Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஐ.நா.சபையில் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளது. காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவின் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஐ.நாவின் உதவியை பாகிஸ்தான் நாடி இருந்தது.ஐ.நாவின் உதவியை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்டும்படி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி கடிதம் எழுதி இருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று நாளை இந்த கூட்டம் கூட உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியா காஷ்மீரில் நிலவும் மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளும் விவாதிக்கப்பட உள்ளன. இது அரசு நடவடிக்கைகளில் பாகிஸ்தான…

    • 1 reply
    • 425 views
  2. ஹொங்கொங் எல்லையில் படையினரை குவிக்கும் சீனா- வெளியாகின செய்மதி படங்கள் ஹொங்கொங்குடனான தனது எல்லையில் சீனா தனது படையினரை குவிப்பதை காண்பிக்கும் செய்மதி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஹொங்கொங் எல்லையில் உள்ள சென்ஜென் என்ற நகரில் உள்ள விளையாட்டரங்கில் சீனாவின் இராணுவ வாகனங்கள் பெருமளவில் காணப்படுவதை செய்மதிப்படங்கள் காண்பித்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களிற்கு மேல் கடும் ஆர்ப்பாட்டங்களை சந்தித்து வரும் ஹொங்கொங்கிற்கு வடக்கே உள்ள இந்த நகரின் உதைபாந்தாட்ட அரங்கில் 100ற்கும் மேற்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் காணப்படுகின்றன. மக்சார் டெக்னோலஜிஸ் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் இந்த செய்மதி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை சிஎன்என்னும் உறுதி செ…

  3. தென் கொரியாவுடனான உறவு முறிந்தது – வட கொரியா! தென் கொரியாவுடனான உறவு முறிந்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் நேற்று(வியாழக்கிழமை) ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் முற்றிலும் தவறான நடவடிக்கைகளே இருநாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முறிவுக்கு காரணம் எனவும் வட கொரியா கூறியுள்ளது. இதற்கிடையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வட கொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆறாவது பரிசோதனையாக இது கருதப்படுகிறது. வட கொரியா சுமார் ஆ…

  4. லண்டன்: ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி, அரபு நாட்டு கப்பலான எம்.டி. ரியாவை இம்மாத தொடக்கத்தில் ஈரான் அதிகாரிகள் சிறைப்பிடித்தனர். இந்த கப்பலில் மொத்தம் 12 இந்தியர்கள் பணியாற்றி வந்த நிலையில், அவர்களும் கப்பலோடு சிறைபிடிக்கப்பட்டனர். இதனால், சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என ஈரானிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து 9 இந்தியர்களை ஈரான் அரசு விடுவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஈரான் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பலை கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து சிறைப்பிடித்தது. இதற்கு பதிலடியாக, பாரசீக வளைகுடாவில் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் கடந்த 19ம் தேதி சென்று கொண்டிருந்த ப…

    • 0 replies
    • 309 views
  5. லண்டனில், விம்பிள்டன் ரயில் நிலையத்தில் குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் நிதானம் இல்லாமல் ரயில் நிலையத்திற்குள் வந்த இளைஞர், 8 மற்றும் 9 நடைமேடைகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் சாவகாசமாக படுத்து உறங்கியுள்ளார். இதைக்கண்ட நடைமேடை பாதுகாவலர்கள், இளைஞரை எழுப்பி கண்டித்துள்ளனர். போதையில் எழுந்து நிற்க முடியாமல் திணறிய இளைஞர் நகர முடியாமல், மீண்டும் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. பின்னர், இளைஞனின் உடல் கருகி புகை வந்துள்ளது. தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் போக்குவரத்து பொலிசார் விரைந்துள்…

    • 0 replies
    • 610 views
  6. பாரீஸ்: பிரான்சின் விலைமதிக்க முடியாத புராதனச் சின்னமான 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவலாயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம். உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் பாரீசில் அமைந்திருந்தாலும், நோட்ரே டேம் தேவாலயமே நினைவுச் சின்னமாக போற்றப்பட்டது. 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும், ஐரோப்பிய கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகள் கொண்ட இந்த தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக, 12வது நூற்றாண்டில் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட…

    • 0 replies
    • 319 views
  7. சதீஷ் பார்த்திபன் கோலாலம்பூர், பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை ஜா…

  8. கன­டா­வா­னது மாகாண ரீதியில் புக­லி­டக் ­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சட்ட உத­வி­களை வழங்­கு­வ­தற்­காக 26.8 மில்­லியன் கனே­டிய டொலரை ஒதுக்­கீடு செய்­ய­வுள்­ள­தாக அந்நாட்டுப் பிர­தமர் ஜஸ்டின் ரூடோ நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை அறி­வித்­துள்ளார். புக­லி­டக்கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் சட்ட உதவி சேவை யில் மாகாண ரீதி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட துண்­டிப்பால் ஏற்­பட்­டுள்ள பாதிப்பை ஈடு­ செய்யும் முக­மாக மேற்­படி தொகை ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. கன­டாவின் அதிக தொகையைக் கொண்ட மாகா­ண­மான ஒன்­ராறியோவின் முத­ல­மைச்சர் டக் போர்ட் புக­லி­டக் ­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான மேற்­படி நிதி­யி­ட­லுக்கு மத்­திய அர­சாங்­கமே பொறு­ப்பு எனத் தெரி­வித்து…

    • 1 reply
    • 410 views
  9. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு ஊழல் வழக்கு விசாரணையில் கனடா சட்டத்தை மீறி உள்ளார் என்று நெறிமுறைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று கண்டுபிடித்துள்ளது. எஸ்.என்.சி லவாலின் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது செல்வாக்கு செலுத்த ஜஸ்டின் முயன்றதாக அந்த அமைப்பின் ஆணையர் கூறி உள்ளார். ஆணையரின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அதே சமயம் அவரது அறிக்கையின் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் அக்டோபரில் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் இந்த விசாரணை முடிவானது ஒரு பிரச்சனையாக ஜஸ்டினுக்கு உருவெடுக்கலாம். அது என்ன எஸ்.என்.சி லவாலின் விவகாரம்? எஸ்.என்.சி லவாலின் என்பது கனடா நாட்டைச் சேர்ந்த உலகின் மி…

    • 0 replies
    • 386 views
  10. ஜேர்மனியில் குட்டிகளை ஈன்ற மூன்றே நாள்களில் அவற்றைக் கொன்று தின்ற தாய்ச் சிங்கம்! ஜேர்மனியிலுள்ள லெய்ப்ஸிக் (Leipzig) விலங்கியல் பூங்காவில், தான் ஈன்ற இரண்டு குட்டிகளை பிறந்து இரண்டே நாட்களில் தாய் சிங்கம் கொன்று தின்றுள்ளது. கிகலி (Kigali) என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பெண் சிங்கம், முதன்முறையாகக் குட்டிகளை ஈன்றது. அந்த விலங்கியல் பூங்காவில், கடந்த 15 ஆண்டுகளில், சிங்கக் குட்டிகள் பிறந்தது இதுவே முதன்முறையாகும். அந்தக் குட்டிகள் இவ்வாறு உயிரிழந்தமை விலங்கியல் பூங்கா ஊழியர்களிடையே கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, கிகலி குட்டிகளை ஈன்றது. ஆரம்பத்தில் பெண் சிங்கம் குட்டிகளை நன்றாகவே பராமரித்துப் பாலூட்டியது. ஆனால், திடீரென…

  11. நிரந்தர குடியுரிமைக்கான ‘கிரீன்கார்ட்’ பெற அதிக வருமானம் தேவை – ட்ரம்பின் புதிய விதிமுறை அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்காக வழங்கப்படும் ‘கிரீன்கார்ட்டை’ பெறுவதற்கு அதிகபட்ச வருமானம் தேவை என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கு மட்டுமே’ என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வருகிறார். இதனால் அவரது நிர்வாகம் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே, சட்டப்பூர்வமான குடியேற்றத்தை கட்டுப்படுத்தவும் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி பணியில் ஈடு…

  12. தங்களது வீசாக்களை நீடிப்பதையோ அல்லது நிரந்தர வதிவிட உரிமையையோ வறுமையான சட்டரீதியான அகதிகள் பெறுவதை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகமானது கடினமாக்கவுள்ளது. உணவுதவி அல்லது அரச வீட்டுத் திட்டம் போன்ற அரச சலுகைகளில் ஓராண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருக்கும் அகதிகளே இலக்கு வைக்கப்படவுள்ளனர். எதிர்காலத்தில் குறித்த அகதிகள் அரச உதவியில் தங்கியிருப்பார்கள் என அரசாங்கம் தீர்மானித்தால் அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படவுள்ளது. இந்நிலையில், குறித்த மாற்றமானது தன்னிறைவுக் கூறுகளை மீண்டும் அமுல்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், மத்திர அரசாங்கப் பதிவேட்டில் நேற்று முன்தினம் பிரசுரிக்கப்பட்டுள்ள குறித்த மாற்றமானது, இவ்வாண்ட…

    • 0 replies
    • 414 views
  13. இணையத்தள வதந்திகளை நம்பி ஆற்று நீரை அருந்த வேண்டாம் – சுவிஸ் அரசு எச்சரிக்கை சுவிட்ஸர்லாந்தின் தலைநகர் பேர்ன்னுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலாப்பயணிகள், ஆரே நதியில் நீந்தும்போது அதன் நீரை அருந்த வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது. அண்மையில் சுவிட்ஸர்லாந்தின் சுற்றுலா இணையதளங்களில், பேர்னிலுள்ள ஆரே (Aare) நதியின் தண்ணீரை அப்படியே அருந்தலாம் என்றும், அது மிகவும் பாதுகாப்பானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், இணைய தகவல்களை நம்பி ஆற்று நீரை அருந்த வேண்டாம், அப்படி அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆரே (Aare) நதியில் தண்ணீர் மிக தூய்மையானதுதான், ஆனால் குடிக்கும் அளவிற்கு அது உகந்ததல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்…

  14. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கத்திக்குத்தில் ஈடுபட்ட நபர் அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டுள்ளார். உடலின் பல பாகங்களில் இரத்தத்துடன் காணப்படும் அந்த நபர் அல்லாஹூ அக்பர் என கோசமிடுவதையும் என்னை சுடுங்கள் என ஆவேசமாக கூச்சலிடுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை இந்த சம்பவம் குறித்து தகவல்வெளியிட்டுள்ள காவல்துறையினர் கிங்ஸ்வீதியில் உள்ள மரயொங்கிலிருந்து தங்களிற்கு 21 வயது பெண்மணியொருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நபர் ஒருவர் பாரிய கத்தியுடன் காணப்படுகின்றார் என தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் அந்த பகுதியில் பாரிய குழப்பநிலை உருவானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் அந்த நபர் 41 வயது பெண்மணியை கத்தியால் குத்தியுள்…

    • 0 replies
    • 376 views
  15. கடந்த இரண்டு வாரங்களிற்கு மேல் தாங்கள் தேடிவந்த இளைஞர்களின் உடல்களை மீட்டுள்ளதாக கனடாவின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய காவல்துறை அதிகாரியின் மகனையும் மகனின் அமெரிக்க நண்பியையும் கொலை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இளைஞர்களின் உடல்களையே மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நெல்சன் ஆற்றின் கரையில் உடல்களை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 19 வயது கம் மக்லியோட் பிரையர் ஸ்மெல்ஸ்கி ஆகியோரின் உடல்களையே காவல்துறையினர் மீட்டுள்ளனர். இவர்கள் கடந்த வாரம் வாகனமொன்றை திருடிய பகுதிக்கு அருகில் சடலங்களை காவல்துறையினர் மீட்டு;ள்ளனர். எனினும் இவர்கள் எப்படி உயிரிழந்தனர் என்பது குறித்த விபரங்களை அதிகார…

    • 1 reply
    • 928 views
  16. பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி முதலீட்டு நிர்வாகிகளில் ஒருவரான ஜெப்ரே எப்ஸ்டெய்னின் உடல், சனிக்கிழைமை சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தமது சிறை அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருத்துப்படுகிறது. 2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந…

  17. ஹொங்கொங்கில் ஜனநாயககோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காராகள் ஹொங்கொங்கின் சர்வதேச விமானநிலையத்திற்குள் மூன்று நாள் முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மதியம் முதல் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சர்வதேச விமானநிலையத்தின் உட்பகுதிக்குள் நுழைந்து வருகின்றனர். மேலும் விமானநிலையத்தில் காணப்படும் சுற்றுலாப்பயணிகளிற்கு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுபிரசுரங்களையும் வழங்கி வருகின்றனர். உலகின் மும்முரமான விமானநிலையங்களில்ஹொங்கொங் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த விமானநிலையத்தை பயன்படுத்துகின்றனர்.இதுதவிர 200 நகரங்கள…

    • 2 replies
    • 848 views
  18. சிரியாவில் மோதலில் 55 பேர் பலி…. August 11, 2019 சிரியாவில் அரச படைகளுக்கும் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது சிரியாவில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு புரட்சிப் படையினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கெதிராக அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றனஇந்நிலையில், சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹாமா, அலெப்போ மற்றும் லடாகியா மாகாணங்களில் செயல்பட்டு வரும் போராளி குழுக்களுக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது இந்த மோதலில் படைவீரர்க…

  19. ஒக்டோபர் 31 ல் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் – பிரதமர் 2016 பிரெக்ஸிற் வாக்கெடுப்பை நாடாளுமன்றம் மதித்து அதன் பிரகாரம் ஒக்டோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் இராஜினாமா செய்வீர்களா என்ற கேள்விக்கு நேற்று (வியாழக்கிழமை) பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அந்தவகையில் ஒக்டோபர் மாத இறுதியில், ஒரு ஒப்பந்தத்துடன் அல்லது ஒப்பந்தம் இல்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை வெளியேற்றுவதாக பிரதமர் ஜோன்சன் உறுதியளித்துள்ளார். அத்தோடு ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிற்றை நிறுத்த முயற்சிப்பதாக சப…

    • 1 reply
    • 468 views
  20. வடகொரியா மேலும் இரண்டு அடையாளம் தெரியாத ஏவுகணைகளைப் பரிசோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த செயற்பாடு அண்மைய வாரங்களில் இடம்பெற்ற 5ஆவது ஏவுகணை பரிசோதனையாகும்.தென் ஹம்ங்யொங் மாகாணத்தின் கிழக்கு நகரமான ஹம்ஹங்கில் வைத்து ஜப்பான் கடற்பரப்பை நோக்கி இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வடகொரியத் தலைவர் கிம் ஜோன் அன்னிடமிருந்து தான் மிகவும் சிறந்த ஒரு கடிதத்தை பெற்றுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது. அமெரிக்க மற்றும் தென்கொரிய கூட்டு இராணுவ பயிற்சி தொடர்பில் கிம் ஜோன் அன், மகிழ்ச்சியற்றிருந்தார் என்றும் ட்ரப்ம் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tami…

    • 2 replies
    • 414 views
  21. ரொறன்ரோவில் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்! ரொறன்ரோவில் அண்மைக் காலமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருவதாக, ரொறன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சௌன்டர்ஸ், தெரிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் ரொறன்ரோவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், 11 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. அவற்றுள்ள 33 சதவீத சம்பவங்கள் ரொறன்ரோ நகரின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், அனேகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரவு வேளைகளிலேயே இடம்பெறுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. http://athavannews.com/…

  22. பெண்கள் கத்தி வைத்திருக்கும் குற்றங்கள் அதிகரிப்பு இங்கிலாந்தில் பெண்கள் கத்தி வைத்திருக்கும் குற்றங்கள் 2014 முதல் அதிகரித்துள்ளதாகவும் ஒவ்வொரு ஆண்டும் இக்குற்றம் 10% அதிகரித்து வருவதாகவும் பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2018 ஆம் ஆண்டில் இவ்வகையான 1,509 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றங்கள் 73% அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. பெண்களை பொலிஸார் தடுத்து நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், சில பெண்கள் கும்பல்களுக்காக ஆயுதங்களை எடுத்துச் செல்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. 2014 மற்றும் 2018 க்கு இடைப்பட்ட காலத்தில் பெண்கள் கத்தி வைத்திருக்கும் குற்றங்கள் 5,800 க்கும் அதிகமாகப் பதிவாகியு…

  23. இந்தோனிசியத் தலைநகரம் போர்னியோவுக்கு மாற்றப்படுகிறது இந்தோனேசியாவின் தலைநகரம் ஜகார்த்தாவிலிருந்து போர்னியோவுக்கு மாற்றப்படும் என்று ஜனாதிபதி ஜொகோ விடோடோ இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். எங்கள் நாட்டின் தலைநகரம் போர்னியோ தீவுக்கு நகரும் என்றும் இந்த இடம் மத்திய கலிமந்தன், கிழக்கு கலிமந்தன் அல்லது தெற்கு கலிமந்தனில் அமையலாம் என்று ஜொகோ விடோடோ தனது ருவிற்றரில் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்த அனைத்து அம்சங்களும் ஆழமாக ஆய்வு செய்யப்படுகின்றன. இது எங்கள் நாட்டின் எதிர்காலம் பற்றிய சரியான முடிவு. அடுத்த 10, 50, 100 ஆண்டுகளுக்கு தேசத்திற்கும் மாநிலத்திற்கும் இம்முடிவினால் நன்மை கிடைக்கும் என்றும் விடோடோ கூறியுள்ளார். இந்த நடவடிக்கை நீண்ட காலமாகப…

  24. ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தடுக்க கூகுள் சதி – ட்ரம்ப்! ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் பழமைவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக ட்ரம்ப் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் தனக்கு எதிராகவும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார். இந்த நிலையில், கூகுள் நிறுவனத்திலிருந்து கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட கெவின் கெர்னெகீ அண்மையில் தனியார் தொலை…

  25. அணுவாயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருட்டு – வடகொரியா மீது புதிய குற்றச்சாட்டு! வட கொரியா தனது அணுவாயுத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை பெறுவதற்காக, இணைய திருட்டில் ஈடுபட்டு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் கிரிப்டோகரன்சி எனும் மின்னணு பணத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் இரண்டு பில்லியன் டொலர்களை வடகொரியா திருடியுள்ளதாக அந்த அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான 35 இணைய தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரித்து வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வௌியாகியுள்ளன. கடந்த இரண்டு வாரங…

    • 1 reply
    • 429 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.