நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
அன்றாடம் வாழ்வில் காய்கறிகளை சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம். அவ்வாறு காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளும் நாம் அதன் பயன்களை அறிந்துகொள்வது நல்லது. வாழைக்காய் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது, மலச்சிக்கலை தீர்க்கும். மாங்காய் மாங்காயில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ உள்ளது. சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது சூட்டைக் கிளப்பும். மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். செரிமானத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும், பசியைத் தூண்டும். பாகற்காய் பாக…
-
- 0 replies
- 2.6k views
-
-
எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற கத்தரிக்காயில் குறைந்த கலோரியும், அதிக சத்துக்களும் அடங்கியுள்ளது. கத்தரிக்காயில் ஃபோலேட், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி3, வைட்டமின் பி6, ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் பீட்டா கரோட்டீன்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது, 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. கத்தரிக்காயில் வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பானாக செயல்படுகிறது. கத்தரிக்காயில் ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து இரத்த ஓட்டம் இதயத்தில் சீராகப் பாய உதவுகின்றன. மேலும் இந்த நியூட்ரியண்ட்டுகள் மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களைப் பாதுகாப்ப…
-
- 0 replies
- 469 views
-
-
சுவையான காய்கறிகளில் ஒன்றான புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். புடலங்காயை மெல்லியதாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். மேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் விதைகள் வயிற்றுக்கு உபாதைகளை ஏற்படுத்தும். முற்றிய புடலங்காயோ அதன் விதைகளோ வயிற்றுப் போக்கை உண்டாக்கக் கூடியவை. புடலங்காயில், புரோட்டின் 0.5 கிராமும், கொழுப்புசத்து 0.3 கிராமும், ஓரளவு விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன. புடலங்காய் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வ…
-
- 0 replies
- 419 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
பலருக்கும் தெரியாத, "இஞ்சியில்" நிறைந்துள்ள நன்மைகள்!!! உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க எப்படி ஏலக்காய், பட்டை, கிராம்பு, பூண்டு போன்ற பொருட்கள் பயன்படுகிறதோ, இதேப்போல தான் இஞ்சியும் பயன்படுகிறது. பலருக்கும் இஞ்சியைக் கடித்தால், அதன் காரத்தன்மையால் முகம் பலவாறு செல்லும். ஆனால் அந்த இஞ்சியில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இதில் நிறைந்துள்ள மருத்துவ குணத்தால், எண்ணற்ற நோய்களை குணப்படுத்த முடியும். மேலும் ஆயுர்வேதத்தில் இஞ்சியும் நோய்களை குணமாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய இஞ்சியின் சில ஆரோக்கிய நன்மைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பசியைத் தூண்டும். உங்களுக்கு பசி எடுக்காவிட்டால், உணவை சாப்பிடும் முன் சிறு துண்டு…
-
- 3 replies
- 10k views
-
-
சிக்கன், மட்டனை விட கடல் உணவுகளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது, இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணனி முன் நீண்டநேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும், தசைகள் வலுவடையும். இதில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். இறாலில் அயோடின் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது. சருமம் வயதா…
-
- 11 replies
- 3.9k views
-
-
கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் நிறைந்துள்ளது. கொய்யாப்பழத்தை அரிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் படும்படி நன்றாக மென்று தின்பதே நல்லது. இதன்மூலம் பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. எனவே, வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலுடன் சாப்பிட வேண்டும். முகத்திற்கு பொலிவையும், அழகையும் தந்து தோல் வறட்சியை நீக்குகிற…
-
- 9 replies
- 813 views
-
-
உணவே மருந்து! * நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! * தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். * மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம். * ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட். * பூண்டு சாப்பிட்டீர்களெ…
-
- 0 replies
- 661 views
-
-
கோடைக்காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். நுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும். இதனால் சாப்பிட பிடிக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து. …
-
- 1 reply
- 608 views
-
-
வெளி தோற்றத்தின் மேல் அதீத அக்கறை காட்டுவதில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதனால் கொஞ்சம் உடல் எடை கூடினாலும் டயட் மேற்கொள்கிறேன் என எதையாவது பின்பற்ற தொடங்கிவிடுவார்கள். பெண்கள் உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் தங்களுக்கே தெரியாமல் பல தவறுகளை செய்கின்றனர். அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் எந்த ஒரு உணவும் உங்கள் உடலுக்கு கெடுதல் தரும் என்பதை பெண்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். அதேபோல உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் உங்கள் உடலிற்கு தேவையான உணவுகளை அறவே ஒதுக்குவதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆலிவ் ஆயில் ஆலிவ் எண்ணெய் உடல் நலத்திற்கு நல்லது தான். ஆனால் நிறைய பெண்கள் தங்களது உணவுக் கட்டுப்பாட்டில் அளவிற்கு அதிகமாக ஆலிவ் எண்ணெயை சேர்த்துக்…
-
- 0 replies
- 517 views
-
-
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்களில் வெண்ணெயும் ஒன்று. பாலில் அடங்கி உள்ள அநேக ஊட்டச்சத்துகள் வெண்ணெயிலும் காணப்படுகிறது. * வெண்ணெயில் வைட்டமின்-ஏ சத்துக்கள் அதிகமான அளவில் காணப்படுகின்றன. இது தைராய்டு மற்றும் சிறுநீரக நோய்களுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாகும். * லாரிக், லிசிதீன் போன்ற அமிலங்கள் வெண்ணெயில் நிறைந்துள்ளன. இவை உடலில் கொழுப்புகளை சேரவிடாமல் விரைவில் செரிக்கச் செய்கின்றன. மேலும் உடலை பூஞ்சை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. * உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் பல்வேறு ஆன்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை உடலில் ஏற்படும் நோய் காரணிகளை போக்கி உடலை காக்கின்றன. * வெண்ணெயில் ‘வைட்டமின்-ஈ’ …
-
- 0 replies
- 570 views
-
-
யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும் தெரியவந்துள்ளது. பத்மாசனம், தனுராசனம், புஜங்காசனம், சர்வாங்கசனம் ஆகிய ஆசனங்களை தவறாது செய்வதன் மூலம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற்சாகமுடன் ஈடுபடலாம். இது செலவில்லாத ஆரோக்கியமான மருத்துவம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பத்மாசனம்: பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஆமணக்கின் இலை, வேர், விதை ஆகியவை ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன. விதைகளைப் பொடித்து நீரிலிட்டுக் காய்ச்சி மேலே மிதந்து வரும் எண்ணெயை சேமித்தும் ஆமணக்கு எண்ணெய் தயாரிப்பர். ஆமணக்கெண்ணெய் பொதுவாக வயிற்றைச் சுத்தம் செய்வதற்காகவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஆமணக்கு வேர் மூட்டுவலிகள், சிறுநீர்ப்பை வலிகள், கீழ்முதுகுவலி, வயிற்றுக் கோளாறுகள், வீக்கங்கள் ஆகியவற்றைத் தணிக்க செய்யும் அற்புத மருந்தாகும். ஆமணக்கு இலையும் உள் மருந்தாகவும், வெளி மருந்தாகவும் பயன்படுகின்றது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்கும், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் வலி மற்றும் அடைப்பு ஆகியவற்றை குணப்படுத்தவும், நாட்பட்ட சீழ்பிடித்த ஆற…
-
- 0 replies
- 398 views
-
-
தானிய வகைகள் என்பது நம் அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது. நவதானியங்கள் என்பது சமையிலில் ருசிக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த தானிய வகையில் ஒன்று தான் கோதுமை. கோதுமை என்பது டிரிடிகம் இனத்தை சேர்ந்த தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் ஏத்தியோப்பிய விலை நிலங்களாகும். கோதுமை உலகில் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்றாகும். தொல்பொருள் ஆராய்ச்சிகள் முதன் முதலில் வளர் பிறை மற்றும் கழிமுக பகுதிகளிலும் பயிரிடப் பட்டதை தெரிவிக்கின்றன. தென் கிழக்கு துருக்கியில் கோதுமை பயிரிடப் பட்டதாக அண்மை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனைய எந்த பயிர்களை காட்டிலும் அதிக பரப்பளவில் உலகின் பெரு…
-
- 1 reply
- 531 views
-
-
வெற்றிலை பாக்குடன் கூடிய தாம்பூலம் என்பது மங்கலப் பொருள் ஆகும். வீட்டில் நடைபெறும் அனைத்து சுபகாரியங்களுக்கும் தாம்பூலத்தை பயன்படுத்துவார்கள். மிகச் சிறந்த “நோய்த்தடுப்பு ஆற்றல்" தாம்பூலத்தில் உள்ளது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம் மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன் ஒரு வித உற்சாக உணர்வினை தருகிறது. வெற்றிலைக்கு தாம்பூலம், தாம்பூலவல்லி, திரையல், நாகவல்லி, மெல்லிலை, மெல்லடகு, வெள்ளிலை என்று பல பெயர்கள் உண்டு. ஆனால் வெற்றிலை என்னும் சொல்லே நடைமுறையில் உள்ளது. கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது. மருத்துவ பயன்…
-
- 5 replies
- 1.1k views
-
-
பெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கியமானவை கண் இமைகள். கண்கள் சற்று பெரிதாகவும், இமைகள் நீளமாகவும் இருந்தால் பார்ப்பதற்கு இன்னும் அழகாக தெரிவார்கள். செயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி கண் இமைகளை வளர்க்கலாம், ஆனால் அதற்கு சில இயற்கை வழிமுறைகளும் உள்ளன. கண் இமைகள் வளர சில டிப்ஸ் 1. தினமும் ஆமணக்கெண்ணெயை தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். வேண்டுமென்றால் ஆமணக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி கூட தடவலாம். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவினால், கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடன் காணப்படும். 2. தினமும் கண் இமைகளை சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளரும். அந்த சீப்பை வைட்டமின் ஈ எண்ணெயில் நனைத்து சீவலாம். வேண்டுமெ…
-
- 0 replies
- 510 views
-
-
உலகில் முதல் முறையாக ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சையை தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளனர். கேப் டவுன் நகரிலுள்ள டைகர்பெர்க் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் இந்த அறுவை சிகிச்சை ஒன்பது மணி நேரம் நடந்திருந்தது. ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் முயற்சித்தது அது இரண்டாவது தடவை என்று கூறப்படுகிறது. தொழில்தர்மம் கருதி அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவரின் அடையாள விவரங்களைத் தாம் வெளியில் விடவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் முழுமையாக குணமடைந்துள்ளார். பாரம்பரிய முறையில் செய்யப்பட்ட ஆண்குறி முன் தோல் நீக்கத்துக்கு பின்னர் இவருக்கு கோளாறுகள் ஏற்பட அவரது ஆண்குறி அகற்றப்பட வேண்டி …
-
- 4 replies
- 3k views
-
-
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும் வெள்ளை சாதத்தை அளவோடு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வெள்ளை சாதத்தில் நார்ச்சத்துக்களானது மிகவும் குறைவாக இருப்பதால், அவை முறையற்ற குடலியக்கத்தை ஏற்படுத்தி விடும். வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிட்டு வந்தால் 2 வகையான நீரிழிவு வருவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே சாதம் சாப்பிட ஆசை வந்தால் கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்தை சாப்பிடுங்கள். மேலும், வெள்ளை சாதத்தில் ஊட்டச்சத்துக்களானது மிகவும் குறைவாக உள்ளதால், இதனை அதிகம் எடுத்துக் கொள்வதால் எவ்வித சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்போவதில்லை. உடல் எடையை குறைக்க வேண்டுமானால், குறைந்தது ஒரு மாதத்திற்கு வெள்ளை சாதத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.…
-
- 0 replies
- 732 views
-
-
குளிர்ச்சி உணவான தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட விரைவாகவே ஜீரணமாகிவிடும். வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம். மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.வெண்ணெயை காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். …
-
- 0 replies
- 725 views
-
-
கடவுள் நமக்கு கொடுத்த வரப்பிரசாதங்களில் ஒன்று தான் கீரைகள். கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, அவற்றில் ஒரு வகை தான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது. * வயிற்றுப் புண், வாய்ப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம். * மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னையிலிருந்து விடுபடலாம். * மேலும் செரிமான பிரச்னை உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு சத்துக்கள் கிடைப…
-
- 0 replies
- 532 views
-
-
உணவுகளில் வாசனைப் பொருளாக பயன்படுத்தும் ஏலக்காயில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. ஏலக்காயில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது. ஏலக்காயை தேநீர் பாயாசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் அதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது. எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது. ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் இதி…
-
- 0 replies
- 476 views
-
-
வெட்கத்தை விட்டு பேச வேண்டிய ஒரு விடயம், ஆனாலும் பலர் முகம் சுழிப்பார்கள் என்று நினைகிறேன். நான் UKல் படிக்கும் போது, ஒரு நாள் ஒரே கடி. ஊரில் வைத்தியரிடம் போனால் மருந்து தருவார். அப்படித்தான் இங்கயும் என்று நினைத்துகொண்டு வெளிகிட்டு போனன். டாக்டர் கேட்டார், கையாலயோ கழுவினனிர் என்று. நானும் வெக்கபடாமல் சொன்னன் வடிவாக துடைச்சு போட்டு குளிக்கேக்கை சோப்பு போட்டு கழுவினனன் என்று. அவர் சொன்னார் தொடுறதை நிப்பாட்டும், கடி தானால் நிக்கும் என்று. அன்று பேப்பர் பாவிக்க தொடங்கின எனக்கு இன்னும் கடி வரவுமில்லை, மருந்து பாவிக்கிறதும் இல்லை. உங்கள் அனுபவங்களை பகிர்ந்தால் மற்றவர்களின் ஆரோக்கியத்துக்கு வளமாக இருக்கும்.
-
- 42 replies
- 5.4k views
-
-
மூட்டு வலியை விரட்டும் விளக்கெண்ணெய்! 21:31:15 Sunday 2015-01-11 HAVE COMPLETED THE FULL CIRCLE OF W... வயது முதிர்வு அடைந்தவர்களுக்கு பெரும் வேதனையாக இருப்பது மூட்டு வலி. தற்போது நச்சு கலந்த உணவு வகைகளால், இயற்கையில் விளையும் பொருளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதன்மூலம் பல்வேறு நோய்களும் ஏற்படுகிறது. இதனால் இளைஞர்களும் மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர். மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் ஏற்படும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணம் உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே ஆகும். நாளடைவில் இதுவே பெரிய நோயாக மாறும். இந்த மூட்டு வலியை நீக்க நமது அன்றாட உணவு முறைகளே போதுமானது. இயற்கையான சத்து நிறைந்த பொருட்களை சாப்ப…
-
- 8 replies
- 8.3k views
-
-
வாழைப்பழங்களில் ஒரு வகையான செவ்வாழை எண்ணற்ற சத்துக்களும், சுவைப்பதற்கு சுவையாகவும் இருக்கும். வாழைப்பழங்களில் பல வகை உண்டு, சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இருக்கின்றன. செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது, இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. செவ்வாழையின் மருத்துவ குணங்கள் நரம்பு தளர்ச்சி குணமடையும் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குழந்தை பேறு தரும் குழந்தை இல…
-
- 0 replies
- 561 views
-
-
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரை…
-
- 1 reply
- 2k views
-