamil/2016/11/வாட்…
-
- 0 replies
- 345 views
-
-
இந்த ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது டிசம்பர் 1 இல் இருந்து இந்த ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது. வாட்ஸ் அப்பின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிளாக்பெர்ரி ஒஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 ( BlackBerry OS and BlackBerry 10) நோக்கியா எஸ்40 ( Nokia S40) நோக்கியா எஸ்60 (Nokia S60) ஆன்ராய்டு 2.1 மற்றும் 2.2 (Android 2.1 and Android 2.2) விண்டோஸ் போன் 7.1 (Windows Phone 7.1) ஐபோன் 3ஜிஎஸ் மற்றும் ஐஒஎஸ் 6 (Apple iPhone 3GS and iPhones using iOS 6) http://www.vikatan.com/news/information-technology/71305-these-devices-will-not-be-supported-by-whatsapp.art
-
- 1 reply
- 389 views
-
-
அப்பிள் நிறுவனத்தின் அதிரடி விலைக்குறைப்பு : அப்பிள் பாவனையாளர்களுக்கு அடித்தது அதிஷ்டம் இலத்திரனியல் சாதன உற்பத்தியில் முன்னணியில் திகழும் அப்பிள் நிறுவனமானது அப்பிள் மியூசிக் எனும் சேவையினை தமது பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகின்றது. இச் சேவையின் ஊடாக இணையத்தளத்தில் பல்வேறு வகையான பாடல்களை கேட்டு மகிழ முடியும். எனினும் இச்சேவையினைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதன்படி தனிநபருக்கான பாவனைக்கு மாதாந்தம் 9.99 டொலர்களும், குடும்பத்தினரின் பாவனைக்கு மாதாந்தம் 14.99 டொலர்களும் அறவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த கட்டணத்தில் தற்போது மாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவ…
-
- 2 replies
- 373 views
-
-
Imzy- புதிதாக இணையத்துக்கு வந்திருக்கும் சோஷியல் நெட்வொர்க் ஃபேஸ்புக், ட்விட்டர் என இணையத்தில் வலுவாக இருக்கும் சமூக வலைதளங்களுக்கு மத்தியில், 'இம்சி' என்ற புதிய வகை சமூக வலைதளம் வந்திருக்கிறது. 'ரெடிட்' மற்றும் ட்விட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்களால், இந்நிறுவனம் 2016ன் தொடக்கத்திலேயே இணையத்திற்கு வந்தது. ஆனால், சமீபத்தில் 8 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டிய பின்பு தான் எல்லாருக்கும் தன் கதவை திறந்துவிட்டிருக்கிறது இம்சி. மற்ற சோஷியல் நெட்வொர்க் வெப்சைட்டுகளுக்கும், இம்சி-க்கும் உள்ள முக்கிய வேறுபாடாக அந்நிறுவனம் சொல்லுவது 'இரக்கத்துடன்' இது மக்களை அணுகும் என்பதாம். அதாவது, சமூக அமைதியைக் குலைக்கும் விதமாக இருக்கும் தகவல்களையோ, போஸ்ட்களையோ இம்சி அனுமதிக்…
-
- 0 replies
- 463 views
-
-
பிளாக்பெர்ரியின் கடைசி ஃபோன் வெளியீடு மொபைல் ஃபோன்களின் முன்னோடியாக கருதப்படும் பிளாக்பெர்ரி, அதன் கடைசி ஃபோனை வெளியிட்டது. இனிமேலும் மொபைல் ஃபோன் சந்தையில் தன் பொருளை பிளாக்பெர்ரி வெளியிடும் என்றாலும், முழுக்க முழுக்க தன் சொந்த தயாரிப்பில் இல்லாமல், அவுட்சோர்சிங்' முறையில் தயாரிக்கும் என கூறியுள்ளது. ஆண்டராயிட் மென்பொருள் மூலம் செயல்படும் இந்த ஃபோனுக்கு DTEK60 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோனின் விலை 499 டாலர்கள். http://www.vikatan.com/news/information-technology/70607-last-phone-of-blackberry-launched.art
-
- 1 reply
- 503 views
-
-
வருகிறது ஆப்பிள் நைக் பிளஸ் ஸ்மார்ட் வாட்ச் ஆப்பிள் நிறுவனமும், நைக் நிறுவனமும் இணைந்து ஒரு ஸ்மார்ட் வாட்சை உருவாக்கியுள்ளனர். கிட்டதட்ட ஆப்பிள் 2 சீரியஸ் மாடல் வாட்ச்களைப் போலத்தான் இந்த வாட்சும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் நைக் பிளஸ் என்று பெயரிடப்பட்ட இந்த வாட்ச் வருகின்ற 28-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. பார்ப்பதற்கு நைக் ஸ்போர்ட்ஸ் பேண்டுகள் போலவே இதன் மாடலை உருவாக்கியுள்ளனர். ஆக்டிவிட்டி ரிங்க், இதயத்துடிப்பு லெவல், ஸ்டாப் வாட்ச், வெதர் அப்டேட்ஸ் அனைத்தும் இதில் உண்டு. இது போக நைக் ரன் பிளஸ் ஆப் ஒன்றையும் இதில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் ரிமைண்டர்ஸ், நட்புகளுக்கு சேலஞ்ச் விடுவது, வானிலை முன்னறிவிப்பு போன்…
-
- 0 replies
- 449 views
-
-
வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் அறிமுகமாக இருக்கும் 7 புதிய இமோஜிக்களில் என்ன விசேஷம்..? காலைல எழுந்து காஃபி குடிச்சியானு கேட்க காஃபி இமோஜி, பர்த்டே விஷ் பண்ண கேக் ஆரம்பிச்சு சாக்லேட் வரைக்கும் இமோஜியாவே அனுப்புறதுனு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் எல்லாத்துலயும் வார்த்தைகள தாண்டி இமோஜிக்கள்ல தான் வாழ்க்கையே ஓடுதா? அப்படின்னா அடுத்த அப்டேட்ல வரலாம்னு எதிர்பார்க்கப்படுற இந்த ஏழு இமோஜிக்கள் பத்தி நீங்க தெரிஞ்சுக்கிட்டே ஆகணும். இமோஜிக்களை உருவாக்கும் நிறுவனமான யுனிகோட் தனது 10.0 அப்டேட்டை வரும் 2017ம் ஆண்டு வெளியிடவுள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டத்தை வரும் நவம்பரில் நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்த ஆண்டு வெளியாகும் இமோஜிக்கள் இவையாகத் தான் இருக்கும் என்ற த…
-
- 0 replies
- 407 views
-
-
இனி க்ரூப் சாட்டில் இருந்து தப்பிக்க முடியாது! #WhatsAppUpdate வாட்ஸ்அப் பல பேரின் ஃபேவரைட்டாக மாறுவதற்கு காரணமே, அதன் அப்டேட்கள்தான். பயனாளிகளுக்குத் தேவையான அப்டேட்களை அடிக்கடி வழங்கிவரும் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் எப்படி இருக்கிறது? வாட்ஸ்அப்பின் க்ரூப் சாட் என்பது சிலருக்கு வரம். சிலருக்கு சாபம். வந்துகுவியும் உங்களின் நண்பர்களின் மெசேஜ் நோட்டிஃபிகேஷன்கள் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும் எனில் பிரச்னை இல்லை. ஆனால் அதுவே உங்களுக்கு எரிச்சல் அளித்தால் க்ரூப்பை ம்யூட் (Mute)செய்து விடுவீர்கள். ஆனால், இனி ம்யூட் செய்தால் கூட, நோட்டிஃபிகேஷன்களில் இருந்து தப்பிக்க முடியாது. க்ரூப்சாட் வசதிகளை இந்த அப்டேட்டில் கொஞ்சம் மேம்படுத்தியுள்ளது வாட்…
-
- 0 replies
- 480 views
-