உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
சதாமிற்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிபதி, இங்கிலாந்தில் அடைக்கலம் கேட்கிறார் ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிபதி, தனது உயிருக்குப் பயந்து இங்கிலாந்தில் அடைக்கலம் கேட்டுள்ளார். ஈராக்கில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட சதாம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி கோர்ட் அமைக்கப்பட்டது. இதன் தலைமை நீதிபதியாக ரிஸ்கர் அமின் பணியாற்றி வந்தார். ஆனால், ஈராக் அரசின் நிர்ப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் பதவி விலகினார். அதையடுத்து, ரவோப் அப்துல் ரகுமான், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். இவர் குர்திஷ் இனத்தை சேர்ந்தவர். கடந்த 1982 ஆம் ஆண்டு சதாமை கொல்ல முயன்ற 148 ஷியா பிரிவு முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வ…
-
- 0 replies
- 642 views
-
-
புலிகளுக்கு உதவி: தே.மு.தி.க பிரமுகர் கைது விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நாகை மாவட்ட தேமுதிக பிரமுகரான அரிசி ஆலை அதிபரை போலீஸார் கைது செய்தனர். நாகப்பட்டனம், நாணயக்காரத் தெருவில் உள்ள ஒரு அரிசி ஆலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இம்மானுவேல் என்பவர் வேலை பார்த்து வந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்பதற்கான சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து இம்மானுவேலை போலீஸார் கைது செய்தனர். அவரை வேலையில் சேர்த்த அரிசி ஆலை அதிபரும், நகர தேமுதிக செயலாளருமான பரமன் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். பரமனும், விடுதலைப் புலிகளுக்கு உதவியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இரு…
-
- 0 replies
- 628 views
-
-
தமிழக மீனவர்களையாவது தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டாமா? அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் துப்பாக்கிச் சூட்டுக்கள் அதிகரித்து வருகின்றன. பெப்ரவரி 14 இல் (2007) நாகபட்டினம் கடற்கரைக்கு அப்பால் ஒன்பது இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு மீது ஸ்ரீலங்கா கடற்படை துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியது. இதில் படகு பெரும் சேதமடைந்தது மட்டும் அல்லாமல் இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறித்துச் சென்றுவிட்டனர். பெப்ரவரி 16 இல் அய்யம்பட்டினம் ஊரைச் சேர்ந்த மீனவர்களின் இரண்டு படகுகள் அழிக்கப்பட்டு அவர்களது வலைகளும் சேதப்படுத்தப்பட்டது. வழக்கம் போல் அவர்கள் பிடித்திருந்த மீன்களை ஸ்ரீலங்கா கடற்…
-
- 12 replies
- 1.6k views
-
-
இந்திய மீனவர் மீதான தாக்குதல் இந்தியப் பிரதமருடன் வைகோ சந்திப்பு சிறிலங்கா கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் நாளாந்த நிகழ்வுகள் ஆகிவிட்டதனை சுட்டிகாட்டி சிறிலங்கா அரசை எச்சரிகை செய்யும்படி" வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சி்ங்கை புதுடில்லியில் அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை சந்தித்தபோதே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த வேண்டுகோளை விடுத்ததுடன் இரண்டு கோரிக்கை மனுக்களையும் கையளித்தார். மனுக்களை பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், "சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என வைகோவிடம் உ…
-
- 1 reply
- 607 views
-
-
ஈரானுக்காக 22 தொழில்நுட்ப அணுசக்தி முகவர் நிலையத்தால் இடைநிறுத்தம் [11 - March - 2007] [Font Size - A - A - A] ஐக்கிய நாடுகளின் ஈரானுக்கு எதிரான தடைகளின் ஒரு பகுதியாக அந்த நாட்டிற்கான 22 தொழில்நுட்பத் திட்டங்களை சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் இடை நிறுத்தியுள்ளது. ஈரான் இதேவேளை இந்த நடவடிக்கைகள் யுரேனியத்தை பதப்படுத்தும் தனது நடவடிக்கையை பாதிக்காது என தெரிவித்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் 35 நாடுகளின் கூட்டத் தொடரிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டதாகவும் ஈரானுக்கு ஆதரவான நாடுகள் கூட இதனை ஆதரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சபை இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. எந்த நாடும் …
-
- 0 replies
- 575 views
-
-
7 ஆயிரம் கோழிகள் அழிப்பு திபெத்தில் பறவைக்காய்ச்சல் நோய் பரவியிருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டன. இது குறித்து அந்நாட்டு வேளாண் மற்றும் கால்நடைத் துறை கூறியதாவது; திபெத் தலைநகர் இசாவில் இருந்த பண்ணைகளில் கோழிகள் இறந்ததையடுத்து, அக்கோழிகளின் மாதிரிகள் நோயியல் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன. அப்போது, இறந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பண்ணைகளில் இருந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டன. http://www.thinakkural.com/news/2007/3/11/...s_page23096.htm
-
- 0 replies
- 553 views
-
-
புஷ்ஷின் வருகைக்கு எதிர்ப்பத் தெரிவித்து பிரேசிலில் வன்முறைகள், ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் பிரேசில் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றுள்ளன. பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமி
-
- 0 replies
- 522 views
-
-
இந்து சமுத்திரத்தில் மற்றொரு அமெரிக்கத் தளம்? [11 - March - 2007] [Font Size - A - A - A] *வாஷிங்டன் - கொழும்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா கவலைப்படுவதற்கு காரணங்கள் அதிகம் அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமிடையில் கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட பெற்றுக் கொள்தலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலும் உடன்படிக்கை (Acquisition and Cross - Servicing Agreement (ACSA) பிராந்தியத்திற்கு குறிப்பாக இந்தியாவிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. எனினும், இந்த விடயத்தில் புதுடில்லி மௌனமாகவிருப்பது கெடுபிடி யுத்த காலத்திற்கு பின்னர் உருவாகியுள்ள புதிய பூகோள அரசியல் சூழலையும், அமெரிக்கா தனியொரு வல்லரசாக மாறியுள்ளதையும் புலப்படுத்துகின்றது. அமெரிக்க - இந்திய உறவுகளில…
-
- 9 replies
- 2k views
-
-
சென்னை: இலங்கை கடற்படையினரின் வெறித் தாக்குதலில் சிக்கி இதுவரை 123 தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை 250க்கும் மேல் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இலங்கையில் இனப் பிரச்சினை தலை தூக்கத் தொடங்கியது முதல் தமிழர்கள் என்றாலே அவர்கள் விடுதலைப் புலிகள் அல்லது அவர்களைப் போன்ற பிற போராளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற அபத்தமான கொள்கையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது இலங்கை அரசு. தமிழர்களை எதிரிகளாக நினைத்துக் கொண்டு, தங்களது அன்றாட வாழக்கைக்காக உயிரைப் பணயம் வைத்து கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சரமாரியாக தாக்கிக் கொன்று வருகிறது. உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இப்படி ஒரு இனப் படுகொலை நடந்து கொண்டிருக்க முடியாது. அந்த அளவுக்கு த…
-
- 0 replies
- 578 views
-
-
காவிரி பிரச்சனை: மார்ச் 18ல் ஜெ. உண்ணாவிரதம் 09 மார்ச் 2007 Blog this story காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரும் 18ம் தேதி ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். இதுகுறித்து வெள்ளியன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகரில் தனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்றும், அதே நாளில் மாவட்ட தலைநகரங்கள், மாநிலத்தின் இதர பகுதிகளில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த போராட்டத்தில் அதிமுகவினர் மட்டுமின்றி விவசாயிகளும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி நடுவர…
-
- 6 replies
- 1.6k views
-
-
சிறைச்சாலையை தாக்கி 140 பேரை விடுவித்தனர் அல்- ஹைடா தீவிரவாதிகள் ஈராக்கின் வடபகுதி நகரான மொசுல் மீது தாக்குதலை மேற்கொண்ட அல்-ஹைதா தீவிரவாதிகள் 140 இற்கும் மேற்பட்டவர்களை விடுவித்து தம்முடன் கூட்டிச் சென்றுள்ளனர். அமெரிக்கா 2003 இல் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர் இடம்பெற்ற பாரிய சிறையுடைப்பு இதுவென தெரிவிக்கப்படுகின்றது. இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அபு ஒமர் அல்-பக்தாடி தலைமையிலான 300 தீவிர வாதிகளே மாலை வேளையில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். பொலிஸார் இதனை முறியடிப்பதற்காக அமெரிக்க இராணுவத்தினரை துணைக்கு அழைத்திருந்தனர். சிறை மீட்கப்பட்ட அனைவரும் கிளர்ச்சிக்காரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 760 views
-
-
அமெரிக்க கல்லூரி வளாகத்திலிருந்து நோபல் விருது திருடப்பட்டது அமெரிக்காவின் பெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து நோபல் விருது திருட்டுப் போய்விட்டது. 1939 ஆம் ஆண்டு இயற்பியல் விஞ்ஞானி எர்னஸ்ட் - ஓ - லாரன்ஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது இந்த விருது. 23 கரட் தங்கத்தால் செய்யப்பட்டது. நாணயம் போல இருக்கும், சிறந்த கலை வேலைப்பாடுகள் உள்ளது. மிகப்பழையது என்பதாலேயே, கலைப்பொருள் சேகரிப்பவர்களிடம் நன்றாக விலை போகக்கூடியது. எல்லாவற்றையும் விட இந்த பல்கலைக் கழகத்துக்குக் கிடைத்த முதல் விருது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு சுமார் 2 இலட்சம் ரூபாவாகும். இதுவெறும் தங்கத்துக்கும் அதன் வேலைப்பாடுக்குமானது. ஆனால், உண்மை மதிப்பு இதைவிட ப…
-
- 0 replies
- 585 views
-
-
மைக்கேல் ஜாக்சன். அவருடன் விருந்து சாப்பிட புக்செய்ய கட்டணம் ரூ.3 லட்சம். பிரபல பாம் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் இப்பொழுது ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். டோக்கியோ நகரில் அவரது ரசிகர்கள் சார்பில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மைக்கேல் ஜாக்சன் கலந்து கொண்டார். அவருடன் விருந்து சாப்பிட புக்செய்ய கட்டணம் ரூ.3 லட்சம். 300க்கும் மேற்பட்ட வர்கள் கட்டணம் செலுத்தி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இதே நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகளும், உடல் ஊன முற்றவர்களும் இலவசமாக அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுடன் மைக்கேல் ஜாக் சன் நீண்ட நேரம் உட்கார்ந்து பேசினார். விடுப்பு : Viduppu.com
-
- 2 replies
- 1.2k views
-
-
மகா பணக்காரர்கள் வரிசையில் 36 இந்தியர்கள் மார்ச் 09, 2007 நியூயார்க்: உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 36 மகா கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர். பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை 2007ம் ஆண்டின் மிகப் பெரிய கோடீஸவரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 36 பேர் இந்தியர்கள் ஆவர். இந்தியாவச் சேர்ந்த லட்சுமி மிட்டல், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். மொத்தம் 946 பெரும் பணக்காரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்தியர்களின் மொத்த சொத்து மதிப்பு 191 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எஃகு நிறுவன தொழிலில் உலகைக் கலக்கி வரும் லட்சுமி மி…
-
- 2 replies
- 1.2k views
-
-
ரூ.20 ஆயிரத்தில் விமானம் ராணிப்பேட்டை: மோட்டார் மெக்கானிக் மாணவர்கள் இருவர், ரூ.20 ஆயிரம் செலவில் பயிற்சி விமானத்தை தயாரித்து சாதனை படைத்தனர். இதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ராணிப்பேட்டை அடுத்த மலைமேடு அக்ராவரத்தை சேர்ந்தவர் கோபிநாத் (25). அதே ஊரை சேர்ந்தவர் லோகநாதன் (20). இவர்கள் இருவரும் மோட்டார் மெக்கானிக் டிப்ளமோ படித்து உள்ளனர். இவர்கள் ராணிப்பேட்டை லயோலா சமுதாய கல்லூரியில் சேர்ந்து பயிற்சி விமானத்தை சொந்தமாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதமாக விடாமுயற்சியுடன் செயல்பட்டனர். இதன் காரணமாக குறைந்த செலவில் பயிற்சி விமானத்தை தயாரிக்க முடியும் என்பதை நிரூபித்து சாதனை படைத்தனர். இவர்கள் ரூ. 20 ஆயிரம் செலவில் பயிற்சி வி…
-
- 18 replies
- 2.5k views
-
-
சித்திரை முதல் வார முடிவில் வழமையாக அமுல்படுத்தப்படும் வடதுருவத்திற்கான கோடைகால நேரமாற்றம் இந்த முறை பங்குனி 11 ஆம் திகதி நடைமுறைக்கு வர இருக்கிறது. பூமி வெப்பமடைதலுக்கு ஒரு காரணமாக கருதப்படும் சக்திப் பயன்பாடு விரையம் போன்றவற்றை குறைக்க அல்லது சக்தியை சேமிக்க இந்த நடைமுறை கடைப் பிடிக்கப்பட இருக்கிறது. கணனி போன்ற இலத்திரனியல் உபகரணங்கள் வழமையாக தன்னிச்சையாக மாறும் என்பதின் மூலம் அறிந்து கெள்ளலாம் என்று நம்பி இருப்பவர்கள் அவதானமாக இருக்கவும். அவை தன்னிச்சையாக மாறுவது வழமை சித்திரை மாத முதல் வரமுடிவாகத்தான் இருக்கும்.
-
- 1 reply
- 892 views
-
-
மத ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: ஈராக்கில் 120 பேர் உடல் சிதறி சாவு பாக்தாத், மார்ச்.7- ஈராக்கில் சன்னி பிரிவினருக்கும் ஷியா பிரி வினருக்கும் மோதல் நடப்பது அன்றாட நிகழ்ச்சி யாகி விட்டது. தினமும் கார் குண்டு தாக்குதல், மனித வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கி சூடு ஆகியவற்றால் அங்கு ரத்த ஆறு ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று ஹில்லா பகுதியில் உள்ள ஷியா பிரிவினரின் மத ஊர்வலம் நடந்தது. கர்பலா நகரை நோக்கி அவர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்பொழுது அந்த ஊர்வலத்துக்குள் மனித வெடிகுண்டாக ஒருவன் நுழைந்தான். தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை அவன் வெடிக்கச் செய்தான். சிறிது நேரத்தில் இன்னொரு மனித வெடிகுண்டு தீவிரவாதி ஊர்வலத்துக்குள் புகுந்தான். அடுத்தடுத்து 2 …
-
- 0 replies
- 662 views
-
-
பாதுகாப்பு அமைச்சுக்குள்ளும் புலிகளின் ஊடுருவல் அண்மையில் கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த புலனாய்வுப் பொலிஸ் உத்தியோகத்தர்களால் அரச பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் உத்தியோத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தவர் என்ற குற்றச்சாட்டுச் சம்பந்தமாகச் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கருதப்படும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேற்படி இரண்டு கைதுகளைப் பொறுத்தவரையிலும் குறிப்பிடத்தக்க விடயம் அவர்கள் இருவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்த உத…
-
- 0 replies
- 829 views
-
-
அமெரிக்காவில் வீசிய சூறாவளியால் அட்லாண்டிஸ் விண்கலத்துக்கு சேதம் திருத்த வேலைகள் ஆரம்பம் அமெரிக்காவில் அண்மையில் வீசிய சூறாவளியால் `அட்லாண்டிஸ்' விண்வெளி ஓடம் சேதமடைந்து விட்டது. அதையடுத்து ஏவுதளத்திலிருந்து விண்வெளி ஓடம் அப்புறப்படுத்தப்பட்டு பழுது பார்ப்பதற்காக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஏவுதளத்திலிருந்து 5.5 கி.மீ தொலைவில் உள்ள பணிமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அதைக் கொண்டு செல்ல 7 மணி நேரம் ஆனது. சில நாட்களுக்கு முன் சூறாவளி வீசியபோது பறந்து வந்த குப்பைகளும் கற்களும் ,மண்ணும் அட்லாண்டிஸ் ஓடத்தின் எரிபொருள் கலனின் மீது பொருத்தப்பட்டுள்ள காப்புறைத் தகடுகளைத் தாக்கிச் சேதப்படுத்தி விட்டன. அதற்கு ஏற்பட்டுள்ள சேதத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்…
-
- 0 replies
- 610 views
-
-
பாக்தாத்தில் 9 அமெரிக்கப் படையினர் பலி ஈராக்கின் வீதியோரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் 6 அமெரிக்க படையினர் பலியாகியுள்ளதுடன் பிறிதொரு சம்பவமொன்றில் 3 படையினர் பலியாகியுள்ளனர். ஸுன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பாக்தாத்தின் வடபகுதியிலுள்ள சலஹட்டின் மாகாணத்தில் அமெரிக்கப் படையினரின் வாகனத்திற்கருகிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாகவும் இதில் மேலும் மூவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தியலா மாகாணத்திலும் மூன்று அமெரிக்கப் படையினர் பலியாகியுள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளார். வீதியோர குண்டுகள் கிளர்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும் இவை ஈரானில் தயாரிக்கப்பட்டவை எனவும் அமெரிக்க தளபதிகள் இவ் விடயம் தொடர்பாக அக்கறை செல…
-
- 0 replies
- 596 views
-
-
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆணைக்குஎதிராக தடை உத்தரவு பெற்ற இந்திய மருத்துவர்கள் ஆகஸ்ட் முதல் திகதிக்குப் பிறகு பிரிட்டனில் தங்க `விசா' இல்லாத ஐரோப்பியர் அல்லாத டாக்டர்களை வேலைக்கு எடுக்க வேண்டாம் என்று பிரிட்டிஷ் அரசின் சுகாதாரத்துறை பிறப்பித்த ஆணைக்கு தடை உத்தரவு பெற்றுவிட்டனர் அங்கு சென்றுள்ள இந்திய வம்சாவளி டாக்டர்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும் பிரிட்டனில் டாக்டராகப் பணிபுரிந்தே தீருவது என்ற முடிவோடு உள்ள டாக்டர்கள், அந் நாட்டு அரசு அடுத்தடுத்து ஏற்படுத்திவரும் சட்டத்தடைகளை மனம் தளராமல் உடைத்துக் கொண்டே வருகின்றனர். பிரிட்டனில் வேலைபார்த்தால் கௌரவம், பணம் அதிகம் கிடைக்கும் என்பதையெல்லாம்விட தங்களுடைய படிப்புக்கும் திறமைக்கும் அது பெருத்த அங்கீகாரம் …
-
- 0 replies
- 490 views
-
-
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினியின் மகள் ஆரித்ரா இந்தியா வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் அவர் இந்திய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் அளிக்கவும் அனுமதி அளித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி ஆகியோருக்கு பிறந்தவர் ஆரித்ரா. வேலூர் சிறையில் இவர் பிறந்தார். அதன் பின்னர் இலங்கையில் உள்ள முருகனின் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது இலங்கையில் வளர்ந்து வரும் ஆரித்ராவுக்கு இந்திய குடியுரிமை வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும், ஆரித்ரா இந்தியாவில் பிறந்தவர், எனவே அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்த…
-
- 0 replies
- 749 views
-
-
ஜெகத் கஸ்பர் ராஜ்... அரசின் ஆசி பெற்ற மர்ம மனிதரா? மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி பற்றிய சர்ச்சைகள் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ‘சென்னை சங்கமம்.. -மர்மங்கள்’ என்ற செய்தித் தொகுப்பில் பல கேள்விக் கணைகள் விடப்பட்டது. குறிப்பாக சென்னை சங்கமம் நிகழ்ச்சியை அரங்கேற்றிய ‘தமிழ் மைய’த்தின் அமைப்பாளர் ஜெகத் கஸ்பர் ராஜ், விடுதலைப்புலிகளுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டவர்... அமெரிக்காவில் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் அந்த நாட்டு அரசாங்கத்தால் வளைக்கப்பட்ட நாச்சிமுத்து சாக்ரடிஸ் என்பவரோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்... இவர்களைப் பற்றி மத்திய, மாநில ப…
-
- 3 replies
- 2.5k views
-
-
இந்தோனேஷியாதரையிறங்கியபோது விமானம் வெடித்து சிதறியது49 பேர் பலி மார்ச் 07, 2007 ஜகார்தா: இந்தோனேஷியாவில் விமானம் தரையிறங்கியபோது ரன் வேயில் இருந்து விலகி ஓடி சுவரில் மோதி நொறுங்கி, வெடித்துச் சிதறியது. விமானத்தில் 140 பேர் இருந்தனர். இதில் 49 பேர் பலியாகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகம் எனத் தெரிகிறது. யோக்யகார்தா நகர விமான நிலையத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது. இந்தோனஷிய அரசின் கருடா விமான நிறுவனத்தைச் சேர்ந்த அந்த போயிங் விமானத்தில் 133 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் இருந்தனர். தரையிறங்கிய அந்த விமானம் ரன் வேயில் இருந்து விலகி ஓடியது. ரன் வேயின் முடிவில் இருந்த சுவரில் மோதி வெடித்துச் சிதறியது. இதில் 48 பேர் சம்பவ…
-
- 0 replies
- 701 views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதிக்க விரும்பும் 11 பிரபலங்கள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் பதவிக்காலம் 2008 ஆம் ஆண்டு முடிகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கிறது. இதில் அங்குள்ள பிரதான 2 கட்சிகளில் இருந்து மொத்தம் 11 பேர் போட்டியிடுகிறார்கள். இப்போதைய ஆளும் கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக 8 பிரபலங்கள் அறிவித்து உள்ளன. அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அரிசோனா செனட்டர் ஜோன் மெக்கைன். அவருக்கு 70 வயது ஆகிறது. வியட்நாம் போர் நடந்த போது அதில் கலந்து கொண்டு வீரதீர சாகசங்கள் செய்து கதாநாயகன் ஆனார். இவர் 2000 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட மனுச் செய்து கட்சியின் நியமனத்தைப்…
-
- 5 replies
- 1.1k views
-