உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
-
அணுஆயுதத் திட்டம் தொடர்பில், தமக்கு எதிராக அமெரிக்கா- ஐ நாவில் முன்னெடுக்கும் தடைகளுக்கு- பதிலடி கொடுக்க வடகொரியா சூளுரை! இஸ்லாமிய அரசு எனக் கூறிக்கொள்ளும் குழுவினாரால் வட இராக்கில் கடத்தப்பட்ட யாசிடிப் பெண்களை காப்பாற்ற முயலும் நால்வருடன் உரையாடியது பிபிசி! மற்றும் பெரும் ஊதியத்தை துறந்து விவாசயத்தின் பக்கம் திரும்பியுள்ள ஜப்பானியப் பெண்ணொருவர் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 240 views
-
-
எண்ணெய் விலை வீழ்ச்சி: சுற்றுலாவை மேம்படுத்த செளதி அரேபியா முயற்சி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைKINGDOM OF SAUDI ARABIA Image captionசெளதி மேற்கு கடற்கரையில் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு, செங்கடல் வளர்ச்சி திட்டம் கட்டமைக்கப்பட உள்ளது ஐம்பது தீவுகள் மற்றும் செங்கடலில் உள்ள பிற பகுதிகளை ஆடம்பர விடுதிகளாக மாற்றும் மாபெரும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்ட…
-
- 0 replies
- 569 views
-
-
இது வெறும் ட்ரெயிலர் தான் கண்ணா இனித்தான் மெயின் பிக்சரே ஆரம்பம் விரைவில் பாரத தேசமே அதிசயிக்கும் வகையில் அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகும் என ரூபாவின் கண்ஜாடையில் இயங்கும் டீம் கதைக்கிறதாம். சசியின் வீடியோவும் சரியான நேரத்தில் மீடியாக்களுக்குப் போய்ச் சேருமாம்! இது வெறும் ட்ரெயிலர்தான் மெயின் பிக்சர் விரைவில் வரும் என்பதுபோல் "தில்" ரூபா டீம் வீடியோ ஒன்றை வெளியிட்டுத் திகில் கிளப்பப் போகிறதாம்! கர்நாடக சிறையில் சசிகலா சகல வசதிகளுடன் தங்கியிருப்பதாகவும் அதற்காகச் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு இண்டு கோடி ரூபா தரப்பட்டிருப்பதாகவும தவுசண்ட் வாலா சரவெடியை கிள்ளிப் போட்டார் டி.ஐ.ஜி. ரூபா. இது அனைத்துத் தரப்பிலும் அனல…
-
- 0 replies
- 611 views
-
-
பிரக்சிற்றின் நெருக்கடியை எதிர்கொள்ள பிரிட்டன் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த விவகாரத்தினால் எழுந்துள்ள நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதற்காக பிரிட்டன் தனது உள்நாட்டு உணவு உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் என தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு பிரிட்டன் தீர்மானிக்கும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதிகள் தடைப்பட்டால் பிரிட்டன் நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டிவரும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் உணவுப்பொருட்களை இறக்குமதியில் தங்கியிருப்பத…
-
- 0 replies
- 309 views
-
-
வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க கத்தார் பரிசீலனை கத்தாரில் வசிக்கும் வெளிநாட்டினர் சிலருக்கு நிரந்தக் குடியுரிமை வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி நிறுவனம் கே.யூ.என்.ஏ தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது வளைகுடா நாடுகளில் நடைமுறையில் இல்லை. இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துவிட்டாலும், சில நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த மசோதாவின்படி, கத்தார் நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளும் வெளிநாட்டவரின் குழந்தைகள் மற்றும் சிறப்பாகப் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு, கத்தாரில் வசிக்க நிரந்தர அனுமதி வழங்கப…
-
- 0 replies
- 598 views
-
-
ரான்சம்வேரிலிருந்து உலகைக் காப்பாற்றிய இளைஞரை அமெரிக்கா கைது செய்தது ஏன்? #Ransomware இங்கிலாந்தைச் சேர்ந்த 'சைபர் அட்டாக் ஹீரோ' மார்கஸ் ஹட்சின்ஸ் (Marcus Hutchins) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன், உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியான வான்னாக்ரை ரான்சம்வேர், மேலும் பரவாமல் தடுத்ததில் இவரின் பங்கு மிக முக்கியமானது. வான்னாக்ரை : கணினிகளைத் தாக்கி தீங்கு ஏற்படுத்தும் மென்பொருள்களை மால்வேர் என்றழைப்பார்கள். இந்த மால்வேரில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ரான்சம்வேர். வான்னாக்ரை என்ற ரான்சம்வேர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து, இந்தியா உள்ளிட்ட சுமார் 150 நாடுகளுக்குப் பரவியது. ஆந்திர காவல்துறை உள்ளிட்ட…
-
- 0 replies
- 518 views
-
-
ஆமதாபாத், குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பனாஸ்காந்தாவில் ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுலுக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டு உள்ளது. ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசப்பட்டு உள்ளது. இதனால் கார் கண்ணாடி உடைந்து உள்ளது. ராகுல் காந்திக்கு அதிர்ஷ்டவசமாக எந்தஒரு காயமும் ஏற்படவில்லை. விரைவில் ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தொடர்வார் எனவும் கூறப்படுகிறது. ராகுல் காந்திக்கு எதிராக கருப்பு கொடி காட்டி…
-
- 3 replies
- 345 views
-
-
பிரிட்டிஷ் கணினி நிபுணர் அமெரிக்காவில் கைது, உலக அளவில் சைபர் தாக்குதலை நிறுத்த உதவியதாக போற்றப்பட்டவர் இவர் ; குடியேறிகள் முகாம்களில் தடுமாறும் மக்கள்! அரசியல் தஞ்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரான்ஸில் முடங்கியுள்ள அகதிகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் சாதித்த நாசாவின் சோதனை விமானிகள்! ஐம்பதுகளில் அவர்கள் எதிர்கொண்ட சிரமங்களும் துணிச்சலும் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 285 views
-
-
ஏவுகணைச் சோதனையில் தப்பிய பிரான்ஸ் பயணிகள் விமானம் உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் கவனம் செலுத்தி வருகிறது வடகொரியா. இந்நிலையில், வட கொரியா ஏவுகணைசோதனை நடத்தியபோது அந்த வழியாக பயணித்த ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் இருந்து தப்பியுள்ளது. 330 பயணிகளுடன் ஏர் பிரான்ஸ் விமானம்டோக்கியோவில் இருந்து பாரிஸ்க்கு வட கொரியாவின் ICBM பாதை வழியாக பயணித்துள்ளது. அப்போது, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஹுவாசாங் 14 என்ற ஏவுகணையை வட கொரியாசோதித்துள்ளது. கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் இடைவெளியில் விமானமும், ஏவுகனையும் மோதுவதிலிருந்து தப்பித்துள்ளன. ஏவுகனை விழுந்த கடல் பகுதியை ஏர் பிரான்ஸ் வி…
-
- 0 replies
- 507 views
-
-
டுபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிங்களில் ஒன்றாக கருதப்படும் ரோர்ச் ரவரில் தீவிபத்து டுபாயின் மெரினா பகுதியில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிங்களில் ஒன்றாக கருதப்படும் 79 மாடிகளை கொண்ட ரோர்ச் ரவர் ( torch tower ) இல் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் 9-ஆவது மாடியில் பற்றிய தீ, தொடர்ந்து எரிந்து அடுத்தடுத்து பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து தீயணைப்பு படையினர் அங்கு சென்று அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் மற்றும் வணிக வளாகங்களில் தங்கியிருப்பவர்களை உடனடியாக வெளியேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்தினால ; ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என…
-
- 1 reply
- 369 views
-
-
பாகிஸ்தான்: பெண்களுக்காக ஆங்கில பத்திரிக்கை தொடங்கிய தாலிபான் படத்தின் காப்புரிமைGETTY IMAGES பெண்கள் மற்றும் ஆண்கள் வழிதவறாமல் இருக்க, அவர்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவிடவேண்டும் என்று தஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தானின் முக்கியத் தலைவர் ஃபஜ்லுல்லாஹ்வின் மனைவி கருத்து தெரிவித்துள்ளார். ஜிகாதின் வழியில் பெண்களை ஈர்ப்பதற்காக தாலிபான் வெளியிடும் பத்திரிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தாலிபான் பெண்களுக்காக ஒரு ஆங்கில பத்திரிகையை வெளியிட்டுள்ளது, அதன் முதல் பதிப்பு அண்மையில் வெளியானது. அதில், 'ஜிகாதியாக' விரும்பும் ஆறு வயது சிறுமியின் கதையும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 'சுன்னத்-இ-குலா' என்ற அந்த பத்திரிக…
-
- 0 replies
- 392 views
-
-
விஞ்ஞானத்தில் ஒரு பெரும் சாதனை! பரம்பரை நோய்களை தடுப்பதற்காக மனித கருவின் மரபணு திருத்தப்பட்டுள்ளது! ரஷ்ய அமெரிக்க உறவுகளின் எதிர்பார்ப்புகள் முடிவுக்கு வருகின்றன என்கிறது ரஷ்யா. புதிய தடைகள் சட்டமூலத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து வெளிவந்த கருத்து! மற்றும் கடந்தகாலத்தை பிரதிபலிக்கும் புகைப்படங்கள்! அலாஸ்கா புகைப்பட முன்னோடிகள் எடுத்த படங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 172 views
-
-
அமெரிக்க எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் ரே நியமனம்: செனட் சபையில் ஒப்புதல் கிறிஸ்டோபர் ரே - REUTERS அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் நியமிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற செனட் சபை நேற்று ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ.யின் இயக்குநராக ஜேம்ஸ் கோமி பதவி வகித்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யாவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரக் குழுவுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஜேம்ஸ் கோமி தீவிர விசாரணையில் இறங்கினார். …
-
- 0 replies
- 485 views
-
-
பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு பாகிஸ்தான் இடைக்கால பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட ஷாகித் ககான் அப்பாஸி. - படம். | ராய்ட்டர்ஸ். பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் விலகினார். அவரது இடத்தில் தற்போது ஷாகித் ககான் அப்பாஸி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பில் 341 உறுப்பினர்களில் இவர் 221 வாக்குகளைச் சேகரித்து வெற்றி பெற்றார். பிரிந்திருந்த எதிர்க்கட்சியினர் 3 வேட்பாளர்களைக் களமிறக்கினர், அவர்கள் அனைவரும் சேர்ந்து 84 வாக்குகளையே பெற்றனர். அந்நாட்டு அரசியல் சாசன முறைப்படி ரகசிய வாக்கெ…
-
- 0 replies
- 276 views
-
-
ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் கிளாரி கிளிண்டனை தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு அதிகம் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிளாரி கிளிண்டனை தோற்கடிக்க ரஷ்ய உளவுத் துறை செயல்பட்டனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அமெரிக்காவின் செனட் சபை கமிட்டி நடத்திய விசாரணையில் உறுதியானது. இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கு…
-
- 0 replies
- 439 views
-
-
வடகொரியாவில் ஆட்சிமாற்றத்தை தாங்கள் கோரவில்லை என்றாலும், அதன் ஏவுகணைச் சோதனைகளை ஏற்க முடியாது என்கிறது அமெரிக்கா; ஊழல் குற்றச்சாட்டுக்களால் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா! எதிர்ப்பவர்களுக்கு கொலை மிரட்டல் மற்றும் புறாக்களின் மீது அதீத பற்று! மாஸ்கோவுக்கு அருகே ஆயிரக்கணக்கான புறாக்களை வளர்த்துவரும் லட்சாதிபதியை பிபிசி சந்தித்தது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 203 views
-
-
சிட்னி விமானங்கள் தாக்குதல் குறித்து கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்; தீவிரவிசாரணை காரணமாக மன உளைச்சலிற்குள்ளாகியுள்ளார் சிட்னியில் பயணிகள் விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஓருவரை காவல்துறையினர் விடுதலை செய்துள்ள அதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரில் அப்துல் மெர்கி என்ற 50 வயது நபரை காவல்துறையினர் செவ்வாய்கிழமை இரவு விடுதலை செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன எனவும் உரிய தருணத்தில் தகவல்களை வ…
-
- 0 replies
- 242 views
-
-
ஜெர்மனியில் தூணில் மோதிய கேபிள் காரால் அந்தரத்தில் தொங்கிய பயணிகள் ஜெர்மனியில் ரெகின் ஆற்றின் மேல், தூணில் மோதி கேபிள் கார் போக்குவரத்து தடைப்பட்டதால் பலர் அந்தரத்தில் தொங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்ட 75 பேரை மீட்பதற்கு கொலோனிலுள்ள தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புதவி அணியினர் கிரேனைப் பயன்படுத்தியுள்ளனர். 40 மீட்டர் (130 அடி) உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிலர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டோரில் குழந்தைகளும் அடங்குவதுடன், காயமுற்றோர் தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை. இந்த சம்பவம் இடம்பெற்றபோது, அங்கிருந்த 32 கேபிள் கார்களும் இயங்கிக் கொண்டிருந்தன. கேபிள் கார்களில் ஒன்று ஆதார அமைப்பின் ஒரு பகுதியில் மா…
-
- 0 replies
- 333 views
-
-
வெனிசுவேலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மடுராவின் அரசின் மீது அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது! ஆனால், இது விரக்தி மற்றும் வெறுப்பின் வெளிப்பாடு என்கிறார் அவர், துருக்கியில் கடந்த வருட சதிப்புரட்சி முயற்சி சந்தேக நபர்களுக்கு எதிராக பெரும் விசாரணை! குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அணிவகுத்து விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர்! மற்றும் சீனாவில் கருமுட்டைகளை உறைநிலையில் பாதுகாத்து வைக்க திருமணமாகாத பெண்களுக்கு அனுமதியில்லை!சிகிச்சைக்காக அவர்கள் வெளிநாடு செல்கிறார்கள்! இது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 313 views
-
-
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆறாத ரணம் ஆண்ட்ரூ ஒயிட்ஹெட்பிபிசி முன்னாள் செய்தியாளர் காலணி நாடான இந்தியா, பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று, அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. தற்போது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் நெருங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் முதல் பாகம் இது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES டெல்லிக்கும், இஸ்லாமாபாதுக்கும் இடையே இருப்பதென்னவோ விமானப் பயணத்தில் விரைந்து கடந்…
-
- 5 replies
- 3.2k views
-
-
அமெரிக்க ராணுவம் அதிகளவு வயாகரா வாங்குவது ஏன்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவிறைப்புத் தன்மைக்கு பயன்படுத்தப்படும் மருந்திற்காக 84 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடப்பட்டுள்ளது அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் இனிமேல் பணியாற்ற முடியாது என டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் அண்மையில் அறிவித்துள்ள நிலையில், திருநங்கைகளின் உடல்நலத்திற்காக செலவிடப்படும் தொகையை விட மற்றொரு விடயத்திற்காக செலவிடப்படும் தொகை அதிக அளவில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அமெரிக்க ராணுவத்தினரின் விறைப்புத் தன்மை குறைபாட்டை சரிசெய்ய பயன்படுத்தப்படும் மருந்திற்காக 84 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளதாக மிலிட்டரி ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
பதவியேற்று 10 நாட்களில் வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநர் ராஜினாமா:- வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 10 நாட்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட அந்தோனி ஸ்காராமுக்சை தனது பதவியை ராஜினாமா செய்து அமெரிக்க அரசியலில் கவனத்தை உள்ளார். ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு துறையின் இயக்குநராக பணியாற்றிய மைக் டுப்க், ஜனாதிபதியின் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடந்த மே மாதத்தில் ராஜினாமா செய்தார். இதனால், வெற்றிடமாக இருந்த அப்பொறுப்புக்கு நியூயார்க்கைச் சேர்ந்த நிதியாளர் அந்தோனி ஸ்காராமுக்சை நியமித்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் டிரம்ப் உத்தரவிட்டார். டிரம்ப்பின் …
-
- 1 reply
- 275 views
-
-
இந்தியாவை சுற்றிவளைக்கும் எதிரிநாடுகளும்... ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் விளைவும்! இலங்கையில் நடந்த இனப்படுகொலைச் சம்பவத்தை, இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் யாராலும் மறக்க முடியாது. தமிழர்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையே நடந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர போடப்பட்டதுதான் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்று சொல்லப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் ஈழத்தமிழர்களுக்கான பல்வேறு நலன்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தம் போடப்பட்டு முப்பது ஆண்டுகளைக் கடந்த பின்னரும், அதில் சொல்லப்பட்ட அம்சங்களை நிறைவேற்றியுள்ளதா இலங்கை அரசு? உண்மையில் அந்த ஒப்பந்தம் இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனுக்காக கொண்டுவரப்படவில்லை. அது, …
-
- 0 replies
- 1.4k views
-
-
வெனுசுவேலாவில் புதிய அரசியல் சாசன சபைக்கான தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் அங்கு வன்முறைகள் தொடருகின்றன, அடுத்த என்ன என்று கேள்விகள்! ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே ராஜதந்திர மோதல்கள் வலுத்துவரும் சூழலில் 750க்கும் அதிகமான அமெரிக்க அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியுள்ளது மற்றும் இராக்கிலிருந்து அகதியாக பிரிட்டனுக்கு வந்த பார்வையற்ற ஒருவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதல்வகுப்பில் தேர்ச்சிப்பெற்றுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 202 views
-