உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26854 topics in this forum
-
துனிசியாவில்... நாடாளுமன்றத்தைக் கலைக்க, ஜனாதிபதி உத்தரவு! வடமேற்கு ஆபிரிக்க நாடான துனிசியாவில் நாடாளுமன்றத்தைக் கலைக்க, ஜனாதிபதி காய்ஸ் சயீது உத்தரவிட்டுள்ளார். அவருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை செல்லாததாக அறிவிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்ததைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். துனீசியாவில் பொதுமக்களின் கடுமையான போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டில் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்ட ஜனநாயக அரசாங்கம் அமைக்கப்பட்டது. எனினும், பொருளாதார நெருக்கடியையும் போராட்டங்களையும் காரணம் காட்டி, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி காய்ஸ் சயீது முடக்கினார். மேலும், அவருக்கு கூடுதல் அதிகாரம் அளிக…
-
- 0 replies
- 176 views
-
-
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம், நிலச்சரிவு ; 443 பேர் பலி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 443 ஆக அதிகரித்துள்ளது. கடற்கரை நகரமான டர்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதீத கனமழை பெய்ததால்,வீதிகள், மேம்பாலங்கள், துறைமுகம் உள்ளிட்ட கட்டமைப்புகள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். படங்கள்…
-
- 0 replies
- 176 views
-
-
காசா அமைதி திட்டம் ; மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சி Published By: Digital Desk 3 09 Oct, 2025 | 10:44 AM காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை (09) மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. பிரித்தானிய பிரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 0.77 சதவீதத்தால் குறைந்து 65.74 அமெரிக்க டொலராக பதிவாகியது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் சந்தையில் 0.88 சதவீதத்தால் குறைந்து 62 அமெரிக்க டொலராக பதிவாகியது. பாலஸ்தீனப் பகுதியில் இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தின் கீழ், காசா அமைதி திட்டம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான நீண்டகால ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும்…
-
- 1 reply
- 176 views
-
-
வெடித்துச் சிதறும் அபாயத்தில் கிழக்கு சீனா கடலில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல், சிரியாவின் இட்லிப் நகரில் அரசுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் பதினெட்டு பேர் பலி மற்றும் சரும குறைபாடுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கும் பிரிட்டன் மருத்துவமனை உள்ளிட்டவற்றை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 176 views
-
-
பாகிஸ்தானில் பலரை பணய கைதிகளாக வைத்திருந்த 33 தீவிரவாதிகளை கொன்று காவல் நிலையத்தை மீட்ட படையினர் 20 டிசம்பர் 2022 பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அந்நாட்டின் தொலைதூர பகுதியில் உள்ள காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரை பணய கைதிகளாக வைத்திருந்த தீவிரவாதிகள் 33 பேரைக் கொன்று அந்த இடத்தை மீட்டிருக்கிறார்கள். வட மேற்கு பன்னு மாவட்டத்தில் உள்ள இந்த காவல் வளாகத்தை அதனுள்ளே இருந்த பாகிஸ்தான் தாலிபன் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் அதனுள்ளே இருந்தனர். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிஃப் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், தீவிரவாதிகளால் பணயக்கைதி…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
16 வருட உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அரசியலில் நுழைய இரோம் ஷர்மிளா திட்டம் இந்தியாவின் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆர்வலர்களின் ஒருவரான இரோம் ஷர்மிளா, தான் 16 வருடமாக நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இரோம் ஷர்மிளா மேலும், தான் அரசியலில் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2000-ஆம் ஆண்டில், தனது சொந்த மாநிலமான மணிப்பூரில், பாதுகாப்பு படையினரால் 10 பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்துக்கு பிறகு, ஷர்மிளா தனது உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். மணிப்பூர் மற்றும் வேறு சில வட கிழக்கு இந்திய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சர்ச்சைக்குரிய ப…
-
- 0 replies
- 176 views
-
-
கிழக்கு திமோர் கடற்கரையில்... நிலநடுக்கம்: இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு, சுனாமி எச்சரிக்கை! கிழக்கு திமோர் கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கிழக்கு திமோருக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே பிளவுபட்டுள்ள திமோர் தீவின் கிழக்கு முனையில் இருந்து 51.4 கிமீ (32 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உயிரிழப்பு…
-
- 0 replies
- 176 views
-
-
ஜப்பானில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாரிய தீ விபத்து ; ஒருவர் பலி ; 26 பேர் காயம்! 27 Dec, 2025 | 04:21 PM ஜப்பானின் கன்மா மாகாணத்தில் உள்ள மினகாமி பகுதியில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பானில் புத்தாண்டு விடுமுறைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் 50 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். இ…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து Published By: DIGITAL DESK 3 18 JUN, 2025 | 10:49 AM இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள புளோரஸ் தீவில் 1,703 மீட்டர் உயமுடைய இரட்டை சிகரங்களைக் கொண்ட “மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி” (Mount Lewotobi Laki-Laki) எரிமலை செவ்வாய்க்கிழமை (18) முதல் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது. எரிமலை வெடித்து சிதறி வானத்தில் கோபுரம் போன்று 10 கிலோ மீற்றர் உயரத்துக்கு அதன் சாம்பல் வெளியேறியுள்ளது. இதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்க…
-
- 1 reply
- 175 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி வேலை நிமித்தமாக செல்கிறவர்களுக்கு அந்த நாட்டு அரசு ‘எச் 1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டும் தேவைக்கு அதிகமாக குவிந்து விட்டன. அதுவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட 5 நாட்களுக்குள் குவிந்து விட்டன. இந்த ஆண்டும் கடந்த ஆண்டுகளைப் போன்றே 65 ஆயிரம் ‘எச் 1 பி’ விசா வழங்கப்பட உள்ளது. மேலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படும்.தற்போது மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதை அடுத்து, இரு பிரிவிலும் கணினிவழி …
-
- 0 replies
- 175 views
-
-
உக்ரைனுக்கு எதிரான போரில்... ரஷ்யா 25வீத படைகளை, இழந்துள்ளது -அமெரிக்கா தகவல் உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவின் நிலை குறித்து அமெரிக்கா சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா 25வீத படைகளை இழந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பலம் குறைந்து வருகிறதென்றும் இந்த சமயத்தில் உக்ரைனுக்கு தேவையான இராணுவ உதவிகளை அனுப்பிவைப்போம் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது. அதேசமயம் உக்ரைனின் மரியுபோல் நகரத்தை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா, இன்றைக்குள் உக்ரைன் படைகள் சரணடையாவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277646
-
- 0 replies
- 175 views
-
-
இராணுவ நடவடிக்கையை... குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம், யாரும் ஏமாற வேண்டாம் என்கிறது அமெரிக்கா! கிவ் நகரின் மீது இராணுவ நடவடிக்கையை குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம் யாரும் ஏமாற வேண்டாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். திடீரென படைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளமையினையும் அவர் விமர்சித்துள்ளார். சிறிய அளவிலான படைகள் கிவ் நகரை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இது படைகளை இடம் மாற்றும் உத்தியே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைனின் ஏனைய பகுதிகளில் கடுமையான ம…
-
- 0 replies
- 175 views
-
-
Published By: DIGITAL DESK 3 19 JUN, 2025 | 05:32 PM வீசா விண்ணப்பதாரர்களுக்கு விரிவாக்கப்பட்ட திரையிடல் மற்றும் சரிபார்ப்பு தொடர்பில் விசேட அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், எங்கள் வீசா செயல்முறை மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பின் மிக உயர்ந்த தரங்களை நிலைநிறுத்துவதன் மூலம், எங்கள் நாட்டையும் எங்கள் குடிமக்களையும் பாதுகாக்க வெளிவிவகார அமைச்சு உறுதிபூண்டுள்ளது. அமெரிக்க வீசா என்பது ஒரு சலுகை மட்டுமே. உரிமை அல்ல. அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் உட்பட, அமெரிக்காவிற்கு அனுமதிக்கப்படாத வீசா விண்ணப்பதாரர்களை அடையாளம் காண எங்கள் விசா சோதனை மற்றும் சோதனையில் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். …
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,கான் யூனிஸ் நகரத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபுலோஃப், டாம் மெக்ஆர்தர் மற்றும் லூசி கிளார்க்-பில்லிங்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 14 ஜூலை 2024 காஸாவில் கடந்த சனிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களில் 141 பேர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 400 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதன் அறிக்கை கூறுகிறது. இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் ஒன்று, கான் யூனிஸுக்கு அருகிலுள்ள அல்-மவாசி என்ற இடத்தில் நடந்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் முகமது டெயிஃபை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
Published By: VISHNU 30 JAN, 2025 | 03:36 AM (நா.தனுஜா) அடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்வதற்கு அவசியமான தலைமைத்துவத்தை வழங்கத் தயாராகவிருப்பதாக கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடாவின் டொரன்டோ நகரில் 'ஹார்வெஸ்ட் ஒஃப் ஹோப்' எனும் மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பியெர் பொய்லிவ் மேற்கொண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொல…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். மூத்த மனிதக் குரங்கு பலி படத்தின் காப்புரிமைSAN DIEGO SAFARI PARK/ FACEBOOK உலகின் மூத்த மனிதக் குரங்குகளில் ஒன்றான `வைலா` தனது அறுபதாவது வயதில் இயற்கை எய்தி உள்ளது. சான் டியாகோ மிருகக் காட்சி சாலையில…
-
- 0 replies
- 175 views
-
-
லொறி ஓட்டுநர்களின் முற்றுகையை கைவிடுமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவு! அமெரிக்காவுடனான முக்கிய வர்த்தகத் தொடர்பை லொறி ஓட்டுநர்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவர கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடை உத்தரவு வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 19:00 மணிக்கு அமுலுக்கு வந்தது. ஒன்ராறியோவின் வின்ட்சரை மிச்சிகனில் உள்ள டெட்ராய்ட் நகருடன் இணைக்கும் அம்பாசிடர் பாலம் ஐந்து நாட்களாக முற்றுகையிடப்பட்டுள்ளது. கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான லொறி ஓட்டுநர்களின் போராட்டங்கள் மற்ற எல்லைக் கடக்கும் இடங்களிலும், ஒட்டாவாவிலும் நடந்து வருகின்றன. வின்ட்சர் நகரம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியா…
-
- 0 replies
- 175 views
-
-
ரஷ்ய- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்! ரஷ்யா தனது படைகளை உக்ரைனில் இருந்து விலக்கிக் கொள்ளவும், சண்டையை முடிவுக்குக் கொண்டுவரவும் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், ஏராளமான நாடுகளின் கண்டிப்பு மற்றும் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற அழைப்புக்கு மத்தியில் இந்த தகவல் வந்துள்ளது. இந்த பிரேரணையை 141 நாடுகள் ஆதரித்தன, 32 வாக்களிக்கவில்லை மற்றும் ரஷ்யா உட்பட ஏழு நாடுகள் எதிராக வாக்களித்தன. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதை வரவ…
-
- 0 replies
- 175 views
-
-
வொஷிங்டன் டிசி நகரில் துப்பாக்கி சூடு; இஸ்ரேலிய தூதரக ஊழியர் இருவர் உயிரிழப்பு! வொஷிங்டன் டிசி நகர மையத்தில் அமைந்துள்ள ஒரு யூத அருங்காட்சியகத்திற்கு வெளியே இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) தெரிவித்துள்ளார். தலைநகர் யூத அருங்காட்சியகத்தில் நடந்த ஒரு நிகழ்விலிருந்து வெளியேறும் போது பாதிக்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக சந்தேகிக்கப்படுகின்றது. அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை (21) இரவு 9:05 மணிக்கு எஃப் தெருக் வடமேற்கில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இது ஏராளமான சுற…
-
- 0 replies
- 175 views
-
-
இந்தோனேஷியாவில் பாரிய பூகம்பம்:இலங்கைக்கு பாதிப்பில்லை 18 NOV, 2022 | 08:48 PM இந்து சமுத்திரத்தில், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் சற்றுமுன் ஏற்பட்டுள்ளது. எனினும், இப்பூகம்பத்தினால் இலங்கை;கக பாதிப்பு எதுவுமில்லை என அனர்த்த முகாமைததவ நிலையம் தெரிவித்துள்ளது. சுமத்திரா தீவின் பேங்குலு நகருக்கு தென்மேற்கு திசையில் 202 கிலோமீற்றர் தொலைவில் 25 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பூகோளவியல் அளவையியல் மையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/140490
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
ஐ.நா. சபையின் அடுத்த பொதுச் செயலாளர் யார்? - போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் முன்னிலை: பெண் போட்டியாளர்கள் பின்னடைவு அந்தோனியோ குட்டெர்ஸ் ஐ.நா.சபையின் அடுத்த பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற் கான நடவடிக்கையில் போர்ச்சு கல் முன்னாள் பிரதமர் அந்தோ னியோ குட்டெர்ஸ் முன்னிலை வகிக்கிறார். இவர் ஐ.நா. தூதராக (அகதிகள்) 10 ஆண்டுகள் பணி யாற்றி உள்ளார். இப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. 11 பேர் போட்டி இந்நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக் கைகள் தொடங்கி உள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் வெளிப்படையான முறையில் பொதுச் செயலாளரை தேர்…
-
- 0 replies
- 175 views
-
-
பிரதமர் ட்ரூடோவின் அவசரகால அதிகாரங்களுக்கு ஒப்புதல் கனேடிய நாடாளுமன்றம் ஒப்புதல்! கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாரக்கணக்கான போராட்ட முற்றுகைகளை சமாளிக்க அவசரகால அதிகாரங்களை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை கனடாவின் நாடாளுமன்றம் ஆதரித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில், லிபரல் மற்றும் இடதுசாரி என்.டி.பி. ஆதரவுடன் 185 ஆதரவு வாக்குகள் பெற்று பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 151 எதிரான வாக்குகள் பதிவானது. கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி மற்றும் பிளாக் கியூபெகோயிஸ் அவசரநிலைக்கு எதிராக வாக்களித்தனர் வார இறுதியில், நாடாளுமன்ற மலை வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஒட்டாவாவில் உள்ள இறுதிப் போராட்டத் தளத்தை ப…
-
- 0 replies
- 175 views
-
-
3 கண்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்சிஓ உச்சி மாநாடு - சீனா உலகுக்கு சொல்லவரும் செய்தி என்ன? பட மூலாதாரம், Getty Images 28 நிமிடங்களுக்கு முன்னர் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு முந்தைய மாநாடுகளைவிட அதிக பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும். சீனாவின் வடக்கு கடலோர நகரமான தியான்ஜினில் செப்டம்பர் 31 முதல் செப்டம்பர் 1 வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டை நடத்தும். 23 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் நடக்கும் பல்வேறு தூதரக நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். இது எஸ்சிஓவின் வரலாற்றில் 'இதுவரை இல்லாத மிகப்பெரிய' உச்சி மாநாடு என்று விவரிக்கப்பட்டுள்ளது. எஸ்சிஓ உச்சி மாநாட்டை …
-
- 1 reply
- 175 views
- 1 follower
-
-
விஞ்ஞானத்தில் ஒரு பெரும் சாதனை! பரம்பரை நோய்களை தடுப்பதற்காக மனித கருவின் மரபணு திருத்தப்பட்டுள்ளது! ரஷ்ய அமெரிக்க உறவுகளின் எதிர்பார்ப்புகள் முடிவுக்கு வருகின்றன என்கிறது ரஷ்யா. புதிய தடைகள் சட்டமூலத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து வெளிவந்த கருத்து! மற்றும் கடந்தகாலத்தை பிரதிபலிக்கும் புகைப்படங்கள்! அலாஸ்கா புகைப்பட முன்னோடிகள் எடுத்த படங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 175 views
-
-
01 Oct, 2025 | 12:39 PM அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக நாட்டுக்குத் திரும்பிய நிலையில், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் திட்டம் குறித்து அவர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். டெல் அவிவ் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது, பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கவுள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த நெதன்யாகு, "பாலஸ்தீனத்தை தனியாக ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன்" என ஆவேசமாகக் கூறினார். நெதன்யாகு மேலும் கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அமைதி உடன்படிக்கை மற்றும் 20 அம்சத் திட்டத்திற்கு மட்டுமே இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது என்றார். அவர…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-