உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26650 topics in this forum
-
கொரோனா பொதுமுடக்கத்திலிருந்து வெற்றிகரமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது வியட்நாம். பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. மோசமான பொருளாதார அழிவுகளிலிருந்து நாடு வெளியேறிவிடும் எனும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பாடசாலைகள் திறக்கப்பட்டுவிட்டன. பாடசாலைக்கு வரும் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று வாசலிலேயே பரிசோதிக்கிறார்கள் சுகாதார அதிகாரிகள். வியட்நாமில் இதுவரை 288 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுளது. இதுவரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இவ்விஷயத்தில் வியட்நாம் அரசின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் விரிவாகவும் வெளிப்படையாகவும் செய்திகளை வெளியிடுகின்றன. அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளால்கூட சாதிக்க முடியாததை வியட்நாம் …
-
- 1 reply
- 606 views
-
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! by : Anojkiyan ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்படி, தற்போதைய நிலவரப்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 252,245பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 9,974பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 93பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த தொடர்ச்சியான பதினொரு நாட்களுக்கு பிறகு 10 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். அத்துடன், இதுவரையான காலப்பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தமாக 2,305பே…
-
- 1 reply
- 510 views
-
-
`அதிபரின் அழுத்தம்; அதிகரித்த உயிரிழப்புகள்!’ - ஒரே மாதத்தில் ராஜினாமா செய்த பிரேசில் அமைச்சர் பிரேசிலில் அதிகரித்து வரும் வைரஸ் பரவல் காரணமாக அங்குள்ள தேசிய சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கொரோனா வைரஸ் முதன்முறையாக சீனாவில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டு கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆகிவிட்டன. இந்தக் காலகட்டத்துக்குள் உலக நாடுகள் முழுமைக்கும் பரவிய வைரஸ் மனிதர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி பல லட்சக்கணக்கான மக்களின் உயிரையும் பறித்துவிட்டது. கடந்த சில மாதங்களாக மொத்த உலகமும் கொரோனா என்ற பெயரை முன்வைத்துத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. மக்களின் உடல்நலம், சுகாதாரம், வாழ்வு, பொருளாத…
-
- 0 replies
- 1k views
-
-
மறைக்கப்பட்ட உண்மை: சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் 6 லட்சத்திற்கு மேல்- அதிர்ச்சி தகவல் சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் 6 லட்ட்ச்த்திற்கு மேல் என உண்மையான விவரம் வெளியாகி உள்ளது இதனால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. பதிவு: மே 16, 2020 09:24 AM பெய்ஜிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உகான் நகரில்தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது. அங்கு வேகமாக பரவியதால், அந்த நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை முடக்கப்பட்டது. அங்கு கொரோனா தாக்கி ஏராளமானோர் பலி ஆனார்கள். என்றாலும் சீன அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் அந்த நாட்டில…
-
- 0 replies
- 539 views
-
-
ஊரடங்கு தளர்வால் ஏற்பட்ட விளைவு!' - எழுந்த வேகத்தில் மீண்டும் வீழ்ந்த தென் கொரியா? தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் வைரஸ் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸை மிகவும் சாதூர்யமாகக் கையாண்டு தங்கள் நாட்டையும் மக்களையும் காப்பாற்றிய நாடாக சர்வதேச அளவில் புகழப்பட்டு வந்தது தென் கொரியா. வைரஸ் கட்டுப்படுத்துதலில் அவர்களிடமிருந்து பிற நாடுகள் பாடம் கற்க வேண்டும் என ஐ.நாவும், உலக சுகாதார அமைப்பும் வெளிப்படையாக அறிவித்தன. இந்த அனைத்துப் புகழுக்கும் சவால் விடுக்கும் வகையில் தென் கொரியாவில் மீண்டும் கொரோனா வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. …
-
- 0 replies
- 469 views
-
-
சீனா மீது நடவடிக்கை தொடங்கியது?- சீனா முதலீட்டிலிருந்து பலநூறு கோடி டாலர்கள் பென்ஷன் நிதியை அமெரிக்கா வாபஸ் ஏற்கெனவே அமெரிக்கா-சீனா இடையே இருந்து வந்த வர்த்தகப் போர் பேச்சு வார்த்தைகள் மூலம் சரியாகாமல் இழுபறியில் உள்ள நிலையில் கரோனா பாதிப்பினால் இருநாடுகளின் உறவுகளில் பெரிய அளவில் விரிசல் விழுந்துள்ளது. இந்நிலையில் சீனாவில் அமெரிக்க பென்ஷன் நிதி முதலீடுகளாக உள்ள பலநூறுகோடி டாலர்கள் நிதியை வாபஸ் பெற ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. “பில்லியன்கள் அளவில் டாலர்கள், ஆம் பில்லியன்கள் ஆம் நான் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளேன்.” என்று உறுதிபடத் தெரிவித்தா அதே போல் அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் நாஸ்டாக்கில் சீன நிறுவனங்கள் லிஸ்ட் செய்யப்படுவதற்கு அனைத்து…
-
- 0 replies
- 632 views
-
-
உங்கள் எச்சரிக்கையை ஏற்க முடியாது!’ -மருத்துவ ஆலோசகருடன் நேரடியாக மோதும் ட்ரம்ப் அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வு அறிவிப்பது தொடர்பாக அதிபருக்கும் அந்நாட்டின் மருத்துவ ஆலோசகர் ஃபாஸிக்கும் இடையே வெளிப்படையான மோதல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 4.4 மில்லியன் மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு சுமார் 85,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றொருபுறம் கொரோனாவைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மில்லியன் கணக்கான மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதனால் நாட்டின் பொருளாதாரமும் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. …
-
- 1 reply
- 817 views
-
-
சமூக இடைவெளி விதிமுறைகளை அமுல்படுத்தும் எண்ணம் இல்லை: தென்கொரியா 0 by : Anojkiyan கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை சிறப்பான முறையில் கட்டுப்படுத்திய நாடு என பெயர் பெற்ற தென்கொரியா, மீண்டும் வைரஸ் தொற்றால் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. தென்கொரியாவின் சியோலில் இரவு விடுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72ஆக உயர்வடைந்துள்ளது. இதனால், தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில், இதன்தொடர்பாக கருத்து தெரிவித்த தென்கொரிய துணை சுகாதார அமைச்சர் கிம் காங் லிப், ‘புதிதாக கிருமித்தொற்று கண்டோரின் எண்ணிக்கை 50இற்க்…
-
- 0 replies
- 507 views
-
-
சீனா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க செனட்டில் மசோதா சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. அதிக அளவாக, அமெரிக்காவில் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து உரிய நேரத்தில் தகவல் அளிக்காமல், பெரும் நாசத்துக்கு காரணமாகி விட்டதாக சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.இந்நிலையில், அமெரிக்க செனட் சபையில், செல்வாக்குள்ள 9 உறுப்பினர்கள், சீனா மீது பொருளாதார தடை விதிக்கக்கோரும் மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.லிண்ட்சே கிரஹாம் என்ற செனட் உறுப்பினர் வடிவமைத்த ‘கொரோனா பொறுப்புடைமை சட்டம்’ என்ற இதை 8 செனட் உறுப்பினர்கள் வழிமொழிந்து கையெழுத்திட்டனர்.ம…
-
- 0 replies
- 493 views
-
-
ஜேர்மனியுடனான எல்லையை மீண்டும் திறக்க ஆஸ்திரியா திட்டம்! ஜேர்மனியுடனான எல்லையை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து பயணிகளுக்கு எல்லை மூடப்பட்ட பின்னர், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு குறித்த எல்லை திறக்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆஸ்திரியாவும் ஜேர்மனியும் தங்கள் எல்லையைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரிய சுற்றுலாத்துறை அமைச்சர் எலிசபெத் கோஸ்டிங்கர் தெரிவித்துள்ளார். மேலும், ஜேர்மனி அதிபர் அங்கலா மெர்கல் மற்றும் ஆஸ்திரிய ஜனாதிபதி செபாஸ்டியன் குர்ஸ் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) எல்லையை படிப்படியாக திறப்பதற்…
-
- 0 replies
- 433 views
-
-
ஆப்கானில் மகப்பேற்று மருத்துவமனையில் கொடூரத் தாக்குதல்: பிறந்த குழந்தைகள் உட்பட 16பேர் உயிரிழப்பு! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள மகப்பேற்று மருத்துவமனையில், துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில், இரண்டு பிறந்த குழந்தைகள், அவர்களின் தாய்மார், தாதியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லைகளற்ற மருத்துவ அறக்கட்டளையின் மருத்துவர்கள் நடத்தும் ‘மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ்’ மகப்பேற்று மருத்துவமனையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் சீருடை அணிந்த குறைந்தது மூன்று தாக்குதல்தாரிகள் மருத்துவமனைக்குள் நுழைந்து கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு மணிநேர நீண்ட போரா…
-
- 0 replies
- 413 views
-
-
சீனாவில் கரோனா 2வது அலை ஆரம்பமா?- 40 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஜிலின் நகரம் லாக்டவுன் சீனாவின் வடமேற்கு நகரமான ஜிலின், இதன் மக்கள் தொகை 40 லட்சமாகும். இங்கு கொத்தாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த நகரம் பகுதியளவில் மூடப்பட்டது, லாக்டவுனில் சென்றுள்ளது. போக்குவரத்து மற்றும் பள்ளிகள் முடக்கப்பட்டன. இதனையடுத்து கரோனா இரண்டாவது அலை பதற்றம் அங்கு ஏற்பட்டுள்ளது. ஜிலின் நகரில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. நகர்த்திலிருந்து வெளியேற விரும்புவோருக்கு கோவிட்-19 டெஸ்ட் நெகட்டிவ் என்று வந்தால்தான் வெளியேற முடியும். சினிமா தியேட்டர்கள், உள்ளரங்க ஜிம்கள், இண்டர் நெட் கஃபேக்கள், மற்றும் பிற பொழுதுபோக்கு அரங்குகள் மூடப்பட்டன. அனைத்து மருந்துக் கடைகளும் காய்ச்சல் …
-
- 2 replies
- 813 views
-
-
சீனாவிலிருந்து 20 ஆண்டுகளில் 5 கொள்ளைநோய்கள் , இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது: அமெரிக்கா கடும் தாக்கு ராபர்ட் ஓ’பிரையன், ட்ரம்ப் கடந்த 20 ஆண்டுகளில் சீனாவிலிருந்து 5 கொள்ளை நோய்கள் மக்களிடம் பரவி உலகை அச்சுறுத்தியுள்ளன. ஒருகட்டத்தில் இது நிறுத்தப்பட்டாக வேண்டும், என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் பரவலுக்கும் சீனாதான் காரணம், இதனால் உலகம் முழுதும் 250000 பேர் இறந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தையும் கடந்து விட்டது என்றார் ஓபிரையன் உலகம் நெடுகிலும் மக்கள் எழுச்சி பெற்று சீனாவிடம், ‘சீனாவிலிருந்து கிளம்பும் கொள்ளை நோய்களை இனியும் பொறுக்க மாட்டோம்’ என்று கூறும…
-
- 3 replies
- 1.1k views
-
-
`உலகின் உயரமான நிதியுதவிப் பெட்டி!’ - உணவு தேவைக்காக விற்கப்பட்ட புர்ஜ் கலீஃபா விளக்குகள் புர்ஜ் கலீஃபா கட்டடத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் வண்ண விளக்குகள் ஒவ்வொன்றும் விற்பனைக்கு என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குத் தேவையான நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ்... கடந்த சில மாதங்களாக உலக மக்கள் உச்சரிக்கும் ஒரு பெயராகிவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாகக் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் உலக நாடுகளின் பெருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் அசைத்து பார்த்திருக்கிறது. பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாகத்தான் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு தற்போத…
-
- 1 reply
- 979 views
-
-
சீனாவிடம் இந்த கேள்வியை கேளுங்கள்- பெண் செய்தியாளரிடம் சீறிப்பாய்ந்த டிரம்ப் – செய்தியாளர் மாநாட்டின் இடையில் வெளியேறினார் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பெண் செய்தியாளர் ஒருவருடன் தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமெரிக்க ஜனாதிபதி பின்னர் செய்தியாளர் மாநாட்டிலிருந்து இடைநடுவில் வெளியேறினார். ஏப்பிரல் 27 ம் திகதிக்கு பின்னர் வெள்ளை மாளிகையில் தனது முதலாவது செய்தியாளர் மாநாட்டினை நேற்று நடத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டுபிடிப்பதற்கான சோதனை நடவடிக்கைகளில் அமெரிக்காவில் உலகில் முன்னணியில் உள்ளது என தெரிவித்தார். இதன் பின்னர் சிபிஎஸ் செய்தியாளர் வெய்ஜா ஜியாங் சோதனை நடவடிக்கைகளில் உலகின் ஏனைய நா…
-
- 0 replies
- 807 views
-
-
நைட்டிங்கேல்: காலத்தைத் தாண்டிய ஒளி பள்ளிப் பாடப்புத்தகங்களின் வாயிலாக ‘கை விளக்கேந்திய காரிகை’ என்ற பெயரில் நமக்கு அறிமுகமானவரும், தாதியர்களுக்கு லட்சிய உருவமாக இருப்பவருமான ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது பிறந்த நாள் இன்று. ஒரு பெருந்தொற்று காலத்தில், கைகள் கழுவுவது உள்ளிட்ட அடிப்படையான பழக்கவழக்கங்கள் குறித்துப் பேசும் இந்நாட்களில், ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலை நினைவுகூர்வது இன்னமும் பொருத்தமானது. பொதுச் சுகாதாரத்தையும் சுத்தத்தையும் மேம்படுத்துவதன் மூலம், தொற்றுநோய்ப் பரவலைக் குறைக்க முடியும் என்பதைத் தனது செயல்பாடுகளின் வழியாக நிரூபித்துக் காட்டிய முதன்மையான நவீன தாதி அவர்தான். சுகாதாரமாக இருப்பதற்கும் நோய் குணமாவதற்கும் இடையிலான தொடர்புகள் அறியப்படவோ... ச…
-
- 0 replies
- 505 views
-
-
ஜேர்மனியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்! ஜேர்மனியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகும், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தாக்கம் அதிகமாக உள்ளதாக, பொது சுகாதார நிறுவனமான ரொபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. முடக்க நிலை தளர்த்தப்பட்டு சில நாட்களே கடந்துள்ள நிலையில், தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட ஒரு நபரின் மூலம் நோய்த்தொற்று தற்போது ஒருவருக்கு மேல் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடக்க நிலையை முழுவதுமாக நீக்கக்கோரி கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது. தொற்று வீதம் என்பது ஒரு நோயின் பரவலுக்கான திறனை மதிப்பிடுவதற்கான ஒரு வழியாகும். இது ஒரு நிலையான எ…
-
- 0 replies
- 332 views
-
-
கடந்த 24 மணித்தியாலத்தில் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கையை பதிவு செய்தது அமெரிக்கா! கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கையை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, அமெரிக்காவில் 750பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை நேற்று முன் தினம் உயிரிழந்த 1,422பேருடன் ஒப்பிடும் போது, அரைவாசியாகும். கடந்த நாட்களில் மிகப்பெரிய அழிவினை சந்தித்த அமெரிக்காவிற்கு, இந்த குறைந்த அளவிலான உயிரிழப்பு எண்ணிக்கை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் புதிததாக 20,329பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ள அமெரிக…
-
- 0 replies
- 306 views
-
-
2021 வரை வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் – ஊழியர்களுக்கு பேஸ்புக், கூகுள் அறிவிப்பு கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்ற நிலையில் பல நாடுகளில் உயிரிழப்புகள், பொருளாதார சரிவுகள் என கொரோனா வைரஸ் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீடித்துள்ளன. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கை அமுல்படுத்தி மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க கூறி வரும் நிலையில் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளன. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத…
-
- 0 replies
- 283 views
-
-
ஜேர்மனியை தொடர்ந்து பிரான்ஸிலும் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம்! ஜேர்மனியை தொடர்ந்து பிரான்ஸிலும் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் நாளை (திங்கட்கிழமை) தளர்த்தப்படவுள்ளன. இந்தநிலையில், நாளை முதல் பொதுப்போக்குவரத்துக்களில், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதேபோல, பொதுப் போக்குவரத்துக்களைக் குறிப்பிட்ட நேர எல்லைக்குள் உபயோகிப்பதற்கு, வேலைத்தள அத்தாட்சிப் பத்திரம் கட்டாய நடைமுறையாக்கபட்டுள்ளது. இதனை பின்பற்றாதவர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் 135 யூரோக…
-
- 3 replies
- 488 views
-
-
அமெரிக்காவில் உயிரிழப்புக்கள் 80 ஆயிரத்தைக் கடந்தன- ஐரோப்பிய நாடுகளில் வெகுவாகக் குறைவு! உலகம் முழுவதும் பெரும் மனித அழிவை ஏற்படுத்திவருகின்ற கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நேற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். இந்நிலையில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அமெரிக்காவில் உயிரிழப்புக்கள் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் பிரித்தானியா மற்றும் பிரான்ஸில் நேற்று உயிரிழப்புக்கள் சடுதியாகக் குறைந்துள்ளன. உலக நாடுகளில் நேற்று ஒரேநாளில் 88 ஆயிரத்து 997 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 41 இலட்சத்து ஆயிரத்து 772 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நேற்று மட்டும் 4 ஆயிரத்து 248 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 2 இலட்சத்து 80…
-
- 7 replies
- 703 views
-
-
பிரித்தானியாவில் 45 நாட்களுக்கும் மேலாக அமுலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பிரதமர் ஜான்சன் தளர்த்த இருப்பதாக வெளியான தகவலை அடுத்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய சூழலில் கொரோனா இறப்பு வீதம் குறைந்து வருவதால், பிரதமர் ஜான்சன் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுத்துள்ளார். ஆனால், அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான நடவடிக்கைகள் போன்று பிரதமர் ஜான்சனும் முன்னெடுக்க வேண்டாம் என பிரித்தானியர்களில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு கோரும் உல்லாசப்பிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் ஊரடங்கில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளை பெருமளவு தளர்த்தினால் இந்த ஆண்டு…
-
- 2 replies
- 480 views
-
-
இந்தியாவில் ஒரே நாளில் 4213 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 67 ஆயிரத்தை கடந்தது by : Dhackshala இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2206 பேர் இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 4213 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 97 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2206 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, …
-
- 0 replies
- 428 views
-
-
விமானப் பயணத்தில் முகக்கவசம் கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க விமானப் பயணிகள் முகக்கவசங்களை அணிவதை அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் பரிந்துரைத்துள்ளது. கோப்புப்படம்: எஸ்டி 11 May 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 May 2020 10:29 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), சில்க்ஏர், ஸ்கூட் சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் பயணத்தின்போது இனி கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும். பயணிகள் தங்களது சொந்த முகக் கவசங்களைக் கொண்டு வர வேண்டும். விமானத்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் பயணிகள் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும். விமானத்திற்குள் கழிவறைக்காக வரிசையில் நிற்கும்போதும் இந்த இ…
-
- 0 replies
- 509 views
-
-
எல்லையில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு இந்திய சீன எல்லையான சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் இன்று இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பதிவு: மே 10, 2020 15:05 PM சிக்கிம், பாகிஸ்தானைப் போல் மற்றொரு அண்டை நாடான சீனாவும் ஏதாவது ஒரு வகையில் இந்தியாவுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசல பிரதேசத்துக்கு சீனா அநியாயமாக உரிமை கொண்டாடி வருகிறது. சீன ராணுவம் அவ்வபோது இந்திய நிலைகளுக்கு ஊடுருவதும், இந்திய ராணுவம் எதிர்ப்பு தெரிவிக்கவும் திரும்பி செல்லும் சம்பவங்கள…
-
- 1 reply
- 629 views
-