உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் தூக்கிலிடப்படும் வேளை அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அதனை படம் பிடித்தமை மற்றும் அவரை நிந்தித்தமை குறித்து ஈராக்கிய அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இவை தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டமை மத வன்முறையை மேலும் தூண்டும் அபாயம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்தே விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டதையும் அவர் அதிகாரிகளினால் நடத்தப்பட்டதையும் அறிந்த பின்னர் மொசுல் நகர சிறைச்சாலையொன்றில் சுன்னி முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். சில மெய்ப்பாதுகாவலர்கள் சதாமை நோக்கி கோஷமெழுப்பியுள்ளனர். இது பொருத்தமற்றது, இது குறித்த அரசாங்க விசாரணைகள் இடம்பெறுகின்றன என ஈராக்கிய பிரதமர் நூறி அல் - மலிக்கிய…
-
- 0 replies
- 880 views
-
-
இந்தோனேசிய விமானம் விழுந்து 90 பேர் பலி ஜனவரி 02, 2007 ஜகார்தா: இந்தோனேசியாவில் 102 பேருடன் சென்ற பயணிகள் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் 90 பேர் பலியாயினர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆடம் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த போயிங்747 விமானம் இந்தோனேசிய நேரப்படி நேற்று பிற்பகல் 1 மணிக்கு சுராபயா என்ற நகரிலிருந்து ஜாவாவில் உள்ள மனேடோ நகருக்குக் கிளம்பியது. 2 மணி நேரத்தில் அந்த விமானம் மனோடோவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டியும் விமானம் வந்து சேரவில்லை. மேலும், விமான தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் இரு நகரங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த விமானத்தில் 96 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்…
-
- 0 replies
- 615 views
-
-
வாழ்வு முழுவதும் தன் பிள்ளைகளுக்கு வழி காட்ட வேண்டிய ஒரு தாய் மூன்று பிஞ்சுகளை தவிக்கவிட்டுத் திடீரென தன் உயிரை மாய்த்துகொள்ள, ஆதரவாய் இருந்த பாட்டியும் அடுத்த ஒரு மாதத்தில் மரணத்தைத் தழுவ, ‘இனி தகப்பனை விட்டால் இந்தப் பிள்ளைகளுக்கு வேறு வழியில்லை...’ என்ற நிலையில் அவனும் தூக்கில் தொங்கினால்..? &இப்படியரு மரண சாபத்துக்கு ஆளாகியிருக்கும் அந்தக் குடும்பத்தை நினைத்தால், நெஞ்சுக்குழிக்குள் ஒரு பிடி நெருப்பை அள்ளிக்கொட்டியது போலத்தான் இருக்கிறது! தூத்துக்குடி&தாளமுத்து நகர் அருகேயிருக்கும் எம்.ஜி.ஆர். நகரில் நுழைந்து, பெரியவர் ஜெபமாலை வீட்டுக்கு வழி கேட்டால்... வார்த்தைகளில் சோகம் நிரப்பிதான் வழிகாட்டுகின்றனர். நாம் போனபோது, பேரப்பிள்ளைகளுக்கு சோறு ப…
-
- 0 replies
- 873 views
-
-
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் பாங்கொக் நகரில் புத்தாண்டுதின விழாக்களின் போது நடந்த தொடர் குண்டுவெடிப்புச்சம்பவங்களி
-
- 0 replies
- 1.1k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/01/blog-post.html
-
- 0 replies
- 873 views
-
-
அமெரிக்காவின் நோர்மன் விருது பெற்றுள்ள முதல் இலங்கையர் - இராமச்சந்திரன் குலசிங்கம் Monday, 01 January 2007 அமெரிக்கன் சொசைட்டி ஒவ் சிவில் எஞ்ஜினியர்ஸினால் (ASCE) வழங்கப்படுகின்ற மிகவும் கௌரவத்திற்குரிய நோர்மன் விருதினை (Norman Medal) இவ்வாண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கலாநிதி இராமச்சந்திரன் குலசிங்கம் பெற்றிருக்கிறார். பூகம்பங்கள் ஏற்படும்போது மண்படைகளின் செயற்பாடு எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பில் `ஜியோடெக்னிக்கல் அன்ட் ஜியோ என்வயர்மன்ரல் என்ஜினியரிங்' என்ற சஞ்சிகையில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்காகவே இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. கலிபோர்னியாவின் நீர்வளங்கள் திணைக்களத்தைச் சேர்ந்த எரிக் ஜே.மல்விக் மற்றும் கலிபோர்னிய பல்கலைக்கழ…
-
- 1 reply
- 1.1k views
-
-
பலூனில் பறந்து கொண்டே ராஜஸ்தான் ஜோடி திருமணம் ஜெய்ப்பூர் : ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ஜோடி பலுõனில் அந்தரத்தில் பறந்து கொண்டே திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.இப்போதெல்லாம் எதையும் வித்தியாசமாக சிந்திக்கும் எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. தரையில் கல்லயாணம் கேள்விப்பட்டு இருக்கிறோம். தண்ணீருக்குள்ளும் திருமணம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் இப்போது புதிதாக பலுõனில் திருமணம். லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக நடத்தப்பட்ட இந்த திருமணம் குறித்த சுவையான தகவல்கள் வருமாறு: ராஜஸ்தான் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் சுனில்(22) மற்றும் வந்தனா(22). சுனில் வங்கியில் பணியாற்றுபவர். வந்தனா தனியார் கல்வி நிறுவனத்தில் பயிற்சியாளராக பணிபுரிகிறார். இவ…
-
- 1 reply
- 968 views
-
-
கவிழ்ந்தது இந்தோனேசிய கப்பல் : ஏராளமானவர்கள் கடலில் மூழ்கி பலி ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 850 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் நேற்று முன்தினம் நடுக்கடலில் புயலில் சிக்கி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஏராளமானவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து இந்தோனேசிய கப்பல் படை அதிகாரி கலோனல் யன் சிமமோரா கூறியதாவது: மத்திய ஜாவா பகுதியான சுமராங்கிலிருந்து மத்திய கலிமன்தன் மாகாணத்திலுள்ள குமாய் துறைமுகத்துக்கு "செனோபட்டி' என்ற கப்பல் நேற்று முன்தினம் 850 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. நடுக்கடலில் பாவீன் தீவு அருகே சென்ற போது திடீரென்று சூறாவளி காற்று வீசியது. அதனால், நிலைகுலைந்த கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்த ஒன்பது பேர் …
-
- 0 replies
- 769 views
-
-
சென்னை: சென்னை சாலிகிராமத்தில் 11 வயது சிறுவன் அரவிந்த் கடத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 மாணவர்கள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் சிறுவனைக் கடத்தி பணம் கேட்டு பின்னர் அரவிந்தைக் கொலை செய்ததாக அந்த மூவரும் பேரும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை சாலிகிராமம் லோகையா காலனியைச் சேர்ந்த அரவிந்த் செவ்வாய்க்கிழமை இரவு கடத்தப்பட்டு அன்று இரவே கொடூரமாக கொலை செய்யப்பட்டு விருகம்பாக்கம் தொலைபேசி இணைப்பகத்திற்குப் பின்னால் உள்ள புதரில் போடப்பட்டான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் அரவிந்த்தைக் கொன்ற கொடூர நபர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். 15 தனிப்படைகள் அமை…
-
- 1 reply
- 1k views
-
-
சேலம்: மதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் வைகோவை நீக்கி சேலத்தில் நடந்து வரும் போட்டி மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பொதுச் செயலாளராக செஞ்சி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் எல்.கணேசன்செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டிய மதிமுக போட்டி பொதுக்குழு இன்று காலை கூடியது. சுமங்கலி கல்யாண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆட்கள் வர தாமதமானதால் 12.30 மணிக்குத் தான் தொடங்கியது. இதுவரை எல்.ஜியும் செஞ்சியும் காத்திருந்தனர். இக் கூட்டத்திற்கு விழுப்புரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் வந்திருந்தனர…
-
- 1 reply
- 2.1k views
-
-
அமெரிக்க நாயகி! அதிபர் தேர்தல் பரபரப்பு இப்போதே வந்துவிட்டது அமெரிக்காவில். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இமேஜ்&இராக் பிரச்னை, வெளியுறவுக் கொள்கை போன்றவற்றால் அதலபாதாளத்தில் சரிந்துள்ளது. இது, அமெரிக்க உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் வெட்டவெளிச்சமானது! இந்நிலையில், அடுத்த வருடம் நவம்பர் மாதம் 4&ம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்த லைக் குறி வைத்து, இப்போதே கன ஜோராக வேலை பார்க்கத் தொடங்கி விட்டது குடியரசுக் கட்சியின் எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சி! அக்கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு ஹாட்டாக அடிபடும் பெயர் ஹிலாரி கிளிண்ட்டன்! அமெரிக்க வரலாற்றில் அதிபர் பதவிக்காக ஒரு பெண்ணின் பெயர் பரிந்துரைக்…
-
- 0 replies
- 908 views
-
-
பெருமளவு நவீன ஆயுதங்களை அப்பாசுக்கு வழங்கியது எகிப்து வீரகேசரி நாளேடு பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸின் கரங்களை பலப்படுத்தும் வகையில் அவரது பத்தா அமைப்புக்கு ஒரு தொகை நவீன ஆயுதங்களை எகிப்து வழங்கியுள்ளது. . இஸ்ரேலுடன் இணைந்து பலஸ்தீன மிதவாத தலைவரை பலப்படுத்தும் வகையிலேயே இவ்வாயுதங்கள் வழங்கப்பட்டதாக எகிப்து தெரிவித்துள்ளது. இவ்வாயுதங்களுள் தன்னியக்க இயந்திர துப்பாக்கிகள், நவீனரக சினைப்பர்கள், றொக்கட் லோஞ்சர்கள் மற்றும் வெடிபொருட்கள் அடங்குவதாக இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்..
-
- 0 replies
- 918 views
-
-
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ. அவர்களைப்பற்றி ஒர் ஆய்வு. காலம் காலமாக எமது விடுதலை இயக்கத்துக்கும், தமிழ் தேசியத்துக்கும் ஆதரவாக பெரும் போராட்டங்களையும் நடத்தியவர். புலிகள் முத்திரை குத்தப்பட்டு அ.தி.மு.க ஆட்சியில் பொடா சட்டத்தின் மூலம் சிறை சென்று வந்த மாபெரும் மனிதர் அவர். இன்று அவருக்கு பெருந்தலையிடியாக இருப்பது அவரின் கட்சியில் ஏற்பட்ட பிளவாகும். அப்படிப்பட்ட பெருந்தலைவருக்கு இன்று பெருஞ் சோதனைக்காலமாகும். இதனால் இவருடைய முடிவு அ.தி.மு.க வில் தொடர்ந்து கூட்டாக இருப்பது நல்லதாக படுமா என்று உங்கள் அபிப்பிராயங்களையும் கூறுங்கள்.
-
- 0 replies
- 923 views
-
-
போட்டி மதிமுக பொதுக்குழு கூடியதுவைகோவை நீக்க தீர்மானம் டிசம்பர் 29, 2006 சேலம்: சேலத்தில் எல்.கணேசன்செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டிய மதிமுக போட்டி பொதுக்குழு இன்று காலை கூடியது. இதில் வைகோவை கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சேலம் சுமங்கலி கல்யாண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆட்கள் வர தாமதமானதால் 12.30 மணிக்குத் தான் தொடங்கியது. இதுவரை எல்.ஜியும் செஞ்சியும் காத்திருந்தனர். இக் கூட்டத்திற்கு விழுப்புரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் வந்திருந்தனர். அவர்களில் எத்தனை பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் என்பது தெரியவில்லை. திரளாக வந்தவர்களை போ…
-
- 0 replies
- 1k views
-
-
இந்திய_அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு மின்சார தேவை நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகம்தான். 1. இனி நாம் அணுபரிசோதனை செய்யவியலாது. பாக் கும் சினாவும் மேற்படி சோதனையில் முனனேறிவிடுவார்கள். நாம் பின்தங்க நேரிடும். நாட்டின் பாதுகாப்பு கேலிகுறி ஆகிவிடும். 2. அமெரிக்கா சட்டத்தின் படி நடக்கவிட்டால் அணுஉலைக்கான ஈடுபொருள் வழங்குவது நிறத்தப்படும்.மேலும் சேமித்து வைத்து ஈடுபொருளையும் திரும்ப கொடுத்துவிடவேண்டும். 3. செறிவூட்டபட்ட யூரேனியத்தை விற்ககூடாது. 4. 50 சதவிகித அணு உலைகள் உலக நாட்டின் பரிசோதனை வலையத்துக்குள் வந்துவிடும் 5. அமெரிக்கா ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் நாட்டின் நலம் பாதுகாப்பு ஆகிய…
-
- 0 replies
- 719 views
-
-
சிங்கூர் பகுதியில் டாடா கார் தொழிற்சாலை அமைக்க, மேற்கு வங்க அரசு விவசாய நிலங்களை, அவர்களின் விருப்பமில்லாமல் வற்புறத்தி பெற்றதாக கூறி, மம்தா உண்ணாவிரத பேராட்டத்தை ஆரம்பித்து இன்றோடு 26 நாளாக ஆகி விட்டது. அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி கொண்டு வருகிறது.இந்நிகழ்வில் குறிப்பிடதக்க அம்சம் என்னவென்றால், நிலமற்ற விவசாயிகளுக்காக போராடி அதானால் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிகட்டிலில் அமர்ந்திருக்கும் பொதுவுடைமை கட்சியினர், தொழில்அதிபர்க்கு சாதகமான போக்கினை மேற்கொள்வதும், முதலாளித்துவ சக்திகளுக்கு ஆதரவான பாஜக, திரினாமுல் கட்சிகள், விவசாயிகளுக்காக போராட்டாம் நடத்துவதும் வினோதமாக உள்ளது. மம்தா அவர்களின் உண்ணாவிரத்தை, ஒரு பொருட்டாக கருதாது போல். பெ…
-
- 7 replies
- 1.4k views
-
-
காஸ்ட்ரோவுக்கு சிகிச்சையளிக்க ஸ்பெயின் வைத்திய நிபுணர் கியூபாவுக்கு அவசர பயணம் Tuesday, 26 December 2006 கடும் உடல் நோயால் அவதியுற்றுவரும் கியூப ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவிற்கு சிகிச்சையளிப்பதற்காக ஸ்பெயினின் முன்னணி சத்திர சிகிச்சை நிபுணரொருவர் கடந்த வியாழக்கிழமை அவசரமாக கியூபா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் கியூப அரசாங்கம் வெளியிடவில்லை. ஜோஸ் லூயிஸ் கார்சியா என்ற அந்த சத்திர சிகிச்சை நிபுணர், புற்றுநோய், மற்றும் உள் அவயங்கள் தொடர்பாக சத்திர சிகிச்சைகளில் தேர்ச்சிப் பெற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதம் தமது பணியிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்ற காஸ்ட்ரோ தாம் மருத்துவ சிகிச்சைக்காக செ…
-
- 0 replies
- 678 views
-
-
புத்தரின் மறுபிறப்பென நம்பப்படும் இளைஞன் 9 மாதங்களின் பின் மீண்டும் தென்பட்டார் [27 - December - 2006] [thinakkural] புத்தரின் மறுபிறவி என்று சிலரால் நம்பப்பட்ட இளைஞன் ஒருவன் கடந்த 9 மாதங்களாக காணாமற்போய் பின்னர் மீண்டும் கிழக்கு நேபாளப் பகுதியில் காணப்பட்டதாக நேரில் கண்டவர் ஒருவரும் தொலைக்காட்சி சேவையொன்றும் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. நேபாளத் தலைநகர் காத்மண்டுவுக்கு 150 கிலோ மீற்றர் கிழக்கேயுள்ள பாரா மாவட்டத்தின் பில்லுவா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் ராம் பகதூர் பாம்ஜன் ( வயது 16) என்ற இந்த இளைஞனைக் கண்டதாக உள்ளூர் பத்திரிகையாளரான ராஜு சிரஸ்தா `ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். பாம்ஜன் இரட்ணபுரி கிராமத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
சதாமுக்கு 30 நாட்களில் தூக்கு பாக்தாத்: ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட துõக்கு தண்டனையை பாக்தாத் அப்பீல் கோர்ட் உறுதி செய்தது. தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அடுத்த 30 நாட்களுக்குள் அவருக்கு துõக்கு தண்டனை நிறைவேற்றப்படும். கடந்த 1982ம் ஆண்டு ஈராக் அதிபராக இருந்த நேரத்தில், துஜெய்ல் பகுதியில் 148 ஷியா பிரிவு முஸ்லிம்களை கொன்றதாக சதாம் <உசேன் மீது பாக்தாத் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வக்கீல்கள் படுகொலை மற்றும் நீதிபதிகள் மாற்றம் என பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி, கடந்த நவம்பர் 5ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சதாம் உசேன், சதாமின் சகோதரர் பர்…
-
- 77 replies
- 12.9k views
-
-
ஜெயகாந்தன், மனோரமாவுக்கு கலைஞர் விருது 26 டிசம்பர் 2006 பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன், திரைப்பட நடிகை மனோரமா மற்றும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் ஆகியோருக்கு 2006ம் ஆண்டிற்கான கலைஞர் விருது வழங்கப்பட உள்ளது. முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் அளிக்கப்படும் கலைஞர் விருதுகள் இந்த ஆண்டு இந்த மூவருக்கும் வழங்கப்படும் என அறக்கட்டளை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ஜனவரி மாதம் 1ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதி இந்த விருதுகளை வழங்குகிறார். இந்த விழாவுக்கு திமுக பொதுச் செயலாளரும் நிதி அமைச்சருமான க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். விருதுடன் பாராட்டுப் பத்திரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வ…
-
- 0 replies
- 1k views
-
-
நைஜீரியாவில் பெட்ரோல் குழாய் வெடித்து 500 பேர் பரிதாப பலி லாகோஸ்: நைஜீரியா லாகோஸ் நகரில் பெட்ரோல் குழாய் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.நைஜீரியாவில் உள்ள பெரிய நகரங்களில் லாகோஸ் நகரமும் ஒன்று. இங்கு பூமிக்கடியில் பெட்ரோல் குழாய் புதைக்கப்பட்டு அதன் மூலம் பெட்ரோல் கொண்டு செல் லப்பட்டு வருகிறது. இந்த குழாயின் ஒரு பகுதியை கொள்ளையர்கள் தகர்த்து பெட்ரோலை திருடி சென்றனர். அது முதல் அந்த இடத்தில் பெட்ரோல் கொட்டி கொண்டு இருந்தது. உடன் அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு பாத்திரங்களில் பெட்ரோலை பிடித்து கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர். அப் போது எதிர்பாராதவிதமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட் டது. பெட்ரோல் கொட்டிக் கொண்டிருந்த பகுதியில் …
-
- 1 reply
- 970 views
-
-
109 மணி நேரம் பரதம் ஆடிய இளைஞர்! டிசம்பர் 26, 2006 சேலம்: தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது ஸ்ரீதரன் என்ற இளைஞர் தொடர்ந்து 109 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்துள்ளார். வி.ஜட்டியல்லி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் பரதநாட்டியக் கலைஞராவார். நடனத்தில் புதிய சாதனை படைக்க திட்டமிட்டார். இதற்காக இடைவிடாமல் பரதம் நாட்டியம் ஆடி சாதனை படைக்க தீர்மானித்தார். இந்த சாதனை நடன நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி சேலத்தில் தொடங்கியது. 50 பேர் நடன நிகழ்ச்சியை பார்வையிட தனது நடனத்தை ஆரம்பித்தார் ஸ்ரீதரன். இடைவிடாமல் பரதம் ஆடிய அவர் 24ம் தேதி மாலைதான் தனது நடனத்தை முடித்தார். மொத்தம் 109 மணி நேரம் ஆடினார் ஸ்ரீதரன். ஸ்ரீதரனின் இந்த சாதனை நிகழ்ச்சியின் போது மொத்தம் 1,468 …
-
- 1 reply
- 1.1k views
-
-
தண்ணீர் தரமாட்டோம் எனக்கூற வெட்கமில்லையா? கேரள கம்யூனிஸ்டுகளுக்கு தா. பாண்டியன் கேள்வி "பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் குழு அமைத்து, கேரள முதல்வர் அச்சுதானந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்' என தேனியில் இந்திய கம்யூ., மாநில செயலாளர் பாண்டியன் பேசினார். தேனியில் இந்திய கம்யூ., பொதுக்கூட்டத்தில் தா. பாண்டியன் பேசியதாவது : பூமி அதிர்ச்சி வந்துவிடும், அணை உடைந்துவிடும், சுனாமி வந்துவிடும், இடி விழுந்து விடும் என கேரளாவில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறான அழிவை இயற்கை கொடுத்தால் எல்லோரும் பங்கிட்டுக் கொள்வோம். இயற்கை நமக்கு அளிக்கும் தண்ணீரைத் தரமாட்டோம் என சொல்லுவதற்கு கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட்ட…
-
- 1 reply
- 958 views
-
-
சென்னை: எனக்கு எம்.ஜி.ஆரின் ஆசி நிறைய உள்ளது என நடிகர் விஜய்காந்த் கூறினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பெரியார் மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மூவேந்தர் மக்கள் முன்னணி, ஜனநாயக முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 2,000 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தேமுதிகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில், நான் எம்.ஜி.ஆரை எனது குருவாக ஏற்று கொண்டிருக்கிறேன். அதனால் அவரது சீடனாகிய என்னை மக்கள் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைக்கின்றனர். அவரது ஆசி எனக்கு நிறைய உள்ளதால் தான் அவரது சிலை மட்டுமின்றி அவர் …
-
- 2 replies
- 1.3k views
-
-
சென்னை: மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் என்னை தாக்க திட்டமிட்டிருந்ததால் நான் அங்கு போகவில்லை என்று செஞ்சி ராமச்சந்திரன் கூறியுள்ளார். மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் இன்று கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் நடந்தது. முதலில் இந்தக் கூட்டத்தில் நாங்களும் கலந்து கொள்வோம் என்று எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் கூறியிருந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால் இருவரும் வரவில்லை. எல்.ஜி. தஞ்சையில் இருந்தார். செஞ்சியார் மட்டும் சென்னையில் இருந்தார். ஏன் கூட்டத்திற்குப் போகவில்லை என்பதை செய்தியாளர்களிடம் செஞ்சி ராமச்சந்திரன் விளக்கினார். அவர் கூறுகையில், அவைத் தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள்தான் இதுபோன்ற கூட்ட…
-
- 0 replies
- 851 views
-