யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
94 topics in this forum
-
"அன்பு வலிமையானது" & "ஓடுகிற தண்ணியிலே" "அன்பு வலிமையானது" "அன்பு வலிமையானது மனிதம் வளர்ப்பது துன்பம் வேதனையானது மனதை வாட்டுவது இன்பம் மகிழ்வானது சேர்ந்து அனுபவித்தால் புன்னகை கொடுப்பது இனிய வரவேற்பே நன்றாய் இவையை அறிந்தால் சொர்க்கமே!" "பண்பு என்பது பாடறிந்து ஒழுகுதல் கண்கள் போல் காக்கவேண்டிய ஒன்றே மாண்போடு வாழ்தல் மனிதனின் தேவை விண்ணில் ஒளிரும் மீன்கள் போல வண்ண அழகில் மானிடம் மலரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... "ஓடுகிற தண்ணியிலே" "ஓடுகிற தண்ணியிலே வாடிநிற்கும் கொக்கே தேடுகிற என்னழகியை கண்டதுண்டோ சொல்லாயோ? பாடுகிற குயிலே கிளையிலே இருக்கிறியே கூடுகிற ஆசையை த…
-
-
- 2 replies
- 228 views
-
-
"கும்மிருட்டில் நடனம்" முள்ளிவாய்க்காலில் இரவு கனமாக இருந்தது, சொல்லொணாத் துயரம் கிசுகிசுக்கும் அமைதியற்ற அமைதியில் மறைந்திருந்தது. இந்த மண்ணில் நடந்த கொடுமைகளை வானமே புலம்பியது போல, மேலே உள்ள நட்சத்திரங்கள் மங்களாகி கும்மிருட்டாய் ஆகியது. இலங்கையின் நீண்ட மற்றும் கொடூரமான உள்நாட்டுப் போரின் இறுதிப் போர்க்களமான முள்ளிவாய்க்கால், கேட்கப்படாத ஒரு ஆயிரம் ஆயிரம் அழுகையின் கனத்தைத் தாங்கியது. இந்த மண்ணிலிருந்து திருடிய அல்லது அழித்த எல்லா உயிர்களும், அந்த மோதலின் நிழலில் சிக்கிக்கொண்டு, அதன் எரிந்த பூமிக்கு அடியில் இருந்து, அவர்களின் குரல்கள் இன்னும் நீடித்துக்கொண்டே இருந்தது. "உடைதலையும் மூளையும் ஊன்தடியும் என்பும் குடருங் கொழுங்குருதி யீர்ப்ப – மிடைபேய் …
-
-
- 2 replies
- 383 views
- 1 follower
-
-
அதிகாலைப் பொழுது ஆழ்ந்துநான் உறங்கையிலே தூக்கத்தில் மனத்திரையில் எழுந்தது காட்சியொன்று! பசும்புல் நிறங்கொண்ட பச்சைச் சேலையுடன் பல்லவன் சிற்பமொன்று என்னருகில் நின்றதுபார்! ஆசையுடன் கையிரண்டில் அள்ளி நானெடுத்தேன் வஞ்சிக் குமரியவள் வளையல்க் கையிரண்டும் மாலையாய் எந்தோளில் விழுந்தது போலுணர்ந்தேன்! அல்லிப்பூ இதழின் அழகுக் கோலத்தால் ஆசையாய் முத்தமொன்று அவளிடம் கேட்டுவிட்டேன்! துள்ளிக் குதித்திறங்கித் தூக்கத்தைக் கலைத்துவிட்டாள் கையில் மிதக்கும் கனவேயது என்றுணர்ந்தேன்!
-
- 3 replies
- 312 views
-
-
காதலர் தினக் கதை ------------------------------ என் நண்பன் சொன்ன அவனின் கதை இது ஆள் அப்படி ஒன்றும் கண்டவுடன் காதலிக்க தோன்றும் புற அழகு என்றில்லை ஆனால் அவனின் அகம் நல்ல அழகு என்று அவனே சொல்லிக் கொள்வான் சொந்த இடம் பீஜிங் சோகக் கதை நடந்ததும் அங்கே தான் அங்கே ஒரு பெண் நல்ல அழகு அவர் ஊரில் பலரும் அவர் பின்னால் திரிய அவரோ நம்மாளை எப்படியோ காதலிக்க ஆரம்பித்தார் கனவா நிஜமா என்று காற்றிலே மிதந்து கொண்டிருந்தான் நம்மாள் அடுத்து வந்த காதலர் தினத்தில் நம்மாள் ஒரு பூங்கொத்து கொடுத்தார் எங்கே வாங்கிய பூங்கொத்து என்ற கேள்விக்கு …
-
-
- 16 replies
- 784 views
- 2 followers
-
-
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம் இறை நம்பிக்கை என்பதே இளம் பிராயத்தில் இருந்து செய்யப்பட்ட மூளைச்சலவை என்பதும், அதனால் அதுவும் ஒரு குருட்டு நம்பிக்கை என்பதுமே பெரும்பான்மை இறை மறுப்பாளர்களின் கருத்தாக இருப்பினும் அவர்கள் அக்கருத்தை அத்துணை ஆணித்தரமாக சமூகத்தில் வெளிப்படுத்துவதில்லை. எந்த சமூகத்திலும் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடையவராய் இருப்பதும், அம்மக்கட் பணியே தம் பணி எனக் கொண்டதும் அதற்குக் காரணமாய் இருக்கலாம். ஆனால் இறை நம்பிக்கை எல்லை கடந்து மூடநம்பிக்கையாய் உருவெடுக்கும்போது இறை மறுப்பாளர் மட்டுமல்லாமல் இறை நம்பிக்கை கொண்டோரிலும் பகுத்தறிவாளர் தமது எதிர்க் குரலை ஆங்காங்கே பதிவு…
-
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
"உனக்காக் காத்திருக்கேன் [14 பெப்ரவரி 2025 ]" [காதலர் தினம் கொண்டாடும் உறவுகளுக்காக] வடமாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்களின் கட்டட நிர்மாண, மீள்நிர்மாண, புனர்நிர்மாண மற்றும் பராமரிப்பு தொடர்பான சேவை வழங்கும் கட்டட திணைக்களத்தில் ஒரு இளம் பொறியியலாளராக ஆராமுதன் அன்று கடற்கரை வீதி, குருநகரில் அமைந்துள்ள பணிமனைக்கு முதல் முதல் 01 பெப்ரவரி 2020, வேலையில் சேர, தனது தற்காலிக வதிப்பிடத்தில் இருந்து புறப்பட்டான். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வரை இலகுவாக சென்றவன், அதன் பின் கொஞ்சம் தடுமாறினான். அப்பொழுது மாணவர்கள் கடக்க தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தவன், தனக்கு பக்கத்தில் ஸ்கூட்டரில், தனது கடிகாரத்தை பார்த்து முணுமுணுத்துக் கொண்டு இருந்த அந்த பெண்ணிடம் ' ஹலோ…
-
-
- 3 replies
- 316 views
- 1 follower
-
-
இன்றைய அதிசயம் ------------------------------ பிள்ளையார் இயேசு பெருமான் புத்த பெருமான் இப்படி பல தெய்வங்களில் இருந்து நீர் பால் இரத்தம் கூட உலகில் அங்கங்கே வடிந்து கொண்டிருக்கின்றது இது அதிசயம் ஒரு துளி ஈரமும் வருடங்களாக காணாமல் வறண்டு வெடித்து ஒரு இடம் அங்கே ஒரு வெள்ளைக் கொக்கு ஓடின ஓணாணை பிடித்து அப்படியே முழுங்கியது இதுவும் அதிசயம் கடுங்குளிர் காலத்திலும் நெருப்பாக வெயில் எரிய அனல் காற்றும் சேர அந்த இடமே பற்றி எரிந்தது இது அவலமான அதிசயம் இ…
-
-
- 14 replies
- 1k views
- 1 follower
-
-
ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே! நண்பர் @பாலபத்ர ஓணாண்டி எனக்கு மிகவும் பிடித்த கருத்தாளர். அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். என்னை யாழில் வா தல, போ தல என உரிமையோடு ஒருமையில் எழுதும் ஒரே ஒருவர், நான் அப்படி ஒருமையில் விளிக்கும் ஒரே ஒருவர். அண்மையில் ஒரு கருத்தை சொல்லி விட்டு அதை நிறுவ முடியாமல் போய் விட, தன் credibility உடைந்து விட்டதென கூறி யாழில் கருத்து எழுதுவதை விட்டு விட்டார் (படங்கள் இணைக்கிறார்). இதெல்லாம் சப்பை மேட்டர், எல்லோருக்கும் நடந்ததுதான் என அவருக்கு நன்கு தெரியும். அத்தோடு என்னை போலவே குப்புற படுத்து கிடந்து இந்த பெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒரு தூசு கூட இல்லை என அடிக்கடி உணர்பவர் ஓணாண்டி. ஆகவே இந்த சப்ப மேட்டரை …
-
-
- 10 replies
- 720 views
- 1 follower
-
-
"வாழ்வில் வசந்தம்" & "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல" "வாழ்வில் வசந்தம்" "வாழ்வில் வசந்தம் கட்டாயம் வரும் தாழ்வில் ஒரு உயர்வு வந்தால்! தோல்வியில் வெற்றி மனதுக்கு அமைதி சொல்லில் அடங்கா மகிழ்ச்சி அது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல" "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல தையல் அருகிலே தாளாத காதலுல தைத்த வண்ணத்துல தாமரை அழகில தைவரல் சுகத்துல தாலாட்டி மகிழ்ந்ததேனோ?" "கற்றாழை முள்ளு குத்தியதோ பாதத்தில் கண்கள் இரண்டும் கலங்கியதோ வேதனையில் கஞ்சி குடிக்கையிலே கதறல் கேட…
-
-
- 2 replies
- 213 views
-
-
"ஏனிந்தக் கோலம்" "ஏனிந்தக் கோலம் வாலைக் குமரியே ஏமாற்றிப் பிழைப்பதும் ஒரு வாழ்க்கையா ஏராளம் வேடம் ஏன் உனக்கு ஏக்கத்தில் இனியும் தவறு செய்யலாமா?" "பெண்ணியம் சொல்லுவது எல்லோரும் சமம் கண்ணியம் காக்கும் செயல் பாடுகளே மண்ணும் பெண்ணும் இயல்பில் ஒன்றே எண்ணமும் கருத்தும் ஒன்றாய் இருக்கட்டும்!" "அன்பும் நீதியும் ஒருங்கே நின்றால் அழகு பெண்ணும் மகிழ்ச்சி அடைவாள் அடிமைச் சங்கிலியை உடைத்து எறிந்து அச்சம் மடம் நாணம் ஒழியட்டும்!" "உண்மையை உணர்ந்து உலகை அறிந்து பண்பாட்டு நிலையில் சமநிலை போற்றி கண்கள் போகும் வழிகளில் போகாமல் பெண்ணே உங்கள் கைகள் சேரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்ப…
-
-
- 3 replies
- 332 views
-
-
"அன்புடன் தேன்மொழி" யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கையிலுள்ள 13 பல்கலைக்கழகங்களுள் ஒன்று. இது சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து, 1974 ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டது. இன்று [2024] இலங்கையில் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் என்றும் சலசலப்பாக , அதன் சிவப்பு செங்கல் சுவர்கள் கல்வி அபிலாஷைகள் மற்றும் இளமைக் கனவுகளின் நறுமணத்தில் மூழ்கி இருந்தது. 2024 இல், மாணவர்களின் கடலில், ஒரு பெயர் அடிக்கடி பாராட்டுக்களுடன் பலர் இதயங்களில் கிசுகிசுத்தது: அழகும் அன்பும் தன்னகத்தே கொண்ட, முதலாம் ஆண்டு அறிவியல் பீட மாணவி, 'தேன்மொழி' தான் அவள். சிகப்பு நிறமும், ஒல்லியும், சராசரி உயரமும் கொண்ட அவள், தன்னம்பிக்கை…
-
-
- 5 replies
- 362 views
-
-
கர்ண பரம்பரையின் கனவு ----------------------------------------- பொழுது சாய்ந்து விட்டது போதும் விளையாடியது உள்ளே வா............. என்று இழுத்து வைத்துக் கொள்ளும் அம்மா ஏன் தான் இது எப்படி தான் இது ஒவ்வொரு நாளும் சாய்கின்றது என்று நான் விடாமல் நச்சரிக்க அதுவும் தூங்கத்தானே வேண்டும் விடிய எழும்பி வரும் வா........... என்றார் எங்கே அதன் வீடு என்றேன் அந்தப் பக்கம் என்று காலுக்கு கீழே சுட்டினார் அம்மா ஒரு நாள் நிலத்துக்கு கீழே தூங்கப் போன சூரியனை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன் …
-
-
- 4 replies
- 451 views
-
-
"மனமே கலங்காதே!" & "இயற்கையின் இன்ப அழகில்" "மனமே கலங்காதே!" "மனமே கலங்காதே உறுதியாக இருந்திடு தினமும் நடப்பதை விழிப்புடன் கவனித்திடு! ஈனப் பிறவிகளென யாரும் இல்லை இனம் சார்ந்த நடவடிக்கைகள் ஒழியட்டும்!" "குணம் நாடிக் குற்றமும் ஆராய்ந்து மணம் வீசும் செயல்கள் தொடரட்டும்! எண்ணம் எல்லாம் மனிதம் வளர்க்க பண்பாடு நிலைத்து மனது மலரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................................... "இயற்கையின் இன்ப அழகில்" "இயற்கையின் இன்ப அழகில் மலர்ந்தவளே மயக்கத்தின் பிடியில் உலகை மறந்தவளே தயக்கம் கொண்டு வெட்கப் படுபவளே அயலவர் உள்ளங்…
-
-
- 2 replies
- 234 views
-
-
"நான் வரைந்த முதல் ஓவியம்" & "உள்ளமெனும் ஊஞ்சலிலே" "நான் வரைந்த முதல் ஓவியம்" "நான் வரைந்த முதல் ஓவியம் நாணம் கொண்ட அவளின் உடல் நாட்டிய தாரகையின் தாமரை முத்திரை நாடித் தேடி கீறிய படம்!" கோடு போட்டு அளந்து பார்த்து ஏடு வாசித்து மனதில் பதித்து நாடு எங்கும் காணாத அழகு ஆடு மகளின் வண்ணக் கோலம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................... "உள்ளமெனும் ஊஞ்சலிலே" "உள்ளமெனும் ஊஞ்சலிலே ஆடும் ஆட்டியே கள்ளமற்ற நெஞ்சைத் தேடும் தேவதையே வெள்ளமாக பாயும் அன்பின் அணங்கே குள்ளப்புத்தி உனக்கு வந்தது எனோ?" "மெல்ல நடந்து விலகிப் …
-
-
- 7 replies
- 463 views
-
-
இன்னொரு சக்கரவர்த்தி --------------------------------------- அற்புதமான ஆடை என்று கொடுக்க அதை உடுத்து ஆடம்பரமாக நிமிர்ந்து நடந்து வந்தார் ஒரு சக்கரவர்த்தி என்னே ஆடை இது எப்படி மின்னுது இது இதுவல்லவோ அழகு எங்கள் ராசா என்ன கம்பீரம் என்று கூட்டம் குரல் எழுப்பியது இன்னும் பெருமைப்பட்ட சக்கரவர்த்தி இன்னும் இன்னும் கைகளை நீட்டி கம்பீரமாக நடந்தார் சின்னப் பயல் ஒருவன் திடீரென 'ஐயே................ ராசா அம்மணமாக வருகிறாரே.....' என்று கத்திச் சொல்லி அவன் கண்களையும் மூடினான் சக்கரவர்த்தி வெட்கத்தில் பொத்திக் கொண்டு ஓட கூட்டமும் ஆடை நெய்தவரும் உயிர் தப்ப ஓடி…
-
-
- 6 replies
- 648 views
-
-
"கலாச்சாரம்" & "துடிக்கும் இதயங்கள்" "கலாச்சாரம் தமிழா தலைசுத்துது எனக்கு கலப்பு இல்லா ஆதி மொழியே கலை மூன்றும் தந்த பெருமையே!" "பகலோனாக உலகிற்கு ஒளி ஏற்றிவவனே பகுத்தறிவு சித்தர்களின் பிறப்பு இடமே பண்பு என்பது பாடறிந்து ஒழுகுதலே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ "துடிக்கும் இதயங்கள்" "துடிக்கும் இதயங்கள் தேடுது அன்பு அடிக்கும் கைகள் அணைக்குது பாசம் இடிக்கும் வார்த்தைகள் வாட்டுது நெஞ்சம் குடிக்கும் மதுபானம் சிதைக்குது உடலை கெடுக்கும் செயல்கள் குறைக்குது நற்பெயரை!" "உள்ளம் மலர்ந்தால் மகிழ்வு பிறக்கும்…
-
- 1 reply
- 236 views
-
-
காற்றாடி - அத்தியாயம் ஒன்று ---------------------------------------------- மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையு…
-
-
- 50 replies
- 3.1k views
-
-
"கரை கடந்த புயல்" நவம்பர் 27, 2024 அன்று காலை கடற்கரை நகரமான திருகோணமலை அபாய எச்சரிக்கையுடன் விழ்த்தெழுந்தது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் புயலாக வலுப்பெற்ற, பெஞ்சல் புயலாக [Fengal Cyclone] வலுவடைந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. செல்வராஜா குடும்பத்தினருக்கு இந்தப் புயல் இயற்கைப் பேரிடரை விட அதிகம்; இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளை சீர்குலைக்கும் அச்சுறுத்தலாக இருந்தது. மீன்பிடி தொழிலாளியான செல்வராஜாவுக்கும், மீனா என்ற அவரின் மனைவிக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்தவரான 18 வயது கவிதா, தனது குழந்தைப் பருவ காதலியான அரவிந்துடன் நவம்பர் 29ஆம் தேதி திருமணத்தை பதிவு …
-
-
- 9 replies
- 572 views
-
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். வாழும்வரை போராடு....... 01. யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருக்கும் அந்தப் பிரமாண்டமான கோட்டை போத்துக்கேயரால் முற்றிலும் மனித வலுவைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. அது பகலில் மிகவும் அழகாகவும் இரவில் மிக மிகப் பயங்கரமாகவும் தோற்றம் தரும். அந்த மாலை நேரத்தில் சூரியன் தன் பொற் கதிர்களைத் தெறிக்கவிட்டு மறைவதையும், அதே நேரத்தில் வெண்ணிலவு மேலெழும்புவதையும் சில காலங்களில் தரிசிக்க முடியும். அன்றும் அதுபோன்றதொரு நாள் அருகில் இருக்கும் முனியப்பர் கோவிலின் மாலைப் பூசையின் மணியோசை அந்த அமைதியை ஊடறுத்துக் கொண்டு கேட்கின்றது. …
-
-
- 32 replies
- 1.8k views
-