Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் – பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு Mano ShangarNovember 26, 2025 12:31 pm 0 ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியை மொஸ்கோவில் சந்திக்க தனது சிறப்பு தூதுவருக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். முன்னதாக புதிய வரைவு ஒப்பந்தம் குறித்து ரஷ்யாவிடம் இன்னும் ஆலோசனை நடத்தப்படவில்லை ரஷ்ய தரப்பு தெரிவித்திருந்தது. மேலும், திட்டத்தில் முன்வைக்கப்படும் திருத்தங்களை ஏற்காமல் போகலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த…

  2. பட மூலாதாரம், BBC, Getty Images கட்டுரை தகவல் நவின் சிங் கட்கா, அன்டோனியோ குபேரோ & விஷுவல் ஜர்னலிசம் குழு பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெரும்பாலும், உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசானின் நுழைவாயில் என்று விவரிக்கப்படும் வடக்கு பிரேசிலின் பெலெம் (Belém) நகரில்தான் இந்த ஆண்டின் ஐ.நா. காலநிலை மாநாடு (COP30) நடைபெற்றது. இது, பூமியை வெப்பமாக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தைப் பாதுகாப்பான வரம்புக்குள் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை எட்டிய பாரிஸ் காலநிலை உச்சி மாநாடு நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதால் இந்த இடம் ஒரு முக்கியமான குறியீடாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த முயற்சிகள் இன்னும் பலனளிக்கவில்லை. ஏனெனில் வாயுக்கள் வெளியேற்றம் தொடர…

  3. 25 Nov, 2025 | 01:38 PM அவோராகி அல்லது மவுண்ட் குக் என அழைக்கப்படும் நியூசிலாந்தின் மிக உயரமான மலையில் இருந்து விழுந்து இரண்டு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 3,724 மீட்டர் உயரமுள்ள மலையில் ஏறிய நான்கு பேரில் இருவர் உயிரிழந்தனர். திங்கட்கிழமை இரவு அவசர சேவைகளைத் தொடர்பு கொண்ட பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஹெலிகாப்டர் மூலம் மற்றைய இருவரும் காயங்கள் ஏற்படாமல் மீட்கப்பட்டனர். பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, உயிரிழந்த மலை வீரர்களின் சடலங்கள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன. சடலங்கள் மீட்கும் பணி தற்போது “கடினமான ஆல்பைன் சூழலில்” நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தின் தென் தீவு வரை நீண்டு இருக்கும் தெற்கு ஆல்ப்ஸின் மீது உயர்ந்து நிற்கும் …

  4. 12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்தது எரிமலை ; இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவும் சாம்பல் 25 Nov, 2025 | 11:22 AM கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பா நாட்டின் அபார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) ஹேலி குப்பி என்ற எரிமலை 12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை எரித்திரியா நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளது. ஹேலி குப்பி எரிமலை கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளாக எந்தவித வெடிப்பும் இன்றி அமைதியான இருந்துள்ளது. இந்நிலையில், திடீரென வெடித்து சிதறி எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பால் லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பா…

  5. 24 Nov, 2025 | 02:39 PM லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு முக்கிய இராணுவ தளபதி ஹெய்தம் அலி தபதாபாய் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெய்ரூட்டின் தெற்கு புறநகரான ஹாரெட் ஹ்ரெய்க் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த ஐந்து பேரில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதப் பிரிவின் தலைமை அதிகாரியாக செயற்பட்ட ஹெய்தம் அலி தபதாபாயும் ஒருவராவார். மேலும் குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தாக்குதலில் 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 2024 நவம்பர் மாதம் இடைநிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் இஸ்ரேல் கொன்…

  6. அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியைத் தாக்கியது ஃபினா சூறாவளி ; ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 04:19 PM அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சனிக்கிழமை இரவு முழுவதும் வெப்பமண்டல ஃபினா சூறாவளி கடுமையாக தாக்கியதால் மரங்கள், போக்குவரத்து மின் விளக்குகள் வீழ்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. அத்தோடு, சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவுஸ்திரேலியாவின் வடக்குப் பிராந்தியத்தின் கரையோரம் பல நாட்கள் நீடித்த வெப்பமண்டல சூறாவளி ஃபினா, 3 ஆம் வகை சூறாவளியாக வேகமாக வலுவடைந்ததன் பின்னர் பல நாட்கள் நீடித்துள்ளது. சனிக்கிழமை இரவு, பரபரப்பான டார்வின் நகருக்கும…

  7. அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை! ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை ஏற்க மறுத்தால் மேலும் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 4 ஆண்டுகளை எட்ட உள்ள நிலையில் இப்போரை நிறுத்த உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடவில்லை. இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரடியாக அழைத்து போரை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆன…

  8. 22 Nov, 2025 | 10:56 AM நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆயுதக்குழுவினர் 215 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். சம்பவம் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை நடைபெற்றது. மாணவர்கள் கடத்தப்பட்ட விவகாரத்துக்குப் பின், நைஜீரிய பாதுகாப்பு படைகள் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுதியுள்ளனர். பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடத்தப்பட்டவர்களைத் தேடி வனப்பகுதிகளில் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்டவர்களில் 7 முதல் 10 வயது குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தையடுத்து, பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தக் கடத்தல் சம்…

  9. மிஸ் யுனிவர்ஸ் 2025: அழகி பட்டத்தை வென்றார் மெக்சிக்கோவின் பாத்திமா போஷ் 22 Nov, 2025 | 01:26 PM மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா போஷ் 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டி, 74 ஆவது ஆண்டாக, தாய்லாந்தில் உள்ள இம்பாட் சேலஞ்சர் ஹால் இல் நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இதில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விக்டோரியா கஜேர் தீல்விக்கிடம் இம்முறை அழகி பட்டத்தை வென்ற மெக்சிக்கோவின் பாத்திமா போஷ் கிரீடத்தைப் பெற்றுக்கொண்டார். தாய்லாந்தின் வீனா பிரவீனர் சிங் இரண்டாம் இடத்தை பிடித்தார். பாத்திமா போஷின் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன…

  10. Published By: Digital Desk 3 21 Nov, 2025 | 12:59 PM மத்திய வியட்நாமில் வார இறுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணி தொடர்வதாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, 52,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அரை இலட்சம் வீடுகள் மற்றும் வணிக் நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி 1.5 மீற்றரை கடந்துள்ளது. சில இடங்களில் 1993 ஆம் ஆண்டின் அதிகபட்ச வெள்ள உயரமான 5.2 மீட்டரையும் கடந்ததுள்ளதாக கூறப்படுகிறது. வியட்நாமின் கடலோர நகரங்களான ஹோய் ஆன் மற்றும் நா ட்ராங் ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்…

  11. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, துபையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் கண்காட்சி நிகழ்வின்போது தேஜஸ் விமானம் (நவம்பர் 20ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்) 24 நிமிடங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) துபையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் இன்று (நவம்பர் 21) பிற்பகல் விபத்திற்குள்ளானது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:10 மணியளவில் பார்வையாளர்கள் முன்னிலையில் வான் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இந்திய விமானப் படை, இந்த விபத…

  12. ஜி 20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை – USA உறுதி! தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முதல் நவ.23ம் திகதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது எனவும் தென் ஆப்ரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவை பற்றி எதிர்மறையாக பேசுகிறார் எனவும் இதனை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட எங்களது குழுவினர் ஏற்கவில்லை எனவும் இதனால் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது எனவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். இதேவேளை, ஏற்கனவே, ”தென் ஆ…

  13. கனடா- பிரம்டன் நகரசபை தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்துள்ளது. பிரம்டன் நகரில் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் முற்றம் போன்ற தாயக சார்ப்பு நகர்வுகள் இடம்பெற்ற நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு வந்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் நாளை நவம்பர் 21 ஆம் திகதி காலை 9.30 க்கு பிரெம்ரன் நகரமுதல்வர் பற்றிக் பிறவுண் (Patrick Brown) தலைமையில் கென் வலன்ஸ் சதுக்கத்தில் (Ken Whillans Square) உள்ள கொடிக்கம்ப முற்றத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்படும் என பிரம்டன் நகர சபை அறிவித்துள்ளது. தமிழீழத் தேசியக் கொடி முன்னதாக தமிழீழத் தேசியக் கொடி நாளை அங்கீகரித்து பிரம்டன் நகர சபை சுற்றுநிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தமது விடாமுயற்சி மற்றும் முன்னகர்வுகளால் தமிழீழத் தேசியக் கொடி ந…

  14. 20 Nov, 2025 | 12:15 PM உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைக் கொண்டு நடத்திய பாரிய தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா 476 ட்ரோன்கள் மற்றும் 48 ஏவுகணைகளை பிரயோகித்து உக்ரைனின் மேற்கு நகரான டெர்னோபிலில் (Ternopil) உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை நோக்கித் தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு, 93 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்களில் 18 பேர் சிறுவர்கள் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரஷ்ய X-101 குரூஸ் ஏவுகணைகளே இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் விமானப் படையினர் கூறுகின்றனர். ரஷ்யாவால் ஏவப்பட்ட 476 ட்ரோன்கள் மற்றும் 48 ஏவுகணைகளில் 442 ட்ரோன்கள்…

  15. இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை! நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றான செமெரு எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிகாரிகள் 900க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதுடன், 170 மலையேறுபவர்களை வியாழக்கிழமை (20) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை புதன்கிழமை 10 முறை வெடித்து, பாரிய சாம்பல் புகைகளை வான் நோக்கி வெளியிட்டது. பாறையின் சரிவுகளில் 13 கிலோ மீற்றர் வரை எரிமலைக் குழம்புகள் வழிந்தோடியதைத் தொடர்ந்து எச்சரிக்கை நிலை மிக உயர்ந்த அளவில் பராமரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், கிழக்கு ஜாவாவின் மீட்பு நிறுவனம் வெளியேற்றத்திற்கு உதவ நூற்றுக் கணக்கான பணியாளர்களை அனுப்பியது. எரிமலைக்கு அருகில் வசிக்கும் 956 பேர் ஏற்கனவே பாட…

  16. நைஜீரியாவில் 25 பாடசாலை மாணவிகள் கடத்தல். நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு எதிரான தாக்குதல்கள், கடத்தல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதில், சில குழுக்கள் அங்குள்ள வெளிநாட்டினரையும், பாடசாலைப் பிள்ளைகளையும் கடத்தி பணப்பறிப்பிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கெப்பி மாநிலத்தின் உயர்நிலை பாடசாலை விடுதியில் இருந்து (17) அதிகாலையில் சுமார் 25 மாணவிகளை ஆயுதம் ஏந்திய குழுவொன்று கடத்தி சென்றுள்ளது. இச்சமயம் பாடசாலை மீது தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்கள் அங…

  17. இராஜதந்திர மோதல் ; ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்யும் சீனா Published By: Digital Desk 3 19 Nov, 2025 | 03:55 PM இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்து வருவதால், ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் சீனா மீண்டும் தடை செய்யும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பசிபிக் கடலில் விடப்பட்டுவரும் புக்குஷிமா அணு நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட நீரை மேலும் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சீனா ஜப்பானுக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து, சீனாவால் ஜப்பான் கடல் உணவுகளுக்கு மீண்டும் இறக்குமதி தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தடை நடைமுறைக்கு வரும் நிலையில், பீஜிங் –டோக்கியோ இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. ஜப்பா…

  18. 18 Nov, 2025 | 06:33 PM பிரான்ஸிடமிருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் ஒப்பந்தத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதன் மூலம் தனது நாட்டின் வான்பாதுகாப்பை மேலும் பலப்படுத்த முடியும் என உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் தற்போதும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் செயற்படுகின்றன. அந்நாடுகளின் ஆயுத விநியோகம் மற்றும் பொருளாதார உதவியால் உக்ரைன் தொடர்ந்து போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்நிலையில், அமெரிக்க…

  19. ஜப்பானில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 கட்டிடங்கள் தீக்கிரை! தெற்கு ஜப்பானிய கடலோர நகரமான ஒரு பகுதியில் 170க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் எரிந்தும் இன்னும் முழுமையாக அணையவில்லை என்று தேசிய தீயணைப்பு நிறுவனம் புதன்கிழமை (19) தெரிவித்துள்ளது. டோக்கியோவிலிருந்து தென்மேற்கே சுமார் 770 கிமீ (478 மைல்) தொலைவில் உள்ள ஒய்டா நகரின் சாகனோசெக்கி மாவட்டத்தில் சுமார் 175 குடியிருப்பாளர்கள், செவ்வாய்க்கிழமை மாலை 5:40 மணியளவில் (0840 GMT) தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரகால தங்குமிடத்திற்கு ஓடிவிட்டதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒருவர் இன்னும் காண…

  20. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் நோபெர்டோ பரெதஸ் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லத்தீன் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கடல் பகுதிக்கு அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் வந்தடைந்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவுக்கு இடையிலான அதிகரிக்கும் பதற்றத்தில் ஒரு திருப்புமுனையாகும். 1989 பனாமா மீதான படையெடுப்புக்கு பிறகு, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் பெரிய அளவிலான நடவடிக்கையை இது குறிக்கிறது. மூன்று தசாப்தங்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை மானுவல் நோரிகா எதிர்கொண்டதைப் போல இப்போது வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். அந்த குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறு…

  21. 18 Nov, 2025 | 04:41 PM ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ள ட்ரம்ப், “குடியரசு கட்சி எம்.பிக்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான சட்ட மசோதாக்களை தாக்கல் செய்துகொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும். இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்கச் சொல்லியிருக்கிறேன்” என்றார். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதிய…

  22. இங்கிலாந்தில் ஆதரவை இழக்கும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்! இங்கிலாந்து பிரதமர் (Keir Starmer ) கீர் ஸ்டார்மரின் தலைமை மற்றும் வரவிருக்கும் வரவு செலவு திட்டம் குறித்து இங்கிலாந்தில் அரசியல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது வாக்காளர்களின் விருப்பங்களை மீறியும் ஸ்டார்மர் அடுத்த 2029 ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தொழில் கட்சியினரை வழிநடத்தப் போவதாக வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, ஸ்டார்மரை ஆதரித்த வாக்காளர்களில் சுமார் 23% பேர் அவர் தற்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் வரவுசெலவு திட்டம் மற்றும் மே மாதத் தேர்தல்கள் அவரது புகழுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும், பல விமர்சனங்கள் எழுந்து…

  23. இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு! இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து பெறுபவர்களுக்கு, நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று புதிய திட்டத்தை உள்துறை செயலாளர் Shabana Mahmood அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிய படகுகளின் வழியாக நடக்கும் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின் பகுதியாக இந்த பெரிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தற்போது அகதிகள் ஐந்து ஆண்டுகள் அந்தஸ்துடன் தங்கி, பின்னர் Indefinite Leave to Remain — அதாவது நிரந்தரமாக குடியிருக்கும் அனுமதிக்காக விண்ணப்பிக்க முடியும். ஆனால் புதிய திட்டத்தின் கீழ் — அந்த ஆரம்ப காலம் ஐந்து ஆண்டில் இருந்து இரண்டு-அரை ஆண்டுகளாக குறைக்கப்படும். அந்த காலம் முடிந்ததும், அகதி அந்த…

    • 5 replies
    • 337 views
  24. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் கோப்புப் படம் கட்டுரை தகவல் ஜேக் க்வோன் சியோல் கேவின் பட்லர் சிங்கப்பூர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவுடன் இணைந்து அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டும் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாகத் தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. இந்த "தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு" அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், எரிபொருள் ஆதாரங்களில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதாகவும் வெள்ளை மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஒப்பந்தம் தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது. அணு ஆயுதம் தாங்கிய வட கொரியா மற்றும் மேற்கில் …

  25. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அடால்ஃப் ஹிட்லர் கட்டுரை தகவல் டிஃப்பனி வெர்தைமர்‎ 3 மணி நேரங்களுக்கு முன்னர் அடால்ஃப் ஹிட்லரின் ரத்த மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ ஆய்வு, அவரது வம்சாவளி மற்றும் உடல்நிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச நிபுணர்கள் குழு, அவரது ரத்தக் கறை படிந்த பழைய துணியைப் பயன்படுத்தி கடினமான விஞ்ஞான பரிசோதனைகளை மேற்கொண்டது. இதில், ஹிட்லருக்கு யூத வம்சாவளி இருந்ததாகப் பரவிய வதந்தி உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டது. அதோடு அவருக்கு பாலியல் உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கும் ஒரு மரபணுக் கோளாறு இருந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஹிட்லருக்கு சிறிய ஆணுறுப்பு இருந்ததா அல்லது ஒரே ஒரு விதைப்பை மட்டுமே இருந்தத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.