Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. “இது அமெரிக்காவின் தற்கொலை முயற்சி”: வடகொரிய அமைச்சர் கடும் எச்சரிக்கை “வடகொரியாவின் ஏவுகணைகளை அமெரிக்கா விருப்பத்துடன் வரவேற்க முயற்சிக்கிறது. இது அமெரிக்காவின் தற்கொலை முயற்சிக்குச் சமம்” என வடகொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரி யோங் ஹோ தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 72வது அமர்வில் கலந்துகொண்டு நேற்று (23) பேசிய ஹோ, தமது ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை ட்ரம்ப் ‘சின்ன ரொக்கெட் மனிதர்’ என்று குறிப்பிட்டதைக் கண்டிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் பேசுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன், வடகொரியாவின் கிழக்கில் உள்ள சர்வதேச கடற்பரப்பில், அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள் தாக்குதல் ஜெட்களின் பாதுகாப்புடன் வடகொரியா…

  2. லண்டனில் அசிட் தாக்குதல் 6 பேர் காயம் Share லண்டனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வர்த்தகக் கட்டடத் தொகுதியில் மர்ம ஆசாமிகள் நடத்திய ஆசிட் தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனில் அதிநவீன வசதிகளை கொண்ட வர்த்தகக் கட்டடத் தொகுதிகள் அதிகம் அமைந்துள்ளன. ஸ்டப்போர்ட் பகுதியில் உள்ள வர்த்தகக் கட்டடத் தொகுதியில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த கூட்டத்திற்குள் நுளைந்து அரிக்கும் தன்மை கொண்ட ஒருவித திரவத்தை பார்வையாளர்கள் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். லண்டனில் கடந்த சில ஆண்டுகளாக ஆசிட் வீச்சுமற்றும் அரிக்கும் ஒ…

  3. மெக்ஸிக்கோவில் மேலும் இரண்டு பூகம்பங்கள் ஏற்கனவே ஏற்பட்ட பூகம்பத்தால் நிலைகுலைந்து போயிருக்கும் மெக்ஸிக்கோவில், புதிதாக அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள் ஏற்பட்டன. நேற்று சனிக்கிழமை காலை ஒக்ஸாகா மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவு கொண்ட பூகம்பம் ஒன்று ஏற்பட்டது. மாலை ஏழு மணியளவில் அதே ஒக்ஸாகா மாகாணத்தை, 4.5 ரிக்டர் அளவு கொண்ட மற்றொரு பூகம்பம் தாக்கியது. பூகம்பம் ஏற்படப்போவது அறியப்பட்டதுமே எச்சரிக்கை சமிக்ஞை விடப்பட்டது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் மற்றும் ஏற்கனவே இடம்பெற்ற பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் இறங்கியிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடம் தேடி ஓடிப் போயினர். இந்த பூகம்பங்களையடுத்து, மெக…

  4. வட கொரியாவுக்கு நெருக்கமாக பறந்து மிரட்டிய அமெரிக்க போர் விமானங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைUS PACIFIC COMMAND Image captionவடகொரியாவின் கிழக்கக் கடற்கரையை ஒட்டி அமெரிக்க போர் விமானங்கள் பறந்தன. படைபலத்தை வெளிக்காட்டும் வகையில், வட கொரியாவின் கிழக்கு கடற்கரையோரமாக அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளன. "எந்தவிதமான அச்சுறுத்தல்களையும…

  5. ராகுல்காந்தியுடன் இருக்கும் இந்தப் பெண் யார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அண்மையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் பற்றி இந்திய ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்த பயணத்தின்போது அவர் ஆற்றிய உரைகள் பெருமளவிலான சர்ச்சைகளை கிளப்பியது. படத்தின் காப்புரிமைTWITTER Image captionசமூக ஊடகங்களில் வைரலாகும் புகைப்படம் காங்கிரஸ் கட…

  6. பஞ்சாப்: தாயுடன் சேர்ந்து மூத்த பத்திரிகையாளர் படுகொலை! பஞ்சாப்பில், மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் மற்றும் அவரது தாய் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங். அவருக்கு வயது 65. இந்நிலையில், சிங் மற்றும் அவரது தயாரின் உடல்கள், மொஹாலியில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து கண்டறியப்பட்டது. இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், வீட்டில் இருந்த …

  7. ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் சான்சலர் ஆகிறார் ஏஞ்சலா மெர்கல் ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போதைய சான்சலர் ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக சான்சலராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பெர்லின்: ஜெர்மனியின் நாடாளுமன்றம் கடந்த 1949ம் ஆண்டு நிறுவப்பட்டது. மொத்தம் 598 உறுப்பினர்கள் கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 300 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதற்கு முன்னர் நடைபெற்ற அனைத்து தேர்தலிகளில…

  8. அமெரிக்காவைச் சீண்டும் ஈரான்! அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ஈரான் தனது புதிய ஏவுகணையொன்றை இன்று வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. இந்தப் பரிசோதனை மூலம், அணுவாயுத ஒப்பந்தம் தனக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதை ஈரான் உணர்த்தியிருக்கிறது. ‘கொரம்ஷாஹ்ர்’ என்ற அந்த ஏவுகணை நேற்று (22) வெள்ளிக்கிழமையே ஈரானின் உயர் மட்ட இராணுவ அணிவகுப்பில் முதன்முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது. அதன்போது, அதை விரைவில் பரிசோதிப்போம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. எனினும், மறுநாளான இன்றே அது வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. ஈரான் இதற்கு முன் நடத்திய ஏவுகணைப் பரிசோதனைகளால் அதிருப்தி கொண்ட அமெரிக்கா, 2015ஆம் ஆண்டு உலகின் ஏனைய வல்லரசுகளுட…

  9. மெக்ஸிகோ நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க நம்பிக்கைக்கு மத்தியில் தேடுதல் நடவடிக்கை தொடருகிறது, வட கொரியாவை அழிப்பேன் என்று கூறிய அமெரிக்க அதிபருக்கு வடகொரிய அதிபர் கடும் எச்சரிக்கை மற்றும் மீதேன் உண்ணும் பாக்டீரியாக்கள் அதை புரதமாக மாற்றுவது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  10. பிரித்தானியா உறுதியான நண்பனாகவும் சகாவாகவும் திகழும் – தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியா உங்கள் உறுதியான நண்பனாகவும் சகாவாகவும் திகழும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஓன்றியத்திற்கு உறுதியளித்துள்ளார். இத்தாலியின் புளோரன்சில் ஆற்றிவரும் உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரித்தானியா உங்கள் வலுவான சகாவாகவும் நண்பனாகவும் விளங்க விரும்புகின்றது என தெரிவித்துள்ள அவர் எனினும் ஐரோப்பிய ஓன்றியத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பிரித்தானியா முழுமையாக திருப்தியடைவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது என்ற முடிவை எடுத்துள்…

  11. கிழவனான டொனால்ட் டிரம்பை அடக்குவேன்: வடகொரியா ஜனாதிபதி சவால்..! வட கொரியா மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்த டொனால்ட் டிரம்பை கடுமையான தாக்குதல்கள் மூலம் அடக்குவேன் என வட கொரியா ஜனாதிபதி கிம் யோங் உன் சவால் விடுத்துள்ளார். வட கொரியா 6வது முறையாக அணு ஆயுத பரிசோதனை செய்ததை தொடர்ந்து அமெரிக்கா அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை நேற்று அறிவித்தது. இத் தடை மூலம் வட கொரியா அணு ஆயுத பரிசோதனை செய்வது தாமதமாக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு வட கொரியா பதிலடி கொடுத்துள்ளது. வட கொரியா ஜனாதிபதி அறிக்கை ஒன்றை அந்நாட்டு அரசாங்க ஊடகத்திற்கு அனுப்பியுள்ளார். அவ் அறிக்கையில்…

  12. வட கொரியா மீது தடைகளை விரிவாக்க புதிய ஆணையில் டிரம்ப் கையெழுத்து பகிர்க வட கொரியாவின் அணு ஆயத திட்டத்திற்கு எதிரான தடைகளை விரிவாக்கும் புதிய ஆணை ஒன்றில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS வட கொரியாவோடு வர்த்தகம் மேற்கொண்டு வருகின்ற நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்க கருவூல துறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வட கொரியாவோடு வர்த்தகம் மேற்கொள்ளும் சீன வங்கிகளின் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள சீனாவின் சென்டல் வங்கி அறிவுறுத்தியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். வட கொரியா நடத்திய மிகவும் சமீபத்திய அ…

  13. உலகத்தைப் பற்றிக் கவலைப்படாத ஜெர்மனி! பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய மக்கள் தொகை மிகுந்த மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கும் இது தேர்தல் ஆண்டு. இந்தத் தேர்தல்கள் அந்த நாடுகளுக்கு மட்டுமில்லாமல் ஐரோப்பாவுக்கும் உலக அரசியல் போக்குகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைத்தது, அல்லது எவ்வளவு சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தனர் என்பதைவிட, இந்தத் தேர்தல் பிரச்சாரங்களில் என்ன பேசப்பட்டது என்பதுதான் முக்கியம். பிரெஞ்சுக் குடிமகளான நான் இப்போது லண்டனில் வசிக்கிறேன். பிரிட்டனில் ஜூன் மாதம் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘பிரெக்சிட்’ குறித்து…

  14. கணக்குவழக்குகளை முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானியாவிடம் ஐரோப்பிய ஓன்றியம் வேண்டுகோள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவினை தனது கணக்குவழக்குகளை முடித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள ஐரோப்பிய ஓன்றியம் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைகளிற்கான ஐரோப்பிய ஓன்றிய பிரதிநிதி மைக்கல் பார்னியர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். முக்கிய விடயங்கள் குறி;த்த பிரித்தானியாவின் அணுகுமுறையில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக அவர் குறிப்பி;ட்டுள்ளார். பிரித்தானியாவுக்கு இன்னமும் ஓருவருடமே உள்ளது என தெரிவித்துள்ள அவர் பிரித்தானியா உரிய முறையில் உடன்படிக்கையொன்றுடன் வெளியேறுமா என கேள…

  15. மெக்ஸிகோ தலைநகரில் நேற்று நிலநடுக்கத்தால் இடிந்துவிழுந்து கட்டடங்களின் இடிபாடுகளிலிருந்து உயிர்தப்பியவர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமடைகிறது, இராக்கில் அடுத்த வாரம் நடக்கவுள்ள தனி குர்திஸ்தான் நாடுக்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பு மற்றும் ஏ கே 47 ஆயுதத்தை உருவாக்கிய மிக்கெயில் கலாஷ்னிகோவை ரஷ்யா கொண்டாடுவது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  16. பிரித்தானிய அமைச்சரவையில் பிரெக்சிற் விவகாரம் குறித்து கடும் விவாதம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் அமைச்சரவை இன்று இரண்டரை மணித்தியாலங்களிற்கு மேல் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரம் குறித்து கடும் விவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய அமைச்சரவை சந்திப்பின்போது பிரதமர் தெரேசா மே நாளை இத்தாலியில் தான் ஆற்றவுள்ள உரை குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். பிரதமரின் உரையில் இடம்பெற்றுள்ள விடயங்களை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னர் பிரதமரின் உரையின் பிரதிகள் அமைச்சர்களிடம் வழங்கப்ப…

  17. “ட்ரம்பின் எச்சரிக்கை நாய் குரைப்பதற்குச் சமம்”": வடகொரிய அமைச்சர் ஐ.நா. அமர்வில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையை, வடகொரிய அதிகாரிகள் ‘நாயின் குரைப்புடன்’ ஒப்பிட்டுள்ளனர். நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் 72வது அமர்வில், ட்ரம்ப் தனது கன்னியுரையை நிகழ்த்தினார். அதில், ‘அமெரிக்காவை தொடர்ந்து அச்சுறுத்திவந்தால், வடகொரியாவை நிர்மூலமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அதே ஐ.நா. அமர்வில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றடைந்த வடகொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரி யோங் ஹோவிடம், ட்ரம்ப்பின் பேச்சு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஹோ, “வடகொரியா…

  18. ரஷ்யாவில் இருந்து வடகொரியா எரிபொருள் கடத்தல்? தம்மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மீறி எட்டு வடகொரிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களில் ரஷ்யாவில் இருந்து எரிபொருளை ஏற்றிச் சென்றிருக்கின்றன என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கப்பல்கள் ரஷ்யாவில் இருந்து புறப்பட்டதையும், இடைநடுவில் பாதையை மாற்றி வடகொரியா நோக்கிச் சென்றதையும் கப்பல் பயணத்தை ஆராயும் தமது தொழில்நுட்பம் உறுதிப்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கும் ரொய்ட்டர் செய்தி நிறுவனம், வடகொரியாவில் எரிபொருளை இறக்கியதா என்பது குறித்து உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. எனினும், பயணத்தின் நடுவில் பாதை மாற்றிச் செல்வது வடகொரியாவின் ஏமாற்றுத் தந்திரங்…

  19. புட்­டினை எதிர்த்துப் போட்­டி­யிடும் 'பாலியல் குரு' ரஷ்­யாவில் எதிர்­வரும் வருடம் இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­தலில் தற்­போ­தைய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டினை எதிர்த்துப் போட்­டி­யிடப் போவ­தாக தன்னைத் தானே பாலியல் குரு ஒரு­வ­ராக விளம்­பரம் செய்து கொண்­டுள்ள அலெக்சாண்டர் கிர்ரிலோவ் தெரி­வித்தார். அவர் ஹோட்டல் அறை­யொன்றின் படுக்­கையில் ஹோட்டல் பணிப்­பெண்கள் போன்று ஆடை அணிந்­தி­ருக்கும் பெண்­களை இசைக்­க­ருவி போன்று கைகளால் மீட்டு­வதை வெளிப்­ப­டுத்தும் காணொளிக் காட்­சி­யொன்று வெளி­யாகி பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அவர் அவ்­வாறு அந்தப் பெண்­களை மீட்டும் போது அந்தப் பெண்­கள் ஆபா­ச­மான முறையில் குரலை எழுப்பி ஒரு இசை ப…

  20. கனடாவில் போலி செய்திகளை கண்டறிவது குறித்து கூகுள் விளக்கம் அளிக்க உள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கனடாவில் போலி செய்திகளை கண்டறிவது குறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் அளிக்க உள்ளது. எவ்வாறு போலி செய்திகளை கண்டறிவது எவ்வாறான செய்திகள் நம்பகமானவை என்பது குறித்து இளைஞர் யுவதிகளுக்கு கூகுள் நிறுவனம் விளக்கம் அளிக்க உள்ளது. தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் கனடாவில் இந்த தி;ட்டத்தை கூகுள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த புதிய திட்டம் இளைஞர் யுவதிகளுக்கு மத்தியில் ஊடக அறிவினை மேம்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த முயற்சியானது வரவேற்கப்பட வேண்டியது எனவும் இந்த முயற்சியினால் அனைத்து பிரச்சினையும் தீர்வு காண முடியாது எனவும் சில…

  21. ஜப்பானில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஜப்பானின் அணு உலை நகரமான ஃபுகுஷிமாவை சற்றுமுன் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ரிக்டர் அளவில் 6.2 எனப் பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.37 மணிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், நிலத்தில் இருந்து பத்து கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் அளவிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/24713

  22. மெக்ஸிகோவில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கத்தில் இருநூறுக்கும் அதிகமானோர் பலி, ஐநா பொதுசபை கூட்டத்தில் இரான் குறித்து அமெரிக்க அதிபர் பேசியது வெறுப்பை தூண்டும் ஒரு பேச்சு என்று இரான் சாடியுள்ளது, மற்றும் சிங்கப்பூரில் ஆரம்பப்பள்ளியில் ரோபோக்களுடன் விளையாடி கல்விகற்கும் மழலையர் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  23. முதலாம் உலகப் போரில் மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு முதலாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பெல்ஜியத்துக்கு அருகில் வட கடல் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பாகங்கள் சிதையாமல் இருப்பதால், அக்கப்பலினுள் நீர் புகுந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இதனால், அதில் பணிபுரிந்த 23 வீரர்களின் உடல்களும் அதன் உள்ளேயே இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 1914 முதல் 1918ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற முதலாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட இந்தக் கப்பல் கடலில் சுமார் நூறு அடி ஆழத்தில் இருப்பதாக அதைக் கண்டுபிடித்த நீர்மூழ்கு வீரர் தெரிவித்தார். இதுவரை, பெல்ஜியம் கடற்பிராந்தியத்தில், முதலாம் உலகப் போரின்ப…

  24. ஒத்திகைக்கே தாக்குப் பிடிக்காத 900 கோடி ரூபா அணை! இந்திய மதிப்பில் 389 கோடி ரூபாய் (இலங்கை மதிப்பில் சுமார் 900 கோடி ரூபா) செலவில் நிர்மாணிக்கப்பட்ட அணையின் ஒரு பகுதி, திறப்பு விழாவுக்கு முன் இடம்பெற்ற ஒரு ஒத்திகையின்போது தகர்ந்து விழுந்ததில், அப்பகுதி வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மக்கள் கடும் அதிர்ச்சிக்கும் உள்ளாகினர். பீஹார் மாநிலம் பாட்னாவில், கங்கையில் இருந்து நீரைத் தேக்கி, அதன்மூலம் பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்துமுகமாக இந்த அணை நிர்மாணிக்கப்பட்டிருந்தது. நாற்பதாண்டுகளுக்கு முன்னரே பதினான்கு கோடி ரூபாயில் நிர்மாணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த இந்த அணை தற்போதுதான் பூர்த்தியாகியிருந…

  25. வடகொரிய நெருக்கடியை சமாதானமாக தீர்ப்பதே சிறந்தது - மெர்கல் கருத்து வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு இராஜ தந்திர ரீதியிலும் சமாதானமுமாகவும் அணுகி தீர்வு காண்பதே சிறந்தது என ஜெர்மன் அதிபர் அங்கெலோ மெர்கல் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் பொது சபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடகொரியா சர்வதேசங்கள் மற்றும் ஐ.நாவின் எதிர்ப்புக்கள் தடைகளை மீறி தொடர் அணுவாயுத பரிசோதணைகளை முன்னெடுத்து வருகிறது. இதனால் சர்வதேச நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இராஜதந்திர ரீதியிலும் சமாதான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.