Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உடல் நலக்குறைவோடு நீண்டநாட்கள் வாழ விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும் வகையில் மரணத்தை விரும்பி தேர்வு செய்தவற்கு வழி வகுக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் முழுவதும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து பிரான்ஸ் நாட்டில் கீழவையில் நேற்று, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோர் மரணத்தை விளைவிக்கும் மருந்தை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கும் மசோதா அதாவது கருணைக் கொலையை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பாவில் இதர நாடுகள் இது போன்ற சட்டத்தை இன்னும் நிறைவேற்றாத நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த முக்கியமான மசோதா ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து எம்பிக்களின் பலத்த கரவொலி…

  2. காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு! 01 Oct, 2025 | 01:16 PM (இணையத்தள செய்திப் பிரிவு) காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்றுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் காசா தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன…

  3. டயானா- ' மக்கள் இளவரசி' மறைந்து 25 ஆண்டுகள் 31 ஆகஸ்ட் 2017 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இளவரசி டயானா இறந்து ஆகஸ்ட் 31, 2022-உடன் இருபத்து ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் வாழ்வின் சில தருணங்களில் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பை வழங்குகிறோம். பட மூலாதாரம்,PA படக்குறிப்பு, டயானா ஃபிரான்ஸஸ் ஸ்பென்சர் 1961ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் நாள் , நார்ஃபோக்கில் பிறந்தார். ஆல்தோர்ப்பின் வைகவுண்ட் மற்றும் வைகவுண்டஸ்ஸிற்க்கு இளைய மகளாக பிறந்தார் டயானா. பட மூலாதாரம்,PA படக்குறிப்பு, அவரின் பெற்றோரின் விவா…

  4. நாளிதழ்களில் இன்று: விமானத்தில் செல்போன் பேச அனுமதிக்க டிராய் பரிந்துரை முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (சனிக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: தற்போது விமானங்களில் செல்போன்கள் பயன்படுத்த பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் விமானங்களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு டிராய்(இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) பரிந்துரைத்துள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. தினமலர் அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு வழக்கப்படும் எச்1பி1 விசா நடைம…

  5. ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு: பல்கலைக்கழகத்தில் எட்டு பேர் உயிரிழப்பு ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து ஒரு மாணவன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக்கழக கட்டிடத்திற்குள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில மாணவர்கள் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மாணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர…

  6. மீண்டுமொருமுறை மனித உரிமை ஆணையாளராக பதவிவகிக்கப்போவதில்லை - மிச்செலே பச்செலெட் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தான் மீண்டுமொரு முறை ஆணையாளராக பதவி வகிக்கப்போவதில்லை மனிதஉரிமை பேரவையின் ஐம்பதாவது அமர்வுடன் எனது பதவிக்காலம் முடிவிற்கு வருகின்றது என தெரிவித்துள்ளார். மனிதஉரிமை ஆணையாளர் என்ற பதவிக்காலம் முடிவிற்கு வருகின்றது இந்த பேரவையின் ஐம்பதாவது அமர்வே( இந்த அமர்வு) நான் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரம் குறித்து அறிக்கைவெளியிடும் உரையாற்றும் இறுதி அமர்வாக காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்திற்கு நெருக்கமான சிலியின் முன்னாள் ஜனாதிபதி மிச்செலே பச்லெட் தொடர்ந்தும் மனித உரிமை ஆணையாளராக பதவி வகிக்கவேண்டு…

  7. பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை! இராணுவப் புரட்சிக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என்று தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு மேற்கண்ட தண்டனையை வழங்கியது. 2022 தேர்தலில் இடதுசாரி போட்டியாளரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், ஆட்சியில் தொடர்ந்தும் இருப்பதை நோக்காக் கொண்டு ஒரு சதித்திட்டத்தை வழிநடத்தியதற்காக அவர் குற்றவாளி என்று அவர்கள் தீர்ப்பளித்தனர். நான்கு நீதிபதிகள் அவரை குற்றவாளி எனக் கண்டறிந்தனர், ஒருவர் அவரை விடுவிக்க வாக…

  8. இந்தியாவிற்கு ஜி- 20 அமைப்பின் தலைமைத்துவம் By Digital Desk 2 14 Nov, 2022 | 11:06 AM ஜி20 அமைப்பின் தலைமைத்துவ பதவியை டிசம்பர் 1, முதல் இந்தியா பொறுப்பேற்கவுள்ளதால், இந்தோனேசியா – பாலி நகரில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். பிரதமர் மோடியின் வருகை குறுகியது, ஆனால் பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் இது மிகவும் முக்கியமானது என்று இந்தோனேசியாவுக்கான இந்திய தூதர் மனோஜ் குமார் பார்தி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 17வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதன் போது 2023 ஆம் ஆண்டுக்கான இந்த…

  9. 🚨 அமெரிக்காவில் கோர விமான விபத்து: முன்னாள் NASCAR வீரர் கிரெக் பிஃபிள் -மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் பலி! written by admin December 18, 2025 அமெரிக்காவின் வட கரோலினா (North Carolina) மாநிலத்தில் உள்ள ஸ்டேட்ஸ்வில் (Statesville) பிராந்திய விமான நிலையத்தில் இன்று காலை நிகழ்ந்த ஒரு தனியார் விமான விபத்து, விளையாட்டு உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ✈️ என்ன நடந்தது? விபத்து: இன்று (டிசம்பர் 18, 2025) காலை 10:20 மணியளவில், Cessna C550 ரகத்தைச் சேர்ந்த பிசினஸ் ஜெட் விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்தது. உயிரிழப்பு: இந்த விபத்தில் புகழ்பெற்ற முன்னாள் NASCAR கார்பந்தய வீரர் கிரெக் பிஃபிள் (Greg Biffle), அவரது மனைவி கிறிஸ்டினா, இரு குழந்தைகள் மற்றும் விமா…

  10. சீனாவில் 4 ஆவது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் வீழ்ச்சி Published By: Digital Desk 3 19 Jan, 2026 | 03:48 PM சீனாவில் 4-வது ஆண்டாக 2025-ம் ஆண்டிலும் இந்த பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, சீன தேசிய புள்ளியியல் அதிகாரசபை வெளியிட்ட தகவலை அடிப்படையாக கொண்டு இன்று வெளியான செய்தியில், 2025-ம் ஆண்டில் சீனாவில் 1,000 பேருக்கு 5.63 என்ற அளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவடைந்து உள்ளது. 2023-ம் ஆண்டில் இது 1,000 பேருக்கு 6.39 குழந்தை பிறப்புகள் என்ற அளவில் இருந்தது என தெரிவிக்கின்றது. எனினும், 2024-ம் ஆண்டில் பிறப்பு விகிதம் சற்று அதிகரித்து இருந்தது. ஆனால், இது நிலைமையில் இருந்து மீண்டதற்கான பொருள் இல்லை. ஏனெனில், 2016-ம் ஆண்ட…

  11. ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தலைவர் வெளியேற்றம்! மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்த இரண்டாவது மூத்த இராஜதந்திரியை, எந்தவித நியாயமும் இல்லாமல் ரஷ்யா வெளியேற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. தூதரகத்தில் உள்ள தூதருக்கு அடுத்தபடியாக மாஸ்கோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதுவர் பார்ட் கோர்மன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவால் வெளியேற்றப்பட்டார் மற்றும் நாட்டை விட்டு வெளியேற இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், கோர்மன் கடந்த வாரம் ரஷ்யாவை விட்டு வெளியேறி அமெரிக்கா திரும்பியுள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றிய வளர்ந்து வரும் கவலைகள்…

  12. பலஸ்தீனாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப் பலஸ்­தீ­னர்கள் சமா­தான பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கேற்க இணங்­கா­விட்டால் அவர்­க­ளுக்­கான உத­விகளை நிறுத்தப் போவ­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார். சுவிட்­ஸர்­லாந்தின் டாவோஸ் நகரில் இடம்­பெற்று வரும் உலக பொரு­ளா­தார மன்றக் கூட்­டத்தில் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். டொனால்ட் ட்ரம்ப் இதன்­போது பலஸ்­தீ­னத்­துக்­கான பொரு­ளா­தார மற்றும் பாது­காப்பு அனு­ச­ரணை உத­வி­க­ளையே நிறுத்தப் போவ­தாக அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ள­தாக அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் தெரி­விக்­கி­றத…

  13. உக்ரைனில்... ரயில் நிலையம் மீதான ரொக்கெட் தாக்குதலில், குறைந்தது 50பேர் உயிரிழப்பு! கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 50பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட இத்தாக்குதலில் முந்ததைய உயிரிழப்பு எண்ணிக்கை 39 என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளதாக டொனெட்ஸ்க் ஆளுனர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென உக்ரைனிய அதிகாரிகள் கூறுகின்றனர். இதுதொடர்பாக உக்ரைன் ரயில்வே வெளி…

  14. சுவீடன் கல்வி நிலையத்தில் துப்பாக்கி சூடு; 11 பேர் உயிரிழப்பு! சுவீடனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையமொன்றில் செவ்வாய்க்கிழமை (04) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், குறைந்தது நான்கு பேர் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டுள்ளனர். ஓரேப்ரோ நகரில் அமைந்துள்ள கல்வி நிலையத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட ஏனைய நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டின…

  15. பிரித்தானியா.. வெளியுறவுத் துறை அமைச்சர், லிஸ் ட்ரஸின்... சர்ச்சையான, கருத்து: மக்ரோன் பதில்! அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் திகழும் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பதிலளித்துள்ளார். நார்விச்சில் நடந்த இறுதித் தலைமைத்துவக் கூட்டத்தில் உரத்த கரவொலி எழுப்பும் வகையில், ‘மக்ரோன் பிரித்தானியாவின் நண்பரா, பகைவரா என்பது குறித்து இனிதான் முடிவு செய்ய வேண்டும். அவரது சொல்லைவிட செயலைக் கொண்டுதான் முடிவெடுக்க முடியும்’ என கூறினார். அத்துடன், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ‘சொற்கள் அல்ல செயல்களால்’ அவரைத் கையாளுவேன் என்று அ…

  16. கொங்கோ – நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறையின் பின் உயிருடன் எரிப்பு February 6, 2025 கொங்கோவின் கோமா நகரசிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியார்கள் கொங்கோவின் கோமா நகரத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவியவேளை கோமா நகரின் சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர். கோமாவின் முன்ஜென்ஸ் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்ல முயன்றவேளை பெண்கைதிகளை தாக்கினார்கள் என ஐநா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அந்த சிறையிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி…

  17. நாளிதழ்களில் இன்று: "கமலும், ரஜினியும் எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை" - உதயநிதி ஸ்டாலின் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா: " கமலும், ரஜினியும் எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை" தீவிர அரசியலில் பங்கெடுப்பதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து, அவரின் நேர்காணலை டைம்ஸ் ஆஃப் இந்தியா பிரசுரித்துள்ளது. அந்த நேர்காணலில், "என்னை நடிகனாக பார்க்காதீர்கள். நான் திமுக குடும்பத்தில் பிறந்தவன். கலைஞரின் பேரன். என் சிறுவயதில் என் அம்மா, தாத்தாவை பார்க்க சிறைக்கு என்னை அழைத்துச் சென்றுள்ளார். நான் கட்சியின் சித்தாந்தத்தை மக்களிடம் எடுத்து…

  18. 56ஆவது நாளாக... தொடரும் போர்: உக்ரைனின், முக்கிய நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு! கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள், அங்குள்ள துறைமுக பகுதியான மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நகரை ரஷ்ய படைகள், கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அத்துடன், மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பாராட்டு தெரிவிததார். மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் கைப்பற்றுமாறு இராணுவத்தினருக்கு பு…

  19. மேற்கு லிபியாவில் படகு விபத்து: 27 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் கரையொதுங்கின! ஐரோப்பிய ஒன்றியம் லிபிய கடலோரக் காவல்படைவில் குறைந்தபட்சம் 27 ஐரோப்பாவிற்குச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன. திரிபோலியில் இருந்து 90 கிமீ (55 மைல்) தொலைவில் உள்ள கடற்கரை நகரமான கோம்ஸில் உள்ள இரண்டு தனித்தனி இடங்களில் சனிக்கிழமை பிற்பகுதியில் ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் உட்பட புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், மூன்று புலம்பெயர்ந்தோர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களைத் தேடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. உடல்களின் சிதைவின் மேம்பட்ட நிலை பல நாட்களுக்கு முன்பு கப்பல் விபத்து நடந்ததைக் குறிக்கிறது எனவும் மேலும் எண்ணிக்கை …

  20. பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியம் குறைவு குளோபல் தமிழ்ச்செய்தியாளர் பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியம் குறைவு என தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிரு;நது பிரித்தானியா வெளியேறியுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கக்கூடிய சாத்தியம் குறைவு என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் எதிர்வரும் 2019ம் ஆண்டில் முழுiயாக வெளியேறும் என்பது குறிப்…

  21. அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு October 31, 2025 அமெரிக்க அணு ஆயுதங்களை உடனடியாக சோதனை செய்து பார்க்குமாறு அமெரிக்க போர் துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த உத்தரவை தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார். “பிற நாடுகளின் சோதனை திட்டங்களால் நான் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அதே அளவில் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். உலகில் எந்த நாட்டை விடவும் அமெரிக்காவில் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா இரண்டாவது இடத்திலும், அதை விட மிக குறைவாக ஆயுதங்களை கொண்டு சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆனால், “ஐந்த…

  22. அமெரிக்காவின் டெஸ்லாவை முந்தியது சீனாவின் BYD! Published By: Digital Desk 1 03 Jan, 2026 | 11:05 AM சீனாவின் BYD நிறுவனம் 2025ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக மாறியுள்ளது. இதுவரை, அமெரிக்க நிறுவனமான டெஸ்லா முன்னனி நிறுவனமாக திகழ்ந்தது. டெஸ்லாவின் வாகன விற்பனை தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ள நிலையில், BYD நிறுவனம் வலுவான போட்டியாளராக மாறியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/235099

  23. டிரம்ப்புக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது அமெரிக்க மாநிலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான வணிக நிறுவனங்களுக்கு சில வெளிநாடுகள் பணம் தந்துள்ளதாகவும், இவை அமெரிக்க அரசியல் சட்டத்தின் ஊழலுக்கெதிரான ஷரத்துக்களை மீறுவதாகவும் கூறி, அவருக்கெதிராக, அமெரிக்க மாநிலமான மேரிலாண்ட் மற்றும் கொலம்பியா மாவட்டம் ஆகியவை வழக்கு தொடர்ந்திருக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிபர் டிரம்ப்பின் வணிகத்தால் ஏற்படும் 'முரண்பட்ட அக்கறைகள்' நாட்டின் ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக மேரிலாண்ட் மாநிலத்தின் தலைமை அரச வழக்கறிஞர் பிரையன் ஃப்ரோஷ் கூறினார். டிரம்ப் தனது அதிபர் பதவியை ஒரு விற்பனைக் கருவியாகப் பயன்படுத்தி தனது ஹோட…

  24. குரங்கு அம்மை நோய் ; அமெரிக்காவில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் அதிகரித்து வருவதன் காரணமாக பொது சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் இப்போது குரங்கு அம்மையும் உலக அளவில் பரவி வருகிறது. குரங்கு அம்மை நோயும் வைரசால் பரவும் நோய் என்பதால் கொரோனா போல் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்து வருகிறது. இதனால் உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. குரங்கு அம்மை ந…

  25. ருமேனியா மருத்துவமனை தீவிபத்து: குறைந்தது ஒன்பது பேர் உயிரிழப்பு! ருமேனியாவிலுள்ள மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்தில் நாட்டில் சுகாதார வசதிகளில் நடந்த மூன்றாவது கொடிய சம்பவம் இதுவாகும். தென்கிழக்கு துறைமுக நகரமான கான்ஸ்டன்டாவில் உள்ள மருத்துவமனையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் இந்த தீ சம்பவம் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து கூடுதல் தீயணைப்பு குழுக்களை வரவழைத்ததாக அதிகாரிகள் தெர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.