உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26883 topics in this forum
-
பிரெக்சிற் வரை ஸ்கொட்லாந்து காத்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் (பிரெக்கிற்) விலகுவதற்கான நிபந்தனைகள் முடிவாகும் வரை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்கொட்லாந்து விலகுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பதற்கு, ஸ்கொட்லாந்து முதன்மை அமைச்சர் நிக்கொலா ஸ்டர்ஜியோன் தீர்மானித்துள்ளார். இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு வழிவகுக்கும் சட்டமூலத்தைச் சமர்ப்பிக்கும் தனது திட்டத்தைப் பிற்போடுவதாக, முதன்மை அமைச்சர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம், 2019ஆம் ஆண்டு மார்ச்சிலேயே விலகவுள்ள நிலையில், அக்கட்சியின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாயின், பிரெக்சிற்றுக்கு …
-
- 1 reply
- 462 views
-
-
வெனிசுவேலா நாட்டு உச்ச நீதிமன்றத்தின் மீது கடத்தப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று கைக்குண்டு தாக்குதல் நடத்தியது குறித்த செய்தி, உலகெங்கும் மீண்டும் அதிரவைத்த இணைய வழி தாக்குதல் மற்றும் அதனை தடுப்பதற்கான செயலி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல்கள் மற்றும் ஊசியால் குத்தி வலி ஏற்படுத்தி தடுப்பு மருந்து போடுவதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நோய் தடுப்பு முறை குறித்த பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 230 views
-
-
ஐந்து மணி நேர மோடி - ட்ரம்ப் சந்திப்பில் நடந்தது என்ன? உலக அரசியல் வரலாற்றில் சமீபத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்றால், அது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முதல் முறையாக சந்தித்துக்கொண்டதாகத்தான் இருக்கும். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது மோடியை ட்ரம்ப் புகழ்ந்ததும், அதிபராக பதவியேற்ற ட்ரம்ப்புக்கு மோடி வாழ்த்து தெரிவித்ததும் அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் மோடியை வரவேற்றனர். பின்பு பேசிய ட்ரம்ப் 'மோடி ஒரு சிறந்த பிரதமர். அவரைப் …
-
- 0 replies
- 633 views
-
-
உலக பயங்கரவாதி என்று அமெரிக்காவால் அழைக்கப்படும் சையத் சலாஹுதின் யார்? சையத் சலாஹுதின். | கோப்புப் படம்.| ஏ.பி. உலக பயங்கரவாதி என்று அமெரிக்காவினால் முத்திரைக் குத்தப்பெற்ற சையத் சலாஹுதின் காஷ்மீரி தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதினின் தலைமைக் கமாண்டர் ஆவார். இவர் பற்றி அமெரிக்க அரசுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சலாஹுதின் காஷ்மீர் பிரச்சினைக்கு எந்த ஒரு சுமுகத் தீர்வும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தீவிரமானவர். இன்னும் அதிகமாக காஷ்மீர் தற்கொலைப் படையினரைத் தயார் செய்யப் போவதாக அச்சுறுத்துபவர், இந்தியப் படைகளுக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கை ஒரு சுடுகாடாக மாற்றுவதற்கு உறுதி பூண்டவர்” என்று பயங்கரமாகக் கூறப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 469 views
-
-
ஐரோப்பிய ஆணையத்தால் கூகுள் நிறுவனத்திற்கு 2.42 பில்லியன் யூரோ அபராதம் விதிப்பு கூகுள் நிறுவனம், தனது தேடல் வசதி மூலம் ( செர்ச் எஞ்சின்) கிடைக்கும் தேடல் முடிவுகளில், தனது சந்தை ஒப்பிட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது 2.42 பில்லியன் யூரோ அபராதத்தை, ஐரோப்பிய ஆணையம் விதித்துள்ளது. படத்தின் காப்புரிமைGOOGLE சந்தையின் நிலையைச் சிதைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த ஆணையம் ஒரு நிறுவனத்திற்கு, இது நாள் வரை விதித்த அபராதத் தொகையில் இதுவே அதிகமானதாகும். தொழிற்போட்டிக்கு எதிரான நடவடிக்கைகளை 90 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவராவிட்டால் இன்னும் அதிகமான அபராதத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அந்…
-
- 0 replies
- 365 views
-
-
சிரியாவில் மீண்டும் இரசாயன தாக்குதல நடத்தினால் விளைவு மிக மோசமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரியாவை எச்சரித்திருப்பது குறித்த செய்தித் தொகுப்பு, அதிபர் டிரம்பின் பயணத்தடைக்கு ஒரு பகுதி ஆதரவாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்த தகவல்கள் மற்றும் பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலான எஹ்.எம்.எஸ் குவீன் எலிசபெத் கப்பல் சோதனைக்காக முதல் முறையாக கடல் பயணம் மேற்கொண்டுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 305 views
-
-
அண்டை நாடுகளின் நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற இயலாது: டில்லர்சன் கத்தார் மீது நான்கு அரபு நாடுகள் விதித்த தடையை நீக்குவதற்கு அந்நாடுகள் விதித்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP இருப்பினும் அந்த கோரிக்கைகள் நிலவிவரும் நெருக்கடிக்கான தீர்வின் அடிப்படையாக அமைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று, செளதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளான எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் விதித்த 13 நிபந்தனைகளை கத்தாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் நிராகரித்தார். செளதி மற்றும் பிற நாடுகள் கத்த…
-
- 0 replies
- 451 views
-
-
கொலம்பியாவில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானது குறித்த தகவல்கள், மொசூல் நகரில் முன்னேறிய இராக்கிய படைகள் மீது இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் தீவிரவாதிகள் கடுமையான பதில் தாக்குதல் நடத்துவது குறித்து மோதல்களத்தில் இருந்து வரும் பிபிசியின் நேரடி செய்திகள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள நிலையில் அமெரிக்காவில் இருக்கும் இந்திய பணியாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பிபிசியின் சிறப்பு தகவல் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 210 views
-
-
முன்னணிக்கு வருகிறாரா பின்லேடனின் மகன்? அப்பா ஒசாமா பின்லேடன் இறந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு அவரது மகன் ஹம்ஜா பின்லேடன் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். 2001 ஆப்கானிஸ்தான் பாகிஸ் தான் எல்லையில் உள்ள ஜலாலாபாத் என்ற பகுதியில் அமைந்துள்ள மலைத்தொடரில் ஒரு தந்தை தன் மூன்று மகன்களுடன் அமர்ந்து பேசினார். ஒவ்வொருவருக்கும் ஒரு புராதன மணி மாலையைக் கொடுத்தார். அந்தத் தந்தை ஒசாமா பின்லேடன். அந்த மகன்களில் ஒருவர்தான் ஹம்ஜா பின்லேடன். ஹம்ஜாவை அல் காய்தாவின் தலைவராக்கும் எண்ணம் ஒசாமாவுக்கு இருந்ததாம். 2001 செப்டம்பர் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது ஆக்கிரமிப்பு செய்தது.…
-
- 0 replies
- 372 views
-
-
"அரச குடும்பத்திற்கு வெளியே இருக்க விரும்பினேன்": இளவரசர் ஹாரி படத்தின் காப்புரிமைGETTY IMAGES அரசு குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது தொடர்பாக மிகவும் தெளிவாக அறிய வந்த இளவரசர் ஹாரி, அதிலிருந்து விலகி இருக்க முடிவு செய்ததாக தெரிவித்திருக்கிறார். தன்னுடைய உரிமையை விட்டுக் கொடுத்துவிடுவதை கருத்தில் கொண்டிருந்த அவர் இறுதியில், அரச குடும்பத்தில் இருக்க வேண்டும். ஆனால், தனக்கென ஒரு பங்கை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்ததாக கூறியுள்ளார். பிரிட்டன் படையோடு இணைந்து பணியாற்றியதுதான் "நான் (கோட்டையில் இருந்து) தப்பிக்க இதுவரை கண்டவற்றில் சிறந்த தருணம்" என்று முடிக்குரிய 5-ஆவது வாரிசாக இருக்கின்ற இளவர…
-
- 0 replies
- 420 views
-
-
பாகிஸ்தான் பெட்ரோல் டேங்கர் வெடித்த பயங்கர விபத்து... பலி எண்ணிக்கை 150 ஆனது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று அதிகாலை கராச்சியிலிருந்து லாகூருக்கு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஹவல்பூர் என்ற இடத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், லாரியிலிருந்து பெட்ரோல் கசிந்தது. அதனைக் கண்ட அப்பகுதிவாசிகள், அதனைப் பிடிக்க கூட்டமாக சென்றனர். 40000 லிட்டர் பெட்ரோலை ஏற்றியிருந்த அந்த லாரி திடீரென தீப்பற்றி, வெடிக்க ஆரம்பித்தது. இதில், கசிந்த…
-
- 2 replies
- 559 views
-
-
பாராளுமன்ற இணையதளம் முடக்கம் ; அமைச்சர்கள் அச்சத்தில் ; தீவிரவாத குழுக்களின் சதிவேலையா..? இங்கிலாந்தில் உள்ள சுகாதார இணையதளங்களை தொடர்ந்து பாராளுமன்ற இணையதளத்தை மர்ம மனிதர்கள் முடக்கியுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் உள்ள சுகாதார இணையதளத்தினை மர்மநபர்கள் முடக்கினர்.அதை தொடர்ந்து, தற்போது பாராளுமன்றத்தின் இணையதளத்தை மர்ம கும்பல் ஹேக்கிங் மூலம் முடக்கியுள்ளனர். எனவே, பாராளுமன்ற இணைய தளம் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் மற்றவர்களுக்கு சென்றடைவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக பாராளுமன்றம் மூலம் அமைச்சர்களுக்கு அனுப்பக்கூடிய மின்னஞ்சல்கள் சம்பந்தப்பட்டவர்கள் பார்க்க முடியவில்லை. இதை யார் …
-
- 0 replies
- 382 views
-
-
பிரித்தானியாவின் Bethnal Green பகுதியில் மாடிக் குடியிருப்பில் தீ விபத்து – தீயணைக்கும் இந்திரங்களுடன் பணியாளர்கள் களத்தில்:- பிரித்தானியாவின் Bethnal Green பகுதியில் இன்று மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டதாக திரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்த தீவிபத்தை கட்டுப்பாட்டுள் கொண்டுவர 10 தியணைப்பு யங்திரங்களுடன் 72 தீயணைக்கும் படை வீரர்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செய்தி வெளியாகும் நேரத்தில் சுவாசி்பதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். FacebookTwitterGoogle+Teilen http://globaltamilnew…
-
- 0 replies
- 252 views
-
-
தேர்தலில் ரஷ்யத் தலையீடு: ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்கிறார் டிரம்ப் 2016-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முந்தைய அதிபர் பராக் ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்று ஒபாமா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஒபாமா மீது டிரம்ப் குற்றச்சாட்டு கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியன்று நடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னரே தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து நன்கு அறிந்த ஒபாமா, அது குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார். அமெ…
-
- 0 replies
- 244 views
-
-
லண்டன்: தீ விபத்து அபாயத்தால் 5 அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 800 குடும்பத்தினர் அவசரமாக வெளியேற்றம் லண்டனில் கடந்த வாரம் கிரென்ஃபெல் டவரில் ஏற்பட்ட தீ விபத்து போல அங்குள்ள 5 அடுக்குமாடி குடியிருப்புகளில் விபத்து நிகழலாம் என கருதி அங்கு வசிக்கும் 800 குடும்பத்தினர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். லண்டன்: இங்கிலாந்து நாட்டில் லண்டனின் வடக்கு கென்சிங்டனில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த வாரம் புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்ட…
-
- 0 replies
- 383 views
-
-
அல்-ஜசீராவை மூடு: கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை இம்மாதத் தொடக்கத்தில் இருந்து கத்தார் மீது தடை விதித்திருந்த வளைகுடா நாடுகள் கத்தாரிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பது குறித்து ஒரு பட்டியலை அளித்துள்ளன. 13 விஷயங்கள் அடங்கிய அந்த பட்டியலில், அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஒரு துருக்கி ராணுவ தளத்தை மூடிவிட்டு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது போன்றவை அடங்கும். கத்தாருக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் குவைத் மூலம் இந்த பட்டியல் கத்தாருக்கு அளிக்கப்பட்டது. சௌதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கத்தார் பயங்…
-
- 0 replies
- 399 views
-
-
ஜெர்மனியில் திடீரென தாக்குதல்! தாய்லாந்து மன்னரை அதிரவைத்த பொம்மைத் துப்பாக்கி தாய்லாந்து மன்னர் வாஜிராலங்கோர்ன் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. பின்னர், விசாரணையில் சிறுவர்களின் பொம்மைத் துப்பாக்கி எனத் தெரியவந்தது. தாய்லாந்து மன்னர் வாஜிராலங்கோர்ன் ஜெர்மனியில் தங்கி அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஜெர்மனி நகரின் முனிச் நகரிலுள்ள லேக் ஸ்டர்ன்பெர்க்கில் தங்கியிருந்த மன்னர், நகரைச் சுற்றிப்பார்க்க தன்னுடைய மோட்டார் சைக்கிள் வாகனத்தில் நகர்வலம் சென்றார். பாதுகாவலர்களோடு நகர் வலம் வந்த மன்னர் மீது திடீரென ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அது பிளாஸ்டிக் குண்டு என்பதால் முதலில் அதிர்ச்சியடைந்த மன்னர் நிதானமடைந…
-
- 0 replies
- 412 views
-
-
நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான்தான் பிரித்தானிய இளவரசி டயானாவைக் கொன்றேன் – ஜோன் ஹோப்கின்ஸ் நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் தான்தான் பிரித்தானிய இளவரசி டயானாவைக் கொன்றேன் என பிரித்தானிய உளவு அமைப்பின் முன்னாள் முகவரான ஜோன் ஹோப்கின்ஸ் (agent john hopkins) தெரிவித்துள்ளார். தன்னுடைய பணிக்காலத்தில் பத்திரிகையாளர்கள்,அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரை கொன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மரணப்படுக்கையில் இருக்கும் தான் உண்மைகளை சொல்லாத வரை தனது உயிர் பிரியாது என ஜோன் ஹோப்கின்ஸ் தெரிவித்துள்ளார். சாதாரண குடும்பத்தில் பிறந்த டயானா பிரித்தானிய இளவரசர் சார்லஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக…
-
- 1 reply
- 481 views
-
-
மக்கள்தொகையில் சீனாவை வீழ்த்தப்போகும் இந்தியா! ஐநா கணிப்பு '2024-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை, சீனாவின் மக்கள்தொகையைவிட அதிகமாக இருக்கும்' என்று ஐநா தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மக்கள்தொகை குறித்த அறிக்கை ஒன்றை ஐநா-வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான பிரிவு சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிக்கையில் பின்வரும் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. சீனாவின் மக்கள்தொகை 1.41 பில்லியன்; இந்தியாவின் மக்கள் தொகை 1.34 பில்லியன். இந்த இரண்டு நாடுகளும்தான் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள். உலகின் மொத்த மக்கள் தொகையில், 19 சதவிகிதம் சீனாவும், 18 சதவிகிதம் இந்தியாவும் ஆட்கொண்டுள்ளது. சீனாவின் மக்கள்தொகையைப் பொறுத்தவரை 2050-…
-
- 0 replies
- 325 views
-
-
20 முதலமைச்சர்கள் முன்னிலையில் மனுதாக்கல் செய்தார் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி தேர்தலில், பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 20 முதல்-மந்திரிகள் முன்னிலையில் மனு தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா முன் மொழிந்தனர். புதுடெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கு ஜுலை 17-ந் தேதி ஓட்டுப்பதிவு நடை பெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. வருகிற 28-ந்தேதி மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். ஜனாதிபதி தேர்தலில் …
-
- 0 replies
- 427 views
-
-
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சூரிய ஒளி தகடு பதித்த சுவர்: டிரம்ப் ஆலோசனை அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் புதிதாக கட்டப்படும் சுவரில் சூரிய ஒளி மின்சாரம் தகடுகள் பதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆலோசனை செய்கிறார். வாஷிங்டன்: கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம் மெக்சிகோ நாட்டினர் அமெரிக்காவில் நுழைந்து குடியேறுவதை தடுக்க முடியும். போதை பொருள் கடத்தலுக்கு முடிவு கட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானதும் மெக்சிக…
-
- 0 replies
- 420 views
-
-
மொசூல் நகரின் எண்ணூறு ஆண்டு பழமைவாய்ந்த al-Nuri பெரிய மசூதியை ஐஎஸ் அமைப்பினர் இடித்துவிட்டதாக இராக்கிய அரசு குற்றச்சாட்டு; வளமான வாழ்வைத்தேடிச்சென்று நரகத்திலிருந்து மீண்டதாகக்கூறும் குடியேறிகள்! ஐரோப்பாவில் குடியேற விரும்பி லிபியா சென்று மீண்டும் நாடுதிரும்பிய நைஜீரியர்களின் நேரடி அனுபவங்கள்!! மற்றும் அழகுபடுத்தும் அறுவைசிகிச்சைகளை அதிகமாக நாடும் இளம்தலைமுறை! பொய்யான தோற்றப்பொலிவு மோகத்தை சமூக ஊடகம் ஊக்குவிக்கிறதா? இது குறித்த ஒரு செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 270 views
-
-
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவியிற்கு ஏற்பட்ட கொடூரம் ; வைத்தியசாலை வளாகம் போர்களமானது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் கான்பூரில் உள்ள ஜகிரிதி வைத்தியசாலையில் அகன்ஷா என்ற 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குறித்த மாணவியிற்கு வைத்தியசாலையில் உள்ள ஐசியூ வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வைத்தியசாலையில் உள்ள உதவியாளர் ஒருவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த அகன்ஷாவை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி, வைத்தியசாலை வளாகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் போர…
-
- 0 replies
- 289 views
-
-
'அவர் ஒரு சைக்கோ' - ட்ரம்ப்பை சீண்டும் வட கொரியா கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக அமெரிக்கா - வட கொரியா இடையே நிலவி வரும் பிரச்னைக்கு எந்தவித தீர்வுமின்றி சென்று கொண்டிருக்கிறது. இரு நாடுகளும் அணு ஆயுதம் வைத்திருப்பதால், போர் மூண்டால் அது உலக அளவில் பேரழிவுக்கு வித்திடும் என்பதால் ஐ.நா சபையும் கொரிய தீப கற்பமும் எந்நேரமும் கண்ணில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு இரு நாட்டுப் பிரச்னையை கவனமாக நோக்கியுள்ளன. இந்நிலையில், வட கொரிய அரசின் அதிகாரபூர்வ செய்தித் தாளான ரோடங் சின்மன், 'அமெரிக்காவில் உள்நாட்டு அரசியல் குழப்பம் உச்சத்தில் இருக்கிறது. அதை மறைக்க வட கொரியா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறது அந்நாடு' என்று காட்டமாக தலையங்க…
-
- 0 replies
- 402 views
-
-
இராக்கின் 840 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியை வெடிகுண்டு வீசி அழித்த ஐஎஸ் கோப்புப் படம்: நுரி மசூதி இராக்கின் மோசூல் நகரிலுள்ள 840 வருடம் பழமை வாய்ந்த நூரி மசூதியை ஐஎஸ் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் உள்ள பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தை போலவே தோற்றத்தை உடையது இராக்கிலுள்ள 840 வருடங்கள் பழமை வாய்ந்த நூரி மசூதி. அத்தகைய பெருமைவாய்ந்த மசூதி தகர்க்கப்பட்டுள்ளது. இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசூல் நகரில் ஐஎஸ் அமைப்பை அழிக்கும் பொருட்டு அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்த நிலையில் நூரி மசூதியை ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிக…
-
- 0 replies
- 370 views
-